ஜோதிடத்தில் குறிப்பிட்ட திதிகளில் அமாவாசை, பெளர்ணமி தவிர ஏனைய 14 திதிகளில் பிறந்தவர்களுக்கும் திதி சூன்ய தோஷம் உள்ளது. இவைகளை கவனிக்காமல் பலன் சொல்லும் போது சொல்லிய பலன்கள் நடப்பதில்லை. ஜோதிடத்தின் வழிகாட்டியாக திதி சூன்யம் உள்ளது. திதிசூனியம் பெற்ற கிரகம் உச்ச நிலையில் இருந்தாலும் நற்பலன் அளிப்பதில்லை. சூன்யம் பெற்ற கிரகமும், சூன்ய ராசியில் உள்ள கிரகமும் பலத்தை இழப்பதோடு தமது காரக ஆதிபத்திய பலன்களையும் செய்வதில்லை. ஜாதகருக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. 3 பகுதிகளாக பிரித்து விளக்கம் கீழே தந்துள்ளேன்.
1. விதிகளும் கோட்ப்பாடுகளும்
-----------------------------------------------
ராசி அதிபதி திதி சூன்யம் அடைகிறது. திதி சூன்யம் ஏற்பட்ட ராசி அதிபதிகள் தங்களது சக்தியை இழக்கிறார்கள். ஜாதகப்படி உள்ள நன்மைகளை தர மறுத்து; தீமைகளை புரிகின்றனர்.
சூன்யமடைந்த கிரகங்கங்கள் நலம் தரும் பாவங்களான, 1,2,4,5,7,9,10,11 இல் இருந்தால் நன்மை தருவதில்லை. ஆனால் அவை லக்கினத்திற்கு மறைவு ஸ்தானங்களான 3,6,8,12 இல் இருந்தால் நலம் தரும். வக்கிரம் ஆனாலும் நல்ல பலன் கொடுக்கும்.
திதி சூன்யம் அடைந்த கிரகங்கள், பகையானாலும்: நீச்சம் பெற்றாலும், பாபிகளுடன் இருந்ததாலும், இயல்பான பலன்கள் அதாவது காரகப் பலன்கள் அதிகமாகவே கொடுக்கும். திதி சூன்யம் பெற்ற கிரகங்கள் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது உடன் இருந்தாலும் தோசம் இல்லை.
அஸ்தங்கதம் அடைந்தாலும், வக்ரமாக இருந்தாலும்; பகை, நீச்சம் பெற்றிருந்தாலும், லக்னத்திலிருந்து 3,6,8,12 இருந்தாலும் மேசம், விருச்சிகம், சிம்மம், கும்பம், ஆகிய
ராசி இருந்தாலும் திதி சூன்யம் இல்லை.
பாபருடன் கூடி இருந்தாலும் திதி சூன்யம் இல்லை.
எனவே திதி சூன்யம் பெறும் ராசிகளின் சந்திரன் சஞ்சரிக்கும் பொழுதும், திதி சூன்ய ராசி லக்னமாக நடைபெறும் சமயத்திலும், சுப காரியங்கள் செய்யலாகாது.
அதை போல் ஒரு திதி சூனியம் பெற்ற கிரகம் மற்றொரு திதி சூனிய ராசியில் இருந்தால் அந்த கிரக காரகம் வெகுவாக பாதிக்கபடும்
திதி சூனிய ராசியில் கிரகம் ஏதாவது சிக்கினால் அக்கிரகம் காரகம் வகிக்கும் விஷயங்களில் பிரச்சினைகள் ஏற்படும். மேலும் திதி சூனியம் அடைந்த பாவமும் பாதிக்கப்படும்.
2. திதி சூனிய ராசியில் உள்ள கிரகம் மற்றும் அந்த ராசி அதிபதியின் பலன்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------
சூரியன் : தகப்பனாருக்கு தோஷம். தந்தையுடன் உறவு பாதிக்கப்படும், தந்தையின் உடல் நலமும் கெடலாம். ஜாதகரின் கண் பாதிக்கப்படலாம். அரசு வழியில் தொந்தரவு இருக்கும்.
சந்திரன் : தாய்க்கு தோஷம், தாயாரின் அன்பை பெற முடியாமை,மன அமைதி இருக்காது, மந்த புத்தி, புத்தி சாமர்த்தியம் இருக்காது, நீரில் கண்டம், பிரயாணங்களில் சிக்கல் ஏற்படும்.
செவ்வாய் : சகோதரருக்கு தோஷம், உடன் பிறப்புகளால் நன்மை இல்லை, தைரியக் குறைவு, இரத்த சம்பந்தமான வியாதி, மித மிஞ்சிய காமம் அல்லது வீரியக் குறைவு, நாத்திகர்,.
புதன் : கல்வியில் தடை, தாய்மாமன் வர்க்கம் சுகப்படாது, சோம்பேறி, கடின உடல் உழைப்பில் ஈடுபட இயலாது.
குரு : கல்வியில் தடை, தீய சிந்தனைகள், ஒழுங்கீனம், கோழைத்தனம், நெருப்பால் கண்டம், சரும ரோகம், போலி சாமியார், குரு துரோகம், வஞ்சக மனம், புதல்வர்களால் நன்மை இல்லை.
சுக்கிரன் : திருமணம் தாமதப்படும், கண் கோளாறு, போகம், வாகனம், அழகுணர்வு, கௌரவம் ஆகியவை பாதிக்கப்படும்.
சனி : சனி யோககாரகனாக இல்லாவிடில் நல்ல பலன்கள் உண்டு. வாக்கு வன்மை ஏற்படும். சனிப் பெயர்ச்சிகள் (ஏழரை போன்றவை) மூலம் பெரிய பிரச்சினை எதுவும் நிகழாது. பக்திமானாகவும் நேர்மையானவராகவும் இருப்பார். பெரும் எந்திரத் தொழிற்சாலை, இரும்பு ஆலை போன்றவற்றின் மூலம் அனுகூலம், சம்பாத்தியம் உண்டு. வேலையாட்கள் பலர் இவரிடம் இருப்பார்கள்.
ராகு, கேது சூன்ய ராசிகளில் இருந்தால் அதன் தசாபுத்திகளில் நன்மை தரும்.
3. பிறந்தநேர திதிகளும் சூன்ய தோஷ ராசிகளும் மற்றும் கிரகங்களும்.
------------------------------------------------------------------------------------------------------------
பிரதமை திதியில் சூன்யம் பெறும் ராசி - மகரம், துலாம், கிரகம் சனி, சுக்கிரன்,
துவிதியை திதியில் சூன்யம் பெறும் ராசி - தனுசு, மீனம், கிரகம் -குரு.
திரிதியை திதியில் சூன்யம் பெறும் ராசி- மகரம், சிம்மம், கிரகம்-சனி, சூரியன்,
சதுர்த்தி திதியில் சூன்யம் பெறும் ராசி- கும்பம், ரிஷபம், கிரகம் - சனி, சுக்கிரன்.
பஞ்சமி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன்,
சஷ்டி திதியில் சூன்யம் பெறும் ராசி- மேஷம், சிம்மம் , கிரகம் -செவ்வாய், சூரியன்,
சப்தமி திதியில் சூன்யம் பெறும் ராசி - தனுசு, கடகம், கிரகம் - குரு, சந்திரன். அஷ்டமி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன்,
நவமி திதியில் சூன்யம் பெறும் ராசி - சிம்மம், விருச்சிகம், கிரகம் - சூரியன், செவ்வாய்,
தசமி திதியில் சூன்யம் பெறும் ராசி - சிம்மம், விருச்சிகம், கிரகம் - சூரியன், செவ்வாய்.
ஏகாதசி திதியில், சூன்யம் பெறும் ராசி - தனுசு, மீனம், கிரகம் - குரு,
துவாதசி திதியில் சூன்யம் பெறும் ராசி - மகரம், துலாம், கிரகம் - சனி, சுக்கிரன்,
திரயோதசி திதியில் சூன்யம் பெறும் ராசி - ரிஷபம், சிம்மம், கிரகம் - சுக்கிரன், சூரியன்,
சதுர்த்தசி திதியில் சூன்யம் பெறும் ராசி - மிதுனம், கன்னி, கிரகம் - புதன்.
அமாவாசை, பௌர்ணமி திதிகளுக்கு திதி சூன்யதோஷமில்லை.
உதாரணமாக ஒருவர் துதியை திதியில் பிறந்தவரானால் தனுசு, மகரம் சூன்ய ராசிகளாகிறது. அதன் அதிபதிகள் குரு , சனியின் தசாபுத்திகளில் நன்மையான பலன்கள் நடைபெறுவதில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக