இந்த சிறு ஆதங்க பதிவை இப்படி ஆரம்பிப்போம்,
தமிழ் இலக்கணத்தில் உள்ள அகர, மகர, லகரத்தினையே இதற்கு எடுத்துக்கொண்டோமேயானால் ஒருவர் அகரஎழுத்துக்களை மகரமாக கொள்ளவேண்டும் என்றும் மகர எழுத்துக்களை லகரமாக கொள்ள வேண்டும் என்றும் சொன்னால் அந்த பித்தனை என்ன செய்ய வேண்டும்? அகர எழுத்துக்கள் என்பன இவைதான் மகர எழுத்துக்கள் என்பன இவைதான் லகர எழுத்துக்கள் என்பன இவைதான் என்று சான்றுகாட்ட ஆதாரமாக பழம்பெரும் தமிழ் இலக்கண நூல்களை காட்டினால் அவை இடைச்செருகல் அதனால் ஏற்க முடியாது என்றும் சங்ககாலம்(கி.மு 300 தொடக்கம் கி.பி 300), சங்கமருவியகாலத்தில்(கி.பி 300 - 700வரை) வாழந்த தமிழ் பண்டிதர்களிடமும் புலவர்களிடமும் சென்றுதான் கேட்டறிய வேண்டும் என்று கூறினால் எப்படி இருக்கும்? இது போன்ற (#௯௯௯௯)களை தமிழர்கள் கல்லால்அடித்தே கொல்லவேண்டாமா?
உங்கள் அனைவருக்கும் புரியும் வகையில் இன்னுமொரு உதாரணம் கூறவேண்டும் என்றால் நாம் யாரும் கடவுளே நேரடியாக கண்டதில்லை என்பதற்காக உங்களுக்கு விருப்பமான ஒரு கடவுளை(எனக்கு சிவன்) அவரெல்லாம் கடவுளே இல்லை. பேய்களும்பிசாசுக்களும்தான் கடவுள் என்று ஒருவன்கூறுகிறான். புராணஇதிகாசங்களை காட்டி புரியவைக்கமுயன்றாலும் அதெல்லாம் இடைச்செருகல் நம்பமுடியாது வேண்டுமென்றால் சம்பந்தரையோ அப்பரையோ கொண்டுவந்து அவர்சொன்னால் பிறகு யோசிப்போம் எனும் (#௯௯௯௯)களை என்ன செய்ய வேண்டும் என்று இறைபக்தர்களான நீங்களே தீர்மானியுங்கள். இதுபோன்ற கீழ்த்தரமான கயவர்கள் மகாபுனிதமான ஜோதிடசாஸ்திரத்திலேயே; கறையான் போல இருந்துகொண்டு அதனையே அரித்து தம் வயிறுவளர்க்கின்றனர். பாரம்பரிய வேதஜோதிடமென்பது மூலநூலினை ஆதாரமாக கொண்டது. அதில் ஞானம் பெறாது, அதனை ஆதாரமாக்கி பேச திராணியில்லாதவன்எல்லாம் தான் பாரம்பரிய ஜோதிடர்என சொல்வதைவிட தற்கொலை செய்துகொள்வது சிறந்தது என்று நான் எண்ணுகிறேன். மேற்கூடிய இரு உதாரணங்களிலும் மேற்கோள் காட்டியவாறு பேசிய ஒருவனை ஒரு ஜோதிடனாக; நான் நடாத்தும் "ஜோதிட கேள்வி பதில்" எனும் பெயருடைய முகநூல் குழுவிலிருந்து எட்டிஉதைந்துவிட்டேன். இந்த பதிவை வாசிக்கும் போதே ஒருசில அரைகுறை பாரம்பரிய ஜோதிடர்க்கு புரியும் இனி தங்கள் பருப்பு இங்கு வேகாது என... அவர்கள் யாருக்கும் சொல்லாமல் குழுவிலிருந்து நடையைகட்டிவிடுங்கள். மற்றைய ஜோதிட முறைகளை பற்றி எனக்கு பிரச்சனையில்லை. ஆனால் இந்த குழுவில் எந்தவொரு பாரம்பரிய ஜோதிட பதிவு இட்டாலும் பதிவாளர் தமது பதிவை மூலநூல் ஏதாவது ஒன்றை தமது பதிவிற்கு ஆதாரமாக/ சான்றாக காட்ட வேண்டும். முடியாதவர்கள், அரைகுறை பாரம்பரிய ஜோதிடர்கள் பதிவிடவோ கருத்திடவோ வேண்டாம்! முதலில் பாரம்பரிய ஜோதிடத்தினை முறையாக பயிலுங்கள். இதற்கு 3-5 வருடங்கள் வரை கட்டாயம் எடுக்கும். பாரம்பரிய வேத ஜோதிடத்தில் நான்று வகுப்பு சென்றவுடன் தன்னை ஜோதிடனாக எண்ணுபவனைவிட அப்படி ஒரு எண்ணத்தினை தனது சுயலாபத்துக்காக ஏற்படுத்தும் அந்த ஆசிரியனே மிகக் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவன் என்பதில் எனக்கு எந்தவொரு மறுப்பும் இல்லை.
சில இடங்களில் (#௯௯௯௯) இவ்வாறு குறிப்பிட்டு இருந்தேன். உங்கள் பாணியில் உங்கள் வழக்கில் அதற்கு ஒரு சொல்சேர்த்து படியுங்கள். அப்போதுதான் பதிவு சுவாரஸ்யமாக இருக்கும்... எனது ஆதங்கமும் ஆவேசமும் சாதாரண மக்களுக்கு புரிய வாய்ப்பில்லை என்றாலும் நீங்கள் பாரம்பரிய ஜோதிடத்தினை உயிராக கொண்ட ஜோதிடராக அல்லது ஜோதிட மாணவனாக இருந்தால் உங்களுக்கு கட்டாயம் புரியும்...