ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

புதன், 12 அக்டோபர், 2016

நவரத்தினகல் பற்றிய வாசகர் ஒருவர் கேள்வியும் எனது பதிலும்...

முகநூலில் "ஜோதிட கேள்வி பதில்" குழு உறுப்பினர் Santhosh Kumar G உடைய கேள்வி - ""ஜோதிட ஆசான்கள் மற்றும் நண்பர்களுக்கு வணக்கங்கள்!!
இன்று ஒரு அதிசயமான நாளாக இருந்தது. நான் பிறந்த அதே தேதியில் அதே வருடத்தில் எனது லக்கினத்தில் பிறந்த ஒருவரை எதிர்பாராவிதமாக சந்தித்த நாள் இன்று. ஒரே லக்கினம் என்பதையும் தெரிந்துக்கொண்டு ஆச்சரியம் அடைத்தேன்.
என்னைப்போலவே அவருக்கும் துலாம் லக்கினம் மற்றும் ராசி. அதுபோலவே லக்கினத்தில் கேது சந்திரன் மற்றும் சனி சேர்க்கை கொண்டவர். இடதுகை நடு விரலில் வைடூரியம் அணிந்துள்ளார்.
எத்தனை நாட்கள் இதை அணிந்துள்ளேர்கள் என்று கேட்டபோது ஒன்றரை வருடமாக அணிந்து வருகிறேன் என்றார். பலன் எப்படி உள்ளது என்று கேட்டபோது அபாரமாக உள்ளதாகவும் தடை தாமதங்கள் விளங்குவதாகவும். சிறுக சிறுக முன்னேற்றம் வருவதாகவும், ஏழரை பாதிப்புகள் பெருமளவில் இல்லை எனவும் சொன்னார்.
ஐயா , எனது கேள்வி என்னவென்றால் , கேது+சந்திரன்+சனி சேர்க்கையில் புனர்பூ தோஷம் பெற்ற ஒருவர் கேதுவின் கல்லை இடதுகை நடு விரலில் அணிந்துகொண்டுள்ளது எப்படி நல்ல பலன்கள் தரக்கூடும் ஐயா?! புனர்பூ தோஷம் தரும் கேதுவின் கல்லை அவர் அணிந்துகொண்டு பின்பு முன்னேற்றம் அடைந்ததாக சொல்வது மகிழ்ச்சி என்றாலும் , தடையை தரும் ஒரு கிரகத்தில் கல்லை அவர் அணிந்து நன்மை அனுபவிப்பது எப்படி சாத்தியம் ஆகும் ஆசான்களே.. தயவுசெய்து விளக்கங்கள் தரவும்.""
எனது பதில் - உங்கள் கேள்விக்கு உங்களுக்கு மட்டும் பயனுள்ளதாக விடை தந்தால் அது உங்கள் ஒருவருக்கு மட்டுமே பயன்படும். எனவே வாசகர்கள் அனைவருக்கும் பயன்படும் வண்ணம் பதில் தருகிறேன்...
துலா ராசி. ஜாதகத்திற்கு யோகக்காரர் சனிபகவான். அவர் 4மிடமான கேந்திரத்திற்கும் 5ம் இடமான திரிகோணத்திற்கும் அதிபதியாகி லக்கினத்தில் உச்சம். கூடவே 10 அதிபதி சந்திரன் மற்றும் கேது. சாயாகிரகங்கள் திரிகோணத்தில் நின்று கேந்திர/திரிகோணாதிபதிகளின் தொடர்பு பெற்றால் நன்மை செய்யும் என்று ஒரு விதி உள்ளது. மேலும் கேது உச்ச வலிமை பெற்ற சனியுடன் முரண்படும். ராகு கேதுக்களை பொறுத்த வரை அவர்கள் பெற்ற  நட்சத்திர அதிபதியை விட அவர்கள் இருந்த வீட்டு  அதிபதியையை பிரதானமாக கொண்டு பலன் காண வேண்டும். இப்படி பல விதிகள் பாரம்பரிய வேத ஜோதிட முறையில் உள்ளதால் ஒரு பாரம்பரிய வேத ஜோதிடரால் இதனை பார்த்தவுடன் கூற முடியும். உங்கள் கேள்வியில் ராகு மாற்றும் கேது அமைந்த வீட்டு அதிபதிகளான ,சுக்கிரன் நிலை பற்றி நீங்கள் எதுவும் கூறவில்லை. அதனுடன் வெறும் இரண்டு குறிப்புக்களை மட்டும் கூறிவிட்டு விடை எதிர்பார்ப்பது தவறு...
