ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

செவ்வாய், 20 அக்டோபர், 2015

யோகங்கள்

யோகம் என்பது சூரியனதும் சந்திரனதும் இருப்பை நட்ச்சத்திரத்தினதுசார்பாக கணித்து அதன் விளைவினது தன்மையினை பொதுவாக விளக்கும்செயல்முறையாகும்

சந்திரனதும் சூரியனது ஸ்புடத்தினை அல்லதுஅகலாங்கினை கூட்டி அந்த தொகை 360 இலும் அதிகமாக வருமாயின்

அதனை 360 பாகயில் இருந்து கழித்து வரும் தொகையினை ஒரு நட்சத்திரத்தினது பாகைஅளவினால்(13°20' அல்லது 800')வகுத்தால் வேண்டும்வகுக்கும் தொகையில் வரும்தசமங்களை விடுத்து முழுஎண்ணுடன் 1 ஐக் கூட்ட வ்ரும் தொகைக்கான எண்ணைகீழ்வரும் அட்டவணையில் பார்ப்பதன் மூலம் எந்த யோகம் என அறியலாஅல்லதுசுலபமாக பஞ்சாங்கம் ஒன்றில் பார்த்துக் கொள்ளலாம்.  

எண்
பெயர்
பொருள்
1
விஷ்கம்பம்
தாங்கும் தூண்
2
பிரீதி
அன்பு/ஆதரவு
3
ஆயுஷ்மான்
நீண்ட ஆயுள்
4
சௌபாக்யம்
அதிஷ்டமுள்ள மனைவி
5
சோபனம்
பிரகாசம்
6
அதிகண்டம்
பெரும் ஆபத்து
7
சுகர்மம்
கடவுளுடன் ஒன்று பட்ட செய்கை
8
திருதி
உறுதி
9
சூலம்
சிவனின் அழித்தலுக்கான ஆயுதம்
10
கண்டம்
ஆபத்து
11
விருத்தி
வளர்ச்சி
12
துருவம்
நிலையானது
13
வியாகாதம்
பெருங் காற்று
14
ஹர்ஷ்ணம்
ஆனந்தமான
15
வஜ்ரம்
வைரம்
16
ஸித்தி
சித்தியடைந்த
17
வியதீபாதம்
மோசமான பின்னடைவு
18
வரீயான்
தலைமை
19
பரீகம்
தடை
20
சிவம்
தூய்மை /சிவன்
21
ஸித்தம்
பூர்த்தியான
22
சாத்தியம்
நடைபெறக்கூடிய
23
சுபம்
சுபம்
24
சுப்பிரம்
வெண்மை
25
பிராம்மம்
தூய அறிவும் தூய்மையும்
26
ஜந்திரம்
இறைவர்களின் தலைவன்
 27
வைதிருதி
கடவுளர்களின் வகுப்பு


இதனை ஒரு உதாரண கணிதம் மூலம் விளங்கிக்கொள்ளலாம்
  • சூரியன் 23°50'இல் மகரத்திலும் சந்திரன் 17°20' இல் துலாவிலும் நிற்பதாக கொள்க
  • சூரியனது ஸ்புடம் 23°50' + 9 x 30° = 293°50', 
  • சந்திரனது ஸ்புடம் 17°20' + 6x 30° = 197°20'. 
  • மொத்தம் 293°50' + 197°20' = 491°10'. 
  • மேற்கூறிய விதிப்படி 360 ஐக்கழித்தால் 131°10, 
  • இதனை கலைகளிற்கு மாற்றினால் 131 x 60 + 10 = 7870'. 
  • மேற்குறிப்பிட்ட விதிப்படி ஒரு நட்சத்திரத்தின் அளவால் வகுத்தால் 9.8375 வரும்
  • தசமதானத்தை விடுத்து முழு எண்ணை எடுத்தோமானால் 9. அதனுடன்ஒன்றைக் கூட்டினால் 10. 
  • ஆக யோகம் கண்ட யோகமாகும்

வியாழன், 17 செப்டம்பர், 2015

கார்த்திகை தீப வரலாறு மற்றும் நாம் அறிந்திடாத அறிவியல் பின்னணி

கார்த்திகை தீப வரலாறு


karthikai deepamஆதி நடம் ஆடுமலை அன்றிருவர் தேடுமலை
சோதிமதி ஆடரவம் சூடுமலை -நீதி
தழைக்குமலை ஞானத் தபோதனரை
வாவென்றழைக்கு மலை அண்ணாமலை
- குரு நமச்சிவாயர்

   இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் என்பது முறையே இவர்களுடைய பொறுப்பாகும். இவர்களில் மகேஸ்வர் எனப்படும் சிவனாருக்கு இந்தியா முழுவதிலும் கோவில்கள் உள்ளன. இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

         இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவ வழிபாட்டில், இந்த ஐந்து பூதங்களையும் முன்னிறுத்தி, தனித்தனியாக ஐந்து இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான வழிபாடு நடக்கிறது. இந்த ஐந்து சிவதலங்களையும் பஞ்சபூதங்கள் என்று அழைக்கிறார்கள். பஞ்ச என்றால் ஐந்து (5) என்று பொருள்படும்.

          பூதம் என்றால் பொருள் அல்லது சக்தி என்பதாகும். பஞ்ச பூதங்கள் என்றால், ஐந்து மூலசக்திகள் அல்லது ஐந்து அடிப்படை மூலாதாரங்களை குறிப்பதாகும். இவற்றில் ஒன்று குறைந்தாலும் உயிரினங்கள் வாழ முடியாது. ஆகவே அவற்றை இறைவனுக்கு இணையாக மதித்தனர் நம் முன்னோர்கள்.
ஆகவே முத்தொழில் முதல்வனான சிவனுடைய தலத்தில் அந்த ஐம்பூதங்களையும் வணங்கி வழிபட்டனர். இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முகவிளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது. பஞ்ச பூதங்களை பற்றித் தெளிவாகவும் நுட்பமாகவும் உணர்ந்த நமது பெரியோர்கள் ஒவ்வொரு பூதத்தின் பெயராலும் ஒரு தலத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

அவை பஞ்சபூதத் தலங்கள் எனப்படும். அவை வருமாறு:-
          
           1. நிலம்- காஞ்சீபுரம், திருவாரூர்.
           2. நீர்- திருவானைக் காவல்
           3. நெருப்பு- திருவண்ணாமலை
   4.வாயு- திருக்காளகஸ்தி (ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது).
      5. ஆகாயம்- சிதம்பரம் இந்த பஞ்சபூத தலங்களில் நெருப்புத் தலமான திருவண்ணாமலை மற்ற தலங்களை விட பல சிறப்புகளையும், தனித்துவங்களையும் கொண்டது.

kd-two
      சம்பந்தர், அப்பர், மாணிக்கவாசகர் ஆகியோரது பாடல் பெற்ற தலமாகும். நினைத்தாலே முக்தி தரும் தலம். சிவமும் சக்தியும் ஒன்றே என்பதை உணர்த்துவதற்காக அர்த்தநாரீஸ்வரராக வடிவம் எடுத்ததும், சிவராத்திரி விழா உருவானதுமான பெருமையை உடைய தலம் திருவண்ணாமலை. சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார்.

            இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. மலையில் தீபம் ஏற்றப்பட்டதும் மக்கள், ``அண்ணாமலையானுக்கு அரோகரா'' என விண்அதிர முழக்கமிடுவார்கள். ``இந்த உடம்பு நான் என்னும் எண்ணத்தை அழித்து, மனதை ஆன்மாவில் அழித்து, உன்முகத்தால் அத்வைத ஜோதியைக் காண்பது தான் தரிசனம் ஆகும்'' என ரமண மகரிஷிகள் குறிப்பிடுகிறார்.
தீப தரிசனம் பிறவிப் பிணியை அறுக்க வல்லது என்பது ஐதீகம். கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்த திருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது. கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும் கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.

   இத்தீபத்திருநாள், திருவண்ணாமலையில் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுவதால், இதை திருவண்ணாமலைத் தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக் காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில், தீபத்தினத்தன்று திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

  இத்திருநாள், முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும் கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் காலை முதல் விரதமிருந்து, மாலை பூஜை முடிந்தபின்னர், அகல் விளக்கேற்றி வரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். இது தான் தீபா திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும்.


கார்த்திகை தீப அறிவியல் பின்னணி
        
        கார்த்திகை தீபம், தமிழகத்தில் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் ஒன்று. கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த நாளில் இந்த விழா கொண்டாடப் படுகிறது.


jothi
         தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.
    
         நமது சங்க இலக்கியங்களில் இதை பற்றிய குரிப்புகள் காணபடுகின்றன. தமிழகத்தில் பழைமையான விழாக்களில் இதுவும் ஒன்று என்பதில் எந்த ஓர் ஐயமும் இல்லை. இந்த விழாவை பற்றி நம் மதங்களில் சொல்லபடுகின்ற கருத்துக்கள் நீங்கள் அறிந்தவையே.
       
         ஆனால், இந்த விழாவின் பின்னணியில் ஓர் அறிவியல் உண்மை ஒளிந்து இருப்பது நம்மில் பலர் அறியாத ஒன்று. இன்று நம் நாட்டில் பரவி வரும் டெங்கு போன்ற நோய்களில் இருந்து நம்மை காப்பதற்கு நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த ஒரு அருமருந்து.
            
          தமிழகத்தில் மழை காலம் முடிந்த நிலையில் கொசு மற்றும் இன்ன பிற நுண்ணுயிர்கள்  பெரிதும் பரவும் இந்த கார்த்திகை மாதத்தில நம்மை காத்து கொள்வதற்கு இந்த தீப திருநாள் வழி வகை செய்கிறது. கார்த்திகை தீபத்தில் பயன் படுத்த படும் நல்லெண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் பருத்தித் திரியில் எரியும் போது அதில் இருந்து வரும் நெடியானது கொசு மற்றும் பிற நுண்ணுயிர்களின் வளர்ச்சியை முற்றிலும் அழிக்கிறது.
           
           நம் குடும்பத்தை பற்றி பெரிதும் அக்கறை படும் நாம், பிற வேலைகளை காரணம் காட்டியும், leave கிடைக்கவில்லை என்று சாக்கு சொல்லியும் இந்த விழாவை தவிர்க்கலாமா ?
 
     இந்த உண்மை அறியாமல், "பழைய வழக்கம் நமக்கு எதற்கு, சாஸ்திரத்துக்கு ரெண்டு விளக்கு ஏற்றுவோம்" என்று இல்லாமல் இல்லம் நிறைய விளக்கு ஏற்றி நம்மை காத்து கொள்வோம்.

புதன், 2 செப்டம்பர், 2015

ஏழரைச் சனி

இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும் என்பதை பார்க்கலாம்...


மற்ற கிரகங்களையும்விட சனி கிரகம் பலமான- சக்தி பெற்ற கிரகம் மட்டுமல்லஒரு ராசியில் அதிக காலம்- இரண்டரை வருடம் தங்கிப் பலன் செய்யும் கிரகம். அதனால் அவருக்கு மந்தன் என்றும் முடவன் என்றும் பல பெயர்கள் உண்டு. ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசி களையும் ஒருமுறை சுற்றி வருவதற்கு 30வருடங்கள் ஆகும். அந்த முப்பது ஆண்டுகளில் பொதுவாக மனித வாழ்க்கையிலும் நாட்டிலும் தொழில்துறை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுவது இயல்பு. அதனால்தான் முப்பது வருடத்துக்குமேல் சேர்ந்தாற்போல் யோகத்திலே திளைத்தவர்களும் இல்லைகஷ்டத்திலேயே இளைத்தவர்களும் இல்லை என்பார்கள்.

அவரவர் ராசிக்கு (சந்திரன் நிற்கும் இடம் ராசி எனப்படும். அதற்கு) 12-ஆம் இடத்தில் சனி வரும்போது ஏழரைச் சனி ஆரம்பம். அது முதல் கட்டச் சனி. அங்கு இரண்டரை வருடம் இருக்கும் சனி விரயச் சனிஎனப்படும். அடுத்து ஜென்ம ராசிக்கு மாறும் சனி (2-ஆம் கட்டம்) ஜென்ம ராசியில் இரண்டரை வருடம் இருக்கும். அது ஜென்மச் சனிஎனப்படும்.

 அதைவிட்டு விலகி ஜென்ம ராசிக்கு 2-ஆமிடத்தில்  சனி வரும்போது (மூன்றாம் கட்டச் சனி) இரண்டரை வருடம் பாதச் சனிகுடும்பச் சனி,வாக்குச் சனி எனப்படும். இப்படி மூன்று கட்ட மாக வரும் சனியின் மொத்த காலம்தான் ஏழரைச் சனியின் காலம் எனப்படும். ஜாதகரீதியாக ஒருவருக்கு வரக்கூடிய சனி தசை என்பது வேறு;கோட்சாரரீதியாக வரும் ஏழரைச் சனி என்பது வேறு.

சிறு வயதில் வரும் முதல் சுற்றை (7.5 ஆண்டு)  மங்கு சனி என்றும்,வாலிப மற்றும் மத்திம வயதின்போது வரும் இரண்டாம் சுற்றை (7.5ஆண்டு)  பொங்கு சனி என்றும்கொஞ்சம் வயதான காலத்தில் வரும் மூன்றாம் சுற்றை (7.5 ஆண்டு) அந்திம சனி என்றும் அழைப்பர்.

பிறந்ததிலிருந்து முப்பது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கத்தை மிகத் தெளிவாகக் காணலாம். சனியின் முழுத் திறனும் தெரியும். முதல் சுற்று முடக்கி முயற்சியை தூண்டும். படிப்பில் கவனம் செலுத்தவில்லைகாதல்கவன சிதறல்உறவினர்கள் மரணம்வேலையில்லா திண்டாட்டம்’ என்பதுபோல பலவிதத்தில் பாதிப்புகள் இருக்கும். குழந்தைப் பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்குள் கருத்து மோதல்பிரிவுசந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும். 
பன்னிரெண்டு வயதிற்கு மேல் சனிப்பிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும். சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது. Drop out from Schoolகேசாகிவிடும். பத்துப்ளஸ் டூ வகுப்பில் பெயிலாகும் குழந்தைகளில் பெரும்பாலோனருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும்.. சிலருக்கு படிப்புமற்றும் வித்தைக்குரிய கிரகமான புதன் ஜாதகத்தில் பலவீனமாக இருந்து அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம். அவை விதிவிலக்கு.

கணவன் - மனைவிக்குள் நேரடியாக எந்தப் பிரச்னையும் இருக்காது. மூன்றாவது நபர் தலையீட்டால்தான் பிரச்னை உருவாகும். குடும்பத்திற்கு வழக்கமில்லாத உணவு வகைகளை குழந்தைகள் எடுத்துக் கொள்வார்கள். மந்தம்மறதிதூக்கம் என்று இருப்பார்கள். ஏழரை சனியில் பெறும் அனுபவங்களும்அவமானங்களும்,காயங்களும்வடுக்களும் வாழ்க்கை முழுதும் மறக்காதபடி இருக்கும்.‘‘ரெண்டு மார்க் அதிகமா எடுத்திருந்தா தலையெழுத்தே மாறியிருக்கும். இன்னும் கொஞ்சம் பொறுப்பா படிச்சுருக்கலாமே’’ என்று ரிசல்ட் வந்தபிறகு புலம்ப வைப்பார். இப்படி வருத்தப்பட வைத்தே வாழ்க்கையை வளர்ப்பார்சனி தர்மதேவன். அதர்மத்தில் திருப்பி விட்டு சோதிப்பார். வலையில் மாட்டாது வெளியேற வேண்டும். 
2வது சுற்று சனியை பொங்கு சனி என்று சொல்வார்கள். அவருடைய வேலையே இதுதான். அடிப்படைத் தேவைகளை‌ப் பூர்த்தி செய்வதுதான் இவர் வேலை. திருமணம்குழந்தை பாக்கியம்வீடு,மனைவாகன வசதிகள் என எல்லாவற்றையும் 2வது சனியாக பொங்கு சனி கொடுப்பார். அதனால் தைரியமாக வாங்கலாம். 
முப்பது வயதுக்கு மேல் யாருக்கு ஏழரைச் சனி நடந்தாலும் அதற்கு பொங்கு சனி என்று பெயர். பறித்தல்பாதுகாத்தல்பலமடங்காக பெருக்கித் தருதல். இதுதான் இரண்டாவது சுற்றின் கான்செப்ட். உள்ளுக்குள் கிடந்த திறமைகளை பூவானம் போல பொங்க வைக்கும். செல்வத்தை அள்ளிக் கொடுக்கும். ஆனால்கொஞ்சம் கெடுக்கும். அதனால்கொடுத்துக் கெடுப்பவர்கெடுத்து கொடுக்கிறவர் என்ற பெயர் சனிக்கு உண்டு. இந்த இரண்டாவது சுற்றின்போது சிலர்,மிதமிஞ்சிய செல்வ வளத்தால் பிரச்னைகளை உருவாக்குவார்கள்.‘‘நான் யார் தெரியுமா?’’ என்று செல்வாக்கை நிரூபிக்கத் துணிவார்கள். தான்தான் பெரிய ஆள் என்று தன்னடக்கமற்ற மனோநிலையில் திரிவார்கள். அப்படி மாறிய அடுத்த நிமிடமேஆட்டம் காண வைக்கும் முயற்சியில் இறங்குவார் சனி. பழைய நிலைக்கே கொண்டு செல்லத் திட்டமிடுவார். ஆகவேகவனமாக இருங்கள். பேச்சிலோசெயலிலோ கர்வக் கொம்பு முளைத்தால் கொடுத்ததைப் பிடுங்க தயங்க மாட்டார். சனி பகவான் வந்தால்தான் நம் அறிவுக்கும்சக்திக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் இருக்கின்றன என்பதை உணர்வோம். ‘‘நம்ம கையில எதுவும் இல்லை’’ என்கிற சரணாகதி தத்துவமும் புரியும். ஏழரைச் சனியின்போது முடிந்தவரை கோர்ட்கேஸ் என்று போகக் கூடாது. பத்து லட்ச ரூபாய் பொருளுக்காக காக்கிக்கும்கறுப்புக்கும் இருபது லட்ச ரூபாய் செலவு செய்வீர்கள்.  வசதி வரும்போது எதையும் தலையில் ஏற்றிக் கொள்ளாமல் இருங்கள். கூழ் கிடைத்தாலும் குடியுங்கள். இந்த இரண்டாவது சுற்றில்தான் வியாபாரம் விருத்தியாகும். அதனால் தைரியமாக தொழில் தொடங்கலாம்.‘‘ரெண்டாவது ரவுண்டுல ரெட்டிப்பு வருமானம்’’ என்றொரு வாக்கியம் உள்ளது. ஆனால் பாதை மாறினால்அதலபாதாளம்தான்.  இன்னொரு விஷயம்... நம்பிக்கை துரோகம் செய்தவர்களை பார்த்து துடிக்காதீர்கள். டென்ஷன் ஆகாதீர்கள். ஆரோக்கியம் பாதிக்கும். ஏழரை சனியில் யார் உங்கள் காசை சாப்பிட்டாலும்அது ஏற்கனவே நீங்கள்பட்ட கடன் என்று நினைத்துக் கொள்ளுங்கள். அது பூர்வஜென்மத் தொடர்பு என்பதாகவே எடுத்துக் கொள்ளுங்கள்.

 சனி பகவானுக்கு சூரிய சந்திரர்கள் என்றாலே ஆகாது. ஏழரைச் சனி நடப்பில் இருக்கும் போது சூரிய திசையோசந்திர திசையோ நடக்குமானால் சனியின் கடுமை இன்னும் அதிகமாக இருக்கும். கவனமுடன் இருக்க வேண்டும்.
ராகு தசை நடக்கும் போதும் ஏழரைச் சனி நடைபெற்றால் சற்று மோசமான பலன்களே நடைபெறுகின்றன. துலாம் சனிக்கு உச்ச ராசியாகும். அதனால் பாதிப்பு அதிகம் தரமாட்டார் என்றாலும் ஜென்மத்தில் பகை வீட்டிலோ... கோளாறான இடத்திலோ இருந்தால் தன்னை மறந்து ஒரு பிடிபிடித்து விடுவார். ஒருவருடைய  ஜாதகத்தில் சனி உச்சம் பெற்றுறிருந்தால்  71/2 சனி
பாதிப்பு குறையும். ஒருவரது  ஜாதகத்தில் சனி மகரம் அல்லது கும்பத்தில் ஆட்சி பெற்றாலும், 71/2 சனி கெடுதல் செய்யாது . ஜனன காலத்தில் ஜன்ம லக்னத்திற்கு  3,6,10,11-ல் சனி அமர்ந்தாலும்  71/2 சனி கெடுதல்  குறையும். மகரம் அல்லது கும்ப  லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு சனியும் லக்னத்தில் இருந்தால் 71/2 சனியும் கெடுதல் குறையும் தவிர அவருக்கு சுகமான வாழ்வு கிட்டும் . சனி உச்சம் பெற்று துலா  ராசியில் இருந்தால் அது    கேந்திரம்  அல்லது திரிகோணம்  என்று இருந்தால் அவருக்கு கெடுதல் குறையும்

அவருடைய தொல்லைகளில் இருந்து தப்பிக்க

அந்த மூன்று ராசிகளிலும் அஷ்டவர்க்கப் பரல்கள் 30ற்குமேல் இருந்தால்,
அவருடைய தொல்லைகள் தடுக்கப்பெற்றுவிடும். அந்த மூன்று ராசிகள் என்றில்லை. அவற்றில் ஒன்றில் 30 பரல்கள் இருந்தால் கூட அந்தப் பகுதிக்கு உரிய இரண்டரை வருடங்கள் ஜாதகன் நிம்மதியாக இருக்கலாம்.

 திருநள்ளாறு தலத்திலும்திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள திருக்கொள்ளிக்காடு தலத்திலும் பேரருள் புரிகிறார். இந்த தலங்களுக்கு சென்று வாருங்கள். பிரச்னைகளெல்லாம் எப்படித் தீர்கிறது என்று பாருங்கள்.


சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி தொல்லைகளில் இருந்து விடுவிக்கும்படி மனமுருக வேண்டி வழிபடலாம்.  

 சனி பகவானை திருப்தி படுத்த மாற்றுத் திறனாளிகள், (குறிப்பாக பார்வை இழந்தவர்கள்நடக்க இயலாதவர்கள்) வயதானவர்,ஆதரவற்றவர்களுக்கு உதவலாம்.


சனி வரலாறு


நவகிரகங்களில் முதன்மையான ஆதிகிரகம் சூரியன். துவஷ்டாவின் மகள் சஞ்ஞிகை என்பவள் (உஷா என்றும் ஒரு பெயர்) சூரியனை விரும்பித் திருமணம் செய்துகொண்டாள். வைவஸ்வதமநுயமன் (மகன்கள்)யமுனை (மகள்) என்ற மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். இருந்தும் சூரியனுடைய வெப்பத்தைத் தாங்க முடியாமல் தவித்தாள். அதனால் சூரியனுக்குத் தெரியாமல் தன்னுடைய நிழலையே தன் மாதிரி பெண்ணாக்கி சூரியனுடன் குடும்பம் நடத்தும்படி கூறி விட்டுத் தன் தகப்பனார் வீட்டுக்குப் போய்விட்டாள். அப்படி உருவாக்கப்பட்டவளே சாயாதேவி. பிரத்யுஷா என்றும் இன்னொரு பெயர். சஞ்ஞிகையின் வேண்டுகோளின்படிதான் வேறு ஒருத்தி என்ற ரகசியத்தை வெளியிடாமல் சூரியனுடன் அவன் முதல் மனைவி போலவே வாழ்ந்தாள் சாயாதேவி அவளும் மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். சாவர்ணீமனு என்ற ஆண் மகனும்அடுத்து சனி பகவா னும் பிறகு பத்திரை என்ற பெண் மகளும் பிறந்தனர். சாயாதேவிக்கு குழந்தைகள் பிறந்ததும் சஞ்ஞிகையின் குழந்தைகளை சக்களத்திப் பிள்ளைகளாகக் கருதி கொடுமைப்படுத்த ஆரம்பித்தாள். இதை அறிந்த சூரியனின் மூத்த தாரத்து இளைய குமாரன் யமன் (தர்ம ராஜன்) சாயாதேவியை மிரட்டி அடிக்கப் போனான். சனி தன் தாய்க்குப் பரிந்து கொண்டு சஞ்ஞிகையை "ஓடிப்போனவள்என்று உதாசீனமாகப் பேசவேயமன் கோபங்கொண்டு தன்னுடைய தண்டத்தால் சனியின் முழங்காலில் அடித்தான். அதனால் சனி பகவானின் வலதுகால் ஊனமானது 

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.