ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

செவ்வாய், 10 பிப்ரவரி, 2015

எண் ஜோதிடம்.


நீங்கள் ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களா?
நீங்கள் 1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய எண் 1. ஒன்றாம் எண் என்றாலே மிகவும் மகிழ்ச்சிதான். ஒரு மாணவர் முதல் இடம் பெறுகிறார் என்றால் அவர் மட்டுமின்றி ஆசிரியர்களும் பெற்றோர்களும் மகிழ்ச்சி அடைகின்றனர். இந்த எண்ணுக்கு அதிபதி சூரியன். ஒன்றாம் எண்ணில் பிறந்தவர்களின் இயல்புகளைத் தெரிந்துகொள்வோமா?

பழகுவதற்கு இனிமையான சுபாவம், பார்வையில் மிடுக்கு, தன்னம்பிக்கை, எதையும் சாதிக்கும் வல்லமை, பிறரை வேலை வாங்குவதில் திறமை, மனித நேயம், எதையும் எதிர்பார்த்துப் பழகாத தன்மை போன்ற எத்தனையோ அனுகூலங்கள்.

தன் துன்பங்களை இவர்கள் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்கள். கடின உழைப்பு, கண்டிப்பான நடத்தை, சிறந்த ஆலோசனை, துன்பங்களைக் கண்டு துவளாமை, தோல்விகளை வெற்றிகளாக்கும் தன்மை, கண்டுபிடிப்புத் திறமை, வான்வெளி ஆய்வுத் திறமை, நேர்த்தியான ஆடைத் தெரிவு போன்ற குணாதிசயங்களால் பிறரால் கவரப்படுவர். பிறர் மகிழ்ச்சியில் இவர்கள் மகிழ்வர். புகழுக்கு அடிபணிவர்.

நீதியும், நேர்மையும் இவர்களது தோழர்கள். சோம்பேறித்தனமும பொறாமையும் இவர்களின் எதிரிகள். வாழ்வில் முன்னேறத் துடிப்பவர்களுக்கு அரணாக விளங்குவர். குறுக்குவழி வரவுகளை துச்சமாக மதிப்பர். நேர்மையான போக்கினால் பலரது எதிர்ப்புகளையும் சம்பாதிப்பர். இரக்க குணம் உடையவர். வாக்குறுதிகளைக் கண்ணும் கருத்துமாக நிறைவேற்றுவர். கல்வி, ஞானத்தில் சிறந்து விளங்குவர். அயல்நாடுகள், மலையும், மலைசார்ந்த இடங்களில் வசிப்பதும் பகல் பொழுதும், இவர்களுக்கு கரும்பாக இனிக்கும். பிறர் சொத்துக்கு சிறிதும் ஆசைப்படமாட்டார்கள். மனசாட்சிக்குப் புறம்பாக நடக்க மாட்டார்கள். இவர்களை மதிப்புக் குறைவாக நடத்துவோரை ஓரம் கட்டிவிடுவார்கள். எதிரிகளை மன்னிக்கும் பாங்கு உண்டு. கண், வயிறு, தலை சம்பந்தமான சிறிய உபாதைகள் ஏற்படும்.

மொத்தத்தில், புகழ் விரும்பிகளானாலும் நீதியும் நேர்மையும் கொண்ட, பழகுவதற்கு இனிமையானவர்கள்.


முதலாம் எண்ணுக்கு உகந்தவை
நன்மை தரும் எழுத்துக்கள்
: A,I,J,Q,D,T,M,E,H,N,X,C,G,L,S
நன்மை தரும் எண்கள்
: 1,3,4,5,9
நிறம்
: இளம் சிவப்பு, வெள்ளை, மஞ்சள்
ரத்தினம்
: மாணிக்கம்
ஹோரை
: சந்திரன், குரு, புதன்
திசை
: கிழக்கு, வடகிழக்கு
தொழில்
: அரசு வேலை, அரசியல், மருத்துவம், கமிஷன் தொழில்


முதலாம் எண்ணில் பிறந்த பிரபலங்கள
எண்கணிதத்தின் தந்தை கீரோ
: 01.01.1870
சத்ரபதி சிவாஜி  
: 10.04.1627
விமான கண்டுபிடிப்பாளர் ஆர்வில் ரைட்
: 19.08.1905
நீராவி இயந்திரத்தைத் தந்;த ஜேம்ஸ் வாட்
: 19.01.1736
லெனின்
: 10.04.1870
நடிகர் என்.டி.ராமராவ்
: 28.05.1922
பில்கிளிண்டன்
: 19.08.1946
மைக்கேல் ஜாக்சன்
: 01.09.1959
இளவரசி டயானா
: 01.07.1961
தியாகராஜ பாகவதர்
: 19.05.1890
ஜெயப்பிரகாஷ் நாராயண்
: 10.10.1902


நீங்கள் இரண்டாம் எண்ணில் பிறந்தவரா?


2,11,20,29 தேதிகளில் பிறந்த இவர்களது எண்ணான 2இன் அதிபதி சந்திரன்.

இவர்களின் இயல்பு எப்படி இருக்கும் என்பதைப் பார்க்கலாமா?

வீட்டைப் பூட்டிவிட்டு வெகுதூரம் சென்றபின் மீண்டும் வந்து பூட்டை இழுத்துப் பார்க்கும் அளவுக்கு சந்தேக குணமுடையவர்கள். அன்பு, அடக்கம், பணிவு, பொறுமை, சகிப்புத்தன்மை என்பவற்றின் பிரதிநிதியாக இவர் இருப்பார். மனம் போன போக்கிலே வாழ்ந்தால் என்ன என எண்ணக்கூடியவர்கள். ஆனாலும், மக்களால் வெகுவாகப் போற்றப்படுவர். அனைவரை யும் அன்பு எனும் ஆயுதத்தால் அடக்கி விடுவர்.

