ஜோதிடம் எனும் தெய்வீக சாஸ்திரம்


widgeo.net

ஞாயிறு, 31 ஜூலை, 2016

ஆடிமாதமும் குருப்பெயர்ச்சியும்

பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு பகவான் வாக்கிய சித்தாந்தப்படி வரும் துர்முகி வருடம் ஆடி மாதம் 18-ஆம் தேதி, 02-08-2016 செவ்வாய்கிழமை காலை 09.27 (08.37 நாழிகைக்கு ) கன்னி ராசிக்கு பெயர்ச்சியாகி 02-09-2017 வரை கன்னி ராசியில் சஞ்சாரம் செய்யுவுள்ளார். கன்னியில் சஞ்சரிக்கும் குரு அதிசாரமாக துலா ராசியில் 17-01-2017 முதல் 10-03-2017 வரை சஞ்சரிக்க உள்ளார்.
(திருக்கணிதப்படி 11-08-2016 முதல் 11-09-2017 வரை).

கன்னி ராசிக்கு மாறும் குரு வால் அதிகம் ஆதாயம் அடையும் ராசியினர்/ குருபலம் பெறும் ராசியினர் - ரிசபம்,சிம்மம்,விருச்சிகம்,மகரம்,மீனம்

 ரிசபம் ராசியினருக்கு ராசிக்கு ஐந்தாம் ராசிக்கு குரு வருகிறார்...இது குருபலமாகும்...-எங்கும் எதிலும் வெற்றி,நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்..

சிம்மம் ராசியினருக்கு தன குடும்ப ஸ்தானத்தில் குரு வருகிறார்...கடன் பிரச்சினைகள் தீர்க்கும் வருமானம் அதிகரிக்கும்..

விருச்சிகம் ராசியினருக்கு லாபஸ்தானத்தில் குரு வருகிறார் லாபம் அதிகரிக்கும் வருமானம் உயரும்,.கடன்கள் அடைபடும்...தொழில் சிக்கல் தீரும்.

மகரம் ராசியினருக்கு பாக்யஸ்தானத்தில் குரு வருகிறார் இதுவரை அமையாத பாக்யம் ஒன்று அமையும்...கிடைக்காத ஒன்று இல்லாத ஒன்று கிடைக்கும்...தெய்வ அருள் உண்டாகும்...

மீனம் ராசியினருக்கு அஷ்டம சனி முடிந்த பின்னர் வரும் நல்ல காலம்.7ல் வரும் குரு பகவான் தொழில் சிக்கல்களை நீக்கி உயர்வை கொடுப்பார்..

மேஷம் - எதையுமே உடனே கிரகித்துக்கொள்ளும் ஆற்றல் மிக்கவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்ந்து சுப பலன்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 6-வது வீட்டுக்குள் பிரவேசிக்கிறார். சின்னச் சின்ன இழப்புகளும், ஏமாற்றங்களும் இருக்கும் என்றாலும், அதற்காக அஞ்ச வேண்டாம். எந்த ஒரு காரியத்தையும் நன்கு யோசித்துச் செய்தால் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்.

ரிஷபம் - எந்தச் சூழலிலும் மற்றவர்களின் தயவில் வாழ விரும்பாதவர்கள் நீங்கள். இதுவரை உங்களின் ராசிக்கு சுக ஸ்தானமான 4-ம் இடத்தில் அமர்ந்து, உங்களைப் பல வகைகளிலும் சிரமப்படுத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ம் வீட்டில் அமர்கிறார். இதனால் உங்களுடைய அடிப்படை வசதி வாய்ப்புகள் பெருகும். எதிலும் வெற்றி உண்டாகும். கடன் தொல்லைகள் குறையும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் உண்டாகும். சேமிக்கத் தொடங்குவீர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். குழந்தை பாக்கியம் உண்டாகும்.

மிதுனம் - யதார்த்த நிலையை உணர்ந்து செயல்படுபவர்கள், நீங்கள். இதுவரை உங்களின் ராசிக்கு 3-ம் வீட்டில் அமர்ந்து உங்களை முடக்கி வைத்திருந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 4-ம் வீட்டில் அமர்வதால், எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பிரச்னைகளை அறிவுபூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் அணுகுங்கள். சுற்றியிருப்பவர்களில் நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை அறிவதில் குழப்பம் ஏற்படும். எவ்வளவு பணம் வந்தாலும் செலவுகள் துரத்தும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். உத்தியோகத்தின் பொருட்டோ, வீண் சந்தேகத்தாலோ தம்பதிக்கு இடையே பிரிவுகள் ஏற்படலாம்.

கடகம் - உலக நடப்புகளை உன்னிப்பாக கவனிப்பவர்கள், நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டில் அமர்ந்து பலன்களை அருளிய குருபகவான், இப்போது 3-ம் வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் சஷ்டம-பாக்கிய ஸ்தானாதிபதியான குருபகவான் மூன்றாம் வீட்டில் மறைவதால், உங்களின் அணுகுமுறையை மாற்றிக்கொள்வது நல்லது. வேலைகளை முடிப்பதில் இழுபறி நீடிக்கும். தன்னம்பிக்கை குறையும். கணவன்-மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அன்பும், அந்நியோன்யமும் குறையாது.

சிம்மம் - காரியத்தில் கண்ணாக இருந்து காய் நகர்த்தும் அன்பர்கள் நீங்கள். இதுவரை ஜன்ம குருவாக அமர்ந்து, பல வகைகளிலும் இன்னல்களைத் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை 2-ம் வீட்டில் அமர்வதால், புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் நல்லபடியாக நிறைவேறும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். நோய்களில் இருந்து விடுபடுவீர்கள்.

கன்னி - கலாரசனை உள்ளவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் இருந்து வீண் விரயங்களையும், பணப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தி வந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்குள் அமர்கிறார். ஜன்ம குரு என்று கலக்கம் கொள்ள வேண்டாம். பொறுப்புகள் அதிகரிக்கத்தான் செய்யும். ஒரே சமயத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டு செய்ய வேண்டி இருக்கும். கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவுகள் வரக்கூடும். ராசியிலேயே குரு அமர்வதால், உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப் பாருங்கள். பணம் எவ்வளவுதான் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் துரத்தும். அவ்வப்போது அவநம்பிக்கை வந்து நீங்கும்.

துலாம் - நடுநிலைமை தவறாதவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து கொண்டு நினைத்த காரியங்களையெல்லாம் நிறைவேற்றியதுடன், பதவி, அந்தஸ்தையும் தந்த குரு பகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை விரயஸ்தானமான 12-ம் இடத்துக்கு வருகிறார். சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டி இருக்கும். மனக் குழப்பம் அதிகரிக்கும். வீண் கவலைகள் மனதை வாட்டும். வழக்குகளில் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம் - கேள்விக் கணைகள் தொடுப்பதில் வல்லவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு, உங்களைப் பலவகைகளிலும் அலைக்கழித்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால், இனி முன்னேற்றம் உண்டாகும். எதிலும் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கிடைக்கும். கொடுத்த கடன் திரும்பும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். புகழும் செல்வாக்கும் கூடும். மழலை பாக்கியம் கிடைக்கும்.

தனுசு - வளைந்து கொடுக்கத் தெரியாதவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு புதிய அனுபவங்களைத் தந்து, உங்களை முன்னேற்றப் பாதையில் நடத்திய குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். பத்தில் குரு, பதவிக்கு ஆபத்து என்று அச்சம் கொள்ளவேண்டாம். ஓரளவு நன்மையே உண்டாகும். வேலைச் சுமை அதிகரிக்கும். உங்கள் உழைப்பையும் திறமையையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். சிலர் வேலையின் காரணமாக குடும்பத்தை விட்டுப் பிரிய வேண்டி இருக்கும். கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வரும்.

மகரம் - மனச்சாட்சிப்படி நடப்பவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் அமர்ந்து மன இறுக்கத்தையும், வீண் அலைச்சல்களையும் கொடுத்து வந்த குருபகவான், இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்களின் பாக்கிய ஸ்தானமான 9-ம் வீட்டில் அமர்வதால், புதிய பாதையில் பயணித்து சாதிப்பீர்கள். பிரச்னைகளை எதிர்கொள்ளும் ஆற்றல் உண்டாகும். தன்னம்பிக்கை கூடும். கணவன் - மனைவிக்குள் அந்நியோன்யம் கூடும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். குருபகவான் தனது 5-ம் பார்வையால் உங்களின் ராசியைப் பார்ப்பதால், ஆரோக்கியம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். புது பதவி, பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

கும்பம் - மற்றவர்களின் வெற்றிக்காகப் பாடுபடுபவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து கொண்டு குடும்பத்தில் மகிழ்ச்சியையும், பதவி, புகழ், கௌரவத்தையும் தந்த குருபகவான், 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் மறைவதால், எதிலும் பொறுமையும் நிதானமும் தேவை. நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டி இருக்கும். எவ்வளவுதான் பணம் வந்தாலும், பற்றாக்குறை நீடிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவு செய்யுங்கள். எதிர்காலத்தைக் குறித்த அச்சம் வந்து போகும். உங்களது திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள்.

மீனம் - இயற்கையை உணரும் சக்தி கொண்டவர்கள் நீங்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் அமர்ந்துகொண்டு, பலவகைகளிலும் உங்களை சிரமப்படுத்திய குருபகவான் இனி 2.8.16 முதல் 1.9.17 வரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்க்க இருப்பதால், தன்னம்பிக்கை கூடும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். கடனாகக் கொடுத்த பணம் திரும்ப வரும். பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். புது வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் புகழ் கூடும்.

ஆடி மாதமென்றாலே அம்மன் மாதம் என்று அனைவருக்கும் தெரியும். இந்த வருட ஆடி மாதத்திற்கு ஒரு சிறப்பு உள்ளது. ஆடி பெருக்கு, குருப்பெயர்ச்சி, ஆடிஅமாவாசை என 3 நிகழ்வுகளும் இந்த ஆடி மாதத்தில் நிகழ்கிறது. தமிழிற்கு ஆடி 18 அன்று ஆடிஅமாவாசை வருகிறது. (ஆங்கிலத்திற்கு 02/08/2016.) ஆடிஅமாவாசையன்று கட்டாயமாக முன்னோர்களிற்கு தர்ப்பணம் கொடுங்கள். ஆடி அமாவாசையின் சிறப்பு என்னவென்றால் கடகத்தில் உள்ள சூரியனுடன் ஆட்சி பெற்ற சந்திரன் இணைவதாகும். இக்காலத்தில் முன்னோர்களின் ஆத்மாக்கள் பூமிக்கு வரும். அவர்களிற்கு நாம் தர்ப்பணம் கொடுக்க அவை திருப்தியடைந்து நம்மை வாழ்த்தும். அன்று இரவு வீட்டில் வெளியில் ஒரு செம்பினுள் நீர் வைக்க வேண்டும். அத்துடன் ஆண்கள் கோதுமை தவிடு, பச்சரிசி தவிடு, வெல்லம், அகத்திக்கீரை கலந்து ஆண்கள் தானம் செய்ய வேண்டும். பெண்கள் சுமங்கலபொருட்களை தானம் செய்ய வேண்டும். இதனால் நமது முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைப்பதோடு அவர்களின் ஆசியால் எமது வாழக்கை வளமடையும்.

ஆடிப்பூரத்தில் தானம் செய்வது அஷ்டலக்மியையும் திருப்திப்படுத்தும். சகல சம்பத்துக்களும் தேடி வரும். ஆடிப்பூரமானது வரும் ஆடி 21ம் திகதி வெள்ளிக்கிழமை வருகிறது. இந்நன்னாளில் இயலுமான வஸ்துக்களை அனைத்து உயிர்களுக்கும் தானம் வழங்கலாம்...
(ஆங்கிலத்திற்கு 5/8/2016)

பட்டுக்கு அதிபதியான குருபகவான் கன்னி ராசிக்கு சஞ்சரிக்கும் குருப்பெயர்ச்சி அன்று குருபகவானின் விசேட திருத்தலங்களிலோ அல்லது சிவன் கோவிலில் உள்ள நவக்கிரக வாயாழ பகவானுக்கும் சிவனுக்கும் அல்லது குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் பட்டு சேர்ப்பித்து உங்கள் நட்சத்திரம் கூறி வழிபட நன்மை வந்து சேரும். அன்றைய நாள் ஆதரவற்ற குழந்தைகள்,முதியோர்களுக்கு அன்னதானம் ,மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவது சிறப்பு. கோவில்களில் நடைபெறும் குருப்பெயர்ச்சி யாகத்தில் அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ளுங்கள்.

hariram1by9@gmail.com

செவ்வாய், 26 ஜூலை, 2016

வாஸ்து. வீட்டிலேயே செய்யக்கூடிய தோசநிவர்த்தி.

1. எந்த காரியம் எடுத்தாலும் தோல்வி, மன நிம்மதி இன்மை அதாவது மனதில் ஒரு வெறுமை உள்ளவர்கள் இதனை சரி செய்ய அருகம்புல், மூன்று வகை மஞ்சள் (கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள், பூசு மஞ்சள்) பொடி, சந்தனம் ஆகியவற்றை சுத்தமான பசும்பாலில் அரைத்து எடுத்து வலது கையின் நடு மூன்று விரல்களினால் உச்சம்தலையில் வைத்து பின்னர் உடல் முழுவதும் பூசி குறைந்தது 15 நிமிடங்களாவது விட்டு பின்னர் அரப்பு அல்லது சீயக்காய் வைத்து தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் செய்து வர எப்படிப்பட்ட தோசமானாலும் விலகி விடும். இதன் ஒரு சுருங்கிய நடைமுறையை இலங்கை (ஈழத்) தமிழர்களின் திருமணச் சடங்குகளில் காணலாம். அதாவது திருமணத்திற்கு முன் மணமக்ககளிற்கு பால், அருகு வைத்து குளிக்க வைக்கும் சடங்கு இன்றும் உள்ளது இது ஒரு தோச நிவர்த்திச் சடங்காகும். 

2. நமது வீட்டில் சாம்பிராணி, நல்ல மணமுள்ள ஊதுபத்தி (சந்தனகுச்சி) ஆகியவற்றை பொருத்த வேண்டும். வெள்ளி, செவ்வாய் கிழமைகளிலாவது கண்டிப்பாக வீட்டிற்கு சாம்பிராணி தூபம் இடவேண்டும். தனிச் சாம்பிராணி இடாமல் சாம்பிராணி, வெண்குங்கிலியம், சுத்தமான சந்தனம், அகில், தேவதாரு, பச்சைக் கற்பூரம் ஆகியவற்றை கலந்து பொடிசெய்து தூபம் போடுவது மிகவும் சிறப்பான பலனைத் தரும். 

3.குளியலறை (Bathroom) கழிவறை(Toilet) வாயில்களில் ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் சுத்தப்படுத்தப்படாத கல் உப்பினை நிரப்பிப் போட்டு வைக்க வேண்டும். இதை வாரம் ஒருமுறை மாற்றிவிட வேண்டும். வீட்டின் தலைவாசலின் இருபுறமும் கல்லுப்பினை இரவில் ஒரு சிறிய கண்ணாடிப்பாத்திரத்தில் வைத்து காலையில் அதை குப்பையில் கொட்டிவிடவும். இது வீட்டிலுள்ள எதிர்மறை சக்திகளை அழித்து நல்ல சக்திகளை பெருக்கும். அத்துடன் மஞ்சள், சந்தனம் ஆகியவற்றிற்கு எதிர்மறை சக்திகளை அகற்றும் ஆற்றல் உள்ளது. இவற்றைக் கரைத்து வீட்டின் ஜன்னல், கதவு போன்ற இடங்களில் தெளித்து விட்டால் தீய சக்திகள் விலகும். 

4. வீட்டில் எப்போதும் மென்மையான இனிய இசை ஒலிக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். கரடுமுரடான இசையை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். வினாயகர் அகவல், கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், அம்மன் பாமாலை, சிவஸ்துதி மற்றும் சில மந்திரங்களை மீண்டும் மீண்டும் ஒலிப்பவை என பல ஒலிநாடாக்களும், குறுந்தட்டுக்களும் கடைகளில் கிடைக்கின்றன. இவற்றை தினமும் ஒரு தடவையாவது வீட்டில் ஒலிக்கச் செய்வது சிறப்பாகும். 

5. இயற்கை வெளிச்சம் வீட்டினுள்ளே எப்பொழுதும் கிடைக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அப்படி முடியாதபட்சத்தில் ஏதாவது ஒரு வழிமுறையில் வீடு பிரகாசமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.


6. ஓடத்தின் படம், உடைந்த பொருட்கள், பழுதடைந்த பழைய பொருட்கள் என்பன வீட்டில் எங்கும் வைக்கப்பட கூடாது.
தம்பதியர் ஒற்றுமையுடன் வாழ படுக்கை அறையில் வைக்க கூடாத பொருட்கள் :-
1. தையல் மெஷின்
2. கத்தரிக்கோல்
3. ஊசி
4. அயர்ன்பாக்ஸ்
5. இரும்பு கட்டில்
6. நீர்வீழ்ச்சி போன்ற படங்கள்..
7. மீன் தொட்டி
8. ஓடத்தின் படம்
9. உடைந்த பொருட்கள்
10. பழுதடைந்த பழைய பொருட்கள்.
.... போன்றவை
  

அதிர்ஷ்டமும் நல்வாய்ப்பும் தேடி வர அன்னாசிப் பழம் ஒவியத்தை உங்கள் வீட்டில் அல்லது தொழிலங்களின் முன்புற அறைகளிலோ வரைந்து வைத்தால் அதிர்ஷ்டமும்,நல்வாய்ப்பும்,நேர்மறை எண்ணங்களும் தேடி வரும்.
(அருகில் நான் தந்துள்ள படத்தை பிரிண்ட் செய்தும் மாட்டலாம்.)
   
  
ஜாதகம் பார்க்கப்படும். கட்டணம் உண்டு. ஜாதகம் பார்த்து முழு ஜாதக ஆய்வு 1000/=
6 A4தாள் முழுமையாக பலன் எழுதி தரப்படும். 25 வருட பலன்கள் கொண்ட astro vision PDF report  free. 
உங்களின் ஜாதகம் கணிக்க உங்கள் பிறந்த திகதி, பிறந்த மாதம், பிறந்த ஆண்டு, பிறந்த நேரம் (காலை மாலையும் குறிப்பிடப்பட வேண்டும்.) , பிறந்த இடம் என்பவற்றுடன் நீங்கள் உங்கள் ஜாதகப்படி தெரிந்துகொள்ள விரும்பும் கேள்விகளை அனுப்பி வையுங்கள். வங்கியில் நீங்கள் பணம் செலுத்தியிருப்பின், பலன் பார்க்க வேண்டிய கையிருப்பு ஜாதகங்கள் நிறைய இருப்பதால் அதிகபட்சமாக 8 நாட்களிற்குள் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு பலன் அனுப்பி வைக்கப்படும்.
தொடர்புகளுக்கு - hariram1by9@gmail.com

வியாழன், 7 ஜூலை, 2016

சற்சந்தான பாக்கியம்.

குழந்தை எப்போது பிறக்கும் என்ற கேள்விக்கு சுக்கிரனையும் உப புத்திர காரகனான பாவிக்க வேண்டும். ஏனெனின் கருத்தரித்து முதலாவது மாதத்தினை சுக்கிரன் எடுத்து நடத்துகின்றார். ஆகவே சுக்கிரன் நன்றாக இருந்தால் தான் குழந்தை தங்கும். இதனை வேறு விதமாகவும் கூறலாம். அதாவது  சுக்கில சுரோணித அதிபத்தி வலுவடைந்தால் தான் சுக்கில சுரோணித வீரியம் இருக்கும். கரு கட்டும் என்று...ஆகவே சுக்கிர தசை புக்தி அந்தரங்களில் குழந்தைப்பேறு கிட்டும் என்று.
இரண்டாவது மாதம் கருக்கட்டிய சிசுவை செவ்வாய் பொறுப்பேற்று காப்பாற்றுகின்றார்.
மூன்றாவது மாதம் கருக்கட்டிய சிசுவின்மீது ஆதிக்கம் செலுத்துபவர் குருபகவான். இக்காலத்திலேயே சிசுவின் உடருறுப்புக்கள் விருத்தியாகின்றன...
நான்காவது மாதம் சூரியனும் ஐந்தாவது மாதம் சந்திரனும் பொறுப்பேற்றுக்கொள்கின்றனர். இக்காலத்திலேயே நுகர்ச்சி இயல்புகளை சந்திரன் கொடுக்கின்றார்..
ஆறாவது மாதம் சனிபகவான் பொறுப்பேற்று வளர்க்கின்றார்.
ஏழாவது மாதம் புதன் பொறுப்பெடுக்கின்றார். இக்காலத்தில் நமது புராணங்கள், இதிகாசங்கள், நல்ல நீதி கதைகள் படிக்க வேண்டும். குழந்தையின் அறிவு வளரும்.
ஏழாவது மாதம் புதன் பொறுப்பெடுக்கின்றார்.
எட்டாவது மாதம் குழந்தை எந்த லக்கினத்தில் பிறக்க வேண்டும் என்று இறைவன் முடிவு செய்வது இக்காலத்திலேயே...
ஒன்பதாவது மாதம் மறுபடியும் சந்திரன் பொறுப்பெடுக்கின்றார். இக்காலத்தில் பூ முடிச்சு குலதெய்வ வழிபாடு கடடாயம் செய்யப்பட வேண்டும்.
10வது மாதத்தினை எடுத்து நடத்துபவர்கள் குருவும் சுக்கிரனும் ஆவர். இயற்கை சுபர்களான குருவும் சுக்கிரனும் குழந்தை  சுப காரியத்தினை எடுத்து செய்கின்றனர். இவர்களில் சுக்கிரன் வலுவாக இருந்தால் விரைவாகவே குழந்தை பிறந்து விடும். குரு பலமாக இருந்தால் முழுதாக (10 மாதம் தங்கியிருந்தே குழந்தை பிறக்கும்.)

சனி, 18 ஜூன், 2016

ஒரு ஜோதிட விளக்க கட்டுரை.

ஓம் நமசிவாய

ஜோதிடத்தில் ஒரு வீட்டதிபதி (பாவாதிபதி) இன்னும் ஒரு வீட்டில் நின்றால் எப்படி பலன் கூறுவது என்ற அடிப்படை சந்தேகத்தினை தீர்க்கும் முகமாக இந்த பதிவு அமைகிறது...  இது ஒரளவேனும் ஜோதிடம் அறிந்தவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். ஜோதிடர்கள், இளநிலை ஜோதிடர்கள், ஜோதிட மாணவர்கள், ஜோதிட ஆர்வலர்களிற்கு உகந்த பதிவு


3ம் பாவாதிபதி 10 இல் நின்றால் என்ன பலன் என்பதை ஒரு உதாரணம் மூலாமாக பார்க்கலாம்.  (10 வீடு தொழில் ஸ்தானம் ஆகும்.)
 
 3ம் பாவ, 8ம் பாவ, 10ம் பாவ காரகத்துவங்களை முதலில் அறிந்து கொள்க...
அடுத்து இதன்படி பலனை அறிக...,
 
1. 3ம் பாவ காரகத்துவங்கள் 10ம் பாவத்தின்மீது படிவிக்கப்படும்.
2. 3ம் பாவ உயிர் காரகத்துவங்கள் பெரும்கேந்திரத்தில் இருப்பதால் அவை பெரிதளவு பாதிக்கப்படமாட்டாது.
3. 3ம் பாவ பொருள் காரகத்துவங்கள் 8 இல் மறைவதால் அவை பாதிக்கப்படும்.
4. உச்சம் பெறின் 3ம் பாவ காரகத்துவங்கள் 10ம் பாவத்தினூடாக நன்மை/அனுகூலத்தினை வழங்கும்.
5. நீசம், பகை பெற்றால் துன்பம்.
6. 3ம் பாவாதிபதி தன் சொந்த வீட்டிற்கு மறைவதால் 3ம் பாவகம் வலுவிழக்கும்; அதே நேரம் அந்த கிரக காரகத்துவம் நன்றாக அதாவது பலமாக இருக்கும்.
7. 10 இற்கு 6ம் பாவாதிபதி வந்து 10 இல் அமர்வதனால் 10ம் பாவ காரகத்துவங்களிற்கும் சிறப்பில்லை - அத்துடன் அடிமைத்தொழில் அமைப்பு கிடைக்கும்."



இந்த 7 விதிகளையும் விபரிக்கும் அளவிற்கு எனக்கு நேரம் இல்லை ஆகவே இலக்கம் 1 இல் நான் கூறிய விதியினை சற்று விரித்து ஆராந்து பார்ப்போம்.

""விதி இல 1. 3ம் பாவ காரகத்துவங்கள் 10ம் பாவத்தின்மீது படிவிக்கப்படும்.""

அதாவது 3ம் பாவ காரகத்துவம் - வீரம்/தைரியம்; அது 10மிட காரகமான தொழில் மீது படிவிக்கப்படுகிறது. அதனால் காவல் துறை/ தீயணைப்பு/ ராணுவம்/ அல்லது சாகசம் காட்டும் தொழில்கள், ஏஜென்சி தொழில், தொலைத்தொடர்பு துறையில் பணி, தபால் சேவையில் பணி, மாமனாரின் தொழிலை எடுத்து நடத்தல், எழுத்து துறையில் பணி, நுண்கலை பொருட்கள் தொடர்பான தொழில், அறிவிற்கு சவாலான தொழில் போன்ற தொழில்கள் கிடைக்கும்... அது சரி இவற்றில் எந்த தொழில் கிட்டும்? அதனை கணித்து கூறவே ஜோதிடர்கலாகிய நாம் இருக்கின்றோம்.

இயற்கை சுபரான குருபகவான், சுக்கிரபகவான், சந்திரபகவான், தனித்த புதபகவான், அத்துடன் சூரியபகவான் (அரச வேலை மற்றும் பெரும் ஊதியம், எமது திறமை என்பவற்றுடன் தொடர்புடையவர் சூரியபகவான். அத்துடன் அவர் அரைப்பங்கு சுபத்தன்மையும் அரைப்பங்கு பாவத்தன்மையும் உடையவாராக இருப்பதால் நான் இங்கு சூரியபகவானையும் எடுத்துள்ளேன்.)

இவர்களில் பார்வை 10 இல் விழ தொழிலில் மேன்மை, அரச ஆதாயம், பிரச்சினைகள் வந்தாலும் அதிலிருந்து இலகுவாக வெளிவருதல், நீடித்த தொழில் அமைப்பு போன்ற பலன்கள் அமையும். 10இல் அமர்ந்த கிரகம் அல்லது 10ம் அதிபதி பார்வைசெய்யும் கிரகத்திற்கு பகை பெறின் அந்த அமைப்புக்களால் பிரச்சினைகளும் வரும்.


தொழில் நிர்ணயம் என்பது சாதாரண ஒரு விடயமல்ல... இன்னும் பல விதிகள் இன்னும் ஆராய உள்ளன (10பாவாதிபதி, நவாம்சம், தசாம்சம்......).  பிருகத்ஜாதக மூல நூலில்படி சில கிரக சேர்க்கைக்கு தொழில் அமைப்புக்கள் தரப்படுள்ளன. இது தவிர உங்கள் நட்ச்சத்திரத்திற்கான உகந்த தொழில்கள், உங்கள் லக்கினத்திற்கு உகந்த தொழில்கள்என உங்கள் ஜாதகத்தில் ஆராய பல விடயங்கள் உள்ளன.  ஆகவே எந்தவொரு ஜாதக பலன் அறியவும் ஜோதிடரிடம் உங்கள் ஜாதகத்தினை காண்பித்து உங்கள் சுய ஜாதகத்தின் படி உங்களிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நன்மை/லாபம் தரும் தொழில்களை அறிந்து கொள்ளுங்கள். என்னிடம் ஜாதகம் பார்த்து குறிப்பிட்ட சில (5) கேள்விகளிற்கு பலன் கூற 500/=
முழு ஜாதக ஆய்வு செய்து 12 பாவத்திற்குமான பலன், பரிகாரம் -  1000/=
தேவை எனின் 25 வருட பலன்கள் கொண்ட astro vision PDF report  250/= இற்கு வாங்கலாம்.
இலங்கை, இந்தியா தவிர்ந்த ஏனைய வெளிநாட்டு வாழ் மக்கள் 1500/= செலுத்த வேண்டும்.
(இவை பெரும்பாலான திறமையான ஜோதிடர்களால் நிர்ணயம் செய்யப்படும் நியமக்கட்டணம்.)
பலன் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். கட்டண முறையில் ஜாதகம் பார்த்து பலன் அறிய விரும்பும் அன்பர்கள் மட்டும் hariram1by9@gmail.com என்ற எனது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரியின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

சர்வே ஜனா சுகினோ பவந்து...
 
நன்றி,
தொழில்முறை ஜோதிடர் மற்றும் ஜோதிட ஆராச்சியாளர் ஹரிராம் தேஜஸ்.

( "தேஜஸ்" என்றால் தெய்வீக ஒளி/பிரகாசம் என்று பொருள்படும். ஹரிராம் தேஜஸ் என்று வித்தியாசமான பெயராக உள்ளது என்று பலரிற்கு அறிய ஒரு ஆவல். :-) )

வாக்கியமா? திருக்கணிதமா?

ௐ நமசிவாய

அனைவருக்கும் வணக்கம். கன்னில் செவ்வாய் நட்பா பகையா என்று ஒருவர் கேட்டார். அதற்கு “வாக்கியப்படி நட்பு, திருக்கணித படி பகை.” என்று கூறியிருந்தேன்... வாக்கிய பஞ்சாங்கம் சரியா திருக்கணித பஞ்சாங்கம் சரியா? இதற்கு யாராலும் முடிவுகாண முடியவில்லை...

ஜோதிட சாஸ்திரத்தை எமக்கு அருளிய மாமுனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள் வாக்கிய பஞ்சாங்க படி கணித்தனர். வராகிமிகிரர் வாக்கிய பஞ்சாங்கபடி கணித்து மணி-நிமிட ரீதியாக துல்லியமாக பலன் கூறினார். இன்றும் அனுபவம் மிக்க வயதான ஜோதிடர்களும் , கிராமபுறங்களில் உள்ள ஜோதிடர்களும் வாக்கிய பஞ்சாங்க கணிதப்படி கணித்த ஜாதகத்தினையே பார்க்கின்றனர். அவர்களது வம்சாவழி முன்னோர்களும் அதனையே பின்பற்றி வந்தனர். அது ஒரு புறம் இருக்கட்டும்...

வானவியல் (Astronomy) என்ற சொல் வேறு ஜோதிடம் (Astrology) என்ற சொல் வேறு...

வானவியலானது வானவெளியில் குறித்த நேரத்தில் கிரகங்கள் எந்ந நிலைகளில் உள்ளன என்பதை ‪#‎மட்டும்‬ காட்டும். அதனால் தான் திருகணித பஞ்சாங்கத்தினால் துல்லியமாக சூரிய கிரகண நேரத்தினை கூறமுடிகிறது...
ஆனால் ஜோதிடம் என்பது நவ கிரகங்களின் கதிர்வீச்சினால் பூமியில் ஜனித்த குழந்தையின் தாக்கத்தினை அக்குழந்தையின் இறப்புவரையான காலகட்டம் வரை கூறுவதாகும். இங்கு குழந்தை
சூரியனில் இருந்து புறப்படும் ஒளி சுமார் 8 நிமிடத்தின் பின்னரே பூமியை வந்தடைகிறது என்று படித்த ஞாபகம்.

அப்படி இருக்கும் பட்சத்தில் ஜாதகர் பிறந்தவுடன் அவனை அடையும் கதிர்கள் நிச்சயமாக 10 நிமிடத்திற்கு முன்னர் வானவெளியில் இருந்து வந்த கதிர்களேயாகும். இதனால் ஜாதகன் பிறந்த நேரத்தை ஏறத்தாள சுமார் 15 நிமிடங்கள் முன்னதாக போட்டு திருக்கணித முறையில் ஜாதககட்டம் போட ஜாதகனின் கர்ப்பசெல் இருப்பு நீக்கி ஜனனகால இருப்புதிசை சில மாதங்கள் வரை அதிகரிக்கும். அந்நேரத்தில் சந்திரன் நின்ற நட்சத்திர நாதனின் தசா ஆண்டு எண்ணிக்கைபடி ஒவ்வொரு தசாவும் ஜாதகனிற்கு வழமையாக தொடங்கவிருக்கும் தசாகாலத்திற்கும் சிலமாதங்கள் பின்னதாகவே ஆரம்பிக்கும். இது வாக்கிய பஞ்சாங்கம் மூலம் கணித்த ஜாதகத்திற்கு (சற்று) அருகில் செல்லும். அது அந்த ஜாதகரில் விளைவை ஏற்படுத்த சிலகாலம் எடுக்கும். வேறும்பல சூட்சும கணிதங்களிற்கு பிறகு இதன் நிலையானது மேலும் வாக்கிய ஜாதக அமைப்பிற்கு அருகில் கொண்டு செல்ல முடியும். இங்கு வாக்கிய பஞ்சாங்கம் ஜாதகமே வெல்கிறது. அத்துடன் இரண்டாவது கோட்பாடாக கிரக கதிர்வீச்சுக்கள் தமது பலனை எம்மில் தர நிச்சயமாக சிறிது காலம் எடுத்துக்கொள்ளும்.
எனது சிற்றறிவிற்கு தெரிந்தவரை இந்த இரு கோட்பாடுகளையும் உங்கள் முன் வைத்துள்ளேன். இது தவிர ஏராளமான பல கோட்பாடுகள் இருக்கும்.

ஜோதிடத்தினை பரம்பொருள் பரமசிவன் கிருமையால் ஞானமாக பெற்ற மாமுனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள் நான் மேலே குறிப்பிட்ட இரு கோட்பாடுகளாலும் மேலும் நாம் அறியாத பல கோட்பாடுகளாலும்தான் வாக்கிய பஞ்சாங்கம் அமைப்பினை நமக்கு தந்தனரோ என்பது ஆதிசிவனிற்கு வெளிச்சம்.

இறுதியாக, குறிப்பிட்ட நேரத்தில் வானவெளியில் இருக்கும் கிரகநிலைகளை மட்டுமே திருக்கணித பஞ்சாங்கம் காண்பிக்கும். இது வானவியல் (Astronomy) துறைக்கே அதிக பொருத்தமானது. கிரகங்களில் கதிர்கள் எம்மை வந்தடையும் நேரத்தையும் அது எம்மில் விளைவை ஏற்படுத்த எடுக்கும் நேரத்தினையும் துல்லியமாக அறிந்தே நேரடியாக ஜோதிட பலன் கூற வாக்கிய பஞ்சாங்கம் எமது மாமுனிவர்கள், சித்தர்கள், ரிஷிகளால் தருவிக்கப்பட்டது; ஜோதிட பலன் தசாபுக்தி அந்தர சூட்சும முறையில் துல்லியமாக கூற வாக்கிய பஞ்சாங்கம் உகந்தது என்ற என்னுடைய கருத்தை உங்கள் முன் வைத்துள்ளேன்... இது எந்த பஞ்சாங்க முறைக்கும் எதிரான பதிவல்ல... எனது இந்த கட்டுரையினை படிக்கும் அன்பர்கள் இருமுறைப்படியுமான ஜாதகங்களை ஒப்பிட்டு எது துல்லியமாக உங்களுடன் / உங்களிற்கு நடந்த நடக்கின்ற பலனுடன் மிகச்சரியாக பொருந்துகிறது என்பதை ஆய்வுசெய்து உங்களுடன் ஒத்துப்போகும் பஞ்சாங்க முறையினை கையாளுங்கள்.

நன்றி,
ஜோதிடர் மற்றும் ஜோதிட ஆராய்ச்சியாளர் ஹரிராம் தேஜஸ்.

செவ்வாய், 14 ஜூன், 2016

கைரேகை சாஸ்திர ரேகைகள்.





1: 
ஆயுள் ரேகை
2: 
புத்தி ரேகை
3: 
இதய ரேகை
4:
சுக்கிரனின் வட்டப்பாதை
5
சூரிய ரேகை
6: 
புதன் ரேகை
7: 
விதி ரேகை
ஆண்களுக்கு வலக்கை ரேகையையும் பெண்களுக்கு இடக்கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் ஆய்வின்படிஇரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும். ஆண்களுக்கு இடக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும்,வலக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் பெண்களுக்கு வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும்,இடக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். ஓர் ஆடவரின் இடக்கையில் உள்ள ரேகைகளும்மேடுகளும் பலவீனமாக இருக்கஅவரது வலக்கையில் உள்ள ரேகைகளும்மேடுகளும் பலமாக இருந்தால்அவர் 40 வயது வரைபலவிதமான கஷ்டங்களை அனுபவித்துஅதற்கு பிறகு படிப்படியாக தனது வாழ்வில் போராடி வெற்றியடைந்துநல்ல நிலைமையை அடைவார் எனக் கூற வேண்டும். இரண்டு கைகளில் உள்ள ரேகைகளும்மேடுகளும் பலமாக இருந்தால் அந்த நபர் வாழ்நாள் முழுவதும் நல்ல சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவார். ஆண்களுக்கு வலக் கை ரேகை சிறப்பாக இருக்க,இடக்கை ரேகை அம்சங்கள் பலவீனமாக இருந்தால் இவர்களுக்கு 2/3 பங்கு சுப பலனும் 1/3 பங்கு பாவ பலனும் உண்டாகும் என அறிய வேண்டும். இவ்வாறு பெண்களுக்கு இருந்தால் 1/3 பங்கு சுப பலனும் 2/3 பங்கு பாவ பலனும்உண்டாகும். அதாவது ஆண்களுக்கு வலக் கை ரேகையையும்பெண்களுக்கு இடக் கை ரேகையையும் அதிக சக்தி வாய்ந்தது.
கைரேகை மேடுகள்  - 
மேடுகளின் படி விரல்களையும் குருவிரல் (ஆட்காட்டி விரல்),சனி விரல் (நடு விரல்), சூரிய விரல்(மோதிர விரல்), புதன் விரல் (சுட்டு விரல்)என்கிறார்கள். ஆனால் கட்டை விரலை சுக்கிரவிரல் என்று கூறவில்லை. 



இனி ரேகைகளை பார்ப்போம்...

விதி ரேகை

உள்ளங்கையில் மணிக்கட்டு பகுதியில் இருந்து ஒரு ரேகை சனி மேட்டை நோக்கிச்  செல்லும். இதுவே விதி ரேகை அல்லது தொழில் ரேகை ஆகும். இது நமது உழைப்புக்குத் தகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது. சிலர் கைகளில் இந்த ரேகையே இருக்காது..! இவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டுப் பாடுபட்டாலும்பலன் கிடைக்காது. விதி ரேகை தெளிவாக அமைந்து வெட்டுக்குறிதீவு ஏதும் இல்லாது மணிக்கட்டிலிருந்து சனி மேடு வரை செல்வது நல்லது. இவர்கள் வாழ்நாள் முழுவதும் தொழில் விஷயத்தில் பிரச்சனை ஏதும் இல்லாது நிம்மதியாக வாழ்வர். விதி ரேகையுடன் ஆயுள்புத்திஇருதய ரேகைகளும் நன்றாக அமைந்திருந்தால்,இவர்களுக்கு நல்ல தேக ஆரோக்கியமும் புத்திசாலித்தனமும் நல்ல தொழில் விருத்தியும் ஏற்பட இடமுண்டு. இவர்களது எதிர்காலம் சந்தோசமாக அமையும்.

ஆயுள் ரேகை
முக்கியமானது..! சிலரது கைகளில் தடிமனாகவும்ஆழமாகவும்சிலரது கைகளில் லேசாகவும் மெல்லியதாகவும் பதிந்திருக்கும். தடிமனான ஆயுள் ரேகை மிருகபலத்தையும்மெல்லிய ஆயுள் ரேகை ஆத்ம பலத்தையும் குறிப்பிடும். தெளிவாகவும்மெல்லியதாகவும்நீளமாகவும் அமைந்த ஆயுள் ரேகைநல்ல தேக பலத்தையும்ஆரோக்கியத்தையும் கொடுக்கும். தடிமனான ஆயுள் ரேகை உடையோர் அடிக்கடி சிறுசிறு உடல் உபாதையால் சிரமப்படுவர். ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆராய வேண்டும்ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி நன்கு விலகியிருந்தால்இவர்களது தேக ஆரோக்கியம் நன்றாகவும் சுக்கிரமேட்டைச் சுற்றி நெருங்கிக் காணப்பட்டால்நோய்  எதிர்ப்புச் சக்திகுறைவாகவும் இருக்கும். ஆயுள் ரேகை குரு மேட்டுப் பக்கம் சற்று உயர்ந்துகாணப்பட்டால்இவர்கள் தன்னடக்கம்கட்டுப்பாடுலட்சிய உணர்வு,உயர்வெண்ணம் கொண்டவர்களாக இருப்பர். ஆயுள்ரேகை கீழ் செவ்வாய்மேட்டிலிருந்து ஆரம்பித்திருந்தால்இவர்கள்உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவு
ம்அடக்கமில்லாதவர்களாகவும்சண்டை சச்சரவுகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் இருப்பர். ஆயுள் ரேகையிலிருந்து மேல் நோக்கி எழும் ரேகைகள் சிறியதாக இருந்தால்இவர்கள் நல்ல உழைப்புஉற்சாகம்,அதிர்ஷ்டம் உடையவர்களாக இருப்பர்.
புத்தி ரேகை
குரு மேட்டின் அடிப்பகுதியில் ஆயுள் ரேகையை ஒட்டி ஆரம்பமாகி,உள்ளங்கையில் குறுக்காக செவ்வாய் மேடு அல்லது சந்திர மேட்டை நோக்கிச் செல்லும் ரேகை புத்தி ரேகை ஆகும். இது ஓரளவு அழுத்தமாகவும்,தெளிவாகவும் மெல்லியதாகவும் இருந்து தீவுபுள்ளிஉடைதல்போன்ற குறைபாடுகள் இல்லாது அமைந்தால் இவர்கள் புத்திசாலியாகவும் அதிக ஞாபக சக்தி உடையவர்களாகவும்,  நேர்மையாகவும் இருப்பர். புத்தி ரேகை நீளமாக அமைந்திருந்தால்இன்னும் விசேஷமான பலனைத் தரும். புத்தி ரேகை நமது மூளையின் அமைப்பையும்அது வேலை செய்யும் திறனையும்,நமது மனோநிலையையும் எடுத்துக் காட்டுகிறது..!
புத்திரேகையானது ஆயுள் ரேகையுடன் இணைந்து உற்பத்தியாகாமல் அல்லது ஆயுள் ரேகையுடன் ரேகை இணைப்பு எதுவுமில்லாமல் தனித்து ஆயுள்,இருதய ரேகைகளுக்கு மத்தியில் உற்பத்தியாகும் புத்திரேகைஅவ்விதம் ரேகை அமைந்தவன் புத்தியின் பலத்தையும் சுதந்திரப் போக்கையும் தன்னிச்சையான பிடிவாத குணத்தையும் காட்டும்.
ஆயுள் ரேகையோடு புத்திரேகையானது இணைந்து உற்பத்தியாகி இருந்தால் தாய்தந்தைமனைவிபிள்ளைகுடும்பமென்று பிரிக்க முடியாத பாசப்பிணைப்பு இருக்கும்.
ஆயுள் ரேகையுடன் இணைந்த உற்பத்தியாகாத புத்தி ரேகையைக் கொண்டவர் எப்போதும் தனித்து நிற்பதில்தனித்து வாழ்வதில் பிரியம் காட்டுவார்.


