வெள்ளி, 29 மே, 2020

பூர்வபராசர்யம் PDF

நீங்கள் பாரம்பரிய வேத ஜோதிடம் மூலமாக பலன் கூறுகிறீர்கள் என்றால் எந்த மூலநூல் அடிப்படையில் பலன் கணிக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிகொள்ளுங்கள். ஏனெனில் பாரம்பரிய ஜோதிடத்தில் ஜோதிடரொருவர் ஏதாவது ஒரு / சில மூலநூல்களை அடிப்படையாக கொண்டே பலன் கணிக்க வேண்டும். அனைத்து மூலநூல்களையும் மாசற கற்றிருத்தல் அவசியம் . அதிலொன்றை உங்கள் பலனிற்கான ஆதாரமாக கொள்ளுங்கள். இதனை உங்கள் குரு உங்களிற்கு வழிகாட்டுவார். ஒருவேளை நீங்கள் சுயமாக கற்றீர்கள் என்றால் பலதீபிகை அல்லது பிருகத்ஜாதகம் அல்லது பூர்வபராச்சர்யம் அல்லது பாவார்த்த ரத்னாகரம் என்பவற்றில் ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். புலிப்பானி ஜோதிடம், ஜம்பு மகரிஷி வாக்கியம் போன்றவற்றை போல அல்லாது மேலுள்ள மூலநூல்கள் முழுமையான ஜோதிட சாஸ்திர விதிகளை கொண்டுள்ளன. உத்திர காலாம்ருதம் ராகு கேது தொடர்பான பலனை கணிக்க மிகச்சிறந்த நூல், ஆயினும் இதில் காணப்படும் விபரீதராஜயோகம் தென்னாட்டவர்க்கு பொருந்துவதாக இல்லை. (உத்திரம் என்றால் வடக்கு என்று பொருள்படும்.) பராசரஹோரா அது எந்தமூல நூலை பயன்படுத்தும் பாரம்பரிய ஜோதிடர்க்கும் அடிப்படையானது. இவ்வளவும் ஏன் கூறுகிறேன் என்றால் நீங்கள் கூறிய விதத்தினை பார்க்கும்போது அடிப்படை இல்லாமல் பலன் கூறுவது போல உள்ளது. இதனால்தானோ கடினம் என்று பாரம்பரிய ஜோதிடத்தினை தவிர்த்து இலகுவான ஜோதிட முறைகளினுள் மக்கள் செல்கின்றனர்! பாரம்பரிய வேத ஜோதிடம் கடினமானதுதான் ஆனால் தேர்ச்சி பெற்று விட்டால் வேறு எந்தஜோதிட முறையாலும் கூறமுடியாத பலனை பாரம்பரிய ஜோதிடத்தில் கூறலாம்... கஷ்டப்படாது பலன் கிடைக்காது நண்பர்களே... அந்தவகையில் இன்று நான் உங்களுக்காக பூர்வபராச்சர்யம் நூலினை மின்னூல் வடிவில் (PDF) தந்துள்ளேன். அனைவரும் Download செய்து மாசற கற்று பயன்பெற வேண்டுகிறேன். அனைத்து ஜோதிட முறைகளிற்கும் தாய்போன்றமைந்த பாரம்பரிய ஜோதிடத்திற்கென ஒரு மரியாதை உள்ளது. அதனை நீங்கள் காத்திட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக