செவ்வாய், 24 அக்டோபர், 2017

ஜோதிடர்கள் மறந்த புஷ்கர நவாம்சம்

பாரம்பரிய ஜோதிடம் மிகப்பெரிய ஜோதிட பரப்பை கொண்டது. பலரிற்கு பல விடயங்கள் பாரம்பரிய ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதா என்றுகூட தெரியாத அளவிற்கு பாரம்பரிய வேத ஜோதிடம் விஸ்தீரணமானது. இதனை முழுமையாக உணர முடியாதவர்களுக்கும், எளிமை விரும்பிகளிற்கும் இது சிம்ம சொப்பனம்... அந்தவகையில் பாரம்பரிய ஜோதிடர்களே அறியாத/மறந்த ஒரு பகுதியே புஷ்கராம்சம். இது பற்றிய குறிப்புகள் அரிதாகவே உள்ளது. அவற்றை தொகுத்து உங்களுக்கு தந்துள்ளேன்.
“புஷ்கர” என்றால் தாமரை பூ, மத்தளத்தின் தோல், இருபுறம் சுனையுள்ள கத்தி, குட்டை போன்ற பொருள் தரும்...
நம் அனைவருக்கும் தெரியும்; ஒருராசி என்பது 9 பாதங்களை கொண்டது. இதில் குறிப்பிட்ட பாதங்களில் உள்ள பாதமானது புஷ்கராம்ச பாதம் ஆகும்...
ஜாதகத்தில் என்னதான் கிரகங்கள் பலவீனமாக இருந்தாலும் சில இடங்களில் இருக்கும் போது நல்ல பலன்களை தந்துவிடுகின்றன. அந்தவகையில் ஒன்றுதான் இந்த புஷ்கராம்சம். இதில் கிரகங்கள் இருந்தால் பொருளாதார ரீதியாக நல்ல நிலை ஏற்படும்...
இனி ஒவ்வொரு ராசிகளிற்கும் எத்தனையாம் நட்சத்திர பாதம் புஷ்கராம்சமாக அமைகிறது என்று பார்ப்போம். இதனை உங்களது வாக்கிய ஜாதகத்தின் அடிப்படையில் பார்த்து கொள்க. அப்போதுதான் சரியாக வரும்...
• மேஷம் மற்றும் அதன் திரிகோண ராசிகளிற்கு 7 மற்றும் 9 வது நவாம்ச பாதம் புஷ்கராம்சம் ஆகும். அதேபோல;
• ரிஷபம் மற்றும் அதன் திரிகோண ராசிகளிற்கு 3 மற்றும் 5 வது நவாம்ச பாதம் புஷ்கராம்சம். அதேபோல;
• மிதுனம் மற்றும் அதன் திரிகோண ராசிகளிற்கு 6 மற்றும் 8 வது நவாம்ச பாதம் புஷ்கராம்சம். அதேபோல;
• கடகம் மற்றும் அதன் திரிகோண ராசிகளிற்கு 1 மற்றும் 3வது நவாம்ச பாதம் புஷ்கராம்சம் ஆகும்.

இதில் உள்ள சூட்சுமம் என்னவெனில் மேஷ, ரிஷப, மிதுன கோணத்திற்கு குரு, சுக்கிரன் வீடுகளும், கடக கோணத்திற்கு சந்திரன் மற்றும் புதன் வீடுகளே புஷ்கராம்சமாக அமையும்.

ஜாதகம் எழுத, பலன் பார்க்க, திருமண பொருத்தம் பார்க்க மற்றும் சகலவிதமான ஜோதிட ஆலோசனைகளும் தொடர்பு கொள்க;
பாரம்பரிய தெய்வீக ஜோதிடர் ஹரிராம் தேஜஸ்.
hariram1by9@gmail.com

2 கருத்துகள்: