ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

Update வெளிவந்துள்ளது!

என்னிடம் இருந்து தமிழ் ஜோதிட சாப்ட்வேர் வாங்கி பயன்படுத்தி வருவோரிற்கு நல்ல செய்தி.
உங்கள் தமிழ் ஜோதிட சாப்ட்வேர் இற்கு update வெளிவந்துள்ளது. இதனை இலவசமாக download செய்து உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள். இனிவரும் காலங்களிலும் எனது ஜோதிட சாப்ட்வேர் இற்கு Updates மற்றும் Hotfix வழங்குவேன். இதன்மூலம் உங்கள் சாப்ட்வேரினை எப்போதும் புதிதாக வைத்திருப்பதுடன் புதிய அம்சங்களையும் பாவிக்க முடியும்...
இந்த சாப்ட்வேர் ஜோதிட அபிமானிகள் (ஜோதிட ஆர்வலர்கள், இளநிலை ஜோதிடர்கள்) மற்றும் தொழில்முறை ஜோதிடர்கள் பயன்படுத்தும்வண்ணம் வெளிவருகின்றது. இது கடந்த 100 வருட பஞ்சாங்கத்தினையும் இனி எதிர்வரும் 200 வருட பஞ்சாங்கத்தினையும் தன்னுள் கொண்டுள்ளது. ஜோதிடர்கள் மற்றும் ஜோதிட ஆராச்சியாளர்கள், ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவர்கள் பயன்படுத்தும்வண்ணம் வடிவமைக்கப்பட்ட சாப்ட்வேரின் முகப்பில் மற்றும் அதனூடு பெற்றுக்கொள்ளக்கூடிய சகல ப்ரிண்களிலும் உங்கள் விருப்பப்படி உங்கள் பெயர், உங்கள் ஜோதிடநிலைய பெயர், உங்கள் முகவரி, உங்கள் தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் விபரம் பதித்து தரப்படும். இதனால் உங்கள் பெயரிலேயே இந்த சாப்ட்வேர் சகல பணிகளையும் செய்யும். இது தொழில்முறை ஜோதிடர்களிற்கு மிகவும் பயன்மிக்கதாக இருக்கும். 3 வருட பூர்த்தியினை முன்னிட்டு தற்போது சலுகையில் இதன்விலை 3500/= ஆகும்
புதிதாக சாப்ட்வேர் வாங்குபவர்கள் கவலைப்பட தேவையில்லை, அவர்களிற்கு இந்த update உடன் சாப்ட்வேர் வழங்குவேன். இனி சாப்ட்வேர் இந்த விலை 4500 ரூபா ஆக மாற்றப்படுகிறது. ஏற்கனவே Pre-Booking செய்தவர்களுக்கும் தள்ளுபடி விலையில் சாப்ட்வேர் தருகிறேன் என்று நான் வாக்குறுதி அளித்தவர்களுக்கும் மட்டுமே சாப்ட்வேரின் விலை 3500 ரூபாயாக இருக்கும். உங்களுக்கு தெரியாதது இல்லை. ஜாதகம் மட்டும் பார்க்கும் வசதி கொண்ட தமிழ் Astro-Vision சாப்ட்வேரே குதிரை விலை போகிறது. Statics இன் படி Astro-Vision சாப்ட்வேர் சாப்ட்வேர் வாங்குவோர் தற்போது மிக மிக குறைந்து விட்டனர். அது MNC கம்பெனி, ஊழியர்களுக்கு வேறு சம்பளம் வழங்க வேண்டும். அந்த இந்த செலவுகள் அனைத்தையும் சாப்ட்வேர் விற்று எடுக்கவேண்டிய நிலையில் அவர்கள் இருப்பதால் குதிரை விலையில் சாப்ட்வேர் கொடுக்கின்றனர்.
அனைவரிடமும் தமிழ் ஜோதிட சாப்ட்வேர் இருக்க வேண்டும் அதே சமயம் ஜாதகம் முதல் ஜாமக்கோள் ஆருடம், டார்ட், பஞ்ச பட்சி, சோழி பிரசன்னம், கர்மா பரிகாரம், எண்கணிதம் எனும் numerology, பெயர் பட்டியல், பிருகு நாடி, திருமணப்பொருத்தம், சந்திர நாடி, கேபி ஜோதிட முறை, தாம்பூல பிரசன்னம், மருத்துவ ஜோதிடம், தேவ பிரசன்னம், ராசிக்கல் எனும் Gems எனும் 16 வித ஜோதிடம் பார்க்கும் சாப்ட்வேரும் மக்களிடம் இருக்க வேண்டும் என்று மிகக்குறைந்த விலையில் வெறும் 4500 இற்கு சாப்ட்வேர் வழங்குகிறேன். மிகவும் இயலாதவர்கள் மட்டும் 3500 ரூபாயிற்கு என்னிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். இதுபோல குறைந்த விலையில் PAID-VERSION தமிழ் ஜோதிட சாப்ட்வேர் நீங்கள் எங்கும் வாங்க முடியாது. இந்த அரிய சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி உங்கள் சாப்ட்வேர் பிரதியினையும் லைசென்ஸ் கீ இனையும் பெற்றுக்கொள்ளுங்கள். சாப்ட்வேர் விலை எதிர்காலத்தில் இன்னும் கூட வாய்ப்புள்ளது.
இந்த அப்டேட் இல் என்ன உள்ளது?
  •  நமது சாப்ட்வேரில் உலகம் பூராகவும் உள்ள 5621 நகரங்களின் அட்சரேகை தீர்க்கரேகை(Latitude Longitude) விபரங்கள் இதில் ஏற்கனவே உள்ளது. தற்போது இந்த அப்டேட் இல் மேலும்  மேலும் 120 நகரங்களின் அட்சரேகை தீர்க்கரேகை(Latitude Longitude) விபரங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
  •  C.I (Calculation Integration) மேம்படுத்தப்பட்டுள்ளது.
  •  கவர்ச்சிகரமான GUI சேர்க்கப்பட்டுள்ளது.
  •  சாப்ட்வேரின் அளவு சற்று குறைக்கப்பட்டு உள்ளது
  •  பயன்படுத்தும் ராம் இந்த அளவு குறைக்கப்பட்டுள்ளது.
  •  Multi-Threading வசதி சேர்க்கப்பட்டு உள்ளது.
  •  பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளது.
  •  மைக்ரோசாப்ட் வின்-சப்ரெஸ்ஸட் கூறு இணைக்கப்பட்டு உள்ளது.

நான் வழங்கிய சாப்ட்வேரின் ஏதாவது அம்சங்கள் மேம்படுத்த வேண்டும் என்று நீங்கள் கருதினால் கூறுங்கள், அவற்றை மேம்படுத்தி அடுத்த அப்டேட் இல் உங்களுக்கு தருகிறேன்.
இந்த update இனை எனது Facebook Inbox மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ பெற்றுக்கொள்ள முடியும்.


செவ்வாய், 30 ஜூலை, 2019

திருக்கணித தமிழ் ஜோதிட சாப்ட்வேர்.

இப்போது உங்களுக்கே தெரியும் நல்லநேரம் பார்ப்பது முதல் நல்லசட்டை போடும் நேரம் பார்ப்பது வரை ஜோதிடம் பரவி வளர்ந்துள்ளது. இப்போது அடிப்படை ஜோதிடஞானம் அனைவரிடமும் உள்ளது. ஆனால் பஞ்சாங்கள் எடுத்து ஜாதகம் கணிக்க பலரால் இயலுவதில்லை. அதற்கு முக்கியமான ஒரு காரணம் வேகமான உலகத்தில் நேரம் என்பது மிகவும் சிக்கனமானது. நீங்கள் அடிப்படை ஜோதிடம் தெரியாவிட்டால்கூட ஏன் நீங்கள் ஒரு ஜெராக்ஸ் கடை வைத்து நடத்துபவர் எனின்கூட இந்த ஜோதிட சாப்ட்வேர் மூலம் உங்களிடம் வரும் வாடிக்கையாளருக்கு ஒரு பக்க ஜாதக கட்டம் மற்றும் அடிப்படை விபரம் பிரிண்ட் செய்வது முதல் தசாபுத்தி பலன்கள், ஷட்பலம், சோடச சக்கரங்கள். பாலாபலன்கள், வாழ்க்கையில் நாம் செய்யவேண்டிய மாற்றம் வரை உள்ள என மிக விரிவான 160 பக்க அறிக்கையினை பிரிண்ட் செய்து கொடுக்கலாம். இது உங்களுக்கு ஒரு மேலதிக வருமானத்தை ஏற்படுத்தி தரும். இதில் அனைத்தையுமோ அல்லது நீங்கள் விரும்பியதை மட்டுமோ தெரிவு செய்து பிரிண்ட் எடுக்கும் வசதியும் உண்டு. கலர்ப்ரிண்ட் கூட எடுக்கலாம். மேலும் நீங்கள் உள்ளீடு செய்யும் ஜாதகங்களை சேமித்து வைத்துக்கொள்ளும் வசதியும் செய்து தரப்பட்டு உள்ளது எனவே நீங்கள் மீண்டும் மீண்டும் பலமுறை ஒரு ஜாதக விபரங்களை உள்ளீடு செய்ய தேவையில்லை மேலும் ஜோதிட ஆராச்சியாளர்களிற்கு உதவும் வண்ணம் பல சிறப்புக்கள் உள்ளன. பாகை முறையில் அறிதல், லைவ் ரிலே போன்ற அம்சங்களும் உள்ளன. இதுதவிர ஒவ்வொரு ஜோதிடப்பலனுக்குமான காரணம் அதிலேயே சொல்லப்படுவதால் இதன்மூலம் ஜோதிட ஆர்வலர்கள் உங்கள் ஜோதிட அறிவையும் நீங்கள் மேம்படுத்திகொள்ளலாம்.

ஜாதகம், ஜாமக்கோள் ஆருடம், டார்ட், பஞ்ச பட்சி, சோழி பிரசன்னம், கர்மா பரிகாரம், எண்கணிதம் எனும் numerology, பெயர் பட்டியல், பிருகு நாடி, திருமணப்பொருத்தம், சந்திர நாடி, கேபி ஜோதிட முறை, தாம்பூல பிரசன்னம், மருத்துவ ஜோதிடம், தேவ பிரசன்னம், ராசிக்கல் எனும் Gems எனும் 16 வித ஜோதிடம் பார்க்கும் இந்த சாப்ட்வேர் ஜோதிட அபிமானிகள் (ஜோதிட ஆர்வலர்கள், இளநிலை ஜோதிடர்கள்) மற்றும் தொழில்முறை ஜோதிடர்கள் பயன்படுத்தும்வண்ணம் வெளிவருகின்றது. இது கடந்த 200 வருட பஞ்சாங்கத்தினையும் இனி எதிர்வரும் 300 வருட பஞ்சாங்கத்தினையும் தன்னுள் கொண்டுள்ளது. ஜோதிடர்கள் மற்றும் ஜோதிட ஆராச்சியாளர்கள், ஜெராக்ஸ் கடை வைத்திருப்பவர்கள் பயன்படுத்தும்வண்ணம் வடிவமைக்கப்பட்ட சாப்ட்வேரின் முகப்பில் மற்றும் அதனூடு பெற்றுக்கொள்ளக்கூடிய சகல ப்ரிண்களிலும் உங்கள் விருப்பப்படி உங்கள் பெயர், உங்கள் ஜோதிடநிலைய பெயர், உங்கள் முகவரி, உங்கள் தொலைபேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் விபரம் பதித்து தரப்படும். இதனால் உங்கள் பெயரிலேயே இந்த சாப்ட்வேர் சகல பணிகளையும் செய்யும். இது தொழில்முறை ஜோதிடர்களிற்கு மிகவும் பயன்மிக்கதாக இருக்கும். இதன்விலை 3500/= ஆகும். 3500 என்பது தொழில்முறை ஜோதிடர்களிற்கு பெரியதல்ல. நான் ஜோதிட சாப்ட்வேர் பதினைந்தாயிரம் ரூபாயிற்கு வாங்கியவர்களையும் பார்த்துள்ளேன். தொழில்முறை ஜோதிடர்களை பொறுத்தவரை அவர்கள் தொழிற்கான ஒரு சிறு முதலீடு இது. இந்த சாப்ட்வேர் ஒருமுறை வாங்கினால் வாழ்நாள் முழுவதும் உங்கள் கணினியில் பயன்படுத்தும் வண்ணம் இருக்கும். இப்போது வெறும் சாப்ட்வேர் ஜோதிட அறிக்கையினையினையே 100இற்கு வாங்கவேண்டி உள்ளது. விலைக்கு கிடைக்கும் சகல ஜோதிட சாப்ட்வேரிலும் பார்க்க குறைந்த விலையில் நிறைந்த வசதிகளில் வந்துள்ளது இந்த சாப்ட்வேர்.

ஆம் இது ஜோதிட அபிமானிகளுக்கும் தொழில்முறை ஜோதிடர்களிற்கும் ஜோதிட ஆராச்சியாளர்களுக்குமான ஒரு அற்புதமான தமிழ் ஜோதிட சாப்ட்வேர். இந்த offer இனை பயன்படுத்தி பெற்றுக்கொள்ளுங்கள். பணம் செலுத்திய தினம் அன்றே சாப்ட்வேர் மற்றும் உங்களுக்கான பிரத்தியேகமான லைசன்ஸ் கீ உங்கள் கைகளிற்கு கிடைக்கும். அப்புறம் அதனை நீங்கள் வாழ்நாள் பூராக உங்கள் கணினியில் பயன்படுத்தமுடியும். நீங்கள் கணினி புதிதாக மாற்றப்போகிறீர்கள் என்றால் கூட உங்கள் பழைய லைசன்ஸ் கீ மீள பெற்றுக்கொண்டு புதிய லைசன்ஸ் கீ அனுப்பி வைக்கப்படும்.

வழமையான பழைய GUI போன்று இல்லாமல் modern GUI-ல் சொப்ட்வெயர் உள்ளதால் அழகாக உங்கள் கணினியில் தோன்றும். கீழே உள்ள படங்களை அவதானித்தால் உங்களுக்கே தெரியும் அதில் Your Name மற்றும் Your Details காணப்படும் இடங்களில் உங்கள் சொந்த விபரங்களை பதிப்பித்து தருவோம். எனவே இதனூடு பிரிண்ட் செய்து உங்கள் வாடிக்கையாளர்களிற்கு கொடுக்கும் சகல பிரிண்ட்களிலும் உங்கள் விபரம் இருப்பதால் உங்கள் தனித்துவம் உறுதிப்படுத்தப்படும். இதனை விட துல்லியமாகவும் இவ்வளவு சலுகைக்கு மற்றும் வசதிகளுடனும் பயன்படுத்தும் வண்ணம் வேறு எந்த ஜோதிட சாப்ட்வேரும் இல்லை. இது தொடர்பாக இணையத்தில் தேடினால் உங்களுக்கே தெரியும்.

இந்த சாப்ட்வேர் வாங்க விரும்போவர்கள் facebook inbox இலோ அல்லது Hariram1by9@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும்.

இந்த 16 அம்சங்களில் ஒன்றான திருமணம் பொருத்தம் பார்க்கும் பகுதியின் சிறப்பம்சங்கள் படங்களில் உள்ளன. இதன் திரையில் பொருத்தம் பார்க்கும் ஆண், பெண் ஜாதகங்களை அலசி நட்சத்திர பொருத்தங்கள், தோஷங்கள், தசா சந்திப்பு, பொருத்த வீதம், பரிந்துரைகள் அத்துடன் திருமணம் செய்யலாமா வேண்டாமா என்ற இறுதி முடிவு ஆகியவற்றுடன் போலும் பல அம்சங்களை காட்டும். அத்துடன் திருமணம் பார்க்கும் இந்த மாதிரி அறிக்கையினை திரையிலும் பார்க்க முடியும். பரிகாரங்களுடன் பிரிண்ட் செய்யக்கூடிய வகையில் 16 பக்க வடிவிலும் பெற்றுக்கொள்ள முடியும். தவிர 2 மொடேல்களில் பார்க்கலாம். வீட்டில் இருந்தபடியே பொருத்தம் உள்ளதா? திருமணம் செய்யலாமா? என அறிந்து கொள்ளலாம்.














இந்த சாப்ட்வேர் வாங்க விரும்போவர்கள் facebook inbox இலோ அல்லது hariram1by9@gmail.com என்ற எனது மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளவும்.
(இந்த பதிவை இரண்டிற்கும் மேற்பட்ட இடங்களில் ஷேர் செய்யும் அனைவருக்கும் 10% கழிவு அவர்கள் சாப்ட்வேர் வாங்கும்போது கிடைக்கும். இந்த விசேட 10% விலைக்கழிவு முதல் சாப்ட்வேர் வாங்கும் 10 பேருக்கு மட்டுமே வழங்கப்படும். சாப்ட்வேர் வாங்கும் போது நீங்கள் இப்பதிவை ஷேர் செய்த screenshot அனுப்புதல் வேண்டும்..)


புதன், 6 பிப்ரவரி, 2019

மூன்றாம் பிறை 🌙

ஆயுளை அதிகரிக்கும் மூன்றாம்பிறை தரிசனம்... பார்க்க தவறாதீர்கள்!! 
சந்திர தரிசனம் !!
🌙 மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.
🌙 மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைத் தான் சிவன் தன் முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தால் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.
மூன்றாம் பிறை பிறந்த கதை :
🌙 ஒருமுறை விநாயகப் பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பின் விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார். எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் பார்க்க சென்றார். சந்திரன் ஒரு முழுவெண்மதி என்பதால், விநாயகரின் திருவுருவை பார்த்து பரிகசித்தான்.
🌙 இதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான் உன் அழகு இன்று முதல் இருண்டு உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள் என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது. பின் சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தியதுடன், சிவனை நோக்கி கடும் தவம் இருந்து பழையபடி முழுவெண்மதியை பெற்றான். முழுமதி நாளில் சந்திரனை வழிபடுவது சந்திர தரிசனம் ஆகும்.
மூன்றாம் பிறையை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் :
🌙 சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.
🌙 மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.
🌙 மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது, மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.
🌙 சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்...

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

ஆன்மீக ஜோதிட வழிகாட்டி பதிவு.

மிகவும் முக்கியமான பதிவு!!!
இதுவே அடிப்படை... இதுவே உயர்நிலை...
ஏன் ஜாதகம் பார்க்க வேண்டும்?
இரண்டே இரண்டு விடயம்தான்...
• எது நமக்கு கிடைக்கும்.. எது நமக்கு கிடைக்காது என்று அறிந்து கொள்வது மிகவும் அவசியமானது. ஏனெனில் கிடைக்காத ஒன்றிற்காக நாம் போராட வேண்டியநிலை ஏற்படாது. எது ஜாதக பிரகாரம் கிடைக்காதோ; அது நிச்சயமாக கிடைக்காது. நான் என்னிடம் ஜாதகம் பார்ப்பவர்களிற்கு உறுதியாக கூறிவிடுவேன் அதாவது இது கிடைக்கும் அல்லது கிடைக்காது என்று.... ஏனெனில் கிடைக்காத ஒன்றிற்காக செய்யும் வீணான முயற்சிகளை விட்டுவிட்டாலே வாழ்க்கை வெற்றியில் சென்றுவிடும். கிடைக்கும் என்ற விடயத்தில் காலநேரசூட்சுமம் ஊடாக அருமையாக அடைய முடியும்... சொந்தவீட்டு யோகம் இல்லாத ஒருவருக்கு உங்களிற்கு இந்த யோகம் இல்லை என அறிவுறுத்தியும் அவர் கேளாது தனது வாழ்க்கையில் தன்னை ஒறுத்தி பணம் சேர்த்து வீடுவாங்கும் முயற்சியில் ஏமாந்து பணம் இழந்தவர்களை எனக்கு தெரியும். இதேபோலவே வெளிநாடு மற்றும் சொந்தமாக குழந்தை கிடைக்காத நிலை. இவர்களிற்கு ஜோதிடர்களாகிய நாம் சரியாக வழிகாட்டிவிட்டாலே அவர்கள் அதை ஏற்றுக்கொண்டால் அதற்கமைய தம்வாழ்வை மாற்றியமைத்து உயர முடியும்...
• இரண்டாவது விடயம் என்னவெனில்; எமக்கு என்ன நடக்க போகின்றது என அறிந்து நம்மை பக்குவப்படுத்தும் நிலை வரும். மற்றும் “எனக்கு ஏன் இப்படி நடந்தது” என்ற கேள்விக்கும் விடை கிடைக்கும்...
இன்னும் ஒரு விடயம் உள்ளது....
பரிகாரம் எந்தளவுக்கு வேலைசெய்கிறது என்பதனை நிர்ணயிக்க முடியாது. ஆனால் மனம் ஆன்மீக வழி சென்று; பரம்பொருளான இறையருளை பெற்று தரும். அவர் கருணை, அன்பு கிடைக்கும்.... ஜாதகம் உங்கள் நிலையறிந்து உங்களை எவ்வழியிலும் நல்வழிப்படுத்தவே ஜோதிடர்கள் வாயிலாக உங்களுக்கு உரைக்கப்படுகிறது. உங்கள் கிரகங்கள் என்ன சொல்கிறது என பார்த்து அதுசார்ந்த முற்பிறப்பு தவறால் இந்த பிறப்பில் தண்டனை அனுபவிக்கின்றீர்கள் என உணர்ந்து செய்த தவறிற்கு பரிகாரம் செய்வதும் இனி நல்ல பாதையில் செல்வது உங்கள் கையிலே... இதுவே உங்களை இனி காக்கும்... இல்லாவிட்டால் இறைவன் மீதான அதீதஅன்பினால் அவரால் உங்கள் பாவங்கள் தீர்க்கப்பட வேண்டும். அவ்வளவு தூயபக்தி இக்கலியில் ஏற்படுவது மிகமிக அரிது. ஏற்பட்டாலும் இறைவனின் சோதனைகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர் அருள் பரிபூரணமாக கிடைக்கும். ஆகவே இயலுமானவரை தர்மவழி சென்று அகத்தில் இறைவனை இருத்தி உத்தமர்களாக வாழ இந்த ஜோதிட கலையினை உபயோகப்படுத்துவீர்களாக...
நன்றி;
தெய்வீகஜோதிடர் ஹரிராம்.

மகாபெரியவாளும் ஒரு ஜோஸியரும்

ஜோஸ்யர் ஒருத்தர் பெரியவாளை தரிசிக்க வந்தார். “பெரிய குடும்பம், வருமானம் போறலை, ஜோஸ்யம் சொல்லறதிலே வரும்படி ரொம்ப கொறைச்சல், ரொம்ப கஷ்டம்..” என்று முறையிட்டார்.

“நீ…. ஒங்கஅப்பா இருந்த பூர்விக கிருஹத்லதானே இருக்கே?”

"இல்லே….அதுல அண்ணா இருக்கான். அதுக்கு மேற்கு பக்கம் ஒரு ஆத்துல இருக்கேன்”

"நீ அங்கே இருக்க வேணாம். பூர்விக க்ருஹத்துலேயே கிழக்கு பக்கத்துல பழையமாட்டுகொட்டாய் இருக்கோன்னோ? அந்த எடத்ல ஒரு குடிசை போட்டுண்டு இரு. பரம்பரையா அம்பாளை பூஜை பண்ணின குடும்பம். மாட்டுக் கொட்டகைல இருங்கோ. அதோட, இன்னொண்ணும் கேளு. எல்லா க்ரஹங்களையும் நன்னா. திட்டறயோன்னோ ! ….உங்க ஜாதகத்ல குரு நீசன், சனி பாபி, புதன் வக்கிரம்!…இப்பிடியெல்லாம் வாயால சொல்லக் கூடாது".

"குரு…ங்கறது பெரிய கிரகம். தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபம்….அவரைப் போய்நீசன், பாபி, வக்கிரம்..ன்னெல்லாம் திட்டக் கூடாது. சனி, சூர்யனோட புத்திரன். ஈஸ்வரபட்டம் வாங்கிண்டவர். அவரைப் போய் பாபிங்கறே! கிரகங்கள் சரியான எடத்ல இல்லை…..கால பலன் சரியில்லைன்னு சொன்னா போறுமே!"

"பொண்பிள்ளை ஜாதக பொருத்தம் பாக்க வரவா கிட்டே “பொருத்தமில்லை” ன்னு நிர்தாட்சண்யமா சொல்ல வேணாமே! பொண்ணுக்கு விவாக காலம் வர நாளாகும், பையனுக்கு புத்திர பாக்கியம் கேள்விக் குறிங்கற மாதிரி சொல்லலாம். முப்பது வயசாகியும் நெறைய பொண்கள் கல்யாணம் ஆகாம இருக்கா. அப்பிடிப்பட்டவாளுக்கு வரன், ஜாதகபொருத்தம் பாக்க வந்தா, முடிஞ்சவரை நிராகரிக்காம பதில் சொல்லணும்".

"கல்யாண விஷயத்ல, பொண், பையன் ஜாதகப் பொருத்தத்துக்கு ஜாஸ்தி importance குடுக்காம, குலம், கோத்ரம், மனப் பொருத்தம் இருந்தா போறும். பழங்காலத்ல ஜாதகப்பொருத்தம் அவ்வளவு முக்யமா இருந்ததில்லை”.

ஜோஸ்யர் திருப்தியோடு, “இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்” என்று சொல்லி பிரசாதம் வாங்கிக் கொண்டு போனார்.

கிரகங்கள் வெறும் சடப்பொருட்கள் அல்ல..
சனி ஈஸ்வரன்...

பலரது ஜாதகங்களை பார்க்கும் போது அவர்களிற்கு குலதெய்வம் குற்றம் இருக்கிறது... ஆகவே அனைவருக்கும் பொதுவான ஒரு பதிவு...

பெளர்ணமி அன்று உங்கள் வீட்டில் உணவு சமைத்து அதனை கவனமாக உங்கள் குலதெய்வ கோவில் கொண்டு சென்று அங்கு வைத்து வாழையிலை அல்லது சில்வர் பாத்திரத்தில் நீங்கள் வீட்டில் இருந்து எடுத்து சென்ற உணவை படைத்து வழிபட்டு வாருங்கள். (எவர்சில்வர் பாத்திரத்தில் படைக்க கூடாது.) இதன்போது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கோவில் செல்ல வேண்டும். கூட்டுகுடும்பம் என்றால் உத்தமம்...

ந ம சி வா ய ௐ

சரும பிரச்சனைகள் யாரிற்கு ஏற்படும்?


அறிமுகம் :- அலர்ஜி எனும் ஒவ்வாமை, பொடுகு, எக்சிமா, அதிக முகப்பருக்கள், தோல்/உதடு வெடிப்பு, வரட்சி. எனது ஆய்வு முடிவுகளை இங்கு உங்கள் அனைவருக்கும் தருகிறேன்...
1. இந்த skin problemற்கு முக்கிய காரணம் ஒருவர் ஜாதகத்தில் ரா/கே அமைந்திருக்கும் நிலையே ஆகும். இவர்களின் ஆதிக்கத்தில் ஜாதகம் இருந்தால் நிச்சயமாக ஜாதகரிற்கு சரும பாதிப்பு ஏற்படும். உதாரணமாக நாகதோசத்தாரிற்கு...
2. புதன் ராகு அல்லது கேதுவின் பார்வை பெற்றால் அல்லது சேர்ந்து இருந்தல். (ரா/கே தாம் இருக்கும் இடத்தில் இருந்து 3, (6), 11ம் இடத்தினை பாதிக்கும். இதனையே நான் இங்கு “பார்வை” என கூறுகிறேன்.)
3. செவ்வாய் சனி சம்பந்தம் அல்லது செவ்வாய் புதன் சம்பந்தம்...
4. சனி/புதன் நீச்சம் பெற்று பாவகிரகங்களால் பாதிக்கப்பட்டிருத்தல்...
5. ஆறாமிடத்துடன் பாம்பு, சனி, புதன் சம்பந்தம்.

பாரம்பரிய ஜோதிடத்தில் கிரகசம்பந்தம் எனும் வார்த்தைக்கு பின்வரும் 5 நிலைகள் (மட்டுமே) பொருந்தும்.
1. கிரகத்தின் பார்வை பெறுவது..
2. ஒரு கிரகத்தின் கேந்திரத்தில் இருப்பது..
3. திரிகோணத்தில் இருப்பது..
4. இருவரும் தங்களின் வீடுகளை பரிமாறிக்கொள்வது.. (பரிவர்த்தனை)
5. இருகிரகங்களும் ஒன்றாக இணைந்திருப்பது..
இந்த ஐந்தையும் தவிர; ஒரு கிரகமானது இன்னொரு கிரகத்துடன் எந்தவகையிலும் தொடர்புறமாட்டாது. இதனையே ஜோதிட மூலநூல்களும் கூறுகின்றன...
வழிபாட்டிற்குரிய தெய்வம் அவரவர் ஜாதகம் பொறுத்தது. தோல்வியாதிகள் உள்ளவர்கள் அதிகமாக தங்கள் உணவில் புதினா எடுத்து கொள்ளுங்கள்...
மேலும்  வரிகள்,
சில கடுமையான தோசங்கள் பரிகாரத்திற்கு கட்டுப்படமாட்டாது. இதற்கு என்னதான் ஹோமம், யாகம், தானதர்மம் செய்தாலும் அது பலன் தராது என்பதை அறிய வேண்டும். நீங்கள் முற்பிறவிகளில் செய்ய பாவங்களை அனுபவிக்கவே இறைவன் தற்போது இந்தநிலையை அளித்துள்ளான். இவை அனுபவித்து தீர்க்க வேண்டிய கர்மாக்களே... ஒரு ஜோதிடரிற்கு; எதற்கெல்லாம் பரிகாரம் கொடுக்க வேண்டும் என்று தெரியும். எல்லாத்திற்கும் பரிகாரம் பரிகாரம் என்று கேட்காதீர்கள்! உப்பு தின்றவன் தண்ணீர் குடித்தே தீர வேண்டும். பரிகாரமும் ஏற்கனவே ரிஷிகளால் சொல்லப்பட்ட பரிகாரங்களே பலிக்கும். நாம் நினைத்ததுபோல எமது அறிவிற்கு செய்யும் பரிகாரம்?? எல்லாம் பலிக்காது...
நன்றி;
ஜோதிடர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஹரிராம் தேஜஸ்

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.