ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

வர்கோத்தமம்

வர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்! ராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்! ராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்! சிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார் உங்கள் மொழியில் சொன்னால், சாதாரணப் பேருந்து, மாடிப் பேருந்தாக மாறிவிடும்!
பலன்: அப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும்! இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும். கீழே பட்டியல் உள்ளது!
லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்! மற்ற பலன்கள்:
சூரியன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்குத் தலைமை ஏற்கும் தகுதியைக் கொடுக்கும்.
சந்திரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத மன வலிமையைக் கொடுக்கும். எதையும் சட்’டென்று புரிந்து கொள்ளும் தன்மையைக் கொடுக்கும்
செவ்வாய் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஆற்றலை, செயல் திறனைக் கொடுக்கும்
புதன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத பேச்சுத் திறமையைக் கொடுக்கும்.
குரு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத புத்திசாலித்தனத்தைக் கொடுக்கும்
சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அழகையும், கவரும் தன்மையையும் கொடுக்கும்
சனி வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதப் பொறுமையையும், சகிப்புத்தன்மையையும் கொடுக்கும்
ராகு வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீதத் துணிச்சலைக் கொடுக்கும் கேது வர்கோத்தமம் பெற்றால் அது ஜாதகனுக்கு அதீத ஞானத்தைக் கொடுக்கும்
இது தவிர, வர்கோத்தமம் பெறும் கிரகம், ஜாதகத்தில் அது எந்த பாவத்திற்கு/வீட்டிற்கு உரியதோ, அந்த வீட்டிற்கான பலன்களை உரிய நேரத்தில் வாரி வழங்கும் இவை எல்லாமே பொதுப்பலன்கள். தனிப்பட்ட ஜாதகங்களுக்கு இந்தப் பலன்கள், மற்ற கிரகங்களின் பார்வை, சேர்க்கை, வக்கிர நிலைமை, அஸ்தமனம், போன்ற இதர விஷயங்களை வைத்துக் கூடலாம், அல்லது குறையலாம், அல்லது இல்லாமலும் போகலாம். அது அவரவர் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்தது.
ஏழாம் வீட்டு அதிபதி, ராசி & நவாம்சம் இரண்டிலும் ஒரே இடத்தில் வர்கோத்தமம் பெற்றிருந்தால், ஜாதகனுக்கு, அசத்தலான மனைவி கிடைப்பாள். ஜாதகியாக இருந்தால் அசத்தலான கணவன் கிடைப்பான். இதே பலன், பத்தாம் வீட்டிற்கு எனும் போது, ராசியிலும், தசாம்ச சக்கரத்திலும்,
பத்தாம் வீட்டு அதிபதி வர்கோத்தமம் பெற்றிருக்க வேண்டும். பெற்றிருந்தால், ஜாதகனுக்கு அசத்தலான வேலை கிடைக்கும் அல்லது அசத்தலான தொழில் அமையும்!
வர்க்கோத்தமம் கிரக பலன்கள்
அவரவர் ஜாதக ராசிக்கட்டத்தில் சில கிரகங்கள் மட்டும் ராசி நவாம்சம் இரண்டிலும் ஒரே ராசியில் இருக்கும் . இப்படி அமையும் நிலையைத்தான் "வர்க்கோத்தமம்" என்கிறோம் . இப்படி உள்ள கிரகங்கள் உச்ச பலனை தருகிறது. இவர்களின் தசா காலம் நடக்க ஜாதகர் வெகு சிறப்பு அடைவர் . ஒன்றுக்கு மேற்பட்ட சுபர் பார்க்க யோகம் பன்மடங்காகும் . ஒருவரும் பார்க்கவில்லை எனில் ஏழை குடும்பத்தில் பிறந்தவராய் இருப்பார் . ஆயினும் என்றேனும் ஒருநாள் குப்பை மேட்டில் பிறந்தவர் ஆனாலும் கோபுர உச்சிக்கு செல்வர் .
சிலருக்கு லக்னம் ராசி - நவாம்சம் - திரேக்காணம் மூன்றிலும் ஒன்றாக அமைந்திருக்கும். இவர்கள் அதிர்ஷ்டசாலிகள் !! இப்படி பட்டவரை ஜாதக பொருத்தம் பார்க்காமலேயே கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று சொல்கிறது ஜோதிடம். ஆண் / பெண் இருவருக்கும் இப்படி அமைய அவர்களுக்குப் பிறக்கும் பிள்ளைகள் தெய்வீக அம்சம் கொண்டவர்களாய் விளங்குவர்

லக்னம் வர்கோத்தமம் பெற்று புதன் ஆட்சி / உச்சம் பெற வானசாஸ்திர வல்லுனராவார். லக்னேசன் வர்கோத்தமம் பெற ஆயுள் உள்ள மட்டும் சுகவானாய் விளங்குவார். லக்னத்தில் சுபர் நீச்சம் பெற்று வர்கோத்தமம் பெற இரட்டிப்பு வலு கிடைகிறது (எ.கா. : கடகலக்ன செவ்வாய் / மீனலக்ன புதன் )
லக்னம் / லக்னேசன் / சந்திரன் / சூரியன் இவர்கள் நால்வரில் இருவர் வர்கோத்தமம் பெற இறுதி வரை சுயநினைவுடன் மற்றவர் உதவி இன்றி படுத்த படுக்கையாகாது நிம்மதியாய் திடீர் என்று இறப்பர்
லக்னம் - லக்னேசன் வர்கோத்தமம் பெற மகிழ்வான மண வாழ்வமையும். சூரிய கேந்திரத்தில் சந்திரன் நின்று லக்னேசன் வர்கோத்தமம் பெற அடித்தள வாழ்க்கை முதலே சீரும் சிறப்புடையவராம் காலப்போக்கிலும் உயர்வுண்டு

GHT

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 கருத்துகள்:

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.