ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

ஞாயிறு, 9 ஜூலை, 2017

ரிஷி பஞ்சமி

நாம் சூரியனை வணங்குகிறோம், சூரியன் யாரை வழிபடுகிறார் தெரியுமா?
சூரியன் இல்லையேல் இவ்வுலகம் இல்லை. பிரபஞ்சமே சூரியனின் கொடையால்தான் இயங்குகிறது. மனிதர்களுக்கு எண்ணற்ற நன்மைகளையும் சூரியனே வழங்குகிறார். அதனால்தான் காலை நீராடிய உடனே சூரியனை வழிபடுகின்றோம். நம்முடைய நன்மைக்காக நாம் சூரியபகவானை வழிபடுகிறோம். ஆனால், நமக்கெல்லாம் நன்மை தருவதற்காக சூரியபகவான் தினமும் யாரை வழிபடுகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சூரியன்
வான மண்டலத்தில் இருக்கும் சப்த ரிஷிகளைத்தான் சூரியபகவான் வழிபடுகிறார். விண்ணில் ஏழு ரிஷிகளும் சப்தரிஷி மண்டலமாக நட்சத்திர வடிவத்தில் காட்சி தருகின்றனர்.
காஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கௌதமர், பிருகு, வசிஷ்டர் ஆகிய இந்த எழுவர்தான் சப்தரிஷிகள். இவர்களைப் பற்றிச் சற்று விரிவாகப் பார்ப்போம்.
காஸ்யப மகரிஷி:
காஸ்யபர் சப்த ரிஷிகளுள் ஒருவராவார். இவர் மரீசி முனிவரின் புதல்வர் ஆவார். தேவர் குலம், அசுரகுலம் ஆகிய இரண்டும் இவரிடமிருந்தே தோன்றியதாகச் சொல்லப்படுகிறது. மேலும், இவரிடம் இருந்து தோன்றிய மனுவில் இருந்து தோன்றியதே 'மனிதகுலம்' என்றும் நம்பப்படுகிறது. இவர் தட்சனின் 13 குமாரிகளையும். விநதை, கத்துரு, பதங்கி, யாமினி ஆகிய நால்வரையும் மணந்ததாகச் சொல்லப்படுகிறது. உலகிற்குத் தேவையான அன்பு, அமைதி, பொறுமை ஆகிய நற்குணங்களைப் போதித்தவர். இவரின் போதனையால்தான் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் செழிப்போடு இருக்கிறது. அதனால் இந்தப் பிரபஞ்சம் 'காசினி' என்றும் அழைக்கப்படுகிறது.
இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.
'ஓம் சர்வ சாஸ்த்ரார்த்ததாய வித்மஹே
ஆத்ம யோகாய தீமஹி
தந்நோ காஸ்யப ப்ரசோதயாத்'
அத்ரி மகரிஷி:
இவர் படைப்புக் கடவுளான பிரம்மனின் மகனாவார். பிரஜாபதிகளில் ஒருவர் என்றும் சொல்லப்படுகிறது. இவரின் மனைவியின்அத்ரி மகரிஷியின் மகன் தத்தாத்ரேயர் பெயர் அனசுயா தேவி. அனசூயா தேவிதான் தன் கற்பின் திறத்தால் மும்மூர்த்திகளையும் குழந்தைகளாக மாற்றினாள். அந்த மூன்று குழந்தைகளின் இணைந்த வடிவமே 'தத்தாத்ரேயர்'. மருத்துவத்தில் சிறந்தோங்கிய ஆத்ரேயரும் அத்ரி மகரிஷியிடம் இருந்து தோன்றியவரே. ரிக் வேதத்தை தொகுத்ததில் இவரின் புதல்வர்களுக்கு பெரும்பங்கு உண்டு. ரிக் வேதம், புதுமணத் தம்பதிகளை வாழ்த்தும்போது, 'அத்ரி- அனசூயைப் போல வாழ வேண்டும்' என்றுதான் வாழ்த்தவேண்டும் என்று கூறுகிறது. சுக்ரீவனுக்கு அடைக்கலம் கொடுத்து வாலியிடமிருந்து காப்பாற்றியவர் அத்ரி மகரிஷியே. இவரிடம் இருந்துதான் சந்திரனும் தோன்றினார்.
நெல்லை மாவட்டத்தில், ஆழ்வார்குறிச்சியில் கடனா நதி அருகே உள்ள அத்ரி மலையில் இவரது கோயில் உள்ளது. அங்கே ஶ்ரீ அனசுயாதேவியுடன் அத்ரி மகரிஷி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.
'ஓம் சத்கர்மபலதாய வித்மஹே
சதாக்நிஹோத்ராய தீமஹி
தந்நோ அத்ரி ப்ரசோதயாத்'
பரத்வாஜர்:

பல்வேறு சிறப்புகளைப் பெற்றவர் பரத்வாஜர். தனது மூன்று ஆயுள்களையும் வேதம் பயில்வதற்கே பயன்படுத்தியவர். ரிக்வேதத்தில் அதிக சூக்தங்கள் இயற்றியவரும் இவரே ஆவார். இவரின் தவ வலிமையைப் போற்றாத புராணங்களே இல்லை. வேதங்களைப் போன்றே மருத்துவ ஆய்விலும் எண்ணற்ற சாதனைகளைச் செய்தவர். இவர் பல்வேறு மந்திரங்களையும் உருவாக்கியுள்ளார். மகாபாரதத்தில் வரும் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் குருவான துரோணாச்சாரியார் பரத்வாஜ மரிஷியின் புதல்வரே ஆவார்.
இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.
'ஓம் தபோரூடாய வித்மஹே
சத்ய தர்மாய தீமஹி
தந்நோ பரத்வாஜ ப்ரசோதயாத்'
விஸ்வாமித்திரர்:
விஸ்வாமித்திரர் என்று சொன்னால் உலகுக்கு உற்ற நண்பன் என்று பொருள். இன்றளவும் முனிவர் என்று சொன்னவுடனே நம் நினைவுக்கு வருபவர் விசுவாமித்திரர்தான். அந்த அளவுக்கு விசுவாமித்திரரின் கோபம் பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். இவர் குசநாபரின் மகனாவார். ரிக் வேதத்தில் பல பகுதிகள் இவரால் எழுதப்பட்டதே. காயத்ரி மந்திரம் கூட இவர் உருவாக்கியதே.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விஜயாபதி என்னும் இடத்தில் இவருக்குத் தனிக்கோயில் உள்ளது.
இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.
'ஓம் தநுர்தராய வித்மஹே
ஜடாஜுடாய தீமஹி
தந்நோ விஸ்வாமித்ர ப்ரசோதயாத்'
விஸ்வாமித்திரர்
கௌதமர்:
வேதகால ரிஷிகளுள் இவரும் ஒருவராவார். இன்றளவும் போற்றப்படும் 'தர்மசூத்திரம்' இவரால் இயற்றப்பட்டதே. ரிக் வேதத்தில் இவரது பெயரில் பல்வேறு மந்திரங்கள் உள்ளன. இவரது மனைவியின் பெயர் அகலிகை. அவருக்கு வாமதேவர், நோதாஸ், ஷதானந்தா என்ற புதல்வர்களும் உண்டு.
இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.
'ஓம் மஹாயோகாய வித்மஹே
சர்வபாவநாய தீமஹி
தந்நோ கௌதம ப்ரசோதயாத்'
பிருகு:
இவர் பிரம்மதேவனால், தன் படைப்புத் தொழிலுக்கு உதவி புரிவதற்காக உருவாக்கப்பட்டவர். ஜோதிட சாஸ்திரத்தின் முதல் நூலான 'பிருகு சம்ஹிதா' இவரால் எழுதப்பட்டதே. இவர் மனைவியின் பெயர் கியாதி. இவருக்கு விததா, ததா, சுக்ரன் என்ற மகன்களும், ஶ்ரீ என்ற மகளும் உண்டு. உலகில் அறத்தைக் காக்கவேண்டும் என்பது இவரின் உன்னத நோக்கமாகும்.
இவரை வழிபடுவதற்கான காயத்ரி மந்திரம்.
'ஓம் ரிஷிஸ் ரேஷ்டாய வித்மஹே
அக்ஷசூத்ராய தீமஹி
தந்நோ பிருகு ப்ரசோதயாத்'
வசிஷ்டர்:
வேதகாலத்தில் வாழ்ந்த மாமுனிகளில் இவரும் ஒருவர். மிகச் சிறப்பானவற்றையே பாராட்டும் குணம் கொண்டவர். எனவே, இவரிடம் பாராட்டு பெறுவது சிறப்பானது. வசிஷ்ட முனிவரின் மனைவிதான் அருந்ததி . இவர் பெண்களுக்கு அதிகமாக மதிப்பளிப்பவர் . இதைப் போற்றுவதற்காகவே '
ரிஷி பஞ்சமி' வழிபாடு பெண்களால் மேற்கொள்ளப்படுகிறது. இவர் ராமாயணத்தில் தசரதனுக்கு அரச குருவாக விளங்கியவர். அனைத்துப் புராணங்களிலும் இவர் போற்றப்படுகிறார்.

'ரிஷி'கள் என்பவர்கள், 'மந்திர த்ரஷ்டா' அதாவது, நாம்  ஜபிக்கும் மந்திரங்களை பிரத்யக்ஷமாகக் கண்டுணர்ந்து நமக்குக் கொடுத்தவர்கள். அவர்களது மகிமை அளவிடற்கரியது.

நாம் நல்வாழ்வு காண உதவும் மந்திரங்கள், ரிஷிகள் நமக்கு அளித்த அருட்கொடை. அவர்கள் தம் தபோவலிமையால் நமக்கு அளித்த மந்திரங்களின் சக்தியால், வாழ்வில் ஏற்படும் இன்னல்களை நாம் வெற்றி கொள்ளலாம். விச்வாமித்ர மஹரிஷி நமக்கு அளித்த 'காயத்ரி  மந்திரம்' ஒன்றே மந்திரங்களின் சக்தியை விளக்கப் போதுமானது.

விநாயக சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதி 'ரிஷி பஞ்சமி' என்றே போற்றப்படுகிறது. அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபடுகிறவர்கள் வாழ்வில் நலம் பல பெருகும் என்பது திண்ணம். ரிஷிகள் அநேகம் இருந்தாலும் சப்த ரிஷிகள், ரிஷிகளில் சிறப்பு வாய்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.இவர்கள், காசியில், சிவபெருமானை வேண்டித் தவமிருந்து நட்சத்திரப் பதவி பெற்று, வான மண்டலத்தில் சப்த ரிஷி  மண்டலமாகக் கொலுவிருக்கிறார்கள்.வானமண்டலத்தில் சனிபகவான் உலகத்திற்கு வடக்கே சப்தரிஷி மண்டலம் உள்ளது. அங்கிருந்து வந்து தினமும் காசி விஸ்வநாதரை சப்த ரிஷிகளும் பூஜிப்பதாக ஐதீகம். இதனை குறிக்கும் விதத்தில், இரவில், காசி விஸ்வநாதரின் கருவறையில் ஏழு பண்டாக்கள்(பூஜகர்கள்) சூழ்ந்து நின்று பூஜை நடத்துவர். இது 'சப்த ரிஷி பூஜை' என்றே சிறப்பிக்கப்படுகிறது. காசி விஸ்வநாதரின் ஆலயத்தில் மிகச் சிறப்பு வாய்ந்த பூஜை ஆகும் இது.

துருவ நட்சத்திரத்திற்கு அடுத்தபடியாக, வான மண்டலத்தில் முக்கியத்துவம் பெறுவது சப்த ரிஷி மண்டலமே, இதன் சுழற்சியை வைத்தே, இரவில் நேரம் கணித்து வந்தனர் நமது முன்னோர்.

திருமணங்களில், மிக முக்கியமான சடங்கு, 'அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது'. அம்மிக் கல், வீடுகளில் அக்காலத்தில் சமையலுக்கு உதவும் உபகரணங்களில் ஒன்று. அதை, திருமண வேளையில், மணப்பெண், மிதிப்பதன் பொருள், எத்தகைய சோதனைகள் இல்வாழ்வில் ஏற்பட்டாலும், பெண்ணானவள், மன உறுதியோடு அதை எதிர்கொள்ள வேண்டும். மேலும், குடும்பத்திற்கு புதிதாக வருகிற பெண்ணின் கையிலேயே, குடும்ப கௌரவம் ஒப்படைக்கப்படுகிறது. அந்த கௌரவத்தை, அம்மிக்கல் எப்படி, வளையாது நெளியாது நேராக இருக்கிறதோ, அதைப்போல், வளையாமல் காக்க வேணும் என்பதும் இதன் பொருள்.

அந்த வேளையில் அருந்ததி நட்சத்திரத்தைப் பார்ப்பது ஐதீகம். அருந்ததி, வசிஷ்டரின் தர்மபத்தினி. சப்த ரிஷி மண்டலத்தில், வசிஷ்ட நட்சத்திரத்தின் அருகிலேயே, மிகச் சிறிய அளவில் அருந்ததி நட்சத்திரத்தைக் காணலாம். அது போல் தம்பதிகள் பிரியாது ஒற்றுமையாக இருக்க வேண்டும். உண்மையில் அருந்ததி ஒரு இரட்டை நட்சத்திரம். பார்க்க ஒன்று போல் தெரியும். அதைப் போல் தம்பதிகள் உடலால் வேறு பட்டவர்களாயினும் உள்ளத்தால் ஒன்றாக இருக்க வேண்டும்.
ரிஷி பஞ்சமி விரதத்துக்கான பூஜா விதிகளில், சப்த ரிஷிகளின் பெயர்கள், ஸ்ரீகாஸ்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்ரர், வசிஷ்டர், கௌதமர், ஜமதக்னி என்றே குறிப்பிடப்படுகின்றன. வெவ்வேறு புராணங்களில் வெவ்வேறு விதமாகக் குறிக்கப்பட்டாலும், ரிஷிகளின் மகத்துவம் ஒன்றே.

ரிஷி பஞ்சமி விரதம் பெண்களால் செய்யப்படுவது. மிக முற்காலத்தில், ஏற்பட்ட ஆசார விதிகளின் நோக்கம் சுகாதாரம் பேணி நம் ஆரோக்கியத்திற்கு வழி வகுப்பதேயாகும். மாத விலக்கு நாட்களில், பெண்களின் உடல் இயல்பாகவே பலவீனப்படுவதால், நோய்த் தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம்.  அந்நாட்களில் இப்போது இருப்பதைப் போல் நவீன வசதிகள் ஏதும் இல்லை. எனவே, அந்த நாட்களில், மற்றவரோடு கலந்து  அவர்கள் இருக்கும் போது, அவர்கள் நோய்க் கிருமிகளால் தாக்கப்படுவதற்கும், அது அவர்கள் மூலமாக மற்றவருக்குப் பரவுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே, அந்த நாட்களில் அவர்களைத் தனிமைப்படுத்தி, வேலை எதையும் செய்ய விடாது செய்திருந்தனர் நமது முன்னோர்.
தவறிப்போய் அவர்களால், இவ்விதிகளுக்கு ஏதேனும் பாதகம் ஏற்படுமாயின், அதை நிவர்த்தித்துக் கொள்ளவே இந்த விரதம் செய்யப்படுகிறது. 'ரிஷி பஞ்சமி' விரதத்தின் மூலம் நாம் வேண்டும் வரங்களைப் பெற்று மகிழ முடியுமாயினும், மிக முக்கியமாக, இந்தக் காரணத்திற்காகவும், பெண்களின் சௌபாக்கியம் அதிகரிக்க வேண்டியும் இந்த விரதம் செய்யப்படுகிறது. மிக வயது முதிர்ந்த பெண்களே, இந்த விரதத்தைச் செய்வது வழக்கம்.
இந்த விரத பூஜைக்கு முன்பாக, 'யமுனா பூஜையைச்' செய்ய வேண்டும். இது பஞ்சமியன்று மதியம் செய்யப்படுவது. இதைச் செய்வதற்கு முன்பாக, வேதம் ஓதிய வைதீகர்களை வைத்து முறைப்படி சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். பின் வஸ்திர(புடவை) தானம் செய்ய வேண்டும். இந்த விரதத்தை சுமங்கலிகள் எடுத்தால் சிவப்பு நிறப்புடவை தானம் செய்வார்கள். சுமங்கலிகள் அல்லாதார் எடுத்தால் ஒன்பது கஜ வெள்ளைப் புடவையில், மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்து தெளித்து விட்டுத் தானம் செய்வார்கள். 

அதன் பின்,'நாயுருவி' செடியின், 108 குச்சிகளால் பல்துலக்கி ஸ்நானம் செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை பல்துலக்கிய பிறகும் குளிப்பது அவசியம்.

பல் துலக்கும் போது சொல்ல வேண்டிய மந்திரம்:
ஆயுர் பலம் யசோ' வர்ச்ச: ப்ரஜா: பசு' வஸூநி ச|
ப்ரஹ்ம ப்ரஜாம் ச மேதாஞ்ச தன்நோ தேஹி வனஸ்பதே||

பிறகு,சிவப்பு நிற ஆடை அணிந்து, பஞ்ச கவ்யம் (பசு மாட்டிலிருந்து கிடைக்கும் பால், தயிர், நெய், சாணம், கோமயம்  இவை சேர்ந்தது தான் பஞ்ச கவ்யம். இதில் சிறிதளவு எடுத்து, மந்திரங்களைச் சொல்லி உட்கொள்ளும் போது நமது உடலும் ஆன்மாவும் தூய்மை அடைகின்றன.) சாப்பிடவேண்டும். பிறகு முறைப்படி விக்னேஸ்வர பூஜையைச் செய்து, அரிசிமாவில் எட்டு இதழ் கமலத்தை வரைந்து, அதன் மேல் கலசத்தை வைத்து நெய் விளக்கேற்றி பூஜிக்க வேண்டும். கலசத்தில் யமுனை நதியின் நீரையே வைத்துப் பூஜிப்பது சிறந்தது.

மாலையில் ரிஷி பஞ்சமி பூஜையைச் செய்ய வேண்டும். விரதம் எடுத்து அன்றே முடிக்க வேண்டுமாயின், காலையிலேயே யமுனா பூஜை முடிந்த பின், விரத பூஜையைச் சேர்த்துச் செய்வது வழக்கத்தில் இருக்கிறது. சாஸ்திரப்படி, எட்டு வருடங்கள் (ஒவ்வொரு வருடமும் ரிஷி பஞ்சமி தினத்தன்று)  பூஜை செய்த பின்பே விரதத்தை முடிக்க வேண்டும். ஆனால் இப்போது, விரதம் எடுத்த அன்றே முடிப்பது வழக்கத்திலிருக்கிறது. சிலர் எட்டு வருடங்களில் ஏதாவது ஒரு வருடத்தில் முடித்து விடுகிறார்கள்.
யமுனா பூஜைக்கு உபயோகித்த கலசத்தை வைத்தே ரிஷி பஞ்சமி பூஜையைச் செய்யலாம். அதன் பின், எட்டு முறங்களில் வாயனங்கள் வைத்து தானம் செய்ய வேண்டும்.
வாயனங்கள்:
அதிரசம், வடை, எள் உருண்டை, இட்லி, கொழுக்கட்டை, இயன்ற பழங்கள், வெற்றிலை பாக்கு தாம்பூலம், தேங்காய், தட்சணை முதலியவற்றை வைக்க வேண்டும்.
ஏழு முறங்களில் இவ்வாறு வைத்து விட்டு, எட்டாவது முறத்தில், வாயனங்களோடு,   ஒரு பெட்டியில், ரவிக்கைத் துண்டு, சீப்பு, கண்ணாடி, மஞ்சள், குங்குமம், வளையல், பூ ஆகியவற்றையும் வைக்க வேண்டும். வைக்கும் பெட்டி மஞ்சள் நிறத்தில் இருப்பது நல்லது. ஏழு முறங்களும் சப்த ரிஷிகளை உத்தேசித்தும் எட்டாவது முறம்(வாயனங்களோடு பெட்டியும் இருப்பது) அருந்ததியை உத்தேசித்தும் தானம் செய்யப்படுகிறது.

முறத்தில் வைக்கும்  பொருட்கள்  ஒவ்வொரு ஊர் வழக்கத்தை ஒட்டி மாறுபடும். மதுரைப் பகுதியில், எட்டு விதப் பழங்கள், எட்டு வித இனிப்புகள் ஆகியவை வடை, எள் உருண்டையோடு வைக்க வேண்டும்.மற்ற பகுதிகளில் மேற்சொன்ன விதத்தில் வைக்கிறார்கள். எட்டு வருடங்கள் பூஜை செய்வதானால், முதல் வருடம் அதிரசம் கட்டாயம் செய்ய வேண்டும். மற்ற வருடங்கள் சௌகரியப்பட்டதை செய்யலாம்.

விரதம் எடுத்தவர்கள் பால், பழங்கள் ஆகியவற்றையே அன்றைய தினம் உணவாக உட்கொள்ள வேண்டும்.
விரதத்தை முடிப்பதானால்:
ரிஷி பஞ்சமி தினத்தன்று, விரதத்தை முடிப்பதாக இருந்தால், சங்கல்ப ஸ்நானத்திற்குப் பின், விரதம் எடுத்து தானங்கள் செய்த பிறகு கலச ஸ்தாபனம் செய்ய வேண்டும்.

இதற்கு, எட்டு கலசங்கள் தேவை. அதில் வைக்க, வெள்ளித் தகட்டாலான‌, பிரதிமைகள் எட்டு, வஸ்திர‌ங்கள் எட்டு, தானம் செய்வதற்குத் தேவையானவை ஆகியவற்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிரதான கலசத்திற்கு மட்டும் ஒரு வேஷ்டியும் துண்டும் கட்டி, மற்றவற்றிற்கு சிறிய வஸ்திரங்களைக் கட்டலாம். அவரவர் வசதியைப் பொறுத்துச் செய்து கொள்ளலாம். சௌகரியப்பட்டவர்கள், கலசத்திற்குள், தங்கள் வசதிக்கேற்றவாறு தட்சணைகள் போடலாம்.

தானம் செய்ய வேண்டியவை:
இந்த விரதம் மிகச் சிறப்பு வாய்ந்த பெரிய விரதமாகும். ஆகவே, இதற்கு பத்து வித(தச) தானங்கள் செய்யவேண்டும். தானங்கள் செய்வதன் நோக்கம், அறிந்தும் அறியாமலும், நம் வாழ்விலும், விரதங்களைக் கைக்கொள்ளும் முறையிலும், நாம் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டியே.

1.கோதானம் (பசு அல்லது தேங்காய்),
2.பூதானம் (நிலம் அல்லது சந்தனக்கட்டை.) சக்தியுள்ளவர்கள், பசு, நிலம் முதலியவை கொடுக்கலாம். இல்லாதவர்கள், தேங்காய் அல்லது சந்தனக் கட்டையைச் சற்று கூடுதலான தக்ஷிணையுடன் தானம் செய்யலாம். நமது சாஸ்திர‌ விதிகளில், அவரவர் வசதியைப் பொறுத்து தானம் செய்ய வழி செய்யப்பட்டுள்ள‌து.  பலன் வேண்டும் என்பதற்காக, ந‌ம் சக்திக்கு மீறிச் செய்வது, கடன் வாங்குவது போன்ற வேண்டாத பழக்கங்களுக்கு வழி வகுக்கும்.  நமது சாஸ்திரங்களுக்கு இதில் உடன்பாடே இல்லை.
3. திலதானம்(எள்),
4.ஹிரண்யம்(பொன்னாலான நாணயம்),
5.வெள்ளி நாணயம்,
6.நெய்,
7.வஸ்திரம்,
8.நெல்,
9.வெல்லம்,
10.உப்பு ஆகியன.

ஒவ்வொன்றையும் ஒரு பாத்திரம் அல்லது தட்டில் வைத்துத் தானம் செய்யலாம். இயலாதவர்கள் தொன்னையில் வைத்துக் கொடுக்கலாம். இவ்விதம் தச தானம் செய்ய இயலாதவர்கள், பஞ்ச தானம் செய்யலாம். அவை,வஸ்திரம், தீபம், உதகும்பம், மணி, புத்தகம் ஆகியன.

விரத தினத்துக்கு மறு நாள் தான் தானங்கள் செய்வது வழக்கம். அன்று தம்பதி பூஜையும் விசேஷமாகச் செய்வது வழக்கம். 

தம்பதி பூஜைக்குத் தேவையானவை:
புடவை, ரவிக்கைத் துணி, வேஷ்டி, அங்கவஸ்திரம், திருமாங்கல்யம், மெட்டி, இவை வைக்கத் தட்டு அல்லது ட்ரேக்கள் ஆகியவை தேவை. தாம்பாளமும் வாங்கலாம். புடவை வேஷ்டி, அவரவர் வசதிப்படி, கறுப்பு நூல் கலக்காததாக,  பட்டுப் புடவை, வேஷ்டியோ (கறுப்பு, அல்லது கருநீலக்கரை வேஷ்டியில் கறுப்பு நூல் கலந்திருக்கும் வாய்ப்பு உண்டு), அல்லது நூல் புடவை வேஷ்டியோ வாங்கலாம். இரண்டு மாலைகளும் வாங்க வேண்டும்.

கலச ஸ்தாபனம் செய்த பிறகு, கலசங்களுக்கு, நான்கு கால பூஜைகள் செய்ய வேண்டும். 
சப்த ரிஷிகளைப் பூஜிக்க உதவும் 'சப்தரிஷி அஷ்டோத்திர'த்திற்கு இங்கு சொடுக்கவும்.

ஒவ்வொரு கால பூஜைக்கும், தனித்தனியாக, பிரத்தியேகமான நிவேதனங்கள் செய்ய வேண்டுவது அவசியம். வடை, பாயசம், மஹா நைவேத்தியம், இட்லி, கொழுக்கட்டை போல் வசதிப்படும் எதையும்  நிவேதனமாக வைக்கலாம்.

இந்த பூஜை நிவேதனங்களை ஒரு தட்டில் வைத்து, நான்கு வைதீகர்களுக்கு தானம் செய்வது நல்லது. மேலும், நான்கு கால பூஜைகள் நிறைவடைந்த பிறகு, அன்றைய தினம் இரவில், எட்டு கலசங்களையும் தானமாகப் பெறவிருக்கும் வைதீகர்களுக்கு, உணவு(பலகாரம்) அளிப்பது முக்கியம்.

பூஜைகள் முடிந்ததும், மறு நாள் புனர் பூஜை செய்ய வேண்டும்.

புனர் பூஜை:
மறு நாள், சுருக்கமாகக் கலசங்களுக்கு தூப தீபம் காட்டி, இயன்றதை நிவேதித்து புனர் பூஜை செய்த பின்,  விரதம் முடிப்போர், கலசங்களில் இருக்கும் நீரைக் கொண்டு அபிஷேகம் செய்து கொள்ள வேண்டும்.

பின் கலசங்களைத் தானம் செய்ய வேண்டும். பின் தச தானம் முதலியவற்றைச் செய்ய வேண்டும்.

தம்பதி பூஜைக்கு அமர்கிறவர்கள், வயது முதிர்ந்த தம்பதிகளாக இருந்தால் விசேஷம். அவர்களை பார்வதி பரமேஸ்வரனாகப் பாவித்து, மிகுந்த பக்தியுடன், உபசார பூஜைகளைச் செய்ய வேண்டும். அவர்கள், மாலை மாற்றி, திருமாங்கல்ய தாரணம் செய்த பின், ஆரத்தி எடுத்து, அவர்களை நமஸ்கரிக்க வேண்டும்.

அதன் பின், பூஜையில் பங்கு கொண்டவர்கள், வந்திருக்கும் விருந்தினர்கள் அனைவருக்கும் உணவு வழங்கிய பின், விரதம் எடுத்தவர்கள்  சாப்பிடலாம். பலகாரமாக (டிபன்) சாப்பிடுவது வழக்கம்.

பொதுவாக விரதங்களின் நோக்கம், எவ்விதத்திலாவது இறைவழிபாட்டில்  மனதை ஈடுபடுத்தி, வாழ்வின் நோக்கம் ஈடேறப் பெறுவதேயாகும். தானங்கள் செய்யும் போது வசதிக்கேற்றவாறு கொடுக்கும் மனப்பான்மை வளருகிறது. தானங்களில் சிறந்ததான அன்ன தானம் செய்யும் பொழுது நமது பாவங்கள் மறைகின்றன. லௌகீகமாகப் பார்க்கும் பொழுது, நம் உறவும் நட்பும் விரத பூஜை தினத்தில் நம் வீட்டுக்கு வந்து, நம்மோடு சேர்ந்து பூஜைகளில் கலந்து கொள்ளும் போது, அவர்களுக்கும் இறையருள் கிடைக்கப்பெற்று, அதன் பலனாக, அவர்கள் வாழ்வில் வளம் சேருகிறது. நம் உறவுகளும் பலமடைகின்றன.

இந்த விரதம் இப்போது நடைமுறையில் அருகி வருகிறது. ஆனாலும் இவ்விரதம் பற்றிய செய்திகளைப் பதிவு செய்ய  வேண்டுமெனக் கருதியே இதைப் பதிவிட்டேன்.

இவ்விரத பூஜையைச் செய்ய இயலாதோரும், சப்தரிஷிகளை இந்நன்னாளில் வேண்டி வணங்கி நலம் பல பெறலாம். 

வெற்றி பெறுவோம்!!!!!

சோடசக்கலை

சோடசக்கலையைப் பின்பற்றுங்கள்:நீங்கள் நினைத்ததையெல்லாம் சாதிக்கலாம்
சேட்டுக்கள்,மார்வாடிகள் எல்லாத் தலைமுறையிலும் செல்வந்தர்களாகவே இருக்கின்றனர்?எப்படி டாடாவும் பிர்லாவும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்?
இப்படி ஒருநாளாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அவர்கள் தங்களது மாத வருமானத்தில் ஒரு பங்கை அந்த மாதமே அன்னதானம் செய்வதற்கு ஒதுக்கி அந்த மாதமே அன்னதானம் செய்துவிடுகின்றனர்.
இரண்டாவதாக,வீட்டை எப்போதும் குப்பைக்கூளம் இல்லாமலும்,கெட்ட வாசனை அடிக்காமலும் பார்த்துக்கொள்கின்றனர்.அதாவது,வீட்டில் நறுமணம் எப்போதும் கமழுமாறு பார்த்துக்கொள்கின்றனர்.(எங்கே நறுமணம் உண்டோ அங்கே அஷ்ட லட்சுமிகளும் வாசம் செய்கிறார்கள்)
மூன்றாவது தான் இப்போது நாம் பார்க்கப்போவது . . ,
அமாவாசை ஆண்களை அதிகம் பாதிக்கிறது.பவுர்ணமி பெண்களைஅதிகம்பாதிக்கிறது.அனைத்து உயிரினங்களையும் இந்த இரண்டு திதிகளும் பாதிக்கின்றன.சந்திரன் ஸ்தூல உடலையும்,சூரியன் சூட்சும உடலையும் பாதிக்கின்றது.
வளர்பிறையில் பிரதமை முதல் பவுர்ணமி வரை 15 திதிகளும், தேய்பிறையில் பிரதமை முதல் அமாவாசை வரை 15 திதிகள் உள்ளன.திதிகள் என்றால் கலைகள் என்றும் பெயர்ப்படும். 16 வதாக ஒரு கலை இருக்கின்றது.அதுதான் சோடேச கலை!
இந்த சோடேசக்கலையைப் பயன்படுத்தித்தான் சித்தர்கள்,துறவிகள்,மகான்கள்,செல்வந்தர்கள்,சேட்டுகள்,
மார்வாடிகள் என வாழையடி வாழையாக செல்வந்தர்களாக இருக்க முடிகின்றது.
தமிழர்களாகிய நாமும் ஏதாவது ஒரு சித்தர் அவர்களின் வழிவம்சமாகத்தான் இருக்கிறோம்.இதை அறியும் வரை தின வாழ்க்கையே சோதனையாக இருக்கின்றது.அறிந்ததுமுதல் நிம்மதி,செல்வ வளம்,மகிழ்ச்சி,என வாழ்க்கைப்பாதை திசைமாறிவிடுகின்றது.
பிரம்மா, விஷ்ணு,சிவன் இம்மூவரின் அம்சமானவர்தான் திருமூர்த்தி ஆவார்.இவர் இந்த சோடேசக்கலையில் தனது அருளை சில நொடிகள் மட்டுமே பொழிகிறார்.சுமார் ஐந்து நொடிகள் அதாவது ஐந்து சொடக்குப்போடும் நேரம் மட்டும் திருமூர்த்தியின் அருள் உலகம்
முழுவதும் பரவும்.திருமூர்த்தியை கிறிஸ்தவர்கள் Trinity எனச் சொல்வார்கள்.இந்த 16 வது கலையை சித்தர்களும்,முனிவர்களும் அறிந்திருந்ததால்தான் அவர்கள் விரும்பும் எந்த ஒன்றையும் பெற முடிகிறது.
அமாவாசை எப்போது முடிகிறது என்பதை உள்ளூர் பத்திரிகைகள் டிகிரிப்படி கணித்து வெளியிடும்.அதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.உதாரணமாக,அமாவாசை காலை மணி 10.20 வரை.பின் பிரதமை திதி ஆரம்பம் என எழுதியிருப்பார்கள்.அமாவாசை திதி முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே அதாவது காலை 9.20 மணி முதல் 11.20 மணி தியானத்தில் அல்லது மந்திர ஜபத்தில் இருக்க வேண்டும்.இந்த இரண்டு மணி நேரத்திற்குள் சுமார் 5 நொடிப்பொழுதுகள் திருமூர்த்தியின் ஆளுகைக்குள் இந்த மொத்தப்பிரபஞ்சமும் வரும்.
பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அண்டங்களும்(நாம் வாழும் மில்கி வே,அருகில் உள்ள அண்ட்ராமீடா),சகல உயிரினங்களும்(பாக்டீரியா,புல்,பூண்டு,மரம்,யானை,திமிங்கலம்,சிறுத்தை,கழுதை,புலி,முயல்,மான்,பாம்பு,நீர்யானை,நட்சத்திர மீன்,கணவாய் மீன்,கடல்பசு,கடல் பாசிகள்,ஒட்டகம்,ஒட்டகச்சிவிங்கி,பூரான்,பல்லி,ஆந்தை,புறா,கிளி,காட்டெருமை,காண்டாமிருகம்,நாய்,குதிரை,கழுதை,கோவேறுக்கழுதை,எறும்பு,சுறா மீன் ),ஒவ்வொரு மனிதனும் சூட்சுமமாக அதிரும்.
அந்த நேரம் மனதால் நாம் என்ன வேண்டுகிறோமோ அது கிடைக்கும்.கோரிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.பலவாக இருக்கக்கூடாது.
ஒன்று நிறைவேறிய பின் மற்றதை வேண்டலாம்.
இதேமாதிரிதான் பவுர்ணமி முடிந்து பிரதமை திதி ஆரம்பிக்கும்போதும் செய்ய வேண்டும்.மாறிமாறி தொடர்ந்து இப்படி தியானம் அல்லது ஜபம் செய்யும் போது சில மாதங்களில் நமது கோரிக்கை நிறைவேறும்.சிலருக்கு ஒரே தடவையில் (கேட்டது) கிடைத்துவிடும்.இது அவரவர் உடல் பூதியத்தைப்பொறுத்தது.மனவலிமையைப் பொறுத்தது.திருமூர்த்தி சாதனை செய்வோருக்கு ஒலியாகவோ,ஒளியாகவோ அருள் வழங்குகிறார்.
தியானம் வீட்டிலோ,கோயிலிலோ இருக்க வேண்டும்.தியானம் செய்யும் நேரம் அமைதியாக இருப்பது அவசியம்.வெறும் தரையில் உட்காரக்கூடாது.வயிறு காலியாக இருக்க வேண்டும்.சைவ உணவு ஆன்மீக மன நிலையை உருவாக்கும்.(அசைவ உணவு அதற்கு எதிரானநிலையைத் தரும்).நிமிர்ந்து ஏதாவது ஒரு ஆசனத்தில் இருக்கலாம்.உடைகள் இறுக்கமாக இருக்கக்கூடாது.மனக் கவனத்தை புருவ மத்தியில் அல்லது மூக்கின் நுனியை நோக்கி இருக்க வேண்டும்.வாசியோகம் அல்லது ஏதாவது ஒரு மந்திர ஜபம் மனதுக்குள் உதடு அசையாமல் செய்யலாம்.மன ஒருமைப்பாட்டில் தேர்ச்சி உள்ளவர்களுக்கு மேற்சொன்ன இரண்டும் தேவையில்லை.
அமைதியுடன் வடகிழக்குப் பார்த்து கோரிக்கையை (திருமணம்,பணக்காரனாவது,நோய் தீர,கடன் தீர,எதிர்ப்புகள் விலக,நிலத்தகராறுதீர,பதவி உயர்வு கிடைக்க, பிரிந்தவர் சேர,வழக்கு வெற்றி எதுவானாலும்,ஏதாவது ஒன்று மட்டும்)நினைத்த வண்ணம் கண்களை மூடி இருந்தால்போதும்.
தியான நேரம் பட்டினி இருந்தால் கிரகக்கதிர்வீச்சுக்கள் நம்மை அதிகம் பாதிக்காது.இந்த தியானத்தை ஜாதி,மதம்,இனம்,மொழி கடந்து மனிதராகப்பிறந்த எவரும் செய்யலாம்.

" விடியும் என்று விண்ணை நம்பும் நீ ....!
முடியும் என்று உன்னை நம்பு...!!"

ஞாயிறு, 11 ஜூன், 2017

இருவித பஞ்சாங்கங்கள்



அனைவருக்கும் வணக்கம். கன்னி ராசியில் செவ்வாய் நட்பா பகையா என்று ஒருவர் கேட்டார். அதற்கு “வாக்கியப்படி நட்பு, திருக்கணித படி பகை.” என்று கூறியிருந்தேன்... வாக்கிய பஞ்சாங்கம் சரியா திருக்கணித பஞ்சாங்கம் சரியா? இதற்கு யாராலும் முடிவுகாண முடியவில்லை...
ஜோதிட சாஸ்திரத்தை எமக்கு அருளிய மாமுனிவர்கள், சித்தர்கள், ரிஷிகளை அடுத்த எமது தாத்தா, பாட்டன், முப்பாட்டன் என அனைவருமே வாக்கிய பஞ்சாங்கபடியே ஜாதகம் கணித்தனர்; பலன் கூறினர். இன்றும் அனுபவம் மிக்க வயதான ஜோதிடர்களும் , கிராமபுறங்களில் உள்ள ஜோதிடர்களும் வாக்கிய பஞ்சாங்க கணிதப்படி கணித்த ஜாதகத்தினையே பார்க்கின்றனர். அவர்களது வம்சாவழி முன்னோர்களும் அதனையே பின்பற்றி வந்தனர். அது ஒரு புறம் இருக்கட்டும்... விஞ்ஞானம் ஒன்று வந்து நன்றாக குழப்பிவிட்டு சென்றுவிட்டது... இன்று சொல்வர் நாளை இல்லையென்பர் விஞ்!ஞானிகள்.. நாம் வழிவழியாக பயன்படுத்திய எண்ணெயை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு, இப்போது அது தான் சிறந்தது என்று சொல்லவில்லையா? அதுபோலத்தான்... 

வானவியல் (Astronomy) என்ற சொல் வேறு ஜோதிடம் (Astrology) என்ற சொல் வேறு...

வானவியலானது வானவெளியில் குறித்த நேரத்தில் கிரகங்கள் எந்ந நிலைகளில் உள்ளன என்பதை ‪#‎மட்டும்‬ காட்டும். அதனால் தான் திருகணித பஞ்சாங்கத்தினால் துல்லியமாக சூரிய கிரகண நேரத்தினை கூறமுடிகிறது...
ஆனால் ஜோதிடம் என்பது நவ கிரகங்களின் கதிர்வீச்சினால் பூமியில் ஜனித்த குழந்தையின் தாக்கத்தினை அக்குழந்தையின் இறப்புவரையான காலகட்டம் வரை கூறுவதாகும். இங்கு குழந்தை
சூரியனில் இருந்து புறப்படும் ஒளி சுமார் 8 நிமிடத்தின் பின்னரே பூமியை வந்தடைகிறது என்று படித்த ஞாபகம்.
அப்படி இருக்கும் பட்சத்தில் ஜாதகர் பிறந்தவுடன் அவனை அடையும் கதிர்கள் நிச்சயமாக 10 நிமிடத்திற்கு முன்னர் வானவெளியில் இருந்து வந்த கதிர்களேயாகும். இதனால் ஜாதகன் பிறந்த நேரத்தை ஏறத்தாள சுமார் 15 நிமிடங்கள் முன்னதாக போட்டு திருக்கணித முறையில் ஜாதககட்டம் போட ஜாதகனின் கர்ப்பசெல் இருப்பு நீக்கி ஜனனகால இருப்புதிசை சில மாதங்கள் வரை அதிகரிக்கும். அந்நேரத்தில் சந்திரன் நின்ற நட்சத்திர நாதனின் தசா ஆண்டு எண்ணிக்கைபடி ஒவ்வொரு தசாவும் ஜாதகனிற்கு வழமையாக தொடங்கவிருக்கும் தசாகாலத்திற்கும் சிலமாதங்கள் பின்னதாகவே ஆரம்பிக்கும். இது வாக்கிய பஞ்சாங்கம் மூலம் கணித்த ஜாதகத்திற்கு (சற்று) அருகில் செல்லும். அது அந்த ஜாதகரில் விளைவை ஏற்படுத்த சிலகாலம் எடுக்கும். வேறும்பல சூட்சும கணிதங்களிற்கு பிறகு இதன் நிலையானது மேலும் வாக்கிய ஜாதக அமைப்பிற்கு அருகில் கொண்டு செல்ல முடியும். இங்கு வாக்கிய பஞ்சாங்கம் ஜாதகமே வெல்கிறது. அத்துடன் இரண்டாவது கோட்பாடாக கிரக கதிர்வீச்சுக்கள் தமது பலனை எம்மில் தர நிச்சயமாக சிறிது காலம் எடுத்துக்கொள்ளும்.
  
எனது சிற்றறிவிற்கு தெரிந்தவரை இந்த இரு கோட்பாடுகளையும் உங்கள் முன் வைத்துள்ளேன். இது தவிர ஏராளமான பல கோட்பாடுகள் இருக்கும்.
இறுதியாக, குறிப்பிட்ட நேரத்தில் வானவெளியில் இருக்கும் கிரகநிலைகளை திருக்கணித பஞ்சாங்கம் துல்லியமாக காண்பிக்கும். அதாவது இந்த நேரத்தில் வானவெளியில் கிரகங்கள் எங்கெங்கு உள்ளன என்று காட்டும். இது வானவியல் (Astronomy) துறைக்கே அதிக பொருத்தமானது. கிரகங்களில் கதிர்கள் எம்மை வந்தடையும் நேரத்தையும் அது எம்மில் விளைவை ஏற்படுத்த எடுக்கும் நேரத்தினையும் துல்லியமாக அறிந்தே நேரடியாக ஜோதிட பலன் கூற வாக்கிய பஞ்சாங்கம் எமது மாமுனிவர்கள், சித்தர்கள், ரிஷிகளால் தருவிக்கப்பட்டது; ஜோதிட பலன் தசாபுக்தி அந்தர சூட்சும முறையில் துல்லியமாக கூற வாக்கிய பஞ்சாங்கம் உகந்தது என்ற என்னுடைய கருத்தை உங்கள் முன்வைத்துள்ளேன்... வாக்கியம்; வானசாஸ்திரத்தை நேரடியாக பலன்கூறும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனது ஆதரவு என்றும் வாக்கியபஞ்சாங்கத்திற்கே... ஆனாலும் நேரநெருக்கடி காரணமாக திருக்கணித பஞ்சாங்க ஜாதகத்திற்கு திருக்கணித முறைப்படி பலன் கூறுவதுண்டு. வாக்கிய பஞ்சாங்கபடி கணித்த ஜாதகத்திற்கு சில விசேட விதிமுறைகள் உண்டு. அந்த உத்திகளை வாக்கிய ஜாதகத்தில் பயன்படுத்தி பலன் கூற வேண்டும். அதன்மூலமாகவே பலன் கூற வேண்டும். ஆனால் பலரோ வாக்கியஜாதகத்திற்கும் பாவகச்சக்கரம் போட்டு திருக்கணித முறையில் கையாளும் உத்திகளை கொண்டு பலன் கூறிவிடுகின்றனர்... 

பதிவை படித்து சுவைத்த நண்பர்களிற்கு நன்றி...

உங்கள் ஜாதகம் பார்க்க தொடர்புகொள்ளுங்கள் -  hariram1by9@gmail.com

இவன்;
பாரம்பரிய வாக்கிய ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் ஹரிராம்.

வலுவிழந்த ஜாதகம்


அனைவருக்கும் வணக்கம்.

இருதினங்கள் முன்பு என்னிடம் பலன் அறிய வந்த ஜாதகம். தற்போதுதான் நேரம் கிடைத்து கணித்துகொண்டு இருக்கின்றேன். இந்த ஜாதகத்தில் ஒரு சூட்சுமம் உள்ளது. அதனை இங்கு பகிர்கிறேன்.... (தேவையான தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். ஏனெனில் ஜாதகம் பார்க்க தந்தவரின் அனுமதி இன்றி அவர் ஜாதகத்தினை இங்கு பொதுவாக பதிவிட முடியாது...)

தனுசு லக்கினம், மீனராசி. குரு 4ல் கேந்திரபலம் பெற்று அஸ்தமனமாகி அம்சத்தில் துலாத்தில். கூடவே ராகுவால் சூரியன், சந்திரன், குரு என மூவரும் கிரகணம்... புதன் கும்பத்தில்.

• ஜாதகம் சரிபார்த்தாயிற்று...

• லக்ன, ராசி திருத்தம் செய்தாயிற்று...

• லக்கினம், ராசி இரண்டும் முற்றாக பலமிழந்துள்ளது...

• இப்போது லக்கினத்தினையோ அல்லது சந்திரலக்கினத்தையோ முன்னிறுத்தி பலன் கூற முடியாது.

பின்னர் எப்படித்தான் பலன் அறிவது என நீங்கள் கேட்பது புரிகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜாதகர் கேட்ட கேள்விக்குரிய காரகனை மையமாக வைத்து பலன் அறிய வேண்டும் என்று பாரம்பரிய ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக; இந்த நபர் சொத்து பற்றி கேள்விகேட்டுள்ளார். இங்கு செவ்வாய் நிற்குமிடத்தை லக்கினமாக கொண்டு ஜாதகரின் கேள்விக்கு பலன் உரைக்க வேண்டும் என்கிறது பிருகத்ஜாதகம். ஆனால் பலர் ஜோதிட மூலநூல்களில் கூறப்பட்ட விதிகளை அனுசரித்து பலன் கூறுவதில்லை. எடுத்தவுடன் லக்கினத்தினை மையமாக வைத்து பலன் கூற தொடங்கி விடுகிறார்கள். இவர்களது பலன் ஒருகாலமும் குறித்த ஜாதகருக்கு பொருந்தாது... இதனாலேயே “எந்த ஜோதிடர் சொல்வதும் எமக்கு பலிக்கவில்லை” என்று மக்கள் புலம்புகின்றனர். ஆகவே ஜோதிடம் கற்பவர்களே! மற்றும் நவீன?கணினி ஜோதிடர்களே! கணினியை ஒதுக்கி பேனா எடுத்து கணிதம் போட்டு ஜாதகத்தினை சரிபார்த்து ஜாதக திருத்தங்களை முறையாக மேற்கொண்டு அதன்பின் மூலநூல்களில் கூறப்பட்ட விதிகளை அனுசரித்து பலன் கூறுங்கள்... இதுவே உங்களை நாடி வரும் மக்களுக்கு நீங்கள் செய்யும் உதவி... அதேபோல ஜோதிடம் பார்க்கும் மக்களே! அதிக கட்டணம் வாங்குபவர், Appointment  கொடுப்பவர்தான் சிறந்த ஜோதிடர் என எண்ணி செல்லாமல் முதலில் அந்த ஜோதிடர் ஜோதிடத்தினை தெளிவாக கற்று உணர்ந்தவரா என அறியுங்கள். பரிஹாரம் எனும் பெயரில் ஆயிர கணக்கில் வசூலிப்பவர்களை தவிருங்கள். வாக்கிய ஜாதகத்தினையே வைத்திருங்கள். திருக்கணித ஜாதகம்/ கம்பியூட்டர் ஜாதகம் எல்லாம் சரிவராது. வாக்கிய பஞ்சாங்க ஜாதகம் பற்றிய ஒரு கட்டுரையினை அடுத்த பதிவில் பார்ப்போம்...

ஜோதிடம் கற்பவர்கள், ஜோதிடர்களிற்கு சில பொறுப்புணர்ச்சிகள் வேண்டும்...

* ஜோதிடம் கற்றவுடன் தம் திறமை என்பதை துறந்து; தாம் கற்றவையாவும் எம் ஜோதிட மூலநூல்களிலேயே உள்ளது என்றும் அவற்றை அருளிய ரிஷிகளும் நம் முன்னோர்களும் நமக்காக விட்டுச்சென்ற ஆசீர்வாதம் எனவும் எண்ண வேண்டும்.

* எந்த ஜோதிடகலையாயினும் அவ்வவ் மூலநூல்களில் தரப்பட்ட விதிகளை, விளக்கங்களை அவமதிப்பது குற்றம் என்பதைவிட துரோகம் எனும் சொல்லே மிக பொருத்தமானது...

* ஜோதிடம் வளர உதவி செய்ய வேண்டும். அதனை சரியான முறையில் எடுத்து செல்ல வேண்டும். சமூகத்தில் ஜோதிடத்தின் புகழை உயர்த்த வேண்டும்.

* ஜோதிடம் கற்பவர் ஒரு அன்னப்பறவை போல இருக்க வேண்டும். குருவை மனதில் சுமந்து பல ஜோதிட தகவல்களை பல இடங்களில் படித்தாலும் பாலையும் நீரையும் பிரித்து பாலை அருந்துவதுபோல சரியான தகவல்களை மட்டும் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும்.

* அடிப்படை ஜோதிடம் கற்பவர்கள் மக்கள் கேட்கும் சில சென்சிடிவ்வான கேள்விகளிற்கு பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் மக்களின் ஜாதகங்களிற்கு பலன்கூறி தம்மறிவை வளர்க்க நினைப்பது தப்பு. அது மக்களை பாதிக்கும். ஆகவேதான் குருமூலமாக கற்க கூறுவது... இவர்கள் ஜோதிடர்கள் கூறும் பதிலை/பலனை வைத்து தம் அறிவை உயர்த்தி கொள்ளலாம்.

* இறைவனிற்கு பணிந்து, ஆன்மீகத்துடன் தன்னை இணைப்பவராக ஒரு ஜோதிடர் இருக்க வேண்டும். புண்ணிய பலன்களை தேடுபவராக இருக்க வேண்டும்...

