ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

புதன், 1 பிப்ரவரி, 2017

நவகிரக சாந்திகள்

உங்கள் ஜனன ஜாதகத்தில் எந்தக் கிரகம் தீய பலன்களைத் தருகிறது
என குறிப்பிடபட்டுள்ளதோ அந்த கிரகங்களை சாந்தி செய்வதற்குரிய பரிகாரங்கள்:
ஜோதிட விதிகளின்படி ஒவ்வொரு ராசிக்கும்,லக்னத்திற்கும் உரிய சுப,அசுப கிரகங்கள் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை உங்கள் ஜாதகத்துடன் சரி பார்த்துகொள்ளவும்.உங்கள் ஜனன ஜாதகத்தில் ராசி மற்றும் லக்னத்திற்கு உரிய அசுப(தீய) கிரகங்களுக்கு கீழே கொடுக்கபட்டுள்ள கிரக விபரங்களின்படி பரிகாரம் செய்து கொள்ளவும்.
தீய பலன்களைத் தரும் கிரகத்தின் தசை,புத்தி நடைபெறும் சமயங்களிலும் தீய கிரகங்களுக்குரிய நாட்களிலும் இந்த பரிகாரங்களை செய்து அசுப கிரகங்களினால் ஏற்படும் தீய விளைவுகளை தவிர்த்து கொள்ளவும்.
இயற்கையான சுபகிரகங்கள்
குரு, சுக்கிரன், தீய கிரகங்களுடன் சேராத புதன், வளர்பிறைச் சந்திரன்.
இயற்கையான அசுபகிரகங்கள்
சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது, தீய கிரகங்களுடன் சேர்ந்த புதன், தேய்பிறைச் சந்திரன்.
ஒவ்வொருவரின் ஜென்ம லக்னத்திற்கு ஏற்ப கிரகங்களின் சுப, அசுபத் தன்மை மாறுபடுகிறது.
மேஷம் லக்னம்
சுப கிரகங்கள் சூரியன், குரு
தீய கிரகங்கள் புதன், சனி
ரிஷபம் லக்னம்
சுப கிரகங்கள் சூரியன், புதன், சனி
தீய கிரகங்கள் சந்திரன், குரு, சுக்கிரன்
மிதுனம் லக்னம்
சுப கிரகங்கள் குரு, சுக்கிரன், சனி
தீய கிரகங்கள் சூரியன், செவ்வாய், குரு
கடக லக்னம்
சுப கிரகங்கள் செவ்வாய், குரு
தீய கிரகங்கள் புதன், சுக்கிரன்
சிம்ம லக்னம்
சுப கிரகங்கள் சூரியன், சுக்கிரன் செவ்வாய்
தீய கிரகங்கள் புதன், சுக்கிரன்
கன்னி லக்னம்
சுப கிரகங்கள் புதன், சுக்கிரன்
தீய கிரகங்கள் சந்திரன், குரு, செவ்வாய்
துலா லக்னம்
சுப கிரகங்கள் புதன், சுக்கிரன்,சனி
தீய கிரகங்கள் சூரியன், செவ்வாய், குரு
விருச்சிக லக்னம்
சுப கிரகங்கள் சூரியன், சந்திரன்,குரு
தீய கிரகங்கள் செவ்வாய்,புதன், சுக்கிரன்
தனுசு லக்னம்
சுப கிரகங்கள் சூரியன், செவ்வாய், புதன்
தீய கிரகங்கள் சுக்கிரன்
மகர லக்னம்
சுப கிரகங்கள் செவ்வாய்,புதன்,
சுக்கிரன்
தீய கிரகங்கள் சந்திரன், குரு
கும்ப லக்னம்
சுப கிரகங்கள் சுக்கிரன், புதன், சனி
தீய கிரகங்கள் சந்திரன்,செவ்வாய் ,குரு
மீன லக்னம்
சுப கிரகங்கள் சந்திரன், செவ்வாய்
தீய கிரகங்கள் சூரியன்,சுக்கிரன், சனி,புதன்


1.சூரியன்-
சனிக்கிழமை அன்று 7 வகையான தானியங்களை ஊற வைத்து ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அவற்றைப் பொடி செய்து எறும்புகளுக்குப் போடவும்.இதை 7 ஞாயிற்றுக்கிழமை செய்து வர சூரியனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.
2.சந்திரன் - 
 வளர்பிறை திங்கள் கிழமை அன்று வீட்டு முற்றத்தில் நெருப்பு மூட்டி அதில் கொஞ்சம் பழைய வெல்லத்தைப் போட்டு விடவும்.சந்திரனால் உண்டாகும் கெடுபலன்கள் குறையும்.
3.செவ்வாய் -
 தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று புதிதாக ஸ்வீட் வாங்கிப் பிச்சைக்காரர்களுக்குத் தானம் செய்ய செவ்வாய்க் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.
4.புதன் -
பூஜை அறையில் ஒரு செம்பில் கங்கா ஜலம் வைத்திருந்தால் புதன் கிரகத்தின் கெடுபலன்கள் குறையும்.
5.குரு .-
வியாழக்கிழமை தோறும் குங்குமப்பூவை மெழுகுப் பதமாக அரைத்து குங்குமம் கலந்து நெற்றியில் திலகம் இட்டு வர குருகிரகத்தினால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
6.சுக்கிரன்  -
சிறிய வெண்ணிறப் பட்டுத் துணியில் வாசனை உள்ள மலர் வைத்து முடிந்து அதை ஓடும் நீரில் விட்டு விட சுக்கிரனால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
7.சனி கிரகம்-
 ஒரு வெற்றிடத்தில் அல்லது வீட்டுப் பின்புற முற்றத்தில் கறுப்புத் துணியில் கருப்பு எள் வைத்து முடிந்து நெருப்பில் போட்டு எரிக்கச் சனிகிரகத்தினால் உண்டான கெடுபலன்கள் குறையும்.
8.கேது -
இரண்டு போர்வைகள் வேறு வேறு நிறத்தில் வாங்கிப் பிச்சைக்காரர்கள் அல்லது ஏழை முதியவர்களுக்குத் தானமாக வழங்க கேது கிரகத்தால் உண்டான கெடுபலன்கள் குறையும்.

9.ராகு  -
பாம்பாட்டிகளிடம் இருந்து ஒரு பாம்பை விலைக்கு வாங்கிக் அவற்றைக் காட்டில் கொண்டுபோய் விட ராகு கிரகத்தால் உண்டான கெடுபலன்கள் குறையும்.இதை நாகபஞ்சமி (ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி ) அன்று செய்யவும்.

ஞாயிறு, 22 ஜனவரி, 2017

வீட்டில் விளக்கேற்று...

நாம் வீட்டிலும், கோவிலிலும் ஏன் விளகேற்றுகிறோம்!
விளக்கு எரிந்த வீடு வீணாகிப் போகாது' என்று ஒரு பழமொழி உள்ளது.
எதற்கு என்று தெரியுமா??
சுடருக்கு தன்னை சுற்றி உள்ள தேவையற்ற கதிர்களை (நெகட்டிவ் எனர்ஜியை) ஈர்க்கும் ஷக்தி குண்டு! அவ்வா

று ஈர்க்கும் போது! நம்மை சுற்றி பொசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும் நம் சுற்று புறம் தெளிவாகவும் பலத்தோடும் காணப்படும்!
இரண்டு நாள் வீட்டில் விளக்கேற்றாமல் இருந்தாலே அது புரியும் ஏதோ வீடே மாயணம் போல் தோன்றும் எல்லாருமே சோர்வாய் இருப்பார்கள்! இதுவே விளகேற்றுவதன் தத்துவம்!
நம் உடலில் இருக்கும் ஏழு சக்கரங்களில் மூலாதாரமும் ஸ்வாதிஷ்டானமும் நல்லெண்ணெய் விளக்கு ஏற்றுவதால் தூய்மையடைகிறது.
அதே போல் மணிபூரகம், அனாஹதம் இரண்டும் நெய்விளக்கு ஏற்ற, தூய்மையடைந்து நற்பலனை அடைகின்றன. நம் உடலில் இருக்கும் நாடிகளில் சூரிய நாடி, சந்திர நாடி, சுஷம்னா நாடி ஆகியவை மிக முக்கியமாகக் கருதப்படுகின்றன. சூரிய நாடி, நல்ல சக்தியையும் வெப்பத்தையும் தருகிறது. சந்திர நாடி, குளுமையைத் தருகிறது.
சுஷம்னா நாடி, அந்தப் பரம்பொருளுடன் சம்பந்தப்பட்டு, ஆன்மீகப் பாதையை வகுக்கிறது.
நல்லெண்ணெய் விளக்கு ஏற்ற சூரிய நாடி, சுறுசுறுப்பு அடைகிறது. நெய்விளக்கு, சுஷம்னா நாடியைத் தூண்டிவிட உதவுகிறது. பொதுவாகவே நெய் தீபம், சகலவித சுகங்களையும் வீட்டிற்கு நலனையும் தருகிறது.
திருவிளக்கை எப்போது வேண்டுமானாலும் ஏற்றலாம். இதற்கு தடையேதும் இல்லை. ஆனால், பொதுவாக மாலை 6.30க்கு ஏற்றுவதே நமது மரபு. இதை கருக்கல் நேரம் என்பர்.
சூரியன் மறைந்ததும் சில விஷ சக்திகள் சுற்றுச்சூழலில் பரவி வீட்டிற்குள்ளும் வர வாய்ப்பிருக்கிறது. ஒளியின் முன் அந்த விஷ சக்திகள் அடிபட்டு போகும். எனவே அந்நேரத்தில் விளக்கேற்றுகிறோம் என்பது அறிவியல் உண்மை.
ஒரு நாளிதழில் வெளிவந்த நிகழ்வு என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது....
அமெரிக்காவில் இருக்கும் தன் மகனின் வீட்டுக்கு சென்றிருக்கும் ஒரு தாய் சாயந்திரங்களில் தன் மகனும், மகளும் தாமதமாக வீடு சேர்வதை பார்க்கிறார். இருவரும் வேலைக்குச் செல்பவர்கள். ஒரு நாள் மகன் முன்னதாகவும், ஒரு நாள் மருமகள் முன்னதாகவும் வருவார்கள். அவர்களுக்கு இன்னும் குழந்தை இல்லை.
இருவரையும் ஒரு சேர பார்க்க முடிவதில்லை அந்த தாய்க்கு. ஒரு்வர் வருவதற்குள் மற்றொருவர் தூங்கியே போயிருப்பார். ஒரு நாள் மகனை அழைத்து தாமதமாக வரும் காரணம் கேட்க
“உனக்கு இதெல்லாம் புரியாதம்மா. எங்கள் இருவருக்கும் பயங்கர ஸ்ட்ரெஸ்!!! இருவரும் கவுன்சிலிங் போய் வருகிறோம். ஒரு மணி நேரத்துக்கு அந்த டாக்டருக்கு கொடுக்கும் தொகை அதிகம். மிகச் சிறந்த மருத்துவர் அவர். எல்லாம் சரியாகி விடும்” என்று சொல்ல நாளை அந்த மருத்துவரை பார்க்க போகவேண்டாமென்றும் சீ்க்கிரம் வீட்டுக்கு வரவேண்டுமென்றும் தாயார் சொல்கிறார்.
அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் இருவரின் மூக்கையும் சுகந்த மணம் துளைக்கிறது.
கைகால் கழுவி, உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு சொல்ல அங்கே செல்கின்றனர் இருவரும்.
மணம் வீசும் மலர்களின் வாசம்...
அழகான தீப ஒளி நிறைந்த அந்த அறையில் சற்று நேரம் அமரச் சொல்கிறார். தாமாகவே கண் மூடி அந்தச் சூழலின்
இன்பத்தை அனுபவிக்கின்றனர் இருவரும்.
கண் திறந்த போது கவுன்சிலிங்கில் கிடைக்காத அமைதி கிடைத்ததாகச் சொல்ல... தாயார் மகிழ்ந்தார்......

குறிப்பு:
********
மெழுகுவர்த்தி ஏற்றக் கூடாது. இதன் புகை உடல் நலத்தை கெடுக்கும் ! ஆஸ்துமா, மார்புபுத்துநோய் இவைகளுக்கு மெழுகுவத்திதான் தாய் ! மண்ணெண்ணை விளக்கும் வேண்டாம்....
வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால்
அவர்களை தினசரி விளக்கேற்றும்படி கேட்டுக்கொள்ளவேண்டும்.
இப்படி செய்தால் அவர்களின் முகப் பொலிவு பன்மடங்கு
 கூடும்’ பலருக்கும் பயனுள்ள உபயோகமான
தகவல் என்பதால், அதை இங்கு தனி பதிவாக
தந்திருக்கிறேன். மேலும் விளக்கேற்றுவதற்கு
எந்தெந்த எண்ணைகளை பயன்படுத்தலாம்,
எதை பயன்படுத்தக்கூடாது,
என்ன திரிகளுக்கு என்ன பலன், எந்த நேரத்தில்
எந்த திசையில் ஏற்றவேண்டும்,போன்ற
தகவல்களையும் மேலும் விளக்கேற்றுவது
குறித்த வேறு பல தகவல்களையும் திரட்டி
எனக்கு தெரிந்த தகவல்களையும் சேர்த்து
தந்திருக்கிறேன். நிச்சயம் பயனுள்ளதாக
இருக்கும் என்று நம்புகிறேன்.
பெண் குழந்தைகள் விளக்கேற்றுவதால்
அவர்களின் முகப்பொலிவு கூடும்
நம் வீட்டிலுள்ள பெண் குழந்தைகளை
அவர்களது தாய்மார்கள் தினமும் விளக்கு
ஏற்றும்படி பணிக்க வேண்டும்.
இதில் அவர்களின் இறை பணி மட்டுமில்லாமல்
அவர்களின் தேஜசும் (அதாவது
முகபொலிவும்) கூடுகிறது.
இதை சோதிக்க விரும்பினால், தாய்மார்கள் தங்கள் பெண்ணை ஒரு குறிப்பிட்ட
தினத்திலிருந்து விளக்கு ஏற்றும்படி
சொல்லுங்கள். அன்று தங்கள் பெண்ணிடம்
அவளது முக பொலிவை முகம் பார்க்கும்
கண்ணாடியில் பார்க்க சொல்லுங்கள். நீங்களும்
பாருங்கள். அன்றைய தேதியை கண்ணாடியின்
மூலையில் குறித்து வையுங்கள்.
சரியாக 30 நாட்கள் (இதில் வயது வந்த பெண்களின் இயற்கையான உபாதை நாட்களை
கணக்கில் கொள்ளாதீர்கள்) கழித்து, மீண்டும்
உங்கள் பெண்ணை கண்ணாடியில் அவளது
முகபொலிவினை பார்க்க சொல்லுங்கள்.
நீங்களும் பாருங்கள். மீண்டும் 45 வது நாள்
இதேபோல் பாருங்கள். நிச்சயமாக ஒரு
மாற்றத்தை உங்களால், உங்கள் பெண்ணால்
உணர முடியும். அதுமட்டுமின்றி
பெற்றோர்களின் ஆதரவும் அரவணைப்பும்
வியப்பூட்டும் வகையில் கூடும்

விளக்கேற்றவேண்டிய நேரம்
************************
விடியற்காலையில் சூரியன் உதயமாவதற்குச்
சற்று முன்னதாக `பிரம்ம முகூர்த்தம்’
என்கின்ற இரவின் விடியலாகத் திகழும்
அருணம், என்கின்ற அருணோதய காலத்தில்
விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் எல்லாவித
யோகத்தையும் பெறலாம்.
அதேபோல்
மாலையில் சூரியன் மறைவதற்குச் சற்று
முன்னதாக, பிரதோஷ காலம் என்கிற
உன்னதமான காலத்தில் விளக்கு தீபம் ஏற்றி
வழிபட்டால், குடும்பத்தில் செல்வம் பெருகும்.
சந்தோஷம் நிலவும், வேலை தேடுவோருக்கு
நல்ல வேலை கிடைக்கும். புத்திர பாக்கியம்
உண்டாகும். மனதுக்கு ஏற்ற வரன் அமையும்.
மற்றும் எல்லாவிதமான யோக பாக்கியங்களும்
பெறலாம்.

பொதுவான விதிமுறைகள்
*********************************************
1. விளக்கில் எண்ணெய் விட்டு எத்தனை
திரிகளைப் போட்டிருந்தாலும் அத்தனையும்
ஏற்றிட வேண்டும். குறைந்த பட்சம் இரண்டு
திரிகளாவது ஏற்ற வேண்டும்.
2. பூஜை தொடங்கும் முன் வீட்டில் சுமங்கலி
குத்துவிளக்கை ஏற்றி விட்டு வணங்கிய பிறகு
பூஜை செய்தால் நிச்சயம் பலன் உண்டு.
3. விளக்கு தீபம் ஏற்றும்போது முதலில்
விளக்கில் நெய் அல்லது எண்ணெய்
ஆகியவற்றை ஊற்றிய பிறகே பஞ்சு திரியிட்டு
தீபம் ஏற்ற வேண்டும். அப்படி முறையாக
ஏற்றிய தீபம் வீட்டில் உள்ள இருளை
அகற்றுவதோடு, வீட்டில் உள்ளோர்
அனைவரின் மன இருளையும் அகற்றி,
தெளிவான சிந்தனையைத் தூண்டி, சிறந்த
முறையில் செயாலாற்ற வைத்து, நிலையான
அமைதியைத் தரும்.
4. இரண்டு திரி சேர்த்து முறுக்கி ஏற்றுவது
நலம்.
5. ஒரு திரி ஏற்றும் போது கிழக்கு திசை
நோக்கி ஏற்றவும்
நாம் ஏற்றும் திரியை பொறுத்து அதற்கு
உண்டான பலன்களை அடையலாம்.
6. தீபத்தை பூவின் காம்பினால் அணைக்கவும்.
வாயினால் ஊதக்கூடாது. கல்கண்டை
கொண்டு தீபத்தை அமர்த்தவேண்டும்.
7. தீபம் வெறும் விளக்கு அல்ல, நம் வாழ்வின்
கலங்கரை விளக்கு. மங்களம் தங்கவும் இன்பம்
பெருகவும் தீபம் ஏற்றுவோம். தீபமேற்றி
என்றும் இறைவெளிச்சத்தில் இன்பம்
காண்போம்

எந்தெந்த எண்ணைகளில் விளக்கேற்றினால் என்னென்ன பலன்கள் ?
********************************************************************************************************************
நெய் ஊற்றி தீபம் ஏற்றினால் சகலவித
சந்தோஷமும் இல்லத்தில் நிறைந்திருக்கும்.
நல்லெண்ணை எனப்படும் எள் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றிட, குடும்பத்தை ஆட்டிப்
படைக்கும் எல்லாப் பீடைகளும் தொலைந்து போகும்.
விளக்கெண்ணை ஊற்றி தீபம் ஏற்றுபவர்களுக்கு புகழ் அபிவிருத்தியாகும் வேப்ப எண்ணெய்,
நெய், இலுப்பை எண்ணெய் மூன்றும் கலந்து
தீபம் ஏற்றினால் செல்வம் பெருகும். நெய், விளக்கெண்ணை, வேப்ப எண்ணெய், தேங்காய்
எண்ணெய் கலந்து தீபம் ஏற்றி அம்மனை
வணங்கினால் தேவியின் அருள் கிட்டும். கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு
நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும்.
கணவன்-மனைவி உறவு நலம் பெறவும் வேப்ப எண்ணெய் தீபம் உகந்தது. அவரவர்கள்
தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும்
பெறவழி செய்வது ஆமணக்கு எண்ணெய் தீபம்.
எள் எண்ணெய் (நல்லெண்ணை) தீபம் என்றுமே
ஆண்டவனுக்கு உகந்தது. நவக்கிரகங்களை
திருப்தி செய்யவும் ஏற்றது. மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர்
வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய்மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற
வேண்டும். மந்திரசித்தி பெற வேண்டுவோர்
விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய்,
நல்லெண்ணை, தேங்காய் எண்ணெய் ஆகிய
ஐந்து எண்ணெய்களையும் கலந்து விளக்கேற்ற வேண்டும்.
கணபதிக்கு தேங்காய் எண்ணெய் உகந்ததாகும்.
முருகனுக்கு நெய் தீபம் உபயோகப்படுத்துவ
து நல்லது.
நாராயணனுக்கு நல்லெண்ணெய்
ஏற்றதாகும்.
மகாலட்சுமிக்கு நெய்
உபயோகப்படுத்தலாம்.
சர்வ தேவதைகளுக்கு
நல்லெண்ணெய் உகந்தது.
குலதெய்வத்திற்கு
இலுப்பை எண்ணெய், நெய் மற்றும்
நல்லெண்ணெய் இவை மூன்றும்
உபயோகிக்கலாம்.
கடலை எண்ணெய், கடுகு
எண்ணெய், பாமாயில் போன்றவைகளைக்
கொண்டு ஒரு போதும் விளக்கேற்றவே
கூடாது. திசைகள் கிழக்கு-இந்தத் திசையில்
தீபம் ஏற்றி வழிபட்டால் துன்பம் ஒழியும்.
வீட்டில் உள்ள பீடைகள் அகலும். மேற்கு-இந்தத் திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் கடன்
தொல்லை, சனிபீடை, கிரகதோஷம்
பங்களிப்பதை இவை நீங்கும்.
வடக்கு-இந்தத்
திசையில் தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வமும்,
மங்கலமும் பெருகும்.
தெற்கு-இந்தத்
திசையில் தீபம் ஏற்றக்கூடாது.

என்னென்ன திரிகள் பயன்படுத்தலாம்?
*****************************************************************

தாமரைப்பூத்தண்டின் திரி: தாமரைப்
பூத்தண்டின் உள்பகுதியில் காணப்படும்
வெண்மை கலந்த பகுதியும், தண்டுப்
பகுதியின் உட்கூடும் நன்கு வெயிலில் காய
வைத்து அதிலிருந்து உருவாக்கப்பட்ட திரியை
விளக்கு வழிபாட்டிற்காக பயன்படுத்தினால்
முன்வினைக் கர்ம பாபங்கள் நீங்கும். பிறவித்
தளை நீங்கி மறுபிறப்பற்ற வாழ்வு நிலைத்து
நின்று வழிபடுவோர் வாழ்வை வளப்படுத்தும்.
பஞ்சுத்திரி : பொதுவாக பருத்தியினால்
திரித்து எடுக்கப்படுகின்ற திரி
விளக்குகளுக்கு தீபத்திரியாக
பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பான்மையானோர்
பருத்திப் பஞ்சினைத்தான் திரியாக
பயன்படுத்துகின்றனர். இது தெய்வ குற்றம்,
பிதுர்களால் ஏற்பட்ட சாபம், வம்சாவழிப்
பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படுத்திக்
கொடுக்கக்கூடியது. எனவே இந்த திரியால்
விளக்கேற்றுவது மிகுந்த பயன்தரும். நல்ல
பலன்களை பஞ்சுத்திரி ஏற்படுத்தும்.
வெள்ளைத்துணி திரி : வெள்ளைத் துணியாக
எடுத்து, அதைத் திரியாகத் திரித்து
பயன்படுத்துவதால் பலவித உத்தமமான
பலன்களை பெற முடியும். அதிலும்
வெள்ளைத் துணியை பன்னீரில் நனைய
வைத்து, பின் அதைக் காய வைத்து திரியாக
திரித்து வைத்துக் கொண்டு பயன்படுத்துவது
மேலும் பலன் தரக்கூடியதாகும்.
சிவப்பு வர்ணத் துணி திரி : சிவப்பு
துணியிலிருந்து திரிக்கப்பட்ட திரியானது விளக்கெரிக்க தீப தரிசன வழிபாடு செய்ய
பயன்படுத்தப்பட்டால் திருமண தடை நீங்கும்
மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பிறக்கும்
பேறு உண்டாகும். மஞ்சள் துணியாலான திரி :
இத்துணியாலான திரிக்கு தனி மகத்துவம்
உண்டு. எதிலும் வெற்றி பெற விரும்பும்
அன்பர்கள் பயன்படுத்த வேண்டிய திரி இது.
தேவியின் பூரண அருள் நமக்கு கிடைக்க இந்த
திரி பயன்படுத்தப்படுகின்றது. மனிதனுக்கு
ஏற்படும் வியாதிகள் தீரவும், செய்வினைகள்
நீங்கவும், காற்று சேட்டைகள் நீங்கி நலம்
பெறவும், எதிரி பயம் நீங்கவும். தம்பதிகள்
ஒற்றுமை ஓங்கவும் இது மிகவும் பயன்படும்
திரி எனலாம்.
வாழைத்தண்டின் நாரினால் ஆன திரி : வாழைத்தண்டினை நன்கு காயவைத்து
அடித்து பஞ்சு போலக்கி பின்பு அதனை
திரியாக எடுத்து விளக்கெரிக்க
பயன்படுத்தலாம். இது முன்னோர்களால்
ஏற்பட்ட சாபம், தெய்வ காரியங்களில் ஏற்பட்ட
பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மனசாந்தி,
குடும்ப அமைதி, குழந்தைப்பேறு
ஆகியவற்றை ஏற்படுத்தி தரக்கூடியது.
வெள்ளெருக்கந்திரி : வெள்ளெருக்கம்
பட்டையை ஊறவைத்து பிறகு காயவைத்து
அடித்து நாராக மாற்றித் திரியாகத் திரித்து
விளக்கிற்கு பயன்படுத்தினால்
செல்வச்செழிப்பு உண்டாகும். துர் ஆவிகளால்
பாதிக்கப்பட்டவர்களை அத்துன்பத்திலிருந்து
காப்பாற்றும் பிள்ளைகளின் நல்வாழ்வு
நீடிக்கும்.

விளக்கேற்றும்போது சொல்ல வேண்டிய
ஸ்லோகம் கீடா: பதங்கா:மசகாச்ச
வ்ருக்ஷõ:ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜாபவந்தி
நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!

பொருள்:
புழுக்களோ, பறவைகளோ அல்லது
கொசுவோ, நம் மாதிரி உயிருள்ள ஜீவனில்லை
என்று நினைக்கப்படுகிற மரமோ, தண்ணீரிலும்
பூமியிலும் எத்தனை வகையான
ஜீவராசிகளோ, உயர்ஜாதி மனிதனோ, தாழ்ந்த
குலத்தினனோ யாரானாலும் சரி…இந்த
தீபத்தைப் பார்த்துவிட்டால் அந்த ஜீவனுடைய
சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும்.
இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த
வடிவான அந்த இறைவனுடன் கலக்கட்டும்.
‘விளக்கினை ஏற்றி வெளியை
அறிமின்விளக்கினின் முன்னே வேதனை
மாறும்விளக்கை விளக்கும் விளக்கு
உடையார்கள்விளக்கில் விளங்கும் விளக்காவர்
தாமே!

வியாழன், 19 ஜனவரி, 2017

தைமாத தானதர்மமும் தர்பணமும்

ஒரு வருடத்தில் 12 அமாவாசை வந்தாலும் தை அமாவாசை சிறப்பு மிக்கதொன்று...
ஆயுள் காரகன் சனியின் மகரத்தில் சூரியன் பிரவேசிக்கும் காலத்தில் ஜோதி மகரஜோதி என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது..  மகர ராசியில் சந்திரனும் சூரியனுடன்  இணையும் சிறப்பான நாளே தைஅமாவாசை. இக்காலத்தில் நாம் ஆற்றும் புண்ணிய பலன்கள் தீராத நம் பிரச்சினைகள், நோய்நொடி, வம்பு வழக்குகளை தீர்த்து வைக்குமென நமது சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த தை மாதத்தில் வேறென்ன புண்ணியகாரியங்களெல்லாம் செய்யலாம்? சந்திரனின் அம்சமான வெல்லமும் பச்சரிசியும் தேன் ,நெய்யுடன் மாவிளக்கு இடுவது சிறப்பான பலனை தரும். அன்னதானம் செய்வதும் சுமங்கலிகளின் ஆசி பெறுவது  சிறப்பான புண்ணிய பலனை தரும். இந்த தைஅமாவாசை கடலில் தீர்த்தமாட முடிந்தால் சென்று தீர்த்தமாடி வாருங்கள். ருணரோகங்கள் தீரும்.

தை அமாவாசை அன்று பித்ருகளுக்கு தர்பணம் கொடுத்தால், ஸ்ரீ மகாவிஷ்ணு, சிவபெருமான் மற்றும் பித்ருக்களின் அருளாசிகளுடன் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். குழந்தைகளை வளர்த்த பெற்றோர், அவர்களின் காலம் முடிந்து  இறைவனடி சென்ற பிறகு, அவர்களுக்கு திதி தருவது, பிண்டம் தருவது, வழிபாடு செய்து வருவது போன்ற அவர்களுக்குரிய மரியாதையை சரியாக தந்தாக வேண்டும். அதைதான் பித்ரு கடன் என்கிறது சாஸ்திரம். இந்த கடனை அடைக்காத பிள்ளைகளின் வாழ்க்கை கலங்கும். இதனால் பித்ரு கடன் பட்ட பிள்ளைகளின் நெஞ்சமும் ஏதாவது ஒரு விஷயத்தில் கலங்கும்படி ஆகும். அதனால் கண்டிப்பாக பித்ரு கடனை நிறைவேற்ற வேண்டும். அப்படி செய்தால்தான் நன்மைகள் வரும் என்று சிவபெருமானே ஸ்ரீஇராமரிடம் கூறி இருக்கிறார்.
தை அமாவாசை அன்று பித்ருக்கள் பூலோகம் செல்ல யமதர்மராஜர், அனுமதி தருவார். அதனால் யம காவலர்கள், பித்ருக்களை அழைத்துக்கொண்டு சூரியன் இருக்கும் இடத்திற்கு வருவார்கள். அங்கிருந்து சூரியனின் வாகனத்தில் பூலோகத்திற்கு பித்ருக்களை அழைத்து வருவார்கள்.

பித்ருக்களை  அவரவர் இல்லத்திற்கு செல்ல அனுமதிப்பார்கள் யமதர்மராஜாவின் காவலர்கள். அப்போது பித்ருக்கள், தங்கள் பிள்ளைகளையும் உறவினர்களையும் பார்க்க மிகுந்த பாசத்துடனும், பசியோடும் வருவார்கள். அதனால், தை அமாவாசை அன்று பித்ருக்களுக்கு நிச்சயம் தர்பணம் தர வேண்டும். நாம் தரும் பிண்டமும், தண்ணீரும்தான் அவர்களுக்கு உணவு.  தை அமாவாசை நேரம் முடிந்த உடனே, யம தேவரின் காவலர்கள் மீண்டும் பித்ருக்களை அழைத்துக்கொண்டு யமலோகம் செல்வர். பித்ருக்களின் சாபம்பட்ட குடும்பத்தில்தான் துர் சம்பவங்கள் நடக்கும். தெய்வம் கூட கருனை காட்டாது – உதவி செய்யாது என்கிறது கருட புராணம். நாம் தரும் பிண்டம்தான் ஆத்ம ரூபமாக உள்ள முன்னோர்களின் பசியை தீர்க்கும் உணவாகும்.

விசேஷமான தை அமாவாசையில் பித்ருக்களின் பசியை போக்கி அவர்களின் ஆசியையும், இறைவனின் அருளையும் பெற்று சுபிக்ஷங்களை தடையின்றி பெறுவோம்.!

"தர்மம் தலைகாக்கும். தானம் விதிமாற்றும் "

வெள்ளி, 18 நவம்பர், 2016

அக்னிஹோத்ரமும் ஆத்மகாரகனும்...

எனது வாசகர்களிற்கும்; எனது blog இனை பின்தொடர்பவர்களிற்கும் எனது இந்நேர வணக்கம். இந்த பதிவானது ஜோதிடம் , ஆன்மிகம், மருத்துவம், பொதுவாழ்க்கை நெறிமுறை என்பவற்றை உள்ளடக்கியதாக அமைகிறது...

எனது வழமையான பதிவுகள் போல அல்லாது இது ஒரு கூறும் பதிவாக அமைகிறது... எழுதுவது பெரிதல்ல... அதனை படிப்பதும் பெரிதல்ல... அதன்படி வாழ்க்கையில் நடப்பதே பெரிய விடயம்.. எனவே இந்த பதிவு சிறிதென்றாலும் இதனை கருத்தூன்றி படியுங்கள்... பல கோணங்களில் சிந்தியுங்கள்... அதன்படி எமது இந்து சமய சாஸ்திரங்களை மதிக்கும் உத்தமசீலர்களாக வாழுங்கள். எமது சாஸ்திரங்களில் கூறப்பட்டவாறு நடவுங்கள்... அதுவே எனக்கு போதும்... அதுவே எனது வெற்றி என்று கூறிக்கொண்டு பதிவினுள் நகர்வோம்...

எமது இந்து சமய சாஸ்திரங்களில் சொல்லப்படாத விடயங்கள் என்று எதுவுமில்லை. சூரிய ஒளியும் காற்றும் நிறைந்த இடத்தில் லஷ்மிவாசம் செய்வாள் என்பது ஐதீகம். அதுவே உண்மையும் கூட. இங்கு நான் விஞ்ஞானத்தினை காரணம்காட்டி உண்மை என கூறவிரும்பவில்லை. அனுபவத்தினை காரணம் காட்டி உண்மை என கூறுகிறேன்.. இதுபற்றி மிக சுருக்கமான விளக்கத்தினை பார்ப்போம்...

பிரபஞ்ச சக்தியினை பெற சிறிது நேரம் செய்ய வேண்டிய சிறிய இலகுவான வேள்வியே 'அக்னிஹோத்ரம்' எனும் சாஸ்திர சொல்லினால் குறிகாட்டப்படுகின்றது. அக்னிஹோத்ரா சூழ்நிலை என்பது நமது வீட்டில் நம்மை சுற்றி உள்ள வெற்று வெளியில் உள்ள அதிர்வலைகளைக் கட்டுப்படுத்தி தூய்மை ஆக்கும். அது நம்முடைய நரம்பு மண்டலங்களை ஒழுங்குபடுத்தும். நம் வீட்டில் வைத்துள்ள செடிகொடிகளும் கூட அக்னிஹோத்ரா சூழ்நிலையில் நன்கு வளரும். நமது வீட்டில் அமைதி நிலைக்கும். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். தினமும் நான் செய்து முடித்த அக்னிஹோத்ரா சாம்பல் மிகவும் புனிதமானது. தெய்வீகத்தன்மை நிறைந்தது. நெற்றியில் நீறு போல் இட்டுக் கொள்ள அஷ்டஐஸ்வர்யமும் கிட்டும். வெற்றி நமைத் தொடர்ந்து வரும். கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். ஆன்மீக எழுச்சி உண்டாகும். அதன் சாம்பலை செடிகளுக்கு உரமாக இட்டால் செடிகளில் அபரித வளர்ச்சியைக் காணலாம். இது கண்கூடு. இது ஒரு புனித சுய அனுபவமும் கூட. சொன்னாலும் படித்தாலும் கேட்டாலும் கூடப் புரியாதது. செய்து அனுபவித்துப் பார்த்தால் மட்டுமே உள்ளம் உயர்நிலை அடையும். இது நிச்சயம். அக்னிஹோத்ரா புதிதல்ல. இது பற்றி நான்கு வேதங்களிலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டு உள்ளது. இந்த சொல்லினை இன்றைய மனிதர்களிடம் கேட்டால் "அப்படினா என்ன?" என்றுதான் கேட்பார்கள். ஒரு உதாரணம் வேண்டும் என்றால் எமது பாட்டன், பூட்டன் காலத்தில் அவர்கள் செய்த சமையல் முறையே ஒரு மிகச்சிறப்பான அக்னிஹோத்ரம் ஆக இருந்தது. எமது முன்னோர்கள் சமையலையில் நேரடி சூரிய ஒளி விழுமாறு அமைத்திருந்தனர். சூரிய ஒளி என்பதைவிட; ஆத்தமாகாரகனின் கதிர்கள் நாம் உண்ணும் உணவில் விழுவதால்; எமது உடலிற்கு ஏற்கக்கூடிய எளிய ஆனால் சக்திவாய்ந்த உணவாக அவை அமைந்திருந்தன. அத்துடன் அவை நுண்ணங்கி தொற்றற்ற உணவுவகைகளாகவும் இயற்கையான பாரம்பரிய உணவுகளாகவும் அமைந்திருந்தன... மண் சட்டிகளில் உணவு சமைத்தனர். செப்பு பாத்திரங்களில் நீர் அருந்தினர். ஜோதிடப்படி புதனின் கெடுபலன்கள் குறைக்கவும் மருத்துவப்படி சீரான இரத்த ஓட்டம், தாது பொருட்களை இலகுவாகவும் பெற்றனர். அந்த நீரும் தூய்மையானதாக இருந்தது. உணவு ஆரோக்கியமானதாக இருந்தது. அவர்கள் உணவு சமைத்த பின் முதலாவதாக அடுப்பிற்கும் பின்னர் கோமாதாவிற்கும் படைப்பர். பிறகே ஏனையவர்கள் உண்ணுவர். சாஸ்திரங்களை மதித்தனர். அதன்படி நடந்தனர். அவர்களின் இந்த தவவாழ்வே அவர்களையும் அவர்கள் சந்ததியினையும் தழைக்க செய்தது. அனால் இந்தக்காலத்தில் "அறிவியல், விஞ்ஞானம், நாவிற்கு சுவை, fast food எனும் துரித உணவுகள், நேரமின்மை, இறைவழிபாடு அற்றநிலை, அலுமினிய/ஈய பாத்திரத்தில் உணவு சமைத்தல், முறையற்ற/ சமையலறை என ஏராளமான விடயங்கள்" எம்மை நரகத்தை நோக்கி தள்ளுகின்றன என்றால் அது மிகையாகாது... ஆகவே பொதுநலமாக சிந்தியுங்கள்... செயற்படுங்கள்... ஓம் நமசிவாய... வாழ்க வளமுடன்...

ஆதங்கத்தோடும் அறிவுரைகளோடும் இவன்; பாரம்பரிய தெய்வீக ஜோதிடர் ஹரிராம்தேஜஸ்.. hariram1by9@gmail.com

சனி, 12 நவம்பர், 2016

மருத்துவ ஜோதிடம்

மனிதர்களின் உடல்நலம் சித்தமருத்துவப்படி வாதம், பித்தம், கபம் என்ற மூன்றின் நிலையைப் பொறுத்தே அமைகிறது. இதில் ஒன்று தன் அளவிற்கு அதிகமானாலும், குறைந்தாலும் நோய் வந்துவிடும். இதனை ஜோதிட ரீதியில் அணுகுவது இந்த பதிவின் நோக்கமாகும்...
கப நாடி:- உடல் கூற்றில் உறுப்பு மூலத்தையும், அதாவது டிஷ்யூவைக் குறிக்கும். அவற்றில் இருக்கும் திரவத்தை சரிசமமாக இருக்கும் நிலையை கட்டுப்படுத்தும். பொதுவாக அனைத்து டிஷ்யூக்களையும் குறிக்கும்.
கபம் அதிகமானால் கப தோஷம் ஏற்படும். தடித்த குட்டையான உருவமைப்புடையவராகவும் இருப்பார்கள். சுரப்பிகள் அதிகமான சுரக்கும் நிலையும், சளித் தொல்லையும் ஏற்படும். நீர் அதிகமாக வெளியேறும் நிலையும் வீக்கமும் ஏற்படும்.
வாத நாடி:- தொண்டையின் செயல்பாடு; நுரையீரல்; இரத்த ஓட்டத்தின் நிலை, மூட்டுகளின் செயல்பாடு, நரம்புகளின் தன்மை, இயக்கம் ; செரிமானம் இவற்றிற்கும் பொறுப்பாகும்.
வாதம் அதிகமானால் வாத தோஷம் ஏற்பட்டால் டிஷ்யூ மெதுவாக பாதிக்கப்படும். எந்தவியாதியானாலும் அவை நீடித்து நிலைத்திருக்கும் நிலை ஏற்படும். உடலின் பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தில் குறைபாடும் ஏற்படும். இதனால் உடலின் பகுதி இயங்காத நிலையும் படிப்படியாக உருவாகும். உடல் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படும்
பித்த நாடி:- உணவில் ஏற்படும் மாறுதலுக்கு அதாவது ஜீரணமாகும் நிலைக்கு காரணமாகும். உடலுக்கு சக்தியை கிரகித்துக்கொடுக்கும் செயலை செய்து வரும். பித்தம் அதிகமானால் பித்த தோஷம் ஏற்படும். செயல்பாட்டில் கட்டுப்பாடில்லாத நிலையை ஏற்படுத்தும். உடலில் வீக்கமும், இரத்த கசிவும் ஏற்படும்.

கிரகதத்துவ நாடி
---------------------------
சூரியன் நெருப்பு பித்தம்
சந்திரன் நீர் வாதம், கபம்
செவ்வாய் நெருப்பு பித்தம்
புதன் நிலம் வாதம், பித்தம், கபம்
வியாழன் ஆகாயம் கபம்
சுக்கிரன் நீர் வாதம், கபம்
சனி காற்று வாதம்
இராகு காற்று வாதம்
கேது நெருப்பு பித்தம்

இராசிகள் குறிப்பிடும் உடலின் பாகங்கள்.
----------------------------------------------------------------
1 மேஷம் .. தலை மற்றும் மூளையைக் குறிக்கும்.
2. ரிஷபம் .. முகம், பேச்சு, உள்நாக்கு, தொண்டைப் பகுதியைக் குறிக்கும்.
3. மிதுனம் .. கழுத்து, தோள் பட்டை, கைகள்.
4 கடகம் .. மார்புப் பகுதி, பெண்களுக்கு மார்பகம்.
5 சிம்மம் .. இருதயம், நாபி மலை நரம்புகளின் தொகுப்பு.
6 கன்னி .. வயிற்றின் மேல் பகுதி முதல் தொப்புள் வரை.
7. துலாம்... அடிவயிற்றுப் பகுதி முதல் இடுப்பு வரை.
8 விருச்சிகம் .. வெளிப்புற பிறப்புறுப்புக்கள்.
9 தனுசு .. தொடைப் பகுதி.
10 மகரம் .. முழங்கால் மூட்டுப் பகுதி.
11 கும்பம் .. கால் பகுதி, அதன் தொடர்புடைய பகுதி
12 மீனம் .. பாதம் அதன் தொடர்புடைய பகுதி.


நெருப்பு இராசிகளான மேஷம், சிம்மம், தனுசு இவை மூன்றும் பித்தத்தைக் குறிக்கும். நில ராசிகளான ரிஷபம், கன்னி, மகரம் இம்முன்றும் வாதத்தை குறிக்கும். காற்று ராசிகளான மிதுனம், துலாம், கும்பம் இவை மூன்றும் கலந்த நாடி குறிக்கும். நீர் ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் இவை மூன்றும் கபத்தைக் குறிக்கும்.
நெருப்பு இராசி .. மேஷம் சிம்மம் தனுசு; கிரகம்: சூரியன் செவ்வாய், கேது
நில ராசி .. ரிஷபம், கன்னி, மகரம்; கிரகம்: சனி, ராகு, சந்திரன், சுக்கிரன்
காற்று இராசி .. மிதுனம், துலாம், கும்பம் ; கிரகம்: புதன்
நீர் ராசி .. கடகம், விருச்சிகம், மீனம்; கிரகம்: சந்திரன், சுக்கிரன், குரு
மேலே குறிப்பிட்ட இராசிகளில் மேற்குறிப்பிட்ட கிரஹங்கள் இருந்தாலும், பார்த்தாலும் லக்கனத்திற்கு 6, 8, 12ஆம் பாவ அதிபதிகள் சம்பந்தப்பட்டாலும் அப்பகுதிகளைக் குறிப்பிடும் உறுப்புகளில் உடலின் பாகத்தில் வியாதிகள் ஏற்படும். உதாரணமாக, மேஷ ராசி தலைப்பகுதியைக் குறிக்கும். இதில் செவ்வாய், சூரியன் இருந்தாலும் பார்த்தாலும் பித்தத்தினால் பாதிப்பிற்க்கு உள்ளாவர்.

நவகிரகங்களும் உடல் தொடர்பும்..
------------------------------------------------------
சூரியன் - இதயம், எலும்பு, கண், பல், முதுகுதண்டு.
சந்திரன் - உடல் சக்தி, மனது, இரத்த ஓட்டம். 
செய்வாய் - இரத்த வீரியம், தசைகள், எலும்பு மஜ்ஜைகள், எலும்பு மூட்டுகள், பல், தைராய்டு.
புதன் - நரம்பு மண்டலம், புத்தி, தோல், தசைநார்கள்.
குரு - மூளை, மண்ணீரல், உயிரணுக்கள், உயிர்வாயு செயற்திறன், கொழுப்பு.
சுக்கிரன் - கர்ப்பபை, கணையம், சிறுநீரகம், இனவிருத்தி ஹார்மோன்கள். 
சனி - தோல், நரம்பு, கழிவு பொருட்கள், கால் சம்பந்தப்பட்டவை, மலட்டுத்தன்மை.
ராகு - நுரையீரல், மலட்டுத்தன்மை, நோயை விகாரபடுத்துவது.
கேது - இரைப்பையில் உள்ள அமிலம், மலட்டுத்தன்மை, நோயை மறைப்பது.


பிற்கால நூலான பலதீபிகையில் கிரகங்களுக்கான நோய்களைக் கீழ்க்கண்டவாறு காண முடிகிறது.

சூரியன்  - பித்தம், உஷ்ணம், சுரம், தேக எரிச்சல், சயம், இருதய ரோகம், கண்ணோய், தோல் எலும்புகளில் வரும் நோய்கள், அக்னி, ஆயுதம், விஷம் முதலியவற்றால் ஆபத்து
சந்திரன் - தூக்கமின்மை, சளி, குளிர்காய்ச்சல், இரத்தத்தில் ஏற்படும் வியாதிகள், மனநோய்
செவ்வாய் - தாகம், ரத்தரோகம், கோபம், பித்தம், குஷ்டம், தலைவலி
புதன் - காரணம் தெரியாத பயம், கண்வலி, கழுத்து, மூக்கில் வரும் நோய்கள், தோல் நோய்கள்
குரு - மயக்கம், கபம், காது நோய்
சுக்கிரன் - வாதம், சிறுநீரக நோய்கள், பால்வினை நோய்கள்

சனி - வாதம், கால், வயிறு இவைகளில் நோய், மாரடைப்பு, மயக்கம்

சூரியன் வலுவாக அமைந்த ஜாதகத்தினர் கட்டுமஸ்தான உடலமைப்பையும் நல்ல நோய் எதிர்ப்பு சக்தியையும் கொண்டிருப்பர். உடலின் கட்டமைப்புக்கு காரணகர்த்தா எனில் அது சூரியனுக்கும் லக்னத்திற்கும் உள்ள தொடர்புர்தான்.
ஜாதகத்தில் ஆறாமிடம் வியாதியை குறிப்பிடுகிறது. நோயின் வேதனையை எட்டாம் பாவமும் மருத்துவமனை செல்வதை பனிரெண்டாம் பாவமும் நோயிலிருந்து விடுபடுவதை ஐந்தாம் பாவமும் குறிப்பிடுகிறது.
கிரகங்களில் செவ்வாய் அறுவை சிகிச்சையை குறிப்பிடுகிறது. ஆனால் சனியே பிணி காரகன் என அழைக்கப்படுகிறது. 
நோய் பற்றிய ஜாதகரின் கேள்விக்கு பிரசன்னம் போடும்போது செவ்வாய், சூரியன், குரு மூவரும் பலமாய் இருந்தால் சாதகமான பலன் உண்டு.

ஞாயிறு, 23 அக்டோபர், 2016

கர்மா என்பது என்ன?

கர்மா என்பது என்னவென்றால் எமது மனதாலும் உடலாலும் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் கர்மாக்கள் ஆகும். இதனை நமது ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் 2 வகையாக பிரித்து உள்ளனர். 
1. நல்ல கர்மா/புண்ணியம்.
2. பாவ கர்மா/பாவம். 
நாம் செய்யும் எந்த பாவ, புண்ணிய கர்மாக்களை ஒரு வட்டப்பாதை எடுத்து திரும்பி நம்மிடமே வரும். அது சிறிய பாவ/புண்ணிய கர்மாக்கள் என்றால் சீக்கிரமே அதன் விளைவு நமக்கு ஏற்படும். பெரியளவிலான பாவ/ புண்ணியங்கள் என்றால் அது நம்மை வந்தடைய பல காலம் செல்லும். ஏன் அடுத்த பிறவியில் கூட நம்மை தொடரலாம். இந்த வட்ட பாதையில் அளவு என்பது காலத்தை குறிக்கும். ஓரு நல்லவர் தெரிந்து ஒரு சிறு தீங்கு/கெட்ட விஷயம் செய்வாராயின் அவரிற்கு மிகக்குறைவான காலத்திலேயே அதன் தீயவிளைவு அடிக்கும். அதாவது அந்த சிறு தீங்கு இற்கான தீய கர்மா சிறு வட்டம் போட்டு வந்து நம்மையே அடிக்கும். அதுவே ஒருவர் தெரிந்து பெரிய தீங்கு/கெட்ட விஷயம் செய்வாராயின் அவரிற்கு அதன் தீயவிளைவு திரும்பிவர நீண்டகாலம் எடுக்கும். நாமும் இதனை பார்த்துவிட்டு பாவம் செய்பவன் எல்லாம் நல்ல இருக்கான் நாமதான் இப்படி கஷ்டப்படுகிறோம் என்று நினைப்போம். அவர் செய்த பெரிய பாவத்திற்கான  தீய கர்மா பெரியதொரு வட்டம் போட்டு பல மடைந்து வேகத்தில் வந்து அவரை அடிக்கும் போது  அவரால் தப்பிக்கவே முடியாது. மரண அடி அடிக்கும். மிகவும் அதிகம் எனின் அடுத்தடுத்த ஜென்மங்களில் அதன் பலன் ஏற்படும். சில தீயவர்கள் செய்வதெல்லாம் அநியாயமும் பாவங்களுமாக இருக்கும். அத்துடன் அவர்கள் கோவில் சென்று இறைவனை வழிபடுவர்.  கோவிலுக்கு தானதர்மம் செய்வார்கள். நன்றாக இருப்பார்கள். இதனை பார்க்கும்போது நல்லவர்கள் மனம் சுக்குநூறாகி விடும். அவர்களுடைய இறை சேவைக்காக அவர்கள் பாவம் ஒரு அலுவுக்கு வரும்வரை அந்த இறைசக்தி பாதுகாக்கும். அதற்கும் மிஞ்சினால் இறைவனே தண்டனை வழங்கிவிடுவார் அல்லது அடுத்தடுத்த ஜென்மங்களில் அவர்களால் தப்பிக்கவே முடியாது. என்னதான் அசுரர்கள் சிவ வழிபாடு செய்து பல வரங்கள் பெற்று இருந்தாலும் அந்த இறைவனின் துணையாலேயே அவர்கள் இறுதியில் அழிக்கப்படுகின்றார்கள் என்பதை மறவாதீர்கள்...

இனி இது தொடர்பான ஒரு நீண்ட விளக்கத்தினை பார்க்க உள்ளோம். ஒரு இணைய பதிவில் பல புதிய கருத்துக்களை புகுத்தி பல திருத்தங்களும் மாற்றங்களுடனும் இந்த பதிவு அமைகிறது... எனது வலைப்பக்க வாசகர்களான உங்களுடன் பகிர்கின்றேன்..  அனைவரும் பொறுமையுடன் வாசியுங்கள்...  இக்கட்டுரையின் முடிவுப்பகுதியில் ஜோதிடன் என்ற வகையில் ஜோதிட ரீதியிலும் கர்மா பற்றிய சில கருத்துக்களை பார்த்துவிடுவோம்...

கர்மவினை பற்றிய வேறுவிதமான பார்வையே இப்பதிவு.

1. நல்லவர்கள் ஏன் கஷ்டபடுகின்றார்கள்?

2. கெட்டவர்கள் ஏன் எல்லா நலன்களுடன்
வாழ்கின்றார்கள்?

3. ஆன்மீகத்தில் காலடி எடுத்து வைக்கும் ஒருவனுக்கு ஏன் அதிக கஷ்டம் ஏற்படுகின்றது?

4. கர்மவினைகளை அனுபவித்துதான் தீர்க்க வேண்டுமா?

போன்ற பல கேள்விகளுக்கு முழுவிளக்கமே இப்பதிவு.

பதிவிற்குள் செல்வதற்குமுன் ஒரு கதையை பார்த்துவிடுவோம்.

சித்திரபுரம் என்ற ஊரில் சித்தன் என்ற ஏழை விவசாயி வாழ்ந்துவந்தான். அவன் குணத்தில் நல்லவனாகவும் சிறந்த பக்திமானாக
இருந்தபோதிலும் அவனுக்கு வாய்ந்த மனைவி கொடுமைக்காரியாக இருந்ததால் அவனது வாழ்க்கை மிகவும் கஷ்டத்திலேயே நகர்ந்தது.

வேலை நேரத்தை தவிர்த்து மற்ற நேரங்களை தியானத்திலும் பிராத்தனையிலும் செலவிட்டான். எந்த அளவிற்கு அவன்
பக்தியில் மனதை செலுத்துகின்றானோ அந்த
அளவிற்கு அவனை கஷ்டங்கள் சூழ்ந்து கொண்டன.

அதே ஊரில் அவனுக்கு வித்தன் என்ற சூழ்ச்சி குணமுடைய பணக்கார நண்பன் இருந்தான்.

தனது இன்பத்திற்காக எந்த ஒரு
கொடுமையான செயலையும்
குணமுடையவனாக அவனிருந்தான்.

அவனுக்கு நல்ல குணமுடைய பக்தியில் சிறந்த மனைவியும் அமைந்திருந்தாள்.

இருப்பினும் அவனுக்கு கடவுள் நம்பிக்கை என்பது துளிகூட இல்லை. அவனுக்கு
சித்தனின் கடவுள் நம்பிக்கையை கேலி செய்வது என்பது வாடிக்கையான வேலை.

இதன் காரணமாக ஒரு கட்டத்தில்
இருவரிடையே சண்டையே வந்துவிட்டது.

கோபத்தில் வெகுண்டெழுந்த சித்தன் இறைவன்மீது தனது பக்தி உண்மையாயிருந்தால்
இன்னும் ஒரு வாரத்தில் நீ செய்த
தவறுக்கெல்லாம் தண்டனை அனுபவிப்பாய் என்று சாபமிட தொடங்கினான். சிரித்துக்
கொண்ட வித்தன் அப்படி நடக்கவில்லை என்றால் நீ ஆன்மீகத்தை கைவிட வேண்டும்
என்ற சவாலுக்கு இழுத்தான்.

இதற்கு ஒப்புக்கொண்ட சித்தன் தீவிரமான பிராத்தனையில் ஈடுபட்டான்.

போட்டியின் கடைசி நாளும் வந்தது. அந்த நாளில்
வித்தனோ காட்டிற்கு சென்று தேவைக்கு. அதிகமான பறவைகளையும்
விலங்குகளையும் வேட்டையாடி கொன்று விருந்திற்காக வீட்டிற்கு எடுத்து வந்து கொண்டிருந்தான். வரும்வழியில் களைப்பு
தாங்காமல் ஒரு மரதினடியில் ஓய்வெடுக்க உட்கார்ந்தான். உட்கார்ந்த இடத்தில் எதோ
உருத்துவதுபோல் இருந்ததனால் என்ன? என்று விலக்கி பார்த்தான். கணக்கிட முடியாத
செல்வம் அங்கு புதைக்க பட்டிருந்ததை பார்த்து, அதையும் மூட்டையாக கட்டிக்கொண்டு இரட்டை சந்தேஷத்துடன்
வீடு திரும்பினான். இதற்கிடையே வயலில் வேலை செய்துகொண்டிருந்த சித்தனை மாடு முட்டி கடுமையான காயங்களுடன்
படுத்தபடுக்கை ஆக்கிவிட்டது விதி.

இப்படி ஒரு முட்டாள் கணவனுடன் வாழ்வது
அசிங்கம் என்று சித்தனின் மனைவி
அவனைவிட்டு நீங்கினாள். தனது நிலையை நினைத்து உள்ளும் வெளியும் ஒவ்வொரு
நொடியும் அழுதே தீர்த்தான். தான் பட்ட அவமானத்தால் இனி வாழ்ந்து பயனில்லை
என்ற முடிவுக்கு வந்தான் சித்தன். உடல் ஊனத்தால் அவனால் தற்கொலை கூட செய்து
கொள்ள முடியவில்லை.

எப்படியோ எழுந்து தன் விட்டிற்கு பின்னடியுள்ள கிணற்றில்
குதித்தான். திடீரென்று தன்னை யாரோ தூக்குவது போல் உணர்ந்தான். ஆம் எந்த
தெய்வத்தை அவன் பக்தியுடன்
வணங்கினானோ அதே தெய்வம் அவனை காப்பாற்றி காட்சியும் கொடுத்தது. உடலாலும்
மனதாலும் அவதிப்பட்ட அவனுக்கு வணங்க
தோனவில்லை, மாறாக சண்டை போட தொடங்கினான். தனது ஆதங்கத்தையும்
ஆத்திரத்தையும் கொட்டி தீர்த்தான்.

அனைத்தையும் பொருமையுடன்
கேட்டுகொண்டிருந்த கடவுளோ அவனை தன்னோடு அனைத்து கொண்டார். அவனின்
அரவணைப்பால் சற்று ஆறுதல் பெற்றான் சித்தன். இப்பொழுது கடவுள் பேச தொடங்கினார், சித்தா நீ இப்பிறவியில் நல்லவனாக பிறந்திருந்தாலும் முன்பிறவியில்
வித்தனை விட கொடுமைகாரனாக இருந்தாய்.

நீ உன் மனைவியை மதித்தது கூட
கிடையாது. மாறாக வித்தனோ முன்பிறவியில் நல்ல காரியங்களையே செய்து வந்தான்,
அதனால் இப்பிறவியில் அவனுக்கு சகல நன்மைகளும் கிடைத்தது. மாறாக உனக்கோ நீ
செய்த பாவங்களை அனுபவிக்க நேரிட்டது.

என்னை அனுதினமும் நீ வணங்கியதால் நீ அனுபவிக்க வேண்டிய கர்மத்தின்
பெருபாலனவையை நானே ஏற்றுகொண்டேன்,.மாறாக நீயோ அதில் சிறு பகுதியையே
அனுபவிக்கின்றாய். ஆன்மீகத்தை தொடங்கும் ஒருவன் முதலில் அவனது பாவபதிவையே
அனுபவிக்க தொடங்கின்றான், மாறாக அக்கிரமங்கள் செய்யும் ஒருவனுக்கோ அவன்
செய்த புண்ணியங்களை அனுபவித்தபின் அவன் பாவபதிவுகள் செயல்பட தொடங்கும்.

வித்தனுக்கு கிடைத்த புதையலே
அவனுடைய கடைசி புண்ணிய பதிவாகும்.

அவன் செய்த அனைத்து புண்ணியங்களும்
ஒட்டுமொத்தமாக செயல்பட்டு அவனுக்கு புதையலாக கிடைத்தது. இதுவரை நீ
அனுபவித்த கஷ்டங்களில் உனது அனைத்து பாவங்களும் கரைந்துவிட்டன. இனி
நடக்கவிருப்பதை நீயே உன் கண்ணால் பார்த்து
தெரிந்து கொள் என்று சில
அறிவுரைகளையும் கூறி மறைந்தார் கடவுள்.

நாட்கள் செல்ல செல்ல சித்தனின் உடல்நிலை நலம் பெற தொடங்கியது. அவனது நெருங்கிய
உறவினருக்கு வாரிசு இல்லாததால் அவரது
சொத்துக்கள் அனைத்தும் சித்தனுக்கு கிடைத்தது. நல்ல குணமுடைய மனைவியும்
சித்தனுக்கு அமைந்தாள். அதே சமயத்தில் வித்தனுக்கோ வினோதமான ஒரு நோய் தாக்கி
படுத்தபடுக்கையாகி விட்டான். அவனது மனைவியும் திடீரென்று இறந்துவிட, அவன்
கூட இருந்தவர்கள் அவனை ஏமாற்றி அவன்
சொத்துக்கள் அனைத்தையும்
பரித்துக்கொண்டு வெளியே துரத்திவிட்டனர்.

தனது நண்பனின் நிலை அறிந்து வருந்திய சித்தன், வித்தனையும் தன் இல்லத்திலேயே
தங்க செய்து உதவினான்.

ஒருவன் எந்த செயலை செய்தாலும் அல்லது
நினைத்தாலும் அதற்குரிய பலனே வினை எனப்படுவது. அது நல்லதாக இருந்தால்
நல்வினை, தீயதாக இருந்தால் தீவினை.

ஆனால் இந்த வினைகளிலிருந்து தப்பிக்க.விதிவிலக்குகளும் உண்டு. அதுதான் "பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை
ஏற்படுத்தி விடுவது". இதை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் ஒரு உதாரணத்தை
பார்த்துவிடுவோம்.

நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ ஒருவர் மீது கல்லை எறிந்தீர்கள் என வைத்துக்கொள்வோம்.

இது நீங்கள் செய்த செயல். அது அவர் காலில் பட்டு இரத்தம் வந்துவிடுகின்றது. இதை
வினை என்று எடுத்துக்கொள்வோம். அந்த
இடத்திலிருந்து நீங்கள் தப்பித்து
ஓடிவிட்டீர்களானால் அந்த நிகழ்வுக்கான
எதிர்வினை செயல்படும்.

எப்படியென்றால்
நீங்கள் ஒரு தெரு வழியே செல்லும்போது
உங்கள் கால் ஒரு கல்லில் மோதி இரத்தம் வர வேண்டும் என்ற ஒரு விதி செயல்படும்.

நீங்கள் அந்த வழியே செல்லும்போது இந்த
கர்மவினையிலிருந்து தப்பிக்க நினைத்தால்  அந்த கல்லில் உங்கள் கால் படாமல் செல்ல
வேண்டும். ஆனால் கர்மங்களிருந்து ஒருவன்
தப்பிக்க நினைக்கும்போது அதாவது அந்த கல்லை தாண்டி செல்ல முற்படும்போது ஒரு
மாடோ அல்லது வண்டியோ உங்களை குறுக்கே வந்து தள்ளிவிடும். முடிவாக கால்
பட வேண்டிய இடத்தில் தப்பிக்க
நினைத்ததனால் தடுக்கி விழுந்து அதே கல்லால் உங்கள் தலையில் அடிபட்டுவிடும்.

ஆனால் அவருக்கு அடிப்பட்ட உடனே அதற்காக
வருந்தி அவரிடம் மன்னிப்போ அல்லது மருத்துவ உதவி செய்து விடுகின்றீர்கள் என
வைத்து கொள்வோம். இங்கேயும் அதே கர்மவினைதான் செயல்படும்.

அதாவது நீங்கள் அந்த தெரு வழியே செல்லும்போது உங்கள்
கால் அந்த கல்லில் மோதி இரத்தம் வர வேண்டும் என்ற அதே விதிதான் செயல்படும்.

ஆனால் அது செயல்படும் விதம்தான் வேறு.

எப்படியென்றால் நீங்கள் அதே தெரு
வழியாகதான் செல்வீர்கள், ஆனால் உங்களை அறியாமல் மாட்டு சாணியிலோ அல்லது
சேற்றிலோ காலை வைத்துவிடுவீர்கள்.

இதனால் எந்த கல்லால் உங்கள் காலில் அடிபட வேண்டுமோ, அந்த கல்லில் உங்கள் காலில்
உள்ள சேற்றை துடைப்பதற்காக
தேய்த்துவிட்டு சென்றுவிடுவீர்கள். அதாவது
பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பை ஏற்படுத்திவிட்டு சென்றுவிடுவீர்கள். இதில்
அந்த பொருளுக்கும் உங்களுக்கும் எந்தவித சேதமும் ஏற்படவில்லை.

நீங்கள் செய்த செயலுக்கான விதிப்படி அந்த கல்லிற்கும் உங்கள் காலிற்கும் ஒரு தொடர்பு
ஏற்பட வேண்டும். அதை நீங்கள் செய்வதால் அந்த கர்மவினை அங்கேயே முடிவுபெறுகின்ற
து. இதைதான் " தலைக்கு வந்தது
தலைப்பாகையோடு போனது " என்பர் பெரியோர்கள். அந்த பொருளுக்கும் உங்களுக்கும் தொடர்பு ஏற்பட்டுவிட்டால்
உங்கள் செயலுக்குரிய எதிர்வினையும் நடந்துமுடிந்து விடுகின்றது. உங்கள்
செயலை கொண்டே வினையும், வினையை கொண்டே எதிர்வினையும், அந்த
எதிர்வினையை செயல்படுத்த அந்த பொருளும் நிர்ணயிக்க படுகின்றதே தவிர மற்றபடி
ஒன்றுமில்லை. இதைத்தான் " தீதும் நன்றும் பிறர் தர வாரா " என்றனர். எந்த செயலுக்கும்
வினை ஏற்பட கூடாது என்றால் "நான்"
என்பதை விட்டுவிட வேண்டும்.

ஆன்மீகத்தில் இதற்கு பெயர் பூரண சரணாகதி.

அந்த விதிவிலக்கு என்பது கூட
இவர்களுக்குதான். தன்னை அறிய
முற்படுவதால் அவர்களுக்கு தரப்படும்சலுகைகள்தான் இது. ஏன் அவர்களுக்கு
மட்டும்??

எந்த ஒரு வினைக்கும் நீங்கள் தான் காரணம் என்ற புரிதல் ஏற்படும்போது உங்களை சுற்றி
நடக்கும் அனைத்தையும் ஏற்று கொள்வீர்கள்.

கடவுளே! எனக்கு ஏன் இப்படி ஒரு வாழ்க்கை?

எனக்கு ஏன் இப்படி ஒரு கஷ்டம்?

கெட்டவனெல்லாம் நல்லா இருக்கானே! என்ற எண்ணங்கள் மாறி உங்கள் தவறுக்கான
வினைகள்தான் தற்போது நீங்கள்
அனுபவித்துவரும் கஷ்டங்கள் என்ற ஆழமான புரிதல் ஏற்படும். புரிதல் ஏற்படும்போது
எதையும் ஏற்றுகொள்ளும் பக்குவம் வந்துவிடும். அப்படிப்பட்ட பக்குவத்தை
நீங்கள் அடையும்போது, உங்களின் 95% கர்மங்களை உங்களுக்காக வேறு ஒருவர்
அனுபவித்து விடுவார். காரணம்!!

நீங்கள் அவர்மீது கொண்டுள்ள அதிகப்படியான
அசைக்கமுடியாத நம்பிக்கையே ஆகும். அந்த அவர் ஏற்கனவே பிறவிகடலை கடந்தவராக
இருப்பார்.

ஞானி ஒருவர் கூட்டம் நிறைந்த ஒரு தெரு வழியே சென்று கொண்டு இருந்தார்.

திடீர் என்று அங்கே உள்ள சாக்கடையில் குதித்துவிட்டு பக்கத்தில் உள்ள தண்ணீர்
குழாயில் காலை கழுவிவிட்டு
சென்றுவிட்டார். இதை பார்த்தவர்களுக்கு அவர்
பைத்தியகாரன் என்று தோனலாம்.

ஆனால் அவரை பொறுத்தவரை பொருளுக்கும்
அவருக்கும் தொடர்பை ஏற்படுத்தி கொள்வது ஆகும். ஆனால் அவர் ஏற்படுத்திய தொடர்பு
அவருடையது அல்ல!! அவரை நம்பி இருப்பவர்களின் கர்மவினைகளை தான் அவர்
அச்செயலின் மூலம் தீர்த்து வைக்கின்றார்.

இது எப்படி சாத்தியம்?? என்ற கேள்வி வரலாம்!! அந்த ஞானியை பொறுத்தவரை
அவர் செய்யும் எந்த செயலுக்கும் வினை என்ற ஒன்று ஏற்படுவது கிடையாது.

காரணம்? அவர் உள்ளே வெறும் வெற்றிடம் தான் உள்ளது.

 அதாவது அவருக்கு மனம் என்ற
ஒன்று கிடையாது!! உள்ளே சூன்யமாக தான்
இருக்கும்!! அவரிடம் எந்த எண்ணங்களும் உதிப்பதும் கிடையாது!! மறைவதும்
கிடையாது!! இதுவே " சும்மா இருப்பது "
என்று சொல்லப்படுகின்றது.

ஒருவன் அவர்மீது கொண்டுள்ள தீவிர பக்தியால் அந்த
வெற்றிடத்தில் இவனது எண்ணங்கள்
சுற்றிகொண்டிருக்கும். இவனுக்கு அன்று சாக்கடையில் விழுந்து அடிபட வேண்டும்
என்ற விதி இருக்கும், ஆனால் இவன்  உண்மையாக இருப்பதால் இவனுக்கு பதிலாக
அந்த ஞானி அந்த விதியை முடித்து
வைக்கின்றார். மேலும் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ள ஒவ்வொருவரின் எண்ண
அலைகளும் அங்கே உள்ள வெற்றிடத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும். இவர்கள் தன்
தவறை உணர்ந்து தனக்கு உண்மையாக நடக்க
தொடங்கும்போது அந்த ஞானி எதோ ஒரு செயலின் மூலம் இவர்களின் பாவபுண்ணிய
கணக்குகளை அழித்துவிடுவார்.

முடிவில் இவர்களும் அந்த ஞானியின் நிலைக்கே வந்துவிடுகின்றனர்.

அதனால் தான் ஞானிகள் அருகில் இருக்கும்போது எதையும்
கேட்காதீர்கள் என்று கூறுவது. காரணம்!!

நீங்கள் கேட்டுதான் பெறவேண்டும் என்ற
அவசியமே அங்கு கிடையாது. மாறாக நீங்கள்
கேட்க நினைப்பது கூட சிறியதாக தான் இருக்கும். அவர் கொடுக்க நினைப்பதோ கணக்கில் அடங்காதவையாக இருக்கும். இதற்கு அவரிடம் பூரண சரணாகதி அடைந்தலே
சிறந்தது ஆகும்.

இதில் பூரண சரணாகதி என்பது இனி அனைத்தும் உன் செயல் என பற்றுகளை துறப்பதுவே ஆகும்.

 "நான்" என்ற எண்ணத்திற்கு பதிலாக இனி எல்லாம் "நீ" என்ற
எண்ணத்தை கொண்டு வருவதே சரணாகதி.

அதற்குபிறகு உங்களுக்கென்று தனிப்பட்ட எந்தவொரு செயலும் இருக்காது, இருக்கவும்
கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் அவன் செய்வதாகவே இருக்க
வேண்டும்.

இறைவனை நோக்கிய உங்களது பிராத்தனை அல்லது வேண்டுதல் எந்த முறையில் இருக்க
வேண்டும் என்பதை விளக்குவதே இப்பதிவு.

மேலும் இப்பதிவு முந்தைய பதிவான கர்மவினையின் தொடர்ச்சி ஆகும்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும்
சூழ்நிலைக்கு தகுந்தவாறு தேவைகள் என்பது
மாறிக்கொண்டே இருக்கும். அந்த
தேவைகளுக்கு தகுந்தவாறு
வேண்டுதல்களும் மாறிக்கொண்டே இருக்கும்.

ஆனால் ஆன்மீகத்தில் ஓரளவு புரிதல் உள்ளவர்களை பொருத்தவரை, அவர்களுடைய
வேண்டுதல் என்பது அவர்கள் வாழ்நாளில் "ஒரே ஒருமுறை" தான் இருக்குமே தவிர
ஒவ்வொரு முறையும் இருக்காது.

ஏனென்றால் அவர்கள் முடிவான ஒன்றை முதலிலேயே
வேண்டியும் விடுவர். அந்த வேண்டுதலில்
அத்தனையும் அடங்கியும் விடும். இதை புரிந்துகொள்ள ஒரு சிறு கதையை பார்ப்போம்.

ஒரு ஏழை தாயின் மகனுக்கு படிப்பு அவ்வளவாக வரவில்லை. அவளுக்கு.தெரிந்ததெல்லாம் அவள் வழிபடும் தெய்வம்
மட்டும்தான். தன் மகன் பரிட்சையில் தேர்ச்சி
பெற்று நல்ல வேலைக்கு செல்ல வேண்டும்
என்பது அவள் கனவு.

 கடவுளிடமும் இதை
குறித்து வேண்டுதல் வைக்கவே, மகனும் பரிட்சையில் தேர்ச்சி பெற்றான். ஆனால்
இவனது வினை வேலை கிடைக்கவே இல்லை.

மறுபடியும் கவலை கொண்ட தாய் வேண்டவே
மகனுக்கு நல்ல வேலையும் கிடைத்தது.

சிறிது காலம்தான் சென்றது மகனுக்கு விபத்து
ஏற்பட்டு படுக்கையில் இருந்தான். அத்தாய்க்கு தெரிந்ததெல்லாம் அவனே என்பதால் மறுபடியும் ஒரு வேண்டுதல்!!

இதுவே அத்தாய் கடவுளே "எனக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் கொடு"
என்று ஒரே ஒருமுறை மட்டும்
வேண்டியிருந்தால், அவள் வாழ்க்கை வசந்தமாகி இருக்கும்.

புரியும்படி கூற
வேண்டுமென்றால் ஒருவனுடைய வேண்டுதல் என்பது நிரந்தரமான முடிவான ஒன்றாக இருக்க
வேண்டும். அத்தாய் வேண்டியது எல்லாமே தற்காலிகமான தீர்வை தரக்கூடியது என்பதால்
ஒவ்வொரு முறையும் வேண்ட வேண்டிய அவசியம் இருந்தது. மேலும் எதிர்வரும்
கர்மவினை இதுதான் என்பது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கூடவே எனக்கு
இந்த தேவை நிறைவேறினால் நான்
நிம்மதியாக இருப்பேன் என்ற தவறான கணக்கை போட்டுக் கொண்டு தற்காலிக
தீர்வை நாடுகின்றோம்.

உண்மையில் எந்த ஒன்றில் எல்லாம் அடங்குமோ!! அடக்கமோ!! அந்த ஒன்றை
வேண்டுதலாக வைக்க வேண்டும். அப்படி.அந்த வேண்டுதல் நிறைவேறும் பொழுது
அவனுக்கு அனைத்தும் வசமாகி விடுகின்றது.

எனவே அவனது வேண்டுதல் என்பது ஒரே ஒருமுறையோடு முடிவடைந்து விடுகின்றது.

இதில் உங்களை சுற்றி உள்ளவர்களும் பயன்
பெறுவர். எப்படியென்றால் உங்கள்
அமைதியும் சந்தோஷமும் உங்களை சுற்றி
உள்ளவர்களையும் சார்ந்தே உள்ளது.

உங்கள் தாய்க்கு உடம்பு சரியில்லை என்றாலோ,
உங்கள் மனைவி கோபபட்டலோ, உங்கள்முன்.ஒரு நாய் குட்டி கஷ்டப்பட்டாலோ, உங்களுக்கு
பணக்கஷ்டம் ஏற்பட்டாலோ உங்களால் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்க
முடியுமா?? முடியாதல்லவா!!

எனவே உங்கள்
அமைதி என்ற வேண்டுதல் நிறைவேற.உங்களை சார்ந்த மற்றும் உங்களை
சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கை தரமும் நல்லவைகளாக மாற்றம் பெறகின்றன.

இப்பதிவு உங்களுக்கு தெளிவாக புரிந்தால்  இறைவனை நோக்கிய உங்களது
பிராத்தனையும் ஒருமுறைதான்!!

******************************************************

சனாதன தர்மத்தின் அடிப்படை போதனைகளுள் ஒன்று கர்மநியதி. கர்மா என்றால் வினை என பொருள்படும்.

வினை என்றால் செயலாகும். ஆகவே, கர்மா என்றால் செயல். கர்மநியதி ஒரு பிரபஞ்சநியதி (universal law).

→ கர்மா (காரணம் – விளைவு)

கர்மா என்ற பிரபஞ்சநியதி, காரணம் மற்றும் விளைவு ஆகிய இரண்டின் அடிப்படையில் செயல்படுகின்றது. ஒரு செயலின் காரணம் நன்மையானதாக இருந்தால், அந்த செயல் நன்மையை விளைவிக்கும்.

 அதுவே ஒரு செயலின் காரணம் தீமையானதாக இருந்தால், அந்த செயல் தீமையை விளைவிக்கும்.

→ மூன்றுவகை கர்மா
கர்மா மூன்று வகைப்படும்.

அவை:

1) சஞ்சித கர்மா – முந்தைய பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள நல்ல மற்றும் தீய கர்மாக்களின் மொத்த மூட்டை தான் சஞ்சித கர்மா.

2) பிராரப்த கர்மா – சஞ்சித கர்மாவின் ஒரு சிறுபகுதி தான் பிராரப்த கர்மா. இது இந்த பிறவியில் அனுபவிக்கவேண்டிய நல்ல மற்றும் தீய கர்மபலன்கள்.

3) ஆகாமி கர்மா – இந்த பிறவியில் செய்யும் நல்ல மற்றும் தீய கர்மாக்கள் ஆகமி கர்மா எனப்படும். இவை பிறவியின் இறுதியில் சஞ்சித கர்மாவோடு சேர்க்கப்படும்.

→நல்ல கர்மா மற்றும் தீய கர்மா

இதுதான் நல்ல கர்மா, இதுதான் தீய கர்மா என்று நிலையாக கூறிவிட இயலாது. செயல் என்பது இடம், சூழ்நிலை ஆகியவற்றை பொறுத்து வேறுபடும். ஒருவன் தன்னுடைய செயலின் காரணம் நன்மையானதா தீமையானதா என்று ஆராய்ந்து அறியும் பக்குவத்தை சனாதன தர்மம் புகட்டுகின்றது.

அதற்காக தான் பல புராணங்களும் இதிகாசங்களும் இந்துதர்மத்தில் உள்ளன. மற்றவர்களின் செயல்களால் நாம் கற்றுக் கொள்ளும் பாடம் அளப்பரியது.

கர்ணனை பலர் மத்தியில் கேலிசெய்து அவமானப்படுத்தினாள் திரௌபதி, அந்த கர்மவினையின் விளைவால் அவள் பலர் மத்தியில் அவமானப்பட நேரிட்டது.

ஒருதீங்கும் இளைக்காதவனை சுட்டுக் கொல்வது தீய கர்மா, ஆனால் நாட்டையே அழிக்கும் நோக்கத்தில் செயல்படும் தீவிரவாதியை ஒரு ராணுவவீரன் கொல்வது தீயகர்மா ஆகாது.

ஏனென்றால், ஒரு ராணுவவீரனின் கடமை என்ன? நாட்டுமக்களைத் தீவிரவாதிகளிடமிருந்து காப்பாற்றவேண்டும் என்பதே.

அவனின் கடமையிலிருந்து அவன் பின்வாங்கினால், அதுதான் அவனுக்கு தீயகர்மா. இதனால் தான் திருவள்ளுவர், கொல்லாமை எனும் அதிகாரத்தில் ஓருயிரையும் கொல்லக் கூடாது என்றும்; செங்கோன்மை எனும் அதிகாரத்தில் ”கொடியவர்களைக் கொலைத் தண்டனையால் அழிப்பது பயிர்களைக் காக்க களையைப் பிடுங்குவது போல” எனக் குறிக்கிறார். திருவள்ளுவர் முரணான கருத்துகளைக் கூறுவாரா? இல்லை.

 கொல்லாமை எனும் அதிகாரத்தை சன்னியாசிகளுக்கும், செங்கோன்மை எனும் அதிகாரத்தை அரசர்களுக்கும் இயற்றியுள்ளார்.

எந்தவொரு உயிரையும் கொல்லக் கூடாது என்பது சன்னியாசிகளின் தர்மம்; நல்லவர்களைக் காப்பதற்காக தீயவர்களை அழிக்கவேண்டும் என்பது அரசனின் தர்மம். (அரசன் – நாட்டின் தலைவன்; சன்னியாசி – உலகவாழ்வை துறந்தவன்)
ஆகவே, ஒரு செயலை விட அந்த செயலின் பின்னால் இருக்கும் காரணம் தான் மிக முக்கியமாகும்.

ஒரு செயலை எந்த காரணத்திற்காக செய்கிறோம் என்பதை ஆராயவேண்டும். அந்த செயல் சுயநலமற்றதாக இருக்கவேண்டும்; எந்த அப்பாவி உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்காததாக இருக்கவேண்டும்; தர்மநியதிகளையும் இயற்கைநியதிகளையும் மீறாதபடி இருக்கவேண்டும்; சட்டவிதிமுறைகளை மீறாதபடி இருக்கவேண்டும்.

→ கர்மாவும் மறுபிறப்புச் சுழற்சியும்

ஒவ்வொரு ஆன்மாவும் தன்னுடைய செயலின் விளைவுகளை அனுபவித்து, அதனால் பக்குவநிலை அடையவே மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறப்பிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆன்மாவும் செயல்களின் நல்ல மற்றும் தீய விளைவுகளை அனுபவித்து தீரவேண்டும் என்பது பிரபஞ்சநியதி. சில ஆன்மாக்கள் வரம்புமீறிய தீயசெயல்களின் விளைவுகளை அனுபவிக்க நரகலோகங்களுக்கும், அளவற்ற நற்செயல்களின் விளைவுகளை அனுபவிக்க சொர்க்கலோகங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

பிறப்பெடுக்கும் ஆன்மாக்கள் செயலின்றி இருத்தல் இயலாது. செயல் புரியும் பொழுது அதன் வெளிப்பாடு நல்வினை - தீவினைகளாக உருவெடுத்துப் பின் ஆகாமி வினையில் சேர்க்கப்படுகிறது. நல்வினைகள் - தீவினைகள் ஆகிய இரண்டுமே பிறவியில் ஆழ்த்தவல்லது. முக்தி நிலையான பிறவாமைக்கு இவ்விரு வினைகளும் தடைக் கற்கள். இவ்விரு வினைகளையும் ஒழித்தலே முக்திக்கான வழியாம்.

வினைகளின் பலனை அனுபவிக்க பிறப்பெடுத்தே தீர வேண்டும். அது நல்வினைக்கு கிடைக்கும் நற்பலனாகவும் இருக்கலாம், தீவினைக்கு கிடைக்கும் தீயபலனாகவும் இருக்கலாம்.

ஒவ்வொரு ஆன்மாவும் ஏற்று வரும் பிராரப்த கர்மாவை (அதாவது இப்பிறவியில் தீர்த்து முடிக்க வேண்டிய கர்மாக்கள்) பிறவிக் காலத்திற்குள் முழுவதும் அனுபவித்து விடுகிறது. எனினும் ஆகாமிய வினைகளும் (அதாவது இப்பிறவியில் ஆன்மாக்களின் நல்வினைகள்-தீவினைகள்) பெரும் அளவு சேர்ந்து முடிவில் சஞ்சித வினையாக மாறுவதால் சஞ்சித வினைக் குவியல் என்றும் தீர்வதில்லை.

சஞ்சித வினைகள் முழுவதுமாக அனுபவித்துத் தீர்க்கப்படும் வரை ஆன்மாக்களுக்கு பிறவி தொடர்ந்து வரும். பிறவிகளுக்குக் காரணம் கர்மா. கர்மாவுக்குக் காரணம் பிறவிகள். பிறவிச் சுழற்சி என்று பகவத் கீதை இதையே குறிக்கிறது. எண்ணற்ற பிறவிகளுக்குப் பின்னரே ஒரு ஆன்மாவுக்கு மானிடப் பிறவி வாய்க்கிறது என்றும் சாத்திரம் அறிவிக்கிறது. ஆயினும், எப்படி கர்மாக்களை எல்லாம் அழித்து பிறவாமை எனும் நிலையை அடைவது?

பகவத் கீதையில் பகவான் அதற்கான வழியை மிகவும் அழகாக எடுத்துரைக்கிறார்.

எல்லோர்க்கும் நன்மை பயக்கும் காரணங்களை உடைய செயல்களையே புரியவேண்டும். அந்த நற்செயல்களின் பலன்களைத் துறந்துவிட வேண்டும். நல்ல காரியங்கள் செய்வது பின்னாளில் எனக்கு நற்பலன்கள் வருவதற்காக என்று கருதாமல், நல்ல காரியங்கள் செய்வது என்னுடைய ஆத்மதிருப்திக்காக என்ற எண்ணத்தை முழுமையாக கொண்டிருக்க வேண்டும்.

 செயல்களின் பலன்களை எல்லாம் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட வேண்டும்.

இதனால் நம்முடைய கர்மப் பலன்களை எல்லாம் இறைவனே பொறுப்பேற்றுக் கொள்கிறார். இதனால் தான், கண்ணன் கர்ணனிடம் வந்து கர்ணன் ஆற்றிய நற்தொண்டுகளுக்கான பலன்களை எல்லாம் தானமாக கேட்டான். தான் ஆற்றிய நற்தொண்டுகளின் பலன்களை எல்லாம் கர்ணன் இறைவனுக்கே தானமாக கொடுத்துவிட்டு, கர்மங்கள் எல்லாம் தீர்ந்து முக்திநிலை அடைந்தான்.

லக்கினத்தில் (பிறப்பு) இருந்து 12ம் பாவகம் (இறப்பு) வரை ஒரே தொடர்ச்சியாக நன்மை தரும் பாவங்களோ அல்லது துஷ்ட ஸ்தானங்களோ அமையவில்லை.ஒருவருக்கு தொடர்ச்சியாக நன்மைகளும் ஏற்படுவதில்லை... தீமைகளும் ஏற்படுவதில்லை.... நன்மையையும் தீமையும் எமது முயற்சிக்கான பலன்களை தரும் பாவங்களும் பாவங்களும் மாறி மாறி அமைந்ததிலிருந்து இதனை விளங்கிக்கொள்ளலாம். இதில் நாம் வாழ்க்கையில் செல்ல தீர்மானிக்கும் எமது உடல், உள, சமூக(சூழ்நிலைகள்) நிலையினை தீர்மானிப்பது லக்கினம் ஆகும். ஆகவே லக்கினம் (பிறப்பு) முதலான மோட்சம் (இறப்பு) வரையான எமது வாழ்க்கைப்பயணத்தினை தீர்மானிப்பது லக்கினம் ஆகும். 12ம் வீட்டிற்கு அடுத்த வீடாக ஜோதிடத்தில் லக்கினம் (1ம் வீடு) உள்ளது. அதாவது 12 இற்கு பின்னர் 13 வராது மீண்டும் ஆரம்பத்தில் இருந்து 1 என தொடங்குகின்றது. எனவே இது முற்பிறப்பில் நாம் வாழ்ந்து மடிந்தபின்னர் இந்த பிறவியில் உலாவரவுவதற்கான சகல அமைப்புக்களும் "கர்மா" எனப்படும் மாபெரும் இயக்க சக்தியினால் ஆளப்படுகிறது.காலபுருஷனுக்கு 4இல் உச்சம் பெரும் குருவானவர் இறைவன், நாம் செய்த புண்ணியங்களை குறிப்பவர். அத்துடன் தர்மம், இறையருளினை குறிக்கும் 9ம் வீட்டிற்கும் இவரே அதிபதி. இவர் காலபுருச தத்துவப்படி 4ம் இடமான கடகத்தில் உச்சம் பெற்று 8, 10 , 12 எனும் பாவங்களை பார்ப்பதால் எமது கஷ்டங்கள், துன்பங்கள், ஆயுள் தோஷம், எமது வாழ்க்கைமுறை, பழைய கர்மாக்களை தீர்த்தல், இறையடி சேர்த்தல் ஆகியவற்றை இறைவனை உண்மையாக நேசிப்பதன் மூலம் பெற முடியும். அத்துடன் கர்மத்தினை குறிக்கும் 10ம் இடமான மகரத்தில் குரு நீச்சம் பெறுவதால் இறையருள் இன்றிய நிலையில் நாம் கர்மாக்களை அனுபவித்து தீர வேண்டும் என்றும் நமக்கு நன்மையான பலன்கள் எல்லாம் அடிபட்டு போகும் என்றும் கூறி நிற்கின்றார். இறையருள் ஜனன ஜாதகம் என்றால்; கோள்சாரமாக தசாபுக்தியினை குறிப்பிடலாம். அதாவது இடையிடையே ஏற்படும் மேலதிக மாற்றங்கள்.....
உண்மையாக மோட்ச்சத்தினை பெற்றவன் அதாவது 12ம் வீடு நிறைவு பெற்றவன் மீண்டும் முதலாம் வீடிற்கு இறங்க மாட்டான். (அதாவது மீண்டும் பிறப்பெடுக்க மாட்டான்.)
இதனை வரிசையாக லக்கினம் முதற்கொண்டு ஒவ்வொரு பாவத்திற்கும் விரிவாக்கி எழுதிக்கொண்டே போகலாம்..

இந்த எளிய ஆன்மீக ஜோதிட கருத்துக்கள் உங்களை தர்ம வழியில் அழைத்துச்செல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்...

நன்றி,
வணக்கம்.

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.