ஜாலியா படிங்க... சிந்தியுங்க (பதிப்பு எண் 2.1)
அவர் புதிதாக குடிவந்த பக்கத்து வீட்டுக்காரர். காலையில் வாக்கிங் போய்விட்டு வந்தவனை வழி மறித்து..
"சார், குட் மார்னிங்..வீடு காலி பண்ணிட்டு வந்தபோதே பழைய மளிகை சாமான்களையும் காலி பண்ணிட்டு வந்துட்டோம். இந்த ஏரியா புதுசு.. பக்கத்துல கடை எங்கே இருக்குனு தெரியலை.."
"சொல்றேன்.. இந்த தெரு இருக்கில்லே.. இது முனையிலே ஒரு கடை இருக்கு..பேரே தெரு முனை கடை தான்.. நாங்க சுருக்கமாக தெமுகன்னு சொல்லுவோம்.."
"நல்ல கடையா சார்... நம்பி வாங்கலாமா..?"
"சரக்கெல்லாம் பழசா இருக்கும்..ஏகப்பட்ட கலப்படமும் இருக்கும்..ஆனா கவர்ச்சிகரமா விளம்பரங்கள் இருக்கும்..இப்போ புதுசா ஒரு பீகாரி பையனை கூட வாசல்ல உக்கார வெச்சு போற வர்றவங்களை உள்ளே இழுக்க பாக்கறாங்களாம் .. இதுபோக பக்கத்துல இருக்கிற சாமி சிலையை திருடி வீட்டுக்குள்ள வைச்சு இவங்க குடும்பம் மட்டும் கும்பிட்டுகிறங்கலாம், அடுத்தவங்க என்க சாமிசிலைனு கேட்பாங்கனு சாமின்னு ஒன்னும் இல்லை பகுத்தறிவு, பன்னாடை அறிவுனு பேசிட்டு திரிவாங்க, அடிமட்ட கடைப்பசங்க ஓசியில ஊரூரா ஏதும் கிடைக்குதான்னு அலைவாங்க, யாரும் தரமாட்டேன்னு சொல்லிட்டா அடிக்கவும் தயங்கமாட்டாங்க, காட்டுமிராண்டி பயலுக "
"கடை முதலாளிட்ட சொல்லலாமே?"
"அவங்க இவனுங்களை மிஞ்சின திருட்டு பசங்க, குடும்பமா சேர்ந்து ஊர் சொத்தை ஆட்டைய போட்டு தின்னுட்டு இருக்காங்க"
"ஐயையோ.. என்ன இப்படி சொல்றீங்க.. வேற கடை எதுவும் இல்லையா?"
"ஏன் இல்லாம.. அதுக்கு பக்கத்துலேயே இன்னொரு கடை இருக்கு..அதுக்கு பேரு அடுத்த தெரு முனை கடை.. அடுத்த தெருவோட முக்குல இருக்கிறதால இந்த பேரு.. நாங்க அதெமுகன்னு சொல்லுவோம்.."
"இங்கே எப்படி சார், சரக்கெல்லாம் சுத்தமா இருக்குமா..?"
"சரக்கெல்லாம் இதுலேயும் ஏறக்குறைய தெமுக மாதிரி தான் இருக்கும்.. அங்கிருந்து பிரிஞ்சு வந்து நடத்தற கடை தானே..? ஆனா தெமுக விட இங்க எவ்வளவோ பரவாயில்ல.. "
"ஏன் சார் பிரிஞ்சு வந்தாங்க..?"
"அது பெரிய கதை சார்.. அண்ணாசாமின்னு ஒரு பெரியவர் ஆரம்பிச்ச கடை அது.. அவர் போய் சேர்ந்ததும் காளிங்கர்ன்னு கடைல வேலை செஞ்சவர் கடையை பிடிச்சுக்கிட்டார்.. இப்ப அவர் பிள்ளை ஸ்லோவின் தான் பார்த்துக்கறார்.. இலங்கையில் பிறந்த ஒரு தங்க மனிதர் M.G.ராமநாதன்னு ஒரு நண்பர் உதவியோட தான் கடை காளிங்கர் கைக்கு வந்தது.. கணக்கு வழக்குல காளிங்கர்ன்னு கள்ளத்தனம் பண்றதால அவங்களுக்குள்ள சண்டை.. அதனால ராமநாதன் பிரிஞ்சு வந்து அதெமுக கடை ஆரம்பிச்சுட்டார்.."
"ஸ்லோவின்னா..? மெதுவா ஜெயிக்கிறவர் போலிருக்கு.. அதிருக்கட்டும் இதை தவிர வேற கடை எதுவும் இல்லையா..?"
"இருக்கு..காளிங்கர் கடையிலே எடுபிடியா இருந்த தம்பு சாமி கடையை ஆட்டையை போட பார்த்தான்.. கல்லால கை வெச்சுட்டான்னு காளிங்கர் விரட்டி அடிச்சுட்டார்.. தசான்னு பேரை சுருக்கிட்டு ராமநாதன் மாதிரி தனியா கடை போடறேன்னு போனாரு.. நாக்கு தள்ளி போயி இப்போ காளிங்கர் கடை சரக்கை வாங்கி..ரோட்டோரமா கூறு போட்டு சின்ன அளவுல வியாபாரம்.."
"வேற..?"
"சைமன் பாண்டின்னு ஒரு பய ரோட்டுல கிடைக்கிற 'புளி'யம்பழத்தை மட்டும் ஒரு பெட்டிக்கடைல அப்பத்தாவை உக்கார வெச்சு வித்துக்கிட்டிருக்கான். அவன் கடைப்பக்கம் வந்துட்டு வாங்கலேன்னா கெட்ட வார்த்தையிலேயே ஏசுவான்.. "
"ஐயோ...."
"இப்போ புதுசா மேக்கப் முனுசாமி ஒரு கடையை திறந்திருக்கார். அதுல என்ன சரக்கு இருக்குன்னு யாருக்கும் தெரியாது.. ஏதானும் கேட்டா நரை தளர்ந்து வழக்கொழிந்து வெற்றுபதேசம் ஊருக்கு மொழிந்து வழி மறந்து மாய சூழலில் கானல் நெருப்பில் கவிப்பெரும் காப்பியம் அதுவே தாளிக்க பெருங்காயம்னு ஆரம்பிச்சார்னா சிண்டை பிச்சுக்கிட்டு ஓடி வந்துடுவோம்.."
"சைமனே தேவலாம் போலிருக்கே.. ஏசுறதோட விட்டுடுவான்.. வேற ஏதாவது..?"
"வடக்கு தெருவில அப்பா பிள்ளை தாஸ் & சன்ஸ்ன்னு ஒரு கடை வெச்சிருக்காங்க.. அவங்களும் இந்த ரெண்டு கடை சரக்கை தான் மாத்தி மாத்தி வாங்கி விப்பாங்க..தனி கடை போட்டு பார்த்தாங்க எடுபடலை.. வடக்குல நாலஞ்சு வீட்டுல மட்டும் வாங்குவாங்க.. மத்த யாரும் அவங்க கடைக்கு வர்றதில்லை.."
"சுத்தமான பொருள் எங்கேயும் கிடைக்காதா?"
"ஒரு கடை இருக்கு.. தாமரை ஸ்டோர்ஸ்னு வடநாட்டு கடை பிரான்ச் ஒண்ணு ஆரம்பிச்சாங்க.. நல்ல தரமான பொருள் இருக்கும்.. ஆனா அங்கே பொருள் வாங்கினா பைத்தியம் பிடிச்சுடும்னு புரளி கிளப்பி அந்த கடை பக்கம் யாரும் போகாம பார்த்துகிறாங்க.. இப்போ அவங்களும் அதெமுக கடை கூட பார்ட்னர்ஷிப்ல ஓடிக்கிட்டிருக்காங்க.."
"சரி..இப்போ அவசரத்துக்கு சாமான் வேணும்.. தெரு முனை கடை தானே பக்கமா இருக்கு..பொண்ணை அனுப்பி வாங்கிக்கறேன்..."
"முக்கியமான விஷயத்தை சொல்லலியே.. அதெமுக கடை சரக்கு தான் மட்டம்..ஆனா போனா பத்திரமா வீடு திரும்பிடலாம்.. தெமுக கடைக்கு போனா வளையலோ வாட்ச்சோ சமயத்துல பொண்ணே காணாம போக வாய்ப்புண்டு.. அப்புறம் உங்க இஷ்டம்"
என் பணி முடிந்தது..
நீங்க எந்த கடைக்கு போகணும்ன்னு முடிவு பண்ணிட்டீங்களா?.. இன்னிக்கு ஆறாம் தேதி நாம் அனைவரும் கண்டிப்பாக நமக்கான கடையினை தெரிவு செய்யும் நாள். நம் இன உணர்ச்சினை தவறாக தூண்டி, பித்தலாட்டம் பண்ணும் கடையினை தவிர்ப்போம்!