ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

இயற்க்கை சுபரும் இலக்கின சுபரும்

அனைவருக்கும் எனது வணக்கம்.
பலர் லக்கின சுபரையும் இயற்கை சுபரையும் அதேபோல லக்கின பாவரையும் இயற்கை பாவரையும் போட்டு குழப்பிக்கொள்கிறார்கள்... என்னிடம் கேட்கிறார்கள். நானும் நேரமுள்ளபோதேல்லாம் பதில் அளித்து வருகின்றேன். இதுபற்றி ஒரு தெளிவான விளக்க கட்டுரையினை தற்போது பார்ப்போம்...
லக்கின சுபர் என்பது ஒரு லக்கினத்திற்கு ஒரு கிரகம் கேந்திரங்களுக்கோ அல்லது திரிகோணங்களுக்கோ அதிபதியாக வருவதாகும். சில சந்தர்ப்பங்களில் ஒரே கிரகம் ஒரு கேந்திரத்திற்கும் ஒரு திரிகோணத்திற்கும் அதிபதியாகி "லக்கின யோகி" எனும் அதிக சுபத்துவம் வாய்ந்த கிரகமாக இருக்கும். உதாரணமாக கடக லக்கினத்திற்கு செவ்வாய் பகவானானவர் திரிகோணமான 5ம் வீட்டிற்கும் கேந்திரமான 10ம் வீட்டிற்கும் அதிபதியாக வருவார். எனவே கடக லக்கினத்திற்கு செவ்வாய் "லக்கின யோகி" என்ற நிலையினை பெறுவார்.
லக்கின பாவி என்போர் லக்கினப்படி 3 / 6 / 8 /12ம் வீடுகளுக்கு அதிபதியாக வரும் கிரகங்களாகும். இவை தீய பலன்களையே செய்யும் என்ற பொதுவான விதி இருந்தாலும் அவரவர் ஜாதக அடிப்படியில் மிகவும் அற்புத பலன்களையும் தரவல்லவை... அதனை இங்கு பதிந்து உங்களை குழப்ப விரும்பாமையால் அதுபற்றி விரிவாக இன்னொரு நாளில் பார்ப்போம்...
இயற்கை சுபர் என்போர் குரு பகவான், சுக்கிரன் பகவான், தனித்த புதபகவான்/ சுவருடன் இணைந்த புதபகவான், வளர்பிறை சந்திர பகவான்.
இயற்கை பாவர் என்போர் சனிபகவான், செவ்வாய் பகவான், பாவருடன் இணைந்த புதபகவான், தேய்பிறை சந்திர பகவான்.
( குறிப்பு - துல்லியமாக திதி அடிப்படையில் முடிவு செய்யப்படின் வளர்பிறை அஷ்டமி முதல், தேய்பிறை சப்தமி வரை சுபசந்திரன். இதுவே தேய்பிறை அஷ்டமி முதல், வளர்பிறை சப்தமி வரை அசுபசந்திரன்.
அதாவது வளர்பிறை சந்திரனின் எப்போதும் சுபராக இருப்பதில்லை. அதுபோல தேய்பிறை சந்திரனின் எப்போதும் அசுபராக இருப்பதில்லை. )