"கையில் நடு விரலில் வைடூர்யம் அணிந்துள்ளார்" என கூறியுள்ளீர்கள். மேலும் "கேது+சந்திரன்+சனி சேர்க்கையில் புனர்பூ தோஷம் பெற்ற ஒருவர் கேதுவின் கல்லை இடதுகை நடு விரலில் அணிந்துகொண்டுள்ளது எப்படி நல்ல பலன்கள் தரக்கூடும் ஐயா" என்றும் கேட்டுள்ளீர்கள்.. கேதுவுடன் சனி சந்திரன் இணைய அவர்களின் பலனை நிர்ணயிப்பது கேதுபகவான். அவர் நிழல் கிரகம் என்பதால் சுயமாக நிர்ணயிக்கமாட்டார். (ஜோதிட விதிகளை விளக்குவது இந்த பதிவின் நோக்கம் இல்லை என்பதால் மேற்கொண்டு நகர்வோம்.)
முதலில் நவரத்தின கற்களின் தன்மைகளையும் அவற்றின் செயற்பாடுகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். எந்தவொரு ஜாதகத்திலும் யோகம் தரும் கிரகங்கள் பலம் குறைந்து இருந்தால் அதனால் யோகம் தர முடியாது. ஆகவே அந்த கிரகங்களை வலிமைப்படுத்த 3 முறைகள் உள்ளன. அந்த 3 முறைகளின் இந்த நவரத்தினகல் முறையும் ஒன்று. நவரத்தின கற்களை துளையிடப்பட்ட மோதிரங்களில் பதிவித்து வலது கைவிரலில் தொடுமாறு அணிய வேண்டும். (சில கற்கள் விதிவிலக்கு. ஏ.கா :- பவளம்.)  open-setting இல். ஒரு கிரகத்தின் தீமையை குறைக்க நவரத்தின கல் அணிய முடியாது. அதுவே சத்தியம்... ராகு கேதுக்கள் சிலவகையில் கெட்டு இருந்தால் அவற்றால் கிடைக்கப்படவேண்டிய உண்மையான நல்ல பலன்களை பெற அவற்றின் கற்களான கோமேதகம், வைடுரியத்தினை பஞ்ச உலோகத்தில் (தங்கம்/ வெள்ளி இரண்டாம் பட்சம்.) செய்து இடது கையில் அணிய வேண்டும் விதி. நமது கைகளில் உள்ள 5 விரல்களும் 5 கிரக ஆதிக்கம் உள்ளவை. ஏ.கா: - மோதிரவிரல் - குரு ஆதிக்கம் உடைய விரல். இங்கு குருவின் புஷ்பராகம் / கனக புஷ்பராக கல்லினை அணியலாம். மேலும் குருவின் நட்பு கிரகங்களின் கற்களையும் அணியலாம். தங்கம் குருவிற்கான உலோகமாகும். எனவேதான் குருவின் ஆதிக்கம் கொண்ட மோதிர விரலில் தங்க மோதிரம் அணியும் பழக்கம் வந்தது. (அந்த காலத்தில் மோதிரத்திற்கு தங்கமே பயன்பட்டதால் தங்க மோதிரம் அணியும் விரலாய் சாஸ்திர ஞானிகள் அறிவுறுத்தியமையால் "மோதிர விரல்" என காரண பெற்றது.) இதனால் குரு பலமடைந்து நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால் தற்போது எந்த மோதிரமானாலும் மோதிரவிரல் எனும் குரு விரலில் அணியும் பழக்கம் வந்து விட்டதற்கு காரணம் நாம், நமது முன்னோர்கள் சாத்திர வழியில் இருந்து தவறியாமையும் சாஸ்திரங்களை அறியாமல் போனதுமாகும். அது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் எடுத்துக்கொண்ட தலைப்பில் தொடர்ந்து சில தகவல்களை பார்ப்போம்...
ஒரு கிரகத்தின் கல்லினை எப்போது இடது கையில் அணியலாம் என்றால் ஒரு கிரகம் ஜாதகப்படி நன்மையையும் தீமையும் கலந்து தரும் நிலையில் இருந்தால் அப்போது அதன் தீமைகளை கட்டுப்படுத்த இடது கையில் அணியலாம். ஆனால் தற்போது ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக கூறுவதால் மக்கள் குழம்பியுள்ளனர்.
நவரத்தின கற்களை இருமுறையில் அணியலாம். புரியும்படி கூறவேண்டும் என்றால்;
1. "ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் எனக்கு ரஸ்கு சாப்பிடுறது போல" என கூறுவோர்களுக்கு சில நிபந்தனைகளின் பேரில் சில கற்களை அணிவ வைப்பது. மேலோட்டமாக ஒரு ஜாதகத்தினை பார்த்தல் "என்ன! இவர் அஷ்டமாதிபதி கல்லினை அணிந்துள்ளாரே?" , "என்ன! இவர் பாதகாதிபதி கல்லினை அணிந்துள்ளாரே?" என கூற வைக்கும். ஆனால் அந்த கல்லினை ஜாதகர் அணிந்ததில் இருந்து ஜாதகருக்கு நன்மைகள் நடக்கும். அனைவரும் வியப்பர்... அப்படி. ஆனால் ஒரு ஜோதிடர் இந்த முறையில் ஜாதகருக்கு கல்லினை தெரிவு செய்யும்போது கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை (ஜோதிடர்க்கல்ல... ஜாதகருக்கு...) ஏனெனில் அவரது கணிப்பு சற்று தவறி தவறான நிலையில் துஷ்ட ஆதிபத்தியம் வாங்கிய கிரகங்களின் கல்லினை அணிய வைத்துவிட்டால் அதன் பிறகு ஜாதகர் வாழ்வு இன்னும் மோசமாகிவிடும். அதனால் இந்த முறையினை ஜோதிடர்கள் நடைமுறைப்படுத்துவதில்லை. அதற்கு இன்னுமொரு காரணமும் உண்டு அது அவர்கள் ஜோதிட அறிவின் மீதான சந்தேகம்! இந்த முறையானது "பிரதிகூல முறை"யில் கல் அணிதல் எனப்படும். (நான் பாதகாதிபதி கல்லினை அணிந்துள்ளேன். ஜாதகத்தின் பின்புலத்தில் பாதகாதிபதியின் நிலையினை ஆய்வு செய்து அணியலாம் என கணித்து அணிந்துள்ளேன்.)
2. இரண்டாவது முறை "அனுகூல முறை" எனப்படும். ஜாதகப்படி நன்மை மட்டும் தரும் கிரகங்களின் பலத்தினை கூட்ட அந்த நன்மை தரும் கிரகங்களின் கல்லினை அணிவதாகும். இதனையே 99.99 வீதமான ஜோதிடர்கள் பின்பற்றுகின்றனர். அனுகூலமுறையானது பிரதிகூல முறையிலும் சக்தி குறைவான முறையாகும். எனவே நன்மைகளை தர காலம் எடுக்கும். மேலும் கொஞ்சம் கொஞ்சமாகவே நன்மை தரும்.
அஸ்தங்க, நீச்ச கிரகத்தின் கற்களை ஒருவர் அணியக்கூடாது என்று சில ஜோதிடர்கள் கூறிவருகின்றனர்.
ஆனால் அதனை நான் நிராகரிக்கின்றேன். நீச்ச கிரகத்தின் கல்லினை இடது கையில் பொருத்தமான விரலில் அணிய வேண்டும். அஸ்தங்க கிரகத்தின் கல்லினை வலது கையில் பொருத்தமான விரலில் அணிய வேண்டும். சூரியன் நல்லது செய்ய கடமைப்பட்டு ஆனால் பலவீனமாக இருந்தால் மாணிக்க கல்லினை வலது கையில் சூரிய விரலில் அணிய வேண்டும். எந்தெந்த கற்களை எந்தெந்த விரலில் அணியவேண்டும் என்று கீழுள்ள படம் காட்டுகின்றது. இந்த பதிவானது "அஸ்தங்க, நீச்ச கிரகத்தின் கற்களை அணியலாமா" என்ற உங்கள் கேள்விக்கு "ஆம்" என்ற பதிலினை மட்டும் தருகின்றது. ஒரு கிரகம் அஸ்தங்க, நீச்சம் பெற்றால் முதலில் அந்த கிரகம் உங்கள் ஜாதகப்படி நன்மை செய்யுமா? பாதகம் செய்யாத நிலையில் இருக்கின்றதா என்று உங்கள் ஜாதகத்தினை ஒரு ஜோதிடரிடம் காட்டி; எந்த நவரத்தின கல்லினை அணியலாம் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள். அதனை விடுத்து உங்கள் ராசிக்குரிய கல்லினை கொண்டும் அணிய வேண்டாம். (உங்கள் ராசி ரிஷபம் என்றால் வைரம் அணிவது தவறு, லக்கினப்படி சந்திரன் இருக்கும் ரிஷபம் பாதகம் செய்யும் அமைப்பில் இருந்தால் நீங்கள் வைரக்கல் அணிந்தால் மேலும் சிரமமேபடுவீர்கள்.
நவரத்தின கற்களை பற்றி வேத ஜோதிடத்தில் கூறப்பட்டவை நான் மேலே கூறப்பட்ட சிறு பதிவில் ஒரு வீதம் கூட அடங்கிவிடாது. அனைத்தையும் இங்கு விபரித்துவிடவும் இயலாது. ஆகவே தொலைக்காட்சியில் கூறுவதை கேட்டோ அல்லது உங்கள் ராசிக்குரிய அதிர்ஷ்ட கல் தருகிறேன் என்று நகைக்கடைக்காரர்கள் கூறுவதை கேட்டோ உங்கள் வாழ்வில் மண்ணை அள்ளி போடாதீர்கள்! "உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்" என்பது இங்கேயே பொருந்தும் என்பதனை கூறிக்கொள்கிறேன். உங்கள் ஜாதகத்தினை அலசி நீங்கள் கல் அணிந்து தவறு விடாமல் பாரம்பரிய வேத ஜோதிடப்படி தேர்ந்த ஜோதிடர் ஒருவர் மூலம் சரியான கல்லினை தரமான கல்லினை சரியான முறையில் சரியான நேரத்தில் அணிந்து வாழ்க்கையில் முன்னேறுங்கள். எந்தெந்த நவரத்தின கற்களை எந்த விரல்களில் அணியலாம் என்று படத்தில் காட்டியுள்ளேன்.

நன்றி,
பாரம்பரிய வேத ஜோதிடர், ஆலோசகர் மற்றும் ஜோதிட ஆராச்சியாளர் ஹரிராம் தேஜஸ்.
hariram1by9@gmail.com





"ஜோதிட கேள்வி பதில்" தளத்தில் அதிக ஜோதிட தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளுங்கள் - www.facebook.com/groups/vedicastroservice

GHT

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

3 கருத்துகள்:

JOTHIDAM சொன்னது…

Yes your correct I wear pearl and manic kami and pushparaga but all are negative effects why

JOTHIDAM சொன்னது…

Yes your correct I wear pearl and manic kami and pushparaga but all are negative effects why

GHT சொன்னது…

லக்கினப்படி தீய ஆதிபத்தியம் வாங்குவோரின் இரத்தின கல் "அனுகூல முறையில்" அணிந்தால் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.