ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

சனி, 9 நவம்பர், 2019

மும்மூர்த்திகளின் மகா அஸ்திரங்கள்

மும்மூர்த்திகளும் தர்மத்தை நிலைநாட்ட தங்களின் குறிப்பிட்ட சக்தியை கொண்டு ஒரு அஸ்திரமும் (அஸ்திர வகை)

தங்களின் அதிகப்படியான சக்தியை கொண்டு ஒரு பெரும் அஸ்திரமும் உருவாக்கினர் (பிரம்மசிரஸ் வகை)


அவ்வாறே பிரம்மதேவருக்கு
#பிரம்மாஸ்திரம்
மற்றும்
#பிரம்மசிரஸ்
(பிரம்மாண்ட அஸ்திரம் என்று ஒன்று உள்ளதாக விக்கிபீடியா முதலிய பல இடங்களில் இருந்தாலும் அவைக்கான ஆதாரம் எங்கும் இல்லை

சப்தரிஷிகளால் உருவாக்கப்பட்ட பிரம்மதண்டத்தை அவர்கள் தவறாக ஊகித்து இருக்ககூடும்)

மகாவிஷ்ணுக்கு

#வைஷ்ணவாஸ்திரம்
மற்றும்
#நாராயணாஸ்திரம்

ஈசனுக்கு

#மஹேஸ்வராஸ்திரம் (நெற்றிக்கண் சக்தி)
மற்றும்
#பாசுபதாஸ்திரம்

இவ்வாறாக அஸ்திர வகையில் ஒன்றும் பிரம்மசிரஸ் வகையில் ஒன்றும் அவர்கள் கொண்டுள்ளனர்

😉அஸ்திர வகை

இதில் அஸ்திர வகையை சேர்ந்த பிரம்மாஸ்திரம் தடுக்க முடியாதது இலக்கை முழுவதுமாக அழிக்க கூடியது
திவ்யாஸ்திரம் எதையும் தடுக்கும் திறன்கொண்டது இராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் இதை பலர்கொண்டு இருந்தனர்

வைஷ்ணவாஸ்திரம் மற்றும்
மஹேஸ்வராஸ்திரம் இரண்டும் அடுத்தநிலையாகும் இது மும்மூர்த்திகள் தவிர வேறு எவராலும் தடுக்க முடியாது

இராவணன் மகன் மேகநாதனின் யமாஸ்திரம் முதலிய திக் பாலகர்களின் தடுக்க முடியாத அஸ்திரங்களை லட்சுமணன் மஹேஸ்வராஸ்திரம் கொண்டே தடுப்பார் மஹாபாரதத்தில் இதை எவரும் கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை

வைஷ்ணவாஸ்திரத்தை பொறுத்த வரை இராமாயணத்தில் இராமலட்சுமணர்கள் மற்றும் மஹாபாரதத்தில் கிருஷ்ணன், அர்ஜுனன் மற்றும் பகதத்தன் ஆகியோர் அறிவார்கள் இந்த அஸ்திரம் பகதத்தன் விட்டபோது கிருஷ்ணனின் மார்பில் மாலையாகும்

இராமாயணத்தில் மேகநாதன் பிரம்மாஸ்திரத்தின் சக்திகொண்டு தேருக்கு சக்தியூட்டினான் அதே போல பகதத்தன் வைஷ்ணவாஸ்திரத்தின் சக்திகொண்டு சாதாரண யானையை பத்தாயிரம் யானை பலம்கொண்ட பீமனால்கூட வீழ்த்தமுடியாத சுப்ரதீகமாக மாற்றினான்

😉பிரம்மசிரஸ் வகை

பிரம்மதேவரின் பிரம்மசிரஸ் அஸ்திரம் இது மொத்த உலகத்தையும் எரிக்கும் வல்லமை கொண்டது இராமாயணத்தில் இராமலட்சுமணர்கள் கொண்டிருந்தாலும் உபயோகிக்கவில்லை

மஹாபாரதத்தில் அஸ்வதாமன் பாண்டவர்கள் மீது இதை ஏவ கிருஷ்ணனின் சொல்படி அர்ஜுனன் அதை தணிக்க தனது பிரம்மசிரஸ் அஸ்திரத்தை விட உலகமே நடுங்குகிறது வியாசரும் நாரதரும் தோன்றி இருவரையும் பின்வாங்க சொல்கிறார் அர்ஜுனன் கடைப்பிடித்த விரதத்தினால் பின்வாங்குகிறான் அஸ்வதாமன் அதை பின்வாங்க முடியாததால் உத்தரையின் கர்ப்பத்தில் போடுவான்

😉பாசுபதாஸ்திரமும் நாராயணாஸ்திரமும்

😍பாசுபத அஸ்திரம்😍

சிவபுராணம் பிரம்மன் முதல் தாவரம் வரை அனைவருமே பசுக்கள் என்று கூறுகிறது இவர்களுக்கெல்லாம் தேவனாய் இருப்பதால் பசுபதி என்ற பெயர் ஈசனுக்கு உண்டு

பசுபதிநாதரின் அஸ்திரம் பாசுபதம் இது ஈசன் மற்றும் காளிக்கு தனிப்பட்ட அஸ்திரமாகும் இவ்வஸ்திரத்தை ஈசனிடம் இருந்து நேரடியாக மட்டுமே பெற முடியும் முருகப்பெருமான், சூரனின் குடும்பத்தினர், ராமபிரான் மற்றும் அர்ஜுனன் பெற்று இருந்ததற்கான சான்றுகளே உள்ளன இந்த அஸ்திரத்தை இந்திரன், எமன் கூட அறியமாட்டார்கள் என ஈசனே அர்ஜுனனிடம் கூறியுள்ளார்

(மூல மஹாபாரதத்தில் குருசேத்திர போரில் துரோணர், திருதராஷ்டிரனின் மைந்தர்கள் முதலியோர் பாசுபதம் என்ற பெயர்கொண்ட அஸ்திரத்தை பிரயோகித்து உள்ளதாக கூறப்பட்டு உள்ளது
துரோண பர்வம் 188
கர்ண பர்வம் 60

உண்மையில் அது ஈசனின் பாசுபதம் அல்ல அவ்வாறு இருந்திருப்பின் ஈசனின் சொல்படி அன்றே சிருஷ்டிக்கு நாசம் விளைந்திருக்கும் ஆனால் அந்த இடத்தில் அது எளிதாக தணிவடைந்ததையே அறிய முடிகிறது

திவ்யாஸ்திரங்கள் மொத்தம் 3000க்கும் மேற்பட்டவை இதில் இங்கு குறிப்பிட்ட அஸ்திரம் ஒன்றாக இருக்ககூடும் )

இதை தனியாக ஒருவர் மீது விடும்போது அவரின் திறன் மிக முக்கியம் காரணம் இவ்வஸ்திரத்தை சக்தி குறைந்தவர் மீது பிரயோகித்தோமானால் சிருஷ்டியையே நாசம் செய்துவிடும். அர்ஜுனன் ஜெயத்ரதன் மீது பாசுபதத்தை விட்டார் என பலர் சொன்னாலும் உண்மை அதுவல்ல ஒரு வேளை அவ்வாறு விட்டு இருந்தால் சிருஷ்டியையே பாதித்து இருக்கும்

கந்தபுராணத்தில் சூரனின் மகன் பானுகோபன் மற்றும் வீரபாகு ஒருவர் மீது ஒருவர் ஏவிக்கொள்கிறார்கள்

--- இதனால் முருகப்பெருமான் மற்றும் சூரனும் கூட இவர்கள் சண்டையினால் சிருஷ்டிக்கு பாதிப்பு வருமோ என்று ஐயமுறுகிறார்கள்

--- கடைசியில் சிருஷ்டியின் நலனுக்காக இருவரும் பின்வாங்குகின்றனர்

இதுவே பாசுபதம் ஒரு படையின் மீது ஏவப்படுமேயானால் படையில் ஒவ்வொருவரின் சக்திக்கேற்ப பலதரப்பட்ட நச்சுகொண்ட சக்தி வாய்ந்த பற்பல தலைகள் கொண்ட உயிரினங்கள் முதல் மலைகள், கடல்கள், தேவர்கள், கந்தவர்கள், முனிவர்கள், அசுரர்கள், யட்சர்கள், ஆவிகள், பூதங்கள் வரை அனைத்தும் தோன்றி படையினரை அழித்து ஒழிப்பார்கள்

உதாரணத்திற்கு தேவர்படையினர்மீது ஏவப்படுமேயானால் ஒவ்வொரு தேவர்களையும் அழிக்கும் திறன்கொண்ட தேவர்கள் தோன்றுவார்கள்

லட்சம் யானைபலம் கொண்டவனை அழிக்க பத்து லட்சம் யானைபலம் கொண்ட ஒருவன் தோன்றுவான்

--- கந்த புராணத்தில் சூரன் முருகப்பெருமான் படையின் மீது பாசுபதத்தை ஏவ ஈசனின் கனங்களையே வீழ்த்தும் நச்சு கொண்ட உயிரினங்கள் தோன்ற முருகப்பெருமான் அதை தனது பாசுபதம் வைத்து தடுக்கிறார்

--- பாரதத்தில் மிதக்கும் நகரமான அசுரர்களின் ஹிரண்யபுரத்தின் மீது அர்ஜுனன் பாசுபதத்தை விடுகிறார்

--- இங்கு வாழும் அசுரர்கள் மொத்தம் 60,000 பேர்கள் அனைவருமே பெரும் வீரர்கள் பாசுபதத்தில் இருந்து தோன்றிய ஜீவன்கள் அவர்களை அழித்தொழித்தது

கந்தபுராணத்தின்படி ஒருவர் ஈசனை மனதார பூஜித்து இருக்கும் வேளையில் அவரின் மேல் பாசுபதத்தை விட்டால் அது ஈசனிடமே சென்றுவிடும்

😍நாராயணாஸ்திரம்😍

நாராயணரின் அஸ்திரம் நாராயணாஸ்திரம் இதையும் விஷ்ணு பகவானிடம் இருந்து நேரடியாக பெற வேண்டும்

பாசுபதம் போலவே இந்த அஸ்திரமும் தனியாக ஒருவர் மீது பிரயோகிக்க அவரின் சக்தி முக்கியம் இல்லையேல் சர்வ நாசம் நிச்சயம்

அதே போல் படையின் மீது ஏவப்பட்டால் படையில் உள்ள ஒவ்வொருவரின் சக்தியை பொறுத்து அவர்களை அழிக்கும் அளவிற்கு சக்திகொண்ட அஸ்திரங்கள் தோன்றும்

-- அதாவது ஏவப்பட்டவுடன் படையில் எத்தனை பேர் உள்ளனரோ அத்தனை அஸ்திரமாக பிரியும்

-- பிறகு ஒவ்வொருவரின் சக்திக்கேற்ப அவர்களை அழிக்கும் அஸ்திரமாக மாறும் சாமான்யர்கள் என்றால் சாமான்ய அம்புகளாகவும் அதே அவரை அழிக்க ஆக்நேயம் தான் வேண்டுமென்றால் ஆக்நேயமாக மாறும்

முழு சமர்ப்பணம் செய்தால் அன்றி வேறு வழியில்லை உடலால் சமர்ப்பணம் செய்து மனதால் துளி எதிர்த்தால் கூட பதினான்கு லோகங்களில் எங்கு சென்றாலும் இந்த அஸ்திரம் விடாது

பாரதத்தில் அஸ்வதாமன் இதை பிரயோகித்த போது கதாயுதங்கள், சக்கரங்கள், கத்திகள், முதல் தெய்வீக சக்திகொண்ட அஸ்திரங்கள் வரை தோன்றியது கிருஷ்ணரின் அறிவுரையால் அனைவரும் சமர்ப்பணம் செய்ததால் தப்பி பிழைப்பர்

👑 பாசுபதம் மற்றும் நாராயணம் இவை இரண்டுமே ஒத்த சக்தியுடையவை. ஒன்றில் எதிரியின் சக்திகொப்ப ஜீவன்களும் மற்றொன்றில் எதிரியின் சக்திகொப்ப அஸ்திரங்களும் தோன்றும் மேலும் பக்தியினால் இவை இரண்டையும் தடுத்துள்ளனர்

அதே போல் இரண்டையும் அம்புகளால் மட்டும் இல்லை மனம் மற்றும் கண்ணால் கூட செலுத்த முடியும் (மற்ற அஸ்திரங்களை மனத்தாலோ இல்லை கண்ணாலோ ஏவ இயலாது)

இவ்விரு அஸ்திரங்களில் ஒன்றை ஒருவர் பெற்றாலும் அவர் தேவருக்கும் மேலானவராக கருதப்படுகிறார் காரணம் இந்த அஸ்திரங்களையும் பெறுவது சாமான்யம் இல்லை சிவன் அல்லது விஷ்ணுவை மகிழ்வித்து பெற வேண்டும்

😉தனிப்பட்ட ஆயுதங்கள்

பிரம்மதேவருக்கு என தனிப்பட்ட ஆயுதங்கள் இல்லை அவர் தெய்வீக விற்கள் மற்றும் ஆயுதங்களுக்கு எல்லாம் முதன்மையான பிரம்ம கத்தி முதலியவை செய்தாலும் அவர் அதை தர்ம நோக்கத்திற்காக விஷ்ணு மற்றும் ஈசனிடம் அளித்துவிடுவார்

ஈசனுக்கு திரிசூலமும் மகாவிஷ்ணுவிற்கு சுதர்சன சக்கரமும் தனிப்பட்ட ஆயுதங்களாகும் இவைகள் இரண்டும் எப்போதும் ஈசன் மற்றும் விஷ்ணுவின் கையில் ஏந்தப்பட்டு இருக்கும் இவை இரண்டையும் வெல்லும் ஆயுதம் எங்கும் இல்லை

பாசுபதம் நாராயணம் போல இவையும் சமசக்தியுடையவை இவை இரண்டையும் இவ்விருவர்களாலோ இல்லை இவர்களின் அம்சங்களாலோ மட்டுமே ஏந்த முடியும் மற்றபடி வரத்தின் காரணமாக இவைகள் வரமளிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பாக இருக்கும்

பாகவத புராணத்தின் படி அஸ்வதாமனின் பிரம்மசிரஸ் அஸ்திரத்தைகூட கிருஷ்ணனின் சுதர்சனம் தடுத்து நிறுத்தியது

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.