ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

சனி, 18 ஜூன், 2016

வாக்கியமா? திருக்கணிதமா?

ௐ நமசிவாய

அனைவருக்கும் வணக்கம். கன்னில் செவ்வாய் நட்பா பகையா என்று ஒருவர் கேட்டார். அதற்கு “வாக்கியப்படி நட்பு, திருக்கணித படி பகை.” என்று கூறியிருந்தேன்... வாக்கிய பஞ்சாங்கம் சரியா திருக்கணித பஞ்சாங்கம் சரியா? இதற்கு யாராலும் முடிவுகாண முடியவில்லை...

ஜோதிட சாஸ்திரத்தை எமக்கு அருளிய மாமுனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள் வாக்கிய பஞ்சாங்க படி கணித்தனர். வராகிமிகிரர் வாக்கிய பஞ்சாங்கபடி கணித்து மணி-நிமிட ரீதியாக துல்லியமாக பலன் கூறினார். இன்றும் அனுபவம் மிக்க வயதான ஜோதிடர்களும் , கிராமபுறங்களில் உள்ள ஜோதிடர்களும் வாக்கிய பஞ்சாங்க கணிதப்படி கணித்த ஜாதகத்தினையே பார்க்கின்றனர். அவர்களது வம்சாவழி முன்னோர்களும் அதனையே பின்பற்றி வந்தனர். அது ஒரு புறம் இருக்கட்டும்...

வானவியல் (Astronomy) என்ற சொல் வேறு ஜோதிடம் (Astrology) என்ற சொல் வேறு...

வானவியலானது வானவெளியில் குறித்த நேரத்தில் கிரகங்கள் எந்ந நிலைகளில் உள்ளன என்பதை ‪#‎மட்டும்‬ காட்டும். அதனால் தான் திருகணித பஞ்சாங்கத்தினால் துல்லியமாக சூரிய கிரகண நேரத்தினை கூறமுடிகிறது...
ஆனால் ஜோதிடம் என்பது நவ கிரகங்களின் கதிர்வீச்சினால் பூமியில் ஜனித்த குழந்தையின் தாக்கத்தினை அக்குழந்தையின் இறப்புவரையான காலகட்டம் வரை கூறுவதாகும். இங்கு குழந்தை
சூரியனில் இருந்து புறப்படும் ஒளி சுமார் 8 நிமிடத்தின் பின்னரே பூமியை வந்தடைகிறது என்று படித்த ஞாபகம்.

அப்படி இருக்கும் பட்சத்தில் ஜாதகர் பிறந்தவுடன் அவனை அடையும் கதிர்கள் நிச்சயமாக 10 நிமிடத்திற்கு முன்னர் வானவெளியில் இருந்து வந்த கதிர்களேயாகும். இதனால் ஜாதகன் பிறந்த நேரத்தை ஏறத்தாள சுமார் 15 நிமிடங்கள் முன்னதாக போட்டு திருக்கணித முறையில் ஜாதககட்டம் போட ஜாதகனின் கர்ப்பசெல் இருப்பு நீக்கி ஜனனகால இருப்புதிசை சில மாதங்கள் வரை அதிகரிக்கும். அந்நேரத்தில் சந்திரன் நின்ற நட்சத்திர நாதனின் தசா ஆண்டு எண்ணிக்கைபடி ஒவ்வொரு தசாவும் ஜாதகனிற்கு வழமையாக தொடங்கவிருக்கும் தசாகாலத்திற்கும் சிலமாதங்கள் பின்னதாகவே ஆரம்பிக்கும். இது வாக்கிய பஞ்சாங்கம் மூலம் கணித்த ஜாதகத்திற்கு (சற்று) அருகில் செல்லும். அது அந்த ஜாதகரில் விளைவை ஏற்படுத்த சிலகாலம் எடுக்கும். வேறும்பல சூட்சும கணிதங்களிற்கு பிறகு இதன் நிலையானது மேலும் வாக்கிய ஜாதக அமைப்பிற்கு அருகில் கொண்டு செல்ல முடியும். இங்கு வாக்கிய பஞ்சாங்கம் ஜாதகமே வெல்கிறது. அத்துடன் இரண்டாவது கோட்பாடாக கிரக கதிர்வீச்சுக்கள் தமது பலனை எம்மில் தர நிச்சயமாக சிறிது காலம் எடுத்துக்கொள்ளும்.
எனது சிற்றறிவிற்கு தெரிந்தவரை இந்த இரு கோட்பாடுகளையும் உங்கள் முன் வைத்துள்ளேன். இது தவிர ஏராளமான பல கோட்பாடுகள் இருக்கும்.

ஜோதிடத்தினை பரம்பொருள் பரமசிவன் கிருமையால் ஞானமாக பெற்ற மாமுனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள் நான் மேலே குறிப்பிட்ட இரு கோட்பாடுகளாலும் மேலும் நாம் அறியாத பல கோட்பாடுகளாலும்தான் வாக்கிய பஞ்சாங்கம் அமைப்பினை நமக்கு தந்தனரோ என்பது ஆதிசிவனிற்கு வெளிச்சம்.

இறுதியாக, குறிப்பிட்ட நேரத்தில் வானவெளியில் இருக்கும் கிரகநிலைகளை மட்டுமே திருக்கணித பஞ்சாங்கம் காண்பிக்கும். இது வானவியல் (Astronomy) துறைக்கே அதிக பொருத்தமானது. கிரகங்களில் கதிர்கள் எம்மை வந்தடையும் நேரத்தையும் அது எம்மில் விளைவை ஏற்படுத்த எடுக்கும் நேரத்தினையும் துல்லியமாக அறிந்தே நேரடியாக ஜோதிட பலன் கூற வாக்கிய பஞ்சாங்கம் எமது மாமுனிவர்கள், சித்தர்கள், ரிஷிகளால் தருவிக்கப்பட்டது; ஜோதிட பலன் தசாபுக்தி அந்தர சூட்சும முறையில் துல்லியமாக கூற வாக்கிய பஞ்சாங்கம் உகந்தது என்ற என்னுடைய கருத்தை உங்கள் முன் வைத்துள்ளேன்... இது எந்த பஞ்சாங்க முறைக்கும் எதிரான பதிவல்ல... எனது இந்த கட்டுரையினை படிக்கும் அன்பர்கள் இருமுறைப்படியுமான ஜாதகங்களை ஒப்பிட்டு எது துல்லியமாக உங்களுடன் / உங்களிற்கு நடந்த நடக்கின்ற பலனுடன் மிகச்சரியாக பொருந்துகிறது என்பதை ஆய்வுசெய்து உங்களுடன் ஒத்துப்போகும் பஞ்சாங்க முறையினை கையாளுங்கள்.

நன்றி,
ஜோதிடர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஹரிராம் தேஜஸ்.

GHT

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

2 கருத்துகள்:

V.R.Ravichandran சொன்னது…

அருமையான கருத்துக்கள் திருக்கணிதம் விஞ்ஞானம் வாக்கியம் மெய்ஞானம் தசாபுக்தி மற்றும் பலன்கள் வாக்கியப்படியே என்வாழ்வில் நடைபெறுகிறது வாக்கியமே பலன்களை சரியாக கூறுகிறது என்பது 100சதம் உண்ம

Unknown சொன்னது…

சித்தர்கள் அருளினால் தாங்களும் வாக்கிய பஞ்சாங்க சோதிட மென்பொருள் தயார் செய்து வெளியிடலாமே.
சித்தர்கள் ஆசிபெற்ற உங்களை போன்றோரால் மட்டுமே இச்செயல் நிறைவேறும்

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.