ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

புதன், 26 ஏப்ரல், 2017

இராமேஸ்வரம்

இராமேஸ்வரம் தமிழகத்தின் இராமநாதபுர மாவட்டத்தை சேர்ந்த தென்கிழக்கு கடற்கரையில் உள்ள ஊராகும். இது வங்காள விரிகுடா கடலின் கரையில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவன்கோவில் இந்து சமயத்தின் ஒரு முக்கிய புனித வழிபாட்டிடமாதலால் பெருமளவிலான சுற்றுலா பயணிகள் இங்கு வருகின்றனர். இரமாயன புராண கதையில் சீதா பிராட்டியாரை இலங்கை அரசன் இராவணிடமிருந்து மீட்க இராமர் தனது அனுமார் படையுடன் இணைந்து பாலம் கட்டியுள்ளார். விஷ்ணு அவதாரமான இராமர் சிவனிடம் இராவனணை கொன்றதற்காக மன்னிப்பு கேட்டு கொண்டார். இதனால் தமிழகத்தின் மிக சிறந்த கோவில் நகரமாக விளங்கும் இராமேஸ்வரம் இந்து சமய சிவ வைஷ்ணவ சமணத்திற்கு பொதுவாக விளங்குகிறது.

ஸ்ரீஇராமநாதசுவாமி கோவில்
புராணக் கதையில் இராமர் வழிபடுவதற்காக லிங்கத்தை சுபநேரத்தில் கொண்டுவர தாமதித்தனால் சீதா பிராட்டியால் உருவாக்கப்பட்டதுதான் ஸ்ரீஇராமநாத சுவாமி கோவிலில் விளங்கும் லிங்கம். பின்னர் ஹனுமானுக்கு ஆறுதல் அளிக்க கூடிய வகையில் அவர் கொண்டு வந்த லிங்கத்தை இராமநாதவிற்கு வடக்கே சம்பர்தாய சடங்குகளுடன் அமர்த்தி ஹனுமான் லிங்கம் என்று பெயர் சூற்றினார். இராமநாதரை வழிபட வரும் அனைத்து பக்தர்கள் முதலில் ஹனுமான் லிங்கத்தை வழிப்படுவார்கள்.
அக்னிதீர்த்தம்
இந்தியாவின் 12 ஜோதிர்லிங்களில் ஒன்று இங்கு உள்ளது. மருத்துவ குணங்கள் நிறைந்த 22 புண்ணிய கிணறுகள் ஒவ்வொன்றும் தனி சுவையுடன் விளங்குகிறது. இதில் நீராடியபிறகு பக்தர்கள் இராமநாத சுவாமியை தரிசிக்க செல்கின்றனர்.
கோதண்ட இராமசுவாமி கோவில்
தெற்கு கடற்கரையில் தெற்கே இந்திய பெருங்கடல் வங்காள விரிகுடாவுடன் கலக்கும் இடத்தில் உள்ளது தனுஷ்கோடி தீவு. 1967-ம் ஆண்டில் தனுஷ்கோடி முழுவதும் சூறாவளியால் சேதமடைந்தது. அதில் சேதமடையாமல் கோதண்ட இராமசுவாமி கோவில் இருந்தது. புராணக்கதைகளின் மூலம் இந்த இடத்தில் இராவணுடைய சகதோரன் விபுஷணன் இராமருடன் இணைந்தது அறியலாம் இதற்கு ஆதாரமாக இக்கதையை சித்தரிக்கும் வகையில் கோவிலில் உள்ள ஓவியங்கள் விளங்குகிறது. இத்திருத்தலத்தில் இராமர், சீதா பிராட்டியார், லஷ்மனண், விபுஷனண், ஹனுமான் போன்ற தெய்வங்களின் சிலைகளை காணலாம். இந்து சமய கோட்பாடுகளை பரப்பிய விவேகானந்தர் மேற்கே தனது பயணத்தை முடித்தவுடன் இங்கு வந்தடைந்தார்.
உதிரகோஷமங்கை
இராமநாத புரத்திலிருந்து தென்மேற்காக 16 கி.மீ தொலைவில் உதிரகோஷமங்கை உள்ளது. இங்கு புதுப்பிக்கப்பட்ட சிவன் கோவிலில் மங்களேஸ்வரர் தாயார் மங்களேஸ்வரியுடன் எழுந்தருளியுள்ளார். மாணிக்கவாசகர் இக்கோவிலை பற்றி பாடியுள்ளார்.
திருபுலானி
இராமனின் துணிவான இலங்கை பிராயணத்தில் தீவுக்கு வெளியே மூன்று முக்கிய இடங்கள் சம்பந்தப்பட்டுள்ளது. அதில் சிறந்து விளங்குவது திருபுலானியில் இருக்கும் பெரிய கோவிலாகும். இராமனின் யுத்ததிற்கு தேவையான வில் மற்றும் அம்பு இங்கியிருந்து பெற்றதாக நம்பப்படுகிறது. திருபுலானியில் ஆதி ஜெகநாத பெருமாள் எழுந்தருளியுள்ளார்.
தனுஷ்கோடி
இராமேஸ்வரம் தீவிலிருந்து 8 கி.மீ தொலைவில் கிழக்கு கோடியில் தனுஷ்கோடி உள்ளது. தனுஷ்கோடியிலிருந்து இலங்கையை இணைக்கும் பாலத்தை ஆதம்ஸ் பாலம் என்று அழைக்கிறார்கள். ஹனுமான் இப்பாலத்தை கடந்து இலங்கையை அடைந்ததாக நம்பப்படுகிறது. 1964-ம் ஆண்டு ஏற்ப்பட்ட சூறாவளியால் தனுஷ்கோடி முழுவதும் சேதமடைந்தது அதில் காப்பாற்றப்பட்டது கோதண்ட இராமசாமி கோவில் மட்டும்.
பாம்பன் பாலம்
வங்காள விரிகுடாவின் மேல் இராமேஸ்வரத்தை இணைக்க 2.2 கி.மீ நீளத்தில் கட்டப்பட்டது பாம்பன் பாலம் இது இந்தியாவின் நீளமான பாலமாகும். கப்பல்கள் பாலத்தை கடக்கும் போது இந்த இரயில் பாலம் திறக்கப்படுவது இதன் சிறப்பாகும்.
தேவிப்பட்டினம்
உலகில் நவக்கிரகங்கள் கடலுள் அமைந்திருக்கும் ஒரே இடம் தேவிப்பட்டினம். இராமர் தேவிப்பட்டினத்தை வந்தடைந்தபோது நவக்கிரகங்களை வழிப்பட நவபாஷானங்கள் என்று அழைக்கப்படும் ஒன்பது கிரக சிலைகளை கடலில் இருந்து மணல் எடுத்து உருவாக்கியுள்ளார். அவர் நவபாஷானங்களை வழிப்படும்போது ஜெகநாத கடவுள் அலைகளை கட்டுப்படுத்தி தடையின்றி வழிப்பாட்டை நடத்தியதாக நம்பப்படுகிறது. கிரகதோஷங்களிலிருந்து சரியான சமய சடங்குகளை கொண்டு தோஷங்கள் நீங்குவது இந்த இடத்தின் சிறப்பாகும்.
ஏர்வாடி :
இராமேஸ்வரத்திலிருந்து 24 கி.மீ தொலைவில் ஏர்வாடி உள்ளது. முஸ்லிம்களின் முக்கிய புண்ணிய யாத்திரை இடமாக விளங்கும் ஏர்வாடியில் இப்ராஹிம் சாஹித் ஆயுலியா சமாதி உள்ளது. உலகில் உள்ள முஸ்லீம்கள் டிசம்பர் மாதம் நடைபெறும் புனிதர் பாராட்டு விழாவிற்கு திரள்வது இதன் சிறப்பாகும். இங்கு சூரியன், கடல் , கடற்கரை ரம்யமான அழகுடன் காட்சியளிக்கின்றன.
இராமநாதபுரம் :
இம்மாவட்டத்தின் தலைமை இடமாக விளங்கும் பழமையான நகரம் இராமநாதபுரம். இங்குள்ள இராமலிங்க விலாசம் அரண்மனையில் அழகு ஒவியங்கள், தாயுமான சாமிகளின் நினைவிடம் உள்ளன. இந்நகரில் சுற்றுலா பயணிகளுக்காக அருகாட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நகரத்திலிருந்து ராஜ்ஜியத்தை சேதுபதி ஆண்டதாக கூறப்படுகிறது.
சி வோல்டு அக்யூரியம் :
இராமேஸ்வரம் பஸ் நிலையம் எதிரில் எளிதில் கவரும் பலவகை நீர்வாழ் உயிரினங்கள் வளர்க்கிற சிறிய தடாகம் சி வோல்டு அக்யூரியம் ஆகும். இங்கு கடல் வாழ் உயிரினங்களான ஆக்டோபஸ், அரிய வகை மீன்கள், கடல் பல்லி, நண்டு, இரா, சுரா, கடல்தாமரை, கடல் குதிரை, நட்ச்சத்திர மீன்கள் போன்றவை பிற நாடுகளிலிந்தும் கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்படுகிறது ஆகவே இந்தியாவில் இந்த தடாகம் தனி தன்மையுடன் பகழ்பெற்று விளங்குகிறது. மேலும் சுற்றுலா பயணிகள் குழந்தைகள் நீர்வாழ் உயிரினங்கள் விரும்புவோர்களை கவருகிறது.
கந்தமதன பர்வதம் :
இராமேஸ்வத்திலருந்து 2.5 கி.மீ தொலைவில் கந்தமதன பர்வதம் உள்ளது. இம்மண்டப்பத்தில் இராமரின் காலஅடி சுவடி போற்றி பொதிந்துள்ளது. தீவில் ஒரு சில பகுதிகளை இம்மண்டபத்தின் மேல் நின்று காணலாம்.










GHT

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

0 கருத்துகள்:

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.