ஓம் நமசிவாய
ஜோதிடத்தில் ஒரு வீட்டதிபதி (பாவாதிபதி) இன்னும் ஒரு வீட்டில் நின்றால் எப்படி பலன் கூறுவது என்ற அடிப்படை சந்தேகத்தினை தீர்க்கும் முகமாக இந்த பதிவு அமைகிறது... இது ஒரளவேனும் ஜோதிடம் அறிந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஜோதிடர்கள், இளநிலை ஜோதிடர்கள், ஜோதிட மாணவர்கள், ஜோதிட ஆர்வலர்களிற்கு உகந்த பதிவு
3ம் பாவாதிபதி 10 இல் நின்றால் என்ன பலன் என்பதை ஒரு உதாரணம் மூலாமாக பார்க்கலாம். (10 வீடு தொழில் ஸ்தானம் ஆகும்.)
3ம் பாவ, 8ம் பாவ, 10ம் பாவ காரகத்துவங்களை முதலில் அறிந்து கொள்க...
அடுத்து இதன்படி பலனை அறிக...,
1. 3ம் பாவ காரகத்துவங்கள் 10ம் பாவத்தின்மீது படிவிக்கப்படும்.
2. 3ம் பாவ உயிர் காரகத்துவங்கள் பெரும்கேந்திரத்தில் இருப்பதால் அவை பெரிதளவு பாதிக்கப்படமாட்டாது.
3. 3ம் பாவ பொருள் காரகத்துவங்கள் 8 இல் மறைவதால் அவை பாதிக்கப்படும்.
4. உச்சம் பெறின் 3ம் பாவ காரகத்துவங்கள் 10ம் பாவத்தினூடாக நன்மை/அனுகூலத்தினை வழங்கும்.
5. நீசம், பகை பெற்றால் துன்பம்.
6. 3ம் பாவாதிபதி தன் சொந்த வீட்டிற்கு மறைவதால் 3ம் பாவகம் வலுவிழக்கும்; அதே நேரம் அந்த கிரக காரகத்துவம் நன்றாக அதாவது பலமாக இருக்கும்.
7. 10 இற்கு 6ம் பாவாதிபதி வந்து 10 இல் அமர்வதனால் 10ம் பாவ காரகத்துவங்களிற்கும் சிறப்பில்லை - அத்துடன் அடிமைத்தொழில் அமைப்பு கிடைக்கும்."
இந்த 7 விதிகளையும் விபரிக்கும் அளவிற்கு எனக்கு நேரம் இல்லை ஆகவே இலக்கம் 1 இல் நான் கூறிய விதியினை சற்று விரித்து ஆராந்து பார்ப்போம்.
""விதி இல 1. 3ம் பாவ காரகத்துவங்கள் 10ம் பாவத்தின்மீது படிவிக்கப்படும்.""
அதாவது 3ம் பாவ காரகத்துவம் - வீரம்/தைரியம்; அது 10மிட காரகமான தொழில் மீது படிவிக்கப்படுகிறது. அதனால் காவல் துறை/ தீயணைப்பு/ ராணுவம்/ அல்லது சாகசம் காட்டும் தொழில்கள், ஏஜென்சி தொழில், தொலைத்தொடர்பு துறையில் பணி, தபால் சேவையில் பணி, மாமனாரின் தொழிலை எடுத்து நடத்தல், எழுத்து துறையில் பணி, நுண்கலை பொருட்கள் தொடர்பான தொழில், அறிவிற்கு சவாலான தொழில் போன்ற தொழில்கள் கிடைக்கும்... அது சரி இவற்றில் எந்த தொழில் கிட்டும்? அதனை கணித்து கூறவே ஜோதிடர்கலாகிய நாம் இருக்கின்றோம்.
இயற்கை சுபரான குருபகவான், சுக்கிரபகவான், சந்திரபகவான், தனித்த புதபகவான், அத்துடன் சூரியபகவான் (அரச வேலை மற்றும் பெரும் ஊதியம், எமது திறமை என்பவற்றுடன் தொடர்புடையவர் சூரியபகவான். அத்துடன் அவர் அரைப்பங்கு சுபத்தன்மையும் அரைப்பங்கு பாவத்தன்மையும் உடையவாராக இருப்பதால் நான் இங்கு சூரியபகவானையும் எடுத்துள்ளேன்.)
இவர்களில் பார்வை 10 இல் விழ தொழிலில் மேன்மை, அரச ஆதாயம், பிரச்சினைகள் வந்தாலும் அதிலிருந்து இலகுவாக வெளிவருதல், நீடித்த தொழில் அமைப்பு போன்ற பலன்கள் அமையும். 10இல் அமர்ந்த கிரகம் அல்லது 10ம் அதிபதி பார்வைசெய்யும் கிரகத்திற்கு பகை பெறின் அந்த அமைப்புக்களால் பிரச்சினைகளும் வரும்.
தொழில் நிர்ணயம் என்பது சாதாரண ஒரு விடயமல்ல... இன்னும் பல விதிகள் இன்னும் ஆராய உள்ளன (10பாவாதிபதி, நவாம்சம், தசாம்சம்......). பிருகத்ஜாதக மூல நூலில்படி சில கிரக சேர்க்கைக்கு தொழில் அமைப்புக்கள் தரப்படுள்ளன. இது தவிர உங்கள் நட்ச்சத்திரத்திற்கான உகந்த தொழில்கள், உங்கள் லக்கினத்திற்கு உகந்த தொழில்கள்என உங்கள் ஜாதகத்தில் ஆராய பல விடயங்கள் உள்ளன. ஆகவே எந்தவொரு ஜாதக பலன் அறியவும் ஜோதிடரிடம் உங்கள் ஜாதகத்தினை காண்பித்து உங்கள் சுய ஜாதகத்தின் படி உங்களிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நன்மை/லாபம் தரும் தொழில்களை அறிந்து கொள்ளுங்கள். என்னிடம் ஜாதகம் பார்த்து குறிப்பிட்ட சில (5) கேள்விகளிற்கு பலன் கூற 500/=
முழு ஜாதக ஆய்வு செய்து 12 பாவத்திற்குமான பலன், பரிகாரம் - 1000/=
தேவை எனின் 25 வருட பலன்கள் கொண்ட astro vision PDF report 250/= இற்கு வாங்கலாம்.
இலங்கை, இந்தியா தவிர்ந்த ஏனைய வெளிநாட்டு வாழ் மக்கள் 1500/= செலுத்த வேண்டும்.
(இவை பெரும்பாலான திறமையான ஜோதிடர்களால் நிர்ணயம் செய்யப்படும் நியமக்கட்டணம்.)
பலன் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். கட்டண முறையில் ஜாதகம் பார்த்து பலன் அறிய விரும்பும் அன்பர்கள் மட்டும் hariram1by9@gmail.com என்ற எனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.
சர்வே ஜனா சுகினோ பவந்து...
நன்றி,
தொழில்முறை ஜோதிடர் மற்றும் ஜோதிட ஆராச்சியாளர் ஹரிராம் தேஜஸ்.
( "தேஜஸ்" என்றால் தெய்வீக ஒளி/பிரகாசம் என்று பொருள்படும். ஹரிராம் தேஜஸ் என்று வித்தியாசமான பெயராக உள்ளது என்று பலரிற்கு அறிய ஒரு ஆவல். :-) )
சனி, 18 ஜூன், 2016
சனி, ஜூன் 18, 2016
ஒரு ஜோதிட விளக்க கட்டுரை.
GHT
No comments
MR: EDITOR
GHT
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.
Related Posts
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக