சகோதர எண்ணிக்கை கணித்தல்.
------------------------------------------------------
1) ஜாதக கிரக நிலை மூலம் அறியும் முறை.
2) துருவக்கணிதம் மூலம் அறியும் முறை.
இக் கட்டுரையில் இரு முறையும் உள்ளது
1) ஜாதக கிரக நிலை பற்றி அறியும் முறை
---------------------------------------------------------------
உதாரணம் ஒன்றுடன் பார்ப்போம்.
கன்னி லக்னம் தனுசு ராசி 3ம் வீட்டு அதிபதியாக வரும் செவ்வாய் ரிஷபத்தில் உள்ளார்.
அம்சத்தில் மீன லக்கினம் கடக ராசி மேஷத்தில் செவ்வாய்.
இங்கு 3ம் வீட்டதிபர் செவ்வாய் அவரே சகோதரகாரகன் ஆவர்.
3ம் வீட்டு அதிபர் நவாம்சத்தில் எவ்வளவு தூரம் சென்றுள்ளார் என்று பாருங்கள்.
ராசியில் செவ்வாய் ரிஷபத்திலும் அம்சத்தில் செவ்வாய் மேஷத்திலும் உள்ளார்.
ரிஷபத்தில்,
கார்த்திகை 2,3,4
ரோகினி 1,2,3,4
மிருகசீரிஷம் 1,2
குசன் ரோகினி 1ம் பாதத்தில் இருப்பதால் நவாம்சத்தில் மேஷத்தில் உள்ளார்.
அதாவது கார்த்திகை 3 பாதங்கள், ரோகினி1ம் பாதத்தையும் சேர்த்து மொத்தம் 4 பாதங்கள் சென்றுவிட்டன.
ஆகவே 3ம் அதிபதி 4வது அம்சத்தில் உள்ளார் என எடுக்கப்படும்.
3ம் வீட்டு அதிபதி 4 அம்சம் சென்று இருப்பதால் ஜாதகரையும் சேர்த்து மொத்தம் 4 சகோதரர்கள் உள்ளனர் என கணிக்கப்படும்.
இது அனைவரிற்கும் பொருந்துவதில்லை. தற்கால கருத்தடை போன்ற செயற்பாடுகளும் ஒரு காரணம்.
3ல் மாந்தி நின்று 3ம் அதிபதி பலம் பெறாவிடின் இளைய சகோதர பொருத்தம் இல்லை.
11ல் குரு இருக்க மூத்த சகோதரம் இல்லை.
3ம் வீடிற்கு/ 3ம் அதிபதிக்கு குசன் கேந்திரகோணத்தில் இருப்பின் சகோதர பொருத்தம் உள்ளது என எடுக்கப்படும்.
3ம் மற்றும் 11ம் அதிபதிகள் மறைவது நல்ததல்ல.
3ல் செவ்வாய் காரகோபாவநாஸ்தி.
3ம் மற்றும் 11ம் வீட்டு அதிபதிகள் 5 அல்லது அதற்கு கூடிய பரல் பெற வேண்டும்.
3ம் அல்லது 11 வீடுகள் 30 பரல்களிட்கு மேல் பெற வேண்டும்.
12 வீடு அதிபதி 3இல் பலமுடன் இருக்க சகோதர பிரிவு அல்லது மரணம் உண்டு.
3ம் வீடு மற்றும் 3ம் வீடதிபதிகள் 3ம் வீடில் வந்து அமரும் கிரகம் ஆண் மற்றும்ஆண் கிரகத்தின் நடப்பு தசாபுத்தி எனின் ஆண் சகோதரமும் 3ம் வீடு மற்றும் 3ம் வீடதிபதிகள் 3ம் வீடில் வந்து அமரும் கிரகம் பெண் மற்றும் பெண் கிரகத்தின் நடப்பு தசாபுத்தி எனின் பெண் சகோதரமும் அமையும்.
2) துருவக்கணிதம் மூலம் அறியும் முறை.
------------------------------------------------------------------
துருவக்கணிதத்தில் உடன்பிறந்தவர்களின் எண்ணிக்கைக்கும் கிரக அமைப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
ஜோதிடர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும் துருவகணிதம் சில ரகசிய குறியீடுகள் தான் அடிப்படை.
இந்த துருவக்கணிதம் குடும்ப ஜோதிடரால் எழுதப்படும் குறியீடு. கம்ப்யூட்டரில் போடப்பட்ட ஜாதகத்தில் ஒரு ஓரமாக (ராசிக்கட்டம் அருகில்) குறிக்கப்பட்டிருக்கும்.
இனி விடையத்திற்கு வருவோம்
வகை - அ) ல323 - விளக்கம்
"ல" என்றால் லக்கினம் (ஜாதகர்)
"3" (முதலில் உள்ளது) சகோதிரம்(மூன்றாமிடம் சகோதிர ஸ்தானம்)
"2" ஆண் சகோதிரம் 2
"3" (கடைசியாக உள்ளது) பெண் சகோதிரம் 3
வகை - ஆ) ல,திருதி,துதி,திருதி/ல,சதுர் விளக்கம்
"ல" என்றால் லக்கினம் (ஜாதகர்)
"திருதி" (முதலில் உள்ளது) சகோதிரம் (3 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் திருதியை என்று பெயர், இதனுடைய சுருக்கம் திருதி) திருதியை = 3 (மிடம்)-சகோதிர ஸ்தானம்.
"துதி" ஆண் சகோதிரம் 2 (2 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் துதியை என்று பெயர், இதனுடைய சுருக்கம் துதி)
"திருதி" (கடைசியாக உள்ளது) பெண் சகோதிரம் 3 (3 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் திருதியை என்று பெயர், இதனுடைய சுருக்கம் திருதி)
"ல,சதுர்" "ல"என்றால் ஜாதகர், சதுர் என்றால் 4 வது பிறப்பு.(4 என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் சதுர்த்தி என்று பெயர் இதனுடைய சுருக்கம் "சதுர்"
மேலதிக விவரங்களிட்கும் ஜோதிட சந்தேகங்களிட்கும், உங்களின் ஜாதகத்தில் உள்ள கேள்விகளிட்கும் FACEBOOK இலுள்ள ஜோதிட கேள்வி பதில் குழுவில் இணையுங்கள்.
https://www.facebook.com/groups/vedicastroservice
Hariram Thejus
e@mail - hariram1by9@gmail.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக