ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

புதன், 2 செப்டம்பர், 2015

காயத்ரி மந்திரமும் கல்வியும்


ஸ்ரீ காயத்ரி மந்திரமானது இருக்கு வேதத்திலும் , கிருஷ்ண யசுர் வேதத்திலும்சுக்கில யசுர் வேதத்திலும்சாம வேதத்திலும்,பிருஹதாரண்யக உபநிடதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது.

"
வேத சாஸ்திரங்களில் நான் காயத்ரீயாக இருக்கிறேன்"
என்று பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் கூறுகிறார்.
காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம்.
வேத மந்திரங்களின் சாரமாக விளங்குவது காயத்ரி மந்திரம். மந்திரங்களி லெல்லாம் ஒப்புயர்வற்றது காயத்ரியே.
காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரி க்காகவும்,நடுப்பகலில் சாவித்ரி க்காகவும்மாலை சந்தியா வந்தனத்தில்சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.
காயத்ரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும்.

காயத்ரி மந்திரம்:-
"
ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்"

"
யார் (சூரிய பகவான்) நம் அறிவைத் தூண்டுகிறாரோஅந்தக் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாகஎன்பது இதன் பொருள்.
நிமிர்ந்து உட்கார்ந்துகாலையில் கிழக்கு முகமாகவும்நண்பகலில் வடக்கு அல்லது கிழக்கு முகமாகவும்மாலையில் மேற்கு முகமாகவும் நோக்கி இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
ஸ்ரீ காயத்ரி மந்திரம் உச்சரிக்கும் முறை :-
இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும்பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களும் காயத்ரி மந்திரதில் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும்,இரண்டாவது வியாஹ்ருதிகளிலும்மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும்நான்காவது பர்க்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும்ஐந்தாவது தியோ யோ நப்ரசோதயாத்என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.

காயத்ரி மந்திரம் தினமும் உச்சரிக்க மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்
 
மேதைகளையும் ,கணிதவல்லுனர்களையும் ,தர்க்கவாதிகளையும்,பேச்சாளர்களையும்,மருத்துவர்களையும்,பொறியாளர்களையும்,ஜோதிடர்களையும்,நடனம்,நாடகம்,நாட்டிய கலைஞர்களையும் உருவாக்கிடும் மூலகர்தா வித்யாகாரகன் புதனே யாவார்
பாவங்களில் கிரகங்களும் ஜாதகரின் நிலையும்
 :-லக்னத்தில் - சந்திரன் இருக்க ஜாதகர் பக்தி ஞானம் ஆசாரம்
புதன் இருக்க இனியவாக்கும் சாத்திர மறிந்தவராகவும்,
குரு இருக்க புத்தி கூர்மை அறிஞன் பண்டிதனாகவும்
சனி இருக்க நினைவாற்றல் அற்றவராகவும் இருப்பர் .
இரண்டாமிடத்தில் சந்திரன் இருக்க நல்ல படிப்பும் ,
புதன் இருக்க நல்வாக்கு கல்வியுடையவனாகவும் ,
குரு இருக்க அறிவு கூர்மை யுடையவனாகவும் இருப்பர்.
மூன்றாமிடத்தில் புதன் இருக்க சிறந்த அறிவுள்ளவனாகவும்
குரு இருக்க கூர்மதியுடையவனாகவும்
சனி இருக்க கல்வியிற் தடை படிப்பில் மந்தகதி உடையவனாகவும் 
 சனிபலம் பெற - ஞானம் உண்டு .
கேது இருக்க ஞானம் வித்தை யுடையவனாகவும் இருப்பர் .
ஐந்தில் சந்திரனிருக்க நற்ப்புதியும் கல்வித்திறனும் உடையவனாகவும்,
புதனிருக்க ஞானவிருத்தி நர்கல்வியாலனாகவும் .

-
குரு யிருக்க நற்புத்தி ,சாஸ்திர ஞான முடையவனாகவும் இருப்பான் .
ஒன்பதில் புதனிருக்க பண்டிதனாகவும் அறிஞனாகவும் ,
குருவிருக்க நல்லறி உடையோனாகவும் இருப்பான் .
பத்தில் புதனிருக்க ஞானியாகவும் ,
கேது இருக்க விவேகமிக்கவனாகவும் இருப்பான் .
பனிரெண்டில் குரு இருக்க புத்திசாலியாகவும்
கேது இருக்க ஞான முடையவனாகவும் இருப்பான் .
பாவகாதிபதிகள் மாறிநின்ற பலன்கள் :-
லக்னாதிபதி பலம்பெற்று ல் இருக்க வாக்குவன்மை கல்விகேள்விகளின் தேர்ச்சி பெற்றவராக ஜாதகர் திகழ்வார் லக்னாதிபதி ல் பலம் பெற்றிருக்க கல்வியில் உயர்ந்த நிலை அடைவார் .இரண்டாமிடத்து அதிபதி லக்னத்திருக்க அறிவாளியாகவும். பட்டம் பெற்று உயர் பதவி அடைபவனாகவும் இருப்பார் . இரண்டாம் அதிபதிமுன்றில் பல மற்றிருக்க கல்வி ஞானமில்லாதவனாகவும் . கல்வி கற்க சந்தர்பமுடையாதவனாகவும் இருப்பான் . இரண்டாமதிபதி பத்தில் பலமுடன் இருக்க கல்வியில் சிறந்தவனாகவும் ,சாஸ்திர ஆராயிச்சி ,வாதத்திறன் ,ஆசிரியர் ,ஆச்சாரியாராவும் திகழ்வான் முன்றாமதிபதி லக்னத்தில் பலம் பெற்றிருக்க சினிமா,நாடகம் ,நாட்டியம்,சங்கிதம் ,என சகலகலா வல்லவனாக இருப்பான் . நான்காமதிபதி லக்னத்திலிருக்க (பலமுடன்) கல்வி திறன் மிக்கவன் . ஐந்தாமதிபதி லக்னத்தில் பலமுடன் இருக்க புத்தி வித்தை கல்வியிற் சிறந்தவனாகவும் இருப்பான் . ஐந்தாமதிபதி ல் இருக்க படித்தவர்களின் நட்பு கிடைக்கும். ஐந்தாமதிபதி ல் இருக்க ஜாதகரின் குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் . ஐந்தாமதிபதி ல் இருக்க புத்தி அற்றவனாகவும் நினைவாற்றல் இல்லாதவனாகவும் இருப்பான் .ஐந்தாமதிபதி ல் சிறந்த கல்வி ஒளிமயமான எதிர்காலம் உண்டு . பத்தாமதிபதி லக்னத்தில் பலம் பெற்றிருக்க ஞானமிக்கவனாக இருப்பான் . பத்தாமதிபதி ல் (பலம்) வாக்குவன்மை பேசுந்திரன் இருக்கும் . பத்தாமதிபதி ல் (பலமுடன்) சாத்திரமறிந்த பண்டிதன் ஆவான் . பன்னிரெண்டாம் அதிபதி ல் இருக்க கல்வியில் ஆர்வமும்ஊக்கமும் இருக்காது .
கிரக இணைவு பலன்கள் :
கல்வி பற்றி அறிய 2,4,5,11 ம் பாவநிலைகள் ஆராயப்பட வேண்டும் .இத்துடன் 8 , 12 சம்பந்தம் பெற கல்வி சிறக்காது / இருக்காது . ம்பாவம்-ஆரம்பக்கல்வி
4 ,9 ,11 தேர்வுகளில் வெற்றி நான்காம் அதிபதி 4 ,9 ,11 ம் பாவத் தொடர்பு = உயர்கல்வி தொழிற்கல்வி அமையும் . சந்திரன் + செவ்வாய் அல்லது சூரியன் + செவ்வாய் - ராகு கேது தொடர்பு .
4 ,9 ,11 மற்றும் சூரியன் தொடர்பு (கன்னி சிம்மம் விருச்சிகம் மீனம் லக்னம் ) - மருத்துவ கல்வி
குரு இணைய = பொது மருத்துவர்
புதன் இணைய = நரம்பியல் நிபுணர்
செவ்வாய் இணைய = அறுவை சிகிச்சை நிபுணர்
சனி இணைய = எலும்பு முறிவு / பல் நிபுணர்
சுக்கிரன் இணைய = கண் மருத்துவர் சிறுநீரகம்
சுக்கிரன் + சந்திரன் = ENT நிபுணர்
சுக்கிரன் + ராகு = எக்ஸ்ரே ஸ்கேன் நிபுணர்
குரு + செவ்வாய் + சூரியன் = ஆயுர் வேத மருத்துவர்
குரு + சூரியன் + சனி = ஹோமியோ மருத்துவர்
சூரியன் + குரு = சித்த வைத்தியர்
சூரியன் + புதன் + குரு = தத்துவ ஞானி
சூரியன் + புதன் = விஞ்ஞானி நிபுணத்துவம்
10 மிடத்துடன் புதன் தொடர்பு = எழுத்தாளர் ஆவார்
10 மிடத்துடன் சுக்கிரன் தொடர்பு = கவிஞர் ஆவார்
10 மிடத்துடன் குரு தொடர்பு = தத்துவ ஞானி ஆவார் .
6,8,12 ல் ராகு இருந்து ராகு திசையில் படிப்பே வராது .
சந்திரன் + ராகு = நல்ல படிப்பு வரும் .
புதன் + செவ்வாய் = படிப்பில் தடை ஏற்படும் .
2,5,11 சம்பந்தம் - முதுநிலை பட்டம் .
மிடம் - பள்ளிபருவம்
மிடம் - இளங்கலை பட்டயப்படிப்பை குறிக்கும் .
2,9,11 - பி எச் டி
2,11 - ஆராய்ச்சிப் படிப்பை குறிக்கும்
எந்த நிலைக்கு என்ன படிப்பு ஏற்படும் ?
1 . மேஷம் , விருச்சிகம் செவ்வாய் சந்திரன் ஆகியோர் பலம் பெற்றிருக்க மின்னியலிலும்
2 . மிதுனமும் செவ்வாயும் பலம் பெற இலக்கியம் மற்றும் தகவல் தொடர்பு துறையிலும்
3 . புதன் , குரு மிதுனம் விருச்சிகம் பலம் பெற வானொலி கம்பி இல்லா தகவல் தொடர்பும்
4 . காற்று ராசிகளான மிதுனம் துலாம் கும்பம் சூரியன் , குரு புதன் ,ஏரோ நாட்டிக்கல் ஏவியேஷன் துறை
5 . மீனம் , தனுஷு குரு + சந்திரன் - சுக்கிரன் தொடர்பு = கடல் வழிக்கான துறை வாகனக்கல்வி
மீனம் + தனுஷு + குரு + சந்திரன் - செவ்வாய் தொடர்பு = கடற்படை
மீனம் + தனுஷு + குரு + சந்திரன் - புதன் தொடர்பு = வணிகம் மற்றும் பொறியியல்
6 . புதன் + குரு - பத்திரிகைத் துறை ( ஜர்னலிசம் )
7 . மேஷம் , செவ்வாய் குரு + சுக்கிரன் = ஆட்டோ மொபைல்
8 . சுக்கிரன் + சூரியன் - குரு தொடர்பு = சினிமாத்துறை
9 . பலம் மிக்க சுக்கிரன் + புதன் + சந்திரன் - சனி தொடர்பு = பொறியியற்கல்வி
10 . சூரியன் + புதன் + குரு தொடர்பு = பட்டயப் படிப்பு ஆசிரியர் கல்வி
11 . சூரியன் + சனி + புதன் + செவ்வாய் அல்லது ராகு தொடர்பு - சட்டப்படிப்பு
13 . சூரியன் + புதன் + சுக்கிரன் = வணிக நிர்வாகம் (MBA) , கணினியியல் (PGDCA)
புதன் வலுவுடன் இருந்தாலன்றி பட்டப் படிப்பு சாத்தியமாகாது .
புதன் வலுவுடன் இருந்தாலும் , 2 ல் தீய கிரகம் இடம் பெற படிப்பில் தடை ஏற்படும் .
புதன் பலத்துடன் இருந்தாலும் லக்னாதிபதி பலமற்று 11 ல் இருக்க பட்டப் படிப்பு கேள்வி குறியாகும் . ஆயினும் தொழிற் கல்வி கை கொடுக்கும்
ரிஷபம் துலாம் மகரத்திற்கு புதன் நலந்தரும் கிரகமாகும் .
மிதுனம் , கன்னிக்கு - நன்மை தீமை கலந்து தரும் கிரகமாகும் .
கடகம் மீனம் தனுஷு விருச்சிகம் சிம்மம் மேஷம் ஆகிய ராசிகளில் தீங்கு செய்தாலும் , 2 ம் அதிபதி பலம் பெற நற்கல்வி அமையும் .
கைரேகை சாஸ்திரம் :-
புதன் மேடு வனமாக இருக்க கல்வியில் சிறந்தவராக இருப்பார் . புதன் மேட்டில் கீழ்க்கண்ட குறிகள் இருக்க ( முக்கோணக் குறி ) - மேடைப் பேச்சாளராகவும் சூரிய மேட்டில் ( சதுரக் குறி ) இருக்ககலைத்துறையில் புகழ் பெறுவார் . சந்திர மேட்டில் ( வட்டக் குறி ) இருக்க இலக்கியவாதியாவார் .
கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து புதன் மேடு நோக்கி சிறு சிறு ரேகைகள் இருக்க ஆராய்ச்சிக் கல்வியில் ஈடுபாடு ஏற்படும் . வாஸ்து :
அறிவை அபரிமிதமாக அளித்து ஞானத்தை பெருக்குபவன் ஈசானன் 'ஆவான் .
நாடி ஜோதிடம் :-
மேஷத்தில் புதன் :-
(புதன் + செவ்வாய்) விவசாயம் கல்வியில் தடை தொழிற் கல்வி ,மருத்துவ அறுவை சிகிச்சை
ரிஷப புதன் :-
(புதன் + சுக்கிரன் ) வணிகவியல் கணிதம் சட்டம் பொருளாதாரம் ,ஆகிய கல்விகளும் கலைத்துறை ஈடுபாடும் ஏற்படும் .
மிதுன புதன் :-
கணிப்பொறி , கணக்கியல் வணிகவியல் படிப்புகளும் எழுத்தாற்றல் ,பேச்சாற்றல் பத்திரிக்கைத்துறை தகவல் தொடர்பு மற்றும் சிறந்த கல்வியும் உண்டு .
கடக புதன் :-
கலை இலக்கியம் மொழிக்கல்வி அமையும் (புதன் + சந்திரன் )
சிம்ம புதன் :-
அறுவை சிகிச்சை ( புதன் + சூரியன் ) பொறியியல் சித்தா ,சமூகவியல் அரசியல் தத்துவம் சம்பந்தப்பட்ட கல்வி சிறக்கும் .
கன்னி புதன் :-
கணக்கியல் , வணிகவியல் அனைத்து துறைகளிலும் கல்வி சிறக்கும் .
துலா புதன் :-
வணிகவியல் , அழகுக்கலை சட்டம் சங்கீதம் கணக்கியல் ,கலைக்கல்வி (சுக்கிரன் + புதன்) .
விருச்சிக புதன் :-
(செவ்வாய் + புதன் ) இயந்திர மற்றும் உலோக சம்பந்தமான கல்வி விவகாரம் அறுவை மருத்துவக் கல்வி ஏற்படும் .
தனுஷு புதன் :-
(குரு + புதன்) தத்துவம் பொருளாதாரம் சட்டம் கணக்கியல்
மகர புதன் :-
(சனி + புதன் ) சுரங்கவியல் கனிமங்கள் சம்பந்தமான கல்வி .
கும்ப புதன் :-
(சனி + புதன் ) மணவியல் தத்துவம் பொறியியல் மருத்துவக் கல்வி சிறக்கும் .
மீன புதன் :-
(குரு + புதன் ) சாஸ்திரம் வணிகவியல் பொருளாதாரக் கல்வி தேர்ச்சி தரும் .
புத்த பகவான் ஸ்தோத்திரம் ப்ரயங்கி கலிகா ஸ்யாமம் ரூபேணா பிரதிமம் புதம் ! சௌம்ய சௌம்ய குணோ பேதம் ( இதை உச்சரிக்க ) தம்புதம் ப்ரணமாம் யாஹம் !! ( கல்வி ஞானம் பெருகும் )
புத காயத்ரி ஓம் கஜத் வஜாய வித் மஹே சுக ஹஸ்தாய தீமஹி !தன்னோ புத பிரச் சோதயாத் !!
கல்வி சிறக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம் :-
ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகா க்ருதிம் !]
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ் மஹே !!
எனவே அன்பர்களே ! கல்விக்கான பலநிலைகளை கலைமகள்அருளால் ஆய்வுசெய்தோம் . பயனுள்ளதாக அமைந்திருக்கும் என எண்ணி நிறைவு செய்கிறேன் .

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அருமை ஜி

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.