உலகம் உருண்டை என்று யாராவது சொன்னால், ஆமாம் அது உண்மைதான் என்பதோடு விடுவதில்லை. அதற்கு மேல் என்ன உள்ளது, வெற்றிடமாக இருந்தால் அது எவ்வளவு தூரம் உள்ளது? என்றெல்லாம் ஆராய்ச்சி செய்யும் இயல்பினர்;. கற்பனை வளம் மிகுந்த கருத்துக் கருவூலங்கள். இவர்களா இந்தக் காரியத்தைச் செய்தார்கள்? என பிரமிக்கவைக்கும் அளவுக்கு கடினமான செயல்களையும் சாதாரணமாகச் செய்து விடுவர். கற்பனையில் கோட்டை கட்டி ஒரு அரசாங்கமே நடத்திடுவர்.

இரவு எவ்வளவு நேரமானாலும் சரி. சொந்த வீட்டிற்கு வந்தால்தான் இவர்களுக்கு நிம்மதி. இறைநம்பிக்கை மிக அதிகம். கண்கள் காந்தசக்தியுடையவை. தியானம், சூட்சுமம். ககனமார்க்கம் என்று பலருக்கும் எட்டாத சமாச்சாரங்களில் ஈடுபடுவர். ஏதேனும் இறை நாமங்களை உச்சரித்துக்கொண்டே இருப்பர். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கமாட்டார்கள். ஒரு புள்ளி கிடைத்தால் போதும். ஒரு பெரிய கோலமே போட்டுவிடுவதில் ஜித்தர்கள். இந்த எண்ணில் பிறந்த நிறைய கலைஞர்களை உலகத் திரையுலகில் காணலாம்.

பிறருக்கு எப்போதும் ஏதேனும் கருத்துகளை போதித்துக்கொண்டேயிருப்பர். பெரிய திட்டங்களைச் செயல்படுத்தும்போது 7, 1ஆம் தேதிகளில் பிறந்தவர்களுடன் கூட்டு வைத்துக்கொள்வது சிறப்பாகும். மனோதிடம் குறைந்திருந்தாலும், மகோன்னதமான, செயற்கரிய காரியங்களைச் செய்து, பேரும் புகழும் பெறுவர். இளம்பராயத்தில் அடையாளம் தெரியாமல் இருப்பவர்கள் கூட மத்திம வயதில் தேசப் புகழ்பெறுவர். சினிமா, இசை, வாதம், காவியம், ஓவியம், பத்திரிக்கைகளுக்கு புதுமையான செய்தி திரட்டுவது, ஆவி, மந்திரம், தந்திரம், மாயாஜாலம் போன்றவற்றில் ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவர்.

அவ்வப்போது அழையாவிருந்தாளியாக ஜலதோஷம், தும்மல், இருமல், தலைவலி போன்ற நீர் சம்பந்தமான நண்பர்கள் வந்து செல்வர். அடுத்தவர் மனதை அறிவதில் சமர்த்தர்கள். நல்ல துணை, வீடு, நிலம், வாகனம், பொருளாதார ஏற்றம் படிப்படியாக வந்து சேரும்.

இவர்களுக்கு எதிரிகளே இல்லை எனலாம். 9ஆம் எண்ணில் பிறந்தோர் மட்டும் இவர்களுக்கு ஒத்துழைப்புத் தருவதில்லை. சோம்பேறித்தனம் மட்டுமே இவர்களின் நட்பான எதிரி. எவ்வளவோ திறமைகளைக் கொண்ட இவர்களுக்கு யாரேனும் ஒருவர் தூண்டுகோலாக இருப்பது வாழ்வில் உயர்ச்சியைக் கூட்டும். நீர்நிலைகள், பசுமையான மரங்களைக் கண்டால் தன்னையே மறந்து விடுவர்.

2 ஆம் எண்ணுக்கு உகந்தவை
நன்மை தரும் எழுத்துக்கள்
: R,K,B,O,Z,A,I,J,Q,Y,U,V,W
நன்மை தரும் எண்கள்
: 2,7,1,6
நன்மை தரும் தேதி
: 27,11,16,20,25,29
நன்மை தரும் நிறம்
: வெள்ளை, சந்தனம்
நன்மை தரும் ரத்தினம்
: முத்து
நன்மை தரும் ஹோரை
: சந்திரன், குரு, சுக்கிரன்
நன்மை தரும் திசை
: வடகிழக்கு
நன்மை தரும் தொழில்
: நீர், விவசாயம், வானியல், எழுதுகருவி, பண்ணை

2ம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்
மகாத்மா காந்தி
: 02.10.1969
தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையா
: 02.10.1908
தாமஸ் ஆல்வா எடிசன்
: 11.02.1847
டைரக்டர் சத்யஜித்ரே
: 02.05.1921
ராஜிவ் காந்தி
: 20.08.1994
லால்பகதூர் சாஸ்திரி
: 02.10.1904
மகாகவி பாரதியார்
: 11.09.1882
காஞ்சிப் பெரியவர்
: 20.05.1894
பாடகி கே.பி சுந்தரம்பாள்
: 11.10.1908


நீங்கள் மூன்றாம் எண்ணில் பிறந்தவரா?

மூன்றாம் எண்காரர்களின் இயல்பு எப்படியிருக்கும் என்பது பற்றிக் காண்போம்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை மீறாத இவர்கள் நாட்டுப்பற்று, தன்னம்பிக்கை, இறைபற்று, மூத்தவரை மதித்தல் போன்றவற்றால் உயர்வடைவர்.  இவர்கள் அரசாங்கத்தின் செல்லப்பிள்ளைகள். ஆலோசனை வழங்குவதில் ஆதவன். பல இடங்களில் இவர்கள் சொல்வதே முடிவாக வரும்.

சிறு வயதிலிருந்தே பல செயற்கரிய காரியங்களை எளிதாகச் செய்து பெயர் பெறுவர். இவர்களது வயதுக்கு மேற்பட்டவர்கள்கூட, இவர்களின் பேச்சில் மயங்கி நண் பர்களாகி விடுவர்.  சாதிப்பவன் போதிப்பதில்லை, போதிப்ப வன் சாதிப்பதில்லை. ஆனால், 3ஆம் எண் பேர்வழிகள் போதிக்கும் கலை தெரியாமலேயே பலரைக் கவர்ந்திழுக்கும் பலே கில்லாடிகளாக இருப்பர்.

மதி நுட்பத்தால் மாட்சிமை பெறும் இவர்களுக்கு உடல் உழைப்பு என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று. இவர்களைப் போன்றே இவர்கள் உடம்பும் மிகவும் மென்மையானது.  பல உணவு வகைகள் அலர்ஜி என்ற சமாச்சாரத்தை இழுத் துக்கொண்டு வந்துவிடும். உணவுக் கட்டுப்பாடு அவசியம். எவர் பணமாவது இவர்கள் கையில் இருந்துகொண்டே இருக்கும். பொன் ஆபரணங்களை அதிகம் விரும்புவர். மத நம்பிக்கை அதிகம். தன் சமாச்சாரங்களை பிறரிடம் சொல்ல மாட்டார்கள். பொதுக் காரியங்களை நிறைய எடுத்துச் செயல்படும் இவர்களுக்கு இதிகாசங்கள், புராணங்கள் இனிக்கும். இவர்களின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளவென்றே பெரும் கூட்டம் உண்டு. கௌரவத்தை எதிர்பார்க்கும் இவர்களுக்கு மஞ்சள் ஆடை அதிகம் பிடிக்கும். மற்றையோர் இவர்களுக்கு பணிந்து நடக்க விரும்புவர். பிறர் துன்பங்களை தன்னுடையது போல நினைத்துக் கலங்குவர்.

காமனின் கண்பார்வை போல பார்வையில் வசீகரம் உண்டு. இருப்பினும் முழு பிரம்மச்சாரிபோல் ஆச்சார புருஷர்களாக இருப்பர். புகழுக்காகவும், உயர்வுக்காகவும் மனம் அலைபாயும். இவர்களுக்கு இறையருள் அதிகமிருப்பதால் நேர்மையாளர்களாக நடந்தால் வாழ்வில் உன்னதமான உயர்வுக்கு வழி தரும்.

3ஆம் எண்ணுக்கு உகந்தவை:
நன்மை தரும் முதல் எழுத்துக்கள்
: C,G,L,S,A,I,J,Q,Y
நன்மை தரும் தேதிகள்
: 1,3,9,10,12,18,19,21,27,28,30
நன்மை தரும் கிழமை
: வியாழன், ஞாயிறு, செவ்வாய்
நன்மை தரும் நிறம்
: மஞ்சள், இளம் சிவப்பு
நன்மை தரும் ஹோரை
: குரு
நன்மை தரும் திசை
: கிழக்கு
நன்மை தரும் தொழில்
: கல்வி, தரகு, ஆலோசனை, மருத்துவம்,  
  அரசியல், ராணுவம், வங்கி.

3ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:
ஜெகதீஷ் சந்திரபோஸ்
: 30.11.1863
சர்.சி.வி.ராமன்
: 12.01.1879
சுவாமி விவேகானந்தர்
: 12.1.1863
அலெக்சாண்டர் கிரகாம்பெல்
: 3.3.1847
வீரபாண்டிய கட்டபொம்மன்
: 3.1.1760
பகவான் ரமணர்
: 30.12.1879
ஞானி சுத்தானந்தபாரதி
: 12.5.1897
ஹென்றி போர்டு (போர்டு கார் அதிபர்)
: 12.12.1950
திப்பு சுல்தான்
: 21.11.1750
பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
: 30.10.1908

நீங்கள் 4 ஆம் எண்ணில் பிறந்தவர்களா?

4,13,22,31
ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் இயல்புகள் விசித்திரமானவை.

மனதில் தோன்றியதை அப்படியே வெளியே சொல்லிவிடுவர். இவர்களிடம் ரகசியம் எதையும் சொல்லாதிருப்பது நல்லது. ஏனெனில், அந்த ரகசியத்தை அப்படியே சம்பந்தப்பட்டவர்களிடம் கூடச் சொல்லிவிடுவார்கள். தனது கருத்துக்களைத் தைரியமாக வெளியில் சொல்வார்கள். அறிவியலில் விருப்பம் அதிகம். அண்டவெளி, ஜோதிட சாஸ்திரம், மத சம்பிரதாயங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை பிறரிடம் சொல்வதில் ஆர்வமுள்ளவர்கள்.

சுற்றித் திரிவதில் சுகம் காண்பவர்கள். நிறுவனங்களில் விற்பனைப் பிரதிநிதிகளாக இவர்களைப் பணியமர்த்தினால் விருப்பத்துடன் அப்பணியை ஏற்று நிறுவன வளர்ச்சிக்குக் காரணமாக இருப்பார்கள். தன்னம்பிக்கை மிகுதியாக இருந்தாலும், சில நேரங்களில் தங்களுக்கு ஏற்படும் சிரமங்களால் மனமுடைந்துபோவர். இவர்களின் மிடுக்கான நடை, உடை, பாவனை ஆகியவை மிரட்டுவது போல் இருந்தாலும், குழந்தை மனதுடையவர்களாகவே இருப்பர்.

சட்டையை மாற்றுவதுபோல் அடிக்கடி தொழில்களை மாற்றிக் கொண்டேயிருப்பர். அதேநேரம், எந்த நிறுவனத்தில் வேலை செய்தாலும் நிறுவனத் தலைவரே இவர்தானோ என்று நினைக்கும் அளவிற்கு ஈடுபாட்டுடன் உழைப்பர். இவரின் புரட்சிகரமான பேச்சினால் ஈர்க்கப்பட்ட பலர் இவர்களுக்கு நண்பர்களாகி விடுவர்.

இல்லாதவர்களுக்கு உதவுவதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம். எதையும் கேள்வி ஞானத்தால் ஈர்த்து, அனைத்தும் தெரிந்தவர்களைப்போல் வெளிப்பாடு செய்துகொள்வது இவர்கள் மிக முக்கியமான குணாதிசயம். வெற்றியை மட்டுமே குறிக்கோளாக எடுத்துக்கொள்வதால் இடையில் வரும் வேகத் தடையானவற்றைக் கண்டுகொள்வதே இல்லை. துன்பங்களைக் கடந்து எப்படியும் வென்று விடுவார்கள்.

ஒரு இடத்தில் ஒரு மணிநேரம் இவர்களைப் பேசாமல் இருக்க வைப்பவர்களுக்கு; ஆயிரம் ரூபாய் பரிசு தருவதாகத் தைரியமாக அறிவிக்கலாம். இவர்களது பேச்சை நிறுத்துவது அவ்வளவு கடினம். எழுத்தாற்றல் மிக்க இவர்கள் பிறர் எழுத்துக்களில் குற்றம் கண்டுபிடிப்பதில் வல்லவர். சீர்;திருத்தவாதியான இவர்கள் அரசாங்கத்திற்கே சில சமயங்களில் சிறப்பான யோசனைகள் சொல்லி அசத்திவிடுவார்கள்.

பேசும்போது குரலை ஏற்றி, இறக்கி கையை ஆட்டிக்கொண்டே பேசுவதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துக்கொள்வர். மற்றவர்களி;;ன விமர்சனத்தைக் கொஞ்சங்கூடக் கண்டுகொள்ளாத இவர்கள், தன் கருத்துக்களை சபையில் ஏற்றும் வரை சளைக்க மாட்டார்கள். உலகம் உருண்டைதான் என்று சொன்னால் இல்லை... அது சதுர வடிவம் உடையது என விதண்டாவாதமும் பேசுவார்கள். தான் சொன்னதற்கேற்ப உலகப்படத்தையே மாற்ற முயற்சிப்பார்கள். இந்த விதண்டாவாத குணத்தை மட்டும் மாற்றி, உருப்படியான விஷயங்களில் தன் கருத்தைச் செலுத்தினால் இவர்களின் முன்னேற்றத்தை யாராலும் தடுக்க இயலாது. இவர்கள் திட்டம்போட்டு வைத்திருக்கும் சில அருமையான விஷயங்களை, வெளியில் முந்திரிக்கொட்டை மாதிரி சொல்லி விடுவார்கள். இதைக் கேட்டுக்கொண்டிருக்கும் இன்னொரு புத்திசாலி, அதை செயலுக்குக் கொண்டு வந்து பணம் சம்பாதித்து விடுவார்.

4ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:
ராமானுஜர்
: 04.04.1917
கணிதமேதை ராமானுஜம்
: 22.12.1887
திருப்பூர் குமரன்
: 04.10.1904
சர்தார் வல்லபாய் படேல்
: 31.10.1875
தாதாபாய் நௌரோஜி
: 04.09.1825
ராஜாராம் மோகன்ராய்
: 22.05.1772

ஐந்தாம் எண்ணில் பிறந்தவரா நீங்கள்?
5.14.23 தேதிகளில் பிறந்தவர்கள் ஐந்தாம் எண்ணுக்கு உரியவர்கள். ஆற்றல், அதிக உழைப்பு மனித நேயம், எதையும் சாதிக்கும் வல்லமை கொண்ட இவர்கள் கலை நயமிக்கவர்கள். எதிலும் ஒரு வேகத்தை காட்டுவர். தங்களின் உத்வேக செயல்பாட்டிற்கு மற்றவர்கள் ஒத்து வரவில்லையானால் அவர்களை `சோம்பேறி\' என்று வசைபாடவர். இவர்களின் மூளை சாட்டிலைட்டிலிருந்து சக்தி பெற்றது போல் செயல்படும். எதிலும் பரபரப்பாக இயங்குவர். ஏதாவது ஒன்றை கண்டுபிடித்த வண்ணமிருப்பர்.

பஸ்சில் இருந்தாலும் சரி, விமானத்தில் பறந்தாலும் சரி... பக்கத்திலிருப்பவர் இவரது விசிட்டிங்கார்டை கேட்டுப் பெறுமளவிற்கு பழகிவிடுவர். முடியாத சில காரியங்களைக் கூட சாதித்து விடுவேன் என்று குழந்தை போல் சவால் விடுவர். மொத்தத்தில் பிடிவாதம் அதிகம் அடுத்தவரால் செய்ய முடியாத காரியங்களை செய்து கெயர் பெற வேண்டும் என விரும்புவர். இவர்களின் இந்த போக்கினால் தான் உலகில் பல கண்டுபிடிப்புகளை நாம் அனுபவிக்கிறோம். ஆனாலும், தங்கள் வெற்றியை சாதாரணமாகவே எடுத்துக் கொள்வார்கள். காதலில் கூட அப்படித்தான்.

ஒரே இடத்தில் இருக்கப் பிடிக்காத இவர்கள் வெளியூர் பயணத்தை அதிகம் விரும்புவர். இயற்கைச் சூழ்நிலைகள் மிகவும் ஈர்க்கும். இவர்களுக்குப் பிடித்தமான உணவு, உடை குணத்தை தெரிந்து கொண்டு அதற்கேற்ப கொடுத்து விட்டால், எதையும் செய்ய தயாராக இருப்பர். மன தைரியமும், வேகமும் நிறைந்த இவர்கள், தோல்வி ஏற்படுவதை வெகு சீக்கிரம் மறந்து அடுத்த காரியத்திற்கு தயாராகி விடுவர்.

ஐம்பெரும் பூதங்கள் இல்லையேல் உலகு இல்லை. பூமியில் இந்த 5ஆம் எண்காரர்கள் இல்லையேல் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இல்லை. துடிப்புடன் செயல்படும் இவர்களுக்கு ஊர் முழுவதும் நண்பர்கள் இருப்பர். எந்தக் கருத்தையும் உடனே வெளியிடும் இவர்கள் தன்னைப் பற்றி எதுவும் தெரிவிக்க மாட்டார்கள்.

ஐந்தாம எண் குழந்தைகளை சிறு பிராயத்திலிருந்தே நல்ல குணமுள்ள நண்பர்களுடன் பழகச் செய்ய வேண்டும். எதையும் வெகு சீக்கிரம் கிரகித்துக் கொள்ளும் இவர்களுக்கு. நல்லதை கிரகிக்க நல்ல நண்பர்கள் வேண்டுமல்லவா?

பெரும்பாலும் காதல் திருமணத்தையே விரும்புவர், எனவே நன்கு ஆலோசித்து துணையை தேர்ந்தெடுப்பது பிற்கால வாழவிற்கு உறுதுணையாக இருக்கும். தொழிலதிபர்கள் தங்கள் நிறுவனத்தில் இவ்வெண்காரர்கள் தகுந்த கல்வித் தரத்துடன் வேலையில் அமர்த்தி விட்டால் அதிபர்களின் பளுவை பாதியாக குறைத்து விடுவர்.

சகல விஷயங்களிலும் அத்துப்படியாக இருக்கும் இவ்வெண்காரர்களை எளிதில் சரணடையச் செய்வது புகழ்ச்சி மட்டுமே, பகல் தூக்கம் பிடிக்காத இவர்கள் `கலைத்துறையில்\' ஜாம்பவான்களாக இருப்பர்.

5
ஆம் எண்ணில் பிறந்தவ பிரபலங்கள்
வள்ளலார் - 05.10.1823
ஷ்ரீ தியாகராஜ சுவாமிகள் (கீர்த்தனை கர்த்தா) - 05.05.1759
வ.உ. சிதம்பரம் பிள்ளை - 05.09.1872
ஜவகர்லால் நேரு - 14.11. 1889
டாக்டர் ராதாகிருஷ்ணன் (முன்னாள் ஜனாதிபதி) - 14.11.1889
அம்பேத்கர் - 14.04.1891
சுபாஷ் சந்திரபோஸ் - 23.01.1897
திலகர் - 23.07.1856
வில்லியம் ஷேக்ஸ்யிர் - 24.04.1564

நீங்கள் ஆறாம் எண்ணில் பிறந்தவர்களா?

இயற்கையின் இன்ப ரகசியங்களை இனிமையாக வாழ்வில் ரசித்து அனுபவிக்கும் இவர்கள் நல்ல பண்பும் தெய்வீகமும், தனித்துவமும், அழகு சாதனங்களில் நாட்டமும், சுகத்தை அனுபவிப்பதிலும், பிறரைக் கவர்வதிலும் வல்லவர்கள். கலைத்துறையில் மிகுந்த நாட்டமுடையவர்கள். சினிமா, தொலைக்காட்சித் துறைகளில் இவர்களின் பங்கு பெரும்பான்மையானது. புதுப்புது வகைகளில் வடிவமைப்புச் செய்து ஆடை, ஆபரணத்துறையில் பெரும் பெயர் பெறுவர்.

எந்தக் காரியத்தை எடுத்தாலும் முடிக்காமல் விடமாட்டார்கள். இவர்களிடம் பணப் புழக்கம் அதிகமாக இருக்கும். நண்பர்களுக்கு மிக அதிகமாகவே செலவிடுவர். நட்சத்திர ஓட்டல்களில் ஜமாய்ப்பவர்கள் இவர்கள்தான். இயற்கையின் மேல் மிகுந்த நாட்டமுடைய இவர்கள் குளிர்ச்சியான இடங்களில் அதிகமான நேரத்தைக் கழிப்பர்.

எதற்கும் அஞ்சாத இவர்கள் கண்ணாடியில் அடிக்கடி தன் முகத்தைப் பார்த்து, இதைவிட அழகாக இருந்திருக்கலாமோ என்று வருத்தப்படுவர். அடிக்கடி தலைவாரிக் கொள்வர். ஓரிடத்திலிருந்து வேறிடத்திற்குச் சென்றால் கையோடு அழகுச் சாதனங்களை எடுத்துச் சென்று காரிலிருந்து இறங்குமுன் ஒப்பனை போட்டுக்கொண்டு தன்னை அழகுள்ளவராகக் காட்டிக்கொள்வர். காதல், களியாட்டங்களில் அதிக ஈடுபாடுள்ள இவர்கள் பெண்களால் வாழ்வில் நல்ல மாற்றங்களைச் சந்திப்பர். மிகுந்த யோசனைக்குப் பின்பே காரியங்களில் இறங்குவர்.

இவர்கள் பூலோக வாழ்வே சிறந்தது என்றும் இதில்தான் அனுபவிக்க ஏராளமான விஷயங்கள் உண்டு என்றும் நினைப்பர். இதுபோல் வாழ்வை நன்கு அனுபவிப்பவர்களும் இவர்கள்தான். மகான்கள் வாழ்வே மாயம் என்பர். 6ஆம் எண்ணினரோ வாழ்வே யோகம் என்பர். இவர்கள் நினைப்பதுதான் சரி என்று சொல்வர். அதுதான் நடந்தாக வேண்டும் என்று பிடிவாதமாக இருப்பர். இதனால் இவர்கள் தங்களுக்கு அறிவுரை சொல்ல யாராவது வந்தால் சிரித்துக் கொண்டே கேட்டுக்கொள்வர். ஆனால் இவர்கள் என்ன நினைத்தார்களோ, அதை நடத்திவிட்டு, புத்திமதி சொல்லியவர்களையும் சமாளித்து விடுவர்.

பணப்புழக்கம், செல்வாக்கு, வசீகரமான தோற்றம், காவியங்களில் விருப்பம், சினிமாத் துறையில் நுழைந்தால் அதிலும் சிறப்பு என இவர்களிடம் அனுகூலங்கள் அதிகம். ஆபரணங்களை அணிவதிலும் புதுப்புது ஆடைகளை உடுத்துவதிலும் விருப்பம் கொண்டவர்கள். புகழுக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் எதையும் செய்யும் திறமை உண்டு. பிறர் செய்த உதவிகளை மனதில் வைத்து அவர்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் குறைவே. இதனால், அவர்களது சாபத்துக்கு உட்பட நேரிடலாம். உலகம் அமைதியுடன் இருக்க வேண்டும் என நினைக்கும் இவர்கள் பிறர் துன்பம் தாங்க மாட்டார்கள். இவர்கள் அடிக்கடி நீர்;, சுவாசம் சம்பந்தமான நோய்களுக்கு உட்படலாம். எனவே கவனம் தேவை. திருமணத்தை தாங்களாகவே பெற்றோர் சம்மதமில்லாமல் நடத்திக்கொள்ளும் இவர்கள் சரியான ஜோடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையேல் வாழ்வு முழுக்க பல மனக்கசப்புகளைச் சந்தித்தாக வேண்டும. எந்த நல்ல காரியமும் செய்ய நினைக்கும்போது 3ஆம் எண் சம்பந்தப்படாமல் பார்த்துக்கொள்வது நல்லது.


6
ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்
மகான் அரவிந்தர்
: 15.08.1872
அண்ணாத்துரை
: 15.09.1909
காமராஜர்
: 15.07.1903
ஜெயலலிதா
: 24.02.1948


ஆறாம் எண்ணுக்கு உகந்தவை
நன்மை செய்யும் எழுத்து
: U,V,W,R,K,B
நன்மை செய்யும் தேதி
: 2,6,9,11,15,18,20,24,27,29
நன்மை செய்யும் கிழமை
: வெள்ளி, திங்கள், செவ்வாய்
நன்மை செய்யும் நிறம்
: வெள்ளை, இளம் ரோஸ்
நன்மை செய்யும் திசை
: மேற்கு
நன்மை செய்யும் தொழில்
: பெண்கள் விரும்பும் தொழில்கள், சினிமா, புடைவை
  எழுதுகருவி, நகைக்கடை, வீடு விற்பது
  பிளாஸ்டிக் ஏற்றுமதி, இறக்குமதி


நீங்கள் 7ஆம் எண்ணில் பிறந்தவர்களா?

இறைபக்தியும் சர்வ ஞானமும் கல்வியும் நளினமும் நாவில் நல்வார்த்தைகளும் நற்செயலும் இமயம் போன்ற தெய்வீகத் தன்மையும் கூடவே குழப்பங்களுக்கு உட்படுத்திக்கொள்ளும் குணமும் கொண்டவர்கள் ஏழாம் எண்காரர்கள். யாரேனும் அறிவுரை சொன்னால் இக்காலத்தில் கேட்பதற்கு ஒருவருமில்லை. ஆனால், இவ்வெண்காரரிடம் ஆலோசனை கேட்டுப் பிரபலமாகலாம் என்பது இவ்வெண்காரர்களின் சிறப்பம்சம்.

வசீகரமான முகமும் மென்மையான குணமும் கொண்ட இவர்கள், காதல் வலையில் மிக வேகமாகச் சிக்கி, 90 சதவீதம் தோற்றும் போவார்கள். தொட்டாற்சிணுங்கிபோல் அடிக்கடி நாணிக்கோணிக்கொள்வர். இவர்களுக்கு நண்பர்கள் மிகக் குறைவு. நேர்த்தியான ஆடை, அணிகலன்கள் மிகவும் பிடிக்கும்.

புகையிரத நிலையங்களுக்கு அருகில் வாழ்வோருக்கு, ஏதாவது ஒரு புகையிரதம் தாமதம் என்றாலும் அது கவிழ்ந்திருக்குமோ, ஏதாவது பிரச்சினையோ என்று குழம்புவார்கள். அதுபோலத் தம்மைக் குழப்பிக்கொண்டால்தான் இவர்களுக்கு நிம்மதியே. இவர்களுக்கு வரும் துன்பங்களை மனதிற்குள்ளேயே வைத்துப் புழுங்குவதால், இரத்த அழுத்த நோய்க்கு மிக இலகுவாக ஆட்படுவர்.

பல நேரங்களில் மாபெரும் வெற்றிகளை மிகச் சாதாரணமாகப் பெற்று விடுவர். அதேநேரம், வெற்றி தேடிவரும் என்ற அதீத நம்பிக்கையில், கோடிகளைக் கைவிட்ட லட்சாதிபதிகளும் இவ்வெண்காரர்களுக்குள் அடக்கம். மதத்தின் பேரில் அதிகப் பற்றிருக்கும். பிறருக்குத் துன்பம் தரமாட்டார்கள். மனம் ஞான நிலையைத் தேடி அலையும்.

நல்ல நேரத்தில் பிறந்த இந்த எண்ணினர், தமது 25ஆம் வயதிலிருந்து அதிர்ஷ்டத்தினால் முன்னேறுவர். பின்னாளில் நடக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே தெளிவாக எடுத்துரைப்பர். போதனை, குறிசொல்வது, பொருள் வரவழைத்தல், யாருக்கும் புலப்படாத விடயங்களை ஆராய்வது போன்றவற்றால் பிறரை எளிதில் கவர்வர்.

அமைதியும் ஈகைக்குணமும் மனோபலமும் நாட்டுப்பற்றும் உடைய இவர்கள், சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். புலனடக்கம் உடையவர்கள். அடிக்கடி தூரதேசப் பயணம் மேற்கொள்வர். பொருளாதார ரீதியாக அதிகக் கஷ்டப்படுவதில்லை. அடக்கமும் ஆன்மீக ஈடுபாடும் கொண்ட தர்மத்தின் தலைவனான இவர்களுக்குப் பெரியோர் ஆசியும் கடவுளின் கருணையும் உண்டு.

ஏழாம் எண்ணுக்கு உகந்தவை
நன்மை தரும் எழுத்துக்கள்
: O,Z,R,K,B,A,I,J,Q,U,V,W
நன்மை தரும் திகதிகள்
: 1, 2, 6, 7, 10, 11, 15, 16, 19, 20, 24, 25, 28, 29
நன்மை தரும் கிழமைகள்
: ஞாயிறு, திங்கள், வெள்ளி
நன்மை தரும் நிறங்கள்
: வெள்ளை, இளஞ்சிவப்பு
நன்மை தரும் திசைகள்
: கிழக்கு, மேற்கு
நன்மை தரும் தொழில்கள்
: இலத்திரனியல், பூஜைப் பொருட்கள், ஏற்றுமதி
  சினிமா, அரசியல், ஆன்மிகம், சேவை நிறுவனம்
  கட்டுமானம், சங்கீதம், அச்சகம், எழுத்துத்துறை
  நீதித்துறை, மருத்துவம்

7ஆம் எண்ணில் பிறந்த பிரபலங்கள்:
இயேசுநாதர்
: டிசம்பர் 25
கிருபானந்த வாரியார்
: 25.08.1906
எம்.எஸ்.சுப்புலட்சுமி
: 16.09.1916
வாஜ்பாய்
: 25.12.1924
சார்லி சாப்ளின்
: 16.04.1889


நீங்கள் எட்டாம் எண்ணில் பிறந்தவர்களா?


சமுதாயம் எட்டு என்றாலே ஒதுங்குகிறது என்று ஆதங்கப்படும் எட்டாம் எண்ணில் பிறந்தவர்களே!
இந்த எண்ணில் பிறந்த எம்.ஜி.ஆர். பாரத ரத்னா விருது பெற்றவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தன் சுயமரியாதைக் கருத்துகளால் மக்களைச் சிந்திக்க வைத்த ஈ.வெ.ராமசாமி எட்டாம் எண்காரர்தான். தொழிலதிபர் டாடாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். இவர்களைப் போலவே பல பிரபலங்கள் எட்டாம் எண்ணில் பிறந்திருக்கிறார்கள்.

எட்டாம் எண்காரர்கள் நற்குணம் உடையவர்கள். பிறருக்காக உழைக்கும் உத்தமசீலர்கள். ஆனால் நீங்கள் தோல்வியைத்தான் சந்தித்து வருகிறாமோ என நினைத்து அஞ்சுவீர்கள். இவ்வெண்ணிற்குள் சூரியக்கதிர்கள் நுழைய முடியாததால், பச்சையம் பெற முடியாத இலை போலவும், தாமரை இலைத் தண்ணீர் போலவும், வாழ்க்கைப் பயணத்தை ஓட்டிக்கொண்டிருப்பீர்கள். இந்த எண்ணினர் நியூமராலஜியில் அதிக நாட்டமுள்ளவர்களாக இருப்பார்கள். சில அறிவுஜீவிகள் பாண்டித்யமே பெற்று விடுவார்கள். அது மட்டுமல்ல. இதன்மூலம் தங்களுக்கு ஒரு தீர்வைப் பெற்று வாழ்வில் உடனடியாக உயர்ந்துவிடுவர்.  எனவே, உங்களுக்கு கவலையே வேண்டாம்.

உடல்நிலை குறித்து சற்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சிறிய நோய் என்றாலும் உரிய சிகிச்சையை உடனடியாக எடுத்துக்கொள்வது நல்லது.  அடுத்தவருக்கு உதவும் மனப்பாங்காலும், மதிநுட்பத்தாலும் வாழ்வில் வெற்றிமேல் வெற்றி பெறுவது உறுதி. எண்ணற்றவர்கள் போராடி அடையும் வாழ்வின் உச்சக்கட்ட வளர்ச்சியை, இவர்கள் எளிதில் எட்டிவிடுவர். எந்த இலக்கையும், மனோதிடத்துடன் நோக்கிப் பயணிக்கும் இவர்களுக்கு நேர்மறை நிகழ்வுகள்தான் ஏராளமாக நடக்கும்.

8
ஆம் எண்காரர்கள் கண்டவர்களிடமும் ஆலோசனை கேட்காதீர்கள். சுயமாக சிந்தித்து முன்னேறும் வலிமை உங்களிடம் உள்ளது.

எட்டாம் எண்காரர்களுக்கு உகந்தவை
நன்மை தரும் எழுத்து
: E,H,N,X
நன்மை தரும் தேதி
: 5,14,23
நன்மை தரும் கிழமை
: புதன், சனி
நன்மை தரும் நிறம்
: சாம்பல், பச்சை
நன்மை தரும் திசை
: வடக்கு
நன்மை தரும் தொழில்
: எண்ணெய், இரும்பு, கெமிக்கல், கிரானைட், வக்கீல், கார்

எட்டில் பிறந்த பிரபலங்கள்
ஈ.வெ.ராமசாமி
: 17.9.1879
எம்.ஜி.ஆர்.
: 17.1.1917
எலிசபெத் டெய்லர்
: 17.1.1901
குருநானக்
: 8.11.1470
ஜார்ஜ் பெர்னாட்ஷா
: 26.7.1856

நீங்கள் ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களா?

9, 18, 27 தேதியில் பிறந்தவர்களது எண்தான் கடைசியில் இருக்கிறதே ஒழிய, இவர்கள் எல்லாவற்றிலும் முதலிடத்தில்தான். எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற கொள்கை கொண்டிருப்பர். அறிவாற்றல் மிக்கவர்கள். இவர்களின் பயமுறுத்தும் பேச்சையும், படாடோபமான செயல்களையும், வேகமான முடிவுகளையும், எதிலும் புகுந்து கலக்கும் ஆற்றலையும் பார்த்தால் இவர்களுக்கு மட்டும் எப்படி இந்த வல்லமை வந்தது என நினைக்கத் தோன்றும்.

இதற்கு ஒரு காரணம் உண்டு. பூமிக்கு அருகில் இருக்கும் கிரகம் செவ்வாய். இதற்கு முழுமையான ஆற்றலை அனலாகத் தருபவர் சூரியன். 9ஆம் எண்ணுக்கு சூரியனும், செவ்வாயும் அதிபதி. இதனால் அறிவில் சூரியன் போன்று பிரகாசிப்பர்.

கடகடவென சிரித்துப் பேசி, வேலைகளை எளிதில் முடித்துக் கொள்வர். சில நேரங்களில் மிகக் கடுமையாக இருந்தும் வேலையை முடிப்பர். முதன்மைப் பதவிகளை மட்டுமே விரும்புவர். இவர்களை பத்தோடு பதினொன்றாக வேலைக்கு சேர்த்துவிட்டால், அரைமணி நேரத்திலேயே சேர்த்து விட்டவர் வீடு திரும்பும் முன் இவர்கள் வீடு திரும்பிவிடுவர். கூலி வேலைக்குப் போனால் கூட அங்கே சங்கம் அமைத்துத் தலைவரான பிறகே தன் வேலையைப் பார்ப்பார். இவர்களையும் அடக்க ஒரு எண்ணினர் இருக்கிறார்கள். அவர்கள்தான் மூன்றாம் எண்காரர்கள். ஒன்பதாம் எண்காரர்களுக்கு மூன்றாம் எண்ணில் பிறந்த மனைவி அமைந்தால், மனைவி சொல்லே மந்திரம் என்பதற்கு ஒப்ப பெண்டாட்டிதாசர்களாக இருப்பர். ஆயினும் அவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றமே அடைவர்.

அதீத சுறுசுறுப்பும், வேகமும், துணிவும் கொண்ட இவர்களை உணவு வகைகளைக் காட்டியே மயக்கிவிடலாம். அவ்வளவு ருசித்து உண்பர். மாமிச உணவு மிகவும் பிடிக்கும். ஆனால் உணவுக் கட்டுப்பாடு அவசியம் தேவை. இல்லையேல் உஷ்ண நோயினால் பாதிப்பு வரலாம்.

நீதி, நேர்மை, ஒழுங்கு, கட்டுப்பாட்டை விரும்பும் இவர்கள் மற்றவர்களும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அடக்குமுறை காட்டுவர். இவ்வாறு நடக்கவில்லையானால் குடும்பத்தினாரானாலும் குதறிவிடுவர்.

மிடுக்கான தோற்றம் கொண்ட இவர்கள் வாகனங்களை வேகமாகச் செலுத்துவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர்கள். சாதாரணமாக வாகனத்தைச் செலுத்துவதே பந்தயம் மாதிரித்தான் இருக்கும். வாகனம் செலுத்தும்போது கவனம் தேவை. திறமையையும், உழைப்பையும் மூலதனமாகக் கொண்ட இவர்கள், சோம்பேறிகளைக் கண்டால் வெறுத்து ஒதுக்குவார்கள். காவல்துறையிலும், ராணுவத்திலும், உணவுக் கூடங்களிலும், பாதுகாப்புச் சேவைகளிலும் இவ்வெண்ணில் பிறந்தவர்கள் அதிகமாக ஈடுபடுவர்.

அடுத்தவர் மெச்சும்படி வாழும் இவர்கள் அரசியலில் ஈடுபட்டாலும் ஜொலிப்பர். அடுத்தவர்கள், இவர்களிடம் ஆலாசனை கேட்குமளவிற்குப் பல இடங்களில் பஞ்சாயத்தாராகவும்;, தைரியபுருஷர்களாகவும் இருப்பார்கள்.

எந்தப் பதவியிலிருந்தாலும் முதன்மைப் பதவியில் இருப்பர். பல நாடுகள், இடங்களுக்கு செல்வதில் பிரியப்படுவர். தன் சுதந்திரத்திற்குப் பங்கம் ஏற்பட்டால் ஒரு பெரும் பிரளயத்தையே நடத்திவிடுவர். ரத்த ஓட்டத்தில் ஏற்ற இறக்கமுpள்ள இவர்களுக்கு காய்ச்சல் உள்ளதுபோல் உடம்பு எப்பொழுதும் உஷ்ணமாக இருக்கும். அசாத்திய மூளைத்திறன் கொண்ட இவர்கள் கோபத்தை விட்டுவிட்டால் ஊரையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரலாம்.

ஒன்பதாம் எண்ணுக்கு உகந்தவை:
நன்மை தரும் முதல் எழுத்து
: C,G,L,S,U,V,W,A,J,Q,Y
நன்மை தரும் தேதி
: 1,3,6,9,10,12,15,18,19,21,24,27,30
நன்மை தரும் கிழமை
: வியாழன், ஞாயிறு, செவ்வாய்
நன்மை தரும் நிறம்
: சிவப்பு, மஞ்சள்
நன்மை தரும் திசை
: தெற்கு, வடகிழக்கு
நன்மை தரும் தொழில்
: நெருப்பு சம்பந்தமானவை, இரும்பு, ஓட்டல்,
  விவசாயம், கமிஷன், கடல் கடந்த வியாபாரம்,
  பூஜை பொருட்கள், கார் விற்பனை,
  ரியல் எஸ்டேட், காவல், ராணுவம், மருத்துவம்

Unknown

Lorem ipsum dolor sit amet, consectetur adipisicing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Ut enim ad minim veniam, quis nostrud exercitation.

1 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

HI

Letter P is missed out in all the above.

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.