திக்பலம் பற்றி இரண்டு வரியில் பதிவிட்ட எனது பதிவில் வந்த உறுப்பினர்களின் கேள்விகளிற்கு பதிலளிக்கும் வகையிலும் உங்களுக்கு திக்பலம் பற்றி ஒரு தெளிவான அறிமுகத்தை வழங்கும் வகையிலும் எனது இப்பதிவு இருக்கும் என்று நினைக்கிறேன்...
கிரகங்களின் பலத்தை ஷட்பலம் எனும் ஆறு நிலைகளில் வைத்து அளவிட வேண்டும். கிரகங்களின் பலத்தை வைத்தே ஜாதகபலன் தீர்மானிக்கப்படுகிறது. ஷட் பலத்தில் உள்ள 6 விதமான பலங்களில் ஒன்றுதான் இன்று நாம் பார்க்க போகும் திக் பலம்.
திக் பலம் என்றால் நிழல் கிரகங்களான ராகுகேது தவிர ஏனைய ஒளிகிரகங்களும் தூமாதி ஐவரும் ஒவ்வொரு திக்கில் (திசையில்) அடையும் பலம் என்று பொருள். அதாவது ஒவ்வொரு கிரகங்களும் ஒவ்வொரு திசையில் பலம் பெறும். உதாரணமாக உதயகிரகங்களான குருவும், புதனும் எமக்கு உதயநேரமாகிய கிழக்கு எனும் லக்கினத்தில் இருந்தால் பலம் பெறும். சந்திரனும் சுக்கிரனும் நீர்க்கிரகங்கள். குளிர்ச்சி எனும் தண்மையை குறிக்கும் இவை (நள்)இரவில் பலம் பெறுவர் அதாவது இவை தெற்கு எனும் நான்கில் இருக்கும் போது பலம் பெறும். இருள் கிரகமான சனிபகவான் பகல்பொழுது மறைந்து இருள் கவ்வ தொடங்கும் சூரியஅஸ்தமனத்தின்போது பலம் பெறுவார். அதாவது மேற்கு திசையை குறிக்கும் ஏழில். சூரியனும் செவ்வாயும் நாம் மேலே பார்க்கும்போதுள்ள வடக்கு திக்கில் பலம் பெறுவர். அதாவது நடு உச்சிப்பொழுதில் நெருப்பு கிரகங்கள் அதீத பலம் பெறுவர்.
இந்த 7 கிரகங்களும் திக்பலம் பெறும் 4 ராசிகளும் லக்கின கேந்திரமாக அமையும். அதாவது கேந்திரஸ்தானங்கள் என்பன லக்கினத்தின் பலமான தூண் போன்றவை. லக்கினத்தை மையமாக கொண்டு பார்க்கும் போது கேந்திரங்கள் எம் ஜனன நேரத்தில் இக்கிரகங்களால் வலிமை பெறும்போது அது லக்கினத்தில் அந்த கிரக காரகத்துவம் சார்பாக நமக்கு பலத்தை தருகிறது.
திக்பலம் பெற்ற கிரகங்கள் தமது காரத்துவ ரீதியில் நல்ல பலன்களை தரும். அதுவே நிஷ்ட பலம் (பலவீனம்) பெற்றால் அந்த கிரகம் திக்பல ரீதியாக பலவீனம் அடையும். நிஷ்ட பலம் என்பது கிரகங்கள் தாம் திக்(கு) பலம் பெறும் ராசிக்கு நேர்எதிரே இருப்பதாகும். உதாரணமாக லக்கினத்தில் குரு இருக்கும் போது திக்பலம் பெற்றும் 7ல் குரு இருந்தால் திக்பல ரீதியாக நிஷ்டபலம் (பலவீனம்) அடையும்.
சனி லக்கினத்திலும்;
சூரியன், செவ்வாய் 4 இலும்;
குரு, புதன் ஏழிலும்;
சந்திரன் மற்றும் சுக்கிரன் பத்திலும் நிஷ்டபலம் பெறுவர். இவை விரும்பத்தக்க நிலை அல்ல...
சூரியன், செவ்வாய் 4 இலும்;
குரு, புதன் ஏழிலும்;
சந்திரன் மற்றும் சுக்கிரன் பத்திலும் நிஷ்டபலம் பெறுவர். இவை விரும்பத்தக்க நிலை அல்ல...
இதனை துல்லியமாக லக்கினபுள்ளியை மையமாக எடுத்து கேந்திரங்களில் திக்பலம் பெறும் கிரகங்கள் அமர்ந்த புள்ளியை கொண்டு சதவீதத்தில் குறிப்பிடலாம். இதுபற்றி மேலும் விரிவாக எழுதலாம். அதனை நாம் ஒரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
நன்றி!
நன்றி!
ஜாதகம் எழுத, பலன் பார்க்க, திருமண பொருத்தம் பார்க்க மற்றும் சகலவிதமான ஜோதிட ஆலோசனைகளும் தொடர்பு கொள்க
பாரம்பரிய தெய்வீக ஜோதிடர் ஹரிராம் தேஜஸ்.
hariram1by9@gmail.com
1 கருத்துகள்:
sir plz send this article also to my mail. tk u sir
கருத்துரையிடுக