ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

புதன், 25 பிப்ரவரி, 2015

விவாகப்படலம் (விவாக திருமண விதிகள்)

திருமணத்திற்கான ஆய்வின்போது,பரிசீலித்து சீர்தூக்கிப் பார்க்க வேண்டிய ஜாதக நிலைகள்.

============================================






1.) 7 ம் பாவம்

2.) 7 ம் வீட்டிலுள்ள கிரகங்கள் 

3.) 7 ம் அதிபதி

4.) 7 ம் அதிபதிக்கு இடங்கொடுத்தவன்.

5.) காரகன்- சுக்கிரன்

6 ). (பெண்ணுக்கு) கணவன் காரகன் குரு 

7). மேற்கண்ட கிரகங்களின் சாரநாதன் 

8). நவாம்சம் மற்றும் அதன் அதிபதிகள். 

9). 7 ம் வீட்டின் பதா( 7 ம் அதிபதி, லக்னத்திலிருந்து எத்தனையாவது ராசியிலிருக்கிறாரோ,அதிலிருந்து 7 வது ராசி 7 ம் பதாவாகும். உபபதா 12 ம் அதிபதியை வைத்துக்கணக்கிடுவதாகும். ) 


10) மற்ற அம்சங்களாவன * 2 ம் அதிபதி / 2 ம் வீடு,*4 ம் அதிபதி / வீடு ,5 ம் அதிபதி / வீடு ( இயற்கையான காதல், பண்பாடு,பாரம்பரியம்,புத்திரபாக்கியம்,வம்சவிருத்தி ஆகியவற்றுக்கான இடம் ) 8 ம் வீடு / அதிபதி( காம வாழ்க்கை ) 9 ம் வீடு / அதிபதி ( பாக்கியஸ்தானம் )


11.) இவை லக்னம்,ராசி மற்றும் சூரியன் நிலைகளிலிருந்து அலசப்பட வேண்டும்.


12.) 7 ல் உள்ள கிரகங்களின் தன்மைகள்

சூரியன் இணக்கமற்ற, மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை ( சுபர் பார்க்க நலம் )பொறாமைகுணமும்,அதிகாரம் செலுத்துகின்ற துணை.

சந்திரன் :- (வளர் ) விரைவில் திருமணம் நடக்கும். மகிழ்சிகரமான வாழ்க்கை,கவர்ச்சியான துணை,பொதுவான வாழ்க்கை முன்னேற்றம்,குறுகிய தூர மகிழ்வுப் பயணங்கள். தேய்பிறைச் சந்திரனெனில் விசுவாசமில்லா, உண்மையில்லா மனைவி. சுபர் பார்வை பெற கற்புள்ள,உண்மையுள்ள மனைவியமைவாள்.

செவ்வாய் :- தாமதத் திருமணம், ஆரோக்கியமற்ற, வழக்கு விவகாரங்கள் அல்லதுதுணை மரணம். பாசமிக்க, காமவுணர்வு மிக்க துணை. செவ்வாய் சுயவீட்டில் இருக்க, குரு பார்க்க அல்லது கடகத்திலிருக்க கேடில்லை எனலாம்.

புதன் :- ( பலம்மிக்க ) புத்திகூர்மையுள்ள, கலையுணர்வுள்ள, அதிர்ஷ்டமிக்க, மற்றும் செல்வ வளம்மிக்க துணை அமையும். ( பலமற்ற ) இணக்க மற்ற,மகிழ்ச்சியற்ற மண வாழ்க்கை.

குரு :- உயர்குடியில் பிறந்த, அதிர்ஷ்டமிக்க, உண்மையுள்ள, தாராளகுணம கற்புநிலை தவறாத, பொதுவான முன்னேற்றமும்,சந்தோஷமான வாழ்க்கையும் அமையும்.

சுக்கிரன் :- ( பலம்மிக்க ) காதல் மிக்க துணை, மிக உயர்ந்த முன்னேற்றமுடைய, சந்தோஷமான மற்றும் அதிர்ஷ்டகரமான புலன் சம்பந்தப்பட்ட வாழ்க்கை.பாதிக்கப் பட்ட சுக்கிரனெனில் வரம்பு மீறிய, ஒழுக்கமில்லாத துணை,சந்தோஷமற்ற வாழ்க்கை, இசைவுள்ள இல்லற வாழ்க்கையில் பாதிப்பு.

சனி :- மகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை.

ராகு :- பிரிவினை,நோயாளி, மோசமான சுபாவமுள்ள துணை.



இவற்றில் சுபர் தொடர்பு அல்லது சுயவீட்டிலுள்ள கிரகங்கள் அல்லது உச்சகிரகங்கள் மேற்சொன்ன எதிர் மறையான விழைவுகளை மாற்றிவிடுகிறது. இதைப்போலவே, நல்ல கிரகங்களின் மீதான அசுபபாதிப்பு, சுபரால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் குறைத்துவிடுகிறது.13. ஏழாமதிபதியின் நிலை :- கேந்திர /கோணங்களில் இருக்க இசைவான,ஒற்றுமைமிக்க இல்லற வாழ்க்கை.ஏழாமதி பதி 6 / 8 / 12 ல் இருக்க ஆரோக்கியமற்ற துணை மற்றும் மகிழ்ச்சியற்ற மண வாழ்க்கை. பாதகத் தன்மைகள், சுப பார்வை பெற குறையும்.14. சுக்கிரனின் நிலைபலம்மிக்க சுக்கிரன் எதிர்பாலரை கவர்ந்திழுக்கும் தன்மையை இளம் வயதிலேயே கொடுத்துவிடுகிறார். மேலும், இனிய இல்லற வாழ்க்கைக்கும ஆசீர்வதிக்கிறார்.3 / 6 / 10 / 11 ம் வீடுகளில் சுக்கிரன் இடம்பெற அல்லது சுப சுக்கிரன் 7ல் இடம்பெற திருமணத்திற்குப் பின் அதிர்ஷ்டம்.சுக்கிரன் கேந்திரத்தில் / சுய / உச்ச வீட்டில் இடம்பெற பொருள் லாபம், இனியஇல்லறத்தால் ஆசீர்வதிக்கப்படுகிறார் மற்றும் எல்லா வகையான வாழ்க்கைசுகங்களையும் அள்ளித்தருகிறார்.2 / 5 / 6 / 7 / 9 / 12 ஆகிய இடங்களில் , மற்ற இடங்களை விட அதிக நன்மையளிக்கிறார்.. மகரத்தில் மிக்க ஒட்டுதலையும்,ஆக்ரமிப்புடன் கூடிய விருப்பத்தையும் கொடுக்கிறார்.12 ல் சுக்கிரன் இனிய இல்லறத்திற்கும்,இரகசிய காதல் விகாரங்களையும்,அதிக பொருள் சேர்க்கும் பேராசையையும் அளிக்கிறார். ஆனால் அவர் சனியின்நவாம்சத்தில் இடம்பெற கூடாது.15. ஏழாமதிபதியின் பலம் :-எப்போது ஒரு வீடு பலமிழந்ததாக கருதப்படுகிறது ?அந்த வீடு அதன் அதிபதி அவ்வீட்டின் காரகர் ஆகியோர் கீழ்கண்டவகையில் 18 புள்ளிகள் பெற்றால் பாதிக்கப்பட்டுள்ளது எனலாம்
------எல்லாமே பலமிழக்க ( 3 புள்ளிகள் )---- பாபகர்த்தாரி நிலை ( 3 புள்ளிகள் )---- அசுபர் கூட்டு அல்லது பார்வை ( 3 புள்ளிகள் )----- பகை கிரக இணைவு ( 3 புள்ளிகள் )----- இவற்றிலிருந்து 4 / 8 / 12 ல் அசுபரரகள் ( 3 புள்ளிகள் )----- இவற்றிலிருந்து 5 / 9 ல் அசுபர்கள் ( 3 புள்ளிகள் )----- மேலே கண்டவற்றில் 2 அல்லது 3 நிலைகளில் பாதிக்கப்பட்டால்அந்த வீடு பலமிழந்ததாகக் கருதப்படுகிறது.=== மேலும் ஒரு வீட்டின் அதிபதி 6 / 8 / 12 ல் இருந்தாலும் அல்லது6 / 8 / 12 ஆம் அதிபதிகள் அந்த வீட்டிலிருந்தாலும்,அவ் வீடுபலமிழந்ததாகும்.=== ஒரு வீட்டில் அதன் அதிபதியிருக்க அல்லது பார்க்க,பலமிக்க நட்பு கிரகத் இருக்க அல்லது பார்வைபெற, குகு,சுக்கிரன, அல்லது வளர்பிறை சந்திரன் போன்ற இயற்கை சுபர்களின் இணைவு அல்லது பார்வைபெற ( இவர்கள் 6 / 12 க்கு அதிபதியாக இருத்தல் கூடாது ) அல்லது சுபகர்த்தாரியில் இருக்க, அந்தவீடு பலம்மிக்கதாகக் கருதப்படுகிறது.=== இராசியிலும் நவாம்சத்திலும், இந்த மூன்றின் மீதான சுப / அசுபகிரகங்களின் அனைத்துப் பார்வைகளும் பார்க்கப்பட வேண.டும். நவாம்சக் கட்டமும், நவாம்ச கிரக நிலைகளும் ஒருவரின் திருமணநிலை மற்றும் துணைபற்றிய நம்பகமான தகவல்களை ராசிக் கட்டத்தோடு இணைத்துப் பார்க்கும்போது நமக்குக் கிடைக்கின்றன. இதில் சிறந்தமேலான நிலை எது எனில், கிரகங்களின் உச்ச / சுய / நட்பு ராசி நிலைகள் மற்றும் சுப நவாம்ச நிலையே யாகும்.=== ஏழாம்வீட்டில், அதிக கிரகங்கள் இருக்கும்போது,அக் கிரகங்களில் பலம் மிக்க மற் றும் 7 ம் அதிபதிக்கு நட்புமிக்க கிரகமே அதிமுக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.=== திருமணத்திற்கான யோக நிலைகளும், 7 ம் பாவத்திற்குரிய யோகங்களும் பாரக்கப்பட வேண்டும்..சம்மந்தப்பட்ட கிரக தசா / அந்தரதசா மற்றும் கோசார நிலைகள் ஆகியவற்றை,திருமணக் காலங்காண பகுத்தாய்வு செய்யவேண்டும்.இசைந்த இல்வாழ்க்கைக்கான பகுப்பாய்வு :-இசைந்த இல்வாழ்க்கைக்கான பலன் அறிய, சம்பந்தப்பட்டவீடுகளுட னான சுப,அசுப கிரக இணைவுகள் மற்றும் பலதரப்பட்ட கிரகங்களின்இடமாற்றங்கள் அலசப்பட வேண்டும்.இசைந்த இல்வாழ்க்கைக்கான மனோதத்துவ அணுகுமுறையிலானபகுப்பாய்வு :- ஒருவரின் மனநிலையே மணவாழ்வின் மகிழ்ச்சி நிலையை உறுதி செய்கிறது. 


மணவாழ்க்கைக்கான முக்கியகுறிகாட்டிகள்:-

== சூரியன் கௌரவம்,மதிப்பு, மரியாதை மற்றும் பிதுரார்ஜிதம்.

== சந்திரன் மனநிலை.. 

== செவ்வாய் காமவுணர்வு.

== சுக்கிரன் காதல் 

== இவைகளுடனான, இராகுவின் இணைவுமணவாழ்வின் ஆனந்தத்தை தடை செய்துவிடும்.

இக் கிரகத்துடன் ராகு இணைந்தால் :-*** சூரியன் :- இருவரின் நிலைகளிலுள்ள ஏற்ற தாழ்வு காரணமாக கௌரவப்பிரச்சனை ஏற்படுகிறது.

*** சந்திரன் :- மாறுகின்ற மனநிலையைத் தருகிறது.

** செவ்வாய் :- பிடிவாதகுணம்,தம்பதியரிடையேயான உணர்வுகளை காயப்படுத்தலாம்.

*** சுக்கிரன் : - பெற்றோர் சம்பந்தமின்றி காதல் அல்லது வேறொருவர் மீதுகாதல் கொண்டவரோடு திருமணம் நடக்கலாம்.

==== 7 ம் வீடு,சுத்தமாக மற்றும் சுபர் தொடர்பு பெற,மேற்கண்ட நிலைகள்ஏற்படாது.

ஆனால், இரு நிலைகளில் ராகுவால் பாதிப்பு ஏற்பட :-### சந்திரன் + சுக்கிரன் +ராகு = ஆரோக்கியமற்ற காமவுணர்வைத் தூண்டுகிறது.7 ம் வீடும் பாதிக்கப்பட்டால் ஆணானாலும்,பெண்ணானாலும்காம வெறியுடையவர்களாக மாற வழியுண்டு.### செவ்வாய் + சுக்கிரன் + ராகு = வெட்கங் கெட்ட காமவுணர்வைவெளிப்படுத்துவர்.### இவற்றில் இரு நிலைகளில் பாதிப்பு ஏற்பட, தம்பதியரிடையேயானஉறவுகள் பாதிக்கப்படும். எல்லா நிலைகளும் ராகுவால் பாதிப்படைய(4)இருவரிடையேயான உறவு சீர்திருத்த முடியாத நிலையையடையலாம்.### பாதிப்பால் ஏற்படுகிற முடிவுகள், சுப / அசுப இணைவைப் பொருத்தேஅமையும்...திருமண காலம் :-இளமையில், சீக்கிரமே திருமணம் நிகழ்தல் :- (18 வயது முதல் 22 வரை )##7 ம் வீடு, அதிபர்,காரகர் ஆகியோர் சுபரோடு இணைவு.### லக்னத்தில் சுபர் (வக்ரமில்லாத மற்றும் அஸ்தமனமாகாத சுக்கிரன் )அல்லது 7 ல் சுபர் மற்றும் பலம் மிக்க 7 ம் அதிபதி மற்றும் 2 / 8 ம்வீடுகளில் அசுபர் இடம் பெறாமை.### 7 ம் அதிபர் 7 ம் வீட்டைப் பார்க்க.###சுயவீடு,கேந்திர / கோணங்களில் 7 ம் அதிபர் அல்லது சுப கிரக பார்வைபெற### பாதிப்படையாத 7 ம் அதிபர் மற்றும் 7 ம வீடு. 2 ம் சுபர் சாரம் பெற்றிருக்க.###சுக்கிரன் கேந்திரத்தில் ( 7 ம் பாவத்தைத்தவிர ) திரிகோணத்தில் இருக்க.அஷ்டவர்க்கத்தில் சுக்கிரனின் பிந்து 5 க்குக் குறையாமல் இருக்க.###லக்னாதிபதி,7 ம் அதிபதி, சுக்கிரன் இவர்களில் இருவருடன்,மற்றும்சுபருடன் இணைவு பெற.###7 ம் அதிபதி மற்றும் சுக்கிரன் 4 ம் பாவத்தில் இடம்பெற.### 2, 7 மற்றும் லக்ன பாவாதிபதிகள் சுபருடன் இணைவுபெற.### சுபர் வக்ரமாகாதிருக்க மற்றும் சுக்கிரன் அஸ்தமனமாகாதிருக்க.### சீக்கிர திருமணத்திற்கு மற்ற இணைவுகள் :->>>5 / 7 ம் பாவங்களில் பலம் மிக்க சந்திரன் இருக்க.>>>அசுபர் தொடர்பில்லாத காரகர் + லக்னாதிபதி அல்லது 7 ம் அதிபதி +லக்னாதிபதி,சுப ராசியில் இருக்க அல்லது சுபரோடு இணைய.>>>பாதிப்பில்லாத சுக்கிரன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சம்பந்தப்பட்டகிரகம் நீர் ராசியில் இடம்பெற.திருமண நிலைகள் -- 22. ### தக்க நேரத்தில் திருமணம்.:- ( 22 முதல் 25 வயது வரை )>>> திருமண நிலைகளில் சனி, சந்திரனால் பாதிப்பில்லாமல்,சூரியன்,ராகு அல்லது கேதுவால் சிறிதளவு பாதிப்பு ஏற்பட.>>> சுபர் வக்கிரமாகாமல்,சுக்கிரன் அஸ்தமனமாகாதிருக்க ஆனால்7 ம் அதிபதி பாதிப்படைய.3. ### தாமதத் திருமணம் ( 26 முதல் 33 வரை ).:->>> தற்காலத்தில் வேலை முதலிலும், பின்னர் திருமணமும் ஏற்படுகிறது.

கற்று தெளிந்த குடும்பங்களில், இக்காலத்தில்,ஆணுக்கு 28 30 லும்,பெண்ணுக்கு 25 28 டிலும் திருமணம் நடந்தாலும், அது தாமதத் திருமணமாகக் கருதப்படுவதில்லை.>>> தாமதத் திருமணத்திற்கு :-<<< 7 ம் வீடு / 7 ம் அதிபதி சுக்கிரன் சந்திரன் குரு ( கணவன் காரகன்)2 / 4 / 5 ஆகிய பாவங்கள் மற்றும் அப் பாவாதிபதிகள் --- இவற்றில்இரு நிலைகளில் செவ்வாய் மற்றும் சனி ஆகிய பலம் மிக்க அசுபர்களால் பாதிப்பு ஏற்பட .<<< சுபர் வக்கிரமாக மற்றும் சுக்கிரன் அஸ்தமனமாக.<<< மேற்கண்டவற்றை ராசியிலிருந்தும் பார்க்க மற்றும் நவாம்சத்தில் கிரகங்கள் அசுப நட்சத்திரத்தில் இருக்கின்றனவா என்றும் பார்க்க வேண்டும்..<<< சுப இணைவு தாமதத்தைக் குறைக்கிறது.<<< இரண்டு அல்லது மூன்று, இராகுவுடனான மற்றும் சனியுடனான நிலைகளில் தாமதத் திருமணம் குறிகாட்டப்படுகிறது.<<< விவாஹ சகம் பாதிப்படைய.சுக்கிரன் --- சனி + லக்னம் )<<< ஒரு ஆண் மற்றும் பெண் கிரகம் இருக்கும் வீட்டிலிருந்து 7 ம் வீட்டில்சனி மற்றும் / அல்லது செவ்வாய் இருந்து சுபர் இவர்களைப் பார்க்கஒருவர் தனது முதிர்ந்த வயதில்,ஒரு முதிர்கன்னியை மணம் முடிப்பார்>>> ஜோதிட இணைவுகள் --- தாமதத் திருமணத்திற்கு.............:-<<< 7 ல் அசுபர் அல்லது 7 ம் வீடு மற்றும் 7 ம் அதிபதியை அசுபர் பார்க்க.<<< 7 ல் சனி மற்றும் கேது.<<< 7 ம் அதிபதி அல்லது 7 ம் வீட்டுடன் சனி இணைவு அல்லது பார்வை.<<< லக்னத்தில் கேது மற்றும் புதன்.<<< 7 ல் சூரியன் , பலமிழந்த சந்திரன் மற்றும் ராகு.<<< புதன்,குரு அல்லது சுக்கிரன் வக்கிரமாகி லக்னத்தில்.<<< 2 வது அல்லது 3 வது வீட்டில் 7 ம் அல்லது 12 ம் அதிபதி இருக்க.<<< 2 ம் வீட்டில் சூரியன், செவ்வாய் அல்லது சனி இருக்க.<<< 8 ம் அதிபதி 7 ல் அல்லது 7 ம் அதிபதி 8 ல் இருக்க.<<< சுக்கிரன் திருக் பாவத்தில் இருக்க.<<< சுக்கிரன் அல்லது 7 ம் அதிபதி சனியால் பார்க்கப்பட அல்லதுராகு அல்லது கேதுவுடன் இணைந்திருக்க.<<< 7 ம் வீட்டில் செவ்வாய் மட்டும் இருக்க.<<< 7 ம் அதிபதி வக்கிரமாகி மற்றும் 8 ம் அதிபதி செவ்வாயாக.<<< 7 ம் அதிபதி, லக்னத்திலிருந்தோ அல்லது 7 ம் வீட்டிலிந்தோ6 / 8 / 12 ல் இருக்க.<<< 6 / 8 / 12 ல் சந்திரன் மற்றும் 4 ல் சுக்கிரன் இருக்க.<<< லக்னத்தில் சுக்கிரன் மற்றும் ராகுவும், 7 ல் செவ்வாய் இருக்க.<<< சூரிய,சந்திரரை சனி பார்க்க.<<< 5 ம் வீட்டில் 8 ம் அதிபதி இருக்க.<<<லக்னம் / ராசி / சுக்கிரனிலிருந்து 7 ம் வீட்டில் நீசமடைந்த அல்லதுஅஸ்தமனமாகிய கிரகம் இருக்க .<<< அசுப கிரகம் 7 ல் இருக்க அதை சனி பார்க்க.<<< 5 அல்லது 7 அல்லது 9 ம் வீட்டில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் இருக்க,சனியால் பார்க்கப்பட.<<< லக்னம் அல்லது ராசியிலிருந்து 6 / 8 / 12 ல் நீச குரு இருக்க.<<< நீச சுக்கிரன், அஸ்தமனமாகிய 7ம் அதிபதி, 7 ம் வீட்டில் சந்திரன் மற்றும்ராகு இருக்க.<<< லக்னம் மற்றும் / 7 ம் வீடு மற்றும் 7 ம் அதிபதி / சுக்கிரன் அனைத்தும்ஸ்திர ராசியிலும், சந்திரன் சர ராசியில் இருக்க.<<< லக்னத்திலிருந்து,சந்திரனிலிருந்து,அல்லது நவாம்ச லக்னத்திலிருந்தும்6 / 8 ல் அசுபர் இருக்க.<<< சுக்கிரன் 5 பிந்துக்களுடன் நீச ராசியில் அல்லது நவாம்சத்திலிருந்து,செவ்வாயால் பாதிப்படைய.### திருமண வயதைக் குறிகாட்டும் இணைவுகள்:-<<< 30 வயது : 3 ல் சுக்கிரன் மற்றும் 7 ம் அதிபதி 9 ல் இருக்க.<<< 31 வயது : 2 ல் ராகு மற்றும் 3 ல் சுக்கிரன் இருக்க.<<< 30 32 வயது : ராகு 5 ல் , சுக்கிரன் 5 ல் மற்றும் சனி 7 ல் இருக்க.<<< 35 வயது : லக்னாதிபதி + சுக்கிரன் மற்றும் 8 ம் அதிபதி 8 ல் இருக்க.<<< 35 வயது : பாதிக்கப்பட்ட 7 ம் அதிபதி மற்றும் பாதிக்கப்பட்ட சுக்கிரன்5 அல்லது 9 ம் வீட்டில் இருக்க .

### வயது முதிர்ந்த பின் திருமணத்திற்கான இணைவு :-<<< 36 வயதுக்கு மேல் :- 7 ம் அதிபதி, 7 ம் வீடு மற்றும் ஆணுக்கு சுக்கிரனும், பெண்ணுக்கு குருவும் பலமற்றிருந்து, செவ்வாய்,சனி. ராகு அல்லதுகேது மற்றும் மாந்தியால் மிகுந்த பாதிப்புக்குள்ளாக, ஆனால், செவ்வாய்அல்லது சனி 7 ம் அதிபதியாகவோ அல்லது யோககாரகனாகவோ இல்லாமல் இருக்க.<<< 40 வயதுக்குப் பிறகு :-<<< 7 ம் அதிபதி , 7 ம் வீடு மற்றும் சுக்கிரன், ஆகியவை சனி மற்றும் ராகுவால் பாதிக்கப்பட.<<< சுக்கிரன் 5 ம் அதிபதியாகி ( 3 அல்லது 10 ம் ராசி லக்னம் ) 6 / 8 / 12 ம்வீட்டிலிருக்க.<<< 50 வயதையொட்டி :-<<< ஸ்திர ராசியில் பலங்குறைந்த லக்னாதிபதி, 7 ம் அதிபதி மற்றும் சுக்கிரன்இருக்க, சந்திரன் சர ராசியிலிருக்க.<<< சனி மற்றும் ராகு , லக்னம் அல்லது 7 ல் இருக்க, பலமற்ற சுக்கிரன்இணைந்திருக்க.<<< வயது முதிர்ந்த பின் :-<<< 7 ம் அதிபதி நீசமாகி,சுக்கிரன் 8 ல் இருக்கதிருமணம் மறுக்கப்படுதல்>>> தாமத திருமணத்திற்கு சொல்லப்பட்ட இணைவுகள் மற்றும் நிலைகள்மேலும் அதிகமாக பாதிக்கப்படும் போது (அதுவும் 2 அல்லது 3 நிலைகள் பாதிப்படைய ) சிறிது கூட சுபர் தோடர்பு இல்லாத போதும்,முக்கியமாக 7 ம் வீடு,அதிபதி,லக்னாதிபதி,சுக்கிரன், குரு,மற்றும்சந்திரன்,ராகு அல்லது கேது பாதிக்கப்படும் போதும் திருமணம் மறுக்கப்படுகிறது..>>> திருமணம் மறுக்கப்படுவதிற்கான இணைவுகள் :-<<< 7 ம் அதிபதி, 7 ம் வீடு,மற்றும் சுக்கிரன் ஆகியவை ராசியிலும்நவாம்சத்திலும், அதிகமாக பாதிக்கப்படும் போது.<<< அசுபரால் பாதிப்படைந்த, செவ்வாய் + சுக்கிரன், 5 / 7 / அல்லது 9 ம்வீடுகளில் இடம்பெற.<<< ராசிக்கு 7 ம் வீட்டில் செவ்வாய் + சுக்கிரன் + சனி இருக்க.<<< சந்திரன் + சனி 7 ல் இருக்க.<<< லக்னம் மற்றும் 7 ல் அசுபர் நிற்க .<<< 7 ம் வீட்டில் இரண்டு அசுப கிரகங்கள் இருக்க.( 7 ல் 3 அல்லது அதற்குமேற்பட்ட கிரகங்கள் இடம்பெற ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தைக்கொடுக்கிறது )<<< ராசிக்கு 7 ல் சுக்கிரன் + செவ்வாய் இணைந்திருக்க.<<< லக்னத்தில் ராகுவும் சனியுமிருக்க.<<< 7 ல் சனி அசுபரால் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்க ( பெண்களுக்கு )<<< 7 ல் பலமில்லாச் சந்திரன்,ராகுவுடன் இணைந்திருக்க..<<< 7 ல் அசுபரால் பாதிக்கப்பட்ட புதன் + சுக்கிரன் இருக்க.<<< 6 / 8 / 12 ம் அதிபதிகளோடு 7 ம் அதிபதி பரிவர்த்தனை பெற.<<< பலமிக்க சனியால் சந்திரன் பார்க்கப்பட .<<< 7 ல் லக்னாதிபதி மற்றும் ராசியதிபதி இடம்பெற்று, 7 ம் அதிபதி12 ல் இருக்க.<<< 12 ல் சந்திரன் + ராகு இருந்து,செவ்வாய் மற்றும் சனியால் பார்க்கப்பட.<<< 7 ம் அதிபதி நீசம் பெற மற்றும் 7 ம் வீடு பாதிப்பட்டிருக்க.<<< 6 / 8 / 12 ல் பாதிப்படைந்த சுக்கிரன் இருக்க.<<< 5 / 7 / 9 ம் வீடுகளில் சுக்கிரன் + செவ்வாய், குருவின் பார்வை பெறாதிருக்க.<<< 7 ம் வீட்டிலும் 12 ம் வீட்டிலும் இரண்டிரண்டு அசுபக் கிரகங்களிருக்க,5 ல் பலமற்ற சந்திரன் இருக்க.<<< திருக் ஸ்தானத்தில் சூரியன், சந்திரன் மற்றும் சுக்கிரன் மூவரும்இருந்து, நவாம்சத்திலும் மூவருமிருக்க.<<< சூரியன்,சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்கள் சனியுடன் இணையஅல்லது மூன்றுமே சனியின் நட்சத்திரத்திலிருக்க மேலும் நவாம்சத்திலும் அதே நிலையிலிருக்க.<<< சூரியன், சந்திரன் மற்றும் 5 ம் அதிபதி ஆகியோரின் சனியுடனான இணைவு.<<< அசுபருடன் இணைந்த 2 ம் அதிபதி + 7 ம் அதிபதி மற்றும் சுக்கிரன்லக்னம் அல்லது ராசியிலிருந்து திருக் ஸ்தானத்தில் இருக்க<<< மலட்டு ராசிகளில் லக்னாதிபதி,7 ம் அதிபதி மற்றும் சுக்கிரன் இருக்க.( 3 , 5 , 6 , 9 ராசிகள் ).<<< லக்னாதிபதி,7 ம் வீடு,அதிபதி, மற்றும் சுக்கிரன் அசுப பாதிப்பு பெற்று,2 ம் அதிபதி திருக் கில் இருக்க.<<< 7 ம் வீட்டில் நீச / அஸ்தமனமான / பலமற்ற 7 ம் அதிபதி மற்றும் சுக்கிரன் மற்றும் ராகு + சனி ஆகியவை கூடியிருக்க.<<< பலமிக்க சனியால் நீச / அஸ்தமனமான / அல்லது பலமற்ற சூரியன்,சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகியோர் பார்க்கப்பட.<<< 10 ம் அதிபதியோடு மூன்று அசுப கிரகங்கள் இணைந்திருக்க.<<< லக்னத்தில் கேது, 7 ம் வீட்டில் ராகு + சனி அல்லது சூரியன் இருந்து7 ம் வீடு சனி அல்லது செவ்வாயால் பார்க்கப்பட.<<< சந்திரன்,சுக்கிரன் இணைந்திருக்க அல்லது 1 / 7 ல் சுபர் பார்வை பெறாதிருக்க.

<<< சுப பார்வை பெறாத சூரியன் அல்லது சனி 7 ம் வீட்டைப் பார்க்க.<<< 6 / 8 / 12 ம் அதிபதிகள் 7 ம் பாவத்தில் இருக்க.<<< 7 ம் அதிபதி 6 / 8 / 12 ல், சுப பார்வை பெறாதிருக்க.<<< 7 ம் அதிபதி சுபர் தொடர்பற்று, லக்னத்துக்கோ,ராசிக்கோ 12 ல் இருக்கநவாம்சத்திலும் இருக்க.<<< மேலே கண்டுள்ள நிலைகளில் 2 3 நிலைகள்இருந்தால் மட்டுமே,திருமண மறுப்பு ஏற்பட வாய்ப்புஉண்டு எனலாம்.சக்தி மிக்க சன்யாசி யோகம் :- சனியின் திரிகோணத்தில் சந்திரன் இருக்கஅல்லது நவாம்சத்தில், சனி அல்லது செவ்வாய் நவாம்சத்தில் சந்திரனிருக்க.சனியால்மட்டும் பார்க்கப்பட>>>> பலமற்ற லக்னாதிபதி,மற்றும் சனி.>>>> லக்னாதிபதி மற்றும் 10 ம் அதிபதி, 6 ம் அதிபதி அல்லது 8 ம் அதிபதியோடு இணைந்திருக்க.>>>> ஒரே ராசியில் 4 அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருக்க.>>>> சூரியன், சனி மற்றும் ராகுவால், லக்னாதிபதி,மற்றும் 10 ம் அதிபதி பாதிப்படைய.### சன்யாசினி :->>> 7 ல் அசுபரும்,மற்றும் 9 ல் சுபருமிருக்க.>>> இரட்டைப்படை ராசியில் லக்னம் அமைந்து,பலம் மிக்க செவ்வாய்,புதன்.குருமற்றும் சுக்கிரன் இருக்க.<><> சுக்கிரன்,அசுபரால் பாதிக்கப்பட்டு,சிரோதயராசிகளில் ( துலாம் தவிரவும் ) இருக்க.(3 , 5 , 6 , 8 , மற்றும் 11 )@@@ ஆண்மையின்மை :->>> சுக்கிரன் மற்றும் சனி 6 /8 ஆக அமைய.<<< நவாம்சத்திலும்,ராசியிலும்,ஒற்றைப்படை ராசிகளில் லக்னம்,சந்திரன் மற்றும்சுக்கிரன் இருக்க.<<< லக்னமும், ராசியும் ஒற்றைப்படை ராசியிலிருக்க,இரட்டைப்படை ராசியில்இருந்து செவ்வாய் இருவரையும் பார்க்க.>>> சந்திரன் இரட்டைப்படை ராசியிலும், புதன் ஒற்றைப்படை ராசியிலும் இருக்க,செவ்வாய் இருவரையும் பார்க்க.>>> சுபர் பார்வையற்ற சுக்கிரன் + சனி 8 ம் பாவத்தில் இருக்க.>>> சுபர் பார்வையற்ற சனி,நீர் ராசியில் 6 /12 ல் இருக்க.>>> சுபர் பார்வையற்ற சனி 8 / 10 ம் வீடுகளில் இருக்க.>>> 10 ல் சுக்கிரன்+ சனி இருக்க.>>> சனி 6 /12 ல் நீசமாக நிற்க.>>> ஆத்மகாரகனின் நவாம்சத்தில் கேது இருந்து புதன் மற்றும் சனியால் பார்க்கப்#### மிகுந்த தாமதமாக திருமணம் நடக்க.:->>> ராசி,லக்னம் அல்லது சுக்கிரனிலிருந்து 7 ம் பாவத்தில் அசுபர் அல்லதுவக்கிர கிரகம் இருக்க.>>> 5 / 7 / 9 ம் பாவகங்களில் ஒவ்வொன்றிலும் ஒரு அசுபகிரகம் இடம்பெற.#### திருமண மறுப்பு யோகமிருந்தாலும், திருமணம் நடத்தல். :->>> கீழ்க் கண்ட யோகங்கள், திருமணம் மறக்கப்பட்ட யோகத்தை ரத்தாக்கிவிடுகிறது.>>> பலம் மிக்க குரு லக்னத்தைப் பார்க்கவும், சுபர்களின் இணைவால் தேய்பிறைசந்திரன் பலம் பெறவும்.>>> அனுகூலமான கிரகங்களோடு இணைந்து 7 ம் அதிபதி நல்ல வீட்டில் இருக்க.>>> பாதிப்படையாத சுக்கிரன + 11 ம் அதிபதி லக்னத்திலிருக்க.>>> பலம் மிக்க சந்திரனிலிருந்து 5 ம் பாவத்தில் பலமிக்க குருவும், 7 ல் சுக்கிரனும்இருக்க மற்றும் 7 ம் பாவம் பாதிக்கப்படாதிருக்கவும்.திருமண நிலைகள் -- 3### திருமணம் எப்போது நடக்கும் ?>>> தசா முறை :->>>> 7 ம் இடத்திலுள்ள கிரகங்கள் மற்றும் 7 ம் இடத்தைப் பாரக்கும்கிரகங்களின்தசா காலங்களிலும்.>>>> 7 ம் அதிபதியின் தசா காலங்களிலும் நடக்கும்.இந்த தசாக் காலங்களில்,திருமண வயது வரவில்லையெனில் ,கீழ்கண்டதசாக் காலங்களில் நடக்கலாம்>>> 7 ம் அதிபதிக்கு இடங்கொடுத்தவன் அல்லது நவாம்சாதிபதி ககாலங்களில்.>>> சந்திரன், சுக்கிரன், ராகு, அல்லது பலம் மிக்க குரு தசாக் காலங்களில்மேற் சொன்ன தசாக் காலங்களிலும், மற்றும் அந்தர தசாக்காலங்களிலும்.<<<< 2 ம் அதிபதிக்கு இடங்கொடுத்தவன் அல்லது அவனின் நவாம்சாதிபதி தசாவிலும்.>>>> 7 ம் அதிபதியுடன் இணைந்த கிரக தசாக் காலங்களில்./ அந்தர காலங்களில்>>>> 7 ம் அதிபதியின் நட்சத்திராதிபதியின் தசாக் காலங்களில்./அந்தர காலங்களில்>>>> 9 ம் அதிபதி அல்லது 10 ம் அதிபதி அல்லது 2 ம் அதிபதி தசாக் காலங்களில்/ அந்தர காலங்களில்..>>>> தசாதிபதிக்கு 7 ம் வீட்டிலுள்ள கிரகங்களின் தசாக் காலங்களில்/ அந்தரகாலங்களில்>>>> சுக்கிரனின் நடசத்திராதிபதி தசாக் காலங்களில்/ அந்தர காலங்களில்.### இந்த தசாக் காலங்களிலும் / அந்தர தசாக் காலங்களிலும் :->>>> சந்திரன் அல்லது சுக்கிரனிலிருந்து 7 ம் அதிபதி>>>> மேற்கண்ட காலங்களில் நடக்கவில்லையெனில், 4 ம் அதிபதி,9 ம் அதிபதி மற்றும் 10 ம் அதிபதி காலங்களில்.2. ### கோசார முறை>>>> கீழ்க்கண்ட ஜனன ஜாதக இணைகளின் ஒன்றின் மீது, கோசார குரு,அல்லது சனி வரும்போது : இது பொதுவான திருமணம் நடக்கும்வருடத்தைக் கொடுக்கும்.>>>> லக்னாதிபதி / 7 ம் அதிபதி.>>>> லக்ன பாவம் / 7 ம் பாவம்.>>>> லக்னாதிபதி / 7 ம் பாவாதிபதி>>>> லக்னம் / 7 ம் அதிபதி.>>>> கீழ்க்கண்ட ஜனன ஜாதக இணைகளில் ஒன்றுடன் கோசார குரு இணையஅல்லது பார்க்க :->>> சுக்கிரன் மற்றும் 5 ம் வீடு>>> 5 ம் வீடு மற்றும் 5 ம் அதிபதி.>>> சுக்கிரன் மற்றும் 5 ம் அதிபதி.>>> 9 ம் வீடு மற்றும் 9 ம் அதிபதி.>>> லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரனிலிருந்து 1 , 5 , 2 , 9 , 11 அல்லது 7 ம்இடத்தின் மீது கோசார குரு வர.>>>> கோசார செவ்வாய்,இணையொன்றின் மீது வரும்போது, 45 நாட்களுக்குள்திருமணம் நடக்கும்.>>> லக்னாதிபதி / 7 ம் அதிபதி.>>> லக்ன பாவம் / 7 ம் பாவம்.>>> லக்னாதிபதி / 7 ம் வீடு.>>> லக்னம் / 7 ம் அதிபதி.>>>> கோசார குருவின் பாகை, ஜனன ஜாதக சுக்கிரனின் பாகைக்கு அருகில் உள்ளபோது., திருமணத்திற்கான சரியான நேரத்தைக் குறிகாட்டுகிறது.>>>> இந்த இணைகளின் மீது கோசார சுக்கிரன்,லக்னாதிபதி, 7 ம் அதிபதி வரும்போது.>>> லக்னம் / 7ம் வீடு /7 ம் அதிபதி அல்லது>>> அவற்றிலுருந்து 5 வது / 7 வது / 9 வது பாவத்தில் வரும்போது.>>>> கோசார குரு வரும் போது ( மற்றொருமுறை ) :->>> ராசியில் 7 ம் வீட்டின் மீது அல்லது நவாம்சத்தில் மற்றும் அவற்றிலிருந்து5 வது / 9 வது வீட்டின் மீதும்.>>> சுக்கிரன் மீது.>>> ராசியிலும்,நவாம்சத்திலும் 7 ம் அதிபதிக்கு திரிகோண ராசி மீதும்.>>> 5 ம் வீடு, 5 ம் அதிபதி மற்றும் சுக்கிரன் ஆகியோருடனான கோசார குருமற்றும் செவ்வாயின் தொடர்பு.

<<<< சூரியனின் கோசாரம் :- >>> உத்ராணயத்தில் ( சூரியன் 10 வது ராசியிலிருந்து 3 வது ராசிவரை பயணிக்கும் காலம் ). குருவின் நவாம்சத்தின் மீது அல்லது அதற்கு திரிகோணத்தில் மற்றும் சூரியன் கோசார குருவால் பார்க்கப்பட.>>> தட்ஷிணாயணத்தில் ( சூரியன் 4 முதல் 9 வரை ) சுக்கிரனின் நவாம்சத்தின் மீதுஅல்லது அதற்கு திரிகோணத்தில் மற்றும் சூரியன் கோசார குருவால் பார்க்கப்பட.>>> லக்னாதிபதியின் நவாம்சம் மற்றும் சூரியன் கோசார குருவால் பார்க்கப்பட.>>>> சந்திரனின் கோசாரம் :->>> சூரியன்,செவ்வாய்,குருவுடன் தொடர்பு அல்லது சுக்கிரனுடன் தொடர்பு அல்லதுலக்னத்தில் இருக்க. 7 ம் வீட்டில் அல்லது சந்திரன், சூரியன்,செவ்வாய்,அல்லதுகுருவின் ராசிகளில்.3. கோசாரம் கணித முறை>>> கீழ்க்கண்ட இணைவுகளின் கூட்டுப் பாகைகளின் மீது கோசார குரு வரும்போது>>> லக்னாதிபதி + 7 ம் அதிபதி>>> சந்திரன் + 7 ம் அதிபதி.>>> லக்னாதிபதி + 7 ம் அதிபதி + சுக்கிரன்.>>> சந்திரனுக்கும்,7 ம் அதிபதிக்கும் இடங்கொடுத்தஇருவரின் கூட்டுப் பாகை புள்ளியில்.>>> லக்னாதிபதி + 2 ம் அதிபதி + சூரியனுக்கு இடங்கொடுத்தவன் பாகை மீதுகோசார சூரியன் வரும்போது.>>> கோசார இராகு / கேது கீழ்க்கண்ட இணைகள் மீது அல்லது அதற்குகேந்திரங்களில்>>> ( ராகு + லக்னம் குரு ) ராகுவுக்கு அல்லது 4 / 10 வீட்டில் இல்லாத குரு.>>> ( ராகு + லக்னம் குரு ) ராகுவுக்கு அல்லது குரு 4 ம் வீட்டில் இருக்க.>>> ( ராகு + லகனம் குரு ) ராகுவுக்கு அல்லது குரு 10 வீட்டில். இருக்க .4. >>>> அஷ்டவர்க்க முறை>>> ஜனன சந்திரனுக்கு 5 / 9 ம் இடம் மீது அல்லது சுக்கிரன் அஷ்டவர்க்கத்தில் 5 அல்லது அதற்கு மேல் பிந்துக்கள் கொண்ட சுக்கிரன் மீது. >>> கீழ்க்கண்ட கணக்கீட்டின் மீதி மேல் ( நட்சத்திரம் அல்லது ராசி அல்லதுஅதிலிருந்து திரிகோணத்தில் ) .>>>( சுக்கிரனின் சோத்திய பிண்டம் ) * ( சுக்கிரனின் பீ ஏ வி யில்,சுக்கிரனுக்கு7 ம் பாவத்தில் உள்ள பிந்துக்கள் ) வகுத்தல் 27 அல்லது 12 ஆல்.>>> மேற்கண்ட நட்சத்திராதிபதி மற்றும் ராசியதிபதி,திருமண காலத்தின்தசாதிபதி / அந்தர தசாதிபதியையும் காட்டுகிறது.>>>> அஷ்டகவர்க்கம் மற்றும் பொருத்தம் :-.>>> சந்திரனின் அஷ்டவர்க்கம் மற்றும் பொருத்தம் :->>> பெண்ணின் சந்திர ராசியின் பிந்துவும்,பையனின் அஷ்ட்டவர்க்க சந்திரன்பிந்துவும் அதிக அளவு இருக்கவேண்டும். இதுவே ஆணுக்கு மாறிவரும்.>>> பையனின் காரகாம்ச லக்னமும், பெண்ணின் சந்திரராசியும் ஒன்றாகயிருக்கவேண்டும்,சந்திரன் பையனின்அஷ்டகவர்க்கத்தில் ஒரு பிந்து கொடுத்திருக்கவேண்டும்.>>> பெண்ணின் சந்திர அஷ்ட்டகவர்கத்தில் அதிக பிந்துக்கள் உள்ள ராசியில்,பையனின் ராசி அல்லது லக்னம் அமைய வேண்டும்.>>> மேலே சொல்லப்பட்டவையை,நண்பரகள்,உயர்அதிகாரிகள், உடன் பணிபுரிபவர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள், அரசர் அல்லது மனைவிஆகியவவற்றிற்கும் பயன்படுத்தலாம்.>>> அப்படிப்பட்டவர்களின் முகத்தில் காலையில் எழுந்தவுடன் விழிக்கலாம்.>>> இப்படி பொருத்தமானவர்களுக்கு ஆடைகள் வாங்கித்தர ஜாதகரின்வாழ்க்கையில் மிகுந்த முன்னேற்றம் ஏற்படும்.>>> சந்திரனனின் அஷ்டகவர்கத்தில் குறைவான பிந்துக்கள் இருக்கநேர்மாறாக இருக்கும்2. >>>> சுக்கிரனின் அஷ்டகவர்க்கமும் பொருத்தமும்>>>சுக்கிரனின் பின்னாஷ்டவர்க்கத்தில் அதிக பிந்துக்கள் உள்ள ராசியின்மீது கோசார சுக்கிரன் வரும்போது, கீழ்க்கண்டவற்றிற்கு நல்லது :->>> இசை கற்க.>>> திருமணஞ்செய்ய.>>> படுக்கை,துணிமணிகள் மற்ற பொருள்கள் வாங்க.>>> இந்த ராசியின் திசையில் படுக்கையறை அமைத்தால், மணப்பெண் வருவாள் மற்றும் மதிப்பிற்குரிய பெரியவர்களை சந்திப்பதற்கும் நல்லது.>>> இந்த ராசியின் திசையிலிருந்து மணமகள் வந்தால் மகிழ்ச்சி, புத்திரபாக்கியம் ,ஆயுள் ,மற்றும் நல்யோகம் ஆகியவை ஏற்படும். சுக்கிரனின் பின்னாஷ்ட வர்க்கத்தில் குறைந்த அளவு பிந்து இருக்கும்ராசியின் திசையிலிருந்து வந்தால், துன்பங்கள்,துயரங்கள் மற்றும்நோய்கள் ஆகியவை ஏற்படும்.>>> சுக்கிரனின் அல்லது சந்திரனின் நவாம்சாதிபதியைப் பொருத்துப்பெண்ணின் நிறம்,தோற்றம் மற்றும் குணங்கள் இருக்கும். 7 ம்அதிபதியைப் பொருத்து கற்பு,நல்லொழுக்கம் அமையும்.>>> பொருத்தம் :-மகிழ்ச்சியான, காதல்மிக்க,மனமொத்த திருமணத்திற்கு :->> பையனின் சந்திர அஷ்டவர்க்கத்தில், சந்திரனின் காரகாம்ச அதிபதியால் அளிக்கப்பட்ட பிந்துக்கள் அதிகமாக உள்ள ராசியில்,பெண்ணின் சந்திர ராசியாய் அமைய.அதேபோல்ஆணுக்கும்.>>> பையனின் சுக்கிர அஷ்டவர்க்கத்தில் சுக்கிரனுக்கு 7 ம் பாவத்துக்குபெண்ணின் பிறந்த நட்சத்திராதிபதியால் கொடுக்கப்பட்ட பிந்துகீழ்க்கண்ட கிரகங்களால் கொடுக்கப்படபடிருந்தால்.>>> சூரியன் :- ( பெண்ணின் நட்சத்திராதிபதி சூரியனின் நட்சத்திலிருந்தால் அதாவது கார்த்திகை, உத்திரம்,உத்திராடம் ) கணவனுக்கு,அவனின் ஆன்மாபோல் ஒன்றுபட்டு அன்பு செலுத்துவாள்.>>> சந்திரன் :- மிகப் பெரிய மனப்பொருத்தமுள்ளவளாக அமைவாள். >>> செவ்வாய் :- கணவன் இன்னலில் இருக்கும்போது தோளோடு தோள்கொடுத்து துணை நிற்பாள்.>>> புதன் :- அவள் கீழ்ப்படிதலுள்ளவளாகவும்,கணவனுடன் உடன்பட்டுநடப்பவளாகவும் இருப்பாள்.>>> சுக்கிரன் :- சுக்கிரன்,தனக்கு 7 மிடத்திற்கு எந்தவித பிந்துவும் அளிப்பதில்லை. எனவே,லக்னத்திலிருந்து 7 ம் பாவத்திற்கு, சுக்கிரனின்பிந்து கிடைத்தால், கணவனுக்கு நிகரான காமப்பசியுடையவளாகஇருப்பாள்>>> சனி :- கணவனுக்கு ஒரு அடிமைபோல்,பணி செய்துகிடப்பாள்.மேலே சொல்லப்பட்ட விதிகள் லக்னத்திற்கு 7 மிடத்திலிருந்தும்பார்க்கப்பட வேண்டும்>>> பையனின் சுக்கிர அஷ்டவர்க்கத்தில்,சுக்கிரனுக்கு 7 ம் பாவத்தால்கொடுக்கப்பட்ட அதிக பிந்துக்கள உள்ள ராசியில் சந்திரன் இடம்பெறஅல்லது பெண்ணென்றால் மாறிவர, காம விஷயத்தில் இணைவானபொருத்தமிருக்கும்.>>> மனப்பொருத்ததிற்கு,கணவனின் சந்திர அஷ்டவர்க்கத்தில் அதிக அளவுபிந்து பெண்ணின்ராசி உடைத்தாயிருக்க வேண்டும்.>>> மற்ற அனைத்துப் பொருத்திற்கும்,கணவனின் சர்வாஷ்டவர்க்கத்தில் அதிகஅளவு பிந்து பெண்ணின் ராசி உடைத்தாயிருக்க வேண்டும்.>>> திருமண நேரம் :->>> சீக்கிர திருமணம் :-செவ்வாயால் பார்க்கப்படாத சுக்கிரன், 4 அல்லதுஅதற்கு மேலான பிந்துக்கள் ,கேந்திர அல்லது திரிகோணங்களில்இருக்க.>>> செவ்வாயால் பார்க்கப்பட்ட,ராசி அல்லது நவாம்சத்தில் நீசமடைந்தசுக்கிரன் 5 பிந்துக்களோடு இருக்க.>>> சுக்கிரனின் சோத்திய பிண்டம் * சுக்கிரனுக்கு 7 ல் உள்ள பிந்துக்களின்எண்ணிக்கை,வகுத்தல் 27 அல்லது 12 ஆல் வகுத்தது போக மீதி ---மேஷத்திலிருந்து எண்ணவரும் ராசி மீது அல்லது திரிகோண ராசியில் கோசார குரு வருங்காலம் திருமணம் நடக்கும்.

>>> துர்மரணம் :- மேற்சொன்ன நிலையின் மீது கோசார சனி வருங்காலம்.>>> மேற்சொன்ன சூத்திரத்தில் 27 ஆல் வகுக்க வரும் மீதி --- ராசி .அஸ்வினியிலிருந்து எண்ணவரும் நட்சத்திரத்தின் மீது அல்லது அதற்கு திரிகோணத்தின் மீது கோசார குரு வருங்காலம்.>>> இதே போன்று, கோசார சூரியன் வருங்காலம்.திருமண நிலைகள் - 4அமைதியில்லா மணவாழ்க்கை:-6 / 8 / 12 ம் வீடுகளில்,பிந்துக்கள் குறைந்த சுக்கிரன் மீது,செவ்வாய் மற்றும்சனியின் தாக்கம் சந்தேகம் நிறைந்த குணத்தைக் கொடுக்கிறது.## 7 ம் பாவத்தில் செவ்வாய் அல்லது சனி மற்றும் 7 ம் அதிபதி, செவ்வாய்அல்லது சனி நவாம்சத்தில் இருக்க, ஒழுக்கங்கெட்ட மனைவி அமைவாள்.## 7 ம் வீட்டில் 5 அல்லது அதற்கு மேலான பிந்துக்களுடன்,செவ்வாய் அல்லதுசனியிருக்க மற்றும் 7 ம் அதிபதி செவ்வாய் அல்லது சனி நவாம்சமேறி,அல்லதுஇருவரில் ஒருவரால் பாரக்கப்பட மனைவியின் குணம் சந்தேகத்திற்குட்பட்டதாக இருக்கும்.மானக்கேடான மனைவி## சுக்கிரன் 4 பிந்துக்களுடன் ராசி அல்லது,நவாம்சத்தில் நீசமாக மற்றும் செவ்வாயும்நீசமாக.## சுக்கிரன்,ராசி அல்லது,நவாம்சத்தில் நீசமாகி, செவ்வாயால் பார்க்கப்பட.கள்ள உறவு கொள்ளும் மனைவி:-## சனியின் ராசி அல்லது நவாம்சத்தில் 1 -- 3 பரல்களுடன் சுக்கிரன் இருக்க மற்றும் சனிஸ்வரன் ராசியில் செவ்வாய் இருக்க.## 7 ம் பாவத்தில் அல்லது 12 ம் பாவத்தில் அசுப நவாம்சத்தில் சந்திரன் இருக்கமற்றும் அசபர் இணைவுடன்,குறைந்த பரல்களுடன் சுக்கிரன் இருக்க.## செவ்வாய் அல்லது சனியின் நவாம்சத்தில் 7 ம் அதிபதி இருக்க மற்றும்# செவ்வாய் அல்லது சனியால் 7 ம் வீடு பார்க்கப்பட அல்லது# செவ்வாய் அல்லது சனியின் ராசியில் 7 ம் அதிபதி இருக்க.## செவ்வாயின் ராசி அல்லது நவாம்சத்தில் 5 அல்லது அதற்கு மேலான பரல்களுடன்சுக்கிரன் இருக்க மற்றும் சுயவீட்டில் செவ்வாயிருக்க,பிறன் மனை நாடும் தீவிரபழக்கத்துக்கு அடிமையாவார்.## ராசி அல்லது நவாம்சத்தில்,சுக்கிரன் 4 அல்லது அதற்கு மேலான பிந்துக்களுடன்மற்றும் உச்சநிலை பெற மற்றும் பலம்மிக்க செவ்வாயால் பார்க்கப்பட ஒருவர்அதிக காமவேட்கையுடன் திகழ்வார்.## கேந்திரம் அல்லது திரிகோணத்தில், 4 அல்லது அதற்கு அதிகமான பிந்துக்களுடன்சுக்கிரன் இருப்பானாகில், அது அநேக திருமணங்களைக் குறிகாட்டுகிறது.( சீக்கிரதிருமணத்தையும் குறிகாட்டுகிறது ) சுக்கிரன் பாதிப்படையாத நிலையில் சுகமானமற்றும் மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கை அமைகிறது. செவ்வாயால் பார்க்கப்படதிருமணத்திற்கு பதிலாக பல பெண்களோடு தொடர்பு கொள்ளவைக்கிறது## திரிகோணத்தில்,சுக்கிரன் 8 பிந்துக்களுடன் இருந்தாலும்,2 ம் வீட்டில் பாதிக்கப்பட்டிருக்க திருமணத் தடைகள் ஏற்படுகின்றன.## செவ்வாயின் நவாம்சத்தில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட பிந்துக்களையுடையசுக்கிரன் மற்றும் சுயவீட்டில் உள்ள செவ்வாய் அந்த நபர் பெண்.பித்துப்பிடித்தவராவார்## சுக்கிரனின் அஷ்டவர்க்கத்தில், செவ்வாய் 5 அல்லது அதற்கு மேலான பிந்துக்களுடன் 7ம் வீட்டில் இருக்க மற்றும் 5 ம் அதிபதியும்,7 ம் அதிபதியும்திரிகோண பரிவர்த்தனையாக, ஒருவர் தன் மனைவியைக் கைவிடுவார்.@@ வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் :-## சுக்கிரன் 5 பரல்கள் அல்லது அதற்கு மேலான பரல்களுடனோ, லக்னத்தில்அல்லது 10 ம் வீட்டில் இருக்க, ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களைக் கொடுக்கிறது.## மேஷத்தில் அல்லது விருச்சிகத்தில், சுக்கிரன் 5 பிந்துக்களுக்கு மேலாகப் பெற்று,சுபரால் பார்க்கப்பட,வாகனங்கள்,செல்வம் மற்றும் சொத்துக்கள் பெறுவார்## சுக்கிரனுக்கு இடங்கொடுத்தவன்,கேந்திர அல்லது திரிகோணத்தில், 5 பிந்துக்களுக்குமேல் பெற்றிருக்க,ஜாதகர் சொத்து சுகங்களோடு மிகவும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கைவாழ்வார்## சுக்கிரனுக்கு இடங்கொடுத்தவன், சுக்கிரனிலிருந்து 6 வது அல்லது 8 வது அல்லதுதிரிகோணத்தில், 5 க்கு மேற்பட்ட பரல்களோடு இருக்க மனைவியைப் பெறுவார்மற்றும் ஏழையாவார்.@@ மனைவிகளின் எண்ணிக்கை :-## மிகவும் அதிகமாக ( பலம்மிக்க 7 ம் அதிபதி ) மற்றும் மிகவும் குறைவாக (பலமற்ற7 ம் அதிபதி ) கீழ்க்கண்டவற்றின் பரல்களின் எண்ணிக்கையைப் பொருத்து# சுக்கிரனிலிருந்து 7 ம் பாவாதிபதி# சுக்கிரனிலிருந்து 9 ம் பாவாதிபதி# லக்னம் அல்லது சந்திரனிலிருந்து 9 ம் பாவாதிபதி# சுக்கிரனிலிருந்து 7 ம் அதிபதியின் உச்ச அல்லது நீச ராசி்வரன் வரும் திசை மற்றும் தூரம்:-7 ம் வீட்டின், அதிபதியின், மற்றும் சுக்கிரன் ஆகியவற்றின் ராசிகளின் திசைகளிலிருந்து.மேற்சொன்ன கிரகங்களில் பலம்மிக்க கிரகத்தின் திசையிலிருந்து.# 7 ம் பாவத்தில் உள்ள கிரகம்.# 7 ம் பாவத்தைப் பார்க்கும் கிரகம்.# சந்திரனிலிருந்து 7 ம் அதிபதி# சுக்கிரனிலிருந்து 7 ம் அதிபதி.நிலை மற்றும் பார்வையால் 7 ம் வீட்டை பாதிக்கும் கிரகம் இருக்கும் ராசியின்திசையிலிருந்து.கணிதமுறை :-## 7 ம் அதிபதி மற்றும் சுக்கிரன் பாகைகளைக் கூட்டிவரும் பாகை விழும் திசை.தூரம் :-## ராசியின் இயற்கை குணங்களின் படி ( 7 ம் அதிபதி + சுக்கிரன் )# சரராசியெனில் மிகவும் தொலைவான தூரத்திலிருந்தும்# ஸ்திரராசியெனில் உள்ளூர் / அருகிலிருந்தும்.# உபயராசியெனில் நடுத்தரமான தூரத்திலிருந்து.

மனைவியின் குணம் :-நல்ல மனைவி :-7 ம் அதிபதி அல்லது சுக்கிரன், குரு அல்லது சுக்கிரனால் பார்க்கப்பட.# 7 ம் அதிபதியுடன் சுபர் இணைவு / சுப நவாம்சம் கேந்திரத்தில் பெற.# 7 ம் பாவத்தில் குரு இருக்க.# 7 ம் அதிபதி 4 ல் அல்லது 10 ல் இருக்க.# 7 ம் பாவத்தை / அதிபதியை சுபர் பாரக்க.# கடகம் 7 ம் வீடாகி அதில் செவ்வாய் மற்றும் சனி இருக்க, அழகான மற்றும்நன்நடத்தையுடைய மனைவி அமைவாள்.# 7 ம் அதிபதியாக சூரியன் அல்லது சுக்கிரன் இருந்து சுபரால் பார்க்கப்பட# பலம்மிக்க 7 ம் அதிபதி குருவோடு இணைய அல்லது பார்க்கப்பட.# சிம்மம் 7 ம் வீடாகி,சுபரால் பார்க்கப்பட.# 7 ம் பாவத்தில், 7 ம் அதிபதியாகி,புதன் உச்சம்பெற.துஷ்ட மனைவி# 7 ம் பாவத்தில் சூரியன் அல்லது 7 ம் அதிபதியின் நவாம்சாதிபதி அசுபராக.அவனுக்கு விருப்பமற்ற மனைவியமைவாள்.# 7 ம் வீட்டில் சனியிருக்க, அருவருப்பான,நோயுள்ள, தீய வார்த்தைகளைப்பேசக்கூடிய மனைவியமைவாள்.# 7 ம் அதிபதி அல்லது சுக்கிரன், நீச நவாம்சம் பெற.# சூரியன் அல்லது சந்திரன் 7 ம் அதிபதியாகி,அசுபரால் பாதிப்படைந்து மற்றும்அசுபராசியில் அல்லது அசுப நவாம்சம் பெற.VIII.கணவனின் தன்மை :-நல்ல கணவன் :-# 7 ம் வீடு சொந்த வீடாகி அல்லது சுயநவாம்சமாகி,அதில் குரு அல்லது புதன் அல்லது சுக்கிரன் அல்லது சந்திரனிருக்க.# 7 ம் வீடு சுயவிடாகி அல்லது சுயநவாம்சமாகி அதில் செவ்வாயிருக்க, காதல்கணவனாகி,ஆனால் கோபமிக்கவனாக அமைகிறான்.# இரட்டைப்படை ராசியில் சுபரிருக்க மற்றும் 7 ம் வீடு சுபர் தொடர்பு பெற.# 8 ம் வீட்டில் சனியிருக்க, உண்மையான கணவன் அமைகிறான்.தீய கணவன் :-# பலங்குறைந்த 7 ம் வீடு, 7 ல் உள்ள கிரகம் சுபர் பார்வை பெறாதிருக்க,தொழிலற்ற கணவன் அமைவான்.# 7 ம் வீட்டில் புதன் மற்றும் சனி இருக்க ஆண்மையற்ற கணவன் அமைவான்# ராசி அல்லது நவாம்சத்தில்,7 ம் வீடு,சுயவீடாகி,சனி அதிலிருக்க,வயது முதிர்ந்தமற்றும் முட்டாளான கணவனைக் கொடுக்கிறது.# 8 ம் வீட்டில் சனியிருக்க , நோயாளி கணவனைக் குறிகாட்டுகிறது.# லக்னத்தில் அல்லது 8 ம் பாவத்தில்,ராகு அல்லதி கேது இருக்க இழிவானமற்றும் அசுத்தமான கணவன் அமைகிறான்.# நவாம்சத்தில்,சரராசியில் 7 ம் வீடு மற்றும் 7 ம் அதிபதி அமைய எப்போதும்வீட்டைவிட்டு வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் கணவனே அமைகிறான்.# கும்பமே 7 ம் இடமாகி தன் சுயவீட்டில், எவ்வித சுபர் தொடர்புமற்ற சனிவயது முதிர்ந்த கணவனைக் குறிகாட்டுகிறான்.எவ்வகையான திருமணம் ?# காதல் திருமணம் ( முதற் காதல்,பிறகு திருமணம். ) :-# மிகச்சிறந்ததாக,5 / 7 / 9 / 10 அல்லது 11 ம் வீடுகளில்,5 ம் அதிபதியும் 7 ம்அதிபதியும் இணைவு அல்லது திரிகோண பரிவர்த்தனை அல்லது 3 / 11 தொடர்புஆகியவை காதற் திருமணத்தை நிறைவேற்றும்.மேற்கண்ட இணைவுகள் 6 / 8 /12 ல் விழ காதலர்கள தங்கள் காதலைத் தியாகம் செய்துவிட்டு,பிரிவுக்கு உடபடுத்தப்பட்டு,வேறொரு, தெரியாத நபரை மணக்க நேரிடும்.# காதல் திருமணத்திற்கு, 5 ம் வீடு, சந்திரன்,செவ்வாய், சுக்கிரன் அல்லது ராகுவால்பார்க்கப்பட்டு மற்றும் பலமற்ற 9 ம் வீடும் அமைய வேண்டும்.# 5 ம் வீடு / 5 ம் அதிபதி ,7 ம் வீடு / 7 ம் அதிபதி ராகு / கேதுக்களின் இணைவுஅல்லது பார்வை பெற .# 7 ம் அதிபதி 5 ல் இடம்பெற்று, சுக்கிரன் சூரியன், செவ்வாய் அல்லது ராகுவால்பாதிப்படைய.# 5 ம் அதிபதி இருக்குமிடத்தில், ராகு அல்லது கேது உச்சம்பெற.# குரு அல்லது சுக்கிரனை ,ராகு அல்லது கேது பார்வைபுரிய.# லக்னத்தில் ராகு இருக்க# 7 ல் சனி + கேது இருக்க.# 9 ம் வீட்டில் சுக்கிரன் இருக்க.# சந்திரன்,லக்னாதிபதி மற்றும் 7 ம் அதிபதி லக்னத்தில் அல்லது 7 ம் இடத்தில்இடம்பெற.# 7 ம் அதிபதியோடு செவ்வாய் லக்னத்திலிருக்க / 7 ம் வீட்டிலிருக்க அல்லது 5 ம்அதிபதியோடு 5 ம் வீட்டிலிருக்க.# சுக்கிரன்,லக்னாதிபதியோடு லக்னத்தில் அல்லது 7 ம் வீட்டில்,7 ம் அதிபதியோடுஇருக்க.# 7 ம் அதிபதியோடு, லக்னாதிபதி பரிவர்த்தனையாக.# 7 ம் அதிபதி 7 ம் வீட்டிலிருக்க.# 5 ம் அதிபதியோடு அல்லது 9 ம் அதிபதியோடு லக்னாதிபதி பரிவர்த்தனையாக /பார்க்க அல்லது இணைய.# 5 ம் அதிபதி 9 ம் அதிபதியோடு இணைய அல்லது 7 ம் அதிபதி 9 ம் அதிபதியோடுஇணைய.# 5 ம் வீட்டிலோ,அல்லது 9 ம் வீட்டிலோ செவ்வாய் இருக்க மற்றும் 7 ம் அதிபதியோடு 11 ம் அதிபதி பரிவர்த்தனை பெற.# லக்னத்திலிருந்து அல்லது சந்திரனிலிருந்து 5 ம் இடத்தில் சுக்கிரனிருக்க.# லக்னாதிபதியைவிட, 8 ம் அதிபதி பலம்பெற்றவராகயிருக்க மற்றும் 9 ம் வீடும்,குருவும் பாதிப்படைய, கீழ் சாதிப் பெண்ணுடன் திருமணம் நடக்கும்.# # வெற்றிகரமான காதல் திருமணம்:-# ராசி மற்றும் நவாம்சக் கட்டங்களிலும், செவ்வாயும்,சுக்கிரனும் பரிவர்த்தனை # கட்டங்களில்,ஆணின் செவ்வாயும், பெண்ணின் சுக்கிரனும், இணைய அல்லதுபார்க்க. இதுவே மாறி வர.# ஆணின் குரு, பெண்ணின் சுக்கிர ராசியிலிருக்க.## வெற்றிபெறாத காதல் திருமணம் :-# ஆணின் ராகு, பெண்ணின் சுக்கிர ராசியில் அல்லது மாறிவர விவாகரத்துஅல்லது தொடரும் துன்பம்.# ஆணின் சுக்கிரன், பெண்ணின் சனியின் ராசியில் அல்லது மாறிவர.நீண்டுகொண்டேயிருக்கும் கவலைகள் மற்றும் கஷ்டங்கள்.# ஆணின் சுக்கிரன்,பெண்ணின் ராகுவின் ராசியில் ஆணின் மூர்க்கத்தனமானகாம வெறியால் விவாகரத்து ஏற்படலாம்.# ஆணின் சுக்கிரன், பெண்ணின் சூரிய ராசியில் விவாகரத்து அல்லது பிரிவினை.# பெண்ணின் செவ்வாய், ஆணின் ராகு ராசியில் பெண்ணின் மூர்க்கத்தனமானகாம வெறியால் விவாகரத்து ஏற்படலாம்.ஜாதிவிட்டு ஜாதி மாறி திருமணம் :-# லக்னாதிபதி 7 ம் பாவத்திலிருந்து, சனியால்பார்க்கப்பட.# 9 ம் அதிபதி குருவாகி, சனி மற்றும் ராகு அல்லது கேதுவால் குரு, 7 ம் வீடு,9 ம் வீடு அனைத்தும் பாதிக்கப்பட.# புதன் பாகை + 7 ம் அதிபதி பாகையின் கூட்டுப் பாகை, சனி, ராகுவால் பாதிக்கப்# சுக்கிரன் பாகை + 7 ம் அதிபதி பாகை + 9 ம் அதிபதி பாகையின் கூட்டுப்பாகை,சனி மற்றும் ராகுவால் பாதிக்கப்பட.# 2 ம் பாவம் பாதிக்கப்பட, சுக்கிரன்,சனியோடு அல்லது ராகு மற்றும் லக்னத்தோடுதொடர்புற,சந்திரன் மற்றும் சுக்கிரன் 7 ம் பாவதிபதியோடு தொடர்பு கொள்ள# காதலுக்கான இணைவுகள்,ஜாதிமாறித் திருமண இணைவுகள் 6 / 8 / 12 ல ஏற்படஅல்லது ஒருவரின் சுக்கிரன் மற்றவரின் சனியின் ராசியில்,ராகு, சூரியராசியில்மறுமணம் :-# இறப்பு மற்றும் விவாகரத்துக்குப் பிறகு மறுமணம் நியாயமாக கருதப்படுகிறது.


பொதுவாக,மனைவிகளின் எண்ணிக்கை, 7 ம் அதிபதியின் நவாம்ச எண்ணிக்கைஅல்லது 7 ம் அதிபதியை பார்க்கும் கிரகங்களின் எண்ணிக்கையைப் பொருத்துஅமைகிறது. குறிப்பிட்ட யோகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:-திருமண நிலைகள் -- 51. ஆணின் மறுமணம்.:-# இரு திருமணங்கள் :-# லக்னாதிபதி லக்னத்தில்# 8 ம் அதிபதி 7 ல் அல்லது லக்னத்தில்# 6 ம் வீட்டில் லக்னாதிபதி.# 6 ம் வீட்டில், 2 ம் அதிபதி மற்றும் 7 ம் வீட்டில் அசுபர்.# 7 ம் அதிபதி அல்லது சுக்கிரன், சுபரோடு இணைந்து, நீச வீட்டில் அல்லது பகை வீட்டிலிருக்க மற்றும் 7 ம் வீட்டில் அசுபரிருக்க.# அசுபரால் சுக்கிரன் பாதிக்கப்பட.# 7 ம் வீட்டில், ராகு அல்லது கேதுவுடன் இணைந்து சுக்கிரனிருக்க,அதுவே,அவனின் உச்ச வீடு அல்லது சுயவீடாக.# லக்னாதிபதி, லக்னத்திலிருக்க மற்றும் 2 ம் அதிபதி, 7 ம் அதிபதியோடுபரிவரத்தனையாக.# 7 ம் அதிபதி பாதிக்கப்பட மற்றும் சுபரோடு,சுக்கிரன் இணைய.# 7 ம் அதிபதியோடு ,சனி இணைய.# 7 ம் அதிபதி மற்றும் ராகு தொடர்புற.# வாழ்கின்ற இரு மனைவிகள் அல்லது ஒருத்தி மனைவி மற்றவள் காதலி :-# பாதிப்படைந்த 7 ம் வீட்டில்,பலமற்ற 7 ம் அதிபதி இருக்க.# பாதிப்படைந்த 2 ம் வீட்டில்,பலமற்ற 2 ம் அதிபதி இருக்க.# 12 ல் செவ்வாயிருக்க,7 மற்றும் 8 ம் வீடுகள் பாதிப்படைய.# லக்னாதிபதி அல்லது 7 ம் அதிபதி நீசமாக அல்லது பகைவீட்டிலிருக்கஅல்லது அஸ்தமனமாயிருக்க.# 7 ம் வீட்டில் சூரியன்,ராகு இணைந்திருக்க.# 7 ம் வீட்டில்,7 ம் அதிபதியாக ,புதனிருக்க மற்றும் சுபர் இணைவில்லாமல்சுக்கிரனிருக்க.# லக்னாதிபதி ,லக்னத்திலிருக்க மற்றும் 2 ம் அதிபதியும் 7 ம் அதிபதியும்பரிவர்த்தனையாக.# மூன்று திருமணங்கள் :-# 2 ம் வீட்டில் அல்லது 7 ம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட அசுபரிருக்க,அவர்கள் முறையே 2 ம் அதிபதியாலும் 7 ம் அதிபதியாலும் பார்க்கப்பட.# 7 ம் அதிபதி நீசமாக அல்லது பகைபெற அல்லது அஸ்தமனமாக மற்றும்லக்னத்தில் / 2 ம் பாவத்தில் / 7 ம் பாவத்தில் அசுபர் இடம்பெற.# மூன்றுக்கு மேற்பட்ட பெண்கள் அல்லது திருமணங்கள் :- # பலம் மிக்க சந்திரன், சுக்கிரன் இணைவு.# 7 ம் அதிபதி, 11 ம் அதிபதி இணைவு அல்லது 7 ம் அதிபதி ,லக்னாதிபதிஇணைவு.# லக்னத்தில் ஒரு கிரகம் உச்சம்பெற.# உச்ச நிலையில் அல்லது சுயவீட்டில் லக்னாதிபதி இருக்க.# பலம் மிக்க சுக்கிரன் 7 ம் பாவத்திலிருக்க அல்லது பார்க்க.# பலம் மிக்க 7 ம் வீட்டில் சந்திரன்,சுக்கிரன் இணைந்திருக்க அல்லது பார்க்க.# 7 ம் அதிபதி மற்றும் சுக்கிரன் ஆகியோருடன் உள்ள கிரகங்களின் எண்ணிக்கை.# 7 ம் வீட்டில் அசுபருடன் இணைந்த லக்னாதிபதி + 2 ம் அதிபதி + 6 ம் அதிபதி.# சனி 7 ம் அதிபதியாகி அல்லது 2 ம் அதிபதியாகி, அசுபரால் பாதிப்படைய.# 7 ம் அதிபதிக்கு, 3 மிடத்தில் பலம் மிக்க சந்திரனிருக்க.# 3 ம் வீட்டில் 2 ம் அதிபதியும் 12 ம் அதிபதியும் இணைந்திருந்து குரு அல்லது9 ம் அதிபதியால் பார்க்கப்பட.# சுபவர்க்கத்தோடு கூடிய 7 ம் அதிபதி, கேந்திரம் அல்லது திரிகோணமேறமற்றும் 10 ம் அதிபதியால் பார்க்கப்பட.# 7 ம் அதிபதி மற்றும் 11 ம் அதிபதி அல்லது 7 ம் அதிபதி மற்றும் லக்னாதிபதிஇணைந்திருக்க அல்லது பரஸ்பர பார்வைபுரிய.# 5 ம் அதிபதியுடன்,7 ம் அதிபதி 11 ல் இணைய,3 ம் அதிபதியால் பார்க்கப்பட.2. பெண்ணின் மறுமணம் :-இம் மறுமணம் எப்போது நியாயப்படுத்தப்படுகிறது ?# 12 வருடங்களுக்கும் மேலாக, கணவன் எங்கிருக்கிறான் எனத் தெரியாமலிருக்க.# கணவன் சன்யாசம்பெற.# திருமணச் சடங்குகள் நிறைவுறும் முன் கணவன் இறந்துவிட.# ஆண்மையற்ற மற்றும் தீய குணமுள்ள கணவனாக.பெண்ணின் மறுமணத்திற்கான இணைவுகள் :-# 7 ம் வீட்டில் சந்திரன்,சனி இணைய அல்லது செவ்வாய்,சனி இணைய.# சுப,அசுபர் இணைந்து 7 ம் விட்டிலிருக்க.# 8 ம் அதிபதி லக்னத்திலிருக்க.# நவாம்சத்தில் செவ்வாய் மற்றும் சுக்கிரன் பரிவர்த்தனை பெற.# லக்னத்தில் ,சூரியனும் ராகுவும் இணைந்திருக்க மற்றும் 7 மிடத்தை குருபாரக்க.# ரிஷபம் லக்னமாகி, 4 ல் செவ்வாயும், 2 ல் சுக்கிரனுமிருக்க.# சுய வீடே லக்னமாகி, செவ்வாயிருக்க, 7 ம் வீட்டில் புதன் இருக்க மற்றும் 7 ம்அதிபதி ( சுக்கிரன் ) 8 ல் இருக்க.# சுக்கிரனின் ராசியிலும்,சனியின் திரிம்சாம்சத்திலும் லக்னம் அல்லது ராசிஅமைய.# 2 ம் இடம் உபய ராசியாகி அதில் 7 ம் அதிபதி அல்லது சுக்கிரனிருக்க.பெண்ணின் குணங்கள் :-திரிம்சாம்ச பகுப்பாய்வு :-கீழ்க்கண்ட அட்டவணையை உபயோகித்து பெண்களுக்கு பலனுரைக்கும்போதுசரி செய்யமுடியாத அளவுக்கு, அவர்களின் உணர்வுகள் புண்படாதவாறு மிகவும்முன்ஜாக்கிரதையுடன் சொல்ல வேண்டும். ஜாதகரின் பிறந்தநேரம் சரியானதுதான் என உறுதிப்படுத்திய பின்னரே இவ்வட்டவணை உபயோகப்படுத்தப்பட வேண்டும். ஏனெனில்,சில நிமிட வித்தியாசமும் தவறான முடிவைஅளிக்கலாம்.ராசி லக்னம்/சந்திர ராசி திரிம்சாம்ச லக்னம்செவ்வாயின் சனியின் குருவின் புதனின் சுக்கிரனின்ஆண்மையுள்ள கள்ளவுறவுவைத்தல் இராணி ஆண்தன்மை முறையற்றவுறவுஅவள் நினைத்ததைசாதிப்பவள் கணவன்மரணம். நற்குணங்கள் கலைகளில்வல்லவர் ஒழுக்கமற்றபூப்பெய்துவதற்குமுன்னே ஒழுக்கக் நாட்டியக்காரி கற்புள்ள இரட்டைகுணம் பாவப்பட்டபிறவிசூதுநிறைந்த கற்புள்ள நற்குணமுள்ள கள்ளவுறவுவைத்தல்நல்லவள் குறைவானகாம இச்சை கற்புள்ள திறமைமிக்க கள்ள வுறவுகொள்பவள்பாவப்பட்டபிறவி இரண்டாவதுகணவனைமணந்துகொள்பவள் கற்புள்ள திறமைமிக்க மரியாதைக்குரியவள்10,11 வேலைக்காரி கீழ்த்தரமானமனிதர்களைவிரும்புபவள் கற்புள்ள பாவப்பட்டபிறவி புத்திரபாக்கியமற்றபிரிவினை மற்றும் விவாகரத்து :-# 7 ம் அதிபதி 12 ம் அதிபதியோடு பரிவர்த்தனை மற்றும் 7 ம் வீட்டில் சனி,ராகு,அல்லது செவ்வாய் இருக்க.# 7 ம் அதிபதி மற்றும் 12 ம் அதிபதி திருக் ஸ்தானத்தில் மற்றும் 7 ம் பாவத்தில் அசுபர்.# 7 ம் அதிபதி 12 ம் வீட்டில் மற்றும் 6 ம் அதிபதியால் பார்க்கப்பட்ட அசுபர் 7 ம்வீட்டில் இருக்க.# சூரியன் 7 ல், 7 ம் அதிபதி அல்லது சுக்கிரன் நீசமாக / பகையாக / அஸ்தமனமாக# ( பெண்களுக்கு ) 7 ம் வீட்டிலுள்ள சூரியனை, ராகு அல்லது சனி பார்க்க.# 2 ம் அதிபதி, 7ம் அதிபதியுடன் பரிவர்த்தனையாக,ராகு அல்லது கேதுவால்பாதிக்கப்பட.# லக்னம் / லக்னாதிபதி / 7 ம் வீடு / 7 ம் அதிபதி / 2 ம் அதிபதி ---- குருவால்பார்க்கப்பட அல்லது இணைய.,அதிகமான பிரச்சனைகள் இருந்தாலும் தொடர்ந்துவாழ்க்கை நடத்துவர்.# 7 ம் வீட்டில், சந்திரன்,சனி இணைவு ஏற்பட ,கணவன் உயிரோடு இருக்கும்போதேமனைவி வேறு ஒருவனை மணம் முடிப்பாள்.# சனி மற்றும் ராகு லக்னத்தில் இருக்க மற்றும் 7 ல் ஒரு அசுபர் இருக்கவாழ்வில் மனைவியால் அவமானம் ஏற்படும் என்கிற பயத்தால்,மனைவியை கைவிட்டுவிடுவான்.# 7 ம் வீட்டில் சூரியன்,ராகு மற்றும் செவ்வாய் இருக்க. ( பெண்ணின் ஜாதகத்தில்).2. தற்கொலை :-# அசுபர், சுக்கிரனுக்கு 4 அல்லது 8 ம் இடத்தில் ( ஆணின் ஜாதகத்தில் ) இருக்கஅவனின் மனைவி தற்கொலை புரிந்து கொள்வாள் என்பதைக் குறிகாட்டுகிறது.# அசுபர் லக்னத்தில் இருக்க, 7 ம் அதிபதி மற்றும் லக்னாதிபதி இருவரும் 8 ல்இருக்க, அந்த ஜாதகர் தற்கொலை செய்துகொள்வார் என்பதைக் குறிகாட்டுகிறது.3. துணையைக் கொலை செய்தல் :-# மனைவியைக்கொலை செய்தல்:# சுக்கிரன் 7 ல் மற்றும் சந்திரன் 12 ல் இருக்க.# சுக்கிரன் 7 ல் / திருக் கில் இருக்க, 7 ம் வீட்டிலுள்ள 8 ம் அதிபதி மற்றும்சந்திரனை ராகு மற்றும் செவ்வாய் பார்க்க வரதட்சிணைக்காகக் கொலைசெயவார்.# கணவனைக் கொலை செய்தல் :# புதன் பாதிக்கப்பட்டு 7 ம் அதிபதியாக மற்றும் நீசமாக அல்லது 6 / 8 ல் இருக்க அல்லது பாபகர்தாரியிலிருக்க.# 7 ல் மூன்று அசுபரிருக்க.# ஒரு ஆணின் ஜாதகத்தில், 7 ம் வீட்டில், செவ்வாய் மற்றும் சனியிருக்க.மற்றும் திருக் ஸ்தானத்தில் 7 ம் அதிபதியிருக்க.# 7 ல் சூரியன் மற்றும் திருக் கில் 7 ம் அதிபதி இருக்க.4. துணை துறவு பூணுதல் :-# சனியின் திரிகோணத்தில்,சந்திரராசி அல்லது சனி / செவ்வாய் / சந்திரன்நவாம்சத்தை சனி பார்க்க.# பலமற்ற சனி மற்றும் லக்னாதிபதி.# 6 ம் அதிபதி அல்லது 8 ம் அதிபதியோடு, 9 ம் அதிபதியும், 10 ம் அதிபதியும்இணைய.# லக்னத்தில் அல்லது 10 ம் வீட்டில் அல்லது 12 ம் வீட்டில், பலமற்ற சூரியன் +சந்திரன் + குரு இருந்து, சனியால் பாரக்கப்பட.# ஒரு ராசியில் 4 அல்லது 5 கிரகங்களிருக்க.# லக்கினமும்,10 ம் இடமூம் சூரியன்,சனி மற்றும் ராகுவால் பாதிப்படைய.பெண் சன்யாசியாதல்# 7 ம் வீட்டில் அசுபரும், 9 ம் வீட்டில் சுபரும் இருக்க.# இரட்டைப்படை ராசியில் லக்னம் அமைந்து,செவ்வாய்,புதன், குரு மற்றும்சுக்கிரன் ஆகியோர் மிகவும் பலம் பெற்றிருக்க, மிகவும் புகழ்பெற்ற சன்யாசிஆவார்XIII. பொருத்தம் தொகுப்பு :-# 7 ம் வீடு துணை, மணவாழ்க்கை , இசைந்த இனிய வாழ்க்கை / காமவாழ்க்கை.# லக்னத்திலிருந்து அல்லது ராசியிலிருந்து 7 ம் வீட்டில் சுபர் இருக்க அல்லதுபார்க்க அல்லது அவர்களின் அதிபதிகள் இருக்க அல்லது பார்க்க, அந்த பாவகாரகம் முன்னேற்றமடைகிறது, இல்லையெனில் இல்லை எனலாம். ( 5 ம்வீட்டுக்கும் இதுவே ) 7 ம் வீட்டில் அசுபர் ( உச்கம் / சுயவீடாகாத ) இருக்கஅதன் பலன் :-# சனியெனில் :- வறண்ட மணவாழ்க்கை.# செவ்வாயெனில் :- துணைக்கு குறைவான ஆயுள்.# ராகுயெனில்:- ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அல்லதுஜாதிவிட்டு தொடர்பு.# சூரியனெனில் :- கருத்துவேறுபாடுகள்,முரண்பாடுகள்.# 7 ம் அதிபதி:-# லக்னத்திலிருந்து,அல்லது 7 ம் வீட்டிலிருந்து, 7 ம் அதிபதி 6 / 8 / 12 ல் இடம்பெற மணவாழ்க்கை மகிழ்ச்சியற்றதாகிறது.# சந்தோஷமற்ற திருமண வாழ்க்கையை, வக்கிரம் பெற்ற 7 ம் அதிபதி தருகிறார்.# உபய லக்னங்களுக்கு, 7 ம் அதிபதி பாதகாதிபதி.எனவே ,சிறிதளவு, 7 ம் அதிபதிமீதான அசுப பாதிப்பு, மணவாழ்க்கையில் குழப்பங்களை ஏற்படுத்துகிறது.# சுக்கிரன் :-# சுக்கிரன்,செவ்வாய் இணைவு, அதிக காம வீரியமளிக்கிறது.# சுக்கிரன், சூரியன் இணைவு அல்லது சுக்கிரன், சனி இணைவு வீரிய சக்தியைக்குறைக்கிறது.# ஒன்றுக்கு மேற்பட்ட மணவாழ்க்கையை சுக்கிரன்,ராகு இணைவும் அல்லதுசுக்கிரன், கேது இணைவும் அளிக்கின்றன.# 2 ம் வீடு :-# 7 ம் வீட்டுக்கு, 8 ம் வீடு, 2 ம் வீடாவதால், துணைக்கு மாரக ஸ்தானமாகிறது.# அசுபர் 2 ம் வீட்டிலிருக்க, மணவாழ்க்கை பாதிக்கப்படுகிறது.# 8 ம் வீடு :-# துணைக்கு மாரக பாவம் மற்றும் பெண்ணுக்கு சௌபாக்கிய ஸ்தானம் ஆகும்.# 8 ம் வீட்டில் சூரியன்.செவ்வாய், சனி, அல்லது ராகு இருக்க,கணவனின்ஆயுளுக்கு பங்கமாகிறது.# 4 ம் வீடு :-# குடும்ப சந்தோஷம் :- அசுப தொடர்பு, குடும்ப வாழ்க்கை பாதிப்படைகிறது.# 5 ம் வீடு : புத்திரபாக்கியம் :# குழந்தையின்மை, வறண்ட மணவாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.# 12 ம் வீடு : படுக்கை சுகம் / காமவுணர்வில் திருப்தி.:# 7 ம் வீட்டிலிருந்து 6 ம் வீடு ,12 ம் வீடாவதால், 7 ம் வீட்டுக்கு எதிரி வீடாகிறது.அதாவது,( 7 ம் வீடு ) துணைக்கு மூன்றாவது நபருடனான தொடர்பைக் குறிகாட்டுகிறது.# ஒன்றுக்கு மேற்பட்ட மணவுறவை, சூரியன்,சனி அல்லது கேது இணைவு குறிகாட்டுகிறது.# 12 ம் வீட்டில் , சுக்கிரன் இருக்க பாதிக்கப்பட்ட மணவாழ்வை குறிகாட்டுகிறது.# விவாக சகம்  சுக்கிரன் சனி + லக்கினம் ) : பாதிப்படைய இல்லற வாழ்க்கையில் பாதிப்பு ஏற்படும் .# உறவுகள் :-# லக்னாதிபதி மற்றும் 7 ம் அதிபதி இருவரும் எப்போதும் நணபர்களல்ல,எனினும்லக்னாதிபதி / 7 ம் அதிபதி நிலைமாற்ற ஆய்வு கருத்தில்கொள்ளப்படலாம்.

# லக்னாதிபதி மற்றும் 7 ம் அதிபதி பரிவர்த்தனை,பரஸ்பர காதலைக் கொடுக்கிறது.# லக்னாதிபதி மற்றம் 7 ம் அதிபதி பரஸ்பர பார்வையும் பரஸ்பர காதலை நிலைநிறுத்துகிறது.# இருவரின் இணைவு நல்ல பொருத்தத்தை அளிக்கிறது.# லக்னாதிபதி 7 ம் வீட்டில் இருக்க துணையின் மீதான அன்பை அதிகரித்து,அவர்களின் சொல்படி நடக்கச் செய்கிறது.# லக்னாதிபதி மற்றும் 7 ம் அதிபதி லக்னத்திலிருந்து அல்லது 7 ம் வீட்டிலிருந்து 6/ 8,2 / 12 அல்லது 6 / 8 / 12. ம் வீடுகளில் இருக்க, எதிர்மறையான விழைவுகளைஉறவுகளில்,ஏற்படுத்திவிடுகிறது. லக்னாதிபதிமட்டு மெனில் ஜாதகர் எதிர்மறையானவராகவும், 7 ம் அதிபதிமட்டு மெனில், துணைவர் எதிர்மறையானவராகவும்அமைந்துவிடுகிறது.# ராசி மற்றும் ராசியதிபதி மற்றும் 7 ம் வீடு / 7 ம் அதிபதி உறவுகள் :# நல்ல மணவாழ்க்கை : -# ராசியதிபதி மற்றும் 7 ம் அதிபதி ஒருவராகி அல்லது நட்பாகி அல்லது 1 / 7ஆகவும் ஆக .நல்ல மணவாழ்க்கை ஏற்படுகிறது.# ராசியதிபதி,லக்னாதிபதி பரிவர்த்தனையாக.

அதிகரிக்கும்.

# இருவரும் 6 / 8 ஆக அல்லது 2 /12 ஆக இருக்க , மணவாழ்வில் கஷ்டங்கள்




This post is written by our group member TK-Ganesh Ram

ஜோதிட கேள்வி பதில் Group in facebook.

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Content is super, But the sentences are overlapped. Please correct it.

Unknown சொன்னது…

plz send this article to my mail. tk u sir

JK சொன்னது…

PLZ SEND THIS ARTICLE TO MY MAIL ID CAJEGANKUMAR@GMAIL.COM, CONTENTS ARE NOT CLEAR

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.