ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

செவ்வாய், 12 மே, 2020

தீர்க்கமுடியாத பிரச்சினைகளை தீர்க்க 2 ஏலக்காய் போதும்!

தீர்க்கமுடியாத பிரச்சினையையும் தீர்த்து வைக்க 2 ஏலக்காய் போதும்! தினம்தோறும் பூஜை அறையில் இப்படி செய்துபாருங்கள்!

ஒரு மனிதனுக்கு சாதாரணமான பிரச்சனைகள் இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதி இருக்காது. அதிலும் தீர்க்க முடியாத நிரந்தரமான பிரச்சனைகள் இருந்துக் கொண்டே இருந்தால், சொல்லவே வேண்டாம்! வீட்டில் சதாகாலமும் சண்டை சச்சரவுக்கும், பிரச்சினைக்கும், குறைவே இருக்காது. குறிப்பாக ஆண்களுக்கு கடன் தொல்லை இருந்தால், அந்த வீட்டில் சந்தோஷம் கட்டாயம் இருக்காது என்பது தான் உண்மை. இப்படி இருக்க, இதற்கு என்னதான் தீர்வு? எப்படியாவது கஷ்டப்பட்டு நமக்கு இருக்கும் பிரச்சினைகளை எல்லாம் தீர்த்து விட்டு, கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தாலே போதும். கடன் வாங்கி ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை, என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

‘இந்தப் பிரச்சனைக்கு தீரவே தீராது!’ என்று உதறி விட்ட, பிரச்சனைகளை கூட சுலபமான முறையில் தீர்த்துக் கொள்ள, ஆன்மிகத்தில் பல பரிகாரங்கள் உள்ளன. சில பேரு சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். ‘நீண்ட நாட்களாக எனக்கு இந்த பிரச்சனை இருந்தது. ஆனால், இந்த கோவிலுக்கு சென்று வந்த பிறகு பிரச்சினைகள் எல்லாம் எப்படி காணாமல் போனது என்று தெரியவில்லை?’ மன நிம்மதி அடைந்து விட்டதாக கூறுவார்கள். அந்த வரிசையில் இன்று, இந்த பதிவின் மூலம் ஒரு சுலபமான பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.


உங்களுக்கும் வாழ்க்கையில் தீராத கஷ்டம் இருக்கிறதா? தினம் தோறும் விநாயகர் வழிபாடு மிகவும் சிறந்தது. ஏனென்றால், விக்னங்களை தீர்ப்பவர் தான் ‘விக்ன விநாயகர்’. உங்கள் வீட்டில் தினந்தோறும் இரண்டு ஏலக்காய்களை, விநாயகப் பெருமானுக்கு நைவேத்தியமாக வைத்து, தீபம் ஏற்றி மனதார வழிபட்டு வந்தால், எப்படிப்பட்ட பிரச்சினையும், வந்த வழி தெரியாமல் சென்றுவிடும். இது மிக மிக சுலபமான பரிகாரம். ‘இது செஞ்சா பிரச்சினை எல்லாம் போய் விடுமா!’ என்ற சந்தேகத்தோடு மட்டும் வழிபாடு செய்யாதீர்கள். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்! உங்களை விட்டு அந்தப் பிரச்சனை எப்படித்தான் சென்றது என்றே தெரியாது. ஆனால் பிரச்சனையிலிருந்து நீங்கள் விடுபட்டு விடுவீர்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

தீர்க்க முடியாத கடன் பிரச்சனை இருந்தால், செவ்வாய்க்கிழமை அன்று பின்வரும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். இதுவும் விநாயகரை நினைத்து செய்ய வேண்டிய பரிகாரம் தான். திங்கட்கிழமையே உங்களது வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கட்டாயம் அசைவம் சாப்பிடக்கூடாது. உங்கள் வீட்டில் தோரண கணபதி படம் இருந்தால் இன்னும் சிறப்பு. செலவோடு செலவாக சின்ன தோரண கணபதி படத்தையும் வாங்கி பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

தோரண கணபதியின் முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, அந்த விநாயகருக்கு ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியும் நாட்டு சர்க்கரையை கலந்து, இரண்டு ஏலக்காய்களை நசுக்கி போட்டு, கலந்த கலவையை நிவேதனமாகப் படைக்க வேண்டும். வாரத்தில் ஒரு முறை செவ்வாய்க்கிழமை அன்று மட்டும் இந்த முறையில் வழிபாடு நடத்தினால் போதும். தொடர்ந்து 11 வாரங்கள் செய்து வர, உங்கள் கடன் பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். விநாயகருக்கு நெய்வேதியமாக வைத்த அந்த கலவையை பசுமாட்டிற்கோ அல்லது எறும்புகளுக்கோ, அல்லது காக்கை குருவிகளுக்கோ உணவாக அளித்து விடலாம்.

இதுமட்டுமல்லாமல் தினம் தோறும் வீட்டில் இறைவனுக்கு ஏதாவது ஒரு பொருளை நைவேத்தியமாக படைத்து, அதன் பின்பு தீபம் ஏற்றும் பழக்கம் உள்ளவர்கள், குறிப்பாக பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை, டைமண்ட் கற்கண்டு, பேரிச்சம்பழம் இந்த பொருட்களை பயன்படுத்துவது மிகவும் நல்லது. இந்த பொருட்களை எல்லாம் இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்தால், நமக்கு வாழ்க்கையின் நிறைவான செல்வவளம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நமக்கு இருக்கும் கஷ்டத்தில், விலை உயர்ந்த பொருட்களை இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்க வேண்டுமா? என்றெல்லாம் சிந்திக்காதீர்கள்! இவை அனைத்தையும் ஒட்டு மொத்தமாக சேர்த்து ஒரே நாளில் இறைவனுக்கு நைவேதியமாக வைக்கப் போவது இல்லை. எந்த நைவேத்தியமாக இருந்தாலும், அதில் இரண்டு மட்டும் வைத்தாலே போதும். பாதம் பருப்பாக இருந்தால், அதில் இரண்டு மட்டும் நைவேத்தியமாக இறைவனுக்கு படையுங்கள். இறைவனுக்கு படைத்து விட்டு அதை உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து விடலாம்.


வீட்டில் இருக்கும் இறைவனை பட்டினி போடக்கூடாது. வெறும் சாதத்தில் ஒரு சொட்டு நெய் விட்டு, அந்த இறைவனுக்காக நெய்வேதியமாக படைத்தாலும், அது தேவாமிருதம் தான். இருப்பினும் உங்களால் முடிந்தால், மேற்குறிப்பிட்டுள்ள பொருட்களை இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்கலாம் என்றுதான் சொல்லப்பட்டுள்ளது. அதற்காக இப்படிப் பட்ட விலை உயர்ந்த பொருட்களை நெய்வேதியமாக படைப்பதால் மட்டும் தான், அந்த இறைவனின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்றெல்லாம் அர்த்தம் கிடையாது. இறைவனுக்காக நம்மால் எதுவுமே செய்ய முடியாத சூழ்நிலையில், நல்ல மனதோடு, உண்மையான பக்தியோடு வேண்டிக் கொள்ளப்படும் எந்த வேண்டுதலும்  நிராகரிக்க படாது, என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். உலகத்தில் உள்ள ஜீவராசிகள் அனைத்துமே, இறைவனின் பார்வைக்கு ஒன்றுதான் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

GHT

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 கருத்துகள்:

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.