ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

வெள்ளி, 1 ஜூன், 2018

நவாம்சம் ஏன்? எதற்கு?
















சிவசிவ
வணக்கம் நண்பர்களே,

ஜோதிட சாஸ்திரம் - ஆம் ஜோதிடம் ஒரு சாஸ்திரம் ஆகும். இது எமது புனித சதுர்வேதத்தின் கண் ஆகும். சரி சாஸ்திரம் என்றால் என்ன? இறை கடாட்ச்சத்துடன் முன்னோர்களால் இது இப்படித்தான் என எழுதிவைக்கப்பட்டவை, முறையான கிரந்தங்களை கொண்டவை, தூய்மையானவை இதன் முழு விளக்கத்தினை சாஸ்திரமறிந்த பண்டிதர்களிடமோ அந்தணங்களிடமோ கேட்டு அறிந்து கொள்ளுங்கள். பொதுவாக ஜோதிடனை "சாத்திரியார்" என்று கிராமபுறங்களில் அழைப்பர். சாஸ்திர தர்மத்தினை கெடுப்போர் நீதிநெறிக்கு முரண்பட்டோர் ஆவார். ஆச்சார்யத்தினை மீறுவோர் விஷமிகள் ஆவர். ஜோதிட சாஸ்திரத்தில் ஆராச்சி என்றபேரில் சாஸ்திரத்தினை கொல்லும் கயவர்களை களை எடுக்க வேண்டும். நாம் செய்யாவிடினும் கட்டு போட்டுஇருக்கும் சாஸ்திர தர்மம் இதனை செய்யும்.

ராசியில் எப்படி இருந்தாலும் நவாம்சத்தில் உள்ள கிரகபலமே இறுதியானது என்பதெல்லாம் மிகவும் தவறான கருத்து. சிலர்  ஜாதகத்தில் ராசியில் சூரியன் மேஷத்தில் உச்சமாக இருப்பார். அவர் பரணி 3 ல் இருப்பதால் நவாம்சத்தில் துலாமில் இருப்பார். உடனே உங்களுக்கு சூரியன் ராசியில் உச்சமாக இருந்தாலும் அம்சத்தில் நீச்சமாகிவிட்டார். எனவே சூரியன் நீச்ச பலத்தையே கணக்கில் கொள்ளனும் என்பர். அவர்கள் என்ன கணக்கு போடப்போகிறார்கள் என்று தெரியவில்லை. வெறும் வாய்வார்த்தையில் “கணக்கு” என்பதுடன் சரி போலும்...

இங்கு கணக்கு என்பது ஷட்பல கணக்கு ஆகும். இதனை பழைய காலத்தில் 2-3 நாட்கள் ஒக்காந்து இருந்து கணிப்பர். இப்ப வாயில கணக்கு என்பதோட சரி 😠

என்ன முன்னுரை இப்படி உள்ளதே என சிந்தித்தது போதும். பதிவுக்குள் போகலாமா???

நவாம்சத்தில் கிரக பலம் அறிய வேண்டும் என்று ஜோதிடத்தில் எங்கும் கூறப்படவில்லை. (ஒருவேளை உங்களிடம் உரிய ஆதாரம் இருந்தால் காண்பிக்கலாம்.) கிரகங்களின் பலத்தை அறிய அதன் ஆறுவகை பலத்தில் ஒரு பிரிவாக வரும் வர்க்க சக்கரங்களில் கிரகங்கள் நின்ற பலனை எடுப்பர். அவ் ஆறுவகை பலத்தில் ஸ்தான பலம் என்ற பிரதான வகுப்பில் 5 உப வகுப்புகள் உள்ளன. அந்த ஐந்து உப வகுப்புக்களில் ஒன்றுதான் சப்தவர்க்க பலம். இந்த சப்தவர்க்கபலத்தில்தான் நவாம்சத்தில் குறித்த கிரகத்தின் பலம் எடுக்கப்படுகிறது. இந்த சப்தவர்க்க பலத்தில் ராசி, ஹோரா, திரேக்காணம், சப்தாம்சம், நவாம்சம், துவாதசாம்சம், திரிம்சாம்சம் என்பவற்றில் குறித்த கிரகம் நிற்கும் அடிப்படையில் பலம் கணித்து அதனை அக்கிரகத்தின் சப்தவர்க்க பலத்தில் கொண்டுவருவர். அதைவிடுத்து ராசியில் எப்படி இருந்தாலும் அம்சத்தில் உள்ள கிரக பலனை எடுப்பது முற்றிலும் தவறு. இது பற்றி கேட்டால் “எனக்கு அனுபவத்தில் சரியாக வருகிறது” என்று கூறி ஜோதிடர்கள் தப்பித்துவிடுகின்றனர் என்பது #கசப்பான_உண்மை. ஆனால் குழப்பவாதிகள் என்ன செய்கிறார்கள் என்றால், ராசிசக்கரத்தில், ஒரு ராசியில் இருக்கும் கிரகம், அம்சத்தில் வேறு ஒரு ராசியில் இருக்க, சம்பந்தப்பட்ட கிரகம், அம்சத்தில் நீசமாகிவிட்டது என்று தேவையில்லாத ஒரு கணக்கிட்டு, நீசத்திற்குரிய பலன் சொல்வது மிகப்பெரும் வேடிக்கை. அத்துடன், கல்வி, தொழில், திருமணம், சொத்துடைமை, போன்ற எல்லா பலனுக்கும் இந்த அம்ச சக்கரத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதுவும் மேற்கண்ட முறையில் உச்ச, நீசம் வேறு கணக்கிடுகிறனர். இது மிகப்பெரும் தவறாகும்.

ஒவ்வொன்றாக பார்ப்போம்... மாற்றம் ஒன்றே மாறாதது. இது அனைவருக்கும் ஒப்புக்கொள்வது. ஜோதிட சாஸ்திரமும் காலதேச வர்த்தமானம் அறிந்து பலன் உரை என ஆரம்பத்திலேயே அறிவுறுத்துகிறது. ஜாதக அலங்காரப்பிரகாரம் ஒரு கிரகம் உச்சமானால் தலைவன், ....... நான்கு கிரகம் உச்சமானால் சக்கரவர்த்தி என...  பொருந்தும் என கேட்பீர்களாயின்; இதற்கு விதிவிலக்குகள் ஏராளம் ஏராளம். முதலில் அவைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அடுத்து உச்சபங்க ஒரு விடயம் உள்ளது.... இதுகூட மூலநூல் கருத்துத்தான்.  இப்போது யார் வேண்டுமானாலும் சக்கரவர்த்தி ஆகலாமே... ஏன் ஜோதிடத்திலே சக்கரவர்த்திகள்? பலர் உலாவிக்கொண்டுள்ளனரே... தலைவன் என்றால் எத்தனையோ தலைவன் இருக்கலாம். ஏன் ஒரு முகநூல் குழுவிற்கு தலைவனாககூட இருக்கலாமே... என்ன இது சிறுபிள்ளைத்தனமான பேச்சு என நினைக்காதீர்கள். குதர்க்கமாக வாதிடுபவர்களுக்கு மீண்டும் ஒருமுறை மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை இங்கு நினைவுபடுத்துகிறேன்.
ஆம்... மூலநூல் கருத்துக்களை காலத்திற்கேற்ப பயன்படுத்த வேண்டும் என்பது நான் கூறி ஏற்கனவே ஜோதிட துறையில் இருப்பவர்களிற்கு தெரிய வேண்டியதில்லையே... அரசயோகம் என்றால் அது கவுன்சிலர் முதற்கொண்டு MLA, MP, EL MINISTER, CM, PMஎன அரச அதிகாரம் கொண்டு விரிவடையும். அடுத்து யோகபங்க கான்சப்ட். இதனை ஜோதிடத்தில் எத்தனைபேர் அறிந்து வைத்துள்ளீர்கள்? பிருகத் ஜாதகப்படி உள்ள யோகபடலத்தை பாருங்கள். அடுத்து ஆமேடம் எருது சுறா... என்றுவிட்டு அணைக்கு இந்த அமைப்பு உள்ளது அனால் நற்பலன் இல்லை என்றால்; ஜோதிடர்கள் இதனை மட்டுமா தூக்கிவைத்தா பலன் கூறுவது? ஜோதிடம் ஒரு மஹா சமுத்திரம்.

ஜோதிட ஆராய்ச்சியாளராக இருப்பது சிறந்ததே... அதற்குமுன் அவர் ஜோதிடராகஅல்லவா இருக்க வேண்டும்...

நவாம்சம் திருமண வாழ்க்கைக்குரிய பலன் மட்டுமே சொல்லும். தசாம்சம் தொழிலுக்குரிய பலன் மட்டுமே சொல்லும். ராசி சக்கரத்தில் களத்திர ஸ்தானத்தை வைத்து பலன் சொல்வதை விட நவாம்சத்தை கொண்டு சொன்னால் திருமன வாழ்க்கை பற்றிய துல்லிய பலன் சொல்லமுடியும். அதுபோல், ராசி சக்கரத்தில் கர்மஸ்தானத்தை வைத்து தொழில், பணி பற்றி பலன் சொல்வதை விட தசாம்சத்தை கொண்டு துல்லியமாக சொல்ல முடியும். இப்படி பலன் காண முனையும் போது இந்த சக்கரங்களில் எந்த கிரகம் எந்த ஸ்தானத்தில் இருக்கிறது. அது உச்சமா? நீசமா? என்று கணக்கிட்டு பலன் காண வேண்டும். ஆனால் அதை விடுத்து தொட்டதெற்கெல்லாம் நவாம்சத்தை மட்டும் வைத்துகொண்டு, அதில் உச்ச, நீசம் பார்த்து பலன் சொல்வது அறிவுடைமையாகாது.  ராசி சக்கரத்தை போல் உச்ச, நீசம் பார்த்து அம்சத்தில் பலன் சொல்லலாம் என்றால், ராசி சக்கரம் எதற்கு? ராசிசக்கரத்திற்கு சமமாக அம்ச சக்கரத்தை உச்ச நீசத்திற்கு பயன்படுத்தி பலன் பார்ப்பதாக இருந்தால், அஸ்தங்கம். வக்கிரம் ஆகியவற்றிற்கும் அம்ச சக்கரப்படி பலன் பார்ப்பீகளா? யோகங்கள், நீச்சபங்கம், அஸ்தங்கம், பரிவர்த்தனை, தசாபுக்தி, ராசிச்சந்தி என கூறிக்கொண்டே போகலாம் இவை எல்லாம் ராசிச்சக்கரத்தில் மட்டுமே உள்ளது. இவை நவாம்சசக்கரத்திலோ அல்லது வேறு எந்த வர்க்க சக்கரங்களிலோ இல்லை. ஏனென்றால் அவைகள் எல்லாம் துணைச்சக்கரங்கள்.அவற்றை பயன்படுத்தும் முறைகள் சாஸ்திரத்தில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளது. பிரதான சக்கரம் ராசிச்சக்கரமே...

ஒரே லக்கினத்தில் ஏறத்தாழ ஒரே நேரத்தில் பிறந்தவர்க்கு ராசிக்கட்டம் ஒரேபோல இருக்கும். ஆனால் பலன் வேறுபடுகிறது... இதன் காரணம் நவாம்சமே என்பவர்களிற்காக சில வரிகள்... சரி கூறுங்கள் ஒரே லக்கினத்தில் ஏறத்தாழ ஒரே நேரத்தில் பிறந்தவர்க்கு நவாம்சம் மட்டுமா மாறுகிறது? ஏனைய வர்க்க சக்கரங்கள் மாறவில்லையா? ஏன் அவைகூட காரணமாக இருக்கலாமே... கிரக சாரம் மாறுவது காரணமாக இருக்கலாமே... ஷட்பலம் மாறுபடுவது காரணமாக இருக்கலாமே... இதனை உங்கள் ஆய்வில் எடுத்துக்கொள்ளவில்லையா? ராசியில் ஒரேபோல இருந்தாலும் 16 வர்க்க சக்கரங்களில் கிரகங்கள் மாறுகின்றன. இதனால் பலன் மாறுகிறது, பலம் மாறுகிறது. அதாவது ஏற்கனவே கூறியதுபோல வர்க்கபலத்தின் அடிப்படையில். ராசியில் ஒரு கிரகம் என்ன பலம் பெற்றிருந்தாலும் அம்சத்தில் அது பெற்ற பலமே இறுதியானது என்பது மிகப்பெரிய தவறு. நவாம்சத்தின் மூலம் ஒரு கிரகம் பெற்ற சாரம், கிரக அஸ்தங்கம், இணைவின் நெருக்கம், திருமண வாழ்க்கை பற்றிய விரிவான பலன் மட்டுமே அறிய முடியும். வர்க்கோத்தமம் நவாம்சத்தில் மட்டும் பார்க்கபடுவதில்லை. மொத்தம் எத்தனை வர்க்கங்களின் அது ஒரே இடத்தில் உள்ளதென அறிந்து அதன் சுபத்தினை நிர்ணயம் செய்ய வேண்டும். ஆனால் தற்கால ஜோதிடர்கள் ராசியிலும் அம்சத்திலும் மட்டும் ஒரு கிரகம் ஒரே இடத்தில் இருந்தால் அது அபரிமிதமான பலன்களை செய்யும் என்று வாய்கூசாமல் சொல்கின்றனர். நவீன? நவநாகரீக? ஜோதிடர்கள் அடிக்கடி சொல்வதுபோல இதுவொன்றும் ஆராய்ச்சியோ ஆய்வோ அல்ல... இது #சாஸ்திரம்...

வர்க்க சக்கரங்களை எதற்கு எப்படி பயன்படுத்தவேண்டும் என்ற அறிவு ஜோதிடர்களிடம் இருக்க வேண்டும்.(வர்க்க சக்கரங்களில் ஒன்றான தசாம்ச சக்கத்தினை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று ஒரு பதிவு ஏற்கனவே செய்திருந்தேன். மக்களிடையே அது அதிக வரவேற்பினையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.) அது இல்லாமல் நவாம்சத்தினை கண்டவுடன் தெரிந்தது தெரியாதது என அனைத்தையும் அதில்வைத்தே வாந்தியெடுத்து விடுவது பல ஜோதிடர்களிற்கு வழக்கமாகிவிட்டது. ஜோதிட சாஸ்திரத்தை ஓரளவுக்கேனும் அறிய வேண்டும். அதற்கு மூலநூல்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்...

மூல நூல்கள் பலவற்றிலும் பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு சென்று விட்டார்கள். இந்த இந்த லக்னங்களுக்கு இது இது பொருந்தும் என்று சொல்லாமல் எல்லா லக்னத்துக்கும் பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டு சென்றதால் பல நேரங்களில் இந்த விதிகள் பலருக்கும் பொருந்துவதில்லை என்பவர்களிற்கும் மூலநூல் கருத்துக்களிற்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லை என்பவர்களும்  முடியும் என்றால், தொடர்ந்து வாசியுங்கள் அடுத்த பந்தியில்....

மூலநூல்களில் தேர்ச்சி பெற முடியாதவர்களும் முறையாக ஜோதிட சாஸ்திரம் கற்காமல் ஜோதிடத்தினால் வந்தவர்களும் பேசும் ஒருவகை தாழ்வு மனப்பாங்கான கூற்றுக்கள் இவை. அதாவது "எட்டாக்கனி புளிக்கும்" என்பதுபோல வைத்துக்கொள்ளுகளேன்... மூலநூல்களில் பொத்தம்பொதுவாக கூறப்படவில்லை. ஒவ்வொன்றும் மிகவும் நுணுக்கமாக கூறப்பட்டுள்ளது. மூலநூல்களை ரசித்து சுவைத்து ஆழமாக படித்தால் இது தெரியவரும். ஜோதிடத்திற்கு லாயக்கற்றவர்களாலும், அதனை புரிந்துகொள்ளும் திறன் இல்லாதவர்களாலும், அறிவுத்திறன் குறைந்தவர்களாலும் மூலநூல்களின் ஆழமான கருத்துக்களை புரிய வாய்ப்பில்லைதான்... இவ்வாறு எல்லாம் எதிர்காலத்தில் பேசுவார்கள் என்றுதான் அக்காலத்தில் ஒருவருக்கு ஜோதிடனாகும் தகுதி உள்ளதா என பரிசீலித்ததே தம் சிஷ்யனாக (மாணவனாக) கொள்வார்கள். ஆனால் இப்போது??? நான் கூறியா உங்களுக்கு தெரிய வேண்டும்??? பாரம்பரிய ஜோதிடத்தில் அடிநாதம் மூலநூல்களே... பாரம்பரிய ஜோதிடத்தில் இருந்தே ஏனைய ஜோதிட முறைகள் பிறந்தன, விரிவடைந்தன. பாரம்பரிய மூல நூல்கள் உதவியுடன் சில புதிய கருத்துக்களையும் புகுத்தியே k.p.முறை தோற்றுவிக்கப்பட்டது. இல்லையென்றால் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களைத்தான் கேட்க வேண்டும்...

எனது பதிவு பலர் நெஞ்சங்களை கலங்கடிக்கக்கூடும். உண்மையை கூறுவது தர்மமே... அதே சமயம் ஜோதிடத்தினை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் வளைத்தால் அதனை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. இதுவும் ஒரு கசப்பான உண்மையே... இது கசக்கத்தான் செய்யும். ஜோதிடராகவேண்டும் என்றால் அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களை நீங்களும் ஏமாற்றி மக்களையும் ஏமாற்ற வேண்டாம். இவ்வாறு நான் சற்று கடினமாக எழுதக்கூடாது என்றே நினைத்தேன்... ஆனால் பலர் கருத்திற்கு பதில்தரவேண்டியுள்ளதே... ஆகவே இதனை யாரும் தவறாக பாராமல் பதிவிலுள்ள உண்மையினை பாருங்கள்...

நன்றி.
பாரம்பரிய வேத ஜோதிடர்,
ஹரிராம் தேஜஸ்.

(விருப்பம் உள்ளவர்கள் எனது பக்கத்திற்கு சென்று எனது பக்கத்தை லைக் செய்துவிட்டு; பாரம்பரிய ஜோதிட மூலநூலான “பிருகத் ஜாதகம்” தொடர்பதிவாக பிரசுரித்து வருகிறேன். கொஞ்சம் சாஸ்திரம் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பிடித்திருந்தால் எனது பக்கத்தில் "see first" எனும் தெரிவைக்கொடுத்து உடனுக்குடன் எனது ஜோதிட பதிவுகளை பெற்றுக்கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள். சாஸ்திரம் அறிந்த ஜோதிடராக இருங்கள். அதுதான் உங்களுக்கும் நல்லது... ஜோதிடத்திற்கும் நல்லது... -  facebook.com/astrologerhariram )

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.