நேற்று நான் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன், ஒரு பிச்சைக்காரன் என்னிடம் வந்து சொன்னான்….
"அல்லாஹ்வின் பெயரால் ஏதாவது கொடுங்கள், "
நான் அவரைப் பார்த்து சொன்னேன்….
"நான் அல்லாஹ்வை நம்பவில்லை" எனவே நான் ஏன் அதை கொடுக்க வேண்டும் ???
அவர் என்னை முறைத்துப் பார்த்தார்...
ஆனால்....
நான் சொன்னேன் "சிவாயநம" என்ற பெயரில் நீங்கள் கேட்டால், நான் உங்களுக்கு 1,000 ரூபாய் தருகிறேன்.
அவர் என்னை முறைத்துப் பார்த்தார், ரயிலைச் சுற்றியுள்ளவர்களும் எங்களை ஆர்வமாகப் பார்க்கத் தொடங்கினர். பின்னர், நான் எனது திட்டத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றினேன்... அவர் சிவனின் பெயரைக் கொண்டு கேட்டால், நான் அவருக்கு "2,000 ரூபாய்" தருவேன் என்றேன்...
ஆனால், அந்த பிச்சைக்காரன் இதற்குத் தயாராக இல்லை மேலும், நானும் அவரின் கடவுள் பால் அவருக்கான நம்பிக்கையை உணர்ந்தவாறு ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.
ஆனால், இந்த சம்பவம் என்னை யோசிக்க வைத்தது.. சாப்பிட ஒன்றும் இல்லாத பிச்சைக்காரன் "பணத்தின் காரணமாக தனது மதத்தை சமரசம் செய்யமாட்டான்."
நடுநிலை இந்துக்கள் ஒரு பிச்சைக்காரனை விட அதிகமாகச் கேவலமாக இருக்கின்றனர் தன் மதத்தை காட்டிக்கொடுப்பதற்கும், தனது தனிப்பட்ட சுயலாபத்திற்காக (செல்வம் அல்லது பதவிக்காக) பேராசையில் மதச்சார்பற்றவனாக இருப்பதற்கும் எப்போதும் ஒரு காலில் நிற்கிறான்?
ஒவ்வொரு முஸ்லிமும் எந்த வயதிலும் தினமும் தொழுகை மேற்கொள்கிறான். ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஞாயிறு சர்ச் செல்கிறான். பெளத்தர்கள் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் புத்தரை பிரிந்து இருப்பதில்லை... இவர்கள் தமது குழந்தைகளிற்கு சிறுவயதில் இருந்தே தத்தமது மத கோட்பாடுகளை கூறி தம் மதத்தின் பாதுகாவலராக வளர்க்கின்றனர். ஒவ்வொருவரும் அவரது பெற்றோர்களால் சிறுவயதில் இருந்தே அவர்கள் மதத்துடன் நெருக்கமாக இணைக்கப்படுகின்றனர்...
ஆனால்...
இந்துக்களே! உங்களுக்கு ஏன் இந்த “ஏனோதானோ” மனநிலை? உங்கள் குழந்தைகளிற்கு எப்படி பிழைக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் நீங்கள் அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுப்பதில்லை. தேவாரம் பாட வெட்கம். சமய சின்னங்கள் அணிய வெட்கமா உங்களிற்கு? உங்களை நினைத்து நாம்தான் வெட்கி தலைகுனிய வேண்டும். மேலைநாட்டு மோகத்தில் உங்களும் உங்கள் சந்ததிகளையும் நீங்களே அழித்துக்கொண்டுள்ளீர்கள். அழகிய தமிழ் பெயர் வையுங்கள். தமிழ் பெயர் என்பதே இந்துப்பெயர்தான். அதில் சந்தேகம் வேண்டாம்! எமது மேலான இந்த சமயத்தை உங்கள் குழந்தைகளிற்கு கற்றுகொடுங்கள். இதிகாசங்களையும் புராணங்களையும் வெறும் கதைகளாக கூறாதீர்கள். அவற்றில் உள்ள மேலான நற்கருத்துக்களை பக்தியுடன் சேர்த்து ஊட்டுங்கள். தினமும் சூரிய வழிபாடு செய்யுங்கள். 6 மாதத்திற்கு ஒருமுறையாவது குடும்பத்தார் அனைவருடனும் குலதெய்வ கோவில் சென்று பொங்கல் வைத்து வழிபடுங்கள். எமது மேலான சமயத்தில் ஒன்றுமே தெரியாதவர்கள்தான் பணத்திற்காகவும், தமது சுயலாபத்திற்காகவும் மதம் மாறுகின்றனர். உங்களை தந்த இந்த தொன்மையான இந்து கலாச்சாரத்தை பேணி காப்பது உங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். கடவுளை நம்புங்கள்; அவரை மனதாரவும் உடல் அளவிலும் வழிபடுங்கள், அவர் புகழ் பாடுங்கள், இறை சேவை செய்யுங்கள். வியாபார நோக்கமாக மாறிவரும் சில ஸ்தாபனங்களையும், சில கோவில்களையும் நினைத்து வருந்தாதீர்கள். அங்குள்ள இறைவனை மட்டும் நினையுங்கள். நாம் அனைவரும் ஈற்றில் இணைய விரும்புவது இறைவனுடனே தவிர பிறருடன் அல்ல. பதி மட்டுமே உண்மை. பசு பாசத்தால் கட்டப்படுகிறது. அந்தவகையில் என்ன நடந்தாலும் யார் என்ன சொன்னாலும் எமது சிந்தனை இறைவனை நோக்கியே இருக்க வேண்டுமே தவிர சில குறைகளை நோக்கி இருத்தலாகாது. நீங்கள் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் உங்களை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பார். உங்கள் இஷ்ட தெய்வத்தை உளமார உணருங்கள்; பேசுங்கள், நன்றாக வழிபடுங்கள்... இந்து சமயம் வாழ வேண்டும். இந்துக்கள் ஓங்க வேண்டும். அடுத்தடுத்த தலைமுறையினரிற்கு இந்து சமயத்தை அதே புனிதத்தன்மையுடன் கொண்டு சேர்க்க வேண்டும்... அதற்காக இறைவன் மீது உறுதி எடுப்போமாக...
ௐ பிரம்மதேவாய நமஹ
ௐ நமோ நாராயணாய
ௐ நமசிவய
ௐ சக்தி
1 கருத்துகள்:
well said. agree with your comments
கருத்துரையிடுக