பதிவை படித்து சுவைத்த நண்பர்களிற்கு நன்றி...

உங்கள் ஜாதகம் பார்க்க தொடர்புகொள்ளுங்கள் -  hariram1by9@gmail.com

இவன்;
பாரம்பரிய வாக்கிய ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் ஹரிராம்.

சூரியசந்திரர்க்கு மட்டும் ஏன் ஒருவீடு - ஆய்வு கட்டுரை.


அனைவருக்கும் வணக்கம்.

தந்தைகாரகன் சூரியன், தாய்காரகன் சந்திரன். ஒருவரிற்கு ஒருதாய்தந்தை மட்டுமே இருக்க முடியும். ஆகவே சூர்யசந்திரர்க்கு மட்டும் ஒருவீடு என்று சிலரால் கூறப்படுகிறது. இங்கு தாய், தந்தை எனும் அந்தஸ்து பெறும் கிரக காரகத்திற்கும் அவர்கள் உரிமைபெறும் ராசிகளிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை... இதுபோன்ற மேலோட்டமான கருத்துக்களையும் கிரகங்கள் இரு வீடு பெற்ற கதைகளையும் கேட்டிருப்போம்... ஆனால் எனது இந்த பதிவிலுள்ள எண்ணங்களானது வானவியலை அடிப்படையாக கொண்டு உண்மையான காரணத்தை அறிய வேண்டிய முயற்சியின் தேடலாக அமைகிறது...

ஒளிகிரகங்களான சூரியன், சந்திரனிற்கு தலா ஒரு வீடுகள். ஏனைய தாராகிரகங்கள் எனப்படும் புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி சுயமாக ஒளிர்வதில்லை. இவை சூரியனின் ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கின்றன... வானவெளியில் உள்ள பல கிரகங்களிற்கு உபகோள்கள் உள்ளன. அதில் நாம் வசிக்கும் புவியின் உபகோளான சந்திரன் புவிக்கு மிக அருகில் உள்ளது. இதன் ஒளி எனும் கதிர்வீச்சு மனிதர்களிலும் கடல், தாவரம், சமநிலை என புவியின் பல்தரப்பட்ட வஸ்துக்களிலும் செல்வாக்கு செலுத்துகிறது என்பது ஜோதிடத்தை ஏற்றுக்கொள்ளாத மனிதர்கள் கூட அறிவர்... எனவே பூமியில் வசிக்கும் நாம் கிரககதிர்வீச்சு என பார்க்கும்போது சூரியனை அடுத்து சந்திரனே முக்கியத்துவம் உடையதாக உள்ளது. அவ்வாறான சந்திரன் சூரியஒளியில் (மட்டும்) ஒளிர்கிறது.

பூமியில் வசிக்கும் எமது நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது சூரிய, சந்திர ஒளியை பிரதிபலிக்கும் கிரகங்களிற்கு தலா இரண்டு வீடுகளை நமது முன்னோர்கள் அமைத்து கொடுத்துள்ளனர். எத்தனை ஒளிர்வுகிரகங்களின் ஒளியை ஒரு பருப்பொருள் மீது பிரதிபலிக்கின்றதோ அந்த பருப்பொருளை மையமாக வைத்து எடுக்க வேண்டும். எத்தனை ஒளிர்வை பிரதிபலிக்கின்றதோ அத்தனை வீடுகளாக எடுக்கலாம். சூரியன் சுயமாக ஒளிர்கிறது. சந்திரன் சூரியனின் ஒளியில் மட்டும் ஒளிர்கிறது. ஆகவே இருவருக்கும் தலா ஒருவீடுகள் சொந்தமாக உள்ளது. ஏனைய கிரகங்கள் அப்படியல்ல. அவை சூரிய, சந்திர ஒளியில் ஒளிர்கின்றன. எனவே அவை இருவீடுகளிற்கு உரிமை பெறுகின்றன (நாம் பூமியில் இருப்பது கிரக கதிர்களை கணிப்பதால் சந்திரஒளியில் கிரக பிரதிபலிப்பியல்பு உள்ளது.) ஏனைய கிரகங்கள் சந்திரனின் சொந்தவீடான கடகத்திலிரும் சூரியனின் சொந்தவீடான சிம்மத்திலிருந்தும் வரிசையாக தலா ஒரு வீடுகளை கொண்டமையிலிருந்து இதனை உறுதிப்படுத்தலாம். சந்திரஒளிக்கு; நீச்ச கிரகங்கள் கேந்திரத்தில் அதன் நீச்சம் பங்கமடைவதிலிருந்து புவிக்கு அருகில் உள்ள சந்திரனின் ஒளியின் மகத்துவத்தினை நாம் உணர முடியும்.


பூமியின் உபகோள் சந்திரன் போன்று சனியின் உபகோள் குளிகன். இது புவியின்
நேரடியான ஆளுகைக்குட்படாமையால் ஏனைய கிரகங்களின் உபகோள்களிற்கு ஜோதிடத்தை பொருத்தவரை சொந்தவீடுகள் ஒதுக்கப்படவில்லை. ராகுகேதுக்கள் உண்மையில் நாம் நினைப்பதுபோல தொட்டு உணரக்கூடிய திடமான (பருப்பொருளான) கிரகங்கள் அல்ல. அவை சூரியசந்திரரின் நிழல்கள். ஒளியை முன்னிறுத்து பார்க்கும்போது ராகுகேதுக்கள் சூரிய அல்லது சந்திர ஒளியை பிரதிபலிப்பதில்லை. ஆகவே அவைகளிற்கு சொந்தவீடுகள் ஒதுக்கப்படவில்லை. நிழல் கிரகங்கள் எனும் ரா/கே இருள் எனும் விரும்பத்தகாத இயல்பால் ஜாதகரை பாதிக்கிறது. ஒரு எளிய உதாரணமாக கடவுள் எனும் ஒளி இருக்கும் இடத்தில் தீயசக்தி(பேய்பிசாசு) எனும் இருள் இருப்பதில்லை. இதனை கடவுள் எனும் ஒளி இல்லாத இடத்தில் தீயசக்தி எனும் இருள் இருக்கும் என அறியலாம். இதுவே ராகுகேது பலன்தரும் முறையாகும். எனவேதான் ஒளிகிரகங்களான சூரிய சந்திரர்க்கு இருளெனும் இவை கடும் பகையாக கருதப்படுகிறது... சிலரிற்கு பகல் உத்தமம், சிலரிற்கு இருளே உத்தமம் என்ற அடிப்படையில் ரா/கே நன்மை தரும் அமைப்பில் உள்ள போது நன்மைசெய்துவிடுகிறது... ராகுகேது பற்றி மேலும் விபரித்தோமேயானால் அது இக்கட்டுரையின் தலைப்பை திசைமாற்றகூடும் என்பதனால் இத்துடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்...

ஜோதிடத்தை பொறுத்தவரை திருவருளும் குருவருளும் கைகூடி சிறிது நேரமெடுத்து சிந்தித்தோமானால் பல அற்புதமான விளக்கங்களும் குழப்பங்களும்? (அதற்கு தீர்வுகளும்) வருவதாலேயே ஜோதிடம் கடலாக உள்ளது போலும்... பதிவை படித்து சுவைத்த நண்பர்களிற்கு நன்றி...
உங்கள் ஜாதகம் பார்க்க தொடர்புகொள்ளுங்கள் -  hariram1by9@gmail.com
இவன்;
ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் ஹரிராம்.

புதன், 26 ஏப்ரல், 2017

சித்தர்பீடங்கள்

ஓம் நமசிவாய 

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,சூட்சுமமாக இருந்து நம்மைக் காக்கும் மகான்களின் ஜீவசமாதிகளை வழிபடும் சூட்சும வழிபாட்டு முறை


சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரையிலும், ஆவி வழிபாடுதான் நமது தமிழ்நாட்டில் இருந்துவந்தது.அக்காலத்தில் இருந்த ஆன்மீக அருளாளர்கள் " கலிகாலத்தில் மனிதர்களின் வாழ்க்கை,சிந்தனை முறை எப்படி இருக்கும்?" என்பதை சிந்தித்தன் விளைவாக ஆவி வழிபாட்டு ஸ்தலங்களான ஜீவசமாதிகள் மற்றும் சித்தர்களின்  ஜீவசமாதிகளை கோவில்களாக மாற்றினார்கள்.எந்த மகான் எந்த கடவுளின் மீது பிரியமாக இருந்தாரோ, அல்லது எந்த கடவுளை வழிபட்டாரோ அந்த தெய்வத்தின் சிலை அவரது ஜீவசமாதியின் மீது அல்லது அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.பெரும்பாலான மகான்களும்,சித்தர்களும் சிவனை வழிபட்டிருக்கின்றனர்.அபூர்வமான சிலர் விநாயகரையும்,முருகக்கடவுளையும்,சக்தியையும்,முனீஸ்வரரையும், கருப்பசாமியையும் வழிபட்டிருக்கின்றனர்.அதனால்,அந்த ஜீவசமாதிகளின் மீது அல்லது அருகில்(ஒரே கோவிலுக்குள்) உரிய தெய்வங்கள் சமைக்கப்பட்டு,கோவில்களாக மாற்றப்பட்டுள்ளன.
உதாரணமாக சித்தர் போகரின் வழிபாடு முருகக்கடவுளின் வழிபாடு ஆகும்.அதனால்,பழனிமலையில் முருகக்கடவுளின் கோவில் உருவானது.நாம் பழனி முருகக்கடவுளை தொடர்ந்து,முருகக்கடவுளின் வழிபாட்டுமுறைகளுக்கு ஏற்றவாறு வழிபட்டால்,போகர் அகமகிழ்ந்து,நமது கோரிக்கைகளை நிறைவேற்றுவார்;பிரச்னைகளைத் தீர்ப்பார்;நோய்களைக் குணப்படுத்துவார்;துன்பங்களை நீக்குவார்;இந்த அரிய ஆன்மீக ரகசியத்தை நமக்காக 40 ஆண்டுகளாக ஆராய்ந்து சொன்னவர் ருத்ராட்சத் துறவி,சிவகாட்சம் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் ஆவார்.எனவே,நாம் அவருக்கு இந்த ஜன்மம் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
 ஜீவசமாதிகளை நாம் எப்படி வழிபட வேண்டும்?
முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை,ஒருகிலோவுக்கு குறையாமல் டையமண்டு கல்கண்டு,அரை கிலோவுக்குக் குறையாமல் விதையில்லாத கறுப்பு திராட்சைப்பழங்கள்,கொஞ்சம் விதையில்லாத பேரீட்சைப்பழங்கள் இத்துடன் கொஞ்சம் வெற்றிலையும்,கொட்டைப் பாக்கும்,சந்தனபத்திக் கட்டும்,ஆறு நாட்டு வாழைப்பழங்களும் கொண்டு வந்து பத்தி பொருத்தி,தேங்காய் உடைத்து,கற்பூரம் கொளுத்தி,சிகப்பு ரோஜாக்களால் கட்டப்பட்ட மாலையை ஜீவசமாதியில் உள்ள தெய்வச்சிலைக்கு அணிவிக்க வேண்டும். நெய்தீபம் ஜீவசமாதியின் முன்பு ஏற்ற வேண்டும்.
                    
எந்த எந்த நாட்களில் ஜீவசமாதி வழிபாடு செய்யலாம்?
பகைவரோடு போராடி,போராடி களைத்துபோன நேர்மையாளர்கள், தங்களது நியாயமான பிரச்னைகள் தீர திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் இவ்வாறு 8 திங்கட்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்ய வேண்டும்;
குலதெய்வம் தெரியாதவர்கள்,குலதெய்வத்தின் கோபத்துக்கு ஆளானவர்கள்,குலதெய்வ வழிபாட்டை மறந்தவர்கள்,குல தெய்வத்தை அறியாமல் இருந்து ,அதனால் கஷ்டப்படுபவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்;இப்படி 8 செவ்வாய்க்கிழமைகளுக்கு தொடர்ந்து ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்;

வேலைக்குப் போய்க்கொண்டிருப்பவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய விரும்புவோர்,புதன் கிழமைகளில் மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும்;இவ்வாறு தொடர்ந்து 8 புதன்கிழமைகளுக்குச் செய்து வர ,நல்ல பொருளாதாரத் தன்னிறைவை அடைய முடியும்.
தனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தகுந்த குருவைத் தேடுபவர்கள்,வியாழக்கிழமைகளில் மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி 8 வியாழக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது;
பணரீதியான பிரச்னைகள் இருப்போர்,பண நெருக்கடியில் இருப்பவர்கள் அதிலிருந்து மீள வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது;

பண நெருக்கடி,தொழில் மந்தநிலை,குடும்பப் பிரச்னைகள் என எல்லாவிதமான பிரச்னைகளும் தீர விரும்புவோர் சனிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்துவர வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 சனிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்துவிட்டாலே போதுமானது.

நீண்டகாலமாக வழக்குடன் போராடிக்கொண்டிருப்பவர்கள்(எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி) ஞாயிறு மாலை 5 முதல் 7 மணிக்குள் மேற்கூறியவாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு வழிபாடு செய்தால் போதுமானது.

இந்த ஜீவசமாதி வழிபாடு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி,அவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தியாக வேண்டும்;இது ரொம்ப முக்கியம்.முட்டை,முட்டை கலந்த கேக்,புரோட்டா என மறைமுக அசைவ உணவுகளையும் தவிர்த்துவிட்டே இந்த ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும்.யார் எந்த ஊரில் இருக்கிறார்களோ,அந்த ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் இந்த வழிபாடுகளை முடிக்கலாம்;துக்கம்,பிறப்பு முதலியவற்றால் தொடர்ந்து 8 வாரங்கள் செய்ய முடியாவிட்டாலும்,விட்டு விட்டு செய்தாலும் போதுமானது.அதே சமயம் 8 வாரத்துக்கு மேல் இந்த ஜீவ சமாதி வழிபாடுகளை பின்பற்றக் கூடாது.எச்சரிக்கை!!!

இந்த தெய்வீக ரகசியத்தை எனக்கும்,நமக்கும் அருளிய ருத்ராட்சத் துறவி,சிவகடாட்சம் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் சீடரும்,நமது ஆன்மீக குருவுமாகிய திரு.சிவமாரியப்பன்,புளியங்குடி அவர்களுக்கு கோடி கூகுள் நன்றிகள்!!!

ஓம்சிவசிவஓம்                             

தமிழ்நாட்டில் இருக்கும் மகான்கள்,துறவிகள்,சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்குமிடங்கள்: 






நாம் நமது வீட்டில் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால்,பத்துமுறை ஜபித்தமைக்கான பலன்கள் கிடைக்கும்;
நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் ஒரு முறை ஒரு மந்திரத்தை ஜபித்தால்,1000 முறை ஜபித்ததற்கான பலன்கள் கிடைக்கும்;
மலை மேலே இருக்கும் ஒரு கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால்,1,00,00,000 தடவை ஜபித்தபலன்கள் நம்மை வந்து சேரும்;
கடலோரக்கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால்,2,00,00,000 தடவை ஜபித்ததற்குரிய மந்திர ஜபசக்தி நமக்கு உருவாகும்;
இந்த எண்ணிக்கை சாதாரண நாட்களில்,ஜபித்தால் கிடைக்கும் எண்ணிக்கை ஆகும்.இதே மந்திரஜபத்தை தமிழ் வருடப்பிறப்பு,தமிழ்மாதப்பிறப்பு,அமாவாசை,பவுர்ணமி,கிரகண நாட்களில் ஜபித்தால்,மேலே கூறிய எண்ணிக்கையோடு 100 கோடி மடங்கு பலன்களாக நம்மை வந்து  சேரும்.
எந்த ஒரு மந்திரத்தையும் நாம் 1,00,000 தடவை ஜபித்தபின்னரே,அந்த மந்திரத்துக்கு உயிர் உண்டாகி,நம்மை பாதுகாக்கத் துவங்கும்;ஆனால்,நாம் ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் மட்டும் 10,000 தடவைகளுக்கு ஜபித்துவிட்டாலே,ஓம்சிவசிவஓம் நம்மை பாதுகாக்கத் துவங்கும்;1,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்வரையிலும்,நமக்கு ஓம்சிவசிவஓம் ஜபிக்கமுடியாத அளவுக்கு பல தடைகள் வரத்தான் செய்யும்;நமது மன உறுதியாலும்,குருபக்தியாலும்,சிவபெருமானாகிய அண்ணாமலையாரின் மீதான பாசத்தாலும் அந்த தடைகளை முறியடித்து,ஓம்சிவசிவஓம் ஜபத்தை ஒரு லட்சம் தடவை வரை ஜபித்துமுடித்துவிட வேண்டும்;அதன் பிறகு ஒரு நாளுக்கு 108 முறை அல்லது 15 நிமிடம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருவது நல்லது & அவசியம்.இப்படி தினமும் 108 முறை வீதம் நமது ஆயுள் முழுவதும் ஒரு நாள்கூட விடாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்துவர வேண்டும்.
நீதி ,நேர்மை,தர்மப்படி வாழ்ந்துவருபவர்களில் பெரும்பாலானவர்களை உடன்பிறந்தோர்,பெற்றோர்,வாழ்க்கைத் துணை,குழந்தைகள் கூட ஆதரிப்பதில்லை;உதவுவதில்லை;அதே சமயம்,நீதியை நேர்மையைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழில் அல்லது போதுமான செல்வச் செழிப்பு இல்லாத நிலை இருந்தால்,அவர்கள் பணத்துக்கு அடிமையாகியிருக்க வேண்டும்.பணத்துக்காக பலர் தனது நேர்மையான,நீதியான வாழ்க்கையை தொலைத்துவிட்டு,கலியின் கொடுமையால் அநீதியான,பேராசை மிகுந்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.இப்படிப்பட்ட சூழ்நிலையே இந்த கலிகாலத்தில் இருக்கிறது.இருந்தும் கூட,பணக்கஷ்டம் வந்தபோதும் கூட,தர்மம்,நீதி,நேர்மையைக் கைவிடாதவர்கள் சில ஆயிரம் பேர்கள் தமிழ்நாடு முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களைத் தான் ஆன்மீகக்கடல் தேடிக்கொண்டிருக்கிறது;இவர்களுக்குத் தேவையான தெய்வீக சக்தியை,நியாயமான செல்வ வளத்தை இந்த ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் தரும்;


இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் பின்வரும் ஜீவசமாதிகளில் தினமும் 15 நிமிடம்,மஞ்சள் துண்டு விரித்து,கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ,இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்து,ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இப்படிச் செய்துகொண்டே வர வேண்டும்.இதுவே இந்த தர்மவான்களுக்குத் தேவையான தெய்வீக பாதுகாப்பு,செல்வ வளம்,மன வலிமை,உடல் நலத்தைத் தந்துவிடும்.


இப்படி இருப்பவர்களும் தொடர்ந்து தர்மப்படி வாழமுடியாத அளவுக்கு ஏதாவது ஒரு கெட்டபழக்கத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள்;உதாரணம் :காதல்,கள்ளக்காதல்,இணையத்தில் இருக்கும் காம இணையதளங்களுக்கு அடிமையாகிவிடுதல்,சூதாட்டம்,கிரிக்கெட் பைத்தியம்,குடிப்பழக்கம்,போதை மருந்துகள் அடிக்கடி பயன்படுத்துவது, மனைவி அல்லது சகோதரி அல்லது மகள் அல்லது தாயை தினமும் அழவைத்துப் பார்ப்பது(அப்படி ஒரு வக்கிரமான குணம்=சாடிஸ்ட்);அரசியலில் ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்தும் கூட அரசியல் கட்சியில் தீவிரமாக உழைப்பது;யாருக்கோ உழைத்து அவர்களை பணக்காரராக்குவது; காம மயத்தால் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கவனிக்காமல் இருப்பது; வாரம் ஒருமுறை கூட மனைவியிடம் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளாமல் இருப்பது; தனது குழந்தைகளின் பாச ஏக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது; பிறரது கள்ள உறவுகளுக்கு பக்கபலமாக இருப்பது.  . . என்று பலவிதமான தவறுகளில் சிக்கியிருப்பவர்கள் அதிலிருந்துமீள முடியாமல் தவிப்பார்கள்;


அப்படி  மீள விரும்புவோர்,ஒரு நாளுக்கு 15 நிமிடம் வீதம் தினமும் ஓம்சிவசிவஓம் ஏதாவது ஒரு ஜீவசமாதிக்குச் சென்று  ஜபித்து வர வேண்டும்;45 முதல் 90 நாட்களுக்குள் தவறான பழக்கம் எதுவாக இருந்தாலும்,தவறான குணம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.அதன்பிறகும் விடாமல் தினமும் உங்களது ஊரில் இருக்கும் ஜீவசமாதியில் ஓம்சிவசிவஓம் ஜபித்துவர வேண்டும்.
சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும்,இருப்பிடமும்

திருவொற்றியூர்: பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார் கோவில் வீதி.ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.
பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம்
ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது.
அருள்மிகு யோகீஸ்வரர் சாமி=வடிவுடையம்மன் கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர்.
பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில் 4,தங்கம் மாளிகை அருகில்.
ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை.
மவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதி கோவில்.
முத்துக்கிருஷ்ண பிரம்மம்=ஆஞ்சநேயர் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம் நட்சத்திரத்தன்று குரு பூஜை;
ஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி அருகில் ஞான சுந்தர பிரம்மம் சமாதி.சித்திரை மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!

ராயபுரம்:குணங்குடி மஸ்தான் சாயபு= காய்கறி மார்க்கெட் பின்புறம் பிச்சாண்டி தெருவில் உள்ளது.
ஞானமாணிக்கவாசக சிவாச்சாரியார் சித்தர்= மன்னார்சாமி கோவில் தெரு பழைய பாலம் இறக்கத்தில் உள்ள ருத்ர சோமநாதர் கோவிலில் சமாதி .

வியாசர் பாடி:சிவப்பிரகாச சாமி=இரவீஸ்வரர்-மரகதாம்பாள் கோவிலில் சமாதி கோவில்.
கரபாத்திர சிவப்பிரகாச சாமி=1 வது தெரு சாமியார் தோட்டம் அம்பேத்கர் கல்லூரி அருகில்.பங்குனி உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை!!
பெரம்பூர்:அந்துகுருநாத சுவாமிகள்=மாதவரம் நெடுஞ்சாலை பிரசன்ன விநாயகர் கோவிலில் சமாதி கோவில்-பஞ்சமுக வடிவமும் உள்ளது.
மதனகோபாலசாமி=மேல்பட்டி பொன்னப்பமுதலி தெரு ஈஸ்வரி கல்யாண மண்டபம் எதிரில் சமாதி கோவில்;
சந்திர யோகி சுவாமி=மங்களபுரம் ஐந்துலைட் அருகில்.
வேர்க்கடலை சுவாமி=அய்யாவு தெரு,திரு.வி.க.நகர்.
மதுரை சாமி=செம்பியம் வீனஸ் தியேட்டர் 2 வது குறுக்குத் தெரு வலது பக்கம் மதுரை சாமி மடத்தில்.
மயிலை நடராஜ சுவாமி=கொளத்தூர்- பெரவள்ளூர் செல்லியம்மன் கோவில் பின்புறம்.

ஓட்டேரி:ஆறுமுகச்சாமி=173/77 டிமலஸ் சாலை,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு-ஓட்டேரி மயானத்தில் சமாதி கோவில்-உருவப்பட பூஜை.
புரசைவாக்கம்: வீரசுப்பையா சுவாமி= புவனேஸ்வரி தியேட்டர் எதிரில்-52,பெரம்பூர் பேரக்ஸ் ரோடு மடத்தில் சமாதி கோவில்.
ஈசூர் சச்சிதானந்த சாமி=கொசப்பேட்டை சச்சிதானந்தா தெரு(வசந்தி தியேட்டர் அருகில்) சமாதி கோவில்.

எழும்பூர்:மோதி பாபா=422,பாந்தியன் சாலை போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரில் தர்கா.
அனந்த ஆனந்த சுவாமி மற்றும் சபாபதி சுவாமி=பாலியம்மன் கோவில் பின்புறம் சாமியார் தோட்டத்தில் இருவரது சாமதி கோவில்-ஐப்பசி திருவாதிரை நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.

நுங்கம்பாக்கம்:கங்காத சுவாமி=ஹாரிங்டன் ரோடு 5 வது அவென்யூ ஜெயவிநாயகர் கோவிலில் சமாதி.
நாதமுனி சாமி=ஹாரிங்டன் ரோடு,பச்சையப்பன் கல்லூரி பின்வாசல் அருகில் நாதமுனி மடத்தில் சமாதி கோவில்.
பன்றிமலை சாமி=5,வில்லேஜ் ரோட்டில் ‘ஓம்நமச்சிவாய’என்ற பெயரில் ஆஸ்ரமத்தில் சமாதி.
ஆதிசேஷானந்தா=நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தின் பின்புறம் ஆதிசேஷானந்தா கோவிலில் சமாதி.
வீரமாமுனிவர்=நுங்கம்பாக்கம் புஷ்பா நகர் காவல்நிலையம் எதிரில் அசலத்தம்மன் கோவில்.

கோடம்பாக்கம்: ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமி=அசோக் நகர்-சாமியார் மடம் டாக்டர் சுப்பராயன் நமர் சாமியர் மடம் ஞானோதய ஆலயம்-ஸ்ரீபரமஹம்ஸ ஓங்கார சாமிபீடம்.

வடபழனி:அண்ணாசாமி,ரத்தினசாமி,பாக்கியலிங்கசாமிகள்=வடபழனி முருகன் கோவில் உருவாக இந்த மூவரும் காரண கர்த்தாக்கள்.இவர்களது சமாதி கோவில் முருகன் கோவில் பின்புறம் நெற்குன்றம் பாதையில் வள்ளி திருமண மண்டபம் அருகில்.

மைலாப்பூர்:திருவள்ளுவர்-வாசுகி அம்மையார்=லஸ் அருகில் திருவள்ளுவர் கோவிலில்.
அப்பர் சாமிகள்=171,ராயப்பேட்டை ஹைரோடு-சமஸ்க்ருத கல்லூரி எதிரில்,மைலாப்பூர் அப்பர் சாமிகள் சமாதி உள்ளது.
குழந்தைவேல் சுவாமி=சித்திரகுளம் எஸ்.டி.பி.கில்டு பில்டிங்கில் இருக்கிறது.
முத்தையா சாமிகள்=குழந்தைவேல் சாமிகள் சீடர்-அவரது சமாதி அருகில்.

ஆலந்தூர்:தாடிக்கார சுவாமி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் தாடிக்காரசாமி தெரு-பழைய எண்:23-24 இடையே சந்து.உள்ளே தாடிக்கார சாமியின் சிறிய ஜீவ சமாதி கோவில்.சிவலிங்க பிரதிஷ்டை.
குழந்தைவேல பரதேசி=ஆலந்தூர் ஈ.பி.அலுவலகம் பின்புறம் 53,சவுரித்தெரு,எஸ்.ஆர்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாயிலுக்குக் கீழ்ப்புறம் சமாதி கோவில்.

கிண்டி:சாங்கு சித்தர் சிவலிங்க நாயனார்=எம்.கே.என்.ரோடு 36 ஆம் எண்-சாங்கு சித்தர் சிவலிங்கநாயனார் சமாதி கோவில்-சிவலிங்க பிரதிஷ்டை.இத்துடன் இவரது சீடர்கள் ஸ்ரீகொல்லாபுரி சாமி,ஸ்ரீஏழுமலை சாமிகளின் சமாதி,ஆனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை.
சத்யானந்தா கோழீபீ சித்தர்=பஸ் ஸ்டாப் அருகில் உள்ள சாய்பாபா கோவில் வளாகத்தில்.

திருவான்மியூர்:பாம்பன் சுவாமிகள்-கலா சேத்ரா அருகில் திருமட வளாகத்துள் ஸ்ரீபாம்பன் சுவாமிகள் சமாதி ஆலயம்.ஸ்ரீமுருகக்கடவுள் பிரதிஷ்டை.
வால்மீகி=மருந்தீஸ்வரர் கோவில் எதிரில் சிறிய கோவில்.
சர்க்கரை அம்மாள்=75,கலா சேத்ரா ரோடு,

வேளச்சேரி:சிதம்பரச்சாமி என்ற பெரியசாமி=காந்தி சாலை திருப்பம்-1,வேளச்சேரி மெயின் ரோடு-சிவலிங்க பிரதிஷ்டை.

ராஜகீழ்ப்பாக்கம்:சச்சிதானந்த சற்குரு சாமிகள்=அகண்ட பரிபூரண சச்சிதானந்த சபையின் சமாதி.

பெருங்குடி:நாகமணி அடிகளார்=கந்தன் சாவடி பஸ்ஸ்டாப் – நாகமணி அடிகளார் சாலை அம்மன் கோவிலுகுள்.

நங்கநல்லூர்:மோனாம்பிகை-ஞானாம்பிகை- சாதுராம்
இம்மூவரின் சமாதி பிளாட் 21,பொங்கி மடம்(மாடர்ன் உயர்நிலைப் பள்ளி அருகில்)-ஸ்டேட் பாங்க் காலனி

சிட்லப்பாக்கம்:சாயி விபூதி பாவா= 83,முதல் மெயின் ரோடு,ஹெச்.சி.நகர்-சிட்லப்பாக்கம் பாலம் இறக்கத்தில் சமாதி கோவில்-அருகில் குமரன் குன்றம் மலைக்கோவில்.

தாம்பரம்: எதிராஜ ராஜயோகி-ஊரப்பாகம் அருகில் கரணை புதுச்சேரியில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.

படப்பை:துர்கை சித்தர்-ஜெயதுர்கா பீடம் கோவில்.
பெருங்களத்தூர்: ஸ்ரீமத் சதானந்தசாமி- ஆலம்பாக்கம் சதானந்தபுரம்- பெருங்களத்தூரில் சமாதி கோவில்.

ஓம்சிவசிவஓம்                     
பூமியில்  சித்தர்களின் ஆட்சி துவங்கப் போகிறது;சித்தர்கள் பூமியை 72,000 ஆண்டுகளுக்கு ஆளப்போகிறார்.முதலில் கொங்கணவர் 150 ஆண்டுகளுக்கு பூமியை ஆளப்போகிறார்;இவரது ஆட்சி துவங்கியதும்,தமிழ்நாடு ஆன்மீக ரீதியாக சுத்தமாகும் என்று தெரிகிறது;சித்தர்களின் ஆட்சி துவங்கியதற்கு அடையாளமாக தமிழ்நாட்டின் பழமையான கோவில்களில் இருக்கும் குளங்களில் நறுமணம் எப்போதும் பரவிக்கொண்டே இருக்கும்;(இந்த அரிய தகவலை நமக்கு ஆன்மீக மற்றும் ஜோதிட ரீதியாக ஆராய்ச்சி செய்து சொன்னவர் எனது ஜோதிட மானசீக குரு அமரர்.பி.எஸ்.பி.ஐயா அவர்கள்;இவர் சென்னையில் அஞ்சல் வழி ஜோதிடப் பயிற்சிக்கல்லூரியை நடத்திவருகிறார்.)இதுதான் அடையாளம்.கடந்த 30,40,50 ஆண்டுகளாக நீதி,நேர்மை,தர்மம் மற்றும் நியாயத்துக்காகப் போராடுபவர்கள்,நேர்மையாக வாழ்வதாலேயே அனைத்தையும் இழந்தவர்கள் அனைவரும் சித்தர்களின் ஆட்சிக்காலத்தில் சகல சவுபாக்கியமும் பெற்று வளமோடு வாழப் போகிறார்கள்.அதற்குள் சித்த சக்திகளின் அருளாசியைப் பெற்று,நீதி நியாயத்துக்குக் கட்டுப்பட்டு வாழத்துவங்குவோம்;
விருதுநகரில் இருக்கும் ஜீவ சமாதிகள்
திருப்புகழ் முத்தையா சாமிகள்:விருதுநகர் நகராட்சி பின்புறம் நாராயண மடம் தெரு பிரியும் இடத்தில் திருப்புகழ்சாமி சமாதி கோவில் அமைந்திருக்கிறது.
சாத்தூர்
மாவிலிப்பட்டி சங்குசாமி
சாத்தூரிலிருந்து 25 கி.மீ.தூரத்திலுள்ள மாவிலிப்பட்டியில் சமாதி கோவில் இருக்கிறது.
அருப்புக்கோட்டை
அருப்புக்கோட்டை டூ விருதுநகர் சாலை பாவடித் தோப்பு அருகில் சமாதி கற்கோவிலாக விமானத்துடன் உள்ளது.இங்கு வருடாந்திர குருபூஜை விழா மாசி மாதத்து மகம் நட்சத்திரம் நிற்கும் நாளில்( மாசி பவுர்ணமி) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
தட்சிணாமூர்த்தி சுவாமி
அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரம் நேரு மைதானத்திற்கு வடக்கே சமாதி கோவில் இருக்கிறது.இங்கு வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திர நாளன்று நடைபெற்றுவருகிறது.
சுப்பன் ஞானியார்
சொக்கலிங்கபுரம் வடக்குரதவீதி காமாட்சியம்மன் கோவில் பின்புறம் சமாதி கோவில்  இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாத புனர்பூசம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.
ஆத்மானந்த ராமசாமி
சொக்கலிங்கபுரம் சிவன் கோவில் தெப்பக்குளத்தின் மேற்குக் கரைப்பக்கம் சமாதி கோவில் இருக்கிறது.ஐப்பசி மாதம் வரும் மூலம் நட்சத்திரநாளன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
பொன்னம்பல சுவாமி
அருப்புக்கோட்டை பாவடித்தோப்பு அருகில் உள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலுக்கு மேற்கே சமாதி கோவில் இருக்கிறது.தை மாதம் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
புலியூரான்
புலியூரான் சித்தர்
அருப்புக்கோட்டையில் இருந்து 10 கி.மீ.தூரத்தில் உள்ளது புலியூரான் சமாதி.
கட்டங்குடி
ரெட்டிச்சாமி குமரவேல் மவுனகுருசாமி
அருப்புக்கோட்டையிலிருந்து 15 கி.மீ/தூரத்தில் உள்ள கட்டங்குடியில் சமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா ஆனிமாத சுவாதி நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.
சிவானந்த ஜோதி
மேற்கிலிருந்து ஊருக்குள் நுழையும்போது சாலைக்கு வடபுறம் முதலில் தென்படும் கோவில் வளாகமே சிவானந்த ஜோதி சித்தர் அதிஷ்டானக் கோவில்.வருடாந்திர குருபூஜை விழா புரட்டாசி மாத பவுர்ணமியன்று நடைபெற்றுவருகிறது.
கோட்டூர்
கோட்டூர் குருசாமி
அருப்புக்கோட்டையிலிருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ள கோட்டூரில் குருசாமி சுவாமிகளின் சமாதி கோயில் இருக்கிறது.ஆடி மாத மகம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.இவரது ஜீவசமாதி ராஜபாளையம் அம்பலபுளிபஜாரின் தெற்கு எல்லையில்,சாலியர் சமுதாயத் தெருவை ஒட்டி அமைந்திருக்கிறது.மிகவும் சக்தி வாய்ந்த ஜீவசமாதி கோயில் இந்த ராஜபாளையம் குருசாமி கோவில் ஆகும்.சுமார் 3000 குடும்பங்களுக்கு இவரே குல தெய்வமாகத் திகழ்ந்துவருகிறார்.
வடக்கு நத்தம்
ஆறுமுகச்சாமி
அருப்புக்கோட்டையிலிருந்து  பஸ் வசதியுள்ள வடக்கு நத்தம் கிராமத்தில் சமாதி கோவில் இருக்கிறது.சமாதி மீது முருகன் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.மாதம் தோறும் வரும் கார்த்திகை  நட்சத்திரத்தன்று சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது.
துத்தி நத்தம்
சிவத்தையா சுவாமி
அருப்புக்கோட்டை சாயல்குடி சாலையில் பரளச்சியை அடுத்து துத்திநத்தம் விலக்கு;இங்கே சிவத்தையா சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.
பெருமாள்கோவில்பட்டி
மாசிலானந்த சாமி
அருப்புக்கோட்டை டூ எட்டயபுரம் சாலையில் 18 கி.மீ தூரத்தில் கோடாங்கிபட்டி பஸ் ஸ்டாப்பில் இறங்கவும்.அங்கிருந்து 1 கி.மீ.தூரத்தில் உள்ளது பெருமாள்பட்டி கிராமம்.இந்த கிராமத்தில் மாசிலாந்த சாமியின் ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா சித்திரை மாதம் வரும் உத்திரம் நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது.
அழகாபுரி
அருப்புக்கோட்டை டூ எட்டயபுரம் சாலையில் அழகாபுரி கிராமத்தில்(வெம்பூர் அருகில்) சமாதிகோவில் இருக்கிறது.மாசி மாதம் வரும் பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
ரெட்டியபட்டி
ரெட்டியப்பட்டி சுவாமிகள்
அருப்புக்கோட்டை டூ விளாத்திகுளம் சாலையில் 31 கி.மீ.தூரத்தில் நாகலாபுரம் இருக்கிறது.அங்கிருந்து 1 கி.மீ.தூரத்தில் கிழக்கே ரெட்டியபட்டி சுவாமிகளின் சமாதி திருக்கோவில் அமைந்திருக்கிறது.
ரெட்டியப்பட்டி லிங்குசாமி திருக்கோவிலும் இங்கே இருக்கிறது.
ராஜபாளையம்
குருசாமி கோவில்
கோட்டூர் குருசாமிகளே இங்கே வந்து குருசாமியாக அருள்பாலித்து வருகிறார்.இந்த கோவிலுக்கு 3000 பூசாரிகள் இருக்கிறார்கள்.குருசாமியை வழிபடுபவர்களின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் வரிசைக்கிரமப்படி பூஜை வைக்க வேண்டும்.ஒருவர் ஒரு முறை பூஜாரியாக  சில நாட்கள் பணிபுரிந்தால்,அவரது பூஜாரி முறை மீண்டும் வர 3 ஆண்டுகள் ஆகும்.இந்த குருசாமி கோவில் சாலியர் சமுதாயத்துக்குச் சொந்தமான  ஜீவசமாதி கோவில் ஆகும்.ஒவ்வொரு கார்த்திகை தினத்தன்றும் சிறப்பு பூஜைகளும்,அன்னதானமும் நடைபெற்றுவருகிறது.தொடர்ந்து 3 நாட்கள் இங்குவந்து வழிபட்டாலே,நமது கடுமையான பண நெருக்கடி தீர்ந்துவிடுகிறது என்பது அனுபவபூர்வமான உண்மை.பல பக்தர்களிடம் குருசாமி இன்றும் நேரில் காட்சி தந்து பேசி வருகிறார்.
பொன்னப்பஞானியார் மற்றும் கருப்பஞானியார்
குருசாமி கோவிலுக்கு நேராகச் செல்லும் தெருவில் ஒரு பர்லாங்கு தூரத்தில் இந்த ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன.கருப்பஞானியார் 60 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே நாளில்,ஒரே நேரத்தில் ராஜபாளையத்திலும்,வத்ராப் அருகில் இருக்கும் W.புதுப்பட்டியிலும் நேரடியாகப் பேசியிருப்பதைக் கண்டு பலரும் அதிசயப்பட்டிருக்கின்றனர்.
குமராண்டி சுவாமி
ராஜபாளையம் டூ தென்காசி சாலையில் பி.எஸ்.கே.பூங்காவிற்கு வடக்கில் விவேகானந்தர் தெரு முனையில் குமராண்டி சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.
திருச்சிற்றம்பல குருநாத சுவாமி
ராஜபாளையம் வடபுறம் திரவுபதி அம்மன் கோவில் தென்புறம் இந்த ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
கொம்புச்சாமி
ராஜபாளையத்திலிருந்து சத்திரப்பட்டி செல்லும் சாலையில்,சங்கரன்கோவில் திருப்பத்திலிருந்து ஆலங்குளம் மற்றும் சத்திரப்பட்டி செல்லும் சாலையில் கிழக்கே சாலையை ஒட்டி அமைந்திருக்கிறது கொம்புச்சாமி கோவில்.தோப்புப்பட்டி சாலியர் தெருவின் தென்புறத்தில்  அமைந்திருக்கிறது.சித்ராபவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
பாலத்தடி சுவாமி
ராஜபாளையம் மலையடிப்பட்டி ரோடு அருகில் பாலமரத்தடி சுவாமிகளின் ஜீவசமாதி திருக்கோவில் அமைந்திருக்கிறது.மாசி மாதம் வரும் பூராடம் நட்சத்திர நாளன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
சேஷம குருநாத சுவாமி
ராஜபாளையம் வடமேற்குப் பகுதியில் கீழ ஆவரம்பட்டி பாரதியார் தெருவின் கடைசியில் ஸ்ரீ சேஷம குருநாத சுவாமி சமாதி கோவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை கார்த்திகை மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.
அருணாச்சலேஸ்வரர்
ராஜபாளையம் அரசுமருத்துவமனை நேர் எதிரில் சாலையில் சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டு,அமைந்திருக்கிறது.
ஸ்ரீசத்தியமூர்த்தி சாமிகள்
ராஜபாளையம் அருள் டெக்ஸ்டைல்ஸ் மில்லுக்கு முன்னால் அருள்ஜோதி இல்லம் என்னும் பெயரில்  சுவாமிகளின் ஆசிரமம்.ஆசிரம வளாகத்திற்குள் சமாதி மேடை! வருடாந்திர குருபூஜை வைகாசி மாதம் வரும் பூரம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.
கரிவலம் வந்த நல்லூர்
சித்தகல்ப சிரோன்மணி பொன்னையா சுவாமிகள் ஜீவசமாதி இருக்கிறது.
பொதிச்சாமி: கரிவலவந்த நல்லூரில் பஞ்சமூர்த்தி கோவிலாக இருக்கிறது.
சென்னிகுளம்
அண்ணாமலை ரெட்டியார்:கரிவலம் வந்த நல்லூரிலிருந்து 3 கி.மீ.தூரத்திலுள்ள சென்னிகுளத்தில் ஜீவசமாதி இருக்கிறது.
ராஜபாளையம் சத்திரப்பட்டி
சுப்ரமணிய சாமி
ராஜபாளையம் ஆலங்குளம் சாலையில் 10 கி.மீ.தூரத்தில் உள்ளது சத்திரப்பட்டி.மருந்து துணிகள் எனப்படும் பேண்டேஜ் உற்பத்தியில் உலகச் சந்தையைக் கைப்பற்றிவரும் தொழில் கிராமம் இது.இங்கிருக்கும் விநாயகர் ஆரம்பப் பள்ளி அருகில் வேதாந்த மடம் இருக்கிறது.இந்த மடத்தின் வளாகத்திற்குள் சுப்ரமணிய சாமி ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா புரட்டாசி மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திர நாளன்று நடைபெற்றுவருகிறது.
அருணாச்சல செம்பட்டை ஞானி
சத்திரப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி முன்புறம் இருக்கிறது.
அயனாவரம்
ஒரு சொல் வாசகன்
ராஜபாளையம் ஆலங்குளம் சாலையில் இருக்கும் சத்திரப்பட்டியை அடுத்து இருக்கும் கிராமம் இது.இங்கு இருக்கும் கண்மாயின் தென்கரையில் ஒரு சொல் வாசகன் சித்தர் பீடம் கிழக்கு பார்த்த சன்னதியில் இருந்து அருள்பாலிக்கிறார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
கைலாசசுந்தர சுவாமி
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் கனரா வங்கியைக் கடந்ததும் பிரதான சாலையில் இருக்கிறது.சாலியர் சமுதாயத்தின் ஊர் நிர்வாகம் செய்துவருகிறது.
பொன்னாயிரம் சுவாமி
ஊரணிப்பட்டித் தெருவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதத்தில் வரும் சித்திரை நட்சத்திரத்தில் நடைபெற்றுவருகிறது.
ஆறுமுகச்சாமி கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் கோவிந்தன் நகர் காலனியில் பிரதான சாலையில் வளைவில் அமைந்திருக்கிறது.இங்கு ஆறுமுகச்சாமியும்,பாம்பு தின்னி சாமியும் இருந்து அருள்பாலித்து வருகின்றனர்.இதற்கு எதிரே ஒரு சுடுகாட்டுப்பாதை செல்கிறது.அந்த சுடுகாட்டில் ஒரு ஜீவசமாதி வளாகம் இருக்கிறது.
மூவர் சமாதி என்ற அருள்ஞானிகளின் வளாகம்
மிகவும் சக்திவாய்ந்த இங்கு மதுரை சாமிகள் முதலான 23 மகான்கள் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக சூட்சுமமாக இருந்து அருள்பாலித்து வருகின்றனர்.
எஸ்.ராமச்சந்திராபுரம்
மதுரை ராஜபாளையம் சாலையில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்துக்கு அடுத்த 3 வது பஸ் ஸ்டாப் எஸ்.ராமச்சந்திராபுரம் ஆகும்.இங்கே பஸ் நிறுத்தத்திற்கு தெற்கே சதுரகிரியில் 30 ஆண்டுகளாக அன்னதானம் செய்துவரும் காளிமுத்து சுவாமிகளின் ஆசிரமமும்,ஜீவசமாதியும் இருக்கிறது.
இந்த எஸ்.ராமச்சந்திராபுரத்தின் வடக்குத் தெருவுக்கும் ,செங்குளம் கண்மாய்க்கும் நடுவே சடையாண்டி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.இவருக்கும்,சதுரகிரிக்கு நெருங்கிய தொடர்பு உண்டு.சுமார் 200 குடும்பங்களுக்கு இவரே குல தெய்வம் ஆவார்.மிகவும் சக்திவாய்ந்த ஜீவசமாதி ஆகும்.
ஓம்சிவசிவஓம்
                                                           



மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி,பாம்புக்கோவில் சந்தை





பாம்புக்கோவில் சந்தை ரயில் நிறுத்தத்தில் இறங்கி, செங்கோட்டை செல்லும் ரயில் பாதை வழியாகவே ஒரு கி.மீ.தூரத்துக்கு நடந்து செல்ல வேண்டும்.இரண்டாவது சாலையானது ரயில் பாதையின் குறுக்கே செல்லும்.அந்த இரண்டாவது சாலையின் இடது பக்கத்தில்,ரயில் பாதையின் மிக அருகில் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.அருகில்,வெள்ளை மடத்துவிநாயகர் சன்னிதியும் அமைந்திருக்கிறது.                                                                                                                           இங்கு எப்போது சென்றாலும்,அன்னதானம் உண்டு.ஒவ்வொரு தமிழ் மாதமும் பவுர்ணமி அல்லது அமாவாசை அல்லது சிவராத்திரியன்று சென்று வழிபட நமது எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் அடியோடு சில நாட்களிலேயே விலகத் துவங்கும்.இந்த அரிய ஆன்மீக ரகசியத்தை நமக்குப் போதித்தவர் ருத்ராட்சத்துறவி,சிவகடாட்சம் ,ஆன்மீக ஆராய்ச்சியாளர் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆயுட்கால சீடர் திரு.புளியங்குடி சிவமாரியப்பன் அவர்கள் ஆவார்.அவருக்கு கோடி கூகுள் நன்றிகள்.திரு.புளியங்குடி சிவமாரியப்பன் அவர்களின் செல்:9677696967                                                    

கி.பி.2006 ஆம் ஆண்டில் இந்தோனேஷியாவை மையமாகக் கொண்டு சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை உலகின் பல நாடுகளைத் தாக்கியது;இதற்கு புவியியல் வல்லுநர்கள் பெரிய பெரிய விளக்கங்களைக் கொடுத்தனர்;ஆனால்,முன்கூட்டியே அவர்களால் எப்போது,எங்கே  ஆழிப்பேரலை வரும்? அது எந்த நாடுகளைத் தாக்கும்? என்பதை கணிக்கமுடியவில்லை;தமிழினத்தின் ஆதி இருப்பிடமான குமரிக்கண்டம்,இன்றைய இலங்கைக்குத் தெற்கே சுமார் 2000 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கும்,சுமார் 24,000 கிலோ மீட்டர்கள் அகலத்திற்கு(கிழக்கே ஆஸ்திரேலியாவிலிருந்து மேற்கே ஆப்ரிக்கா வரையிலும்) பரவியிருந்தது.மனதின் சக்தியை முழுமையாக பயன்படுத்துவதில் நமது தமிழினம் தேர்ச்சிபெற்றிருந்தனர்;இன்றைய திரைப்படமான ஏழாம் அறிவில் காட்டப்படும் நோக்கு வர்மத்தின் பரம்பரை நாம் மட்டுமே!!! 



இன்றும் ஒரு சில ஆன்மீகக் குழுவினருக்கு நோக்கு வர்மம் தெரியும்;இந்த குமரிக்கண்டத்தில் வாழ்ந்த தமிழர்களையும்,குமரிக்கண்டத்தையும் ஆழிப்பேரலை தாக்கியது.இன்றைய சேலம் போன்று இருந்த கன்னியாகுமரி,தற்போது முக்கடலும் சந்திக்கும் இடமாக உருவாகி,ஓராயிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன.


2006 ஆம் ஆண்டில் வந்த ஆழிப்பேரலைக்கு ஆன்மீகரீதியான காரணம் தினத்தந்தியில் முழுப்பக்க கட்டுரையாக வெளிவந்தது.கடலுக்குள் காகபுஜண்டர் என்னும் சித்தர் பல லட்சம்(?!?) ஆண்டுகளாக தவம் செய்துவந்தார்;கடலோரம் நிகழ்ந்த காமக் குற்றங்களால்,அவர் கோப ஆவேசத்தோடு எழுந்தார்;அதனால்,ஆழிப்பேரலை என்னும் சுனாமி வந்தது.அதன்பிறகு, கி.பி.2010இல் சித்தர்களின் வீடாகிய சதுரகிரியில் சித்தர்களின் மாநாடு நடைபெற்றது.இதன் முடிவாக சித்தர்களின் ஆசி பெற்ற ஒருவன்,இந்தியாவின் தலைமை பீடத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படுவான்;அவனது ஆட்சிக்காலத்தில் இந்து தர்மம் உலகம் முழுவதும் பரவும் என்று அடிக்கடி செய்திகளாக பல ஜோதிட இதழ்களில் வெளிவந்தது.குமுதம் ஜோதிடம் ஆசிரியர் ஏ.எம்.ராஜகோபால் ஐயா அவர்கள் கூட இது தொடர்பாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.அதில்,
“வட நாட்டைச் சேர்ந்த ஒரு மாவீரன்,தென் நாட்டைச் சேர்ந்த ஒரு துறவியிடம் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கிறான்.அவன் வெகுவிரைவில் இந்தியாவை ஆளத் துவங்குவான்;அவனது ஆட்சி சர்வாதிகார ஆட்சியாக இருக்கும்;அதே சமயம்,அவனது ஆட்சியில் நேர்மையாக வாழ்ந்து வருபவர்கள் போற்றப்படுவார்கள்;அக்கிரமம்,அநீதி செய்தவர்கள் அனைவரும் மீளமுடியாத கஷ்டத்துக்கு ஆளாகப் போகிறார்கள்”
நாம் எப்பேர்ப்பட்டவராக இருந்தாலும் சரி,நமது பகுதியிலிருக்கும் ஜீவசமாதிகளுக்கு தினமும் சென்று ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;நமது தீய எண்ணங்களை நீக்கிட,இந்த ஜீவசமாதியில் தினமும் ஜபிக்கப்படும் ஓம்சிவசிவஓம் காரணமாக இருக்கும்.


சேலத்தில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியல்:


மாயம்மா:கன்னியாக்குமரி கடற்கரையில் நீண்ட காலம் வசித்தவர்;சேலம் மார்டன் தியேட்டர்ஸ் எதிர்ப்புறமுள்ள பகுதியில் மாயம்மா சமாதி பீடம் உள்ளது.
அப்பா பைத்தியம் சாமி: சேலம் ஜங்ஷன் ரயில்  நிலையத்திற்குக் கிழக்கே சூலமங்கலம் பிரதான சாலையில் சாலையை ஒட்டி வடபுறம் சமாதிகோவில் இருக்கிறது.இங்கு வருடாந்திர குருபூஜை விழா தைமாதம் வரும் அஸ்வினி நட்சத்திர நாளில் நடைபெற்றுவருகிறது.
கஞ்சமலை:
காலாங்கிநாதர்:சேலம் கஞ்சமலை சித்தர் கோவில் சேலத்திலிருந்து 2 கி.மீ.தூரத்தில் உள்ளது.
கஞ்சமலை சித்தர்:கஞ்சமலை அடிவாரத்தில் கஞ்சமலை சித்தரே சித்தேஸ்வர சுவாமியாக இருக்கிறார்.
ஓமலூர்
சிரபங்க முனிவர்: சேலம் மேட்டூர் சாலையில் 16 கி.மீ.தொலைவில் ஓமலூர் கோட்டையில் வைத்தியநாத ஈஸ்வரர் கோவில் நவக்கிரக சன்னதி அருகில் இவரது சமாதி இருக்கிறது.
ஆத்தூர்
சந்நியாசி வரதர்: ஆத்தூரிலிருந்து 5 கி.மீ.தூரத்தில் தளவாய்பட்டி;அங்கிருந்து 3 கி.மீ.தூரத்தில் சாமியார் மடம் இருக்கிறது.இங்கே ஐப்பசி மாதம் வரும் சுவாதி நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
வடக்குமரை
அப்பண சாமிகள்:ஆத்தூரிலிருந்து 15 கி.மீ.தூரத்தில் வடக்குமரை கிராமத்தில் சமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூசை புரட்டாசி மாதம் வரும் அமாவாசை!
காரியனூர்
நடேச சுவாமி: ஆத்தூரிலிருந்து சற்று தொலைவிலுள்ள காரியனூரில் சமாதி கோவில் இருக்கிறது.
கோயம்புத்தூர் பகுதியில் மறைந்து நின்று காக்கும் மகான்கள்:::


முள்ளங்காடு
ஸ்ரீபிரம்ம வெள்ளியங்கிரி சாமிகள்: கோவை மேற்கே 22 கி.மீ.தூரத்தில் இருட்டுப்பள்ளம்;அங்கிருந்து 6 கி.மீ.தூரத்தில் முள்ளங்காடு செக்போஸ்ட்;பழங்குடி மக்கள் வசிக்கும் காட்டுக்குள் ஸ்ரீவெள்ளியங்கிரி சுவாமிகளின் ஆஸ்ரமம் என்ற பெயருடன் ஜீவசமாதி இருக்கிறது.
பன்னிமடை
சித்தயோகி சாமய்யா:கோவை டூ ஆனைக்கட்டி சாலையில் 10 கி.மீ.தூரத்தில் கணுவாய் என்னும் ஊர்.கிழக்கே 2 கி.மீ. பன்னிமடை சிற்றூர்.ஊரின் கிழக்குப் பகுதியில் பிரம்மஸ்ரீ சித்தயோகி சாமய்யா ஜீவ ஐக்கிய நிலையம் என்னும் பெயருடன் ஜீவசமாதி இருக்கிறது.
நாராயணபுரம்(பல்லடம்)
எட்டிக்கொட்டை சித்தர்:திருப்பூர் பல்லடம் சாலையில் தெற்குபரிளயம் விலக்கு அருகில் நாராயணபுரம்.மேற்குப்புறம் மருதஞ்செட்டியார் தோட்டத்தில் சமாதி பீடம் இருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் ஆனிமாதத்தில் அவிட்டம் நட்சத்திர நாளன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

பொள்ளாச்சி புரவிப்பாளையம்

கோடீஸ்வர சுவாமிகள்:பொள்ளாச்சியிலிருந்து 20 கி .மீ.தூரத்தில் புரவிப்பாளையம் இருக்கிறது.இங்கிருக்கும் ஜமீன் தார் அரண்மனை வளாகத்துள் சாமிகளின் அதிஷ்டானம் இருக்கிறது.இவர் 18 ஆண்டுகளாக ராமேஸ்வரம் அருகில் இருக்கும் தனுஷ்கோடியில் ஒரே இடத்தில்,இரவும் பகலும் உட்கார்ந்திருந்தவர்;இதை பலர் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்;இந்த 18 ஆண்டுகளும் இவர் சாப்பிட்டதில்லையாம்;நீர் அருந்தியதில்லையாம்;இவரை ஒரு ரயில்வே ஊழியர் அடையாளம் கண்டு,இவரை போற்றி வழிபட்டிருக்கிறார்.அந்த ரயில்வே ஊழியரால்,இந்த கோடீஸ்வர சுவாமிகள் கொஞ்சகாலம் திருச்சியிலும்,கொஞ்சகாலம் சென்னையிலும் வாழ்ந்தவர்.இறுதியாக கோவைக்கு வந்து பலதரப்பட்ட அதிசயங்களை நிகழ்த்தியிருக்கிறார்.விரிவான பதிவு விரைவில் நமது ஆன்மீகக்கடலில்!!!


வேட்டைக்காரன்புதூர்

அழுக்குச்சாமி: பொள்ளாச்சி அருகே ஆனைமலை தாண்டி வேட்டைக்காரன்புதூர் டூ உப்பாற்றங்கரை வேட்டைக்காரச்சாமி கோவிலின் வடபுறம் சாமிகளின் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.


இந்த அரிய தகவல்களை நாட்டு நலன் கருதியும், நேர்மையான தமிழ் சகோதரர்கள் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டியும் வெளியிட என்னைப் பணித்தவர் எனது ஆன்மீக குரு திரு.சிவமாரியப்பன் அவர்கள் ஆவார்.

ஓம்சிவசிவஓம்                                   
ஜீவசமாதி வழிபாடு செய்ய விரும்புவோர்,தனது பிரச்னைகள்,கஷ்டங்கள் தீர வேண்டும் என்றுதான் செல்வார்கள்.அதுதான் மனித இயல்பும்கூட! அதே சமயம்,ஜீவசமாதி அல்லது சித்தர் வழிபாடு செய்யத்துவங்கியதுமே,அவரவர் தன்னிடம் இருக்கும் துர்குணங்களை கைவிட்டுவிட வேண்டும்.அப்போதுதான்,சித்தர்களும்,மகான்களும் நமக்கு அருள்புரிவார்கள்.இதை ஆன்மீகரீதியாக ஆராய்ந்து கூட கண்டுபிடிக்கலாம்.
ஒரு உதாரணம் சொன்னால்,உங்களுக்குச் சுலபமாகப் புரியும்:எனக்கு இருக்கும் நட்பு வட்டம் பெரியது;எனது நீண்டகால நண்பர் அவர்.எங்களின் நட்பின் வயது 22 ! அவரது குடும்பப் பின்னணி அனைத்தும் எனக்குத் தெரியும்;எனது குடும்பப்பின்னணியும் அவருக்கு நன்றாகவே தெரியும்.என்னால் அவர் ஒருமுறை கூட பண உதவி பெற்றதில்லை;அவரும் என்னிடம் கேட்டதில்லை;ஆனால்,எனது ஜோதிடத் திறனால்,அவரது ஜாதகத்தை தினமும் சில நிமிடங்களுக்கு ஆராய்ந்து வைத்துக்கொள்வேன்;செல்போன் பரவலாகும் முன்பு,என்னை தினமும் ஏதாவது ஒரு தடவை நேரில் சந்திப்பார்;அவரது பிரச்னை,மனநிலைக்குத் தகுந்தாற்போல,அவரது ஜாதகத்தில் ஒளிந்திருக்கும் நல்ல விஷயங்களை அவருக்கு நான் எடுத்துரைப்பேன்;அதனால், அவர் தன்னை தனது குணக்குறைபாடுகளை சீர்திருத்திக்கொண்டே வந்திருக்கிறார்.
அதே சமயம்,காதல்,அரசியல்,மனோதத்துவம்,ஆவிகள்,பேய்,             இந்தியாவின் எதிர்காலம்,அணுகுமுறை விஞ்ஞானம்,ஜாதி அரசியலின் பக்கவிளைவுகள்,பத்திரிகைச் செய்தி என அனைத்து விஷயங்களிலும் ஆக்க பூர்வமான கருத்துப்பகிர்வுகள் எங்களிடம் பல ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது.பல ஆண்டுகளாக பழகியதன் விளைவாக, அவரிடம் இருக்கும் சில விரும்பத்தகாத குணங்களைக் கண்டறிந்து, அவரிடம் ஒருநாள் சுட்டிக்காட்டி,இதை நீ கைவிட்டே ஆக வேண்டும் என்று புரியவைத்தேன்;ஆனால்,அவரோ,அன்று முதல் என்னிடம் நல்லவன் போல நடிக்க ஆரம்பித்தார்;அதையும் கண்டறிந்து,திருந்தச் சொல்லி பல ஆண்டுகளாகக் கெஞ்சினேன்.
சில மாதங்களுக்கு முன்பு,எனது ஆன்மீக குருவிடம் அந்த 22 வருட நண்பரை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினேன்.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சியின் படி,ஒருவர் தொடர்ந்து 12 ஆண்டுகள் வரையோ,அதற்கும் மேலோ நண்பராக இருந்தால்,அவர்கள் முற்பிறவி நண்பர்கள்;அதே போல,இருவர் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக எதிரியாக இருந்தால்,அவர்கள் முற்பிறவி எதிரிகள் ஆவார்.
எனவே,எனது ஆன்மீக குருவிடம், “குருவே,இவர் எனது முற்பிறவி நண்பர்” என அறிமுகப்படுத்தினேன்.அவரும் அதை மனதில் கொண்டு,அவருக்கு சிலபல ஆன்மீக ஆலோசனைகளைச் சொன்னார்.அதே நாளில்,எனக்கும் ஒரே ஒரு ஆன்மீக ஆலோசனை சொன்னார்.
இந்த சம்பவம் நிகழ்ந்த சில மாதங்களில்,ஆன்மீக ஆலோசனையை நான் செயல்படுத்திப் பார்த்துவிட்டு,எனது தேவைகளை பூர்த்தி செய்துவிட்டேன்.ஆனால்,எனது 22 வருட நட்பு,இன்னும் அந்த ஆன்மீக ஆலோசனையை ஆரம்பிக்கவே இல்லை;இன்னும் எனது 22 வருட நட்பு பல்வேறு விதமாக கஷ்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது.என்னால்,இதற்கு மேல் எதுவும் செய்ய முடியவில்லை;அவர் மேல் பரிதாபப்பட மட்டுமே முடிகிறது.
 யாரையும்,எப்போதும்,எதற்காகவும் நம்பாத அவரது குணமே காரணம்.நாம் ஒருவரை ஆழமாக நேசிக்கிறோம்.(அது நமது குழந்தை அல்ல;வாழ்க்கைத் துணை அல்ல;அரசியல் நட்பும் அல்ல;சாதாரண மனித உறவு)அப்படி நேசிக்கும்போது,அவர்களின் குறைகள் நமக்கு குறைகளாக சிறிதும் தெரியாது.ஆனால்,ஜோதிடராக நான் இருப்பதால்,எனது 22 வருட நட்பிடம் பல மாதங்களுக்கு இந்த குறையைச் சுட்டிக்காட்டி,இதிலிருந்து மாற்றிக்கொள்ளும்படி மன்றாடிக்கொண்டும் கூட மாறவில்லை;ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து,நீ உன்னை மாற்றிக்கொள்ளாவிட்டால்,எதாவது ஒரு முக்கிய சந்திப்பு உனக்கு நிகழ்ந்தும் கூட,அந்த புதிய உறவினை சரியாகவும்,முழுமையாகவும் பயன்படுத்திக்கொள்ளமுடியாமல் போகும் என்று எச்சரித்திருக்கிறேன்.இந்த எச்சரிக்கை,நிகழ்ந்த சில ஆண்டுகளில் இப்போது அது நிகழ்ந்தே விட்டது.ஆக,நம்மில் பெரும்பாலானவர்கள்,யாரையும் நம்புவதில்லை;தன்னையும் நம்புவதில்லை;தனது வாழ்க்கைத் துணையையும் நம்புவதில்லை;
நமது ரத்த உறவுகளுக்கு நாம் எப்போது எப்படி சிந்திப்போம்? எப்படி பேசுவோம்? ஏன் அப்படிப் பேசுகிறோம்? என்பதெல்லாம் நன்றாகவே தெரியும்.அதே மாதிரி, பொதுத் தொடர்பில் இருப்பவர்களில் பலருக்கு நம்மை முதன்முதலில் பார்த்த அடுத்த நொடியே நம்மை,நமது ஆளுமைத் திறனை மதிப்பிட்டுவிடுவார்கள்;
நம்மை விட செல்வாக்கானவர், நம்மை நம்பி ஒரு சிறிய வேலையை ஒப்படைக்கும்போது,நாம் அவர்களை நம்புவதைப்போல,அவர்களும் நம்மையறியாமலேயே நாம் அவர்களைப் பற்றி என்ன நினைக்கிறோம்? என்பதையும் உளவு பார்க்கத் தான் செய்வார்கள்.அப்படி பார்த்தபின்னர்,அவர்களின் திறனுக்கு ஏற்றபடி,நாம் நம்பிக்கையானவர்களாக இருந்தால் தான்,நமக்கு மறக்க முடியாத அளவுக்கு உதவி செய்வார்கள்.நமது ஆழ்மனத்தில் அந்தரங்க சுத்தி இருக்க வேண்டும்.இல்லாவிட்டால்,இந்த உலகில் நாம் தனி மரமாக நிற்க வேண்டும்.
எல்லோரையும் நம்பி,நம்பி பல நூறுமுறை ஏமாந்த நல்ல எண்ணமுள்ளவர்களுக்குக் கூட, வாழ்க்கையில் ஒரு நாள், மிகச் சிறந்த நட்பு அல்லது  குரு அல்லது காட்பாதர் கிடைத்துவிடுவார்.
யாரையும் நம்பாதவர்களுக்கு ஒரு நல்ல நட்போ அல்லது வழிகாட்டியோ அல்லது காட்பாதரோ கிடைத்தால் கூட,அவர்கள் வாழ்க்கையில் சிறிதும் முன்னேற முடியாது.
வாழ்க்கையில் சுயநலம் தேவைதான்;ஆனால்,அடுத்தவரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சார்ந்துதான் வாழ வேண்டியிருக்கிறது.கட்டாயம் என்ற அச்சில் தான் நாம் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்து வருகிறோம்.அதற்காக, என்னால் மட்டுமே உனது பிரச்னையைத் தீர்க்க முடியும் என்ற தற்காலிக அகங்காரத்தால் வீழ்ச்சியடைந்து,நாசமாகப் போனவர்கள் பல கோடிப் பேர்கள்!!!

திண்டுக்கல்

ஓதச்சாமி(சுப்பையாசாமி)
திண்டுக்கல் மலைக்கோட்டையின் மேற்குப்புறம் முத்தழகுப்பட்டிக்குச் செல்லும் வழியில் இந்த ஜீவசமாதி இருக்கிறது.பல்வேறு அதிசயங்களை புதைத்து வைத்திருக்கிறது இந்த ஓதசுவாமி திருக்கோவில்.
கருணாம்பிகை அம்மையார்
திண்டுக்கல் காமராஜர் தெருவில் சாது கருணாம்பிகை அம்மையார் ஆஸ்ரமத்தில் அதிஷ்டானம் இருக்கிறது.சமாதியின்மேல் ஸ்ரீகருணானந்தேஸ்வரர் என்னும் பெயரில் சிவலிங்கப்பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கா.புதுப்பட்டி
கள்ளியடி பிரம்மம்
திண்டுக்கல் டூ திருச்சி சாலையில் 20 கி.மீ.தூரத்தில் வடமதுரை அருகே கா.புதுப்பட்டியில் சமாதி இருக்கிறது.
கசவனம்பட்டி
நிர்வாண மவுனகுரு சாமி
திண்டுக்கல் டூ கன்னிவாடி அருகே கசவனம்பட்டி கிராமம் இருக்கிறது.இங்கே ஆஸ்ரமமும்,சமாதிக்கோவிலும் இருக்கிறது.
திருமலைக்கேணி
காமாட்சி மவுனகுரு சுவாமிகள்
திண்டுக்கல் டூ செங்குறிச்சி சாலையில் 23  கி.மீ.தூரத்தில் திருமலைக்கேணி இருக்கிறது.இங்கு சிறிய குன்றின் மேல் முருகன் கோவில் அமைந்திருக்கிறது.ஸ்ரீகாமாட்சி மவுனகுரு சாமிகள் மடாலயம் அமைந்திருக்கிறது. மடத்துள் சமாதிக்கோவில் இருக்கிறது.பிரதி வருடம் ஆடிமாதம் வரும் பூராடம் நட்சத்திர நாளில் குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

பெரியகுளம்

மவுனகுரு சாமி
பெரியகுளம் வராகநதி பாலத்தில் இருந்து அருள் தியேட்டர் செல்லும்   வழியில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

ஒட்டன் சத்திரம்

ராமசாமி சித்தர்
ஒட்டன்சத்திரம் தீயணைப்பு நிலையம் அருகில் இருக்கிறது.

கொடுவிலார்ப்பட்டி

ஸ்ரீசச்சிதானந்த சாமி
தேனியிலிருந்து 10 கி.மீ.தூரத்தில் கொடுவிலார்பட்டி  சச்சிதானந்த ஆஸ்ரமம் வளாகத்துக்குள் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

உசிலம்பட்டி கோட்டைப்பட்டி

நமோ நாராயண தேசிக ஆனந்த சாமிகள்

மதுரை உசிலம்பட்டியிலிருந்து எழுமலை சாலையில் கோட்டைப்பட்டி என்னுமிடத்தில் ஜீவசமாதி இருக்கிறது. இங்கிருக்கும் நந்திக்கு கீழே சுவாமியின் சீடர் குருநாத சாமி அடக்கமாகியிருக்கிறார்.வருடாந்திர குருபூஜை விழா ஆடிமாதம் 12 ஆம் நாள்!!!

சாப்டூர் விட்டல்பட்டி

சடையானந்த ரெட்டியார் சாமி

உசிலம்பட்டியிலிருந்து 36 கி.மீ.தூரத்தில் இருப்பது சாப்டூர். அங்கிருந்து 4 கி.மீ.தூரத்தில் இருப்பது வண்டப்புலி விட்டல்பட்டி.இங்கிருக்கும் தெப்ப ஊரணி அருகில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
செட்டியப்பட்டி
நிலைமாறானந்தா சாமி
செட்டியப்பட்டியில் இருக்கிறது.

கரூர்

கருவூரார்
கரூர் பசுபதீஸ்வரர் கோவில் கருவூராரின் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது. சித்திரை மாதம் வரும் அஸ்தம் நட்சத்திர நாளன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
ஒத்தை வேட்டி சாமி
அமராவதி ஆற்றின் வடகரை நஞ்சப்பன் படிக்கட்டுத் துறையில் அதிஷ்டானக் கோவில் அமைந்திருக்கிறது.ஆனி மாதம் வரும் அனுஷம் நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா!!!

நெரூர்
சதாசிவ பிரமேந்திரர்
கரூரிலிருந்து 10 கி.மீ.தூரத்தில் காவேரிக் கரையில் கைலாச ஆஸ்ரம வளாகத்தில் ஜீவசமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

சதாசிவானந்தா

சதாசிவானந்தா ஆஸ்ரமத்தில் சமாதியில் மேருபீடம் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி

மவுனகுரு சாமி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஓயாமரி எனப்படும் இடுகாட்டுப்பகுதியில்  தேவஸ்தானம் என்ற பெயரில் நினைவிடம் அமைந்திருக்கிறது.

மாக்கான் சாமி

ஓயாமரி சாலையில் இடதுபக்கம் காவேரிக்கரையில் மடமும் சமாதிக்கோவிலும் உள்ளன.

ஸ்ரீரங்கம்

ராமானுஜர்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுனுள் உடையவர் சன்னதியில் ராமானுஜர்  ஸ்தூல திருமேனி புனுகு சாத்தப்பட்டு அமர்ந்த கோலத்தில் உள்ளது.இங்கு அமர்ந்து ஓம்ஹரிஹரிஓம்  ஜபிக்க விரைவான பலன்கள் கிடைக்கும்.

வரகனேரி

ஸ்ரீகுழுமியானந்த சுவாமி

திருச்சி வரகனேரி பஜார் தெருவின் தென்பகுதியில் ஸ்ரீசற்குரு குழுமியானந்த சுவாமிகள் மடாலயம் உள்ளே அதிஷ்டானக் கோவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா வைகாசி மாதம் வரும் திருவோணம்!

திருப்பட்டூர்

பதஞ்சலி

திருச்சி டூ சமயபுரம் டூ சிறுகனூர் பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பதஞ்சலி முனிவர் பிருந்தாவனம் இருக்கிறது.இங்கும் ஓம்ஹரிஹரிஓம் ஜபித்துவர,விரைவான பலன்கள் கிடைக்கும்.

புலிப்பாணி

திருப்பட்டூரிலிருந்து அரை கி.மீ.தூரத்தில் காசி விஸ்வநாதர் கோவிலில் வியாக்ரபாதர் என்ற புலிப்பாணி ஜீவ பிருந்தாவனம் அமைந்துள்ளது.

திருவெள்ளறை

சிவப்பிரகாச சுவாமி

திருச்சி டூ துறையூர் சாலையில் திருவெள்ளறை இருக்கிறது.இங்கிருக்கும் சிவாலயத்தின் அருகில் சுவாமிகளின் சமாதி அமைந்திருக்கிறது. கார்த்திகை மாதம் வரும் கடைசி திங்கட்கிழமையன்று வருடாந்திர குருபூஜை!

லால்குடி பின்னவாசல்

யோகீஸ்வரர்(எ)ராமகிருஷ்ணசாமி

லால்குடி அருகே பின்னவாசல் கிராமம் இருக்கிறது.இங்கே பல்குனி ஆற்றங்கரையில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

தொட்டியம்

நாராயண பிரமேந்திரர்

திருச்சி டூ சேலம் சாலையில் அமைந்துள்ளது தொட்டியம் கிராமம்.இங்கிருந்து 14 கி.மீ.தூரத்தில் காட்டுப்புத்தூர் காவிரி வடகரையில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

பெரம்பலூர்

தலையாட்டி சித்தர்
புதிய பஸ்நிலையத்திலிருந்து 2 கி.மீ.தூரத்தில் பிரம்மரிஷி மலைச்சாரலில் மூசாக்கோட்டை ஆசிரமம் அமைந்திருக்கிறது.இந்த ஆசிரமத்தில் ஜீவசமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

செந்துறை

மெய்வரத்தம்பிரான்

செந்துறை மடத்துக் கொவிலில்(பழனியாண்டவர் கோவில்) சமாதி இருக்கிறது.

தஞ்சை/திருவாரூர்/நாகை

தஞ்சை கரந்தை

பால்சாமி

கரந்தை பழைய திருவாறு சாலை ராஜாகோரி தாண்டி பால்சுவாமி மடம் வளாகத்தினுள் சமாதி கோவில் இருக்கிறது.சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

தனுத்தாரி பாபா

கரந்தை தமிழ்ச்சங்கக் கட்டிடத்திற்குத் தென்புறம் தனுத்தாரி பாபா மடம் இருக்கிறது.இந்த மடத்தில் தென்மேற்கு மூலையில் பாபாவின் சமாதி இருக்கிறது.

தென்பழனி சத்தியநாராயண சித்தர்

கரந்தை அரசுப்போக்குவரத்துக் கழக பணிமனை தென்புறச் சாலை ‘சித்தர் மண்டபம்’ இருக்கிறது.இதுவே பழைய சித்தர் ஆஸ்ரமம்.இந்த ஆஸ்ரமத்தின் உட்பகுதியில் சித்தர் சமாதி அடங்கிய சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

ஆதித்த குரு

கரந்தை தமிழ்ச் சங்கத்திற்கு அருகில் சேர்வைக்காரன் தெரு இருக்கிறது.ஆற்றங்கரை சந்தின் நடுவில் ஆதித்தகுரு மடமும் சமாதிக்கோவிலும் உள்ளன.
மன்னார்குடி & விடயபுரம்

சட்டாம்பிள்ளை சுவாமிகள் (எ) இராமசாமி சாமிகள்

கொரடச்சேரி ரயில் நிலையத்திற்குத் தெற்கே வெண்ணவாசல் இருக்கிறது.அங்கிருந்து 3 கி.மீ.தூரத்தில் முசிறியம் என்னும் சிற்றூர் அமைந்திருக்கிறது.அங்கிருந்து 1 கி.மீ.தூரத்தில் விசயபுரம் என்னும் ஊரில்,பிடாரியம்மன் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் அருகே முத்துச்சாமி பிள்ளை தோட்டத்தின் கிழக்குப் பகுதியில் சட்டாம்பிள்ளை சமாதி மேடை அமைக்கப்பட்டுள்ளது.

வெண்ணவாசல் கொரடாச்சேரி

பாண்டவையாற்றின் அருகே ஸ்ரீவாலையானந்தா ஆஸ்ரமம் இருக்கிறது.இங்கு மகாமேரு கோவிலுக்கு மேற்கே சமாதிபீடம் இருக்கிறது.

திருப்பூந்துருத்தி

தீர்த்த நாராயண சாமி

தஞ்சை டூ திருவையாறு டூ கண்டியூர் சாலையில் 6 கி.மீ.தூரத்தில் மேலைத் திருப்பூந்துருத்தி ஆற்றங்கரையில் சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருவையாறு

அகப்பேய் சித்தர்

ஐயாரப்பர் கோவிலில் சண்டேசுவரர் சன்னதி பக்கம் மேற்கு நோக்கிய சன்னதியில் சிவலிங்கப் பிரதிஷ்டையுடன் கூடிய சமாதி இருக்கிறது.

தியாகராஜ சுவாமிகள்

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான இவரது சமாதி காவிரிக்கரையில் இருக்கிறது.சங்கீதத்துறையில் சாதிக்க விரும்புவோர்,இவரது ஜீவ சமாதியை  தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளுக்கு சுக்கிர ஓரையில்(காலை 6 முதல் 7 வரை;மதியம் 1 முதல் 2 வரை;இரவு 8 முதல் 9 வரை;) வழிபட்டுவரலாம்.
ஆட்கொண்டார் சாமி

திருவையாறு திருநெய்த்தானம் சாலை கல்கி அக்ரஹாரம் என வழங்கப்படுகிறது.சாலையின் வடபுறம் வரிசையில் ஆட்கொண்டார்சாமி கபால மோட்சம் எய்திய சமாதிக்கோவில் இருக்கிறது.

சுடுகாட்டுச்சாமி (எ) சதானந்த சாமிகள்

கல்கி அக்ரஹாரம் 41 ஆம் எண்ணில் சுடுகாட்டு சாமிகளில்ன் திரு மடம் இருக்கிறது.இந்த மடத்தின் முன்பகுதியில் அதிஷ்டானம் இருக்கிறது.

ஸ்ரீதம்பலசாமி

சுடுகாட்டுச்சாமி மடத்தை அடுத்து 42 ஆம் எண் உட்புறமுள்ள கொல்லையில் சமாதி மேடை இருக்கிறது.

ஸ்ரீசிவப்பிரகாச ஆனந்தகிரி சுவாமிகள்
காவிரியின் வடகரையில் தியாகராஜ சுவாமிகள் சமாதிக்குப் பின்புறம் சிறிய சமாதிக்கோவில் இருக்கிறது.இந்த ஜீவசமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பரமானந்த குரு (எ) அருள்சாமிகள்

திருவையாறு டூ கும்பகோணம் சாலையில் சப்த கன்னியர் கோவில் உள்ளது.அடுத்த கட்டடத்தின் மேற்புறம் சிறிய சந்தில் அருள்குரு பரமானந்த நிலையம் என்னும் சமாதிக்கோவில் இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாதம் வரும் சுவாதி நட்சத்திர நாளில் நடைபெற்றுவருகிறது.

சித்தேசர்

ஐயாரப்பர் கோவிலில் ஐயாரப்பர் சன்னதி எதிரில் சித்தேசர் ஆக லிங்கவடிவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் சாமி(முருகேசன் சாமி)

புஷ்ய மண்டபக்கரை ஓரமாக அறுபத்துமூவர் மடம் இருக்கிறது.இந்த மடத்தினுள் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.

ஆண்டார் சமாதி

மேலமடவிளாகம் ஆதிபராசக்தி வழிபாட்டுமன்றம் இருக்குமிடத்தில் சிறிய கோவிலில் லிங்க வடிவில் சமாதி  இருக்கிறது.

தாராசுரம்

ஒட்டக்கூத்தர்

தாராசுரம் வீரபத்ரன் கோவில் பின்புறம் சமாதி இருக்கிறது.
சுவாமிமலை

சச்சிதானந்த சாமி

சுவாமிமலை வடகரையில் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்துக்குள் சமாதிக்கோவில் இருக்கிறது.சமாதி மீது சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

கீழக்கோட்டையூர்

ஸ்ரீராமா சாது

கும்பகோணம் சுவாமி மலையிலிருந்து 3 கி.மீ.தூரத்தில் இருப்பது கீழக்கோட்டையூர் கிராமம் ஆகும்.இங்கிருக்கும் வள்ளலார் கல்வி நிலைய வளாகத்துக்குள் சமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா பிப்ரவர் 14 !

நரசிம்மபுரம்

ஸ்ரீவண்சடகோப ஸ்ரீநிவாச யதீந்திர மஹா சாமிகள்
சுவாமிமலை அருகில் ஆதனூர் டூ புள்ளபூதங்குடி இடையில் நரசிம்மபுரம் சிற்றூர் இருக்கிறது.இங்கிருக்கும் திருக்குளம் பிருந்தாவன வளாகத்தில் முதலில் இருப்பது சுவாமிகளின் பிருந்தாவனம் ஆகும். இந்த சுற்றுப்புறத்தில் இவருக்குப் பின் பீடமேறிய நான்கு பீடாதிபதிகளின் பிருந்தாவனங்களும் இங்கு இருக்கின்றன.


கும்பகோணம்

திருமழிசை ஆழ்வார்
ஆதி கும்பேஸ்வரர் கோவில் வடக்கில் சாத்தாரத் தெருவின் தென் கடைசியில் திருமழிசைபிரான் திருக்கோவில் இருக்கிறது.இங்கு யோகநிட்டையில் அடங்கிய இடத்தில் மேடையில் திரு உருவபிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.ஓம்ஹரிஹரிஓம் செய்ய மிகவும் உகந்த இடமாகும்.

கும்பமுனி எனப்படும் அகத்தியர்

ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்குள்ளே வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் இருக்கும் விநாயகர் சன்னதியின் கீழே அகத்தியர் தவம் செய்து கொண்டிருக்கிறார்.

ஸ்ரீவிஜியீந்திர தீர்த்தர்

159,சோலையப்பன் தெரு அருகில் ஸ்ரீவிஜியீந்திர சுவாமிகள் படித்துறையை ஒட்டி கிழக்குப் பக்கத்தில் சுவாமிகளின் அதிஷ்டானக் கோவில் இருக்கிறது.

மவுனசாமி

ஆதி கும்பேஸ்வரர் கோவில் சற்றுத்தொலைவில் மவுனசாமி மடத்துத் தெருவில் சுவாமிகளின் மடமும் சமாதிக்கோவிலும் இருக்கின்றன.

அருணாச்சல சாமிகள்

மவுனசாமிகள் சமாதிக்கு தெற்குப் பக்கம் சமாதி இருக்கிறது.

ஸ்ரீஅண்ணாசாமிகள்

மடத்துத் தெரு வடகோடியில் காசிவிஸ்வநாதர் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் வடக்குப் பிரகாரத்தில் துர்க்கைக்கு எதிரில் துளசி மாடமாக சுவாமிகளின் அஸ்தி பீடம் இருக்கிறது.
கருப்பணசாமி, மூட்டைச்சாமி,ராமலிங்கசாமி
ரயில் நிலையம் செல்லும் சாலையின் அருகே திருநாராயணபுரம் வடக்கு வீதி இருக்கிறது.இந்ததெருவின் கடைசியில் திரும்புமிடத்தில் பழைய கருப்பணசாமி மடம் இருக்கிறது. புதிய கதவு எண்:5 இன் பக்கமாக உள்ள சிறிய சந்தின் வழியாக சென்றால் வீட்டின் பின்புறம் சுவாமிகள் மூவரும் சமாதியான இடத்தில் முளைத்த அரசமரமும் மூன்று சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதையும் காணலாம்.

ராமச்சந்திர தீர்த்தர்

கும்பகோணம் மேலக்காவிரியில் அமரேந்திரபுர அக்ரஹாரம் இருக்கிறது.தற்போது அமரேந்திரபுரத் தெரு என்று பெயரால் அழைக்கப்படுகிறது. அதன் கடைசியில் காவிரிக்கரையில் மூல பிருந்தாவனம் இருக்கிறது.

திருவிசைநல்லூர்

ஸ்ரீதர ஐயாவாள்

கும்பகோணத்திலிருந்து 10 கி.மீ.தூரத்தில் திருவிசை நல்லூர் இருக்கிறது.இங்கு திருமடமும் உற்சவ விக்கிரகமும் உள்ளன.

திருவீழிமலை

ஸ்ரீவீழி சிவவாக்கிய யோகிகள்

கும்பகோணத்திலிருந்து கிழக்கே 20 கி.மீ.தூரத்தில் திருவீழிமலை இருக்கிறது.இங்கிருக்கும் சிவாலயத்தில் கீழவீதியில் திருமடத்தில் யோகிகளின் சமாதிக்கோவில் இருக்கிறது.
திருபுவனம்

விராலிமலை சதாசிவ சாமி

கும்பகோணம் டூ மயிலாடுதுறை சாலையில் 8 கி.மீ.தூரத்தில் திருபுவனம் இருக்கிறது.இங்கு கம்பரேஸ்வரசாமி சிவாலயத்திற்கு அருகே மடமும் சமாதிக்கோவிலும் இருக்கிறது.

ஆடுதுறை

சைதன்ய சிவம்

ஆடுதுறை சூரியனார் கோவில் சாலையில் காவிரியாற்றின் மேம்பாலத்தின் மேற்கே அம்மன் கோவிலுக்கு பின்புறமுள்ள தோப்பில் சைதன்ய விநாயகர் கோவிலில் விநாயகருக்குக் கீழ் இவரது ஜீவசமாதி உயிர்த்துடிப்புடன் இயங்கிவருகிறது.


சாத்தனூர்

திருமூலர்

ஆடுதுறையிலிருந்து 3 கி.மீ.தூரத்தில் சாத்தனூர் இருக்கிறது.இந்த ஊருக்கு வெளியே ஐயனார் கோவில் இருக்கிறது.இந்த அய்யனார் கோவிலின் பின்புறம் திருமூலரின் ஜீவசமாதி இருக்கிறது.ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஏற்ற இடமாகும்.
சூரியனார் கோவில்

சிவாக்கிர யோகிகள்

ஆடுதுறை அருகே சூரியனார் கோவில் இருக்கிறது.இங்கிருக்கும் தெற்குவீதியில் திருமடத்தில் சுவாமிகளின் அதிஷ்டானக்கோவில் இருக்கிறது.

கஞ்சனூர்

ஸ்ரீஹரதத்தர்

ஆடுதுறைக்கு வடக்கே 2 கி.மீ.தூரத்தில் கஞ்சனூர் இருக்கிறது.இதன் மேற்கு எல்லையில் மணியாக்குளம் வடகரையில் வடமேற்கு பாகத்தில் அதிஷ்டானக்கோவில் அமைந்திருக்கிறது.

சுயம்பிரகாசர்

கஞ்சனூர் மணியாக்குளம் தென்புறம் காசிவிஸ்வநாதர் கோவில் இருக்கிறது.இங்கு தட்சிணாமூர்த்திக்கு அருகில் உள்ள சந்நிதியில் சிவலிங்கபிரதிஷ்டையுடன் சமாதி இருக்கிறது.அருகில் இரு சீடர்கள் சிவானந்தர் மற்றும் பரமானந்தர் ஆகியோரின் அதிஷ்டானங்களும் இருக்கின்றன.ஆலயத்திற்கு வெளியே தெற்கே தள்ளி ஸ்ரீவைத்தியலிங்க சாமி அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.


திருநாகேஸ்வரம்

ஸ்ரீநாராயணசாமி சித்தர்

உப்பிலியப்பன் கோவிலுக்கு வடக்கே கீழநடுப்பட்டறை தெருவின் கடைசியில் சமாதி பீடம் இருக்கிறது.மாசி மாதம் வரும் புனர்பூசம் நட்சத்திர் நாளில் வருடாந்திர குருபூஜை!!

கீழக் கபிஸ்தலம்

ஸ்ரீதத்துவராய சுவாமிகள்

கும்பகோணம் டூ திருவையாறு இடையே 15 கி.மீ.தூரத்தில் கீழக்கபிஸ்தலம் இருக்கிறது.இதன் வடக்கே வாழ்க்கை கிராமம் இருக்கிறது.இங்கே சாமியார்தோப்பு என்னும் இடத்தில் அதிஷ்டானம் இருக்கிறது.

குடவாசல்

சுப்பிரமணிய சித்தர்

கும்பகோணம் டூ திருவாரூர் சாலையில் 20 கி.மீ.தூரத்தில் குடவாசல் இருக்கிறது.இங்கே இருக்கும் குருசாமி கோவிலே அதிஷ்டானம் ஆகும்.

திருவிடைமருதூர்

பத்திரகிரியார்

பட்டினத்தாரின் சீடரான இவரது ஜீவசமாதி மகாலிங்கசுவாமி கோவில் கிழக்கு கோபுர வாசலில் சிலை வடிவில் அமைந்திருக்கிறது.

வலங்கைமான்

காரை சித்தர்

வலங்கைமானுக்குக் கிழக்கே குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் ஆண்டாங்கோவில் என்னும் சிற்றூர் இருக்கிறது.இந்த ஆற்றைக் கடந்தால் காந்தவெளி ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது.இந்த கொவிலின் பின்புறம் 250 அடி தூரத்தில் சமாதிக்கோவில் இருக்கிறது.இந்த பீடத்தில் காரை சித்தரின் சுதையாலான உருவம் அமைக்கப்பட்டுள்ளது.ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஏற்ற இடம்;ஜபிக்க உகந்த நேரம் அமாவாசை நள்ளிரவு மணி 11.50 முதல் 12.10 வரை!!!
பூனைக்கண் சித்தர்

வலங்கைமான் பாய்க்காரத் தெரு பட்டகுளம் சந்தில் சமாதிக்கோவில் இருக்கிறது.வைகாசி மாதம் வரும் தசமி திதி அன்று வருடாந்திர குருபூஜை வழிபாடு!!!

சின்னகரம்

வலங்கைமானுக்குத் தெற்கே சின்னகரம் என்னும் சிற்றூர் உள்ளது.இதன் தொடக்கத்தில் துரவுபதி அம்மன் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் பின்புறமுள்ள குளத்த்தின் கரையில் வடமேற்கு மூலையில் சமாதிக்கோவில் இருக்கிறது.

கூந்தலூர்

ரோமரிஷி ஜீவசமாதி இங்கே தான் இருக்கிறது.பஞ்சபட்சி சாஸ்திரம் கற்க விரும்புவோர்,கற்றதை சிறப்பாக செயல்படுத்திட விரும்புவோர்,8 அமாவாசைகளுக்கு இங்கு வந்து இரவு11 முதல் 1 மணி வரை ஓம்சிவசிவஓம் ஜபித்துவரவும்.

திருவாலங்காடு

முதல்வர் நமச்சிவாய மூர்த்தி & திருமாளிகைத் தேவர்

ஆடுதுறை டூ குத்தாலம் இடையே திருவாலங்காடு இருக்கிறது.இங்கு திருவாடுதுறை ஆதினத்திருமடத்தில் ஆதீனகுரு முதல்வர் நமச்சிவாய மூர்த்திகள் சமாதிக்கோவில் இருக்கிறது.இந்த வளாகத்துக்குள் சற்று வடபுறம் திருமாளிகைத் தேவர் சன்னதி இருக்கிறது.இவருக்கு தைமாதம் வரும் அசுபதி நட்சத்திரநாளில் வருடாந்திர வழிபாட்டு நாள்!!!

முழையூர்

ஆதிசிவப்பிரகாசர்

தாராசுரத்தை அடுத்து முழையூர் முக்கூட்டிற்கு மேற்கே ஆதிசிவப்பிரகாசர் சிவாலயம் இருக்கிறது.இதன் கருவறையே சமாதிக்கோவில் ஆகும்.

கொத்தம்பட்டி

பாலானந்த ஜோதி சுவாமிகள்

தஞ்சாவூர் டூ புதுக்கோட்டை இடையே 13 கி.மீ.தூரத்தில் புனல்குளம் இருக்கிறது.இதன் வடக்கே 4 கி.மீ.தூரத்தில் இருப்பது கொத்தம்பட்டி.சாலையின் முடிவில் பிள்ளையார் கோவில் இருக்கிறது.இதன் வடபுறம் காமாட்சியம்மன் கோவில் இருக்கிறது.இந்த கோவில் வளாகத்துக்குள் அம்மன் சன்னதியின் தெற்கே சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பட்டுக்கோட்டை

ஸ்ரீவெங்கிடு சாமிகள்

பட்டுக்கோட்டை பெரியகடை தெரு மேல்கோடியில் சாமியார் மடம் என்னும் ஸ்ரீவெங்கிடு சுப்பையா சாமிகளின் அழகிய சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வடகாடு

ஸ்ரீஅம்பலவாண சுவாமிகள்

முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை ஊரிலிருந்து தில்லை வளாகம் செல்லும் சாலையில் வடகாடு என்னும் ஊரில் சுவாமிகளின் சமாதிக்கோவில் இருக்கிறது.மாசி மாதம் வரும் திருவாதிரை நட்சத்தன்று வருடாந்திர வழிபாடு!!!
முத்துப்பேட்டை

ஷைகு தாவுத் வலி

ஜாம்பவான் ஓடை பகுதியில் ஷைகு தாவுத்வலி தர்கா இருக்கிறது.
மன்னார்குடி

சூட்டுக்கோல் ராமலிங்கசாமி
மன்னார்குடி கிழக்கு எல்லையில் திருவாரூர் செல்லும் சாலையில் மேல்புறம் பைபாஸ் ரோடு ஐயர் சமாதி என்றழைக்கப்படும் சூட்டுக்கோல் ராமலிங்க சாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.வருடாந்திர தைப்பூசம் தோறும் குருபூஜை!

மாயாண்டி சாமி

சூட்டுக்கோல் ராமலிங்க சாமியின் சமாதி பின்புறம் மாயாண்டி சாமியின் சமாதி இருக்கிறது.

ஸ்ரீவாட்டார் மவுனகுரு சாமி

மன்னார்குடி தென்வடல் 6 ஆம் தெருவில் கோபிநாதப்பெருமாள் கோவில் அருகில் சமாதிக்கோவில் இருக்கிறது.

ஸ்ரீமேரு சாமி

மன்னார்குடி ஹரித்ரா நதி தெப்பக்குளம் டூ ஈசானியேஸ்வரர் என்னும் காசி விஸ்வநாதர் ஆலயத்தின் கிழக்கு வாசலை அடுத்து,வாசலுக்கு வடபுறம் பாமினி ஆற்றுக்குத் தென்புறம் மேருசாமி சமாதிக்கோவில் இருக்கிறது.

பூந்தி சுவாமிகள்

மேலே குறிப்பிட்டுள்ள சிவன்கோவில் அருகில் சுவாமிகளின் சமாதி இருக்கிறது.

வடகரவாயில்

சாமிநாத சித்தன்

மன்னார்குடிக்கு 10 கி.மீ.தூரத்தில் ராஜப்பையன் சாவடி என்னும் சிற்றூர் இருக்கிறது.அதன் அருகில் வடகரவாயில் என்னும் கிராமம் இருக்கிறது.இங்கே இருக்கும் நாகமாரியம்மன் கோவிலுக்கு எதிர்ப்புறம் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.மாசிமாதம் வரும் உத்ராடம் நட்சத்திர நாளன்று வருடாந்திர குருபூஜை விழா !!!
அருகிலேயே குருநாதர் ஆறுமுக சித்தரின் சமாதி இருக்கிறது.இங்கே பங்குனி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை!!!

முத்தையா சித்தர்

ராஜப்பையன் சாவடி அருகில் வடகரைவாயில் நாகமாரியம்மன் கோவில் வடக்குப் பக்கத்தில் சமாதி இருக்கிறது.மாசி மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரத்தன்று குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

செருவாமணி

ஆனந்தசாமி

சூட்டுக்கோல் ராமலிங்கசாமியின் சீடர் இவர்.மன்னார்குடியிலிருந்து 15 கி.மீ.தூரத்திலுள்ள சேந்தமங்கலத்தில் இறங்கி செருவாமணியை அடையலாம்.இங்கே இவரது ஜீவசமாதி இருக்கிறது.

திருக்களர்

வீரசேகர ஞான தேசிகர்


மன்னார்குடி அருகில் திருப்பத்தூர் என்னும் சிற்றூர் இருக்கிறது.இதன் அருகில் திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் கோவில் வடக்கு வீதியில் வடகிழக்கு மூலையில் சமாதிக்கோவில் இருக்கிறது.வைகாசி மாதம் வரும் பவுர்ணமியன்று குருபூஜை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

மருதூர்

சிவப்பிரகாச சாமிகள்

மன்னார்குடி டூ திருத்துறைப்பூண்டி சாலையில் 7 கி.மீ.தூரத்தில் தட்டாங்கோவில் இருக்கிறது.இதன் தெற்கே 3 கி.மீ.தூரத்தில் மருதூர் இருக்கிறது.இங்கே ஸ்ரீசிவப்பிரகாச சாமிகள் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.இங்கே வருடாந்திர குருபூஜை கார்த்திகை மாதம் வரும் திருஓணம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.

திருநெல்லிகாவல்புதூர்

ஸ்ரீஅண்ணன் சாமிகள்(எ)அருணாச்சல சாமிகள்

திருத்துறைப்பூண்டி டூ திருவாரூர் சாலை நான்கு ரோடு சந்திப்புக்கு மேற்கே 3 கி.மீ.தூரத்தில் புதூர் ரைஸ் மில்லுக்கு எதிரில் உள்ள தோப்பில் சுவாமிகளின் அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.

நன்னிலம்

தாண்டவராய சுவாமி & நாராயணசுவாமி

நன்னிலம் கடைத்தெரு அருகே பிள்ளையார் கோவில் தெற்கு தெரு இலுப்பைத் தோப்பு இருக்கிறது.இங்கே ஸ்ரீநாராயண தாண்டீஸ்வரர் ஜீவசமாதி இருக்கிறது.அருகருகே தென்புறத்தில் ஸ்ரீநாராயணகுரு அதிஷ்டானம் அமைந்திருக்கிறது.வடபுறம் ஸ்ரீதாண்டவராய சுவாமிகளின் அதிஷ்டானம் இருக்கிறது.வைகாசி மாதம் வரும் விசாகத்தன்று குருபூஜை வருடம் தோறும் நடைபெற்றுவருகிறது.

சன்னாநல்லூர்
சின்னான் சுவாமி
திருவாரூர் டூ மயிலாடுதுறை சாலையில் சன்னாநல்லூரில் சமாதிக்கோவில் இருக்கிறது.வருடம் தோறும் வரும் ஆடிமாதம் ஆயில்யம் நட்சத்திரநாளில் குருபூஜைவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

திருவாஞ்சியம்
ராமையா சாமி
நன்னிலத்திலிருந்து 7 கி.மீ.தூரத்தில் திருவாஞ்சியம் அருகில் பால்பண்ணைச்சேரி கிராமம் இருக்கிறது.இங்கு பாலதண்டாயுதபாணிகோவில் வளாகத்தில் இவரது ஜீவசமாதி இருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் பங்குனி 2 ஆம் தேதி வருடாந்திர குருபூஜை விழா!

திருவாரூர்
கமலமுனி
திருவாரூர் ஆனந்தீஸ்வரர் சன்னதியில் சித்திபெற்றுள்ளார்.



மடப்புரம் தட்சிணாமூர்த்தி
திருவாரூர் மடப்புரம் பகுதியில் கமலாலய தெப்பக்குளத்திற்குத் தென்மேற்கே அம்மையப்பன் செல்லும் சாலையில் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.இங்கே இருக்கும் சிவலிங்கத்தின் கீழே சுரங்கக் குகையில் அடக்கமாகியிருக்கிறார்.


திருக்குவளை
வன்மீகர்
திருவாரூர் அருகே திருக்குவளையிலிருந்து 2 கி.மீ.தூரத்திலுள்ள எட்டுக்குடி சவுந்தர ஈஸ்வரர் கோவிலில் சித்திபெற்றிருக்கிறார்.

திருநெய்ப்பேர்
நமிநந்தியடிகள்
திருவாரூர் டூ திருத்துறைப்பூண்டி இடையில் 7 கி.மீ.தூரத்தில் இருப்பது திருநெய்ப்பேர் ஆகும்.இங்கிருக்கும் சிவன் கோயிலைப்பார்த்தவாறு சாலைக்குக் கிழக்கே சமாதித் திருக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

முடிகொண்டான்
ஆலங்குடி சுவாமிகள்
திருவாரூரிலிருந்து 16 கி.மீ.தூரத்தில் முடிகொண்டான் சிற்றூர் இருக்கிறது.இங்கு பெரியகுளத்திற்குக் கீழ்க்கரையில் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் இருக்கிறது.இந்த கோவிலின் நுழைவு வாயிலில் கிழக்கே மதில் சுவருக்கு வடக்கே ஸ்ரீஆலங்குடி சுவாமிகள் என்னும் சுயம்பிரகாசானந்த சரஸ்வதி சாமிகளின் அதிஷ்டானம் அமைந்திருக்கிரது.சமாதியில் வில்வமரம் இருக்கிறது.


இதே கிராமத்தில் காலணா வெங்கடாஜலபதி திருக்கோவில் இருக்கிறது.மிகவும் புராதனமான,அளவற்ற வீர்யம் மிகுந்த திருக்கோவில் இது.இந்தக்கோவிலில் நமது மாத/ஆண்டு வருமானத்தில் 5% செலுத்திக்கொண்டே வந்தால்,நமது தொழில்/வேலை/கமிஷன் தொழில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியடையும் என்பது பலருக்கும் தெரியாத தெய்வீக வைஷ்ணவ ரகசியம் ஆகும்.இங்கு ஏகாதசி தோறும் ஒரு மணி நேரம் வரை ஓம்ஹரிஹரிஓம் ஜபித்துவந்தால்,நமது நீண்டகாலப் பிரச்னைகள் தீரும்.இவ்வாறு 9 ஏகாதசிகளுக்கு ஓம்ஹரிஹரிஓம் ஜபித்துவர வேண்டும்.

பொறையாறு
பாப்பையா சுவாமிகள்
மயிலாடுதுறைக்கு கிழக்கே 35 கி.மீ.தூரத்தில் பொறையாறு இருக்கிறது.இங்கு இருக்கும் போக்குவரத்துக் கழக பணிமனையின் கிழக்கே பாப்பையா சாமிகளின் சமாதிக்கோவில் இருக்கிறது.

மயிலாடுதுறை
குதம்பை சித்தர்
மயிலாடுதுறை சிவாலயத்தில் தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் அரூட சமாதி இருக்கிறது.இங்கே வெள்ளைப்பிள்ளையார் சன்னதி  இருக்கிறது.இதே இடத்தில் குதம்பைச் சித்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பால்சாமி
மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் திருமஞ்சனவீதி இருக்கிறது.இங்கே காவிரிக்கரை அருகே பள்ளி எதிரில் சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கே கருவறைக்குள் முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

மணிவாசக சாமி
கூறைநாடு பகுதியில் காவிரி தென்கரையில் சமாதி இருக்கிறது.சமாதியின் மீது தட்சிணக்காளி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருவாலங்காடு
கொங்கணசித்தர்
மயிலாடுதுறைக்கு 15 கி.மீ.தூரத்தில் திருவாலங்காடு தென்னந்தோப்பு இருக்கிறது.இதை கொங்கணேஷ்வரர் தோப்பு என்பர்.இங்கே தாமரைக்குளம் அருகில் கொங்கணசித்தரின் ஜீவசமாதி இருக்கிறது.

சுடுகாட்டுச்சாமி
மயிலாடுதுறை தருமபுரம் சாலையில் ராஜன் தோட்டத்திற்கு எதிரில் 25 ஆம் எண் கொண்ட இடத்தில் ஜீவசமாதி இருக்கிறது.இங்கே பிரதி கார்த்திகை மாதம் வரும் 2 ஆம் நாளன்று குருபூஜை விழா!

யோக அபிராமி அம்மையார்
மயிலாடுதுறை கச்சேரி வீதியில் தண்டபாணி(முருகன்) கோவிலில் முருகனுக்குக் கீழே நிலவறையில் ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா ஐப்பசி மாதம் வரும் அஸ்தம் நட்சத்திரநாளன்று நடைபெற்றுவருகிறது.

பாய்கட்டி சுவாமி
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை வளாகத்தில் இவரது ஜீவசமாதி இருக்கிறது.

சித்தர்காடு
காழி சிற்றம்பலநாடிகள் சுவாமி
மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம் மேற்புறம் சித்தர்காடு இருக்கிறது. காழி சிற்றம்பல நாடிகள் உடன் 60 சீடர்கள் ஒரு சேர சமாதிகொண்ட ஸ்தலம் சித்தர் காடு ஆகும்.

கண்ணப்பர் சாமி
சித்தர்காடு தென்கிழக்கே சாலைக்கு சற்றுதொலைவில் ஸ்ரீஆலந்துரையப்பர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

மாதிரிமங்கலம்
ரோட்டுசாமி(சிவராமகிருஷ்ணசாமி)
மயிலாடுதுறை டூ கும்பகோணம் சாலையில் 12 கி.மீ.தூரத்தில் மாதிரிமங்கலம் இருக்கிறது.இங்கே ரைஸ் மில்லுக்கு தெற்கில் மடமும் சமாதிக்கோவிலும் இருக்கின்றன.இங்கே பங்குனி மாதம் வரும் சுவாதி நட்சத்திரநாளில் வருடாந்திர குருபூஜை விழா!

குத்தாலம்
சேதுபாவா சாமி
மயிலாடுதுறை டூ கும்பகோணம் சாலையில் 10 கி.மீ.தூரத்தில் குத்தாலம் இருக்கிறது.இங்கே சிவன் கோவில் சன்னதி தெருவில் மரம் அறுக்கும் ஆலைக்குள் சமாதிக்கோவில் இருக்கிறது.

க்ஷேத்திரபாலபுரம்
உறிக்கட்டி சுவாமிகள்
மயிலாடுதுறை டூ கோமல் டூ கும்பகோணம் சாலையிலுள்ள க்ஷேத்ட்திரபாலபுரத்தில் சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கே கார்த்திகை மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திரநாளில் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

சீர்காழி
சட்டைநாதர்
சீர்காழி சிவாலயத்தில் சித்தியானார்.

தென்பாதி
கதிர்காம சுவாமி
சீர்காழி டூ வைத்தீஸ்வரன் கோவில் சாலையில் இருப்பது தென்பாதி ஆகும்.இங்கே உப்பனாற்றில் வடகரையில் பாலத்துக்கு மேற்கே சமாதிக்கோவில் இருக்கிறது.

வைத்தீஸ்வரன்கோவில்
தன்வந்திரி
வைத்தீஸ்வரன் கோவில் பிரகாரத்தில் இவரது சமாதி மீது தன்வந்திரி விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.சித்த,ஆயுர்வேத வைத்தியம் மற்றும் ஹீலிங்,ரெய்கி சிகிச்சையாளர்கள் இங்கே வந்து பிரதி செவ்வாய்க்கிழமைகளில் ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிப்பது நன்று.இவ்வாறு மாதம் ஒரு செவ்வாய்க்கிழமை வீதம் ஓராண்டு வரை வந்து வழிபட,வைத்தியத் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள்.
ஓம்சிவசிவஓம்                          
உலகமயமாக்கலின் விளைவாக, நமது ஒவ்வொருவரின் தினசரி வாழ்க்கையையும் செல்போனும்,இணையமும் படுவேகமாக மாற்றிவிட்டன; இந்த உலகமயமாக்கலே குடும்ப அமைப்பின் முதல் எதிரி ஆகும்;குடும்ப அமைப்பு சிதைந்து போய்விட்டால்,தனிமனித ஒழுக்கம் காணாமல் போய்விடும்;தனிமனித ஒழுக்கம் காணாமல் போய்விட்டால்,(வேதாத்திரி மகரிஷியின் ஆன்மீக ஆராய்ச்சியின் படி) வான் காந்தம் கடுமையாக பாதிக்கப்படும்;வான் காந்தம் பாதித்துவிட்டால்,பூமியில் நீராலும்,நிலநடுக்கத்தாலும் அழிவுகள் பெருமளவு பெருகிவிடும்.இந்த சூழ்நிலையை இணையத்தின் பரவல் 1990 முதல் 2010க்குள் உண்டாக்கிவிட்டது. தவிர,வல்லரசு நாடுகள் எனப்படும் அமெரிக்கா,இங்கிலாந்து,பிரான்ஸ்,ஜெர்மனி,ஜப்பான்,சீனா போன்றவைகளின் பேராசையால்,பூமியின் பல்வேறு நாடுகளில் இருக்கும் அனைத்துவிதமான இயற்கை வளங்களை வேகமாகவும்,பிரம்மாண்டமாகவும் நுகர்வு செய்ய ஆரம்பித்திருக்கிறான் மனிதன்.இது பேரழிவுக்கே வழிவகுக்கும்.
இந்த அழிவுக்கான சுழற்சியை நிறுத்திட,நாம் தமிழ்நாட்டில் இருக்கும் ஜீவசமாதிகளுக்கு மாதம் ஒரு நாள்/வாரம் ஒரு நாள் சென்று வழிபடுவது அவசியம் ஆகும்.மாதம் ஒரு நாள் என்பது மாதாந்திர பவுர்ணமி/மாதாந்திர அமாவாசை/மாதாந்திர சிவராத்திரி அல்லது உங்களின் ஜன்ம நட்சத்திரம் நிற்கும் நாளில் வழிபாடு செய்வது உங்களுக்கும்,உங்கள் குடும்பத்திற்கும்,நமது பாரத நாட்டிற்கும்,நமது நாட்டிற்கும் நன்மை பயக்கும்.பூமியின் நலனைக் கெடுப்பவர்களின் செயல்பாட்டை முடக்கிவைக்கும் என்பது உண்மை.
திண்டிவனம்
சாரம்
முத்துராம பிரம்மம்
திண்டிவனம் டூ ஒலக்கூர் சாலையில் 10 கி.மீ.தூரத்தில் உள்ளது சாரம் கிராமம்.இங்கிருக்கும் திரவுபதி அம்மன் கோவில் அருகே ஜீவசமாதி அமைந்திருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா இங்கு ஒவ்வொரு மார்கழி மாதமும் வரும் திருஓணம் நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது.
மயிலம்
சிவஞான பாலசித்தர்
திண்டிவனம் டூ புதுச்சேரி சாலையில் மயிலம் மலை மேல் உள்ள முருகன் சன்னதியின் தெற்கே சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.இங்கு வருடாந்திர குருபூஜை விழா ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது.
திருவக்கரை
குண்டலினி சித்தர்
மயிலத்தை அடுத்த திருவக்கரை வக்கிரகாளி கோவிலில் சந்திரமவுலீஸ்வரர் சன்னதியின் இடப்புறம் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.இங்கு சித்தரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பெருமுக்கல்
முத்தாலீஸ்வரர்
திண்டிவனத்திலிருந்து 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் பெருமுக்கல் கிராமத்தில் இந்த ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
உப்புவேலூர்
குழந்தைவேல்சாமி
திண்டிவனம் டூ கிளியனூர் சாலையில் 18 கி.மீ.தூரத்தில் இருப்பது உப்புவேலூர்.இங்கிருந்து 6 கி.மீ.தூரத்தில் இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
வன்னியநல்லூர்
ஸ்ரீதேவராசு சுவாமிகள்
சூனாம்பேடு அருகில் வன்னியநல்லூர் கிராமத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.இங்கு ஆனி மாதம் வரும் பூராடம் நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா!!!
புதுச்சேரி சுற்றுப்புறம்
இரும்மை மாகாணம்
கழுவெளி சித்தர்
ஆரோவில்லில் இருந்து 3 கி.மீ.தூரத்தில் இந்த சித்தரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
புதுச்சேரி
அரவிந்தர் மற்றும் ஸ்ரீஅன்னை
பறவைச் செட்டித் தெரு கடைசியில் அரவிந்தர் மற்றும் ஸ்ரீஅன்னை இருவரது ஜீவசமாதிகளும் இருக்கின்றன.
தொள்ளை காது சாமிகள்
மணக்குள விநாயகர் கோவிலில் விநாயகருக்குப் பின்புறம் இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
மவுலானா சாகிப் மெய் ஞான சாமிகள்
பாண்டி முல்லா வீதியின் கடைசியில் தர்கா அருகில் இவரது ஜீவ சமாதி அமைந்திருக்கிறது.
நாகலிங்கசாமிகள்
புதுவை அம்பலத்தாடையர் மடம் சாலையில் ஸ்ரீகாளஹஸ்தி கோவில் பின்புறம் இவரது ஜீவசமாதிகள் அமைந்திருக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதம் 7 ஆம் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
அக்கா பரதேசி சாமிகள்
முத்தியால்பேட்டை வாழைக்குளம் பகுதி குதிரைக்குளம் அருகே ஜீவசமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தட்டாஞ்சாவடி
ஸ்ரீகம்பளி ஞான தேசிக சாமிகள்
தொழிற்பேட்டை பின்புறம் ருத்ரபூமியில் உள்ள ஆஸ்ரம வளாகத்துள் சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கு கருவறையில் உள்ள நந்தியின் கீழ் சுவாமிகளின் சீடர் அம்பலவாண சாமிகள் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரியவர்களுக்கு பெரியவர்
கம்பளி ஞான தேசிக சுவாமிகளின் சமாதிக்குப் பின்புறம் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
சித்தன்குடி
யாழ்ப்பாணம் கதிர்வேல் சுவாமிகள்
சித்தன்குடி பிருந்தாவன் 3 வது குறுக்குத் தெருவின் மடத்தில் ஜீவசமாதி பீடம் அமைந்திருக்கிறது.
எல்லப்பிள்ளை சாவடி
சுப்ரமணிய அபிநவ சச்சிதானந்த சுவாமிகள்
எல்லப்பிள்ளள சாவடியில் இருக்கும் ஸ்ரீசாரதா கோவிலில் ஜீவசமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
ஸ்ரீசச்சிதானந்த சாமி
ஸ்ரீசாரதா சிவகெங்கை மடத்திற்கு மேற்கில் 100 அடி சாலையில் 21 எண் வளாகத்தின் உட்புறம் மண்டபத்தில் ஜீவசமாதி கோவில் அமைந்திருக்கிறது.
முத்திரைப்பாளையம்
ஸ்ரீமண்ணுருட்டி சுவாமிகள்
பழைய பஸ் ஸ்டாண்ட் டூ தென்னஞ்சாலை கோவிந்தசாமி முதலியார் தோட்டம்(சுதேசி காட்டன் மில் எதிரில்) இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
முத்தியால்பேட்டை
முத்தியால் பேட்டை அம்பிகா திரையரங்கம் எதிரில் திரு முத்துகுமாரசாமி முதலியார் தோட்டத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறாது.இந்த ஜீவபீடம் வேலாயுத ஈசுவரர் திருக்கோவிலாக வழிபடப்படுகிறது.இங்கு சீடர் கோவிந்தசாமியின் சமாதி அருகில் உள்ளது.
அரியூர் சர்க்கரை ஆலை
குருசாமி அம்மையார்
சர்க்கரை ஆலை காம்பவுண்டு தாண்டியவுடன் ஆஸ்ரம வளாகத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.வருடாந்திர குருபூஜை சித்திரா பவுர்ணமி!!!
பிள்ளையார் குப்பம்
ரெட்டியப்ப சுவாமிகள்
கிருமாம்பாக்கம் அருகில் இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
திருபுவனை
சிற்றம்பல அப்பார்
திருபுவனையில் அப்பார் சன்னதி என்றழைக்கப்படுகிறது.
ஏம்பலம்
அம்பலத்தாடி அப்பர்
ஏம்பலம் மடத்திற்கு அருகில் ஜீவசமாதி இருக்கிறது.வருடம் தோறும் வரும் புரட்டாசி 15 ஆம் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
சிங்காரப்பட்டு
ரெங்கசாமி சித்தர்
புதுச்சேரியிலிருந்து 24 கி.மீ.தூரத்தில் மண்ணடிப்பட்டு இருக்கிறது.அங்கிருந்து 2 கி.மீ.தூரத்தில் சிங்காரப்பட்டு இருக்கிறது.இதன் மேற்கு எல்லையில் சிறிய முருகன் கோவில் கருவறை முன்பு உள்ள மயில் பீடம் இவரது சித்தர்பீடம் ஆகும்.
லாலப்பேட்(கருவடிக்குப்பம்)
சித்தானந்த சுவாமிகள்
கருவடிக்குப்பத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
ஸ்ரீகணபதி சுவாமிகள்
கருவடிக்குப்பம் டூ இடையஞ்சாவடி ரோட்டின் கடைசியில் ஆஸ்ரமமும் அதன் அருகில் சமாதிக்கோவிலும் அமைந்திருக்கிறது.இந்த மேடையின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
காராமணிக்குப்பம்
ஸ்ரீசக்திவேல் பரமானந்த சுவாமிகள்
காராமணிக்குப்பம் ரயில்வே கேட் தாண்டி உள்ளது.
மண்ணடிப்பட்டு
பவழக்கொடி சித்தர்
புதுச்சேரி மண்ணடிப்பட்டு சாலையில் சோம்பட்டு கிராமம் இருக்கிறது.இந்த கிராமத்தின் தொடக்கத்தில் பவழக்கொடி சித்தரின் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
சின்னபாபு சமுத்திரம்
ஸ்ரீமகான் படே சாயபு
பாண்டி டூ விழுப்புரம் சாலையில் இருப்பது கண்டமங்கலம்!இந்த கிராமத்திலிருந்து 2 கி.மீ.தூரத்தில் உள்ளது சின்னபாபு சமுத்திரம் என்னும் கிராமம்.இங்கு இவரது ஜீவசமாதி கோவில் இருக்கிறது.செவ்வாய் தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.
அரும்பார்த்தபுரம்
தேங்காய் சுவாமிகள்
புதுவை கட்டாஞ்சாவடி எதிரில் சிறிய சமாதி பீடம் அமைந்திருக்கிறது.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
பள்ளித்தென்னல்
தட்சிணாமூர்த்தி சாமிகள்
புதுவை விழுப்புரம் சாலையில் பள்ளித்தென்னல் கிராமம் அமைந்திருக்கிறது.இங்கு ஐயனார் கோவிலும் குளமும் உள்ளன.இந்த குளத்தின் வட கரையில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
புதுப்பட்டு
ஸ்ரீலட்சுமண சுவாமிகள்
பாண்டி வடக்கே கிழக்கு கடற்கரை சாலையில் புதுப்பட்டு காட்டுப்பகுதியில் ஐயனாரப்பன் என்னும் மஞ்சனீஸ்வரன் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் பின்புறம் வடமேற்கு மூலையில் சமாதிபீடம் அமைந்திருக்கிறது.
முத்தியால்பேட்டை
முருகனடிமை பச்சையம்மாள்
கருவடிக்குப்பம் மயானத்தில் சமாதிக்கோவில் இருக்கிறது.
வில்லியனூர்(ஓதியம்பட்டு)
வண்ணார் பரதேசி சாமிகள்
புதுவை டூ முருகம்பக்கம் வழி வில்லியனூர் சாலையில் 7 கி.மீ.தூரத்தில் ஒதியம்பட்டு இருக்கிறது.இந்த ஊருக்கு மேற்கே சமாதி பீடம் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
கணுவாய் பேட்டை
திருக்காஞ்சி சாமியார்( எ) வியோமா முனிவர்
வில்லியனூர் கணுவாய் பேட்டை மல்லிகா தியேட்டர் வீதி கடைசியில் சாமியார் தோப்பு இருக்கிறது.இந்த தோப்பினுள் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
சுல்தான் பேட்டை
ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள்
சுல்தான்பேட்டை திருப்பத்தில் (பைபாஸ் ரோடு அருகில்) மூலக்கடையில் பிருந்தாவன ஜீவபீடம் இருக்கிறது.
நல்லாத்தூர்
சிவப்பிரகாச சாமிகள்
வில்லியனூர் ஏம்பலம் நல்லாத்தூர் சிவஞான பாலைய சாமிகள் மடத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளார்.இங்கு இவரது ஜீவசமாதியின் மீது சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
தென்னம்பாக்கம்
அழகர்சாமிகள் & சாம்பசிவசாமிகள்
வில்லியனூர் ஏம்பலம் அருகில் தென்னம்பாக்கம் இருக்கிறது.தோப்பிற்குள் அழகுமுத்து அய்யனார் கோவில்  இருக்கிறது.இந்த அய்யனார் பீடத்திற்குப் பின்னால் இந்த ஜீவசமாதிகள் அமைந்திருக்கின்றன.
வளவனூர்
ஸ்ரீமுத்தையாதேசிகன் சுவாமிகள்
வளவனூர் வன்னி மடாலயத் தெருவிலுள்ள மடாலயத்தில் ஜீவசமாதி தரைமட்டத்திற்குக் கீழே பாதாளத்தில் அமைந்திருக்கிறது.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.வருடாந்திர குருபூஜை விழா ஆடிமாதம் வரும் மகம் நட்சத்திரம்!!!
சத்சொரூபானந்த சுவாமி
வளவனூர் முதல் பேருந்து நிறுத்தத்தில் சாலையின் தென்புறம் சொரூபானந்த சாமி ஐயப்பன் மடம் இருக்கிறாது.இந்த மடத்தில் வலப்புறம் கிழக்குப் பார்த்த சிறிய கருவறையே இவரது ஜீவசமாதி பீடம் ஆகும்.இங்கு கருங்கல்லால் வடிக்கப்பட்ட திருவடிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.தை மாதம் வரும் உத்திரட்டாதி வருடாந்திர குருபூஜை நாள்!!!
ஸ்ரீசண்முக சுவாமிகள்
வளவனூர் சத்திரம் ஜீவசமாதி!
ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிகள்
வளவனூர் கிழக்கு பாண்டி ரோட்டில் இருக்கிறது.
பொம்மபுரம்
ஸ்ரீசிவஞான பாலைய சுவாமிகள்
பாண்டி வடக்கே கிழக்கு கடற்கரை சாலையில் 10 கி.மீ.தூரத்தில் பொம்மபுரம் என்னும் பொம்மையார்புரம் சிற்றூர் இருக்கிறது. பொம்மபுர ஆதீனத் திருமடம் முருகன் சன்னதியில் திரு உருவத்திற்கு முன்னதாக உள்ள சுரங்கப்பாதையில் ஜீவ சமாதி இருக்கிறது.இங்கு வைகாசி மாதம் வரும் விசாகம் நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா!!

ஓம்சிவசிவஓம்

பின்குறிப்பு: படத்தில் காணப்படும் இடம் விஜயாபதி ஆகும்.இங்கிருக்கும் பிரம்மரிஷி விஸ்வாமித்ர மகரிஷி அவர்களின் கோவிலில் திரு.சிவமாரியப்பன் அவர்கள் தியானித்தபோது எடுத்தபடம்.இந்த படத்தை வைத்தும் ஓம்சிவசிவஓம் தினமும் ஜபிக்கலாம்.                           
கலியுகத்தில் வாழ்ந்து வரும் நம் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு தீய குணம் இருக்கத்தான் செய்கிறது;பொறாமை,கடும் கோபம்,முன் கோபம், எப்போ பார்த்தாலும் குறை சொல்லிக் கொண்டே இருப்பது, தன்னைப் பற்றி ரொம்ப உயர்வாகவும் அதே சமயம் பிறரை மிக இழிவாகவும் நினைப்பதும் & பேசுவதும்; ஒற்றுமையாக இருக்கும் நட்பினைப் பிரிப்பது;ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தம்பதியை பிரிப்பது(இதை அந்த தம்பதியரின் பெற்றோரே செய்வதுதான் கொடுமை); நேர்மையாகவும்,கடினமாகவும் உழைக்கும் சுயதொழில் புரிவோரை குடி மற்றும் விபச்சாரப் பழக்கத்துக்கு அடிமையாக்குவது(இந்த ஒரு கெட்டப்பழக்கத்தால் தமிழ்நாட்டில் எத்தனையோ நிறுவனங்கள் மூடப்பட்டுவருகின்றன); நேர்மையாக வாழ்ந்து வருபவர்களில் பெரும்பாலானவர்களுக்கு நயவஞ்சகத்தை எதிர்கொள்ளும் திறன் இருப்பதில்லை;எனவே, நேர்மையான குடும்பஸ்தர்களுக்கு கடன் கொடுத்து,அவர்களின் மாதாந்திர வட்டியை வாங்காமல் இருந்து, சில வருடங்களுக்குப் பிறகு அவர்களின் வீட்டை/சொத்துக்களை/தொழிலை/சேமிப்பை மிரட்டி எழுதி வாங்குவது;

இது மாதிரியான தீய குணங்கள் இருப்பவர்களிடம் சிக்கியிருப்பவர்கள் மற்றும் மீள விரும்புவோர்,ஜீவசமாதி வழிப்பாட்டை இந்த சிவராத்திரியன்று செய்தால்/ஆரம்பித்தால் சிக்கல்கள் அடியோடு விலகிவிடும் என்பது அனுபவ உண்மை ஆகும்.
சென்னையின் சுற்றுப்புறம் :

புழல்
கண்ணப்ப சாமி
புழல் சிறைச்சாலையை அடுத்து காவாங்கரையில் கண்ணப்பசாமிகள் ஆசிரமம்;ஜீவசமாதி மேடை மீது சாமிகள் அமர்ந்த கோலத்துடன் காட்சியளிக்கிறார்.இவருக்கு அருகில் இவரது சீடர் கோவிந்த சாமியின் ஜீவசமாதி.

காரனோடை
மல்லையா சாமிகள்

காரனோடை தாண்ட குசஸ்தல ஆற்றுப்பாலத்தின் கீழ் வடகரையில் சமாதிகோவில் அமைந்திருக்கிறது.இங்கு சாமிகளின் சிலை கருங்கல்லால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அந்தணர் அண்ணல் ஞானாச்சாரியார்

காரனோடை கோபிகிருஷ்ணா தியேட்டர் எதிரில் ஆத்தூர் சாலையில் இவரது சமாதி கோவில் இருக்கிறது.பிரதி ஆவணி மாதம் வரும் முதல் நாள் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
அலமாதி

மார்க்கண்டேய மகரிஷி
அலமாதீஸ்வரர் கோவிலுக்குள் சமாதி அமைந்திருக்கிறது.

கோவணச்சாமி

அலமாதீஸ்வரர் கோவில் அருகில் சமாதி இருக்கிறது.

பூதூர்
ஷா இன்ஷா பாபா
செங்குன்றம் வடக்கே சோழவரம் டூ ஓரக்காடு ரோட்டில் 6 கி.மீ.பூதூர் கிராமம் இருக்கிறது.இந்த கிராமத்தின் மேற்குப்பகுதியில் தர்கா உள்ளது.

பஞ்சேஷ்டி
புலேந்திரர்(சித்தர்களின் தலைவர் அகத்தியரின் சீடர்)
ரெட் ஹில்ஸ்  டூ பொன்னேரி நெடுஞ்சாலையில் ஜனப்பன் சத்திரம் கூட்டுரோடு தாண்டி பஞ்சேஷ்டி திருத்தலத்திலுள்ள அகத்தீஸ்வரர் ஆலயத்தினுள் ஜீவசமாதி உள்ளது.இங்கு இருக்கும் இஷ்டலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

அம்பத்தூர்
ஐயா சூரியநாத கருவூரார்
பதினெண் சித்தர் மடம்,13,குமாரசுவாமி தெரு,வரதராசபுரம்,அம்பத்தூர்.பிரதி அக்டோபர் 10 ஆம் தேதி வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

வடதிருமுல்லைவாயில்
அன்னை நீலம்மையார்
37/1 வடக்கு மாடவீதி மாசிலாமணி ஈஸ்வரன் கோவில் அருகில் ஜீவசமாதி இருக்கிறது.பிரதி கார்த்திகை மாதம் வரும் மிருகசீரிடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

மாசிலாமணி சுவாமிகள்
சோளம்பேடு தாமரைக்குளம் ஆஞ்சநேயர் கோவிலில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

பூந்தமல்லி
கர்லாக்கட்டை சித்தர்
வைத்தீஸ்வரன் கோவிலில் சிவன் சந்நதிக்கு வலப்புறம் தூணில் உள்ளார்.

பைரவ சித்தர்
பஸ்நிலையம் எதிரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

கருடகோடி சித்தர்

பூந்தமல்லி தண்டரை சாலையில் அமைந்துள்ள சித்தர்காட்டிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் சுந்தரவரதபெருமாள் கோவில் தெப்பக்குள இடப்பாகத்தில் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர்
அருள்வெளி சித்தர்
பூதேரிபண்டை கிராமம்= வி.ஜி.பி.ராமானுஜ கிராமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.உயரமான சமாதி மேடை.சுவாமிகளின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வெள்ளறை கிராமம்
ராஜராஜ பாபா சித்தர்
கொளத்தூர் சமீபம் வெள்ளறை கிராமத்தில் அமைந்துள்ளது.

மாங்காடு

சர்வசர்ப்ப சித்தர்

மாங்காடு டூ போரூர் சாலையில் பேரம்புத்தூர் அருகில் கோவிந்தராஜா நகரில் ஸ்ரீசிவசித்தர் கோவிலில் ஜீவசமாதி இருக்கிறது.

புதுப்பட்டிணம்(ஈ.சி.ஆர்)

மாயவரம் சித்தர்சாமி & மாதாஜி சித்தர்

ஈ.சி.ஆர்.சாலை புதுப்பட்டிணம் அருகே மாயவரம் சித்தர்சாமி மற்றும் 18 சித்தர் திருவுருவங்கள் இருக்கின்றன.இருவருக்கும் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.

கோவளம்

ஆளவந்தார் சாமி

கோவளம் டூ நெமிலி வி.ஜி.பி.தாண்டி பீகாவரம் அருகில் இருக்கும் நெமிலியில் இவரது ஜீவசமாதி இருக்கின்றன.

திருக்கழுகுன்றம்

குழந்தை வேலாயுத சித்தர்

செங்கல்பட்டிலிருந்து வடக்கே 12 கி.மீ.தூரத்திலுள்ள திருக்கச்சூரில் சிறிய மலையில் மருந்தீஸ்வரர் கோவில் அருகே ஜீவசமாதிக் கோவில் அமைந்திருக்கிறது.

அப்பூர்=பதஞ்சலி சுவாமி

திருக்கச்சூர் டூ ஓரகடம் இடையே அமைந்துள்ள அப்பூர் பஸ்நிலையம் அருகில் கருமாரியம்மன் புதுக்கோவில் அகஸ்தீஸ்வரர் ஆஸ்ரமத்தில் ஜீவசமாதி இருக்கிறது.

திருப்போரூர்

சிதம்பரச்சாமி

திருப்போரூரிலிருந்து 2 கி.மீ.கண்ணகப்பட்டு உள்ளது.இங்கே சிதம்பரசாமிகள் மடாலயம் நடுப்பகுதியில் ஜீவசமாதியின் கருவறையில் சிவலிங்கப்பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ளது.பிரதி வைகாசி மாத பவுர்ணமியன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

செம்பாக்கம்

இரட்டை சித்தர்கள்

செங்கல்பட்டு டூ கூடுவாஞ்சேரி சாலையில் செம்பாக்கம் ஸ்ரீபொன்னம்பல சாமிகள் மற்றும் ஸ்ரீதிருமேனிலிங்க சாமிகள் ஆகியோரது ஜீவசமாதிகள் உள்ளன.

கூடுவாஞ்சேரி

மலையாள சாமி

கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் காசிவிஸ்வநாதர் கோவில்பின்புறம் ஜீவசமாதி இருக்கிறது.அருகில் இருக்கும் வயல்வெளியில் தியாகராய சாமி ஜீவசமாதி இருக்கிறது.

அச்சரப்பாக்கம்

முத்துசாமி சித்தர்

அச்சிறுப்பாக்கம் டூ கயப்பாக்கம் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் நடுப்பழனி முருகன் கோவில் உள்ள குன்று இருக்கிறது.இந்த முருகன் கோவில் வெளியே சன்னதிக்கு வடபுறம் முத்துச்சாமி சமாதி மண்டபம் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்

திருத்தணி

சுரைக்காய் சித்தர்

சென்னை டூ ஊத்துக்கோட்டை சாலையில் புத்தூருக்கு 5 கி.மீ.தூரத்தில் உள்ள நாராயணவனம் என்னும் இடத்தில் ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவிலுக்கு  ஈசானிய திசையில் ஜீவசமாதிகோவில் இருக்கிறது.இங்கு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

வெற்றிலை தடுக்கு

கங்காதர சுவாமி

புத்தூர் நாராயண வனம் செல்லும் பாதையில் 7 கி.மீ.தூரத்தில் இருக்கும் கிராமம் வெற்றிலை தடுக்கு=ஒட்டப்பாளையம் என்னும் ஊரில் ஜீவசமாதி இருக்கிறது.

அரக்கோணம்=அருளானந்தர்

அரக்கோணத்திலிருந்து 5 கி.மீ.தூரத்திலுள்ள காவனூர் நரசிங்கபுரத்தில் ஜீவசமாதி இருக்கிறது.

நாகவேடு

அமலானந்தர் & விமலானந்தர்

அரக்கோணத்திலிருந்து 10 கி.மீ.தூரத்திலுள்ள நாகவேடு கிராமத்தில் அமலானந்தர் மடத்தில் இவர்களின் ஜீவசமாதிகள் இருக்கின்றன.(இவர்கள் இருவரும் அருளானந்தரின் சீடர்கள்!!!)

காஞ்சிபுரம்

ஸ்ரீமஹாபெரியவர்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் உட்பகுதியில் ஸ்ரீமஹா பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அதிஷ்டானம் அதி சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

கச்சியப்ப முனிவர்

பிள்ளையார்பாளையம் டூ புதுப்பாளையம் தெருவில் திருவாடுதுறை ஆதீனக் கிளை மடத்தில் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா சித்திரை மாதம் வரும் புனர்பூச நட்சத்திர நாளில் நடைபெற்றுவருகிறது.

காளாங்கிநாதர்

ஏகாம்பர நாதர் கோவில் தேவஸ்தான அலுவலகத்தின் பின்புறம் உள்ள இஷ்ட சித்தீஸ்வரர் சன்னதியில் இவரது ஜீவசமாதி அமைந்திருக்கிறது.

காஞ்சி ஸ்ரீராமன் சாமி(சிவசாமி)

காஞ்சிபுரம் மேற்குப்புறம் உள்ள மயான பூமியின் தொடக்கத்தில் சமாதி கோவிலிருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.(மயான பூமியை ஒட்டியோ,மயானபூமியுடன் சேர்த்தோ இருக்கும் ஜீவசமாதிகளுக்கு அளவற்ற சக்தி உண்டு.உதாரணம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவகாசி ரோட்டில் இருக்கும் மூவர் சமாதி!!!)

விசுவநாத சுவாமி

சின்ன காஞ்சிபுரம் புண்ணியகோடீஸ்வரர் கோவிலுக்கு அடுத்த பண்ணையின் கன்னியம்மன் கோவில் தெருவில் ஜீவசமாதிக்கோவில் இருக்கிறது.இங்கு முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

சற்குரு சிவசாமி(ஸ்ரீபோடா சாமிகள்)

ஒலிமுகமது பேட்டைக்கு முன்பாக வெள்ளைக் குளக்கரை மயானபூமியின் தொடக்கத்தில் கங்கை அம்மன் கோவில் தெருவில் ஜீவசமாதிக்கோவில் இருக்கிறது.
இங்கு வருடாந்திர குருபூஜை விழா சித்திரை மாதம் வரும் சதயம் நட்சத்திரத்தன்று நடைபெற்றுவருகிறது.
தாண்டவராய சாமி

காஞ்சிபுரத்திலிருந்து 11 கி.மீ.தூரத்திலுள்ள கோவிந்தவாடியில் இவரது சமாதியும் சீடர்களின் சமாதிகளும் இருக்கின்றன.

காகபுஜண்டர்

காஞ்சிபுரம் டூ வந்தவாசி நெடுஞ்சாலையில் மாங்கால் கூட்டுரோடு அருகில் சோதியம்பாக்கம் பாவூரில் திருக்கோவில் அமைந்திருக்கிறது.எத்தனை யுகங்கள் கழிந்தாலும்,எத்தனை பிரம்மாக்கள் அழிந்தாலும் நிரந்தரமாக இருக்கும் ஒரே சித்தர் இவர் மட்டுமே!!

ஓம்சிவசிவஓம்                      
அனுபவ ரீதியாகப்பார்த்தால், கோவிலுக்குச் சென்று நாம் ஒரு குறிப்பிட்ட பரிகாரம் செய்தால்,அதற்கான பலன்கள் நமக்குக் கிடைக்க கொஞ்சம் காலம் ஆகும்;ஆனால்,ஜீவசமாதிகள்,சித்தர்களின் பீடங்களுக்குச் சென்று முறையாக வழிபட்டால்(முந்தைய பதிவில் வழிகாட்டியபடி) விரைவாக அதற்குரிய பலன்கள நம்மை வந்து சேருகின்றன;(தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான பழமையான ஆலயங்கள் அனைத்துமே சித்தர்களின் ஜீவசமாதிகளுக்கு மேல்தான் கட்டப்பட்டுள்ளன என்பது ருத்ராட்சத்துறவி,ஆன்மீக ஆராய்ச்சியாளர்,சிவகடாட்சம் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சி முடிவு ஆகும்)நீங்களும் ஒருமுறை டெஸ்ட் செய்து பார்க்கலாமே? பார்த்துவிட்டு,உங்களின் அனுபவத்தை ஆன்மீகக்கடலுக்கு எழுதலாமே? அதன் மூலமாக பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் பலனடையட்டுமே?
காரைக்கால் பகுதியில் இருக்கும் ஜீவசமாதிகள்:
ஆலத்தூர்
சித்தர்மலை பெருமாள் சுவாமி
காரைக்காலில் இருந்து 7 கி.மீ.தூரத்திலுள்ள ஆலத்தூரில் ஜீவசமாதியாக இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.இங்கு ஆவணி மாதம் வரும் மகம் நட்சத்திரத்திலிருந்து 10 நாட்களுக்கு விழா நடைபெறும்.ஆவணி மாதம் வரும் மூலம் நட்சத்திர நாளில் குருபூஜை விழா வருடந்தோறும் நடைபெற்றுவருகிறது.
காரைக்கால்
சற்குரு சீமான் சாமியார்
காரைக்கால் பேருந்து நிலையம் எதிரிலுள்ள மடத்தில் சமாதிபீடம் இருக்கிறது.இங்கு சிவலிங்க பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
நாகூர்
நாகூர் ஆண்டவர் தர்கா
நாகப்பட்டிணம்
அழுகண்ணி சித்தர்
நாகப்பட்டிணம் நகரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் நீலாய தாட்சியம்மன் கோவிலுக்குள் அழுகண்ணி சித்தரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
வடக்குப் பொய்கை நல்லூர்=கோரக்கர்
நாகப்பட்டிணத்தில் இருக்கும் சுனாமிப்பாலம் கடந்து 6 கி.மீ.தூரத்தில் இருப்பது கோரக்கரின் ஜீவசமாதி ஆகும்.தினமும் மதியம் அன்னதானமும்,முறையான,திட்டமிட்ட பராமரிப்பும் உள்ள சித்தரின் ஜீவசமாதி ஆகும்.பலவிதமான தெய்வீக சிறப்புகள் இங்கு உண்டு.ஒருமுறை போய் வந்தால்,கோரக்கரின் அற்புதத்தை உணருவீர்கள்.
மேலவாஞ்சூர்
ஸ்ரீரெங்கைய சுவாமிகள்
நாகூருக்கு வடக்கே 2 கி.மீ.தூரத்தில் மேலவாஞ்சூர் சுவாமிகளின் ஜீவசமாதி மடத்துக்குள் சமாதிக்கருவறையாக அமைந்திருக்கிறது.
திருமலை ராயன்பட்டினம்
புண்ணாக்கு சாமிகள்
காரைக்காலில் இருந்து 6 கி.மீ.தூரத்தில் உள்ள திருமலைராயன்பட்டிணம் ஹைஸ்கூல் சாலையில் சிவன் கோவில் உள்முகப்பில் புண்ணாக்கு சாமிகள் மடம் இருக்கிறது.இங்கு கருவறையே ஜீவசமாதியாக இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதம் வரும் உத்திரட்டாதி நட்சத்திரநாளில் நடைபெற்றுவருகிறது.

நவகண்டயோகி
திருமலைராயன்பட்டினத்தில் வெங்கடேசப்பெருமாள் கோவில் அருகே எல்லையம்மன் கோவில் மேற்கு கோடியில் குளம் அருகே சவுரியார் மடம் இருக்கிறது.அந்த மடத்தினுள் சுவாமிகளின் ஜீவசமாதி இருக்கிறது.வருடாந்திர குருபூஜை விழா ஆனி மாதம் வரும் அவிட்டம் நட்சத்திரநாளன்று நடைபெற்றுவருகிறது.(தூங்கும் போது மனிதனின் உடல் ஒன்பது துண்டுகளாகப் பிரிந்து தூங்கும் யோகநிலைக்கு நவகண்டம் என்று பெயர்;ஏராளமான தமிழ் ஆன்மீக வாதிகளுக்கு இந்த நவகண்டம் சர்வசாதாரணமாக கைகூடியிருக்கிறது.நிச்சயமாக உங்கள் ஊரில் நவகண்டம் திறனைக் கொண்ட ஆன்மீக முயற்சியாளர்கள் இருப்பார்கள்.தகவல் உதவி:மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆன்மீக ஆராய்ச்சி)
அக்கரை வட்டம்
சித்தானந்த சாமிகள்
காரைக்கால் டூ நாகூர் சாலையில் அக்கரை வட்டம் பிடாரிக்குளத்தில் சாலையைக் கடந்தால் சமாதிக் கோவில் இருக்கிறது.ஆவணி மாதம் வரும் மூலம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

புதுக்கோட்டை
ஜட்ஜ் சாமிகள்
புதுக்கோட்டையின் கீழ7 ஆம் வீதியில் உள்ள புவனேஸ்வரி கோவில் வளாகத்திற்குள் ஜீவசமாதி கோவில் அமைந்திருக்கிறது.பிரதி வைகாசி மாதம் வரும் அஸ்தம் நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.
சாந்தானந்தா சுவாமி
புவனேஸ்வரி அம்மன் கோவிலில் அதிஷ்டானம்
உலகநாத சுவாமி
புதுக்கோட்டை வடக்கு ராஜவீதி வடபுறம் சுவாமிகள் மடாலயம் பெயர் பொறித்த நுழைவு வாயில் இருக்கிறது.உள்ளே மடமும் சமாதிகோவிலும் உள்ளன.வருடாந்திர குருபூஜை விழா பங்குனி மாதம் வரும் உத்திராடம் நட்சத்திரநாளின் போது நடைபெற்றுவருகிறது.
தபசுமலை
தபசுமலை துறவிகள்
புதுக்கோட்டை டூ மதுரை சாலையில் 14 கி.மீ.தூரத்தில் லேனா விலக்கு இருக்கிறது.அங்கிருந்து தெற்கே 4 கி.மீ.தூரத்தில் தபசுமலை அமைந்திருக்கிறது.தபசுமலையில் வடமேற்கே சப்தமுனிவர்கள் அடங்கிய குகைப்பாதை இருக்கிறது.இங்கே சிலாவடிவங்கள் தனித்தனியே உள்ளன.
வடுகபட்டி
சுருளிச்சாமிகள்
புதுக்கோட்டை டூ திருச்சி சாலையில் கீரனூருக்கு அருகே வடுகப்பட்டியில் சுருளிச்சாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
செம்பூதி
சிவந்திலிங்கசாமி & ஏகம்மை
புதுக்கோட்டை டூ குழிபிறை டூ பொன்னமராவதி வழித்தடத்தில் செம்பூதியில் சமாதி குருபீடம் இருக்கிறது.தம்பதியர் இருவரும் ஒரே நேரத்தில் ஜீவசமாதி ஆனார்கள்.வருடாந்திர குருபூஜை விழா மாசி மாதம் வரும் பவுர்ணமியன்று நடைபெற்றுவருகிறது.
பனையபட்டி
சாதுபுல்லானி சுவாமி
குழிபிறை அருகே பனையப்பட்டியில் ஆயிரம் பிள்ளையார் கோவில் வளாகத்திற்குத் தெற்கே அதிஷ்டானக் கோவில் அமைந்திருக்கிறது.சுவாமி திரு உருவம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.வைகாசி மாதம் வரும் சதய நட்சத்திர நாளில் வருடாந்திர குருபூஜை விழா நடைபெற்றுவருகிறது.

தேனிமலை
ஸ்ரீபெருமானந்த சுவாமிகள்
பொன்னமராவதிக்கு வடக்கே 10 கி.மீ.தூரத்தில் தேனிமலை இருக்கிறது.இங்கே முருகன் குன்றுக்குக் கீழே அடிவாரத்தில் ஜீவசமாதி கோவில் அமைந்திருக்கிறது.
உலகம்பட்டி
சித்தர்பெருமான்
பொன்னமராவதியிலிருந்து 9 கி.மீ.தூரத்தில் உலகம்பட்டி ஞானியார் திருமடம் இருக்கிறது.இங்கே இருக்கும் சேவுகான்ந்த சுவாமி ஜீவசமாதி பீடம் அமைந்திருக்கிறது.
அரிமழம்
கோடகநல்லூர் சுந்தரசாமி
புதுக்கோட்டையிலிருந்து 15 கி.மீ.தூரத்திலுள்ள அரிமழம் பேருந்து செல்லும் சாலையை ஒட்டி அதிஷ்டானக்கோவில் அமைந்திருக்கிறது.
சிவகெங்கை மற்றும் காரைக்குடி
கோட்டையூர்
எச்சில் பொறுக்கி ஆறுமுகசாமி
காரைக்குடியிலிருந்து 3 கி.மீ.தூரத்தில் கோட்டையூர் இருக்கிறது.இங்கு நகரத்தார் சிவன் கோவிலின் கிழக்கே 2 கி.மீ.தொலைவு நகர விரிவாக்கப் பகுதியில் சமாதி கோவில் அமைந்திருக்கிறது.
காரைக்குடி
சிவன்செயல் சித்தர்
காரைக்குடி பழைய பஸ் நிலையம் அருகில் சமாதிகோவில் இருக்கிறது.
கோவிலூர்
கோவிலூர் ஆண்டவர்(எ) முத்துராமலிங்க ஞான தேசிகர்
காரைக்குடி அருகே மேற்கில் கோவிலூர் டூ கொற்றவாளிசூவரர் கோவிலருகே திரு மடத்தில் மகாலிங்கப்பிரதிஷ்டையுடன் கோவிலூர் ஆண்டவரின் அதிஷ்டானக் கோவில் இருக்கிறது.
ஸ்ரீதுறவு அருணாச்சல தேசிக சுவாமிகள்
மேற்படி மடத்தில் கோவிலூர் ஆண்டவர் லிங்க மூர்த்தியாகவும்,துறவு அருணாச்சல சுவாமி நந்தியாகவும் சன்னதி பலி பீடமாக கருணாந்திசாமி  அதிஷ்டானம் உள்ளது.

சிங்கம்புணரி
வாத்தியார் சாமி (எ) முத்துவடுகேச சுவாமி
திருப்பத்தூரிலிருந்து 20 கி.மீ.தூரத்தில் சிங்கம்புணரி டூ பிரான்மலை செல்லும் பாதையில் ஆற்றின் தென்கரையில் சித்தர் முத்துவடுகேசர் ஜீவசமாதி கோவில் இருக்கிறது.பவுர்ணமி தோறும் அன்னதானமும்,சிறப்பு வழிபாடும் நடைபெற்றுவருகிறது.கருவறையில் சமாதி மீது சித்தர் யோகநிலையில் இருக்கும்போது அதே நிலையில் சிலை செய்து தம் அருளை ஏற்றிய சிலை பிரதிஷ்டை செய்திருக்கிறார்.
நாட்டரசன்கோட்டை
கம்பர்
சிவகெங்கையிலிருந்து 7 கி.மீ.தூரத்தில் நாட்டரசன் கோட்டை இருக்கிறது.இங்கிருக்கும் கருப்பசாமி கோவில் அருகே கம்பர் பெருமான் சமாதி இருக்கிறது.
இடையமேலூர்
மாயாண்டி சாமிகள்
சிவகெங்கை மேலூர் சாலையில் 8 கி.மீ.தூரத்தில் இடையமேலூர் பேருந்து நிறுத்தத்திற்கு முன்னதாக சமாதிக்கோவில் அமைந்திருக்கிறாது.வருடாந்திர குருபூஜை விழா மார்கழி மாதம்  வரும் பூரம் மற்றும் உத்திரம் நட்சத்திரநாட்களில் நடைபெற்றுவருகிறது.
திருப்பத்தூர்
வாலைச்சித்தர்(எ)வேலாயுத சாமிகள்
திருப்பத்தூர் டூ சிவகெங்கை சாலையில் 4 கி.மீ.தூரத்தில் காட்டாம்பூர் தண்ணீர்ப்பந்தல் என்னும் சாமியார் மடம் கிழக்கே உள்ள தோப்பினுள் வாலைச் சித்தர்பீடம் அமைந்திருக்கிறது.
கீழப்பூங்குடி
மிளகாய்சாமி
திருப்பத்தூர் டூ சிவகெங்கை வழியில் 25 கி.மீ.தூரத்தில் இருக்கிறது.ஒக்கூர் மேற்கே 4 கி.மீ.கீழப்பூங்குடியில் மிளகாய் சாமிகளின் சமாதிக்கோவில் அமைந்திருக்கிறது.
மதுரையாண்டவர்(எ)பரஞ்சோதி சாமிகள்
கீழப்பூங்குடி மிளகாய் சாமிகள் சமாதிக்கோவிலுக்குப் பின்புறம் உள்ள தெருவில் மதுரையாண்டவர் என்னும் பரஞ்சோதி சுவாமிகளின் மடமும்,சமாதிக்கோவிலும் அமைந்திருக்கிறது.

சிவகெங்கை
மவுனகுரு சாமி
மதுரைமுக்கு ரோடு அருகில் சமாதி இருக்கிறது.
ஒழுகமங்கலம்
ஆரிய சித்தர்
சிங்கம்புணரியிலிருந்து 16 கி.மீ.தூரத்தில் ஒழுகமங்கலம் இருக்கிறது.அங்கிருக்கும் திருமேனிநாதம் திருக்கோவிலில் கன்னி மூலையில் ஆரிய சித்தர் ஜீவசமாதி நிலவறையில் இருக்கிறது.அந்த நிலவறையின் மேல் சிவலிங்கத் திருமேனி நிறுவப்பட்டுள்ளது.
சொக்கலிங்கபுரம்
சிவகுருநாத சித்தர்
சிங்கம்புணரியிலிருந்து 1 கி.மீ.தூரத்தில் சோளீஸ்வரர் கோவில் குளக்கரையில் சிவகுருநாத சித்தர் மற்றும் சீடர்கள் இருவரின் ஜீவசமாதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மானாமதுரை
சதாசிவ பிரமேந்திரர்
நெரூரில் சமாதி ஆன அதே நேரத்தில் மானாமதுரை சோமநாதர் ஜோதியாக காட்சி தந்த இடத்தில் பிரகாரத்தில் சந்நிதி உள்ளது.ஆண்டு குருபூஜை விழா சித்திரை மாதம் வரும் சுத்த தசமியில் !!!
சிவப்பிரகாசம் சித்தர்சாமி மற்றும் வேலாயுதசாமி
மானாமதுரையில் இருவரது சமாதிகளும் இருக்கின்றன.
முனீஸ்வரர் சித்தர்
வேதியனேந்தல் விலக்கு அருகில் பேரில்லா மரம் உள்ள இடத்தில் ஜீவசமாதி இருக்கிறது.

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.