1. எந்த காரியம் எடுத்தாலும் தோல்வி, மன நிம்மதி இன்மை அதாவது மனதில் ஒரு வெறுமை உள்ளவர்கள் இதனை சரி செய்ய அருகம்புல், மூன்று வகை மஞ்சள் (கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், பூசு மஞ்சள்) பொடி, சந்தனம் ஆகியவற்றை சுத்தமான பசும்பாலில் அரைத்து எடுத்து வலது கையின் நடு மூன்று விரல்களினால் உச்சம்தலையில் வைத்து பின்னர் உடல் முழுவதும் பூசி குறைந்தது 15 நிமிடங்களாவது விட்டு பின்னர் அரப்பு அல்லது சீயக்காய் வைத்து தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் செய்து வர எப்படிப்பட்ட தோசமானாலும் விலகி விடும். இதன் ஒரு சுருங்கிய நடைமுறையை இலங்கை (ஈழத்) தமிழர்களின் திருமணச் சடங்குகளில் காணலாம். அதாவது திருமணத்திற்கு முன் மணமக்ககளிற்கு பால், அருகு வைத்து குளிக்க வைக்கும் சடங்கு இன்றும் உள்ளது இது ஒரு தோச நிவர்த்திச் சடங்காகும்.
2. நமது வீட்டில் சாம்பிராணி, நல்ல மணமுள்ள ஊதுபத்தி (சந்தனகுச்சி) ஆகியவற்றை பொருத்த வேண்டும். வெள்ளி, செவ்வாய் கிழமைகளிலாவது கண்டிப்பாக வீட்டிற்கு சாம்பிராணி தூபம் இடவேண்டும். தனிச் சாம்பிராணி இடாமல் சாம்பிராணி, வெண்குங்கிலியம், சுத்தமான சந்தனம், அகில், தேவதாரு, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை கலந்து பொடிசெய்து தூபம் போடுவது மிகவும் சிறப்பான பலனைத் தரும்.
3.குளியலறை (Bathroom) கழிவறை(Toilet) வாயில்களில் ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் சுத்தப்படுத்தப்படாத கல் உப்பினை நிரப்பிப் போட்டு வைக்க வேண்டும். இதை வாரம் ஒருமுறை மாற்றிவிட வேண்டும். வீட்டின் தலைவாசலின் இருபுறமும் கல்லுப்பினை இரவில் ஒரு சிறிய கண்ணாடிப்பாத்திரத்தில் வைத்து காலையில் அதை குப்பையில் கொட்டிவிடவும். இது வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகளை அழித்து நல்ல சக்திகளை பெருக்கும். அத்துடன் மஞ்சள், சந்தனம் ஆகியவற்றிற்கு எதிர்மறை சக்திகளை அகற்றும் ஆற்றல் உள்ளது. இவற்றைக் கரைத்து வீட்டின் ஜன்னல், கதவு போன்ற இடங்களில் தெளித்து விட்டால் தீய சக்திகள் விலகும்.
4. வீட்டில் எப்போதும் மென்மையான இனிய இசை ஒலிக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கரடுமுரடான இசையை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். வினாயகர் அகவல், கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், அம்மன் பாமாலை, சிவஸ்துதி மற்றும் சில மந்திரங்களை மீண்டும் மீண்டும் ஒலிப்பவை என பல ஒலிநாடாக்களும், குறுந்தட்டுக்களும் கடைகளில் கிடைக்கின்றன. இவற்றை தினமும் ஒரு தடவையாவது வீட்டில் ஒலிக்கச் செய்வது சிறப்பாகும்.
5. இயற்கை வெளிச்சம் வீட்டினுள்ளே எப்பொழுதும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி முடியாதபட்சத்தில் ஏதாவது ஒரு வழிமுறையில் வீடு பிரகாசமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
6. ஓடத்தின் படம், உடைந்த பொருட்கள், பழுதடைந்த பழைய பொருட்கள் என்பன வீட்டில் எங்கும் வைக்கப்பட கூடாது.
தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ படுக்கை அறையில் வைக்க கூடாத பொருட்கள் :-
1. தையல் மெஷின்
2. கத்தரிக்கோல்
3. ஊசி
4. அயர்ன்பாக்ஸ்
5. இரும்பு கட்டில்
6. நீர்வீழ்ச்சி போன்ற படங்கள்..
7. மீன் தொட்டி
8. ஓடத்தின் படம்
9. உடைந்த பொருட்கள்
10. பழுதடைந்த பழைய பொருட்கள்.
.... போன்றவை
.... போன்றவை
அதிர்ஷ்டமும் நல்வாய்ப்பும் தேடி வர அன்னாசிப் பழம் ஒவியத்தை உங்கள் வீட்டில் அல்லது தொழிலங்களின் முன்புற அறைகளிலோ வரைந்து வைத்தால் அதிர்ஷ்டமும்,நல்வாய்ப்பும்,நேர்மறை எண்ணங்களும் தேடி வரும்.
(அருகில் நான் தந்துள்ள படத்தை பிரிண்ட் செய்தும் மாட்டலாம்.)
ஜாதகம் பார்க்கப்படும். கட்டணம் உண்டு. ஜாதகம் பார்த்து முழு ஜாதக ஆய்வு 1000/=
6 A4தாள் முழுமையாக பலன் எழுதி தரப்படும். 25 வருட பலன்கள் கொண்ட astro vision PDF report free.
உங்களின் ஜாதகம் கணிக்க உங்கள் பிறந்த திகதி, பிறந்த மாதம், பிறந்த ஆண்டு, பிறந்த நேரம் (காலை மாலையும் குறிப்பிடப்பட வேண்டும்.) , பிறந்த இடம் என்பவற்றுடன் நீங்கள் உங்கள் ஜாதகப்படி தெரிந்துகொள்ள விரும்பும் கேள்விகளை அனுப்பி வையுங்கள். வங்கியில் நீங்கள் பணம் செலுத்தியிருப்பின், பலன் பார்க்க வேண்டிய கையிருப்பு ஜாதகங்கள் நிறைய இருப்பதால் அதிகபட்சமாக 8 நாட்களிற்குள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பலன் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புகளுக்கு - hariram1by9@gmail.com
0 கருத்துகள்:
கருத்துரையிடுக