புதன் ரேகை
இதனைப் ஆரோக்கிய ரேகை என்றும் கூறுவர். இது விதி ரேகையின் அருகே ஆரம்பித்து புதன் மேடு வரை செல்லும். உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த ரேகை எடுத்துக் காட்டும். உள்ளங்கையில் உள்ள மற்ற ரேகைகளான புத்திரேகைஆயுள் ரேகைஇருதய ரேகை ஆகியவற்றில் ஏதாவது குறைபாடு இருந்தாலும்இந்தப் புதன் ரேகை நன்றாகஅமைந்திருந்தால்இவர்களது தேகத்தில் ஏதாவது பீடைகள் வந்தாலும்,அவையெல்லாம் உடனடியாக நிவர்த்தியாவதற்கு இது உறுதுணையாக இருக்கும். மேலும்புதன் மேடு பலவீனமாக இருந்தாலும் இந்த ரேகை பலமாக இருந்தால் புதன் மேட்டால் ஏற்படும் குறைபாடுகள் யாவும் விலகி விடும். இந்த ரேகை தெளிவாகவும்மெல்லியதாகவும்ஓரளவு அழுத்தமாகவும் இருப்பது நல்லது. தீவுபிளவுவெட்டுக்குறிசங்கிலிக் குறி போன்ற குறைபாடுகள் ஏதும் இல்லாது இது அமைந்திந்தால் இவர்கள் நல்ல பேச்சு சாதூர்யம்சொல்வன்மை கலைவியாபரத்திறமை ஆகியவற்றுடன் பெரும் பணம் சம்பாதித்து சிறப்பாக வாழ்வர்.
இருதய ரேகை
இது புதன் மேட்டில் உற்பத்தியாகிச் சூரிய மேடுகளைத் தாண்டி குரு மேட்டில்முடியும். சிலருக்கு இந்த இருதய ரேகை சனி மேட்டில் முடியும்அல்லது கிரக மேடுகளுக்கு வெகுவாக கீழே தள்ளிப் புத்திரேகையை ஒட்டியும் முடியலாம். சிலர் கைகளில் புத்தி ரேகைஇருதய ரேகை ஆகிய இரண்டும் சேர்ந்துஉள்ளங்கையில் குறுக்கே ஒரே ரேகையாகவும் காணப்படலாம். இருதய ரேகை மூலம் நமது இருதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும்இருதயத் துடிப்பு இரத்த ஓட்டம் போன்றவற்றையும்,இருதயத்தில் ஏற்படக் கூடிய கோளாறுகளையும் தெரிந்து கொள்ளலாம். இந்த ரேகை மூலம் அன்புபாசம்காதல் போன்ற உணர்வுகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
சூரிய ரேகை
விதி ரேகைக்கு இணையாகமோதிர விரலின் கீழே இருக்கும். இது புகழையும்இகழையும் குறிப்பிட்டுக் காட்டும்


பிற முக்கிய ரேகைகள்...
சுக்கிர ரேகை
மணிக்கட்டிற்கு அருகில் உள்ளங்கையின் கீழிலிருந்துசுண்டு விரலை நோக்கி உள்ளங்கையின் மேல்நோக்கி ஓடுகிறதுதொடர்ச்சியான உடல்நல பிரச்சினைகள்வியாபார புத்திசாலித்தனம்அல்லது தொடர்பு கொள்வதில் திறமை ஆகியவற்றைக்  குறிப்பிட்டுக்காட்டும்.
சுக்கிரனின் வட்டப்பாதை
இது சுண்டு விரலுக்கும்மோதிர விரலுக்கும் இடையில் தொடங்கிமோதிர விரல் மற்றும் நடுவிரல்களுக்கு கீழே ஒரு கீற்று போல ஓடிநடுவிரலுக்கும்,சுட்டு விரலுக்கும் இடையில் முடிகிறதுஇது உணர்வுப்பூர்வமான அறிவு மற்றும் திறமையாக கையாள்வதற்கான திறமை ஆகியவற்றோடு தொடர்புபட்டது.
அப்போலோ ரேகை
இது ஓர் அதிருஷ்ட வாழ்க்கையைக் குறிக்கிறதுஇது மணிக்கட்டில் இருக்கும் சந்தர மேட்டில் இருந்துமோதிர விரலுக்கு (அப்போலோ விரலுக்கு) இடையில்பயணிக்கிறது.
வட்ட ரேகை
இது ஆயுள் ரேகையைக் கடந்து 'x' வடிவத்தை உருவாக்குகிறது. இது மிகவும் தீமையின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. கைரேகை பார்க்க வருபவருக்கு கவலையை உண்டாக்கும் என்பதால்கைரேகை பார்ப்பவர்கள்பொதுவாக இந்த ரேகையைக் குறிப்பிட்டு கூறுவதில்லை. வட்ட ரேகையின் பொதுவான குறியீடுகள்பிற ரேகைகளால் 'M' என்று உருவாக்கப்பட்டிருக்கும்.
நட்பு ரேகைகள்
குறுகிய கிடைமட்ட ரேகைகள்இது உள்ளங்கையின் மோதும் விளிம்பில் இதய ரேகைக்கும்சுண்டு விரலின் கீழ் பகுதிக்கும் இடையில் காணப்படும்;நெருங்கிய உறவுகள்சிலநேரங்களில் - ஆனால் எப்போதும் கிடையாது - காதல் ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் காட்டும் என்று நம்பப்படுகிறது.
பயண ரேகைகள்
கிடைமட்ட ரேகைகளான இவை உள்ளங்கையின் புடைத்த விளிம்பில் மணிக்கட்டிற்கும்இதய ரேகைக்கும் இடையில் காணப்படுகிறதுஒவ்வொரு ரேகையும் அந்த நபரால் மேற்கொள்ளப்படும் ஒரு பயணத்தைக் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது - இந்த ரேகை நீண்டிருந்தால்அந்த நபருக்கு மிகவும் முக்கியமான பயணம் அமையும் என்று கூறப்படுகிறது.
பிற குறியீடுகள்.
நட்சத்திரங்கள்வெட்டுகள்முக்கோணங்கள்சதுரங்கள்திரிசூலங்கள்மற்றும் வளையங்கள் ஆகியவை உட்பட ஒவ்வொரு விரல்களின் கீழேயும் இவை இருக்கின்றனஉள்ளங்களையில் இவை இருக்கும் இடம் மற்றும் பிற ரேகைகளின் குறுக்கீடு இல்லாமல் இருக்கும் தன்மை ஆகியவற்றைக் கொண்டு இவற்றின் அர்த்தங்களும் பாதிப்புகளும் கணிக்கப்படும்.

"ராகு மேடுமற்றும் கேது மேடு என்பவை எங்கே ?" 


ஆரம்ப காலங்களில் ராகு கேது தவிந்த மற்றைய ஏழு கிரகங்களே இருந்தன என்று சங்ககால இலக்கியங்கள் கூறுகின்றன.இதிலிருந்து சாயா கிரகங்களான ராகு மற்றும் கேது என்பவை காலப்போக்கிலேயே தோன்றியுள்ளன எனவும் கைரேகைக்கலை எவ்வளவு பழமையானது என்றும் அறியலாம்..!
ராகு- கேதுவுக்கு தனி நாள்கிழமை ஒதுக்கவில்லை என்றாலும்,ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்..! அதே போல கேதுவுக்குப் பொருந்திய காலம் எமகண்டம்...! ராகுவும்கேதுவும் தனியான கிரகங்கள் இல்லை. கிரகங்களின் நிழல் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். வான வெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசையில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்அதேநேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசைச் சந்திப்பை கேது என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். இதையே நமது முன்னோர்களும் மெய்ஞ்ஞானிகளும் ஜோதிட சாஸ்திர மகான்களும் ராகு- கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று எழுதி வைத்தார்கள். 

 

Copyright @ 2018 வேத ஜோதிடம்.