ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

வியாழன், 26 ஜூலை, 2018

ஆன்மீக பாதையில்...

ஆன்மீக பாதையில் தாய் தந்தை குரு கடவுள்.
=========================================

பாரம்பரிய வேத ஜோதிட ஆராய்ச்சி பதிவு
**************************************************

ஹரே ராம்
வணக்கம்,
லக்கினம் முதற்கொண்டு பலன் ஆராய்வதனை போன்று சற்று ராசிப்படியும் பலன்களை ஆராய்வது அவசியமாகும். திருமணத்திற்கு மட்டும் ராசிப்படி பலாபலன் அறிவது போன்று ஒவ்வொன்றிற்கும் ராசிப்படி கிரக ஆதிபத்தியம், தொடர்புகள் எடுத்து பலன் அறியபடவேண்டும். ஒரு ஜாதகத்தில் லக்கினமும் ராசியும் ஒன்றாக இணைத்துவைத்து பலன் அறியப்பட வேண்டியவை ஆகும். ராசி, லக்கினம் இவை இரண்டுமே ஒளிக்கிரகங்களால் வருவிக்கப்பட்டது. இதனை நாம் இப்படி அணுகலாம்,

லக்கினம் - சூரியனால் ஆட்கொள்ளப்படுவது - தந்தை.
ராசி - சந்திரனால் ஆட்கொள்ளப்படுவது - தாய்.

ஒரு ஜாதகத்தினை நுணுக்கமாக பார்த்தோமேயானால் எல்லா வகையிலும் ஜாதகரை ஆள்வது சூரியனும் சந்திரனும் ஆகும். இதனால்தான் சூரியனுக்கு கேந்திரத்தில் அல்லது திரிகோணத்தில் சந்திரன் இருப்பது மிகவும் சிறந்த அமைப்பாக சொல்லப்படுகிறது. குறைந்தபட்சம் இந்த இருவரில் ஒருவரையும் ராசி அல்லது லக்கினத்தையும் ஆதிபத்திய சுபம் கொண்ட குருபகவான் பார்த்துவிட்டால் அதுவே முதல்தர யோகமாகும். இந்த வாழ்க்கையினை ஆன்மீகவியலில் செலுத்தி பேறு பெற உதவுபவர் கேது...  இங்கு ஒரு பிரச்சினை வரும். மேற்கூறிய கிரகங்களுடன் கேதுபகவான் கேந்திரத்தில் அல்லது திரிகோணத்தில் அமைந்துவிட்டால்; மறு கேந்திரத்தில் அல்லது 3,11ல் ராகு அமர்ந்து மாயை எனும் மோகத்தில் ஜாதகரை மூழ்கடித்து விடுவார். மாயையை விடுத்து ஆன்மீகவழி செல்லவது மிக மிக மிக கடினமானதொன்றாகும். அனைத்து கிரகங்களையும் விட வலிமை வாய்ந்தவரும் தனக்கு கேந்திரத்தில், திரிகோணத்தில் இருக்கும் கிரகங்களை பாதிப்பவரும் தான் இருக்கும் வீட்டிற்கு 3, 11ம் இடங்களை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவருமான ராகுவிற்கு இந்த தடை ஒன்றும் பெரிதல்லவே... இதற்கு ஒரு வழிதான் உள்ளது. மேலே உள்ள யோகத்தில் சுபகிரகங்களான குரு, சந்திரன் சம்பந்தப்படுவதால் இவர்களை தவிர்த்து வேறு ஏதாவது ஒரு முழு சுப கிரகம் முழுமையாக ராகுவால் பீடிக்கப்பட்டிருக்க வேண்டும். இங்கு 'பீடிக்கப்பட்டிருக்க வேண்டும்' என்ற சொல்லானது ராகுவுடன் 3பாகை 20கலையில் இணைந்திருக்கவேண்டும் என்று அர்த்தமாகிறது. புதன் ராகுவுடன் இணைவது இதற்கு போதுமானது அல்ல. ஏனினின் தனித்த புதனே சுபர். மீதியாக சுபக்கிரகத்தில் இருப்பவர் சுக்கிரன். ஆகவே சின்றின்பகாரகனான அவரையே நாம் ஒதுக்கவேண்டிய நிலையில் உள்ளோம். சொகுசுவாழ்க்கை, பெண், திருமணம், இல்லறதொடர்புகள் மூலமான கர்மாக்களை ஜாதகர் முழுமையாக அறுத்த பின்னரே அவர் மேற்கொண்டு பயணிக்க முடியும் என்பது ஆன்மீகத்தின் மூலமாக ஜோதிடத்தில் நிறுவக்கூடிய ஒரு உண்மையாகும். ராகு அமருமிடம் அவரது ஏனைய அமைப்புக்கள் என்று ஆராச்சி நீளும்... ராகுவின் இயல்பான "நீளுதல்" என்பதை தவிர்த்து; கேதுவின் இயல்பான "சுருக்குதல்" என்பவற்றை பிரயோகித்து நானும் எனது ஆராய்ச்சி பதிவினை இத்துடன் நிறுத்துகிறேன். பதிவில் மீதமாக இருக்கும் சுபரான புதனிற்கு வேலை கொடுத்து பதிவு தொடர்பாக நல் சிந்தனைகளை வளர்த்து ஆன்மீக வழியில் மேற்கொண்டு முன்னேறுவோமாக...

ஹரிராம் தேஜஸ்,
பாரம்பரிய வாக்கிய ஜோதிடர்

பிற்குறிப்பு :-  எனது இந்த Blogsite முறையாக பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆகவே இங்கு வெளிவரும் எனது பதிவுகளை copy  செய்து எடுத்து வேறு இடங்களில் பதியும் திருட்டுதனம் புரிவோர் கண்டுபிடிக்கப்பட்டு சட்டரீதியான தண்டனைக்கு உட்படுத்தப்படுவர்.

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.