ஆண் ,பெண் ஜாதகம் எதுவாக இருந்தாலும் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து திருமணத்தை முடிவு செய்யாமல் இருவருக்கும் செவ்வாய் தோசம் இருக்கா,நாக தோசம் இருக்கா? இருவரது லக்னமும் ஒன்றுக்கொன்று மறையாமல் இருக்கா என பார்த்து முடிவு செய்வது அவசியம்.
அதன் பிறகு இருவர் ஜாதகத்திலும் சுக்கிரன்,செவ்வாய்,சந்திரன் எப்படி இருக்கு..மறைந்தோ,வக்ரம் பெற்றோ,நீசம் அடைந்தோ இருக்கா,7ஆம் அதிபதி,குடும்பாதிபதி எப்படி இருக்கார் என்பதையும் கவனிக்கனும் இதுதான் முக்கியம்...
சனி சந்திரன் சேர்க்கை,சனி செவ்வாய் சேர்க்கை,செவ்வாய் கேது சேர்க்கை,சுக்கிரன் சூரியன் சேர்க்கை,செவ்வாய் சூரியன் சேர்க்கை,7ல் சூரியன் இருப்பது,7ல் சனி இருப்பது,8ஆம் இடத்தில் சனியோ,சூரியனோ,இருப்பது எல்லாம் பெண்ணுக்கும்,ஆணுக்கும் திருமண வாழ்வில் பாதிப்பை உண்டாக்கும்...
ஏழாம் இடத்தில் தனித்த குரு இருந்தால்,தனித்த சுக்கிரன் இருந்தால் சுபர் பார்வை இல்லாமல் இருந்தால் திருமண வாழ்வை கசப்பாக்கி விடுகிறார்..
ஏழாம் பாவத்தில் சூரியன் இருந்து சுபர் பார்வை இல்லாது இருந்தால் துணை வேறு ஒருவருடன் சென்று விடுகிறார்..காரணம் தாம்பத்யம் கசந்துவிடும் அல்லது வெறுத்து விடும்...
7 ஆம் இடத்தில் பகை கிரகங்கள் இருந்தாலோ ,7ஆம் அதிபதி பகை கிரகங்களுடன் கூடி இருந்தாலோ சனி மட்டும் இருந்தாலோ திருமணத்தை தாமதம் ஆக்கி விரக்தி அடைய செய்கிறார்...
7 ஆம் பாவத்திற்கு சனியுடன் ராகு சம்பந்தம் உண்டானால் துணைக்கு கள்ள தொடர்பு உண்டாகிறது...
சுக்கிரன் சந்திரன் சேர்ந்தாலோ,சுக்கிரன்,ராகு சேர்ந்தாலோ மனைவி அல்லது கணவனுக்கு அதிக காம உணர்வுகள் மேலோங்கி எவ்வளவு தாம்பத்யம் சுகம் வைத்துக்கொண்டாலும் போதாமல் வெளியே சுகம் தேட வைத்துவிடலாம்..சுபர் பார்வை இருந்தால் மட்டுபடும்..
செவ்வாயுடன் ராகு அல்லது கேது இணைந்தால் ,அவர்கள் 7ஆம் பாவத்துடன் தொடர்பு கொண்டால் துணையை இழந்து வாழ்க்கையை கசப்பாக்கிவிடும்...
சனியும் செவ்வாயும் சேர்ந்து 7 அல்லது 8ல் இருந்தால் கள்ள தொடர்பு,காதல் பிரச்சினையில் சிக்கி அவதிபட நேரும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக