ஞாயிறு, 17 மே, 2020

தண்டனையை அனுபவித்த ஆமை!


#தெரியாமல்_கூட_இனி_இப்படிப்பட்ட_தவறை_யாரும்_செய்யாதீங்க!
[பதிவை முழுமையாக மனதார படியுங்கள், அடியில் நல்லதொரு தரிசனம் காத்திருக்கின்றது.]

நாம் அறியாமல் செய்யும், சின்னச் சின்னத் தவறுகள் கூட, பிற உயிரினங்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். யாரோ ஒருவர் அறியாமல் செய்த பாவச் செயலுக்கான தண்டனையை, இந்த ஆமை 19 வருடங்களாக அனுபவத்து வருகிறது. இந்த சம்பவத்தைப் பற்றிய விரிவான செய்தியை பின்வருமாறு காணலாம்.

மனிதர்களைப் பொறுத்தவரை தனக்கு தேவையில்லாத பொருட்களை, வேண்டாம் என்று வெளியில் தூக்கி வீசி விடுகின்றோம். ஆனால் நாம் வீசக்கூடிய அந்த பொருளினால் என்ன பாதிப்பு வரும் என்பதை நாம் என்றுமே சிந்தித்துப் பார்ப்பதில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பாக கடலிலிருந்து ஒரு வித்தியாசமான ஆமை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஆமையானது, கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த ஆமைக்கு வயது 19. பார்ப்பதற்கு அந்த ஆமை மிகவும் வித்தியாசமாக இருந்துள்ளது. காரணம், அந்த ஆமையானது ஒரு பிளாஸ்டிக் வளையத்தினுள் சிக்கி இருந்துள்ளது. அதன் பின்பு ஆராய்ச்சியாளர்கள் அந்த பிளாஸ்டிக் வளையத்தை, அந்த ஆமையின் உடம்பிலிருந்து துண்டித்து எடுத்து விட்டனர்.

ஆனால் இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், அந்த ஆமை சிறுவயதில் இருந்த போதே அந்த வளையம் அதனுடைய உடம்பில் மாட்டியுள்ளது. தனது உடம்பில் அந்த வளையமானது மாட்டிக்கொண்டது தெரிந்ததும், அதிலிருந்து வெளியே வர முயற்சியும் செய்துள்ளது. ஆனால் முடியவில்லை. காலப்போக்கில் ஆமை வளர வளர அந்த வளையம் ஆமையின் உடலில் இறுக்கம் கொடுத்துள்ளது. உயிர் வாழ்வதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும் அந்த ஆமை, என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்! 19 வருடங்களாக எவ்வளவு இடர்பாடுகளை கடந்து அது தன் வாழ்வை வாழ்ந்ததோ?

யாரோ ஒருவர் கடலில் அந்த மோதிரத்தை வீசியதால் தான் இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இந்த சம்பவமானது நீண்ட நாட்களுக்கு முன்பு நடந்திருந்தாலும், இதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம், மிகப் பெரியது என்பதை எல்லோரும் உணரவேண்டும் என்பதற்காக தான் இந்த பதிவு. வாயில்லா ஜீவன்களுக்கு நம்மால் எந்த ஒரு நல்லதையும் செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை. கெடுதலாவது செய்யாமல் இருப்போமே. நீர்நிலைகளில் அல்லது நிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை போடுவது அவற்றின் உயிர்களிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைகிறது. நன்றாக வேதனைப்பட்டு துடிதுடித்து இறுதியில் இறக்கின்றன.. நாம் தெரியாமல் செய்தாலும் இந்த பெரும் பாவம் செய்தவரையே சேரும்.

இன்று வளர்ந்து வரும் பல தொழில்நுட்பங்கள், இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது என்று சொன்னால் நிச்சயம் அது பொய்யாகாது. எந்த ஒரு முன்னேற்றமாக இருந்தாலும், நாம் செய்யும் எந்த ஒரு செயல்பாடாக இருந்தாலும், இயற்கையையும், மற்ற உயிரினத்தையும் பாதிக்காத அளவில் இருந்தால்தான், அது ஆரோக்கியமான முன்னேற்றமாக இருக்கும். ஆனால், இந்த உலகமானது முன்னேறிச் செல்ல செல்ல, இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகிறது.

இயற்கைக்கு எதிராக நாம் செய்யும் ஒவ்வொரு செயல்பாடும், திரும்பவும் நம்மை தான் பாதிக்கப் போகின்றது என்ற உண்மையை நாம் என்று தான் புரிந்து கொள்ளப் போகின்றோம். யாரோ ஒருவர், செய்த தவறில் இந்த ஆமை சிக்கியுள்ளது என்பது, இன்று நாம் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால், நாம் தினந்தோறும் இயற்கைக்கு எதிராக செய்யும் எத்தனையோ தவறுகளில், எத்தனையோ உயிரினங்கள் அழிகின்றது என்பதை நினைத்து பார்க்கும் போது தான் வருத்தமே அதிகமாகிறது.இந்த பூமி மீது மனிதர்களாகிய எமக்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ ஏனைய சகல உயிர்களுக்கும் அதே உரிமை இருக்கின்றது. உண்மையை கூற வேண்டுமென்றால் பூமியை நாசமாகும் எம்மைவிட அவைகளிற்கே  அதிக உரிமை உள்ளது. நாம் தெரியாமல் அல்லது கவனகுறைவாக செய்யும் மிகச்சசிறு சிறு தவறுகள் கூட ஏனைய சிறிய  உயிரினங்களுக்கு பாரிய தீமையை\ நரகமாக அமைந்து விடுகின்றது. கண்மூடி ஒருநிமிடம் சிந்தித்து பாருங்கள் அந்த ஆமை 19  வருடங்களாக பட்ட வேதனைகளை... அன்பே சிவம், சிவமே ஜெயம் ஜெயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக