வணக்கம்,
12 லக்கினத்திற்கு பலன்தரும் ஈஸ்வர நாடி ஜோதிட PDFஇனை Download செய்துகொள்ளுங்கள். இந்நூலில் கிரகங்கள் பார்க்கும்போது அதன் பார்வையில் ஆதிபத்தியம் வெளிப்படுத்தப்படுகிறது எனும் கருத்தை உறுதியாக கூறுகின்றது. வழமைபோல ஒரு ஜோதிட சுலோகத்தினை இங்கு பார்ப்போம்..,
மிதுன லக்னம் லக்னத்தில் குரு 11-ஆம் இடத்தில் அதாவது மேஷத்தில் சூரியன் புதன் சனி பகவான்பாக்கியாதிபதி ஆகி லாபஸ்தானத்தில் நீசம் அடைகிறார் .
அவரோடு பிதுர்காரகன் சூரியன் சேர்ந்திருக்கிறார். பிதுர்ஸ்தானாதிபதி சனி பகவான் பதினொன்றில் நீசமாகி இருக்கிறார். அந்த ஒன்பதாமிடத்தை குரு பகவான் பார்க்கிறது மிதுன லக்கினத்தை பொறுத்தவரையில் இலக்கணத்தின் அதாவது லக்னாதிபதியின் கர்ம காரகன் குரு பகவான்.
ஜாதகரின் கர்ம தொழிலை குறிப்பிடுவது. இங்கு குருபகவான ஐந்தாம் பார்வையாக துலாத்தையும் 9-ஆம் பார்வையாக கும்பத்தையும் இரு ஸ்தானத்தையும் பார்வையிடுகிறார் கர்ம காரகன் குரு பகவான்.
இப்போது தந்தை ஸ்தானத்தையும், 9மிடத்தையும் பிதுர்காரகன் சூரிய பகவானையும் ஒருங்கே அனைத்தையும் பார்க்கிறார். பிதுர் காரகனும் ஸ்தானாதிபதியும் கூடி மேஷத்தில் நீசம் அடைகிறார். ஆக சூரிய நாடியின் அடிப்படையில் கவனிக்கும் பொழுது பிதாவின் மரணத்திற்கு காரணமானவர் காரகன் குருபகவான்தான். ஈஸ்வர நாடியில் ஜாதகனின் பதினைந்தாவது வயதில் ஜாதகனின் தகப்பனார் மரணம் ஆவார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இது எப்படி நடக்கும் என்று ஆராய்ந்தோமேயானால் குரு பகவான் ஒரு சுற்று சுற்றிவரலக்கினத்தில் இருக்கிறார் இரண்டாம் சுற்று ஆரம்பிக்கும் பொழுது சூரியனின் வீட்டை தொட்டு ஸ்தானத்தையும் அது கும்பத்தையும் ஸ்தானாதிபதியும் சனி பகவானையும் காரகன் சூரியனையும் சிம்மத்தில் இருந்து பார்க்கும் பொழுது தகப்பனுக்கு மரணம் என்று சொல்லுகிறது.
மிதுனத்தில் உள்ள குரு ஒரு சுற்று சுற்றி முடிக்கும்போது ரிஷபத்துக்கு வரும்போது வயது ஜாதகருக்கு 12ம் .
இதன் அதிபதி 3 கடகத்தில் 14 சிம்மத்தில் வரும் பொழுது 15 வயதை தொடுகிறது. இதற்கான ஸ்தானாதிபதியும் பார்க்கும் பொழுது இந்த நிகழ்வு நடக்கிறது இந்த அமைப்பு ஈஸ்வர நாடி ஜோதிடத்தில் சூரிய நாடி 53வது சக்கரத்தில் மிக அழகாக விளக்கி உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக