ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

செவ்வாய், 20 அக்டோபர், 2015

யோகங்கள்

யோகம் என்பது சூரியனதும் சந்திரனதும் இருப்பை நட்ச்சத்திரத்தினதுசார்பாக கணித்து அதன் விளைவினது தன்மையினை பொதுவாக விளக்கும்செயல்முறையாகும்

சந்திரனதும் சூரியனது ஸ்புடத்தினை அல்லதுஅகலாங்கினை கூட்டி அந்த தொகை 360 இலும் அதிகமாக வருமாயின்

அதனை 360 பாகயில் இருந்து கழித்து வரும் தொகையினை ஒரு நட்சத்திரத்தினது பாகைஅளவினால்(13°20' அல்லது 800')வகுத்தால் வேண்டும்வகுக்கும் தொகையில் வரும்தசமங்களை விடுத்து முழுஎண்ணுடன் 1 ஐக் கூட்ட வ்ரும் தொகைக்கான எண்ணைகீழ்வரும் அட்டவணையில் பார்ப்பதன் மூலம் எந்த யோகம் என அறியலாஅல்லதுசுலபமாக பஞ்சாங்கம் ஒன்றில் பார்த்துக் கொள்ளலாம்.  

எண்
பெயர்
பொருள்
1
விஷ்கம்பம்
தாங்கும் தூண்
2
பிரீதி
அன்பு/ஆதரவு
3
ஆயுஷ்மான்
நீண்ட ஆயுள்
4
சௌபாக்யம்
அதிஷ்டமுள்ள மனைவி
5
சோபனம்
பிரகாசம்
6
அதிகண்டம்
பெரும் ஆபத்து
7
சுகர்மம்
கடவுளுடன் ஒன்று பட்ட செய்கை
8
திருதி
உறுதி
9
சூலம்
சிவனின் அழித்தலுக்கான ஆயுதம்
10
கண்டம்
ஆபத்து
11
விருத்தி
வளர்ச்சி
12
துருவம்
நிலையானது
13
வியாகாதம்
பெருங் காற்று
14
ஹர்ஷ்ணம்
ஆனந்தமான
15
வஜ்ரம்
வைரம்
16
ஸித்தி
சித்தியடைந்த
17
வியதீபாதம்
மோசமான பின்னடைவு
18
வரீயான்
தலைமை
19
பரீகம்
தடை
20
சிவம்
தூய்மை /சிவன்
21
ஸித்தம்
பூர்த்தியான
22
சாத்தியம்
நடைபெறக்கூடிய
23
சுபம்
சுபம்
24
சுப்பிரம்
வெண்மை
25
பிராம்மம்
தூய அறிவும் தூய்மையும்
26
ஜந்திரம்
இறைவர்களின் தலைவன்
 27
வைதிருதி
கடவுளர்களின் வகுப்பு


இதனை ஒரு உதாரண கணிதம் மூலம் விளங்கிக்கொள்ளலாம்
  • சூரியன் 23°50'இல் மகரத்திலும் சந்திரன் 17°20' இல் துலாவிலும் நிற்பதாக கொள்க
  • சூரியனது ஸ்புடம் 23°50' + 9 x 30° = 293°50', 
  • சந்திரனது ஸ்புடம் 17°20' + 6x 30° = 197°20'. 
  • மொத்தம் 293°50' + 197°20' = 491°10'. 
  • மேற்கூறிய விதிப்படி 360 ஐக்கழித்தால் 131°10, 
  • இதனை கலைகளிற்கு மாற்றினால் 131 x 60 + 10 = 7870'. 
  • மேற்குறிப்பிட்ட விதிப்படி ஒரு நட்சத்திரத்தின் அளவால் வகுத்தால் 9.8375 வரும்
  • தசமதானத்தை விடுத்து முழு எண்ணை எடுத்தோமானால் 9. அதனுடன்ஒன்றைக் கூட்டினால் 10. 
  • ஆக யோகம் கண்ட யோகமாகும்

GHT

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 கருத்துகள்:

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.