ஜாதகரின் முன்னைய பிறப்பினை 9ம் இடத்தினை வைத்தும்; அவரின் அடுத்த பிறப்பினை 5ம் இடத்தினை வைத்தும் அறிய வேண்டும். பின்வரும் புதிய தகவலை நீங்கள் இதுவரை அறிந்திருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகின்றேன்.
1. ராசிக்கட்டத்தில் 12இல் உள்ள கிரகம்.
2. நவாம்சத்தில் 12 இல் உள்ள கிரகம்.
3. 12ம் அதிபதியுடன் தொடர்புடைய கிரகத்தினை வைத்து பாரம்பரிய வேத ஜோதிடத்தில்; ஒருவர் இறந்த பின்னார் அவரது ஆன்மா அடையும் நிலை தீர்மானிக்கப்படுகிறது.
2. நவாம்சத்தில் 12 இல் உள்ள கிரகம்.
3. 12ம் அதிபதியுடன் தொடர்புடைய கிரகத்தினை வைத்து பாரம்பரிய வேத ஜோதிடத்தில்; ஒருவர் இறந்த பின்னார் அவரது ஆன்மா அடையும் நிலை தீர்மானிக்கப்படுகிறது.
12இல் சூரியன் அல்லது சந்திரன் தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் அவரது ஆன்மா கைலாசத்தினை அடையும் என்றும்,
12இல் செவ்வாய் தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் அவரது ஆன்மா உடனடியாக மீண்டும் பிறப்பெடுக்கும் என்றும்,
12இல் புதன் தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் ஆன்மா வைகுண்டத்தினை அடையும் என்றும்,
12இல் வியாழன் (எ) குரு தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் அவரது ஆன்மா பிரம்மலோகத்தினை அடையும் என்றும்,
12இல் சுக்கிரன் தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் ஆன்மா சுவர்க்க லோகத்தினை அடையும் என்றும்,
12இல் சனி தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் அவரது ஆன்மா யமலோகத்தினை அடையும் என்றும்,
12இல் ராகு தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் அவரது ஆன்மா பூமியில் வேறு கண்டத்தில் பிறப்பு எடுக்கும் என்றும்,
12இல் கேது தொடர்புற குறித்த ஜாதகர் இறந்த பின்னர் அவரது ஆன்மா நரகத்தினை அடையும் என்றும் கூறப்படுகின்றது.
எனினும் 12இல் உச்ச கேது இருந்தால் மோட்சம் என்று ஒரு கருத்தும் நிலவுகிறது... ஆனால் இக்கூற்று கேது, ரவி, குரு 12இல் உச்சமாக இருத்தால் மட்டுமே பொருந்தும்
இது தவிர சாதகபாரிச்சாதமானது ஒருவர் இறந்தபோது உள்ள லக்கினம் கொண்டும் அவரது ஆன்மா அடையும் நிலையை கணிக்க முடியும் என்றும் கூறுகிறது.
சிலரிற்கு இதில் நம்பிக்கை வராது. பல யுகங்களிற்கு முன்னரே கோள்களையும் அவற்றை செயற்பாடுகளையும் தமது தவ வலிமையால் உணர்ந்து பலாபலன்களை அருளிய ஜோதிட பிதாமகர்கள் சொன்ன சாஸ்திரம் என்றும் பொய்ப்பதில்லை. எமது பாரம்பரிய கலைகளில் கூறப்பட்ட எத்தனையோ விடயங்களை நவீன விஞ்ஞானம் தற்போது ஒவ்வொன்றாக ஒத்துக்கொண்டு வருகிறது. எம் சாஸ்திர நுணுக்கங்கள் கண்டு வியக்கின்றது... ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு பகுதியில் நம்பிக்கை வைத்து மறுபகுதியில் நம்பிக்கையின்மை வைக்க முடியாது. இது விதியில் நம்பிக்கை வைத்து கடவுளில் நம்பிக்கை இல்லை என்பது போன்றது. இது ஒரு சாஸ்திரம். இதன் உள் அர்த்தம் வெளிப்பார்வைக்கு தெரியாது...
இறந்தால் கையை (நாடியை) விட்டிடுவான் வைத்தியன்...
இறந்தாலும் காலை (பாதத்தை) விடமாட்டான் சோதிடன்...
நன்றி