வெற்றி தரும் நட்சத்திர குறியீடுகள் என்பது நம் வணங்கும் தெய்வங்கள் கையில் மற்றும் உருவங்களுக்கு கொடுக்கப்பட்ட வடிவம் ஆகும். எனவே நம் நட்சத்திரத்திற்கு பலம் அளிக்கும் தெய்வ உருவங்களை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு நல்ல வழி கிடைக்கும்.
தங்கள் பிறந்த நட்சத்திர வடிவம் மற்றும் அதற்கு பலம், வெற்றி, சாதகம், தோச நிவர்த்தி, நட்பு அளிக்கும் மற்ற நட்சத்திர வடிவங்களை உபயோகித்து சின்னங்கள்(இலட்சணைகள்) அல்லது உருவங்கள் மூலமாக உபயோகித்து வருவதன் மூலம் மற்றும் அடிக்கடி பார்த்து வருதல் மூலமாக பாதுகாப்பு, காரிய சித்தி உட்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதாவது தனது ஜென்ம நட்சத்திரத்திற்கு 1, 2, 4, 6, 8, 9 ஆக வரும் நட்சத்திரங்கள் மற்றும் அவற்றின் அனு, திரிஜென்ம நட்சத்திரங்களை உபயோகிக்க வேண்டும். ஆனால் ஒருவர் தனது ஜென்ம நட்சத்திரத்திற்கு 3, 5, 7ஆக வரும் நட்சத்திரங்கள் மற்றும் அதன் அனு, திரி நட்சத்திரங்களின் வடிவங்களை தவிர்த்தல் அவசியம்.
நட்சத்திர வடிவங்கள் கீழே,
1. அஸ்வினி - குதிரைத்தலை.
2. பரணி - யோனி, அடுப்பு, முக்கோணம்.
3. கிருத்திகை (கார்த்திகை) - கத்தி, கற்றை, வாள், தீஜ்வாலை.
4. ரோஹிணி - தேர், வண்டி, கோயில், ஆலமரம், ஊற்றால், சகடம்.
5. மிருகசீரிடம் - மான் தலை, தேங்காய்க்கண்.
6. திருவாதிரை - மனிதத்தலை, வைரம், கண்ணீர்துளி.
7. புனர்பூசம் - வில்.
8. பூசம் - புடலம்பூ, அம்புக்கூடு, பசுவின்மடி.
9. ஆயில்யம் - சர்ப்பம், அம்மி.
10. மகம் - வீடு, பல்லக்கு, நுகம்.
11. பூரம் - கட்டில்கால், கண்கள், அத்திமரம், சதுரம், மெத்தை.
12. உத்திரம் - கட்டில்கால், கம்பு, குச்சி, மெத்தை.
13. ஹஸ்தம் - கை.
14. சித்திரை - முத்து, புலிக்கண்.
15. ஸ்வாதி - பவளம், தீபம்.
16. விசாகம் - முறம், தோரணம், குயவன் சக்கரம்.
17. அனுசம் - குடை, முடப்பனை, தாமரை, வில்வளசல்.
18. கேட்டை - குடை, குண்டலம், ஈட்டி.
19. மூலம் - அங்குசம், சிங்கத்தின் வால், பொற்காளம், யானையின் துதிக்கை.
20. பூராடம் - கட்டில்கால்.
21. உத்திராடம் - கட்டில்கால்.
22. திருவோணம் - முழக்கோல், மூன்று பாதச்சுவடு, அம்பு.
23. அவிட்டம் - மிருதங்கம், உடுக்கை.
24. சதயம் - பூங்கொத்து, மூலிகைகொத்து, உருத்திராக்கம்.
25. பூரட்டாதி - கட்டில்கால்.
26. உத்திரட்டாதி - கட்டில்கால்.
27. ரேவதி - மீன், படகு.
ஒரு பதிவு போட்டால் 10 நபர்கள் ஆதரவு தெரிவிப்பார்கள் 2நபர்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இது ஜோதிடர்களுக்கு உள்ள நிலைமைதான். இந்த குறியீட்டை எப்படி பயன்படுத்துவது என்று பலர் கேட்டிருந்தனர். வில், அம்பு, வாள், தேர் எல்லாம் அந்த காலத்தில் பயன்படுத்தினார்கள் அதை எப்படி இப்பொழுது பயன்படுத்த முடியும் என்று கேட்டனர். பயன்படுத்த முடியாதுதான். ஆனால் அந்த வடிவங்களை பயன்படுத்த முடியும். நீங்கள் சொந்த தொழில் செய்தால் உங்களது logo வில் இந்த குறியீடுகளை பயன்படுத்தலாம்.
- Key chain இல் பயன்படுத்தலாம்;
- Photo ஆக வீட்டில் மாட்டி வைக்கலாம்;
- Tatoo ஆக பதித்து கொள்ளலாம்;
- Mobile, laptop இல் wallpaper ஆக வைத்து கொள்ளலாம்;
- Bike இல் stiker ஆக ஒட்டிக்கொள்ளலாம்;
- அல்லது உங்களது கண்பார்வை படும் இடத்தில் வைக்கலாம்.
நன்றி.