ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

வெள்ளி, 18 நவம்பர், 2016

அக்னிஹோத்ரமும் ஆத்மகாரகனும்...

எனது வாசகர்களிற்கும்; எனது blog இனை பின்தொடர்பவர்களிற்கும் எனது இந்நேர வணக்கம். இந்த பதிவானது ஜோதிடம் , ஆன்மிகம், மருத்துவம், பொதுவாழ்க்கை நெறிமுறை என்பவற்றை உள்ளடக்கியதாக அமைகிறது...

எனது வழமையான பதிவுகள் போல அல்லாது இது ஒரு கூறும் பதிவாக அமைகிறது... எழுதுவது பெரிதல்ல... அதனை படிப்பதும் பெரிதல்ல... அதன்படி வாழ்க்கையில் நடப்பதே பெரிய விடயம்.. எனவே இந்த பதிவு சிறிதென்றாலும் இதனை கருத்தூன்றி படியுங்கள்... பல கோணங்களில் சிந்தியுங்கள்... அதன்படி எமது இந்து சமய சாஸ்திரங்களை மதிக்கும் உத்தமசீலர்களாக வாழுங்கள். எமது சாஸ்திரங்களில் கூறப்பட்டவாறு நடவுங்கள்... அதுவே எனக்கு போதும்... அதுவே எனது வெற்றி என்று கூறிக்கொண்டு பதிவினுள் நகர்வோம்...

எமது இந்து சமய சாஸ்திரங்களில் சொல்லப்படாத விடயங்கள் என்று எதுவுமில்லை. சூரிய ஒளியும் காற்றும் நிறைந்த இடத்தில் லஷ்மிவாசம் செய்வாள் என்பது ஐதீகம். அதுவே உண்மையும் கூட. இங்கு நான் விஞ்ஞானத்தினை காரணம்காட்டி உண்மை என கூறவிரும்பவில்லை. அனுபவத்தினை காரணம் காட்டி உண்மை என கூறுகிறேன்.. இதுபற்றி மிக சுருக்கமான விளக்கத்தினை பார்ப்போம்...

பிரபஞ்ச சக்தியினை பெற சிறிது நேரம் செய்ய வேண்டிய சிறிய இலகுவான வேள்வியே 'அக்னிஹோத்ரம்' எனும் சாஸ்திர சொல்லினால் குறிகாட்டப்படுகின்றது. அக்னிஹோத்ரா சூழ்நிலை என்பது நமது வீட்டில் நம்மை சுற்றி உள்ள வெற்று வெளியில் உள்ள அதிர்வலைகளைக் கட்டுப்படுத்தி தூய்மை ஆக்கும். அது நம்முடைய நரம்பு மண்டலங்களை ஒழுங்குபடுத்தும். நம் வீட்டில் வைத்துள்ள செடிகொடிகளும் கூட அக்னிஹோத்ரா சூழ்நிலையில் நன்கு வளரும். நமது வீட்டில் அமைதி நிலைக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தினமும் நான் செய்து முடித்த அக்னிஹோத்ரா சாம்பல் மிகவும் புனிதமானது. தெய்வீகத்தன்மை நிறைந்தது. நெற்றியில் நீறு போல் இட்டுக் கொள்ள அஷ்டஐஸ்வர்யமும் கிட்டும். வெற்றி நமைத் தொடர்ந்து வரும். கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். ஆன்மீக எழுச்சி உண்டாகும். அதன் சாம்பலை செடிகளுக்கு உரமாக இட்டால் செடிகளில் அபரித வளர்ச்சியைக் காணலாம். இது கண்கூடு. இது ஒரு புனித சுய அனுபவமும் கூட. சொன்னாலும் படித்தாலும் கேட்டாலும் கூடப் புரியாதது. செய்து அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே உள்ளம் உயர்நிலை அடையும். இது நிச்சயம். அக்னிஹோத்ரா புதிதல்ல. இது பற்றி நான்கு வேதங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டு உள்ளது. இந்த சொல்லினை இன்றைய மனிதர்களிடம் கேட்டால் "அப்படினா என்ன?" என்றுதான் கேட்பார்கள். ஒரு உதாரணம் வேண்டும் என்றால் எமது பாட்டன், பூட்டன் காலத்தில் அவர்கள் செய்த சமையல் முறையே ஒரு மிகச்சிறப்பான அக்னிஹோத்ரம் ஆக இருந்தது. எமது முன்னோர்கள் சமையலையில் நேரடி சூரிய ஒளி விழுமாறு அமைத்திருந்தனர். சூரிய ஒளி என்பதைவிட; ஆத்தமாகாரகனின் கதிர்கள் நாம் உண்ணும் உணவில் விழுவதால்; எமது உடலிற்கு ஏற்கக்கூடிய எளிய ஆனால் சக்திவாய்ந்த உணவாக அவை அமைந்திருந்தன. அத்துடன் அவை நுண்ணங்கி தொற்றற்ற உணவுவகைகளாகவும் இயற்கையான பாரம்பரிய உணவுகளாகவும் அமைந்திருந்தன... மண் சட்டிகளில் உணவு சமைத்தனர். செப்பு பாத்திரங்களில் நீர் அருந்தினர். ஜோதிடப்படி புதனின் கெடுபலன்கள் குறைக்கவும் மருத்துவப்படி சீரான இரத்த ஓட்டம், தாது பொருட்களை இலகுவாகவும் பெற்றனர். அந்த நீரும் தூய்மையானதாக இருந்தது. உணவு ஆரோக்கியமானதாக இருந்தது. அவர்கள் உணவு சமைத்த பின் முதலாவதாக அடுப்பிற்கும் பின்னர் கோமாதாவிற்கும் படைப்பர். பிறகே ஏனையவர்கள் உண்ணுவர். சாஸ்திரங்களை மதித்தனர். அதன்படி நடந்தனர். அவர்களின் இந்த தவவாழ்வே அவர்களையும் அவர்கள் சந்ததியினையும் தழைக்க செய்தது. அனால் இந்தக்காலத்தில் "அறிவியல், விஞ்ஞானம், நாவிற்கு சுவை, fast food எனும் துரித உணவுகள், நேரமின்மை, இறைவழிபாடு அற்றநிலை, அலுமினிய/ஈய பாத்திரத்தில் உணவு சமைத்தல், முறையற்ற/ சமையலறை என ஏராளமான விடயங்கள்" எம்மை நரகத்தை நோக்கி தள்ளுகின்றன என்றால் அது மிகையாகாது... ஆகவே பொதுநலமாக சிந்தியுங்கள்... செயற்படுங்கள்... ஓம் நமசிவாய... வாழ்க வளமுடன்...

ஆதங்கத்தோடும் அறிவுரைகளோடும் இவன்; பாரம்பரிய தெய்வீக ஜோதிடர் ஹரிராம்தேஜஸ்.. hariram1by9@gmail.com

GHT

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

1 கருத்துகள்:

Thangavelu சொன்னது…

அற்புத கருத்துக்கு நன்றி அய்யா

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.