நாளை சனி பிரதோஷம் அதை பற்றிய தகவல்
சகல ஐஸ்வர்யங்களை தரும்
சனி பிரதோஷம்..!
🌷 பிரதோஷங்களில் மிகவும் முக்கியமானது சனி பிரதோஷம் ஆகும். திரியோதசி திதியும், சனிக்கிழமையும் சேர்ந்து வருவது சனி பிரதோஷம். ஏனெனில் சிவபெருமான், தேவர்களைக் காப்பாற்றுவதற்காக ஆலகால நஞ்சை உண்ட நாள் சனிக்கிழமை. எனவே பிரதோஷ நேரம் சனிக்கிழமையன்று வந்தால் சனி பிரதோஷம் எனச் சிறப்பு பெறுகிறது.
🌷 பொதுவாக பிரதோஷ தினத்தில் சிவனை முப்பது முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு இவர்களெல்லாம் வணங்கி ஆசி பெறுவார்கள். அவர்களைப் போலவே பிரதோஷ நேரத்தில் நாமும் சிவபெருமானை வணங்கி நம் துன்பங்களை அடியோடு போக்கிக் கொள்ள பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
🌷 அதேபோல் எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பு வைத்து வழிபட்டால் பு ர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.
🌷 பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். அதேபோல் நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்ட சனி, அஷ்டமச்சனி ஆகியவற்றால் பாதிக்கபடுபவர்கள், சனி பிரதோஷ வழிபாட்டை முறையாக மேற்கொண்டால் சனீஸ்வர பகவானின் கோபம் தணிந்து துன்பம் நீங்கும்.
🌷சனி பிரதோஷத்தன்று, மாலை வேளையில் சு ரிய அஸ்தமனத்திற்கு முன் 24 நிமிடங்களும், சு ரிய அஸ்தமனத்திற்கு பின் 24 நிமிடங்களும் உள்ள 48 நிமிடங்கள் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் வழிபாடு செய்வது சாலச்சிறந்தது.
🌷 ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சனி பிரதோஷம், சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது ஆகும்.
🌷 சனி பிரதோஷத்தன்று மாலை வேளையில் சிவாலயங்களுக்கு சென்று உங்களால் இயன்ற அபிஷேகப் பொருட்களை அளித்து அபிஷேகம் செய்வித்து நந்தியெம்பெருமானை வழிபட சிவபெருமானின் பரிபு ரண அருள் கிட்டும். அன்றைய தினம் நந்திக்கும் சிவபெருமானுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவிப்பது நற்பலன்களை தரும்.
செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017
செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017
சனி பிரதோஷம்
GHT
No comments
MR: EDITOR
GHT
Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.
Related Posts
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக