ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

Monday, May 25, 2020

சினேந்திரமாலை PDF

குருவடி சரணம்!

வணக்கம் நண்பர்களே,
1989ம் ஆண்டு வெளிவந்த சினேந்திரமாலை (ஜினேந்திரமாலை) எனும் இவ் நூலானது தற்போது பதிப்பகம் வாயிலாக வெளிவருவதில்லை. கடினமான தேடலிற்கு பிறகு இன்று இந்நூல் என் கைகளில் புத்தகமாக தவழ்கின்றது. இது ஜாமக்கோள் ஆரூட பலாபலன்களை கொண்டிருக்கும் சாஸ்திர நூலாகும். இதனை அடிப்படையாக வைத்தே தற்போது ஜாமக்கோள் விற்பன்னர்கள் ஆரூடம் பார்க்கின்றனர். இதிலிருந்த கருத்துக்களையே தங்களின் பெயரில் பதிந்துகொள்கின்றனர். இதிலுள்ள கருத்துக்கள் ஒவ்வொன்றும் மிகவும் அருமையாக உள்ளது. இந்த சாஸ்திர நூலானது ஜாமக்கோள் பயின்ற அல்லது ஜாமக்கோள் ஆரூடத்தில் ஈடுபாடு கொண்ட ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும். எனினும் பலரால் இதனை புத்தகமாக தற்போது பெற முடியாது, எனவே pdf வடிவில் லிங்க் கீழே கொடுத்துள்ளேன். அனைவரும் சென்று Download செய்து கொள்ளுங்கள். 


Sunday, May 17, 2020

தண்டனையை அனுபவித்த ஆமை!


#தெரியாமல்_கூட_இனி_இப்படிப்பட்ட_தவறை_யாரும்_செய்யாதீங்க!
[பதிவை முழுமையாக மனதார படியுங்கள், அடியில் நல்லதொரு தரிசனம் காத்திருக்கின்றது.]

நாம் அறியாமல் செய்யும், சின்னச் சின்னத் தவறுகள் கூட, பிற உயிரினங்களுக்கு எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த சம்பவத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். யாரோ ஒருவர் அறியாமல் செய்த பாவச் செயலுக்கான தண்டனையை, இந்த ஆமை 19 வருடங்களாக அனுபவத்து வருகிறது. இந்த சம்பவத்தைப் பற்றிய விரிவான செய்தியை பின்வருமாறு காணலாம்.

மனிதர்களைப் பொறுத்தவரை தனக்கு தேவையில்லாத பொருட்களை, வேண்டாம் என்று வெளியில் தூக்கி வீசி விடுகின்றோம். ஆனால் நாம் வீசக்கூடிய அந்த பொருளினால் என்ன பாதிப்பு வரும் என்பதை நாம் என்றுமே சிந்தித்துப் பார்ப்பதில்லை. நான்கு வருடங்களுக்கு முன்பாக கடலிலிருந்து ஒரு வித்தியாசமான ஆமை ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த ஆமையானது, கண்டுபிடிக்கப்பட்ட போது அந்த ஆமைக்கு வயது 19. பார்ப்பதற்கு அந்த ஆமை மிகவும் வித்தியாசமாக இருந்துள்ளது. காரணம், அந்த ஆமையானது ஒரு பிளாஸ்டிக் வளையத்தினுள் சிக்கி இருந்துள்ளது. அதன் பின்பு ஆராய்ச்சியாளர்கள் அந்த பிளாஸ்டிக் வளையத்தை, அந்த ஆமையின் உடம்பிலிருந்து துண்டித்து எடுத்து விட்டனர்.

ஆனால் இதில் வருத்தப்படக்கூடிய விஷயம் என்னவென்றால், அந்த ஆமை சிறுவயதில் இருந்த போதே அந்த வளையம் அதனுடைய உடம்பில் மாட்டியுள்ளது. தனது உடம்பில் அந்த வளையமானது மாட்டிக்கொண்டது தெரிந்ததும், அதிலிருந்து வெளியே வர முயற்சியும் செய்துள்ளது. ஆனால் முடியவில்லை. காலப்போக்கில் ஆமை வளர வளர அந்த வளையம் ஆமையின் உடலில் இறுக்கம் கொடுத்துள்ளது. உயிர் வாழ்வதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கும் அந்த ஆமை, என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்! 19 வருடங்களாக எவ்வளவு இடர்பாடுகளை கடந்து அது தன் வாழ்வை வாழ்ந்ததோ?

யாரோ ஒருவர் கடலில் அந்த மோதிரத்தை வீசியதால் தான் இப்படிப்பட்ட சம்பவம் நடந்திருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இந்த சம்பவமானது நீண்ட நாட்களுக்கு முன்பு நடந்திருந்தாலும், இதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம், மிகப் பெரியது என்பதை எல்லோரும் உணரவேண்டும் என்பதற்காக தான் இந்த பதிவு. வாயில்லா ஜீவன்களுக்கு நம்மால் எந்த ஒரு நல்லதையும் செய்ய முடியாமல் போனாலும் பரவாயில்லை. கெடுதலாவது செய்யாமல் இருப்போமே. நீர்நிலைகளில் அல்லது நிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை போடுவது அவற்றின் உயிர்களிற்கு பாரிய அச்சுறுத்தலாக அமைகிறது. நன்றாக வேதனைப்பட்டு துடிதுடித்து இறுதியில் இறக்கின்றன.. நாம் தெரியாமல் செய்தாலும் இந்த பெரும் பாவம் செய்தவரையே சேரும்.

இன்று வளர்ந்து வரும் பல தொழில்நுட்பங்கள், இயற்கையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது என்று சொன்னால் நிச்சயம் அது பொய்யாகாது. எந்த ஒரு முன்னேற்றமாக இருந்தாலும், நாம் செய்யும் எந்த ஒரு செயல்பாடாக இருந்தாலும், இயற்கையையும், மற்ற உயிரினத்தையும் பாதிக்காத அளவில் இருந்தால்தான், அது ஆரோக்கியமான முன்னேற்றமாக இருக்கும். ஆனால், இந்த உலகமானது முன்னேறிச் செல்ல செல்ல, இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டே வருகிறது.

இயற்கைக்கு எதிராக நாம் செய்யும் ஒவ்வொரு செயல்பாடும், திரும்பவும் நம்மை தான் பாதிக்கப் போகின்றது என்ற உண்மையை நாம் என்று தான் புரிந்து கொள்ளப் போகின்றோம். யாரோ ஒருவர், செய்த தவறில் இந்த ஆமை சிக்கியுள்ளது என்பது, இன்று நாம் எல்லோருக்கும் தெரிந்திருக்கலாம். ஆனால், நாம் தினந்தோறும் இயற்கைக்கு எதிராக செய்யும் எத்தனையோ தவறுகளில், எத்தனையோ உயிரினங்கள் அழிகின்றது என்பதை நினைத்து பார்க்கும் போது தான் வருத்தமே அதிகமாகிறது.இந்த பூமி மீது மனிதர்களாகிய எமக்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ ஏனைய சகல உயிர்களுக்கும் அதே உரிமை இருக்கின்றது. உண்மையை கூற வேண்டுமென்றால் பூமியை நாசமாகும் எம்மைவிட அவைகளிற்கே  அதிக உரிமை உள்ளது. நாம் தெரியாமல் அல்லது கவனகுறைவாக செய்யும் மிகச்சசிறு சிறு தவறுகள் கூட ஏனைய சிறிய  உயிரினங்களுக்கு பாரிய தீமையை\ நரகமாக அமைந்து விடுகின்றது. கண்மூடி ஒருநிமிடம் சிந்தித்து பாருங்கள் அந்த ஆமை 19  வருடங்களாக பட்ட வேதனைகளை... அன்பே சிவம், சிவமே ஜெயம் ஜெயம்.

Tuesday, May 12, 2020

தீர்க்கமுடியாத பிரச்சினைகளை தீர்க்க 2 ஏலக்காய் போதும்!

தீர்க்கமுடியாத பிரச்சினையையும் தீர்த்து வைக்க 2 ஏலக்காய் போதும்! தினம்தோறும் பூஜை அறையில் இப்படி செய்துபாருங்கள்!

ஒரு மனிதனுக்கு சாதாரணமான பிரச்சனைகள் இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. அதிலும் தீர்க்க முடியாத நிரந்தரமான பிரச்சனைகள் இருந்துக் கொண்டே இருந்தால், சொல்லவே வேண்டாம்! வீட்டில் சதாகாலமும் சண்டை சச்சரவுக்கும், பிரச்சினைக்கும், குறைவே இருக்காது. குறிப்பாக ஆண்களுக்கு கடன் தொல்லை இருந்தால், அந்த வீட்டில் சந்தோஷம் கட்டாயம் இருக்காது என்பது தான் உண்மை. இப்படி இருக்க, இதற்கு என்னதான் தீர்வு? எப்படியாவது கஷ்டப்பட்டு நமக்கு இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து விட்டு, கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தாலே போதும். கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை, என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

‘இந்தப் பிரச்சனைக்கு தீரவே தீராது!’ என்று உதறி விட்ட, பிரச்சனைகளை கூட சுலபமான முறையில் தீர்த்துக் கொள்ள, ஆன்மிகத்தில் பல பரிகாரங்கள் உள்ளன. சில பேரு சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ‘நீண்ட நாட்களாக எனக்கு இந்த பிரச்சனை இருந்தது. ஆனால், இந்த கோவிலுக்கு சென்று வந்த பிறகு பிரச்சினைகள் எல்லாம் எப்படி காணாமல் போனது என்று தெரியவில்லை?’ மன நிம்மதி அடைந்து விட்டதாக கூறுவார்கள். அந்த வரிசையில் இன்று, இந்த பதிவின் மூலம் ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.


உங்களுக்கும் வாழ்க்கையில் தீராத கஷ்டம் இருக்கிறதா? தினம் தோறும் விநாயகர் வழிபாடு மிகவும் சிறந்தது. ஏனென்றால், விக்னங்களை தீர்ப்பவர் தான் ‘விக்ன விநாயகர்’. உங்கள் வீட்டில் தினந்தோறும் இரண்டு ஏலக்காய்களை, விநாயகப் பெருமானுக்கு நைவேத்தியமாக வைத்து, தீபம் ஏற்றி மனதார வழிபட்டு வந்தால், எப்படிப்பட்ட பிரச்சினையும், வந்த வழி தெரியாமல் சென்றுவிடும். இது மிக மிக சுலபமான பரிகாரம். ‘இது செஞ்சா பிரச்சினை எல்லாம் போய் விடுமா!’ என்ற சந்தேகத்தோடு மட்டும் வழிபாடு செய்யாதீர்கள். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்! உங்களை விட்டு அந்தப் பிரச்சனை எப்படித்தான் சென்றது என்றே தெரியாது. ஆனால் பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபட்டு விடுவீர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

தீர்க்க முடியாத கடன் பிரச்சனை இருந்தால், செவ்வாய்க்கிழமை அன்று பின்வரும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதுவும் விநாயகரை நினைத்து செய்ய வேண்டிய பரிகாரம் தான். திங்கட்கிழமையே உங்களது வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கட்டாயம் அசைவம் சாப்பிடக்கூடாது. உங்கள் வீட்டில் தோரண கணபதி படம் இருந்தால் இன்னும் சிறப்பு. செலவோடு செலவாக சின்ன தோரண கணபதி படத்தையும் வாங்கி பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

தோரண கணபதியின் முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த விநாயகருக்கு ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியும் நாட்டு சர்க்கரையை கலந்து, இரண்டு ஏலக்காய்களை நசுக்கி போட்டு, கலந்த கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும். வாரத்தில் ஒரு முறை செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் இந்த முறையில் வழிபாடு நடத்தினால் போதும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்து வர, உங்கள் கடன் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விநாயகருக்கு நெய்வேதியமாக வைத்த அந்த கலவையை பசுமாட்டிற்கோ அல்லது எறும்புகளுக்கோ, அல்லது காக்கை குருவிகளுக்கோ உணவாக அளித்து விடலாம்.

இதுமட்டுமல்லாமல் தினம் தோறும் வீட்டில் இறைவனுக்கு ஏதாவது ஒரு பொருளை நைவேத்தியமாக படைத்து, அதன் பின்பு தீபம் ஏற்றும் பழக்கம் உள்ளவர்கள், குறிப்பாக பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, டைமண்ட் கற்கண்டு, பேரிச்சம்பழம் இந்த பொருட்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த பொருட்களை எல்லாம் இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்தால், நமக்கு வாழ்க்கையின் நிறைவான செல்வவளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நமக்கு இருக்கும் கஷ்டத்தில், விலை உயர்ந்த பொருட்களை இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்க வேண்டுமா? என்றெல்லாம் சிந்திக்காதீர்கள்! இவை அனைத்தையும் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே நாளில் இறைவனுக்கு நைவேதியமாக வைக்கப் போவது இல்லை. எந்த நைவேத்தியமாக இருந்தாலும், அதில் இரண்டு மட்டும் வைத்தாலே போதும். பாதம் பருப்பாக இருந்தால், அதில் இரண்டு மட்டும் நைவேத்தியமாக இறைவனுக்கு படையுங்கள். இறைவனுக்கு படைத்து விட்டு அதை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து விடலாம்.


வீட்டில் இருக்கும் இறைவனை பட்டினி போடக்கூடாது. வெறும் சாதத்தில் ஒரு சொட்டு நெய் விட்டு, அந்த இறைவனுக்காக நெய்வேதியமாக படைத்தாலும், அது தேவாமிருதம் தான். இருப்பினும் உங்களால் முடிந்தால், மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்கலாம் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அதற்காக இப்படிப் பட்ட விலை உயர்ந்த பொருட்களை நெய்வேதியமாக படைப்பதால் மட்டும் தான், அந்த இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றெல்லாம் அர்த்தம் கிடையாது. இறைவனுக்காக நம்மால் எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலையில், நல்ல மனதோடு, உண்மையான பக்தியோடு வேண்டிக் கொள்ளப்படும் எந்த வேண்டுதலும்  நிராகரிக்க படாது, என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உலகத்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்துமே, இறைவனின் பார்வைக்கு ஒன்றுதான் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

Sunday, April 5, 2020

அங்கிசம் அறியும் வழி (அங்கிசநாதன்)


அங்கிசம் என்பதன் அர்த்தம்; தோள் கொடுத்தல், கூறு, பங்கு, வாழையடி வாழையாய் வளர வேண்டிய வம்சம் என்று அர்த்தம் கொள்ளலாம்.
ஒரு நட்சத்திரத்துக்கு ஒருவர் அதிபதியாக இருக்கும் போது, இன்னொருவர் அந்த நட்சத்திரத்தை தோள்கொடுத்து தூக்கி நிறுத்த முடியும் என்பதைக் காட்டுவதே அங்கிசம் என்பதாக நினைக்கிறேன்.
இப்போது குருவின் நட்சத்திரம் விசாகத்திற்கு சுக்கிரன் அங்கிசைநாதனாக வருகிறார். குரு எனும் கிரகம் சாரம் தருவதின் மூலம் இயக்கு சக்தியாக இருக்க, சுக்கிரன் அங்கிச நாதனாகி இயங்கு சக்தியாக இருப்பார். விசாகம் சாரம் பெறும் எந்தகிரகத்திற்கும் சாரநாதனும், அங்கிசைநாதனும் பலம்பெற்று இருந்தால்தான் முழுமையான பலன்கள் கிட்டும்.
தமிழ்மொழியில் இயற்றப்பட்ட மூத்த பழமையான ஜோதிட நூலான, “ஜாதக அலங்காரம்” என்கிற நூலில் அங்கிசப் பலனறியும் முறையினை தந்துள்ளார்கள். இது மிகவும் நுட்பமான விடயம்தான். ஆனால், அதிகம் பயன்படுத்தாத, விரிவுபடுத்தாத ஒரு விடயமாகவே உள்ளது. இதை “ஜோதிட ஆசான்கள்” விரிவாக ஆய்வு செய்து மக்களுக்குப் பயன்படும் விதமாக கொண்டு சேர்ப்பது நமது கடமையாகும்.
அங்கிசநாதன் அறிதல்.
அசுவினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களும், ஒன்பது கிரகங்களான, சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, இராகு, கேது ஆகிய ஒன்பது கிரகங்களுக்குப் பிரித்துக் கொடுக்கப் பட்டுள்ளது. இவர்களை, “அங்கிசநாதன்” என்று அழைக்கப்படுகின்றன.
ஒவ்வொரு கிரகங்களுக்கும் மூன்று நட்சத்திரங்களாக பிரித்துத்தரும்போது, அந்த ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் நான்கு, நான்கு பாதங்களாக, பன்னிரண்டு பாதங்களாக, பன்னிரண்டு இராசிகளுக்கும், (மேடம் முதல் மீனம் வரையிலான) தரப்படும்.
இப்போது ஒவ்வொருவருக்கும் ஒரு ஜென்ம நட்சத்திரம் இருக்கும் அல்லவா? அந்த ஜென்ம நட்சத்திரம், பன்னிரு பாகங்களில் ஒன்றில் அமையும். அது எத்தனையாவது பாகம் என்பதைக் கண்டுபிடித்து, அந்த எண்ணிக்கையை, மேடம் முதல் எண்ணிவர, பன்னிடண்டு இராசிகளில், ஏதாவது ஒன்றில் அமையும். அந்த இராசியின் அதிபர், “அங்கிசவான்” அல்லது “அங்கிசை” என்றும் அழைக்கப்படுகிறார்.
உதாரணமாக. ஒருவர் விசாகம் நான்காம் பாதத்தில் பிறந்துள்ளதாக வைத்துக் கொள்வோம். இவர் பிறந்த நட்சத்திரம் சுக்கிரனின் அங்கிசையில் வருகிறது. அதனால், குருவின் நட்சத்திரமாகவே இருந்தாலும், அந்த நட்சத்திரத்துக்கு தோள்கொடுத்து தூக்கி நிறுத்துபவன் சுக்கிரனாகவே இருப்பான். அதனால்தான் குருவின் நட்சத்திரம் விசாகத்திற்கு, சுக்கிரன் அங்கிசைநாதனாக வருகிறார்.

Friday, January 31, 2020

மகாலக்ஷ்மி சித்தர் மந்திரம்

ஸ்ரீ மஹாலக்ஷ்மி மந்திரத்தை தினமும் இரு முறை சொல்லி வழிபடுபவரின் இல்லத்தில் தனமும் தான்யமும் குறைவின்றி நிறைவாக விளங்கும்.

#மந்திரம்

நமஸ்தே செல்வ ரூபிண்யை
நமஸ்தே கமலவாசினி
தேஹிமே தனப்பிராப்தி நித்யம்
சித்திர் பவதுமே சதா

தினமும் மாலை வீட்டில் விளக்கேற்றிவிட்டு இந்த மந்திரத்தை சொல்வதன் பயனாக வீட்டில் மகாலட்சுமி குடிகொள்வாள். அவள் அருளால் வீட்டில் சகல செல்வங்களும் பெருகும்.

தினமும் இந்த மந்திரத்தை கூற இயலாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் இதை ஜெபிக்கவும்.

இந்து நடுநிலைகள் !!!

நேற்று நான் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன்,  ஒரு பிச்சைக்காரன் என்னிடம் வந்து சொன்னான்….

 "அல்லாஹ்வின் பெயரால் ஏதாவது கொடுங்கள், " 

 நான் அவரைப் பார்த்து சொன்னேன்….

  "நான் அல்லாஹ்வை நம்பவில்லை" எனவே நான் ஏன் அதை கொடுக்க வேண்டும் ??? 
 அவர் என்னை முறைத்துப் பார்த்தார்...
ஆனால்....
நான் சொன்னேன் "சிவாயநம" என்ற பெயரில் நீங்கள் கேட்டால், நான் உங்களுக்கு 1,000 ரூபாய் தருகிறேன்.

 அவர் என்னை முறைத்துப் பார்த்தார், ரயிலைச் சுற்றியுள்ளவர்களும் எங்களை ஆர்வமாகப் பார்க்கத் தொடங்கினர்.  பின்னர், நான் எனது திட்டத்தை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்றினேன்... அவர் சிவனின் பெயரைக் கொண்டு கேட்டால், நான் அவருக்கு "2,000 ரூபாய்" தருவேன் என்றேன்... 

ஆனால், அந்த பிச்சைக்காரன் இதற்குத் தயாராக இல்லை மேலும், நானும் அவரின் கடவுள் பால் அவருக்கான நம்பிக்கையை உணர்ந்தவாறு ஜன்னல் வழியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

ஆனால், இந்த சம்பவம் என்னை யோசிக்க வைத்தது.. சாப்பிட ஒன்றும் இல்லாத பிச்சைக்காரன்  "பணத்தின் காரணமாக தனது மதத்தை சமரசம் செய்யமாட்டான்." 

நடுநிலை இந்துக்கள் ஒரு பிச்சைக்காரனை விட அதிகமாகச் கேவலமாக இருக்கின்றனர் தன் மதத்தை காட்டிக்கொடுப்பதற்கும், தனது தனிப்பட்ட சுயலாபத்திற்காக (செல்வம் அல்லது பதவிக்காக) பேராசையில் மதச்சார்பற்றவனாக இருப்பதற்கும் எப்போதும் ஒரு காலில் நிற்கிறான்?

ஒவ்வொரு முஸ்லிமும் எந்த வயதிலும் தினமும் தொழுகை மேற்கொள்கிறான். ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஞாயிறு சர்ச் செல்கிறான். பெளத்தர்கள் எந்த உயர்ந்த நிலையில் இருந்தாலும் புத்தரை பிரிந்து இருப்பதில்லை... இவர்கள் தமது குழந்தைகளிற்கு சிறுவயதில் இருந்தே தத்தமது மத கோட்பாடுகளை கூறி தம் மதத்தின் பாதுகாவலராக வளர்க்கின்றனர். ஒவ்வொருவரும் அவரது பெற்றோர்களால் சிறுவயதில் இருந்தே அவர்கள் மதத்துடன் நெருக்கமாக இணைக்கப்படுகின்றனர்...

ஆனால்...

இந்துக்களே! உங்களுக்கு ஏன் இந்த “ஏனோதானோ” மனநிலை? உங்கள் குழந்தைகளிற்கு எப்படி பிழைக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கும் நீங்கள் அவர்கள் எப்படி வாழ வேண்டும் என்று கற்றுக்கொடுப்பதில்லை. தேவாரம் பாட வெட்கம். சமய சின்னங்கள் அணிய வெட்கமா உங்களிற்கு? உங்களை நினைத்து நாம்தான் வெட்கி தலைகுனிய வேண்டும். மேலைநாட்டு மோகத்தில் உங்களும் உங்கள் சந்ததிகளையும் நீங்களே அழித்துக்கொண்டுள்ளீர்கள். அழகிய தமிழ் பெயர் வையுங்கள். தமிழ் பெயர் என்பதே இந்துப்பெயர்தான். அதில் சந்தேகம் வேண்டாம்! எமது மேலான இந்த சமயத்தை உங்கள் குழந்தைகளிற்கு கற்றுகொடுங்கள். இதிகாசங்களையும் புராணங்களையும் வெறும் கதைகளாக கூறாதீர்கள். அவற்றில் உள்ள மேலான நற்கருத்துக்களை பக்தியுடன் சேர்த்து ஊட்டுங்கள். தினமும் சூரிய வழிபாடு செய்யுங்கள். 6 மாதத்திற்கு ஒருமுறையாவது குடும்பத்தார் அனைவருடனும் குலதெய்வ கோவில் சென்று பொங்கல் வைத்து வழிபடுங்கள். எமது மேலான சமயத்தில் ஒன்றுமே தெரியாதவர்கள்தான் பணத்திற்காகவும், தமது சுயலாபத்திற்காகவும் மதம் மாறுகின்றனர். உங்களை தந்த இந்த தொன்மையான இந்து கலாச்சாரத்தை பேணி காப்பது உங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். கடவுளை நம்புங்கள்; அவரை மனதாரவும் உடல் அளவிலும் வழிபடுங்கள், அவர் புகழ் பாடுங்கள், இறை சேவை செய்யுங்கள். வியாபார நோக்கமாக மாறிவரும் சில ஸ்தாபனங்களையும், சில கோவில்களையும் நினைத்து வருந்தாதீர்கள். அங்குள்ள இறைவனை மட்டும் நினையுங்கள். நாம் அனைவரும் ஈற்றில் இணைய விரும்புவது இறைவனுடனே தவிர பிறருடன் அல்ல. பதி மட்டுமே உண்மை. பசு பாசத்தால் கட்டப்படுகிறது. அந்தவகையில் என்ன நடந்தாலும் யார் என்ன சொன்னாலும் எமது சிந்தனை இறைவனை நோக்கியே இருக்க வேண்டுமே தவிர சில குறைகளை நோக்கி இருத்தலாகாது. நீங்கள் இறைவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் இறைவன் உங்களை நோக்கி நூறு அடி எடுத்து வைப்பார். உங்கள் இஷ்ட தெய்வத்தை உளமார உணருங்கள்; பேசுங்கள், நன்றாக வழிபடுங்கள்... இந்து சமயம் வாழ வேண்டும். இந்துக்கள் ஓங்க வேண்டும். அடுத்தடுத்த தலைமுறையினரிற்கு இந்து சமயத்தை அதே புனிதத்தன்மையுடன் கொண்டு சேர்க்க வேண்டும்... அதற்காக இறைவன் மீது உறுதி எடுப்போமாக...

ௐ பிரம்மதேவாய நமஹ
ௐ நமோ நாராயணாய
ௐ நமசிவய
ௐ சக்தி

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.