ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

செவ்வாய், 14 ஜூன், 2016

ஜாதகம் கணிக்கும் வழி


லக்னம் என்றால் என்ன?
லக்னம் என்பது ஒரு குழந்தை பிறந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பெயர். அதைச் சற்று விளக்குவோம்.
ராசி என்பது 12 சம பாகமாகப் பிரிக்கப்பட்ட பூமண்டலத்தின் பாகம். சூரியனும் மற்ற கிரகங்களும் கிழக்கிலிருந்து மேற்குப் பக்கமாகச் சுற்றுகின்றன. அதே சமயத்தில் மேஷாதி 12 ராசிகளைச் சம பாகமாகக் கொண்ட பூமண்டலமானது மேற்கிலிருந்து கிழக்குப் பக்கமாகச் சுற்றுகிறது. அப்படிச் சுற்றும்பொழுது பூமண்டலத்தின் எந்தப் பாகம் கிழக்கில் நமக்கு நேராக வருகிறதோ அந்தராசிக்கு லக்னம் என்று பெயர்.
அதாவதுஅந்த நேரத்தில் பிறந்த குழந்தைக்கு அந்த ராசியை லக்கினமென்றுசொல்வார்கள். மற்றும் அப்பொழுது கிரஹங்கள் எந்த எந்த ராசியில்இருக்கின்றனவோஅதையும் குறித்து வைத்துக் கொள்வார்கள். இதேல்லாம்சேர்ந்ததற்கே ஜாதகச் சக்கரம் அல்லது ராசிச் சக்கரம் என்று பெயர்.
இனி லக்னம்கிரஹநிலைதசாபுக்தி ஆகியவற்றைக் கணிக்கும் வழியை ஓர் உதாரணம் மூலமாக விளக்குவோம்

உதாரண ஜாதகம்
விகாரி வருடம் தை மாதம் 9-ம் தேதி வெள்ளிக்கழிமைசுவாதி நக்ஷத்திரம் 29-27 மறுநாள் விசாகம் 25-42 (23-1-1960 @ 5-40 A.M...) இரவு மணி 5.40க்கு(சனிக்கிழமை விடியற்காலை) சென்னையில் ஓர் ஆண் குழந்தை பிறந்ததை வைத்துக் கொண்டுஅதற்கு ஜாதகம் கணிக்கும் விதத்தையும் கிரகங்களை அமைக்கும் வழியையும் தசா புக்திகள் கணிக்கும் விதத்தையும் கீழே விளக்குவோம்.

ஒரு ஜாதகம் கணிக்குமுன் கீழ்க்கண்ட அம்சங்களை முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டும் :
1. 
குழந்தை எத்தனையாவது அட்சாம்சத்தில் உள்ள ஊரில் பிறந்தது?
2. 
அந்த அட்சாம்ச ரேகைக்குத் தக்கபடி மேஷாதி ராசிப் பிரமாணங்கள் என்ன?
3. 
குழந்தை ஜனனமான தேதியில் அது பிறந்த ஊரில் சூரிய உதயம்எத்தனை மணிஎத்தனை நிமிஷத்துக்கு நிகழ்ந்தது?
4. 
சூரியோதயம் முதல் குழந்தை பிறந்தது வரையில் எத்தனை நாழிகை எத்தனை விநாடிகள் சென்றன?
5. 
சிசு பிறந்த நட்சத்திரத்தின் மொத்த நாழிகை என்ன?
     இவற்றைப் பஞ்சாங்கத்தின் உதவியால் முக்கியமாகக் குறித்து வைத்துக் கொண்டால் சுலபமாக ஜாதகம் கணித்துவிடலாம்.
  1. சூரிய உதயம் 
இந்தக் குழந்தை சென்னையில் பிறந்தது.
சென்னையில் அட்சாம்சம் 13. சென்னையில் அன்றைக்குரிய உதயம் 6-39. தை மாதம் 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை. குழந்தை விடியற்காலைமணி 5-40க்குப் பிறந்தது. அதாவது சனிக்கிழமை உதயத்துக்கு முன் 0-59நிமிஷங்களுக்கு முன்னதாகப் பிறந்துள்ளது. நம் நாட்டு வழக்கப்படி சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரையில் ஒரு நாள் என்று கணக்கிடப்படும்.
  1. உதயாதி ஜனன நாழிகை
வெள்ளிக்கிழமை சூரிய உதயம் முதல் குழந்தை பிறந்த நாழிகை விநாடிகள் வரையில் கணக்கிட வேண்டும. அது முதல் சனிக்கிழமை விடியற்காலை 5.40 வரையில் 23 மணி நிமிஷம் ஆகும். மணி ஒன்றுக்கு 2 ½ நாழிகை வீதம் கணக்கிட, 57 நாழிகை 33 விநாடிகள் வரும். ஆகையால்வெள்ளிக்கிழமை சூரிய உதயாதி நாழிகை 57-33-க்கு அந்தக் குழந்தையின் ஜனனம் என்று  அறிய வேண்டும்.  குறிப்பு : சூரிய உதயம் ஒவ்வொரு நாளும் காலை 6-00 மணிக்கேநிகழ்வதில்லை. காலை 5-39 முதல் 6-39க்கு இடையிலான காலத்தில் நாளுக்கு நாள் வித்தியாசமாக சூரியோதயம் ஆகிக்கொண்டிருக்கும். அதேபோல் இடத்திற்கு இடம் சூரியோதய காலம் மாறுபடும். உதாரணமாகசென்னையில் காலை 6-01க்குச் சூரியோதயமென்றால்,ராமேசுவரத்தில் அதே தினத்தில் 6-09க்குச் சூரியோதயம் ஆகும். ஆகவேஒரு குறிப்பிட்ட ஜாதகத்தைக் கணிப்பதற்கு முன்அந்தக் குழந்தை பிறந்த ஊரில் சூரியோதயம் எப்பொழுது நிகழ்ந்தது என்பதைப்பஞ்சாங்கங்கள் மூலம் துல்லியமாகத் தெரிந்து கொள்ளவேண்டும்.
அட்சாம்சங்களும் ராசிப் பிரமாணமும்
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளை 360 சம பாகங்களாக (அதாவது ராசி ஒன்றுக்கு 30 பாகைகள் வீதம்) பிரித்திருக்கிறார்கள். இவற்றுக்கு அட்சாம்சம் (Latitude) என்று பெயர். பூமி முழுவதும் இந்த அட்சாம்ச ரேகைகளின் மீதே இருக்கிறது. அந்த அந்தஅட்சாம்சங்களிலுள்ள பட்டணங்களுக்கு வெவ்வேறு ராசிமான சங்கியைகள் (அதாவது ராசியளவு நாழிகைவிநாடிகள்) ஏற்பட்டுள்ளன.
இந்த அட்சாம்சங்களை அநுசரித்தே மேஷாதி ராசிகளின் கால அளவை அறிய வேண்டும். உதாரணமாகசென்னையும்அதைச் சுற்றி சுமார் 100மைல்களுக்கு உட்பட்ட பிரதேசங்களும் 13-ஆவது அட்சாம்சத்தில் இருக்கின்றன. ஆகையால்இந்த 13-வது அட்சாம்சத்தைச் சேர்ந்தஇடங்களுக்கு மேஷ ராசிப் பிரமாணம் நாழிகை 29 விநாடிகள் என்றால்,இதே மேஷ ராசிக்கு 9-ஆவது அட்சாம்சத்தில் இருக்கும்ராமேசுவரத்துக்கு 4-37 விநாடியாகும். அதாவது சென்னையைக் காட்டிலும் விநாடி குறைவு. (45-வது பக்கம் அட்டவணை 2-ஐ கவனிக்க).
இம்மாதிரிஇடத்துக்கு இடம் மேஷாதி ராசிப் பிரமாணங்கள் மாறுபடும்.ஆகையால்ஒரு குழந்தை பிறந்த இடம் எந்த அட்சாம்சத்தைச் சேர்ந்ததோ அந்த அட்சாம்சத்துக்குரிய மேஷாதி ராசிப் பிரமாணங்களைச் சூரியோதயம் தொடங்கிகுழந்தையின் ஜனன காலம் வரையில் கூட்டிலக்கினத்தை அறிய வேண்டும். இதைக் கவனிக்காவிட்டால் சரியான ஜாதகம் கணிக்க இயலாது.
  1. உதய லக்ன சேஷம்
சூரியன் உதய காலத்தில் எந்த ராசியில் இருக்கிறானோஅதுவே உதய லக்னம் என்று கூறப்படும். மேற்படி உதய லக்ன நாழிகை ஒவ்வொரு நாளும் சூரியோதய காலத்தில் குறைந்துகொண்டே வரும். அதாவது,தமிழ் மாதமான சித்திரை மாதத்தின் முதல் தேதியன்று சூரிய உதய காலத்தில் மேஷ ராசியில் இருப்பு 13-வது அட்சாம்சத்தைச் சேர்ந்த சென்னைக்கு 4-29 என்றால் 2-ஆம் தேதி மேஷத்தின் இருப்பு 4-20.இம்மாதிரி ஒவ்வொரு தேதிக்கும் சூரிய உதய காலத்தில் 0-9 விநாடி வீதம் கழித்துக்கொண்டே போக வேண்டும்.  இது பஞ்சாங்கத்தில் ராசிஇருப்பு என்ற தலைப்பில் இருக்கும்.
அப்படிக் கழித்தது போக மீதி நாழிகை விநாடியே உதய லக்ன சேஷமாகும்.
  1.  லக்னம்
பிறகு ஜனன கால நாழிகை விநாடிகள் வரும்வரை ஒவ்வொரு ராசியாகக் கூட்டிக்கொண்டே போனால்எந்த ராசிப் பிரமாணத்தில் ஜனன கால நாழிகை அடங்குமோ அதுவே அந்தக் குழந்தையின் ஜன்ம லக்னம் என்று அறிய வேண்டும்.
லக்னம் கணிக்கும் வழி
இந்தக் குழந்தை பிறந்தது தை மாதம் 9-ஆம் தேதி இரவு. ஆகையால் தை மாதம் 9-ஆம் தேதிக்குச் சரியாக (தை மாதத்திற்குரிய) மகர ராசியின் சேஷத்தைப் பஞ்சாங்கத்தில் உள்ளபடி குறித்துக் கொள்ளவேண்டும். அதன் கீழ் கும்பம் தொடங்கி ஜனன கால நாழிகை வரும் வரையில் ராசிமான சங்கியைகளை எழுதிக் கூட்டிக் கொள்ள வேண்டும். அதாவது: தை 9-ஆம் தேதி சூரிய உதயத்தில்-
(உதய லக்னம்)                                நா-வி
மகர சேஷம்
--
3-32
கும்பம்
--
4-17
மீனம்
--
4-11
மேஷம்
--
4-29
ரிஷபம்
--
5-04
மிதுனம்
--
5-27
கடகம்
--
5-22
சிம்மம்
--
5-08
கன்னி
--
5-04
துலாம்
--
5-16
விருச்சிகம்
--
5-28
தனுசு ஆரம்ப நாழிகை
--
53-18 
தனுசு – 5-19 சேர்த்து
--
58-37 

ஜனன கால நாழிகையான 57-33, மேற்கண்ட தனுசு ராசி வரையிலுள்ள58-37க்கு உட்பட்டிருப்பதால்இந்தக் குழந்தை தனுர் லக்னத்தில்பிறந்ததாகும். அதாவது குழந்தையின் ஜன்ம லக்னம் தனுசு என்று அறிய வேண்டும். இனி அந்தக் குழந்தையின் ஜன்ன காலத்தில் கிரகங்கள் எந்த பாதசாரத்தில் இருந்தன என்பதைக் கவனிப்போம்:
பஞ்சாங்கத்தில் கிரகபாதசாரங்கள் என்னும் அட்டவணையில் கண்டபடி,தை மாதம் 9-ஆம் தேதி கிரகங்கள் கீழ்க்கண்ட வகையில் நக்ஷத்திரபாதங்களில் சஞ்சரிக்கின்றன:
கிரகம்
நக்ஷத்திரம்
பாதம்
ராசி
நவாம்சம்
சூரியன்
உத்திராடம்
4
மகரம்
மீனம்
சந்திரன்
விசாகம்
2
துலாம்
ரிஷபம்
செவ்வாய்
மூலம்
4
தனுசு
கடகம்
புதன்
உத்திராடம்
3
மகரம்
கும்பம்
குரு
மூலம்
1
தனுசு
மேஷம்
சுக்கிரன்
மூலம்
1
தனுசு
மேஷம்
சனி
பூராடம்
2
தனுசு
கன்னி
ராகு
உத்திரம்
3
கன்னி
கும்பம்
கேது
உத்திரட்டாதி
1
மீனம்
சிம்ஹம்

  1. நவாம்ச லக்னம்
நவாம்ச லக்னம் என்பது ஜன்ம லக்னத்தில் 9-ல் ஒரு பங்கு என்று பொருள். அதாவது ஜன்ம லக்னம் தனுசுஅதன் நிராயன ராசிமானம்சென்னைக்கு நாழி 19 விநாடி அல்லது 319 விநாடி. இதை 9-ஆல் வகுக்க ஒரு பாகம் 35 4/9. குழந்தை பிறந்த நேரம் 57 நாழி 33 விநாடி. தனுர் லக்னம் ஆரம்பம். 53 நாழி 18 விநாடி. தனுர் லக்னம் பிறப்பு வரை சென்றது 57 நாழி 33 விநாடி – 53 நாழி 18 விநாடி (57-33—53-18) 4 நாழி 15விநாடி அல்லது 255 விநாடி. இதை 35 4/9-ஆல் வகுக்க 8-வது பாகத்தில் அமையும். ஆக நவாம்ச லக்னம்-மேஷம் முதல் கணக்கிட விருச்சிக லக்னம் வரும்.
35) 255 (7
      245
     ------
      10
     ------ 
மற்ற லக்னங்களுக்கு நவாம்ச லக்னம் போடுவது எப்படி என்பதைக் கீழே விளக்கியுள்ளோம்.
மேஷம்சிம்மம்,தனுசு
--
ஜன்ம லக்னமானால் - மேஷம் முதல்கணக்கிட வேண்டும்
ரிஷபம்கன்னி,மகம் 
--
ஜன்ம லக்னமானால் - மகம் முதல்கணக்கிட வேண்டும்
மிதுனம்துலாம்,கும்பம் 
--
ஜன்ம லக்னமானால் - துலாம் முதல்கணக்கிட வேண்டும்
கடகம்விருச்சிகம்,மீனம்
--
ஜன்ம லக்னமானால் - கடகம் முதல்கணக்கிட வேண்டும்
  1. நக்ஷத்திரம் ஆத்யந்தம்
இனி ஜன்ம நட்சத்திரத்தின் ஆதியந்த நாழிகைகளையும் ஜனனகால தசாசேஷத்தையும் கணிப்போமாக : மாதம் 9-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சூரியோதயத்திலிருந்து 29-27நாழிகை வரை சுவாதி நக்ஷத்திரம் இருக்கிறது. பிறகு விசாக நக்ஷத்திரம் ஆரம்பம். ஜாதகன் சூரிய உதயாதி 57 நாழிகை 33விநாடிகளுக்குப் பிறந்திருப்பதால் சுவாதி கழிந்து விசாக நக்ஷத்திரத்தில் ஜனனம் என்று தெரிகிறது. இனி விசாக நக்ஷத்திரத்தின் ஆத்யந்த பரம நாழிகை – அதாவது மொத்த நாழிகை என்ன என்று தெரிந்தால் தசாசேஷம் கணிக்கலாம். ஒரு தினத்துக்கு 60-00 நாழிகைகள். அதில் 9-ஆம் தேதி சுவாதி இருப்பு 29-27 போகஅன்றைய தினம்-
விசாக நக்ஷத்திரம் 30-33.
     மறுநாள் தை 10-ஆம் தேதி விசாகம் (பஞ்சாங்கத்தில் உள்ளபடி) 25-42.ஆகையால்இவைகள் இரண்டையும் கூட்ட விசாகம் மொத்த நாழிகை36-15 ஆகும்.
ஜனன நாழிகை
57-33
அன்று சுவாதி செல்லு
29-27
9-ஆம் தேதி விசாகத்தில் செல்லு
28-06
விசாகம் மொத்தம் (அ) ஆத்யந்த பரம நாழிகை
56-15ல்
28-06ஐக் கழிக்க
ஜனன காலத்தில் விசாகம் இருப்பு
28-09 

  1. ஜனனகால தசாசேஷம்
ஆகையால்மேற்கண்ட விசாக நக்ஷத்திரத்தின் சேஷம் 28 நாழிகை, 9விநாடிகளுக்கு தசாசேஷம் கணிக்க வேண்டும். முன்பு குறிப்பிட்டபடி விசாக நட்சத்திரத்துக்கு குருதசை ஆரம்பம். குருதசை 16 வருஷங்கள். விசாக நட்சத்திரம் மொத்தம் நாழிகை 56-15க்கு 16வருஷங்களானால் விசாகத்தில் மீதியுள்ள 28-09க்குத் தசாசேஷம் என்ன என்பதைக் கீழ்க்கண்ட விதமாகக்  கணிக்கலாம்.
அதாவது,
1.
விசாகம் மொத்த நாழிகை
56-15 X 60


3360 விநாடிகள்
15
மொத்தம்
3375 விநாடிகள்
2.
விசாகம் செல்லு போக இருப்பு
28.09 X 60

1680
     9
1689 விநாடிகள்

     விசாகம் குருவின் நக்ஷத்திரம். ஜனன காலதசை குருதசை. ஆகவே,மேற்கண்ட இருப்பு விநாடிகளைக் குரு தசா வருஷமான 16ஆல் பெருக்க வேண்டும். அந்த மொத்தத்தை விசாகம் மொத்த விநாடிகளால் வகுக்க தசாசேஷ வருடங்கள் வரும். மீதியை 12-ஆல் பெருக்கி மொத்த விநாடிகளால் வகுத்தது மாதம். 30-ஆல் பெருக்கி வகுத்தது நாட்கள். இவ்விதமாக தசா சேஷம் வரும்.
           1689 X16
          ------------
3375)   27024     (8 
வருடம்
            27000
            ---------------
                  24 X 12 / 3375 = 0 
மாதம்
                  ----------
                   288 X 30
          -------------------
3375)   8640  ( 2 + 1 =3 
நா.
            6750
            ------
            1890 
பாதிக்குமேல் இருப்பதால் ஆகச் சேர்த்துக் கொள்ளலாம்.
            --------- 
ஆகஜனன காலத்தில் குருதசை சேஷம் வருடம்  0 மாதம் நா. அதாவது இந்தக் குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போதே விசாக நட்சத்திரத்தில் பாதி பாகம் கழிந்துவிட்டபடியால்அதற்கு உரிய குருதசை 16 வருஷத்தில் சுமார் பாதி கழிந்து வருஷம் நாட்கள் மாத்திரமே பாக்கி இருக்கின்றன.

திங்கள், 13 ஜூன், 2016

தசை புத்தி நன்மை தருமா தீமை தருமா?

உபயோகமான அட்டவணை
உங்களிற்கு தசாநாதன் 7 இல் இருந்தி தசா நடத்த புக்தினாதன் 4இல் இருந்து புக்தி நடத்த 7G , 4B இல் பார்க்க  தசாபுக்தி பலன் தீமை தரும்.
.

திங்கள், 25 ஏப்ரல், 2016

லிங்காஷ்டகம்


பிரம்ம முராரியர் போற்றிடும் லிங்கம்
சிறுதும் களங்கம் இல்லா சிவலிங்கம்
பிறவியின் துயரை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்.

தேவரும் முனிவரும் போற்றிடும் லிங்கம்
காமனை ஏரித்த கருணா லிங்கம்
ராவணன் உள்ளம் விளங்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்.

வாசமனைத்தையும் பூசிய லிங்கம்
வளர் அறிவாகிய காரணலிங்கம்
சித்த சுராசுரர் போற்றிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்.

பொன்மணிசூடி சுடர்ந்திடும் லிங்கம்
தன்னிடை நாகம் அணிந்திடும் லிங்கம்
தக்சனின் யாகம் வீழ்த்திய லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்.

குங்குமம் சந்தனம் பூசிய லிங்கம்
பங்கஜ மாலையை சூடிய லிங்கம்
தொங்கிய வினைகளை போக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்.

தேவர் கணங்களின் அர்ச்சன லிங்கம்
தேடிடும் பக்தியில் ஊறிடும் லிங்கம்
சூரியன் கோடி சுடர் விடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்.

எட்டு களத்தில் எழுந்திடும் லிங்கம்
எல்லா மாகிய காரண லிங்கம்
எட்டு தரித்திரம் நீக்கிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்.

தேவரின் குருவின் பூசைகொள் லிங்கம்
தேவ வண மலரை ஏற்றிடும் லிங்கம்
பரம நாதனாய் பரவிடும் லிங்கம்
நானும் வணங்கும் சதாசிவ லிங்கம்.

லிங்காஷ்டகமிதை தினமும்
சிவசன்னதியில் சொல்வாய்
சிவலோக காட்சியுடன்
சிவன் அருளும் கொள்வாய்..... 



ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் - நான்முகப் பிரம்மனாலும் முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும் எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப் பட்ட லிங்கம்

நிர்மல பாஸித ஸோபித லிங்கம் - குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்

ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் - பிறப்பு இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.

***

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம்
ராவண தர்ப வினாஷன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம் - தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்

காம தஹன கருணாகர லிங்கம் - மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்

ராவண தர்ப வினாஷன லிங்கம் - இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

***

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரண லிங்கம்
சித்த சுராசுர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம் - எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்

புத்தி விவர்த்தன காரண லிங்கம் - உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம்

சித்த சுராசுர வந்தித லிங்கம் - சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

***

கனக மஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம்
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

கனக மஹாமணி பூஷித லிங்கம் - பொன்னாலும் மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம்

பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் - நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம்

தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம் - தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

***

குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம்
ஸஞ்சித பாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம் - குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப் பட்ட லிங்கம்

பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் - தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம்

ஸஞ்சித பாப விநாசன லிங்கம் - பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

***

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம்
தினகர கோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் - தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம்

பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் - உணர்வுடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம் - கோடி சூரியன்களின் ஒளியினைத் கொண்டிருக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

***

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் - எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம்

ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் - எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம்

அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் - எட்டுவிதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

***

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம்
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் - தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம்.

ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் - தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.

பராத்பரம் பரமாத்மக லிங்கம் - பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம்.

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

***

லிங்காஷ்டகம் இதம் புண்யம்
யே படேத் சிவ சன்னிதௌ
சிவலோகம் அவாப்நோதி
சிவே ந ஸஹமோததே

லிங்காஷ்டகம் இதம் புண்யம் - இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது

யே படேத் சிவ சன்னிதௌ - இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால்

சிவலோகம் அவாப்நோதி - சிவலோகம் கிடைக்கும்

சிவே ந ஸஹமோததே - சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.




 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.