தற்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரக்கூடும். அதாவது ஒரு கிரகம் கேந்திரஸ்தானத்திற்கும்/ திரிகோணஸ்தானத்திற்கும் ஒரு அசுப(மறைவு) ஸ்தானத்திற்கும் அதிபதியாக வந்தால் அந்த கிரகம் லக்கின சுபரா அல்லது லக்கின பாவியா என... அந்த கிரகத்தின் மூலத்திரிகோண ஸ்தானம் எதுவோ; அது அந்த லக்கினத்திற்கு கேந்திர/திரிகோண ஸ்தானமாக வந்தால் அந்த கிரகம் லக்கின சுபர் என்றும் அந்த கிரகத்தின் மூலத்திரிகோண ஸ்தானமானது மறைவு ஸ்தானமாக வந்தால் அந்த கிரகம் லக்கினப்படி பாவர் என்ற அந்தஸ்தினை பெறுகிறது.
உதாணரமாக மேச லக்கினத்திற்கு குருபகவான் திரிகோண ஸ்தானமான 9ம் இடத்திற்கும் மறைவு ஸ்தானமான 12ம் இடத்திற்கும் அதிபதியாக வருகின்றார். மேச லக்கினத்திற்கு 9ம் இடம் தனுசு ஆகவும் 12ம் இடம் மீனமாகவும் அமையும். ஆனால்; குருபகவானின் மூலத்திரிகோண வீடானது தனுசு ஆகும். அந்த தனுசானது திரிகோண ஸ்தானமாக வருகிறது. ஆகவே மேச லக்கினத்திற்கு குரு பகவான் லக்கின சுபர் என்ற நிலையினை பெறுகின்றார்.
இப்பொழுது ஒரு உதாரணம் கொண்டு மேலே நான் சொன்ன கருத்துக்களை ஆராய்வோம். ஒரு பேப்பர், பேனா எடுத்து ராசி சக்கரம் வரைந்து கடக்க லக்கினத்தினை குறித்துக்கொள்ளுங்கள். 5, 10 இடங்களை அடையாளப்படுத்திக்கொள்ளுங்கள். இனி நான் கூறும் தகவல்களை நீங்கள் கீறிய மாதிரி ஜாதகத்துடன் ஒப்பிட்டு விளங்கிக்கொள்ளுங்கள்.
கடக லக்கினத்திற்கு செவ்வாய் பகவானானவர் பஞ்சம ஸ்தானம் எனப்படும் 2ம் திரிகோணமான 5ம் வீட்டிற்கும் கேந்திரங்களிலேயே மிகவும் அதிக பலமுடைய கேந்திரமான 10ம் வீட்டிற்கும் அதிபதியாக வருவார் செவ்வாய் பலமாக சுபர் பார்வையுடன் நல்ல இடத்தில் அமரும்போது தனது திசை புக்தியில் யோக பலன்களை அள்ளிக்கொடுப்பார். 5ம் இடத்திற்கு அதிபதியாக வந்தமையால் பூர்வீக சொத்துக்கள், பூர்வீக வீடு, குழந்தைப்பேறு, குழந்தைகளுக்கு நல்ல வாழ்வு, ஜாதகருக்கு அதிர்ஷ்டங்கள், குலதெய்வ அருள், விளையாட்டு துறையால் முன்னேற்ற்றம், போன்ற பலன்களையும் 10மிடமாக கேந்திரத்திற்கு அதிபதியாக வருவதால் புதிய தொழில் அமைப்புக்கள், தொழில் பதவியுயர்வு, ஜாதகருக்கு சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து, நாலுபேர் மரியாதையுடன் நடந்துகொள்ளும் நிலை, புதிய அமைப்புக்களை ஏற்படுத்திக்கொடுப்பார்.
இந்த செவ்வாயானவர் ஒருவேளை தனது மூலத்திரிகோண வீடான மேஷத்திற்கு 6 / 8 / 12 இல் மறைந்து இருக்கும்போது கடக லக்கினத்திற்கு செவ்வாயின் ஒரு அற்புத அமைப்பாக தனது மூலத்திரிகோண வீடான மேஷத்திற்கு 6 / 8 இல் மறைவது பாதிப்பு தராது. ஏனெனில் மேஷத்திற்கு 6 இல் மறைந்து கன்னியில் இருக்கும்போது ஸ்தான அடிப்படையில் சில சிறி சிறு இன்னல்களை கொடுத்தாலும் தனது 8ம் விசேட பார்வையால் மீசத்தினை பார்த்து மேஷத்தினை வலுப்படுத்துவதோடு தானும் தனது மூலத்திரிகோணத்துடன் நேரடியாக தொடர்புகொண்டு பலம் பெறுவதால் தோஷமில்லை. அடுத்து மேஷத்திற்கு 8 இல் மறையும்போது தனது இன்னொரு ஆட்சி வீடான விருச்சிகத்தில் இருப்பதால் ""ஆட்சி பலம் பெறுவதால் தோஷமில்லை. தனது மூலத்திரிகோண வீடான மேஷத்திற்கு 12இல் மறைந்தாலும் திரிகோணமான 5ம் இடத்திற்கு 5 இல் இருப்பதால் நல்ல பலன்களையே வழங்குவார். ஆனாலும் இது மேலே குறிப்பிட்ட பலன்களுக்கு அடுத்தபடியான பலன்களையே வழங்கும் என்பதை கவனிக்குக...
இயற்கை முக்கால் பாவியான செவ்வாய் தான் அமரும் இடத்தினை தனது காரகத்துவம் ஊடாக பாதிப்பர் என்ற அமைப்பின்படி கடக்க லக்கினத்திற்கு 5ம் வீடான விருச்சிகத்தில் அவர் ஆட்சி பெறுவது நன்மையினை சற்று குறைக்கும். ஆனாலும் இது குற்றம் என்று கூறுமளவுக்கு இல்லை. ஏனெனின் தனது சொந்த வீட்டில் ஆட்சி நிலையில் இருக்கின்றார். இருப்பினும் தனது மூலத்திரிகோண வீடான மேஷம் கடக்க லக்கினத்திற்கு பெருமகேந்திரமான 10 இடமாக வருவதால் இங்கு "தசம அங்காரகன்" என்று விசேடப்படுத்தி ஜோதிட நூல்களில் குறிப்பிடப்படட நிலையில் அமர்வது மிகவும் சிறப்பானது. மேலும் இயற்கை பாவியான செவ்வாய் கேந்திரத்தில் அமர்வது நன்மை. அதுமட்டுமல்ல... மேஷத்தில் அமரும் செவ்வாய் தனது லக்கினப்படி 5ம் வீடான இடுவது மிகவும் சிறப்பானதாகும். இயற்க்கை வாவியானாலும் தனது வீடடை தானே பார்ப்பது அந்த வீட்டினை பலப்படுத்தும் என்ற அமைப்பின்படி 5ம் இடம் வலுவாகி நல்ல பலன்களை ஜாதகருக்கு கொடுக்கும். மேலும் பத்தில் இருக்கும் செவ்வாய் 5, 10மிட ஆதிபத்தியம் பெற்று லக்கினத்தை பார்ப்பதால் ஜாதகர் கோபக்காரராகவும் அவசரபுத்திக்காரராகவும் இருந்தாலும் சுய கெளரவம் உடைவர், குல தெய்வ ஆசி உடையவர், அதிர்ஷ்டமானவர் என்று சுப பலன்களே நடைபெறும். இந்த ஒரு அமைப்பினை மட்டும் வைத்தே பதிவினை எழுத்திக்கொண்டே போகலாம்... ஆனால் எனது நேர ஒதுக்கீடு காரணமாக இத்துடன் பதிவினை நிறைவு செய்கிறேன்.

நன்றி, வணக்கம்.
ஜோதிடர் மற்றும் ஜோதிட ஆராச்சியாளர் ஹரிராம் தேஜஸ் B.Sc, I.Tec.

[ பிற்குறிப்பு :- பதிவு புரியவில்லையெனின் மீண்டும் மீண்டும் ஒரு 3-4 தடவையாவது பொறுமையாக படியுங்கள். நேரம் இல்லாத காரணத்தால் நீங்கள் உங்கள் சந்தேகங்களிற்கு பதில் அளிக்க முடியாத நிலை என்பதால் பதிவினை பலமுறை கருத்தூன்றி படித்த பின்னர் ஏற்படும் சந்தேகங்களை மட்டும் கமெண்டில் கேளுங்கள். எனக்கு நேரம் இருக்கும்போது விடை தருகின்றேன்...]

சனி, 27 ஆகஸ்ட், 2016

ஸ்படிக மாலை


பல நுறு  வருடங்களாக பூமிக்கு அடியில்
தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து. அதில் தான் ஸ்படிக மாலை, ஸ்படிக லிங்கம் செய்வார்கள். ஸ்படிகம். சிறுவர் முதல் பெரியவர் வரை. ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதே சங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

தற்போது அனைவரும் ஸ்படிக மாலையினை விரும்பி அணிகின்றனர். ஸ்படிக மாலை அணிவதில் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஸ்படிக மாலையை ஒருநாள் முழுவதும் கன்று ஈன்ற பசுவின் சாணத்தில் மூழ்க வைத்திருந்து, பிறகு தண்ணீர், பால் போன்றவற்றால் சுத்தம் செய்து தகுந்த ஒரு குருவின் மூலம் அணிய வேண்டும். தங்களுக்கென்று குரு இல்லாதவர்கள், கோயிலில் அனுபவம் வாய்ந்த குருக்களிடம் (அர்ச்சகர்) மூலமாக தெய்வ சன்னிதானத்தில் அணிய வேண்டும். இதனால் கிரகங்கள் மூலமாக ஏற்படும் இன்னல்கள் விலகும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். மேலும் பௌர்ணமி அன்று இம்மாலையை அணிவதால் உடலில் சக்தி கூடும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

ஸ்படிக மாலையை இரவில் தூங்கும் போதும், கழிவறை செல்லும் நேரம் தவிர மீதி அணைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டு கொள்ளலாம். முக்கியமாக குளிக்கும் பொழுது. கழுத்தில் ஸ்படிக மலையோடு குளிப்பது நல்லது.

ஸ்படிக மாலையில் மொத்தம் பத்து விதமான Quality இருக்கு. ஸ்படிக மாலையில் கை வைத்தவுடன் ஒரு வித குளிர்ச்சியை உணர்வீர்கள். உணர்ந்தால் அது நல்ல உயர் தரமானது.

ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்ற வர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத் தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும்தான். காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும். காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாக இருப்பதைக் கொண்டு இதை நீங்கள் உணரலாம்.

இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். அந்த தரு ணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்க ளுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.
ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் இணைத்தோ அணியலாம். வீட்டிற்கு ஒரு ஸ்படிகமாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம். இவ்வளவு அற்புத மான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம். ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது ஈர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்யும் போது அதன் சக்தி அப்படியே இருக்கும்.
ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது, மகா மெகரு. இந்த மெகரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின் வாங்க வேண்டும். மகா மெகருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டிலோ வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அதற்கும் அபிஷேகம் மிகவும் முக்கியம். ஸ்படிகத்தை யானை வடிவில் வைக்கும்போது லஷ்மி கடாட்சம் வரும்.

 ஸ்படிக லிங்கத்துக்கு விபூதியால் அபிஷேகம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும். முன்பு சொன்னது போல இதன் நேர்மறையான அதிர்வுகள் நவகிரகங்களின் கெட்ட பலனை பெரிதும் அழிக்கும். ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து தூய மனதோடு சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தை 108 தடவை ஜபிக்க எல்லா பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைக்கும்.பொதுவாகவே மந்திர சித்தி, அதாவது சொல்லும் மந்திரங்களுக்கு முழுமையான பலன் கிட்ட வேண்டுமானால் அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து பய பக்தியுடன் ஜபித்தால் பலன் பல மடங்கு கிட்டும். ஸ்படிக லிங்கத்தின் முன் சிவனை மட்டும்தான் வழிபட வேண்டும் என்றில்லை. உதாரணமாக லட்சுமியின் அருள் வேண்டி லட்சுமி அஷ்டோத்திர மந்திரம் சொல்வோர், அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து ஒன்றுபட்ட சிந்தனையோடு சொன்னால் பலன் பல மடங்கு பெருகி வரும். ஸ்படிகம் என்பது நம் மனதை அப்படியே பிரதிபலிக்கும் தன்மையது. அதனால் அதை வணங்கும்போது தூய்மையான மனதோடு வணங்குதல் அவசியம். தீய எண்ணங்கள், பிறரைக் கெடுக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பிரார்த்தனைகள், அலைபாயும் மனம், தெளிவற்ற சிந்தனை இவற்றோடு வணங்கினால் எதிர்மறையான பலன் ஏற்பட்டுவிடும். அதனால் ஸ்படிகத்தை வணங்கும்போது மிகவும் கவனம் தேவை. ஸ்படிக லிங்கத்தைப் போலவே ஸ்படிக மணி மாலையும் மிகவும் புனிதமானது. விசேஷமானது.ஸ்படிக மணி மாலையை வைத்து மந்திரங்கள் ஜபிப்பவர்களுக்கு பலன் முழுவதுமாகவும், விரைவிலும் கிட்டும். மகாபாரதத்தில் பீஷ்மர் ஸ்படிக மணி மாலை அணிந்து இருந்ததால்தான் அவருக்கு மனத்திண்மையும், தோற்றப் பொலிவும், திடமனதும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்படிகம் நம் மனதில் தன்னம்பிக்கையையும், எதையும் எதிர் கொள்ளும் நெஞ்சுரத்தையும் வழங்கும் தன்மை உடையது. அதனால் நம் தோற்றத்திலும் ஒரு பொலிவு உண்டாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்து விட்டால் வாழ்வில் துன்பங்கள் ஏது? இவ்வளவு அற்புதங்கள் அடங்கிய ஸ்படிகத்தை அனைவரும் உபயோகித்துப் பயன் அடைவீர்களாக.

