ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

சனி, 12 நவம்பர், 2016

மருத்துவ ஜோதிடம்

மனிதர்களின் உடல்நலம் சித்தமருத்துவப்படி வாதம், பித்தம், கபம் என்ற மூன்றின் நிலையைப் பொறுத்தே அமைகிறது. இதில் ஒன்று தன் அளவிற்கு அதிகமானாலும், குறைந்தாலும் நோய் வந்துவிடும். இதனை ஜோதிட ரீதியில் அணுகுவது இந்த பதிவின் நோக்கமாகும்...
கப நாடி:- உடல் கூற்றில் உறுப்பு மூலத்தையும், அதாவது டிஷ்யூவைக் குறிக்கும். அவற்றில் இருக்கும் திரவத்தை சரிசமமாக இருக்கும் நிலையை கட்டுப்படுத்தும். பொதுவாக அனைத்து டிஷ்யூக்களையும் குறிக்கும்.
கபம் அதிகமானால் கப தோஷம் ஏற்படும். தடித்த குட்டையான உருவமைப்புடையவராகவும் இருப்பார்கள். சுரப்பிகள் அதிகமான சுரக்கும் நிலையும், சளித் தொல்லையும் ஏற்படும். நீர் அதிகமாக வெளியேறும் நிலையும் வீக்கமும் ஏற்படும்.
வாத நாடி:- தொண்டையின் செயல்பாடு; நுரையீரல்; இரத்த ஓட்டத்தின் நிலை, மூட்டுகளின் செயல்பாடு, நரம்புகளின் தன்மை, இயக்கம் ; செரிமானம் இவற்றிற்கும் பொறுப்பாகும்.
வாதம் அதிகமானால் வாத தோஷம் ஏற்பட்டால் டிஷ்யூ மெதுவாக பாதிக்கப்படும். எந்தவியாதியானாலும் அவை நீடித்து நிலைத்திருக்கும் நிலை ஏற்படும். உடலின் பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் குறைபாடும் ஏற்படும். இதனால் உடலின் பகுதி இயங்காத நிலையும் படிப்படியாக உருவாகும். உடல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும்
பித்த நாடி:- உணவில் ஏற்படும் மாறுதலுக்கு அதாவது ஜீரணமாகும் நிலைக்கு காரணமாகும். உடலுக்கு சக்தியை கிரகித்துக்கொடுக்கும் செயலை செய்து வரும். பித்தம் அதிகமானால் பித்த தோஷம் ஏற்படும். செயல்பாட்டில் கட்டுப்பாடில்லாத நிலையை ஏற்படுத்தும். உடலில் வீக்கமும், இரத்த கசிவும் ஏற்படும்.

கிரகதத்துவ நாடி
---------------------------
சூரியன் நெருப்பு பித்தம்
சந்திரன் நீர் வாதம், கபம்
செவ்வாய் நெருப்பு பித்தம்
புதன் நிலம் வாதம், பித்தம், கபம்
வியாழன் ஆகாயம் கபம்
சுக்கிரன் நீர் வாதம், கபம்
சனி காற்று வாதம்
இராகு காற்று வாதம்
கேது நெருப்பு பித்தம்

இராசிகள் குறிப்பிடும் உடலின் பாகங்கள்.
----------------------------------------------------------------
1 மேஷம் .. தலை மற்றும் மூளையைக் குறிக்கும்.
2. ரிஷபம் .. முகம், பேச்சு, உள்நாக்கு, தொண்டைப் பகுதியைக் குறிக்கும்.
3. மிதுனம் .. கழுத்து, தோள் பட்டை, கைகள்.
4 கடகம் .. மார்புப் பகுதி, பெண்களுக்கு மார்பகம்.
5 சிம்மம் .. இருதயம், நாபி மலை நரம்புகளின் தொகுப்பு.
6 கன்னி .. வயிற்றின் மேல் பகுதி முதல் தொப்புள் வரை.
7. துலாம்... அடிவயிற்றுப் பகுதி முதல் இடுப்பு வரை.
8 விருச்சிகம் .. வெளிப்புற பிறப்புறுப்புக்கள்.
9 தனுசு .. தொடைப் பகுதி.
10 மகரம் .. முழங்கால் மூட்டுப் பகுதி.
11 கும்பம் .. கால் பகுதி, அதன் தொடர்புடைய பகுதி
12 மீனம் .. பாதம் அதன் தொடர்புடைய பகுதி.


நெருப்பு இராசிகளான மேஷம், சிம்மம், தனுசு இவை மூன்றும் பித்தத்தைக் குறிக்கும். நில ராசிகளான ரிஷபம், கன்னி, மகரம் இம்முன்றும் வாதத்தை குறிக்கும். காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் இவை மூன்றும் கலந்த நாடி குறிக்கும். நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் இவை மூன்றும் கபத்தைக் குறிக்கும்.
நெருப்பு இராசி .. மேஷம் சிம்மம் தனுசு; கிரகம்: சூரியன் செவ்வாய், கேது
நில ராசி .. ரிஷபம், கன்னி, மகரம்; கிரகம்: சனி, ராகு, சந்திரன், சுக்கிரன்
காற்று இராசி .. மிதுனம், துலாம், கும்பம் ; கிரகம்: புதன்
நீர் ராசி .. கடகம், விருச்சிகம், மீனம்; கிரகம்: சந்திரன், சுக்கிரன், குரு
மேலே குறிப்பிட்ட இராசிகளில் மேற்குறிப்பிட்ட கிரஹங்கள் இருந்தாலும், பார்த்தாலும் லக்கனத்திற்கு 6, 8, 12ஆம் பாவ அதிபதிகள் சம்பந்தப்பட்டாலும் அப்பகுதிகளைக் குறிப்பிடும் உறுப்புகளில் உடலின் பாகத்தில் வியாதிகள் ஏற்படும். உதாரணமாக, மேஷ ராசி தலைப்பகுதியைக் குறிக்கும். இதில் செவ்வாய், சூரியன் இருந்தாலும் பார்த்தாலும் பித்தத்தினால் பாதிப்பிற்க்கு உள்ளாவர்.

நவகிரகங்களும் உடல் தொடர்பும்..
------------------------------------------------------
சூரியன் - இதயம், எலும்பு, கண், பல், முதுகுதண்டு.
சந்திரன் - உடல் சக்தி, மனது, இரத்த ஓட்டம். 
செய்வாய் - இரத்த வீரியம், தசைகள், எலும்பு மஜ்ஜைகள், எலும்பு மூட்டுகள், பல், தைராய்டு.
புதன் - நரம்பு மண்டலம், புத்தி, தோல், தசைநார்கள்.
குரு - மூளை, மண்ணீரல், உயிரணுக்கள், உயிர்வாயு செயற்திறன், கொழுப்பு.
சுக்கிரன் - கர்ப்பபை, கணையம், சிறுநீரகம், இனவிருத்தி ஹார்மோன்கள். 
சனி - தோல், நரம்பு, கழிவு பொருட்கள், கால் சம்பந்தப்பட்டவை, மலட்டுத்தன்மை.
ராகு - நுரையீரல், மலட்டுத்தன்மை, நோயை விகாரபடுத்துவது.
கேது - இரைப்பையில் உள்ள அமிலம், மலட்டுத்தன்மை, நோயை மறைப்பது.


பிற்கால நூலான பலதீபிகையில் கிரகங்களுக்கான நோய்களைக் கீழ்க்கண்டவாறு காண முடிகிறது.

சூரியன்  - பித்தம், உஷ்ணம், சுரம், தேக எரிச்சல், சயம், இருதய ரோகம், கண்ணோய், தோல் எலும்புகளில் வரும் நோய்கள், அக்னி, ஆயுதம், விஷம் முதலியவற்றால் ஆபத்து
சந்திரன் - தூக்கமின்மை, சளி, குளிர்காய்ச்சல், இரத்தத்தில் ஏற்படும் வியாதிகள், மனநோய்
செவ்வாய் - தாகம், ரத்தரோகம், கோபம், பித்தம், குஷ்டம், தலைவலி
புதன் - காரணம் தெரியாத பயம், கண்வலி, கழுத்து, மூக்கில் வரும் நோய்கள், தோல் நோய்கள்
குரு - மயக்கம், கபம், காது நோய்
சுக்கிரன் - வாதம், சிறுநீரக நோய்கள், பால்வினை நோய்கள்

சனி - வாதம், கால், வயிறு இவைகளில் நோய், மாரடைப்பு, மயக்கம்

சூரியன் வலுவாக அமைந்த ஜாதகத்தினர் கட்டுமஸ்தான உடலமைப்பையும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருப்பர். உடலின் கட்டமைப்புக்கு காரணகர்த்தா எனில் அது சூரியனுக்கும் லக்னத்திற்கும் உள்ள தொடர்புர்தான்.
ஜாதகத்தில் ஆறாமிடம் வியாதியை குறிப்பிடுகிறது. நோயின் வேதனையை எட்டாம் பாவமும் மருத்துவமனை செல்வதை பனிரெண்டாம் பாவமும் நோயிலிருந்து விடுபடுவதை ஐந்தாம் பாவமும் குறிப்பிடுகிறது.
கிரகங்களில் செவ்வாய் அறுவை சிகிச்சையை குறிப்பிடுகிறது. ஆனால் சனியே பிணி காரகன் என அழைக்கப்படுகிறது. 
நோய் பற்றிய ஜாதகரின் கேள்விக்கு பிரசன்னம் போடும்போது செவ்வாய், சூரியன், குரு மூவரும் பலமாய் இருந்தால் சாதகமான பலன் உண்டு.

GHT

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

1 கருத்துகள்:

Kumar Veluchchamy சொன்னது…

மிகவும் அருமை அய்யா. மிகவும் சரியாக உள்ளது.உங்களிடம் ஜாதகம் பார்க்க வேண்டும். நன்றி

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.