லக்னத்திற்கு அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12ம் இடங்களில்
செவ்வாய் அமர்ந்தால் அது
செவ்வாய் தோஷம் ஆகும். அத்துடன் சுக்கிரனுக்கு 2, 4, 7, 8 12ல் இருந்தாலும்
செவ்வாய்தோஷம்தான் என்று சிலர் சொல்கின்றனர். லக்கினத்திற்கு மட்டும்
செவ்வாய் தோஷம் அது முழு தோஷம் என்றும், சந்திரனுக்கு மட்டும் இருந்தால் அது அரைபங்கு தோஷம் என்றும் இரண்டுக்கும் இருந்தால் கடுமையான தோஷம் என்றும் ஒரு சில ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இன்னும் சில ஜோதிடர்கள் லக்கினப்ப
டி உள்ள பரிகார செவ்வாயை சந்திரனுக்கு உள்ள சுத்த செவ்வாயை பொருத்தலாம் என்றும் கூறுகின்றனர்.
லக்னத்திற்கு அல்லது சந்திரனுக்கு 2, 4, 7, 8, 12ம் இடங்களில்செவ்வாய் அமர்ந்தாலும் கீழுள்ள நிலைகளில் செவ்வாய்இருந்தால் செவ்வாய் தோஷம் இல்லை.
1. மேற்படி 2, 4, 7, 8, 12 மிடங்கள் செவ்வாயின் ஆட்சி வீடாகிய மேஷம், விருச்சிகம் நீச்ச வீடாகிய கடகம், உச்ச வீடாகிய மகரம் ஆகிய ராசிகளாக இருந்து அங்கே செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.
2. குருவின் வீடுகளிலோ, குருவுடன் இணைந்தோ, குருவின் பார்வையைப் பெற்றிருந்தாலோ தோஷம் இல்லை.
3. சுக்கிரனின் வீடுகளான ரிஷபம், துலாமில் இருந்தாலும் தோஷம் இல்லை.
4. சுக்கிரனுக்கு நான்கு, ஏழு, பத்து ஆகிய கேந்திரங்களில்செவ்வாய் இருந்தாலும் தோஷம் இல்லை.
5. மேற்கண்ட வீடுகளில் செவ்வாய் சந்திரனுடனோ, புதனுடனோ அல்லது இருவரும் சேர்ந்து இணைந்திருந்தாலோ தோஷம் இல்லை.
6. ராகு, கேதுக்களுடன் செவ்வாய் நெருக்கமாக இணைந்து பலவீனம் பெற்றிருந்தால் தோஷம் இல்லை.
7. மேஷம் விருச்சிகம் கடகம் சிம்மம் லக்னத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாய் எங்கிருந்தாலும் தோஷம் இல்லை
8. சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் தோஷம் இல்லை.
9. செவ்வாய் சனியுடன் இணைந்தால் தோஷம் இல்லை
10. அஸ்தமன செவ்வாய்க்கு தோஷம் இல்லை.
11. செவ்வாய் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தோஷம் இல்லை.
12. மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தோர் இற்கு தோஷமில்லை
மணமக்கள் இருவரில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து, மற்றவருக்கு இல்லாவிட்டால் செவ்வாய் தோஷம் இல்லாதவர் மரணம் அடைவார், என்பது பெரும்பாலான ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது. இந்தக் கருத்து தவறானது. வாழ்க்கைதுணை மரணம் அடைய வேண்டும் என்றால் அதற்கு பல விதிகள் பொருந்தியிருக்க கணவனின் ஜாதகத்தில் அவரது ஆயுள் ஸ்தானமும் பார்க்கப்பட வேண்டும். மிக அரிதாகவே இதுபோன்ற அமைப்பில் கணவனின் ஆயுளை செவ்வாய்பாதிக்கிறார். அனுபவத்தில் பெரும்பாலும் கணவனுக்கும் மனைவிக்கும் பிரிவினை மட்டுமே வருகிறது. செவ்வாய்குற்றத்தை மட்டும் வைத்து கூறுவது முட்டாள்தனமான செயல். செவ்வாயின் பார்வை வலு முறையே 7, 8 , 4 என்ற வகையில் அமையும். அதாவது தனது 4ம் பார்வையை விட தனது 8ம் பார்வை மூலம் அதிகமான பலனை தருவார். செவ்வாய்வீரியத்தைக் குறிக்கும் கிரகம். பொதுவாக செவ்வாய்வலுப்பெற்றவர்கள் தாம்பத்திய உறவில் சற்று அதிகமான ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். அதற்கேற்ற உடல் தகுதியும் அவர்களுக்கு இருக்கும். மேலும் முரட்டுத்தனமான உறவில் ஆர்வமும் ஈடுபாடும் இவர்களுக்கு இருக்கும். சில நிலைகளில் இயற்கைக்கு மாறான உறவிலும் வேட்கை கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள். செவ்வாய் தோஷம் உள்ளோருக்கு செவ்வாய் தோஷம் இருக்கும் ஜாதகமே பார்க்கப்பட்டு திருமணம் நடத்தப்படுகிறது.