ஞாயிறு, 31 ஜூலை, 2016

ஆடிமாதமும் குருப்பெயர்ச்சியும்

பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு பகவான் வாக்கிய சித்தாந்தப்படி வரும் துர்முகி வருடம் ஆடி மாதம் 18-ஆம் தேதி, 02-08-2016 செவ்வாய்கிழமை காலை 09.27 (08.37 நாழிகைக்கு ) கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி 02-09-2017 வரை கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யுவுள்ளார். கன்னியில் சஞ்சரிக்கும் குரு அதிசாரமாக துலா ராசியில் 17-01-2017 முதல் 10-03-2017 வரை சஞ்சரிக்க உள்ளார்.
(திருக்கணிதப்படி 11-08-2016 முதல் 11-09-2017 வரை).

கன்னி ராசிக்கு மாறும் குரு வால் அதிகம் ஆதாயம் அடையும் ராசியினர்/ குருபலம் பெறும் ராசியினர் - ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,மகரம்,மீனம்

 ரிசபம் ராசியினருக்கு ராசிக்கு ஐந்தாம் ராசிக்கு குரு வருகிறார்...இது குருபலமாகும்...-எங்கும் எதிலும் வெற்றி,நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்..

சிம்மம் ராசியினருக்கு தன குடும்ப ஸ்தானத்தில் குரு வருகிறார்...கடன் பிரச்சினைகள் தீர்க்கும் வருமானம் அதிகரிக்கும்..

விருச்சிகம் ராசியினருக்கு லாபஸ்தானத்தில் குரு வருகிறார் லாபம் அதிகரிக்கும் வருமானம் உயரும்,.கடன்கள் அடைபடும்...தொழில் சிக்கல் தீரும்.

மகரம் ராசியினருக்கு பாக்யஸ்தானத்தில் குரு வருகிறார் இதுவரை அமையாத பாக்யம் ஒன்று அமையும்...கிடைக்காத ஒன்று இல்லாத ஒன்று கிடைக்கும்...தெய்வ அருள் உண்டாகும்...

மீனம் ராசியினருக்கு அஷ்டம சனி முடிந்த பின்னர் வரும் நல்ல காலம்.7ல் வரும் குரு பகவான் தொழில் சிக்கல்களை நீக்கி உயர்வை கொடுப்பார்..

மேஷம் - எதையுமே உடனே கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து சுப பலன்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 6-வது வீட்டுக்குள் பிரவேசிக்கிறார். சின்னச் சின்ன இழப்புகளும், ஏமாற்றங்களும் இருக்கும் என்றாலும், அதற்காக அஞ்ச வேண்டாம். எந்த ஒரு காரியத்தையும் நன்கு யோசித்துச் செய்தால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்.

ரிஷபம் - எந்தச் சூழலிலும் மற்றவர்களின் தயவில் வாழ விரும்பாதவர்கள் நீங்கள். இதுவரை உங்களின் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் இடத்தில் அமர்ந்து, உங்களைப் பல வகைகளிலும் சிரமப்படுத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்கிறார். இதனால் உங்களுடைய அடிப்படை வசதி வாய்ப்புகள் பெருகும். எதிலும் வெற்றி உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். சேமிக்கத் தொடங்குவீர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மிதுனம் - யதார்த்த நிலையை உணர்ந்து செயல்படுபவர்கள், நீங்கள். இதுவரை உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களை முடக்கி வைத்திருந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 4-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பிரச்னைகளை அறிவுபூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் அணுகுங்கள். சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை அறிவதில் குழப்பம் ஏற்படும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்தும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தின் பொருட்டோ, வீண் சந்தேகத்தாலோ தம்பதிக்கு இடையே பிரிவுகள் ஏற்படலாம்.

கடகம் - உலக நடப்புகளை உன்னிப்பாக கவனிப்பவர்கள், நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பலன்களை அருளிய குருபகவான், இப்போது 3-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் சஷ்டம-பாக்கிய ஸ்தானாதிபதியான குருபகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால், உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வது நல்லது. வேலைகளை முடிப்பதில் இழுபறி நீடிக்கும். தன்னம்பிக்கை குறையும். கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் குறையாது.

சிம்மம் - காரியத்தில் கண்ணாக இருந்து காய் நகர்த்தும் அன்பர்கள் நீங்கள். இதுவரை ஜன்ம குருவாக அமர்ந்து, பல வகைகளிலும் இன்னல்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 2-ம் வீட்டில் அமர்வதால், புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக நிறைவேறும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள்.

கன்னி - கலாரசனை உள்ளவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் இருந்து வீண் விரயங்களையும், பணப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தி வந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்குள் அமர்கிறார். ஜன்ம குரு என்று கலக்கம் கொள்ள வேண்டாம். பொறுப்புகள் அதிகரிக்கத்தான் செய்யும். ஒரே சமயத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய வேண்டி இருக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரக்கூடும். ராசியிலேயே குரு அமர்வதால், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். பணம் எவ்வளவுதான் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். அவ்வப்போது அவநம்பிக்கை வந்து நீங்கும்.

துலாம் - நடுநிலைமை தவறாதவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து கொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றியதுடன், பதவி, அந்தஸ்தையும் தந்த குரு பகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை விரயஸ்தானமான 12-ம் இடத்துக்கு வருகிறார். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். மனக் குழப்பம் அதிகரிக்கும். வீண் கவலைகள் மனதை வாட்டும். வழக்குகளில் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம் - கேள்விக் கணைகள் தொடுப்பதில் வல்லவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு, உங்களைப் பலவகைகளிலும் அலைக்கழித்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், இனி முன்னேற்றம் உண்டாகும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். புகழும் செல்வாக்கும் கூடும். மழலை பாக்கியம் கிடைக்கும்.

தனுசு - வளைந்து கொடுக்கத் தெரியாதவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு புதிய அனுபவங்களைத் தந்து, உங்களை முன்னேற்றப் பாதையில் நடத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். பத்தில் குரு, பதவிக்கு ஆபத்து என்று அச்சம் கொள்ளவேண்டாம். ஓரளவு நன்மையே உண்டாகும். வேலைச் சுமை அதிகரிக்கும். உங்கள் உழைப்பையும் திறமையையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். சிலர் வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டி இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும்.

மகரம் - மனச்சாட்சிப்படி நடப்பவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து மன இறுக்கத்தையும், வீண் அலைச்சல்களையும் கொடுத்து வந்த குருபகவான், இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்வதால், புதிய பாதையில் பயணித்து சாதிப்பீர்கள். பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். தன்னம்பிக்கை கூடும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் ராசியைப் பார்ப்பதால், ஆரோக்கியம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது பதவி, பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கும்பம் - மற்றவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுபவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியையும், பதவி, புகழ், கௌரவத்தையும் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால், எதிலும் பொறுமையும் நிதானமும் தேவை. நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டி இருக்கும். எவ்வளவுதான் பணம் வந்தாலும், பற்றாக்குறை நீடிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு செய்யுங்கள். எதிர்காலத்தைக் குறித்த அச்சம் வந்து போகும். உங்களது திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.

மீனம் - இயற்கையை உணரும் சக்தி கொண்டவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்துகொண்டு, பலவகைகளிலும் உங்களை சிரமப்படுத்திய குருபகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்க இருப்பதால், தன்னம்பிக்கை கூடும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வரும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் கூடும்.

ஆடி மாதமென்றாலே அம்மன் மாதம் என்று அனைவருக்கும் தெரியும். இந்த வருட ஆடி மாதத்திற்கு ஒரு சிறப்பு உள்ளது. ஆடி பெருக்கு, குருப்பெயர்ச்சி, ஆடிஅமாவாசை என 3 நிகழ்வுகளும் இந்த ஆடி மாதத்தில் நிகழ்கிறது. தமிழிற்கு ஆடி 18 அன்று ஆடிஅமாவாசை வருகிறது. (ஆங்கிலத்திற்கு 02/08/2016.) ஆடிஅமாவாசையன்று கட்டாயமாக முன்னோர்களிற்கு தர்ப்பணம் கொடுங்கள். ஆடி அமாவாசையின் சிறப்பு என்னவென்றால் கடகத்தில் உள்ள சூரியனுடன் ஆட்சி பெற்ற சந்திரன் இணைவதாகும். இக்காலத்தில் முன்னோர்களின் ஆத்மாக்கள் பூமிக்கு வரும். அவர்களிற்கு நாம் தர்ப்பணம் கொடுக்க அவை திருப்தியடைந்து நம்மை வாழ்த்தும். அன்று இரவு வீட்டில் வெளியில் ஒரு செம்பினுள் நீர் வைக்க வேண்டும். அத்துடன் ஆண்கள் கோதுமை தவிடு, பச்சரிசி தவிடு, வெல்லம், அகத்திக்கீரை கலந்து ஆண்கள் தானம் செய்ய வேண்டும். பெண்கள் சுமங்கலபொருட்களை தானம் செய்ய வேண்டும். இதனால் நமது முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைப்பதோடு அவர்களின் ஆசியால் எமது வாழக்கை வளமடையும்.

ஆடிப்பூரத்தில் தானம் செய்வது அஷ்டலக்மியையும் திருப்திப்படுத்தும். சகல சம்பத்துக்களும் தேடி வரும். ஆடிப்பூரமானது வரும் ஆடி 21ம் திகதி வெள்ளிக்கிழமை வருகிறது. இந்நன்னாளில் இயலுமான வஸ்துக்களை அனைத்து உயிர்களுக்கும் தானம் வழங்கலாம்...
(ஆங்கிலத்திற்கு 5/8/2016)

பட்டுக்கு அதிபதியான குருபகவான் கன்னி ராசிக்கு சஞ்சரிக்கும் குருப்பெயர்ச்சி அன்று குருபகவானின் விசேட திருத்தலங்களிலோ அல்லது சிவன் கோவிலில் உள்ள நவக்கிரக வாயாழ பகவானுக்கும் சிவனுக்கும் அல்லது குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் பட்டு சேர்ப்பித்து உங்கள் நட்சத்திரம் கூறி வழிபட நன்மை வந்து சேரும். அன்றைய நாள் ஆதரவற்ற குழந்தைகள்,முதியோர்களுக்கு அன்னதானம் ,மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவது சிறப்பு. கோவில்களில் நடைபெறும் குருப்பெயர்ச்சி யாகத்தில் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.

hariram1by9@gmail.com

செவ்வாய், 26 ஜூலை, 2016

வாஸ்து. வீட்டிலேயே செய்யக்கூடிய தோசநிவர்த்தி.

1. எந்த காரியம் எடுத்தாலும் தோல்வி, மன நிம்மதி இன்மை அதாவது மனதில் ஒரு வெறுமை உள்ளவர்கள் இதனை சரி செய்ய அருகம்புல், மூன்று வகை மஞ்சள் (கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், பூசு மஞ்சள்) பொடி, சந்தனம் ஆகியவற்றை சுத்தமான பசும்பாலில் அரைத்து எடுத்து வலது கையின் நடு மூன்று விரல்களினால் உச்சம்தலையில் வைத்து பின்னர் உடல் முழுவதும் பூசி குறைந்தது 15 நிமிடங்களாவது விட்டு பின்னர் அரப்பு அல்லது சீயக்காய் வைத்து தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் செய்து வர எப்படிப்பட்ட தோசமானாலும் விலகி விடும். இதன் ஒரு சுருங்கிய நடைமுறையை இலங்கை (ஈழத்) தமிழர்களின் திருமணச் சடங்குகளில் காணலாம். அதாவது திருமணத்திற்கு முன் மணமக்ககளிற்கு பால், அருகு வைத்து குளிக்க வைக்கும் சடங்கு இன்றும் உள்ளது இது ஒரு தோச நிவர்த்திச் சடங்காகும். 

2. நமது வீட்டில் சாம்பிராணி, நல்ல மணமுள்ள ஊதுபத்தி (சந்தனகுச்சி) ஆகியவற்றை பொருத்த வேண்டும். வெள்ளி, செவ்வாய் கிழமைகளிலாவது கண்டிப்பாக வீட்டிற்கு சாம்பிராணி தூபம் இடவேண்டும். தனிச் சாம்பிராணி இடாமல் சாம்பிராணி, வெண்குங்கிலியம், சுத்தமான சந்தனம், அகில், தேவதாரு, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை கலந்து பொடிசெய்து தூபம் போடுவது மிகவும் சிறப்பான பலனைத் தரும். 

3.குளியலறை (Bathroom) கழிவறை(Toilet) வாயில்களில் ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் சுத்தப்படுத்தப்படாத கல் உப்பினை நிரப்பிப் போட்டு வைக்க வேண்டும். இதை வாரம் ஒருமுறை மாற்றிவிட வேண்டும். வீட்டின் தலைவாசலின் இருபுறமும் கல்லுப்பினை இரவில் ஒரு சிறிய கண்ணாடிப்பாத்திரத்தில் வைத்து காலையில் அதை குப்பையில் கொட்டிவிடவும். இது வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகளை அழித்து நல்ல சக்திகளை பெருக்கும். அத்துடன் மஞ்சள், சந்தனம் ஆகியவற்றிற்கு எதிர்மறை சக்திகளை அகற்றும் ஆற்றல் உள்ளது. இவற்றைக் கரைத்து வீட்டின் ஜன்னல், கதவு போன்ற இடங்களில் தெளித்து விட்டால் தீய சக்திகள் விலகும். 

4. வீட்டில் எப்போதும் மென்மையான இனிய இசை ஒலிக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கரடுமுரடான இசையை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். வினாயகர் அகவல், கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், அம்மன் பாமாலை, சிவஸ்துதி மற்றும் சில மந்திரங்களை மீண்டும் மீண்டும் ஒலிப்பவை என பல ஒலிநாடாக்களும், குறுந்தட்டுக்களும் கடைகளில் கிடைக்கின்றன. இவற்றை தினமும் ஒரு தடவையாவது வீட்டில் ஒலிக்கச் செய்வது சிறப்பாகும். 

5. இயற்கை வெளிச்சம் வீட்டினுள்ளே எப்பொழுதும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி முடியாதபட்சத்தில் ஏதாவது ஒரு வழிமுறையில் வீடு பிரகாசமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.


6. ஓடத்தின் படம், உடைந்த பொருட்கள், பழுதடைந்த பழைய பொருட்கள் என்பன வீட்டில் எங்கும் வைக்கப்பட கூடாது.
தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ படுக்கை அறையில் வைக்க கூடாத பொருட்கள் :-
1. தையல் மெஷின்
2. கத்தரிக்கோல்
3. ஊசி
4. அயர்ன்பாக்ஸ்
5. இரும்பு கட்டில்
6. நீர்வீழ்ச்சி போன்ற படங்கள்..
7. மீன் தொட்டி
8. ஓடத்தின் படம்
9. உடைந்த பொருட்கள்
10. பழுதடைந்த பழைய பொருட்கள்.
.... போன்றவை
  

அதிர்ஷ்டமும் நல்வாய்ப்பும் தேடி வர அன்னாசிப் பழம் ஒவியத்தை உங்கள் வீட்டில் அல்லது தொழிலங்களின் முன்புற அறைகளிலோ வரைந்து வைத்தால் அதிர்ஷ்டமும்,நல்வாய்ப்பும்,நேர்மறை எண்ணங்களும் தேடி வரும்.
(அருகில் நான் தந்துள்ள படத்தை பிரிண்ட் செய்தும் மாட்டலாம்.)
   
  
ஜாதகம் பார்க்கப்படும். கட்டணம் உண்டு. ஜாதகம் பார்த்து முழு ஜாதக ஆய்வு 1000/=
6 A4தாள் முழுமையாக பலன் எழுதி தரப்படும். 25 வருட பலன்கள் கொண்ட astro vision PDF report  free. 
உங்களின் ஜாதகம் கணிக்க உங்கள் பிறந்த திகதி, பிறந்த மாதம், பிறந்த ஆண்டு, பிறந்த நேரம் (காலை மாலையும் குறிப்பிடப்பட வேண்டும்.) , பிறந்த இடம் என்பவற்றுடன் நீங்கள் உங்கள் ஜாதகப்படி தெரிந்துகொள்ள விரும்பும் கேள்விகளை அனுப்பி வையுங்கள். வங்கியில் நீங்கள் பணம் செலுத்தியிருப்பின், பலன் பார்க்க வேண்டிய கையிருப்பு ஜாதகங்கள் நிறைய இருப்பதால் அதிகபட்சமாக 8 நாட்களிற்குள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பலன் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புகளுக்கு - hariram1by9@gmail.com

வியாழன், 7 ஜூலை, 2016

சற்சந்தான பாக்கியம்.

குழந்தை எப்போது பிறக்கும் என்ற கேள்விக்கு சுக்கிரனையும் உப புத்திர காரகனான பாவிக்க வேண்டும். ஏனெனின் கருத்தரித்து முதலாவது மாதத்தினை சுக்கிரன் எடுத்து நடத்துகின்றார். ஆகவே சுக்கிரன் நன்றாக இருந்தால் தான் குழந்தை தங்கும். இதனை வேறு விதமாகவும் கூறலாம். அதாவது  சுக்கில சுரோணித அதிபத்தி வலுவடைந்தால் தான் சுக்கில சுரோணித வீரியம் இருக்கும். கரு கட்டும் என்று...ஆகவே சுக்கிர தசை புக்தி அந்தரங்களில் குழந்தைப்பேறு கிட்டும் என்று.
இரண்டாவது மாதம் கருக்கட்டிய சிசுவை செவ்வாய் பொறுப்பேற்று காப்பாற்றுகின்றார்.
மூன்றாவது மாதம் கருக்கட்டிய சிசுவின்மீது ஆதிக்கம் செலுத்துபவர் குருபகவான். இக்காலத்திலேயே சிசுவின் உடருறுப்புக்கள் விருத்தியாகின்றன...
நான்காவது மாதம் சூரியனும் ஐந்தாவது மாதம் சந்திரனும் பொறுப்பேற்றுக்கொள்கின்றனர். இக்காலத்திலேயே நுகர்ச்சி இயல்புகளை சந்திரன் கொடுக்கின்றார்..
ஆறாவது மாதம் சனிபகவான் பொறுப்பேற்று வளர்க்கின்றார்.
ஏழாவது மாதம் புதன் பொறுப்பெடுக்கின்றார். இக்காலத்தில் நமது புராணங்கள், இதிகாசங்கள், நல்ல நீதி கதைகள் படிக்க வேண்டும். குழந்தையின் அறிவு வளரும்.
ஏழாவது மாதம் புதன் பொறுப்பெடுக்கின்றார்.
எட்டாவது மாதம் குழந்தை எந்த லக்கினத்தில் பிறக்க வேண்டும் என்று இறைவன் முடிவு செய்வது இக்காலத்திலேயே...
ஒன்பதாவது மாதம் மறுபடியும் சந்திரன் பொறுப்பெடுக்கின்றார். இக்காலத்தில் பூ முடிச்சு குலதெய்வ வழிபாடு கடடாயம் செய்யப்பட வேண்டும்.
10வது மாதத்தினை எடுத்து நடத்துபவர்கள் குருவும் சுக்கிரனும் ஆவர். இயற்கை சுபர்களான குருவும் சுக்கிரனும் குழந்தை  சுப காரியத்தினை எடுத்து செய்கின்றனர். இவர்களில் சுக்கிரன் வலுவாக இருந்தால் விரைவாகவே குழந்தை பிறந்து விடும். குரு பலமாக இருந்தால் முழுதாக (10 மாதம் தங்கியிருந்தே குழந்தை பிறக்கும்.)

சனி, 18 ஜூன், 2016

ஒரு ஜோதிட விளக்க கட்டுரை.

ஓம் நமசிவாய

ஜோதிடத்தில் ஒரு வீட்டதிபதி (பாவாதிபதி) இன்னும் ஒரு வீட்டில் நின்றால் எப்படி பலன் கூறுவது என்ற அடிப்படை சந்தேகத்தினை தீர்க்கும் முகமாக இந்த பதிவு அமைகிறது...  இது ஒரளவேனும் ஜோதிடம் அறிந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஜோதிடர்கள், இளநிலை ஜோதிடர்கள், ஜோதிட மாணவர்கள், ஜோதிட ஆர்வலர்களிற்கு உகந்த பதிவு


3ம் பாவாதிபதி 10 இல் நின்றால் என்ன பலன் என்பதை ஒரு உதாரணம் மூலாமாக பார்க்கலாம்.  (10 வீடு தொழில் ஸ்தானம் ஆகும்.)
 
 3ம் பாவ, 8ம் பாவ, 10ம் பாவ காரகத்துவங்களை முதலில் அறிந்து கொள்க...
அடுத்து இதன்படி பலனை அறிக...,
 
1. 3ம் பாவ காரகத்துவங்கள் 10ம் பாவத்தின்மீது படிவிக்கப்படும்.
2. 3ம் பாவ உயிர் காரகத்துவங்கள் பெரும்கேந்திரத்தில் இருப்பதால் அவை பெரிதளவு பாதிக்கப்படமாட்டாது.
3. 3ம் பாவ பொருள் காரகத்துவங்கள் 8 இல் மறைவதால் அவை பாதிக்கப்படும்.
4. உச்சம் பெறின் 3ம் பாவ காரகத்துவங்கள் 10ம் பாவத்தினூடாக நன்மை/அனுகூலத்தினை வழங்கும்.
5. நீசம், பகை பெற்றால் துன்பம்.
6. 3ம் பாவாதிபதி தன் சொந்த வீட்டிற்கு மறைவதால் 3ம் பாவகம் வலுவிழக்கும்; அதே நேரம் அந்த கிரக காரகத்துவம் நன்றாக அதாவது பலமாக இருக்கும்.
7. 10 இற்கு 6ம் பாவாதிபதி வந்து 10 இல் அமர்வதனால் 10ம் பாவ காரகத்துவங்களிற்கும் சிறப்பில்லை - அத்துடன் அடிமைத்தொழில் அமைப்பு கிடைக்கும்."



இந்த 7 விதிகளையும் விபரிக்கும் அளவிற்கு எனக்கு நேரம் இல்லை ஆகவே இலக்கம் 1 இல் நான் கூறிய விதியினை சற்று விரித்து ஆராந்து பார்ப்போம்.

""விதி இல 1. 3ம் பாவ காரகத்துவங்கள் 10ம் பாவத்தின்மீது படிவிக்கப்படும்.""

அதாவது 3ம் பாவ காரகத்துவம் - வீரம்/தைரியம்; அது 10மிட காரகமான தொழில் மீது படிவிக்கப்படுகிறது. அதனால் காவல் துறை/ தீயணைப்பு/ ராணுவம்/ அல்லது சாகசம் காட்டும் தொழில்கள், ஏஜென்சி தொழில், தொலைத்தொடர்பு துறையில் பணி, தபால் சேவையில் பணி, மாமனாரின் தொழிலை எடுத்து நடத்தல், எழுத்து துறையில் பணி, நுண்கலை பொருட்கள் தொடர்பான தொழில், அறிவிற்கு சவாலான தொழில் போன்ற தொழில்கள் கிடைக்கும்... அது சரி இவற்றில் எந்த தொழில் கிட்டும்? அதனை கணித்து கூறவே ஜோதிடர்கலாகிய நாம் இருக்கின்றோம்.

இயற்கை சுபரான குருபகவான், சுக்கிரபகவான், சந்திரபகவான், தனித்த புதபகவான், அத்துடன் சூரியபகவான் (அரச வேலை மற்றும் பெரும் ஊதியம், எமது திறமை என்பவற்றுடன் தொடர்புடையவர் சூரியபகவான். அத்துடன் அவர் அரைப்பங்கு சுபத்தன்மையும் அரைப்பங்கு பாவத்தன்மையும் உடையவாராக இருப்பதால் நான் இங்கு சூரியபகவானையும் எடுத்துள்ளேன்.)

இவர்களில் பார்வை 10 இல் விழ தொழிலில் மேன்மை, அரச ஆதாயம், பிரச்சினைகள் வந்தாலும் அதிலிருந்து இலகுவாக வெளிவருதல், நீடித்த தொழில் அமைப்பு போன்ற பலன்கள் அமையும். 10இல் அமர்ந்த கிரகம் அல்லது 10ம் அதிபதி பார்வைசெய்யும் கிரகத்திற்கு பகை பெறின் அந்த அமைப்புக்களால் பிரச்சினைகளும் வரும்.


தொழில் நிர்ணயம் என்பது சாதாரண ஒரு விடயமல்ல... இன்னும் பல விதிகள் இன்னும் ஆராய உள்ளன (10பாவாதிபதி, நவாம்சம், தசாம்சம்......).  பிருகத்ஜாதக மூல நூலில்படி சில கிரக சேர்க்கைக்கு தொழில் அமைப்புக்கள் தரப்படுள்ளன. இது தவிர உங்கள் நட்ச்சத்திரத்திற்கான உகந்த தொழில்கள், உங்கள் லக்கினத்திற்கு உகந்த தொழில்கள்என உங்கள் ஜாதகத்தில் ஆராய பல விடயங்கள் உள்ளன.  ஆகவே எந்தவொரு ஜாதக பலன் அறியவும் ஜோதிடரிடம் உங்கள் ஜாதகத்தினை காண்பித்து உங்கள் சுய ஜாதகத்தின் படி உங்களிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நன்மை/லாபம் தரும் தொழில்களை அறிந்து கொள்ளுங்கள். என்னிடம் ஜாதகம் பார்த்து குறிப்பிட்ட சில (5) கேள்விகளிற்கு பலன் கூற 500/=
முழு ஜாதக ஆய்வு செய்து 12 பாவத்திற்குமான பலன், பரிகாரம் -  1000/=
தேவை எனின் 25 வருட பலன்கள் கொண்ட astro vision PDF report  250/= இற்கு வாங்கலாம்.
இலங்கை, இந்தியா தவிர்ந்த ஏனைய வெளிநாட்டு வாழ் மக்கள் 1500/= செலுத்த வேண்டும்.
(இவை பெரும்பாலான திறமையான ஜோதிடர்களால் நிர்ணயம் செய்யப்படும் நியமக்கட்டணம்.)
பலன் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். கட்டண முறையில் ஜாதகம் பார்த்து பலன் அறிய விரும்பும் அன்பர்கள் மட்டும் hariram1by9@gmail.com என்ற எனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

சர்வே ஜனா சுகினோ பவந்து...
 
நன்றி,
தொழில்முறை ஜோதிடர் மற்றும் ஜோதிட ஆராச்சியாளர் ஹரிராம் தேஜஸ்.

( "தேஜஸ்" என்றால் தெய்வீக ஒளி/பிரகாசம் என்று பொருள்படும். ஹரிராம் தேஜஸ் என்று வித்தியாசமான பெயராக உள்ளது என்று பலரிற்கு அறிய ஒரு ஆவல். :-) )

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.